Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PM praises South Asian Games medal winners | Page 3 | Daily News

இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன்,

220715%20Alahapperuma%20%20(1).jpg

1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர்.

220715%20Alahapperuma%20%20(4).jpg

2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையில் கூறிய 13 ஆம் திருத்தம் மூலமான தீர்வினை அங்கிருந்தே, "இல்லையில்லை, நிச்சயமாக அதனைத் தரப்போவதில்லை" என்று கர்ஜித்த மனிதர்.

3. 2012 இல், முதன்முறையாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைபற்றிய தீர்மானங்கள் ஐ நா வில் பேசப்படப்போகும் தறுவாயில் அப்போது இலங்கையின் இளைஞர் விவகார திறன் மேம்பாட்டு அமைச்சராக இருந்த டளஸ் இலங்கையின் 150 உள்ளூராட்சி சபைகளிலும் இந்த தீர்மானத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதுடன், " மக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியையும் ராணுவத்தையும், நாட்டையும் காக்க ஒன்றிணையவேண்டும்" என்ற கோஷத்தினை தனது ஆர்ப்பாட்டங்களில் திருப்பத் திருப்பக் கூறி வந்தவர்.

4. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது அதனை முற்றாக நிராகரித்த டளஸ், அது 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒத்தது என்றும், அது புலிப்பயங்கரவாதிகளின் கழுத்தில் தொங்கும் சயனைட் வில்லைக்குச் சமமானது என்றும் கர்ஜித்தவர்.

5. 2014 இல் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டளஸ், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் நாட்டில் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் அப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் மீண்டும் புலிப்பயங்கரவாதிகளை நாட்டிற்குள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறியவர். 

6. 2015 இல் ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கியபோது அதனைக் கடுமையாக எதிர்த்த டளஸ், பிரிவினைவாத எண்ணங்களுடன் இருக்கும் எந்த புலம்பெயர் அமைப்பும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிவந்தவர்.

220715%20Alahapperuma%20%20(5).jpg

7. 2015 இல் தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளான உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோரின் சின்ஹலே அமைப்பில் தன்னையும் இணைத்து தனிச்சிங்களக் கொடியினை கையிலேந்தி தனது இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் டளஸ்.,

220715%20Alahapperuma%20%20(2).JPG

8. 2016 இல் ஐ நா முன்றலில் சிங்கள இனவாதிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டளஸ், "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும், நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என்றும், இலங்கை ராணுவ வீரர்கள் "யுத்த நாயகர்கள்" என்று கர்ஜித்தவர் இந்த டளஸ். 

220715%20Alahapperuma%20%20(3).JPG

9. 2020 இல் கோத்தாவை வானளவாகப் புகந்த டளஸ், கோத்தாவின் நடவடிக்கைகள்  மூலம் நாடு ஊழல்களிலிருந்தும், லஞ்சங்களிலிருந்தும், போதைவஸ்த்துப் பாவனையிலிருந்தும், பாதாள உலக செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறதென்றும், அனைத்து இன மக்களும் அவரது ஆட்சியில் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்தவர்.

10. இன்று இதே டளஸ் இன்னொரு புகழ்பெற்ற போர்க்குற்றவாளி சரத் பொன்சேக்காவுடனும், தெற்கின் இன்னொரு சிங்கள இனவாதி சஜித்துடன் இணைந்தும் ஜனாதிபதியாக முயன்று கொண்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்படி இடையில் வந்தார்.வெளி நாடுகளின் தேர்வா அல்லது போராட்டக்காரர்களின் ரனிலுக்கு எதிரான மாற்றா.எது எப்படியோ ரனிலும் இவரும் மொட்டுக்கட்சியின் ஆட்க்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித்

சிங்கள இனவாதம் தற்போது வயிற்றுப் பசியால் சற்றே பதுங்கி உள்ளது….

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட டவுட்டு என்னவெண்டா..... டல்லசை நம்பி..... தன்னை போட்டியில் இருந்து விடுவித்த சஜித், மீண்டும், மீண்டும் தன்னை வேலைக்காகா அரசியல்வாதி என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
 
மனோ கணேசன் போன்ற அவரது ஆதரவாளர்கள் கூட அவரை கைவிட்டு, ரணில் பக்கம் தாவியது தெளிவாக தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எண்ட டவுட்டு என்னவெண்டா..... டல்லசை நம்பி..... தன்னை போட்டியில் இருந்து விடுவித்த சஜித், மீண்டும், மீண்டும் தன்னை வேலைக்காகா அரசியல்வாதி என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
 
மனோ கணேசன் போன்ற அவரது ஆதரவாளர்கள் கூட அவரை கைவிட்டு, ரணில் பக்கம் தாவியது தெளிவாக தெரிந்தது.

