Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. அமைதிப்படை நாட்டுக்குள் நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

நாட்டில் எதிர்க்காலத்தில் வன்முறைகள் வெடிக்குமானால், ஐ.நா.வின் அமைதிப்படை இலங்கைக்குள் வருகைத் தரும் ஆபத்து உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தேர்தலில் தோல்;வியுற்று ஒன்றரை வருடங்கள் கழித்து நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, இன்று தாமரை மொட்டுக் கட்சியினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளார்.

அதாவது தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மே 9 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று, ஜுலை 9 ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இன்று நேரடியாக ஜனாதிபதி ஆசனத்தில் அவர் அமர்ந்துள்ளார். 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அவர் பக்கத்தில் பல கட்சிகள் உள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதனுடன் இணைந்த ஏனையக் கட்சிகள் என நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இணைந்து செயற்பட்டிருக்கும்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளமையினால், அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமொன்று இதன் ஊடாக ஒருபோதும் அமையாது. இதனால் மக்கள் மீண்டும் மீண்டும் துன்பப்படும் நிலைமையே காணப்படுகிறது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தின் பிரதிபலனாகவே இன்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே இவ்வாறான செயற்பாடுகள் இனிமேல் ஏற்படாது என்று கருதியே 134 பேர் அவருக்கு வாக்களித்துள்ளார்கள்.

இவர்களுக்கு நாடு குறித்து அக்கறையில்லை. தங்களின் பாதுகாப்பு மட்டுமே முக்கியமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.

சர்வக்கட்சி அரசாங்கமொன்று அமைந்தால் மட்டுமே இது இரண்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் இந்த நிலைமை இன்னமும் மோசமடையலாம். நாட்டில் இரத்த ஆறு ஒட வேண்டும் என்றுதான் சர்வதேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அப்படி நடந்தால், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை இலங்கைக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. அல்லாவிட்டால் இந்தியாவின் அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இறுதியில் போராட்டக்காரர்கள், போராட்டத்தை எதிர்ப்பவர்கள், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவுக்கு வாக்களித்தவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

இதனுடன் இலங்கை இராஜ்ஜியத்தின் பயணமும் முடிவுறும். இந்த அச்சத்தினால்தான் நாம் சர்வக்கட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிக்குமாறு கோரினோம்.- என்றார்.

https://athavannews.com/2022/1291853

  • கருத்துக்கள உறவுகள்

நாடு அதை நோக்கித்தான் செல்கிறது.

 புதிய சைப்பிரஸ் ஒன்று தென்னாசியாவில் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

ஆனால் இந்த பச்சை இனவாதி, மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மனபில மற்றும் ஆனந்த வீரசேகர ஆகிய வெளிப்படையாகவே தம்மை இனவாதிகளாக வெளிக்காட்டுகின்றவர்களின் ஆதரவினைப் பெற்ற சீன ஆதரவாளர் டலசு சனாதிபதியாக வராமல் போனது நாட்டுக்கு நன்மையே.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

ஆனால் இந்த பச்சை இனவாதி, மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்மனபில மற்றும் ஆனந்த வீரசேகர ஆகிய வெளிப்படையாகவே தம்மை இனவாதிகளாக வெளிக்காட்டுகின்றவர்களின் ஆதரவினைப் பெற்ற சீன ஆதரவாளர் டலசு சனாதிபதியாக வராமல் போனது நாட்டுக்கு நன்மையே.

தோல்வியடைந்தது இந்தியாவே. 

அந்த அளவில் திருப்தியே 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல்

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டதன் பின்னரும் அதற்கு முன்னர் ஜனாதிபதி இராஜினாமா செய்யவேண்டுமென நாங்கள் கூறவில்லை ஏன்? எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, அந்தப் பதவியில் இருப்பவர் அப்படியே விலகிவிட்டால். அதனைவிடவும் மோசமானவரைக் கொண்டு அப்பதவியை நிரப்பமுடியும் என்பதனால் ஆகும் என்றார்.

