Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவிலிருந்து ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

உக்ரைனுக்குச் சொந்தமான... ஸ்னேக் தீவிலிருந்து, ரஷ்யா துருப்புகள் வெளியேறியது!

கருங்கடலில் உக்ரைனுக்குச் சொந்தமான ஸ்னேக் தீவை ஆக்கிரமித்திருந்த ரஷ்யப் படையினர், அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

உக்ரைனிலிருந்து தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த ஐ.நா. கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இந்த முடிவினை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்பதை உணர்த்துவதாக அமையும் என ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்க நாள்களிலேயே ஸ்னேக் தீவை ரஷியா கைப்பற்றியது. கருங்கடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவில், ரஷியா தனது தொலைதூர வான்பாதுகாப்பு தளவாடங்களை நிறுவி வலிமையான ராணுவ நிலையை ஏற்படுத்தியிருந்தால் தெற்கு உக்ரைன், வட மேற்கு கருங்கடல் பகுதி என அந்தப் பிராந்தியத்தின் வான், கடல் மற்றும் தரை எல்லைகளை ரஷ்யாவால் தனது பிடிக்குள் கொண்டு வந்திருக்க முடியும். எனினும், அந்தத் தீவை தற்போது ரஷ்யா கைவிட்டதால் அது மீண்டும் உக்ரைன் இராணுவத்தின் வசம் வந்துள்ளது.

ஆனால், ஸ்னேக் தீவுக்கு தளவாடங்கள், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லும் படகுகள் மீது உக்ரைன் படையின் ஏவுகணைகள் மூலமும் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்ததால், அந்தத் தீவை தொடர்ந்து தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமான காரியமாக இருந்ததால்தான் அங்கிருந்து ரஷ்யப் படை பின்வாங்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில், டொனட்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் இராணுவத்தின் வசமிருக்கும் கடைசி நகரான சிலிசான்ஸ்கை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1289146

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இரு பக்கத்தினருக்குமான ஒரு விட்டுக்கொடுப்பு என நினைக்கின்றேன். 
காலின்கிராட்டுக்கான புகைரதபாதைய ரஷ்யா மீண்டும் பயன்படுத்தலாம் என்றொரு செய்தியும் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இது இரு பக்கத்தினருக்குமான ஒரு விட்டுக்கொடுப்பு என நினைக்கின்றேன். 
காலின்கிராட்டுக்கான புகைரதபாதைய ரஷ்யா மீண்டும் பயன்படுத்தலாம் என்றொரு செய்தியும் வந்துள்ளது.

புதிதாக கிடைத்த ஆதுதங்களை இந்த தீவில் உக்ரேன் பாவிப்பதாக கடந்த மூன்று நாளாக சட்டிலைட் படத்தோடு செய்தி வந்தது.

அதி RT செய்தி அல்ல என்பதால் நான் நம்பவில்லை.

இப்பதான் தெரியுது - அடிச்ச அடியில விட்டுகொடுக்கும் எண்ணம், காது, மூக்கால எல்லாம் வழியுது ரஸ்யாவுக்கு என்பது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தீவில் உக்ரேன் இராணுவமும் இல்லை என்று செய்திகள் வருகின்றனவே???🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அத்தீவில் உக்ரேன் இராணுவமும் இல்லை என்று செய்திகள் வருகின்றனவே???🤔

மிகவும் சமயோசிதமான முடிவு.

புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

புதிதாக கிடைத்த ஆதுதங்களை இந்த தீவில் உக்ரேன் பாவிப்பதாக கடந்த மூன்று நாளாக சட்டிலைட் படத்தோடு செய்தி வந்தது.

அதி RT செய்தி அல்ல என்பதால் நான் நம்பவில்லை.

இப்பதான் தெரியுது - அடிச்ச அடியில விட்டுகொடுக்கும் எண்ணம், காது, மூக்கால எல்லாம் வழியுது ரஸ்யாவுக்கு என்பது 🤣.

