Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை.

மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது.

மேற்குலகில் பல முஸ்லீம்கள் ஆசியா, ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறியுள்ளார்கள். அவர்கள் அப்படி இங்கே வர காரணம் இங்கே உள்ள பொருளாதார மேன்மை. அந்த மேன்மை மந்திரத்தால் விளையவில்லை. மேற்கின் ஒப்பீட்டலாவில் மேலான ஜனநாயக, பொருளாதார, கட்டமைபுக்களே இதை உருவாக்கின.

இந்த தனிமனித, பொருளீட்டும், லாபம் பார்க்கும் மேற்கின் அரசியல், கலாச்சார, பொருளாதார மேன்மையை அதன் பலன்களை அனுபவித்த படியே - மேற்கில் ஷ்ரியா சட்டம் வேண்டும் என கேட்பார்கள். ஆப்கானில், ஈரானில், சவுதியில் நடக்கும் இஸ்லாமிய 10ம் நூற்றாண்டு ஆட்சி மேற்கை விட திறம் என்பார்கள். ஆனால் செத்தாலும் இந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல அதை விட நெகிழ்வான மலேசியா, இந்தோனேசியா வில் கூட போய் வாழமாட்டார்கள்.

இதைதான் ரஸ்யா விடயத்தில் அண்ணைமார் செய்கிறார்கள்.

எந்த நாட்டையும் எங்கும் இருந்தும் ஆதரிக்கலாம். ஆனால் ஒரு மோசமான, சுரண்டல் மிகுந்த சர்வாதிகார systemதை நல்லது என்று, அந்த நாட்டிலே வாழாமல், கொலிடே போய் கூட பார்க்காமல், அதைவிட ஒப்பீட்டளவில் சகல சுதந்திரங்களும் உள்ள சிஸ்டத்தில் இருந்து விமர்சிப்பதுதான் விமர்சிக்கபடுகிறது.

தவிரவும் நாம் எல்லோரும் மேற்க்கை தேர்ந்து வந்தவர்கள். இப்போ மேற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பலர் மொஸ்கோவில் வந்திறங்கி - ரொமேனியா போடரை நடந்து கடந்து ஈயுவிக்குள் உள்ளிட்டவர்கள். அல்லது இன்னொரு ஈயு அல்லாத நாட்டின் மூலம் அல்லது கிழக்கு ஜேர்மனி மூலம் மேற்கு ஐரோப்பா வந்தவர்கள்.

ஆகவே ஊரில் இருந்து கிளம்பும் போதே, ரஸ்யாவை, கியூபாவை, தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பு, இப்போ இதே நாடுகளுக்கு போக கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ள போது, அந்த மேன்மையான நாட்டை விட்டு ஏன் இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே.

எனது அப்பா கொள்ளைகாரன், அவரை நான் கண்டிகிறேன் என்று சொன்ன படி, அவர் கொள்ளை அடித்து சேர்த்த சொத்தை அனுபவிக்கும் மகன் போல - ஒரு போலித்தனம் இது.

மேற்கின் யாரும் பிழைகளை விமர்சிக்கலாம், ரஞ்சித், விசுகு அண்ணை, நான் என இங்கே மாறாக கதைப்பவர்கள் பலரும் மேற்கை கடுமையாக சாடுபவர்கள்தான் -

ஆனால் இங்கே விமர்சனத்குக்கு உள்ளாவது, மேலே சொல்லபட்ட போலி தார்மீக குமுறலும் (fake moral indignation), புட்டின் மீதானா ஒரு தலைக்காதல், நாயக வணக்கமும், வரலாற்றில் ஐரோப்பிய சிறுபான்மை தேசிய இனங்களுக்கு ரஸ்யா செய்த, செய்கிற கருவறுப்பை வெள்ளை அடிக்கும் செயல்களுமே.

நேர்மையான யதார்த்தமான கருத்து உடான்ஸ் ஜீ... and I Like it. 😃

  • Replies 62
  • Views 4.1k
  • Created
  • Last Reply
15 hours ago, goshan_che said:

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல.

அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எமக்கு ஒப்பீட்டளவில் பயன்படகூடிய மேற்கின் பக்கம் நிற்பதே உசிதம் என்பதே உ.சா வின் கருத்து. மேற்கில் எமக்கு சொற்ப வாக்கு பலமாவது உண்டு. எமது மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை விடுத்து, ஒரு போதும் எம்மை தமது தூதரக வளவுக்குள் கூட எடுக்காத ரஸ்யாவுடன் நாமாக ஒருதலைகாதல் செய்வது அபத்தமான வெளிநாட்டு கொள்கை என்பதே உ.சாவின் கருத்து. அதேபோல் 2009 வரை இருபகுதியும் எமக்கு ஆப்பு அடித்தாலும், 2009 இற்கு பின் மேற்கினதும், ரஸ்யாவினதும் நம் சம்பந்தமான அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டையும் உ.சா கருத்தில் எடுக்கிறார்.

அதே போல் மேற்கினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரஸ்யாவையும், புட்டினையும் நல்லவர்களாக சித்தரிப்பதை, உக்ரேன் மீது நடக்கும் ஆக்கிரமிப்பை மனிதாபிமான போர் என வர்ணிப்பதை உ.சா எதிர்க்கிறார்.

ரஸ்யா பல நூறு வருடங்களாக சிறிய ஐரோப்பிய தேசிய இனங்களை கருவறுத்ததை, அழிக்கப்படும் ஒரு தேசிய இனமான நாமே, தனி மனித வழிபாட்டு உந்தலால், மேற்கின் மீதான வெறுப்பால், வெள்ளை அடிக்க முனைவதை - உ.சா அடியோடு வெறுக்கிறார்.

மேற்கில் நாம் எல்லோரும் அனுபவிக்கும் ஒப்பீட்டளவு பொருளாதார மேன்மை, மேற்கு செய்யும் ஊத்தை வேலையின் பலந்தான் என்பதால் -குறைந்த பட்சம் நாமும் அந்த ஊத்தையின் ஒரு அங்கமே என்பதையாவது ஏற்க வேண்டும் என உ.சா விரும்புகிறார். மாறாக மேற்கின் ஊத்தை வேலைகளால் விளைந்த நன்மையை அனுபவித்த படியே, அதே ஊத்தை வேலையையை கண்டிப்பதாக பாவ்லா காட்டும் “வெள்ளைவேட்டி” தனத்தையே உ.சா சாடுகிறார்.

அதே போல் மேற்கில் பெரும்பாலும் முதலாம் தலைமுறை குடியேறியாக இருக்கும் நாமே பொதுவெளியில் மேற்கை விமர்சிக்கும் ஒப்பீட்டளவு பேச்சு சுதந்திர்ந்தை, ஜனநாயகத்தை பாவித்து, உலகின் மிக அடக்குமுறை உள்ள ஒரு மாபியா ஸ்டேட்டை - அதுவும் ஜனநாயக நாடுதான் என சீரியஸாக காமெடி பண்ணுவதையும் உ.சா கண்டிக்கிறார்.

பிகு:

உ.சா நேற்று முதல் ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறையை கழி(ளி)ப்பதால் - எல்லோரினதும் கருத்துகளுக்கும் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.

தெளிவான கருத்து. முதல் பச்சை என்னுடையது தான் 😀

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் போரில் மேற்கின் புரொக்சி யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் வெல்லக் கூடாது. அதே நேரம் ரஷ்சியாவும் வெல்லக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

தெளிவான கருத்து. முதல் பச்சை என்னுடையது தான் 😀

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் போரில் மேற்கின் புரொக்சி யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் வெல்லக் கூடாது. அதே நேரம் ரஷ்சியாவும் வெல்லக் கூடாது.

அது....................

16 hours ago, goshan_che said:

பல நேரங்களில்  எனது  நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@goshan_che

உங்களால் இரு தடைவை பதியப்பட்ட கருத்துக்களின் படி......

புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று அந்தந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சிறிலங்கா நாட்டின் அரசியல்,மற்றும் சட்டங்கள் பற்றி கதைக்க கருத்துக்கூற அருகதை அற்றவர்கள் என சிங்கள அரசு கூற முடியும். ஏனெனில் நாங்கள்  தற்போது வசிக்கும் நாட்டு குடியுரிமையை பெறும்போது  சத்தியப்பிரமாணம் எடுத்துத்தானே குடியுரிமை பெறுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இரெண்டு விடயம்.

1. இல்லை. நாம் இலங்கையில் இருந்து விரட்டபட்டவர்கள். அதுவும் நாம் இரு தேசங்கள் உள்ள ஒரு தீவில், அல்லது இரு மாநிலங்களின் இணைவாக உள்ள ஒரு கூட்டாட்சி அரசின் சுய நிர்ணயமுள்ள மாநிலத்தின் குடிகள் என இன்னும் கருதுபவர்கள். 

 👆இலங்கையில் நாம் யார்? என்ற இந்த  விளக்கம் நமக்கு இருக்கும் மட்டும், இலங்கை அரசு என்ன சொன்னாலும், நாம் வேறு எந்த நாட்டின் பிரஜைகளானாலும் எமது பூர்வீக மண்ணின் மீதான, எமது வரலாற்று வாழிடம் மீதான எமது உரிமையை நாம் விட்டு கொடுக்க தேவையில்லை. நான் மேலே சொன்னவற்றை இதனுடன் ஒப்பிடவும் முடியாது.

உங்களுக்கும், சிறி அண்ணாவுக்கு இலங்கையுடன் இருக்கும் தொடர்பும், ரஸ்யாவுடன் இருக்கும் தொடர்பும் ஒன்றா? இல்லைதானே.

2. ஆனால் அங்கே இருக்கும் தமிழ் மக்கள், எம்மை விட இலங்கை தமிழ் அரசியலை தீர்மானிக்க தகுதி உடையவர் என்பது மறுக்கவியலாத உண்மை. அவர்களுக்கு இருக்கும் அந்த உரிமையையை பாவித்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதிகளை நாம் கொஞ்சம் அவகாசம் கொடுத்து பார்க்க வேண்டும் என்பதும் அப்படியே. அதனால்தான், அந்த அரசியல்வாதிகள் செய்வது சரி இல்லை என்றால் நீங்கள் போய் செய்யலாமே? என்ற பதில் வந்தது. 

ஆனால் இப்போ அவகாசகாலம் முடிந்து பல வருடங்கள் ஆகி விட்டதால் - இப்போ அதே பதில் வருவதில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல.

அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எமக்கு ஒப்பீட்டளவில் பயன்படகூடிய மேற்கின் பக்கம் நிற்பதே உசிதம் என்பதே உ.சா வின் கருத்து. மேற்கில் எமக்கு சொற்ப வாக்கு பலமாவது உண்டு. எமது மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை விடுத்து, ஒரு போதும் எம்மை தமது தூதரக வளவுக்குள் கூட எடுக்காத ரஸ்யாவுடன் நாமாக ஒருதலைகாதல் செய்வது அபத்தமான வெளிநாட்டு கொள்கை என்பதே உ.சாவின் கருத்து. அதேபோல் 2009 வரை இருபகுதியும் எமக்கு ஆப்பு அடித்தாலும், 2009 இற்கு பின் மேற்கினதும், ரஸ்யாவினதும் நம் சம்பந்தமான அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டையும் உ.சா கருத்தில் எடுக்கிறார்.

அதே போல் மேற்கினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரஸ்யாவையும், புட்டினையும் நல்லவர்களாக சித்தரிப்பதை, உக்ரேன் மீது நடக்கும் ஆக்கிரமிப்பை மனிதாபிமான போர் என வர்ணிப்பதை உ.சா எதிர்க்கிறார்.

