Jump to content

இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வது உட்பட தீர்வுகளுக்கு, புதிய அமைச்சரவையில் எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்றோர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1934716_1693233430889351_7755905304956056347_n.jpg

நூருல் ஹுதா உமர்

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.

 

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் உதவி திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்த நீண்டகால அரசியல் வரலாற்றை கொண்ட  கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்களை மீண்டும் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு உள்வாங்கி முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் இலங்கை நாட்டுக்கு பல கோடி ரூபாய் பணங்களை அரபு நாடுகளில் இருந்தும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்தும் உதவியாக பெற்றுக்கொள்ள முடியும்.

 

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்கள் தான் அரசியல் அதிகாரத்திலிருந்த காலங்களில் பல கோடிக்கணக்கான பணங்களை இலங்கை நாட்டுக்கு உதவியாக பெற்று கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் தனது சேவையை வழங்கியுள்ளார். இனவாத, பிரதேசவாத அரக்கர்களை கொன்ற ஆட்சியாக மலரவிருக்கும் ஜனாதிபதி ரணிலை தலைமையாக கொண்ட இந்த அரசாங்கத்தில் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா போன்ற மொழியாற்றல், திறமை, நாட்டுப்பற்று மிக்கவர்கள் அமைச்சர்களாக அல்லது அதிகாரம் பொருந்தியர்வர்களாக இருக்கவேண்டியது நாட்டின் காலத்தின் தேவையாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.madawalaenews.com/2022/07/blog-post_685.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, colomban said:

புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம் பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மத்தியகுழு அறிக்கையொன்றினூடாக புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்  ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளது.

பலம் பொருந்திய அமைச்சுப் பதவி என்றால்...
பாதுகாப்பு அமைச்சர் பதவியை... கொடுத்தால் போச்சு.  😜

  • Haha 1
Link to comment
Share on other sites

இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது  அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். 
ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.

  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா கிளம்ப, குளிர் விட்டுப்போயிரிச்சு.😉

அந்த மாவனல்ல சிவப்புத் தொப்பிக்காரரை கொஞ்ச நாளாக் காணவில்லை..... 😁

கிஸ்புல்லா  எம்பி இல்லை.... அப்புறம் எப்படி?

அட நம்ம கக்கீம், ரிசாத், அல்சப்ரீ எல்லாம் இருக்காங்களே....

இவரு எதுக்கு...... ஓ.... கோத்தா பறித்த மட்டு பல்கலைகழகம் திருப்பி எடுக்க வேணும் எல்லோ... 🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அந்த மாவனல்ல சிவப்புத் தொப்பிக்காரரை கொஞ்ச நாளாக் காணவில்லை..... 😁

யாரது எங்க தலைவன பத்தி தப்பா பேசுறது?😆

முபாரக் அப்துல் மஜீத் எண்டா அண்ட சராசரமும் அதிரும் தெரியுமா?

ஆள் மாவனல்ல இல்லை அம்பாறை மாவட்டம் என நினைக்கிறேன்?

3 hours ago, நிழலி said:

இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது  அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். 
ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.

விக்கி அமைச்சராகி இவர்கள் போல் நடந்து கொண்டால் புலம்பெயர் தமிழர் எதிர்வினை எப்படி இருக்கும்?

அப்போ இந்த முறையை கையில் எடுக்க அரசியல்வாதிகள் பயப்படுவதிலும் நியாயம் உண்டுதானே?

 

Link to comment
Share on other sites

21 minutes ago, goshan_che said:

 

விக்கி அமைச்சராகி இவர்கள் போல் நடந்து கொண்டால் புலம்பெயர் தமிழர் எதிர்வினை எப்படி இருக்கும்?

அப்போ இந்த முறையை கையில் எடுக்க அரசியல்வாதிகள் பயப்படுவதிலும் நியாயம் உண்டுதானே?

 

தாயக அரசியலில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வினையாற்றலுக்கு இனி இடமில்லை, அவர்கள் அதற்கான வெளியை இனி தரப்போவதும் இல்லை. 2009 இன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்த தலைமைகள் இங்கு புலம்பெயர் தேசங்களில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூக வலை தல  பின்னூட்டம்:

ரணிலின் பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளது என்பதை புரியமுடியாத முட்டாள் போல பேசுகிறார் சுமந்திரன். ரணில் வென்றபின்னராவது, வாயை மூடிக்கொண்டு நடக்கிற அலுவலை பாராமல், போராட்டகாரர்கள், எதிர்ப்பதால், ரணிலை எப்படி ஆதரப்பித்து என்கிறார்.

சம்பந்தனிலும் பார்க்க இவருக்கு தான் அறளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோடிகளின் வரவிற்காக.. இன்னும் ஒரு 500 தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்களின் உயிர்கள் விலைபேசப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 

ரணிலின் முன்னைய ஆட்சியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களும் தான் சொறீலங்காவின் இன்றைய நிலைக்கு காரணம். கொரோனா மட்டுமல்ல...! 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2022 at 04:02, Nathamuni said:

ஒரு சமூக வலை தல  பின்னூட்டம்:

ரணிலின் பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளது என்பதை புரியமுடியாத முட்டாள் போல பேசுகிறார் சுமந்திரன். ரணில் வென்றபின்னராவது, வாயை மூடிக்கொண்டு நடக்கிற அலுவலை பாராமல், போராட்டகாரர்கள், எதிர்ப்பதால், ரணிலை எப்படி ஆதரப்பித்து என்கிறார்.

சம்பந்தனிலும் பார்க்க இவருக்கு தான் அறளை.

ஏன் நாதம்! இங்கு ஒருவர் அடிக்கடி சுமந்திரன் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்றும்  கூட்டமைப்பு, விக்னேஸ்வரன்  இந்தியாவின் அடிமைகள்  சொல்லிக்கொண்டு திரிந்தாரே? ஆனால் சுமந்திரனோ;   கூட்டாக தாம் ரணிலை ஆதரிக்கவில்லை என பகிரங்கமாக அறிவித்து விட்டார்.  இப்போ இந்தியா, அமெரிக்கா இரண்டுமே இவர்களை கைகழுவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா? அல்லது ராஜதந்திரம் என்று சொல்லி மறைத்துக்கொள்வார்களா? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.