Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதான்.

உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

நாங்கள் எல்லோரும் பணத்தை முற்றத்தில் தொலைத்துவிட்டு, கொல்லைப்புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். 

எப்படிக் கண்டடைவோம் ☹️

  • Replies 68
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் எல்லோரும் பணத்தை முற்றத்தில் தொலைத்துவிட்டு, கொல்லைப்புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். 

எப்படிக் கண்டடைவோம் ☹️

கப்பித்தான் நீங்கள் பிழையான ஒரு ஆளிடம் உரையாடுகிறீர்கள், நான் படித்த ஆளெல்லாம் கிடையாது.

நீங்கள் ஏதோ சொல்ல முயல்கிறீர்கள் மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை.

வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது (இப்ப கொஞ்சமா வரும் அவ்வளவுதான்).

நான் ஒரு வீட்டில் இன்னும் இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவர் ஆங்கிலம் சரளமாகப்பேசுவார் மற்றவர் என்னை போல ஆங்கிலம் அவ்வளவாக வராது.

ஆங்கிலம் சரளாமாகப்பேசுபவர்தான் எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்.

என்னைப்போல ஆங்கில சரியாக பேசமுடியாதவர்தான் எங்களை எல்லாம்விட வயதில் மூத்தவர், அவர் வைப்பதுதான் சட்டம்.

அவர் வைத்த ஒரு சட்டம் வீட்டிற்கு வரும் தொலைபேசியினை பதிலழிக்கும் போது ஆங்கிலத்தில் பதிலழிக்கவேண்டும் என்று.

அவர் தனது சட்டத்தினை அவரே நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார், ஆங்கிலத்தில் தொலைபேசியில் பதிலழித்தல்.

அவர் ஆங்கிலம், மறுமுனையில் இருப்பவர்களுக்கு புரிவது " காலை வணக்கம் நான் ...... பேசுகிறேன், அவ்வளவுதான் அதற்கு பின் அவர் பேசுவது எதுவுமே புரியாது.

அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணம் அவருக்கு மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் புரிவதில்லை, அதனால் புரியாமல் பேசினால்தான் ஆங்கிலம் என நினைத்துவிட்டார்.

நான் இப்போது அந்த அண்ணாவின் நிலையில் உள்ளேன், நான் உங்களை எனது அறியாமைக்காக தவறாக சொல்லவில்லை, எனது நிலமையினை உங்களுக்கு புரியவைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதா

https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
 
எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

16 hours ago, vasee said:

உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஓஒரை

விளங்கவில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
1 hour ago, goshan_che said:

ஓஒரை

விளங்கவில்லை

போரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஓஒரை

எனக்கு துண்டற விளங்கவிலை. நீங்கள் சொல்ல வருவது ஓடை 😷

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

எனக்கு துண்டற விளங்கவிலை. நீங்கள் சொல்ல வருவது ஓடை 😷

1 hour ago, Kandiah57 said:

விளங்கவில்லை 🤣

🤣 போன் ஸ்கிரீன் ஒ  படுத்து விட்டது

ஆக்டோபர் வரை வெயிட்டிங்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

கப்பித்தான் நீங்கள் பிழையான ஒரு ஆளிடம் உரையாடுகிறீர்கள், நான் படித்த ஆளெல்லாம் கிடையாது.

நீங்கள் ஏதோ சொல்ல முயல்கிறீர்கள் மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை.

வெளிநாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது (இப்ப கொஞ்சமா வரும் அவ்வளவுதான்).

நான் ஒரு வீட்டில் இன்னும் இரண்டு நண்பர்களுடன் தங்கியிருந்தேன், அதில் ஒருவர் ஆங்கிலம் சரளமாகப்பேசுவார் மற்றவர் என்னை போல ஆங்கிலம் அவ்வளவாக வராது.

ஆங்கிலம் சரளாமாகப்பேசுபவர்தான் எங்களுக்கு மொழி பெயர்ப்பாளர்.

என்னைப்போல ஆங்கில சரியாக பேசமுடியாதவர்தான் எங்களை எல்லாம்விட வயதில் மூத்தவர், அவர் வைப்பதுதான் சட்டம்.