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

மிகவும் சமயோசிதமான முடிவு.

புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

ஸெலன்ஸ்கி ஒரு போராளியா? 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

சண்டைக்கும் போருக்குமிடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியும்தானே? 

1 hour ago, goshan_che said:

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

சண்டைக்கும் போருக்குமிடையிலான வித்தியாசம் உங்களுக்கு தெரியும்தானே? 

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

தெரிந்ததால் தான் இந்தக்கேள்வியே  வந்தது??

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

தெரிந்ததால் தான் இந்தக்கேள்வியே  வந்தது??

அப்படியானால் ஆளரவமற்ற தீவை விட்டு படைகளை நகர்த்தினால் தள்ளாட்டமென்று முடிவுக் வந்தீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அப்படியானால் ஆளரவமற்ற தீவை விட்டு படைகளை நகர்த்தினால் தள்ளாட்டமென்று முடிவுக் வந்தீர்கள் ? 

எலிக்குப்பயந்து

சிங்கம்😅 ஓடினால் என்னவென்பது???

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எலிக்குப்பயந்து

சிங்கம்😅 ஓடினால் என்னவென்பது???

அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

  புட்டினுக்கு : ரசியாவின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும்.😂

நீங்கள்  சொல்லும்  அதே  ஆரூடம்  தான் என்று  சொல்லமாட்டேன்😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

அணு ஆயுதத்தை தவிர்து விட்டு பார்த்தால் ரஸ்யா எப்பவோ தள்ளாட்ச் தொடங்கி இருக்கும். ஆகவேதான் இந்த ஆயுதங்களை ரசிய மண்ணில் பாவிக்காமல் இருக்கிறார்கள்.

இனி இப்படி ரஸ்யாவின் கட்டுபாட்டில் உள்ள உக்ரேன் பகுதிகள் மீது தாக்குதல் நடக்க கூடும்.

அதே போல் கெரெசன் பகுதியில்  கேரில்லா தாக்குதலும் ஆரம்பித்து விட்டதாக சொல்லபடுகிறது.

3 hours ago, kalyani said:

ஸெலன்ஸ்கி ஒரு போராளியா? 🤣🤣🤣

யாரு தம்பி நீங்க? நான் எப்ப செலன்ஸ்கி ஒரு போராளி எண்டு சொன்னேன்?

ரொம்ப அடிவாங்கி இருபீங்க போல. சொல்லாததை எல்லாம் கற்பனை பண்ணி பதில் எழுதுறீங்க😅

3 hours ago, Kapithan said:

கோசான்

நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

நக்கலு🤣.

யாழில் அலட்டுவதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

மன்னிகவும் கற்ப்ஸ்.

வழமையாக மிக தெளிவாக சிந்திக்க கூடிய நீங்கள் இதில் ரொம்ப far removed from reality ஆக உள்ளீர்கள்.

ஏதோ ஒரு வெறுப்புணர்வு உஅதார்தத்தை பார்க்க விடாமல் உங்கள் கண்ணை கட்டுகிறது.

அது என்ன என்பது கூட என்னால் ஊகிக்க முடிகிறது.

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈ யூவில் முற்றாக சேர யூக்ரேனில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டுமாம். யூக்ரேனை வைத்து ஏமாற்றுகிறார்கள் போல உள்ளது.
இரண்டு பிரித்தானியர்கள் ரஸ்யர்களிடம் பிடிபட்டுள்ளார்கள். சம்பல் தான்.
இம்மாதம் 11ல் இருந்து 10 நாட் களுக்கு ரஸ்யா  எரிவாயுவை நிற்பாட்ட உள்ளதாம். திருத்த வேலைக்காக என ரஸ்யா காரணம் சொல்லி உள்ளது.

சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் 33 பெயர்களை துருக்கி கொடுத்துள்ளதாம். அதுவும் துருக்கியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் (நேட்டோவில் சேர) ஒன்று. இதனை நிறைவேற்றுவதில் இந்நாடுகளுக்கு சிக்கல் உள்ளதாகவும் துருக்கி விடாப்பிடியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

யாரு தம்பி நீங்க?

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, kalyani said:

ஈ யூவில் முற்றாக சேர யூக்ரேனில் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டுமாம். யூக்ரேனை வைத்து ஏமாற்றுகிறார்கள் போல உள்ளது.
இரண்டு பிரித்தானியர்கள் ரஸ்யர்களிடம் பிடிபட்டுள்ளார்கள். சம்பல் தான்.
இம்மாதம் 11ல் இருந்து 10 நாட் களுக்கு ரஸ்யா  எரிவாயுவை நிற்பாட்ட உள்ளதாம். திருத்த வேலைக்காக என ரஸ்யா காரணம் சொல்லி உள்ளது.

சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் 33 பெயர்களை துருக்கி கொடுத்துள்ளதாம். அதுவும் துருக்கியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் (நேட்டோவில் சேர) ஒன்று. இதனை நிறைவேற்றுவதில் இந்நாடுகளுக்கு சிக்கல் உள்ளதாகவும் துருக்கி விடாப்பிடியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சாத்தியப்படாத பல விடயங்களுக்கு  மேற்குலகு தம் கட்டி முக்குது.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, goshan_che said:

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் மேற்குலகின் அடாவடித்தனங்கள் தான் யுத்தங்கள் முடிந்த பின் புரிய முடிகின்றது.
நூற்றாண்டு கால போர் வரலாறுகளை இரைமீட்டிப்பாருங்கள் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீவு பாதுகாப்பது கடினம், இருதரப்புக்கும். அதனாலேயே, உக்ரைன் தீவை விட்டு வெளியேறியது.

கிட்டத்தட்ட கச்ச தீவு போல.

உக்ரைன் தாக்காமல் இருக்கும் வரையும், ரஷ்யா நிலை கொள்ள முடிந்தது.

ரஷ்யா விளாத்தியது என்பஷதத்திற்காக, உக்ரைன் மீண்டும் தீவில் நிலை கொள்ளாது என்று நினைக்கிறன். 

அனால், சண்டை இழுபட போகிறது, முக்கியமாக நேட்டோ ரஷ்யா ஐ பலவீனப்படுத்த வேண்டும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட பின் (பிரான்ஸ் இதை தவிர்க்க பாடு பட்டது, அனால் US இன் செல்வாக்கு தடுத்து விட்டது போலும்).

இது இப்போது, personalities இற்கு இடையேயான குத்து  சண்டையாகவும் மாறி உள்ளது, போரிஸ் - புட்டின்.  

மிகவும் மோசமான நிலையில், J.P. Morgan இன் , oil விலை மதிப்பீடு $380.00

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மன்னிகவும் கற்ப்ஸ்.

வழமையாக மிக தெளிவாக சிந்திக்க கூடிய நீங்கள் இதில் ரொம்ப far removed from reality ஆக உள்ளீர்கள்.

1) ஏதோ ஒரு வெறுப்புணர்வு உஅதார்தத்தை பார்க்க விடாமல் உங்கள் கண்ணை கட்டுகிறது.

2) அது என்ன என்பது கூட என்னால் ஊகிக்க முடிகிறது.

பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

1) மேற்கின் இரெட்டை வேடத்தின் மீதான கோபம்

2) ரஸ்யா வெல்ல வேண்டும் என்கிற விருப்பு 

இதுதானே உங்கள் யூகம்  ? 

1)

2)

முள்ளிவாய்க்காலின் பின்னர் எவன் செத்தாலென்ன, எவன் பிழைத்தாலென்ன என்கிற மனநிலையில்தான் இருக்கிறேன். 