நாதம்ஸ்,

உங்கள் பார்வையில் சொல்வதானால் - சஜித், ரணில் போல விடாமுயற்சி செய்கிறார்😆.

2022 வரைக்குமான ரணிலின் நகர்வுகள் போலவே இப்போதைய சஜித்தின் நகர்வுகள் என்றும் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

உங்கள் பார்வையில் சொல்வதானால் - சஜித், ரணில் போல விடாமுயற்சி செய்கிறார்😆.

2022 வரைக்குமான ரணிலின் நகர்வுகள் போலவே இப்போதைய சஜித்தின் நகர்வுகள் என்றும் கொள்ளலாம்.

அவர் எங்கையா விடாமுயற்சி செய்தார், செய்கிறார்? கோத்தா பிரதமராக வருமாறு முதலில் கேட்டது அவரை.

நீங்கள் வெளியே போங்கோ முதலில் என்று சொன்ன மாங்காய் மடையர் என்று இங்கே கூட விவாதித்தோமே!

வேலை தர வேண்டிய மனேஜரிடம்.... நல்லது.... நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்.... பின்னர் நான் சேர்ந்து கொள்கிறேன் என்றா கேட்பார்கள்?

காரைநகர் பனித்தியாகர் மாதிரி... இவரும் ஒரு அரசியல் வெத்து வேட்டு.

டல்லஸ் பின்னால் போய் பிரதமர் என்று காவடி தூக்கியிராமல், ஜனாதிபதி ஆக நின்று போட்டியிட்டு தோத்திருக்க வேண்டும்!

வென்றும் இருக்கலாம். என்எம் பெரேராவுக்கு எதிராக நின்று தோற்ற தகப்பனின் அனுபவத்தில் இருந்து பாடம் படிக்கவில்லையே.

அநுர குமார முன்று வாக்குகள் எடுத்தாலும் மானஸ்தன் என்று சொல்லக் கூடிய போட்டியாளன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

டல்லஸ் பின்னால் போய் பிரதமர் என்று காவடி தூக்கியிராமல், ஜனாதிபதி ஆக நின்று போட்டியிட்டு தோத்திருக்க வேண்டும்!

இப்படித்தான் ரணில் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடாமல் மைத்திரியை போட்ட போதும் சொன்னார்கள் இல்லையா?

32 minutes ago, Nathamuni said:

காரைநகர் பனித்தியாகர் மாதிரி... இவரும் ஒரு அரசியல் வெத்து வேட்டு.

ரணில் ஒரு எம்பி சீட்டும் வெல்லாது போனபோது இப்படியும் எழுதினார்கள்.

நாம் 11 தோல்விகளுக்கு பின் 12 வதாக வெற்றி பெறும் போது - 11 தடவை நம்மை, மொக்கன், வெத்துவேட்டு, தந்தையிடம்/மாமனிடம் இருந்து பாடம் படிக்கத்தெரியாதவன் என்று கூறும் அதே வாய்கள்தான் 12வது வெற்றியின் பின் நம்மை விடாமுயற்சியின் சிகரம் என்றும் போற்றும். இதுதான் உலக நியதி

- உடான்ஸ் சாமியார் - 

பிகு

இதனால் சஜித் இனி வெல்லுவார் என்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இப்படித்தான் ரணில் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடாமல் மைத்திரியை போட்ட போதும் சொன்னார்கள் இல்லையா?

ரணில் ஒரு எம்பி சீட்டும் வெல்லாது போனபோது இப்படியும் எழுதினார்கள்.

நாம் 11 தோல்விகளுக்கு பின் 12 வதாக வெற்றி பெறும் போது - 11 தடவை நம்மை, மொக்கன், வெத்துவேட்டு, தந்தையிடம்/மாமனிடம் இருந்து பாடம் படிக்கத்தெரியாதவன் என்று கூறும் அதே வாய்கள்தான் 12வது வெற்றியின் பின் நம்மை விடாமுயற்சியின் சிகரம் என்றும் போற்றும். இதுதான் உலக நியதி

- உடான்ஸ் சாமியார் - 

பிகு

இதனால் சஜித் இனி வெல்லுவார் என்பதில்லை. 

அப்படி இல்லை, உடான்சர்.

சஜித் எதிர்கட்சி தலைவர். தனது கட்சிக் கொள்கைகளை (?) கடாசி விட்டு, வேறு ஒரு மக்களால் நிராகிரிக்கப்பட்டு, பிரதமர், நிதியமைச்சர், ஜனாதிபதி பதவிகளை, அரசையே இழந்த கட்சியின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் டல்லசை ஜனாதிபதி ஆகவும், அவரின் கீழ் பிரதமர் ஆக ஒப்புக் கொண்டதும் தவறு.