அவர் வைத்த ஒரு சட்டம் வீட்டிற்கு வரும் தொலைபேசியினை பதிலழிக்கும் போது ஆங்கிலத்தில் பதிலழிக்கவேண்டும் என்று.

அவர் தனது சட்டத்தினை அவரே நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார், ஆங்கிலத்தில் தொலைபேசியில் பதிலழித்தல்.

அவர் ஆங்கிலம், மறுமுனையில் இருப்பவர்களுக்கு புரிவது " காலை வணக்கம் நான் ...... பேசுகிறேன், அவ்வளவுதான் அதற்கு பின் அவர் பேசுவது எதுவுமே புரியாது.

அவர் அவ்வாறு பேசுவதற்கு காரணம் அவருக்கு மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கிலம் புரிவதில்லை, அதனால் புரியாமல் பேசினால்தான் ஆங்கிலம் என நினைத்துவிட்டார்.

நான் இப்போது அந்த அண்ணாவின் நிலையில் உள்ளேன், நான் உங்களை எனது அறியாமைக்காக தவறாக சொல்லவில்லை, எனது நிலமையினை உங்களுக்கு புரியவைக்கிறேன்.

நீங்கள்தான் என்னை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். 

நான் கூற வந்தது,

உக்ரேன்  யுத்தத்திற்கான உண்மையான காரணம் எங்கள் பார்வைக்கு/ விவாதங்களுக்கு அப்பால்(75%) இருப்பதாகப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

நீங்கள்தான் என்னை தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். 

நான் கூற வந்தது,

உக்ரேன்  யுத்தத்திற்கான உண்மையான காரணம் எங்கள் பார்வைக்கு/ விவாதங்களுக்கு அப்பால்(75%) இருப்பதாகப்படுகிறது. 

நன்றி கப்பிதான்.

11 hours ago, goshan_che said:

https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
 
எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

உண்மைதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/7/2022 at 20:45, goshan_che said:

எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

ரஷ்யாவிலிருந்து  உலகிற்கு ஏற்றுமதியாவது எரிபொருள் மட்டுமல்ல...இன்னும் பல பல.....
மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் முதல்  தொழில்நுட்பத்திற்கு  அவசியமான பொருட்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதாம்.....

இந்த உலகில் மனிதனோ அல்லது நாடுகளோ இல்லையேல் ஏனைய உயிரினங்களோ தனித்து வாழ முடியாது. ஏதோ ஒன்றில் தங்கித்தான் வாழ வேண்டும். இது இயற்கையின் நியதி.

உலகிற்கு சமாதானம் ஒற்றுமை பற்றி பாடம் எடுப்பவர்கள் அடிப்படலைக்குள் நடக்கும் பிரச்சனையை தீர்க்க முடியாமல் திணறுகின்றார்கள். ஆயுதத்தால் விடுதலை அடைய முடியாது என தமிழீழ போராட்டத்திற்கு காரணம் கூறியவர்கள் இன்று அதே ஆயுதத்தால் உக்ரேனுக்கு அமைதியையும் விடுதலையையும் பெற்றுக்கொடுக்கப்போகின்றார்களாம்.🧐

கோமாளிக்கு வந்து வாய்ச்சதுகளும் கோமாளிகள் தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த உலகில் மனிதனோ அல்லது நாடுகளோ இல்லையேல் ஏனைய உயிரினங்களோ தனித்து வாழ முடியாது. ஏதோ ஒன்றில் தங்கித்தான் வாழ வேண்டும். இது இயற்கையின் நியதி.

இரும்பு திரைக்கு பின்னால் பூமியின் அரைவாசி இருந்த போதும், மீதி அரைவாசி அதில் தங்கி இராமல்தான் வாழ்ந்தது.

2 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவிலிருந்து  உலகிற்கு ஏற்றுமதியாவது எரிபொருள் மட்டுமல்ல...இன்னும் பல பல.....
மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் முதல்  தொழில்நுட்பத்திற்கு  அவசியமான பொருட்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதாம்.....

ஆனால் அவை எவையுமே ரஸ்யாவில் மட்டும் இருக்கும் வளங்கள் அல்ல.