இது அராஜகத்தை ஏற்படுத்தும் செயலாகும். இளம் போராட்டக்காரர்கள் அதனை விளங்கிக்கொள்ளவில்லை. யோசிக்கும் அளவுக்கு அவர்கள் சொந்தபுத்தியில் இருந்தார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இறுதியில் என்ன நடந்தது. ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைக்கும் போதும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்துமாறு உத்தரவிடாத ஜனாதிபதி வீட்டுக்குச் சென்றுள்ளார். போராட்டக்காரர்களுக்கு பருப்பு ஊட்டுவதற்கு முயன்றவர் ஜனாதிபதி ஆகிவிட்டார்.

வியூகமோ தொலைநோக்கு பார்வையோ இல்லாத ‘போராட்டத்தின்’ விளைவாகவும் போராட்டக்காரர்களையே முடக்கும் ஒருவரான  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார்.

ரணிலுக்கு வாக்களித்தது ஏன்? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இன்மை. எல்லாவற்றுக்கும் முன்னதாக இந்த நிலைமையை இல்லாமற் செய்யவேண்டும். அதனை செய்யக்கூடியவர்கள் யார்? ரணில் விக்கிரமசிங்க, அந்த மனநிலையை ஏற்படுத்தியவர்கள் யார்? போராட்டக்காரர்கள் என்றார்.

லால்காந்த, சுனில் ஹந்துநெத்தி உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்றத்தை மற்றுமொரு ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையாக முயன்றபோது, அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, பாதுகாப்பு தரப்பினருக்கு கட்டளையிட்டு, தாக்குதல் நடத்தியவர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறானவரே இன்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் நோக்கம், ஏதிர்கால நோக்கம் உள்ளிட்டவை எதுவுமே இல்லாத காதுகளில் தோடுபோட்டிருந்தவர்கள், தாடி வைத்திருந்தவர்கள் தலைமுடியை அலங்கோலமாக வைத்திருந்த குழுவினர். வீரர்களாகி, கதைகளை கூறி சமூக வலைத்தளங்களின் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்டு, நடிகர்களும் இணைந்து இந்த நிலைமையை தோற்றுவித்துவிட்டனர்.

Tamilmirror Online || ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல்

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தை கண்டால் குளிக்கும், கட்டிலைக்கண்டால் புரளும் சமையலறையைக்கண்டால் உண்ணும் கூட்டத்திடம் ஆட்சி போனால்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!

ஐ.நா அமைதிப்படை வந்தால் நாட்டுக்கு ஆபத்தா? இல்லையேல் சிங்கள இனவாதிகளுக்கு ஆபத்தா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஐ.நா அமைதிப்படை வந்தால் நாட்டுக்கு ஆபத்தா? இல்லையேல் சிங்கள இனவாதிகளுக்கு ஆபத்தா?

ஆபத்து இந்தியாவிற்குத்தானே 😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kapithan said:

ஆபத்து இந்தியாவிற்குத்தானே 😉

கொஞ்சம் விளக்கமாக..... 😄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

யோசிக்கும் அளவுக்கு அவர்கள் சொந்தபுத்தியில் இருந்தார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

அவர் சொல்வது சரி தான்.
நீச்சல்குளத்தை கண்டால் குளிக்கும் கட்டிலைக்கண்டால் படுத்துபுரளும் சமையலறையைக்கண்டால் சாப்பிடும் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

தோல்வியடைந்தது இந்தியாவே. 

அந்த அளவில் திருப்தியே 🤣

6 hours ago, Kapithan said:

ஆபத்து இந்தியாவிற்குத்தானே 😉

இலங்கையின் போராட்டம் முதல், மகிந்த, கோத்தா வெளியேறல், ஜனாதிபதி தேர்தல், ரணில் வெற்றி வரை அமெரிக்காவின் கையே ஓங்கி இருந்ததாகவே தெரிகிறது.