ரஸ்யா பல நூறு வருடங்களாக சிறிய ஐரோப்பிய தேசிய இனங்களை கருவறுத்ததை, அழிக்கப்படும் ஒரு தேசிய இனமான நாமே, தனி மனித வழிபாட்டு உந்தலால், மேற்கின் மீதான வெறுப்பால், வெள்ளை அடிக்க முனைவதை - உ.சா அடியோடு வெறுக்கிறார்.

மேற்கில் நாம் எல்லோரும் அனுபவிக்கும் ஒப்பீட்டளவு பொருளாதார மேன்மை, மேற்கு செய்யும் ஊத்தை வேலையின் பலந்தான் என்பதால் -குறைந்த பட்சம் நாமும் அந்த ஊத்தையின் ஒரு அங்கமே என்பதையாவது ஏற்க வேண்டும் என உ.சா விரும்புகிறார். மாறாக மேற்கின் ஊத்தை வேலைகளால் விளைந்த நன்மையை அனுபவித்த படியே, அதே ஊத்தை வேலையையை கண்டிப்பதாக பாவ்லா காட்டும் “வெள்ளைவேட்டி” தனத்தையே உ.சா சாடுகிறார்.

அதே போல் மேற்கில் பெரும்பாலும் முதலாம் தலைமுறை குடியேறியாக இருக்கும் நாமே பொதுவெளியில் மேற்கை விமர்சிக்கும் ஒப்பீட்டளவு பேச்சு சுதந்திர்ந்தை, ஜனநாயகத்தை பாவித்து, உலகின் மிக அடக்குமுறை உள்ள ஒரு மாபியா ஸ்டேட்டை - அதுவும் ஜனநாயக நாடுதான் என சீரியஸாக காமெடி பண்ணுவதையும் உ.சா கண்டிக்கிறார்.

பிகு:

உ.சா நேற்று முதல் ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறையை கழி(ளி)ப்பதால் - எல்லோரினதும் கருத்துகளுக்கும் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.

சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம் உள்ள தேசிய இனங்களை விழுங்கி  ரஸ்சியர்களை முன்னிலைப்படுத்தி இடங்களை பிடித்தல். நமக்கு மணலாறிலும், கிழக்கிலும் நடந்தது போல. புடின் அதிகாரத்ததுக்கு வந்த பின்னர் இது இன்னும் வேகமாக  நடைபெறுகிறது. அங்கு நாங்கள் இவ்வளவு அடி  வாங்கியபின்னரும், மற்றவனுக்கு நடக்கும்போது எப்பிடி சிரிக்க முடியுது. ரஷ்யாவின் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு இருப்பது இரு தெரிவுகள்தான், ஒன்று ரஸ்சியாவிற்கு அடங்கி அவர்களின் சுயத்தை இழப்பது, அல்லது எதிர்த்து தங்கள் சுயத்தை பாதுகாப்பது. உக்கிரேன் ரஸ்சியாவிற்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மறைமுகமாக எங்கள் போராட்டம் தவறு, நாங்களும் சிங்களவர்களுக்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள். புடினின் மேலுள்ள காதல், உக்கிரைன் ரஸ்சியாவின் ஒரு பகுதி என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது, இதை ரசிஷ்யர்களே எதிர்பார்க்க மாட்டார்கள்.  இந்த நாடுகள் எல்லாம் ஏன் நேட்டோவிற்கு ஓடுகிறார்கள் என்பதை ஊகிக்க ராக்கெட் சயின்ஸ் படித்திருக்க தேவையில்லை, அதேபோல்  நேட்டோ ஏன் இவர்களை பாவிக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ரஷ்யா நினைத்திருந்தால் அக்கம் பக்கத்து நாடுகளின் உரிமையை/சுயத்தை அங்கீகரித்து, அனுசரித்து பெரியண்ணன் ஆக இருந்திருக்கலாம், மேற்கு செய்வது இப்படித்தான், ஆனால் செய்ததோ பழைய ஸ்டைலில் பக்கத்து நாடுகளை பிடித்தல், அவர்களை கொத்திக்கலைத்து மற்றவனிடம் சேர்த்து விடுதல். 
இன்னுமொரு விளங்காத  விஷயம், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்ததால் எப்பிடிபுடின் நல்லவராகி விட்டார் என்று புரியவில்லை, யாரவது புரிகிறமாதிரி சொல்லுங்கள். "எமது" ஜனாதிபதியின் மேல் அவ்வளவு பாசமா எங்களுக்கு?