பொதுவாக எப்போதும் அல்ல வாங்குபவனே கில்லி, விற்பவன் அல்ல. சில உடனடி பின்னடைவுகள் இருந்தாலும் ரஸ்யாவில் தங்கி இராமல் தமது பாட்டை பார்க்கும் இயலுமை மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

உள்ளதில் அதிகம் பிரச்சனையானது எண்ணை/வாயு ஆனால் அதையே மத்திய/நீண்ட கால நோக்கில் சமாளிக்க மட்டும் அல்ல அதை ஒரு வாய்ப்பாக மாற்றி தமது நாட்டிலேயே அணு, காற்றாலை, போன்ற வலு மாற்றுகளுக்கு போக கூடிய வல்லமை யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உள்ளது.

ஆகவே மேற்கிற்கு ரஸ்யாவின் இழப்பு ஒரு சின்ன குறுகிய கால தாக்கம் மட்டுமே.

ஆனால் ரஸ்யாவுக்கு மேற்கின் சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கில் மிகவும் பாரதூரமானது. திரும்பி கம்யூனிஸ்ட் முறைக்கும் போக முடியாது. பொரிஸ் யெல்சின் காலம் போல் ஆகவும் முடியாது.

இன்றைய பூட்டினின் பேச்சு டொன்பாஸ் வெற்றியோடு அவர் போரை நிறுத்த கூடும் என தெரிகிறது.

ஆனால் என்ன நடந்தாலும் இரெண்டு பெரும் பின்னடைவுகள் ரஸ்யாவுக்கு அவர்கள் டொன்பாசை கைவிடும் வரை மாறாது.

1. சுவீடன், பின்லாந்தையும் இழந்து அதன் மூலம் பால்டிக் கடல், மற்றும் ஆர்டிக் வழியான எதிர்காலத்தில் பெரும் கடல் வழியாக வரக்கூடும் என எதிர்பார்க்கபடும் பகுதியில் நேட்டோவின் ஆளுமையை கூட்டியமை

2. பொருளாதார தடைகள்

டொன்பாசோடு புட்டின் அமைதியானால் - என்ன மாதிரி உக்ரேனை கட்டி எழுப்பபலாம் என்ற "புதிய மார்சல் பிளான்" போடும் நடவடிகைகள் இப்போதே ஜரூர் ஆகி விட்டன. ஏலவே "வேட்பாளர் நாடு" என ஈயூ அங்கீகரித்து விட்ட உக்ரேனின் பொருளாதாரமும் அதை மையமாக வைத்து ஈயூவின் பொருளாதாரமும் ஒரு புதிய - எரி சக்தியில் இருந்து விலகிய வழியில் பாய்ச்சல் காணலாம்.

அதேவேளை ரஸ்யா - பணம் உள்ள "வாங்குவோர் சந்தையில்" இருந்து தனிமைப்படுத்த பட்டு தன்னை போலவே விற்போராக இருக்கும் சீனா, இந்தியா, பிரேசில், ஈரான் உடன் அவர்களின் terms இல் வர்த்தகம் செய்யும் நிர்பந்தம் உருவாகலாம்.

இப்பவே சீனா

அமெரிக்க, ரஸ்யா, சீனா

என்பதை

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

அமெரிக்காவிடம் தன் முதல் நிலையை படிபடியாக பிரிட்டன் இழந்தது போல், சீனாவிடம் தன் இரண்டாம் நிலையை ரஸ்யா இழக்க வேண்டியும் வரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

இன்னொரு நற்செய்தி.

அதற்குள் இலங்கையும் வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

விஸ்வ குருவிற்கும் ரஸ்யாவுடன் நீண்ட உறவு இருந்தாலும், பாகிஸ்தான் இம்ரானுக்கு பின் அதிகம் அமெரிக்க பக்கம் சாய்வதாலும், அடிப்படையில் பிஜேபி ஒரு அமெரிக்க வால்பிடி என்பதாலும், அவர்களின் பொருளாதாரத்தை ரஸ்யாவை இழப்பதை விட அமெரிக்காவை இழப்பது பாதிக்கும் என்பதாலும் குரு ஒரேயடியாக எந்த பக்கமும் சாய முடியாது.

மேற்கில் எல்லாரும் அமெரிக்க தலைமையை ஏற்கிறார்கள். துருக்கி உட்பட.