இறுதியாக முழித்துக்கொண்ட இந்திய ரா, டல்சினை இறக்கி, கூட்டமைப்பினை ஆதரிக்க சொல்லி, சஜித்தினையும் பிரதமராக இணங்க வைத்து, சேர்த்து வைத்தாலும். அது தோல்வியில் முடிந்துள்ளது.

கோத்தாவை சிங்கப்பூரில், யுத்த குற்ற விசாரணை குரியவராக பணயமாக வைத்துக்கொண்டே, மகிந்தவை அவரது மொட்டு கட்சி ரணிலுக்கு வாக்களிப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

கூட்டமைப்பில், சம்பந்தன், சுமந்திரன் இந்தியாவின் சொல்படி நடக்க முனைந்தும் தமிழ் எம்பிக்கள் பலர், அமெரிக்காவின் சொல்படி, ரகசியமா, ரணிலுக்கு வாக்களித்ததால், குழம்பிப் போயுள்ளனராம்.

டொலர்கள், இலங்கை ரூபாவிலும் பார்க்க மதிப்பு மிக்கவை. 🤑 🤫

ராணுவத்தின் உயர் பீடத்தில், யுத்த குற்ற விசாரணை குரியவர்களை அமெரிக்கா மடக்கி, தாம் சொல்வதை கேட்க வைத்ததால், சாதாரண குடிதண்ணீர் போராட்டத்துக்கு, ராணுவத்தினை அனுப்பி, போராடிய பொது மக்களில் ஒருவரை சுட்டு கொலை செய்து, போராட்டத்தினை அடக்கிய கோத்தா,  ராணுவத்தின் உதவியே இல்லாமல், அவர்களை வைத்து ஒன்றுமே செய்ய முடியாமல், அவர்கள் தனக்கு ஒத்துழைப்பு தர போவதில்லை என்று புரிந்து ஓடி விட்டார்.

அதே ராணுவம், இன்று ரணிலுக்காக Gota Go Gama வினுள் இறங்கி உள்ளது.

ஆக, சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, சீனாவிடம், இலங்கையில் தோற்று விட்ட இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதாக போக்கு காட்டி, அமெரிக்கா தனது தனி ஆவர்தனத்தினை வாசித்து, மேலாண்மை காட்டி உள்ளது.

இந்தியாவை நம்பி, பேரவலத்தை மூன்று தசாப்தத்திற்கும் மேலாக அனுபவித்த நமக்கும் அமெரிக்க மேலாண்மை நம்பிக்கை தருவதாயும் உள்ளது.

ரணிலும், ஒரு விவேகமான அரசியல்வாதி என்று பலரும் கருதுவதால், சில காத்திரமான வேலைகளை செய்வார் என்று பலரும் நினைக்கிறார்கள். 

இந்த வேலைகளுக்கு தேவையான, பாராளுமன்ற பலம், மகிந்தா, கூட்டமைப்பு, இஸ்லாமிய கட்சிகள் வழங்குவதை, அமெரிக்கா உறுதி செய்யும்.

வெளிநாட்டு வைப்புக்கள், முதலீடுகள், எல்லாம், திரட்டிக்கொண்டு, யுத்த குற்ற விசாரணை கத்தியினை வைத்துக்கொண்டு தான், ராஜபக்சே கும்பலின், பலத்தினை மடக்கி உள்ளது அமெரிக்கா.

இதனை இந்தியா ஒரு போதும் செய்திருக்க முடியாது. காரணம் டெல்லியில் உள்ள, சுப்பிரமணியன் சுவாமி போன்ற, ராஜபக்சேக்களின் முகவர்கள், பணத்தினை எறிந்து இந்திய நகர்வுகளை தடுக்க கூடியவர்களாய் இருந்தார்கள்.

உண்மையில், அமெரிக்காவின் உள்நுழைவு, சீனாவின் கடன் திருகுப் பிடியில் இருந்து விடுபட, தீவின் சகல மக்களுக்கும் நன்மை தரும் ஒரு விடயம்.