அணைத்துக்கும் மேலே, ரணில், டல்லஸ் இருவருமே மொட்டுக் கட்சியின் போட்டியாளர்கள். அவர்களது அரசியல் சூழ்ச்சிக்குள் மாட்டக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லையே.

*****
Winners take all 😜🤪

Edited by Nathamuni

6 hours ago, ரஞ்சித் said:

PM praises South Asian Games medal winners | Page 3 | Daily News

இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன்,

220715%20Alahapperuma%20%20(1).jpg

1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர்.

220715%20Alahapperuma%20%20(4).jpg

2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையில் கூறிய 13 ஆம் திருத்தம் மூலமான தீர்வினை அங்கிருந்தே, "இல்லையில்லை, நிச்சயமாக அதனைத் தரப்போவதில்லை" என்று கர்ஜித்த மனிதர்.

3. 2012 இல், முதன்முறையாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைபற்றிய தீர்மானங்கள் ஐ நா வில் பேசப்படப்போகும் தறுவாயில் அப்போது இலங்கையின் இளைஞர் விவகார திறன் மேம்பாட்டு அமைச்சராக இருந்த டளஸ் இலங்கையின் 150 உள்ளூராட்சி சபைகளிலும் இந்த தீர்மானத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதுடன், " மக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியையும் ராணுவத்தையும், நாட்டையும் காக்க ஒன்றிணையவேண்டும்" என்ற கோஷத்தினை தனது ஆர்ப்பாட்டங்களில் திருப்பத் திருப்பக் கூறி வந்தவர்.

4. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது அதனை முற்றாக நிராகரித்த டளஸ், அது 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒத்தது என்றும், அது புலிப்பயங்கரவாதிகளின் கழுத்தில் தொங்கும் சயனைட் வில்லைக்குச் சமமானது என்றும் கர்ஜித்தவர்.

5. 2014 இல் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டளஸ், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் நாட்டில் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் அப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் மீண்டும் புலிப்பயங்கரவாதிகளை நாட்டிற்குள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறியவர். 

6. 2015 இல் ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கியபோது அதனைக் கடுமையாக எதிர்த்த டளஸ், பிரிவினைவாத எண்ணங்களுடன் இருக்கும் எந்த புலம்பெயர் அமைப்பும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிவந்தவர்.

220715%20Alahapperuma%20%20(5).jpg

7. 2015 இல் தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளான உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோரின் சின்ஹலே அமைப்பில் தன்னையும் இணைத்து தனிச்சிங்களக் கொடியினை கையிலேந்தி தனது இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் டளஸ்.,

220715%20Alahapperuma%20%20(2).JPG

8. 2016 இல் ஐ நா முன்றலில் சிங்கள இனவாதிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டளஸ், "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும், நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என்றும், இலங்கை ராணுவ வீரர்கள் "யுத்த நாயகர்கள்" என்று கர்ஜித்தவர் இந்த டளஸ். 

220715%20Alahapperuma%20%20(3).JPG

9. 2020 இல் கோத்தாவை வானளவாகப் புகந்த டளஸ், கோத்தாவின் நடவடிக்கைகள்  மூலம் நாடு ஊழல்களிலிருந்தும், லஞ்சங்களிலிருந்தும், போதைவஸ்த்துப் பாவனையிலிருந்தும், பாதாள உலக செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறதென்றும், அனைத்து இன மக்களும் அவரது ஆட்சியில் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்தவர்.

10. இன்று இதே டளஸ் இன்னொரு புகழ்பெற்ற போர்க்குற்றவாளி சரத் பொன்சேக்காவுடனும், தெற்கின் இன்னொரு சிங்கள இனவாதி சஜித்துடன் இணைந்தும் ஜனாதிபதியாக முயன்று கொண்டிருக்கிறார்.

எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

கட்டுரைக்கு நன்றி ரஞ்சித், இக் கட்டுரை தமிழ் கார்டியனில் வந்த இந்தக் கட்டுரையின் தமிழாக்கமா?

Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president | Tamil Guardian

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரித்த கோஷடியென்றபடியால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

கட்டுரைக்கு நன்றி ரஞ்சித், இக் கட்டுரை தமிழ் கார்டியனில் வந்த இந்தக் கட்டுரையின் தமிழாக்கமா?

Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president | Tamil Guardian

ஓம் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

நாங்க பெட்டி எவ்வளவு பெரிதென்று தான் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது டல்லசுக்கெண்டு.... ஆனால் கூட்டமைப்பு ரணிலுக்குத் தான் போட்டது. காரணம் பெரியண்ணர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.