ஆனால் எதிர்பக்கம்

ரஸ்யா v சீனா

சீனா v இந்தியா என

. அடிப்படை முரண்கள் உள்ளன.

ஒரு அளவுக்கு மேல் இவர்கள் ஒன்றாக முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

மேற்கில் எல்லாரும் அமெரிக்க தலைமையை ஏற்கிறார்கள். துருக்கி உட்பட.

இந்தியா,பாக்கிஸ்தான்,துருக்கி போன்ற நாடுகள் விலாங்குமீன் போன்றவைகள். தங்களுக்கு தேவையேற்படின் எந்தப்பக்கமும் சாய்வார்கள்.
இருந்தாலும் இந்தியா கூடுதலாக ரஷ்யாவை எக்காலத்திலும் எதிர்த்து நிற்காது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்னொரு நற்செய்தி.

அதற்குள் இலங்கையும் வந்திடும்.

இலங்கையை விஸ்வ குரு கபளீகரம் செய்துவிடுவார் .. பிறகு எப்படி இலங்கை வரும்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

ரஸ்யா v சீனா

சீனா v இந்தியா என

. அடிப்படை முரண்கள் உள்ளன.

ஆனாலும் இற்றைவரை இந்தியா, ரஸ்யாவை வெளிப்படையாக எதிர்க்கவில்லை தானே. 

ஆனாலும் நீங்கள் கூறுவது போல சீனா இந்தியா முரணும் உள்ளது. 

என்னவோ சீனா முதலாவது இடத்திற்கு வராமல் போனால் சரி.. 

ஆனால் அமெரிக்காவின் இன்றைய உள்நாட்டு நிலவரங்கள், முன்பை விட எவ்வளவு பிளவுபட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும். 

Henry Kissingerன் ஒரு பேட்டியையும்(How to avoid another world war), இன்னொரு கட்டுரை (Why America is in such mess) வாசித்த பொழுது அமெரிக்கா முன்னைய விட பலமிலந்து வருகிறதோ என தோன்றியது.. 

சில சமயங்களில் யோசிக்கும் பொழுது என்ன உலகம் இது என சலிப்பு ஏற்படுகிறது.. 

இயற்கை ஒரு பக்கம் தனது அதிருப்தியை காட்டுகிறது.. ஆனாலும் மனிதர்கள் மாறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இரும்பு திரைக்கு பின்னால் பூமியின் அரைவாசி இருந்த போதும், மீதி அரைவாசி அதில் தங்கி இராமல்தான் வாழ்ந்தது.

ஆனால் அவை எவையுமே ரஸ்யாவில் மட்டும் இருக்கும் வளங்கள் அல்ல.

பொதுவாக எப்போதும் அல்ல வாங்குபவனே கில்லி, விற்பவன் அல்ல. சில உடனடி பின்னடைவுகள் இருந்தாலும் ரஸ்யாவில் தங்கி இராமல் தமது பாட்டை பார்க்கும் இயலுமை மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

உள்ளதில் அதிகம் பிரச்சனையானது எண்ணை/வாயு ஆனால் அதையே மத்திய/நீண்ட கால நோக்கில் சமாளிக்க மட்டும் அல்ல அதை ஒரு வாய்ப்பாக மாற்றி தமது நாட்டிலேயே அணு, காற்றாலை, போன்ற வலு மாற்றுகளுக்கு போக கூடிய வல்லமை யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உள்ளது.

ஆகவே மேற்கிற்கு ரஸ்யாவின் இழப்பு ஒரு சின்ன குறுகிய கால தாக்கம் மட்டுமே.

ஆனால் ரஸ்யாவுக்கு மேற்கின் சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கில் மிகவும் பாரதூரமானது. திரும்பி கம்யூனிஸ்ட் முறைக்கும் போக முடியாது. பொரிஸ் யெல்சின் காலம் போல் ஆகவும் முடியாது.

இன்றைய பூட்டினின் பேச்சு டொன்பாஸ் வெற்றியோடு அவர் போரை நிறுத்த கூடும் என தெரிகிறது.

ஆனால் என்ன நடந்தாலும் இரெண்டு பெரும் பின்னடைவுகள் ரஸ்யாவுக்கு அவர்கள் டொன்பாசை கைவிடும் வரை மாறாது.