மறுபுறம், சீனாவிடம் சிக்கி சீரழியாமல், இந்தியாவும் ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது எனலாம்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கூட்டமைப்பில், சம்பந்தன், சுமந்திரன் இந்தியாவின் சொல்படி நடக்க முனைந்தும் தமிழ் எம்பிக்கள் பலர், அமெரிக்காவின் சொல்படி, ரகசியமா, ரணிலுக்கு வாக்களித்ததால், குழம்பிப் போயுள்ளனராம்.

எரிபொருள் கொள்வனவிற்கு உள்நாட்டு மக்களிடம் டொலர் கேட்டால், அவர்களுந்தான் என்ன செய்வார்கள்?

11 hours ago, தமிழ் சிறி said:

தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி, தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டவரை மக்களே துரத்தியடித்தார்கள், மக்களால் தெரிவு செய்யப்படாதவரை தெரிவு செய்தவர்கள் விழுத்தியடிப்பார்கள். இரண்டுமே நேர்மையான வழியில் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை. அமெரிக்காவோ தன் நாடகத்தை முடித்துக்கொள்ள அவசரப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இலங்கையின் போராட்டம் முதல், மகிந்த, கோத்தா வெளியேறல், ஜனாதிபதி தேர்தல், ரணில் வெற்றி வரை அமெரிக்காவின் கையே ஓங்கி இருந்ததாகவே தெரிகிறது.

இறுதியாக முழித்துக்கொண்ட இந்திய ரா, டல்சினை இறக்கி, கூட்டமைப்பினை ஆதரிக்க சொல்லி, சஜித்தினையும் பிரதமராக இணங்க வைத்து, சேர்த்து வைத்தாலும். அது தோல்வியில் முடிந்துள்ளது.

கோத்தாவை சிங்கப்பூரில், யுத்த குற்ற விசாரணை குரியவராக பணயமாக வைத்துக்கொண்டே, மகிந்தவை அவரது மொட்டு கட்சி ரணிலுக்கு வாக்களிப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

கூட்டமைப்பில், சம்பந்தன், சுமந்திரன் இந்தியாவின் சொல்படி நடக்க முனைந்தும் தமிழ் எம்பிக்கள் பலர், அமெரிக்காவின் சொல்படி, ரகசியமா, ரணிலுக்கு வாக்களித்ததால், குழம்பிப் போயுள்ளனராம்.

டொலர்கள், இலங்கை ரூபாவிலும் பார்க்க மதிப்பு மிக்கவை. 🤑 🤫

ராணுவத்தின் உயர் பீடத்தில், யுத்த குற்ற விசாரணை குரியவர்களை அமெரிக்கா மடக்கி, தாம் சொல்வதை கேட்க வைத்ததால், சாதாரண குடிதண்ணீர் போராட்டத்துக்கு, ராணுவத்தினை அனுப்பி, போராடிய பொது மக்களில் ஒருவரை சுட்டு கொலை செய்து, போராட்டத்தினை அடக்கிய கோத்தா,  ராணுவத்தின் உதவியே இல்லாமல், அவர்களை வைத்து ஒன்றுமே செய்ய முடியாமல், அவர்கள் தனக்கு ஒத்துழைப்பு தர போவதில்லை என்று புரிந்து ஓடி விட்டார்.

அதே ராணுவம், இன்று ரணிலுக்காக Gota Go Gama வினுள் இறங்கி உள்ளது.

ஆக, சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, சீனாவிடம், இலங்கையில் தோற்று விட்ட இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதாக போக்கு காட்டி, அமெரிக்கா தனது தனி ஆவர்தனத்தினை வாசித்து, மேலாண்மை காட்டி உள்ளது.

இந்தியாவை நம்பி, பேரவலத்தை மூன்று தசாப்தத்திற்கும் மேலாக அனுபவித்த நமக்கும் அமெரிக்க மேலாண்மை நம்பிக்கை தருவதாயும் உள்ளது.