1 hour ago, Kadancha said:

இந்த தீவு பாதுகாப்பது கடினம், இருதரப்புக்கும். அதனாலேயே, உக்ரைன் தீவை விட்டு வெளியேறியது.

கிட்டத்தட்ட கச்ச தீவு போல.

உக்ரைன் தாக்காமல் இருக்கும் வரையும், ரஷ்யா நிலை கொள்ள முடிந்தது.

ரஷ்யா விளாத்தியது என்பஷதத்திற்காக, உக்ரைன் மீண்டும் தீவில் நிலை கொள்ளாது என்று நினைக்கிறன். 

அனால், சண்டை இழுபட போகிறது, முக்கியமாக நேட்டோ ரஷ்யா ஐ பலவீனப்படுத்த வேண்டும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட பின் (பிரான்ஸ் இதை தவிர்க்க பாடு பட்டது, அனால் US இன் செல்வாக்கு தடுத்து விட்டது போலும்).

இது இப்போது, personalities இற்கு இடையேயான குத்து  சண்டையாகவும் மாறி உள்ளது, போரிஸ் - புட்டின்.  

மிகவும் மோசமான நிலையில், J.P. Morgan இன் , oil விலை மதிப்பீடு $380.00

மொத்தத்தில் நாங்கள் இலங்கைக்கு மீண்டும்  அகதியாக விமானம் ஏறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறீர்கள் ? 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) மேற்கின் இரெட்டை வேடத்தின் மீதான கோபம்

2) ரஸ்யா வெல்ல வேண்டும் என்கிற விருப்பு 

இதுதானே உங்கள் யூகம்  ? 

1)

2)

முள்ளிவாய்க்காலின் பின்னர் எவன் செத்தாலென்ன, எவன் பிழைத்தாலென்ன என்கிற மனநிலையில்தான் இருக்கிறேன். 

மொத்தத்தில் நாங்கள் இலங்கைக்கு மீண்டும்  அகதியாக விமானம் ஏறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறீர்கள் ? 

☹️

1 மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போர் உக்ரேனுக்கு அழிவுகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பெருமளவு மக்கள் கொல்லப்படுவதோடு, உக்ரேனின் கட்டுமாணங்களும் குறிவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்களும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இதில் உள்ள அரசியலுக்கு அப்பால், மக்களின் அவலங்கள் பார்க்கப்பட வேண்டும்.

நேற்று கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்தின் முக்கிய பகுதியான லிஷெங்க் பகுதியை தான் பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக ரஸ்ஸியா அறிவித்திருக்கிறது. உக்ரேன் அரசும் இதனை உறுதிப்படுத்தியிருப்பதோடு, தமது போரிடும் படையணியைத் தக்கவைத்துக்கொள்ள இப்பகுதியினை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறியிருக்கிறது.

அநியாய யுத்தமும் அழிவுகளும். நிறுத்தப்பட வேண்டும். இதில் எவர் சரி, எவர் பிழை என்று நான் இன்னொரு விதண்டாவாதத்திற்குள் வரவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 மட்டும்தான்.

புடின் மீதான அபிமானம்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2022 at 17:23, விளங்க நினைப்பவன் said:

என்ன தம்பியா? கல்யாணி 🤔

ஒரு இடத்தில் அக்கா சிலர் ரஷ்யாவை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டி கேட்டேன்.அந்த குடும்பம் இலங்கையில் இவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறது என்றால் புரின் ரஷ்யாவை எவ்வளவுக்கு கொள்ளை அடித்திருப்பான் என்று பேசி கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சி.
அண்ணைமார் சிலர் தான் புரினில் மயங்கிவிடுகின்றனர்.

காதை தீட்டி மேற்குலகு எவ்வளவு கொள்ளை அடித்தது என்ற கணக்கை சொல்லவா அல்லது புத்தியை தீட்டி தேடி பார்க்கிறீர்களா??🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.