1. சுவீடன், பின்லாந்தையும் இழந்து அதன் மூலம் பால்டிக் கடல், மற்றும் ஆர்டிக் வழியான எதிர்காலத்தில் பெரும் கடல் வழியாக வரக்கூடும் என எதிர்பார்க்கபடும் பகுதியில் நேட்டோவின் ஆளுமையை கூட்டியமை

2. பொருளாதார தடைகள்

டொன்பாசோடு புட்டின் அமைதியானால் - என்ன மாதிரி உக்ரேனை கட்டி எழுப்பபலாம் என்ற "புதிய மார்சல் பிளான்" போடும் நடவடிகைகள் இப்போதே ஜரூர் ஆகி விட்டன. ஏலவே "வேட்பாளர் நாடு" என ஈயூ அங்கீகரித்து விட்ட உக்ரேனின் பொருளாதாரமும் அதை மையமாக வைத்து ஈயூவின் பொருளாதாரமும் ஒரு புதிய - எரி சக்தியில் இருந்து விலகிய வழியில் பாய்ச்சல் காணலாம்.

அதேவேளை ரஸ்யா - பணம் உள்ள "வாங்குவோர் சந்தையில்" இருந்து தனிமைப்படுத்த பட்டு தன்னை போலவே விற்போராக இருக்கும் சீனா, இந்தியா, பிரேசில், ஈரான் உடன் அவர்களின் terms இல் வர்த்தகம் செய்யும் நிர்பந்தம் உருவாகலாம்.

இப்பவே சீனா

அமெரிக்க, ரஸ்யா, சீனா

என்பதை

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

அமெரிக்காவிடம் தன் முதல் நிலையை படிபடியாக பிரிட்டன் இழந்தது போல், சீனாவிடம் தன் இரண்டாம் நிலையை ரஸ்யா இழக்க வேண்டியும் வரக்கூடும்.

4 Jul, 2022 09:41 
 
German chancellor predicts how world will look in 2050

Olaf Scholz says a multipolar world will emerge with many influential countries pursuing their own interests
 
German chancellor predicts how world will look in 2050

© Getty Images / picture alliance / Contributor

The world in 2050 will be multipolar, with many influential countries, including Russia, pursuing their own interests, so the “big task” for the West is “to make this work,” German Chancellor Olaf Scholz said on Sunday.

Speaking to CBS News, Scholz said the key thing now is to do business “with many countries so that you can live with a situation when trouble comes up with one.”

I think the world we are going to live in [in] 2050 will be multipolar,” he added. “Many countries will be important. The United States, Russia, China, the European Union and the countries in this Union, but also Indonesia and India, or South Africa, countries from [South America].”

The chancellor argued that “the big task” now 

https://www.rt.com/news/558322-scholz-world-order-prediction/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

இந்தியா playoff க்கு வராது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் பிரதமர் யுஎஸ் ரிவி CBS க்கு அளித்ததாக செய்தியில் சொன்னது.அவர் சரியாகவே தெரிவித்துள்ளார்

புரின் நவீன உலகம் என்ற கருத்தை சிதைத்துவிட்டார்.

புரின் முற்கால ஏகாதிபத்தியவாதிகளை போன்று அயல்நாடுகளை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்..அவருடைய திட்டம் வெற்றி அளிக்காது என்பதை யாராவது ஒருவர் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

[புரினுக்கு அறிவுரை சொல்ல போனால் என்ன நடக்கும் என்பது ரஷ்யா அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு தெரியுமே]

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார்

😂 நல்ல ஒரு நகைச்சுவை தந்தீர்கள் .

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னவோ சீனா முதலாவது இடத்திற்கு வராமல் போனால் சரி.. 
 
மிகவும் நியாயம்.
ரஷ்யாவோ சீனாவோ உலகிற்கு தலைமையாக அருகில் வருவதற்கும் அனுமதிக்க கூடாது.

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சில சமயங்களில் யோசிக்கும் பொழுது என்ன உலகம் இது என சலிப்பு ஏற்படுகிறது.. 

ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

கொரோனா உட்பட இயற்கை பல வகைகளில் உலகிற்கு பிரச்சனை கொடுக்க அதை பயன்படுத்தி புரின் மேலும் பிரச்சனைகள் கொடுக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

உக்ரேன் ஆக்கிரமிக்கப்பட வேண்டும் என்றோ அழிவுகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றோ யாரும் விரும்பியதாக தெரியவில்லை. 
அமெரிக்க கண்ட பிராந்திய அரசியலை ஆதரிப்பவர்கள் ஏன் ரஷ்ய பிராந்திய அரசியலை ஏற்க மறுக்கின்றார்கள் என சொல்ல முடியுமா?

10 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் ஆக்கிரமிக்கப்பட வேண்டும் என்றோ அழிவுகள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றோ யாரும் விரும்பியதாக தெரியவில்லை. 
அமெரிக்க கண்ட பிராந்திய அரசியலை ஆதரிப்பவர்கள் ஏன் ரஷ்ய பிராந்திய அரசியலை ஏற்க மறுக்கின்றார்கள் என சொல்ல முடியுமா?

அப்படியா ? 

இன்னும் வேண்டும். அழிவுகளை இன்னும் எதிர்பார்க்கிறோம் என்றெல்லாம் அழிவை இரசித்து உக்ரெய்ன் போர் தொடர்பான திரிகளில் சிலர் நேரடியாக எழுதிய கருத்துகள் பல தணிக்கை செய்யப்பட்டன, சில இன்னும் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மன் பிரதமர் யுஎஸ் ரிவி CBS க்கு அளித்ததாக செய்தியில் சொன்னது.அவர் சரியாகவே தெரிவித்துள்ளார்

1) புரின் நவீன உலகம் என்ற கருத்தை சிதைத்துவிட்டார்.

2) புரின் முற்கால ஏகாதிபத்தியவாதிகளை போன்று அயல்நாடுகளை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்..

அவருடைய திட்டம் வெற்றி அளிக்காது என்பதை யாராவது ஒருவர் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

3) [புரினுக்கு அறிவுரை சொல்ல போனால் என்ன நடக்கும் என்பது ரஷ்யா அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு தெரியுமே]

1) எப்படி என்று தெளிவுபடுத்த முடியுமா ? 

2) ஈராக், லிபியா, சிரியா போன்று குண்டு வீசி அழிக்கலாம். கியூபா, வெனீசுவேலா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளின் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் போன்று  ரஸ்யா படையெடுக்காமல் குண்டுவீசி, பொருளாதாரத் தடை விதித்து உக்ரேனை அழிக்கலாம் என்று யோசனை கூறுகிறீர்களா ? 

3) அறிவுரை கூறினால் என்ன  நடக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் நியாயம்.
1) ரஷ்யாவோ சீனாவோ உலகிற்கு தலைமையாக அருகில் வருவதற்கும் அனுமதிக்க கூடாது.

2) ரஷ்யா வெல்ல வேண்டும் உக்ரைன் ஆக்கிரமிக்கபட வேண்டும், அப்பாவி ரஷ்யாவின் வாழ்வா இல்லை சாவா என்கின்ற போர் இது என்று மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற  இலங்கை தமிழர்கள் சொல்லும் போதும் என்ன உலகம் இது என சலிப்பு எனக்கும் வாறது.

3) கொரோனா உட்பட இயற்கை பல வகைகளில் உலகிற்கு பிரச்சனை கொடுக்க அதை பயன்படுத்தி புரின் மேலும் பிரச்சனைகள் கொடுக்கிறார்.

1) ஏன் அனுமதிக்கக் கூடாது  ? கொஞ்சம் விளங்கபடுத்த முடியுமா? 

2) மேற்கு நாடுகள் உலகம் முழுவதும் குண்டு வீசியும், ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் தமக்கு ஒத்துழைக்காத நாடுகளை சீரளித்தபோது உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா? அல்லது எங்களை சிங்கலமும் இந்தியாவும் சேர்ந்து அழித்தபோது மேற்கு அதற்கு ஒத்துழைத்தபோது உங்களுக்கு சலிப்பு வந்ததா ?

3) ரஸ்யா மட்டும்தான் பிரச்சனை கொடுத்ததா? கொறோனா தடுப்பூசி விடயத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து ஏழை நாடுகளை வஞ்சித்தது உங்களுக்கு பிரச்சனையாகத் தோன்றவில்லையா ? 

கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ. உங்களுக்கு  புண்ணியமாப் போகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.