ரணிலும், ஒரு விவேகமான அரசியல்வாதி என்று பலரும் கருதுவதால், சில காத்திரமான வேலைகளை செய்வார் என்று பலரும் நினைக்கிறார்கள். 

இந்த வேலைகளுக்கு தேவையான, பாராளுமன்ற பலம், மகிந்தா, கூட்டமைப்பு, இஸ்லாமிய கட்சிகள் வழங்குவதை, அமெரிக்கா உறுதி செய்யும்.

வெளிநாட்டு வைப்புக்கள், முதலீடுகள், எல்லாம், திரட்டிக்கொண்டு, யுத்த குற்ற விசாரணை கத்தியினை வைத்துக்கொண்டு தான், ராஜபக்சே கும்பலின், பலத்தினை மடக்கி உள்ளது அமெரிக்கா.

இதனை இந்தியா ஒரு போதும் செய்திருக்க முடியாது. காரணம் டெல்லியில் உள்ள, சுப்பிரமணியன் சுவாமி போன்ற, ராஜபக்சேக்களின் முகவர்கள், பணத்தினை எறிந்து இந்திய நகர்வுகளை தடுக்க கூடியவர்களாய் இருந்தார்கள்.

TNA மொத்தமுமே ரணிலுக்குத்தான் வாக்களித்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். 

TNA ஒரு அளவுக்கு அதிகமாக இந்தியாவை நம்பும் நிலையில் இல்லை. இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு TELO காறர்கள்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

TNA மொத்தமுமே ரணிலுக்குத்தான் வாக்களித்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். 

TNA ஒரு அளவுக்கு அதிகமாக இந்தியாவை நம்பும் நிலையில் இல்லை. இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு துருப்புச் சீட்டு TELO காறர்கள்தான். 

சுமந்திரன் குழப்பமான கருத்துக்களை சொல்கிறாரே கவனித்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சுமந்திரன் குழப்பமான கருத்துக்களை சொல்கிறாரே கவனித்தீர்களா?

அவர் அப்படிக் கதைக்காவிட்டால்தான் நாங்கள் குழம்ப வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Nathamuni said:

உண்மையில், அமெரிக்காவின் உள்நுழைவு, சீனாவின் கடன் திருகுப் பிடியில் இருந்து விடுபட, தீவின் சகல மக்களுக்கும் நன்மை தரும் ஒரு விடயம்.

ஏதோ நல்லது நடந்தால் சந்தோசம்.🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

TNA மொத்தமுமே ரணிலுக்குத்தான் வாக்களித்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். 

அப்போ, சம்பந்தன் ஐயா தொட்டிலில படுத்திருக்க, பக்கத்தில டளஸும், சஜித்தும் கூத்தமைப்போடு கூட்டமாய் நிண்டு எடுத்த போட்டோ எல்லாம் வெறும் பொய்யா கோபால்???

1 hour ago, Nathamuni said:

அமெரிக்காவின் உள்நுழைவு, சீனாவின் கடன் திருகுப் பிடியில் இருந்து விடுபட, தீவின் சகல மக்களுக்கும் நன்மை தரும் ஒரு விடயம்.

சிங்களவர்களைப் பொறுத்தவரை ஸ்த்திரமான ஆட்சி, மேம்பட்ட பொருளாதாரம் கிடைக்கும். 
எமக்கு? ஏதாவது மாறுமா? தனது செல்லப்பிள்ளை ஆட்சியில் இருக்கும்போது போர்க்குற்ற விசாரணை பற்றியோ அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசவோ வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருக்காதே? 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரஞ்சித் said:

சிங்களவர்களைப் பொறுத்தவரை ஸ்த்திரமான ஆட்சி, மேம்பட்ட பொருளாதாரம் கிடைக்கும். 
எமக்கு? ஏதாவது மாறுமா? தனது செல்லப்பிள்ளை ஆட்சியில் இருக்கும்போது போர்க்குற்ற விசாரணை பற்றியோ அரசியல்த் தீர்வுகுறித்துப் பேசவோ வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருக்காதே? 

இந்து சமுத்திரத்தில், அமெரிக்காவின் தேவை இப்போது அதிகம். இது குறித்து முன்னர் பல தடவை எழுதி இருக்கிறேன். நான் எழுதிய வகையிலேயே விடயங்கள் நடக்கின்றன.

பந்து, டெல்லியில் இருந்து, பீகிங், வாஷிங்டன் போய் நீண்டகாலமாகின்றது என்று சொல்லி இருந்தேன்.

இலங்கையில், சீனாவின் பெரு வெற்றியும், இந்தியாவின் படு தோல்வியும், சுப்ரமணியன் சுவாமி போன்ற டெல்லி வாலாக்களின், நாட்டு அக்கறை இல்லா லஞ்ச ஊழல் அதற்கு காரணம் என்ற அமெரிக்க புரிதலுமே அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு கொள்ள காரணம் ஆகியது.  

அதனாலேயே, பல நாடுகளின் ஆட்சி மாறுதலை நடாத்திய அனுபவம் மிக்க ஒரு தூதர் இங்கே வந்தார். இவர் ஒரு ஊடகம் ஒன்றில் மிக தெளிவான பார்வை ஒன்றினை வைத்தார். ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு நிலைப்பாடு, உடலாயின், பொருளாதாரம் உயிர். முதலாவது சரியில்லாவிடில் உடலில்லாத உயிர் (பொருளாதாரம்) ஆவி. அதே போல இரண்டாவது சரியில்லாவிடில், உயிரில்லாத உடல் (அரசியல் அமைப்பு நிலைப்பாடு) பிணம். இலங்கையில் இது இரண்டுமே சரியில்லை.

புலம் பெயர் இலங்கையர் இந்த உயிரை கொண்டு வரவேண்டுமானால், அரசு, உடலை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சரியான பொருத்தத்தில், உடலும், உயிரும் இருக்கும் என்றார்.

ரணில் இழக்க எதுவுமே இல்லாத நிலையிலே ஜனாதிபதி ஆகி உள்ளார். ஆக, நாட்டினை இனவாத, மதவாதம் இல்லாத ஒன்றாக்கி, பொருளாதார அபிவிருத்தி அடைய அமெரிக்க, ஐரோப்பிய உதவிகளை பயன்படுத்தினால், அவர் அடுத்த தேர்தலில் வெல்வார்.

அதனால் தான் சொன்னேன், அமெரிக்க ஆதரவுடன் ரணில் வருவது நமக்கும், சிங்களவர்களுக்கும் கூட நல்லது.   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதனாலேயே, பல நாடுகளின் ஆட்சி மாறுதலை நடாத்திய அனுபவம் மிக்க ஒரு தூதர் இங்கே வந்தார்.

இதை நானும் படித்திருக்கிறேன். ஆட்சிமாற்ற ஸ்பெஷலிஸ்ட்!!!

எனது கேள்வி என்னவென்றால், எமது பிரச்சினையும், சிங்களவர்களின் பிரச்சினையும் ஒன்றல்லவே? அவர்களின் பிரச்சினை காஸும், பெற்றோலும், மின்சாரமும்.

ஆனால், எமது பிரச்சினை வேறு. ஆகவேதான், இன்றைய சிங்களவர்களின் பிரச்சினைக்கான தீர்வு எமக்கான தீர்வாகாது என்பதுதான் எனது நிலைப்பாடு.

ஆம், உண்மைதான். தமிழரின் பொருளாதார வாழ்க்கையும் ஓரளவிற்கு மேம்படும், நாட்டில் வாழும் மற்றைய இனங்களைப்போல. ஆனால், அதுவே எமக்குப் போதுமானதா? இதைவிட வேறு பிரச்சினைகளும் எமக்கு இருக்கின்றனவே?!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரஞ்சித் said:

இது குறித்து பலதடவை எழுதி உள்ளேன். சிலர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும், இன்று நடப்பதனை வைத்து பார்த்தால் நான் சொன்ன வகையிலேயே செல்வது போல தோன்றுகிறது.

நான் சொன்னது இதுதான்:

ஹொங்கோங் எனும் பெரும் பொருளாதார மையத்தினை 'சீனாவிடம்' இழந்த மேற்கு தேடும் புதிய மையம் 7 ஆசிய புலிப் பொருளாதார நாடுகளில் இல்லை.

ஹொங்கோங் - சீனாவின் பிடியில் 
தைவான் - சீனாவின் மறைமுக பிடியில் 
தாய்லாந்து - அரசியல் ஸ்திரமினமை 
தென் கொரியா - தலையிடியே வட கொரியா 
சிங்கப்பூர் - 74% சீனர்கள் 
மலேசியா, இந்தோனேசியா - இஸ்லாமிய நாடுகள்.

இந்தியா வின் வங்கியியல் ஊழல்.... விஜய் மல்லையா, நீரஜ் மோடி என பல் இளிப்பதால்.... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் சிறப்பான வங்கியியல் தேவை. அது இந்த தீவில் அமைந்தால் அதற்கு நல்லது.

ஆக.... இலங்கை தீவு, குறிப்பாக தமிழர் பகுதி, மத்திய கிழக்கில் இஸ்ரேல் போல, மேற்கு உறுதியான நம்பிக்கை வைக்கக்கூடிய பகுதி. இஸ்ரேல் போலவே, தமிழர் பகுதியில் பலர் மேற்கு குடியுரிமை கொண்டவர்கள்.

இந்த வகையில், சிங்களவர்கள் ஒரு தீர்வுக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது. இல்லாவிடில் நமக்கு, கடனே இல்லாத ஒரு சுஜ ஆட்சி கிடைக்கலாம்.

இந்த கருத்துடன், ரணில், அமெரிக்க பின்புலத்துடன் சீனாவிடம் சிக்கிய இலங்கையின் ஜனாதிபதி ஆகியுள்ளதை பாருங்கள், சில விடைகள் கிடைக்கும்.

ரணில் இனவாதம், மதவாதம் இல்லாமல், நியாயமான தீர்வுக்கு போனால் ஒருநாடு.

இல்லாவிடில் இருநாடுகள். ரணிலே ஒரே நாட்டின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கேட்க நல்லாத்தான் இருக்கு.

அப்படியானால் புலம்பெயர் தமிழருடன் அமெரிக்காவோ அல்லது அவர்கள் சார்பாக ஒரு குழுவோ இதுவரையில் இதுதொடர்பாக தொடர்புகொண்டுள்ளதா? ஏதாவது சமிக்ஞையாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா? இது வெறுமனே இன்றிருக்கும் பொருளாதார நெருக்கடியை தூக்கி நிமிர்த்தி, தனக்குச் சார்பான ரணிலை பதவியில் தக்கவைப்பது என்கிற அமெரிக்காவின் நோக்கத்துடன் நின்றுவிடுமாக இருந்தால் என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இது நல்ல கேள்வி.... நான் புலத்தில் இருந்து தான் எழுதுறேன்.... இது எப்படி? 🤫😜🤑

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இது நல்ல கேள்வி.... நான் புலத்தில் இருந்து தான் எழுதுறேன்.... எப்படி? 🤫😜🤑

நாதம் நீங்கள் இப்ப ஊரிலா நிக்கிறியள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நாதம் நீங்கள் இப்ப ஊரிலா நிக்கிறியள்.

நாதத்திட்டை நீங்கள் அமெரிக்காவிலையோ நிக்கிறியள் எண்டு கேட்டால் அதுக்கும் ஓமெண்டுதான் சொல்லுவார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நாதம் நீங்கள் இப்ப ஊரிலா நிக்கிறியள்.

நீங்கள் இலங்கைக்கு Location மாற்றிவிட்டதால் இலங்கை பற்றி நம்பிக்கை வருகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.