பிகு:
உங்கள் வசந்தகால விடுமுறை கிளுகிளுப்பாக போக வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தெளிவான கருத்து. முதல் பச்சை என்னுடையது தான் 😀

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் போரில் மேற்கின் புரொக்சி யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் வெல்லக் கூடாது. அதே நேரம் ரஷ்சியாவும் வெல்லக் கூடாது.

மேற்கின் புரொக்சியாக உக்ரேன் உள்ளதை ஏற்கிறேன்.

மேற்கின் புரொக்சியாக மட்டும் உக்ரேன் இந்த போரை நடத்துகிறது என்றால் நானும் இதே நிலையைதான் எடுப்பேன்.

ஆனால் அதையும்தாண்டி இங்கே ஒரு சிறிய தேசிய இனம், ஒரு அசுர பலம் கொண்ட பெரிய தேசிய இனத்திடம் இருந்து தன் இன, மொழி அடையாளத்தை, தனித்துவத்தை, தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை காக்க போரிடுவதை காண்கிறேன்.

எனது பார்வையில் இது 87ம் ஆண்டு தலைவர் இந்தியாவுக்கு எதிராக செய்தது போல ஒரு அடங்காமை.

தலைவர் அப்போ (இனத்தின் நலன் கருதி) அடங்கி போய் இருக்கலாம் என நான் இன்னும் கருதுகிறேன். காரணம் அப்போ தலைவர் பின்னால் எவரும் இருக்கவில்லை அவருடன் இருந்த போராளிகளை தவிர.

ஆனால் ரஸ்யாவை விட பெரியவர்கள் எல்லாம் பின்னால் இருந்து ஊக்குவிக்கும் போது, இந்த சந்தர்பத்தை பாவித்து, உக்ரேனிய வாழ்வில் இருந்து, ஒட்டு மொத்தமாக ரஸ்யா என்கிற நிழலை அகற்றிவிடலாம் என உக்ரேனிய தேசியவாதிகள் நினைப்பது, Finlandization ற்கு உள்ளாகி ரஸ்யாவின் “ஆமாம் சாமி”யாக இருக்காமல் லித்யுவேனியா, லத்வியா போல சின்ன நாடு ஆனாலும், தன்மானத்தோடு, சுய ஆதிக்கத்தோடு வாழ முனைவது எனக்கு தப்பாக தெரியவில்லை.

இது செலன்ஸ்கிக்கான வக்காளத்து இல்லை. அவர் பின்னால் உக்கிரமாக நிற்கும் சாதாரண உக்ரேனிய தேசியவாதிகளினதும், மக்களினதும் சுதந்திர வேட்கைகையை ஒரு தமிழனாக நான் புரிந்து கொள்வது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தெளிவான கருத்து. முதல் பச்சை என்னுடையது தான் 😀

என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் போரில் மேற்கின் புரொக்சி யுத்தத்தை நடாத்தும் உக்ரைன் வெல்லக் கூடாது. அதே நேரம் ரஷ்சியாவும் வெல்லக் கூடாது.

இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளதக்கது, நீண்டுகொண்டு போவதால் வரும் பலமான பொருளாதார அடி, இனியொரு யுத்தம் வரும்பொழுது எல்லோரையும் யோசிக்க வைக்கும். இங்கு அமெரிக்காவில், முன்பு இராக் , ஆப்கானிஸ்தான் காலம் போல் இல்லாமல், தற்பொழுது யுத்தத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நீர்வேலியான் said:

சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம் உள்ள தேசிய இனங்களை விழுங்கி  ரஸ்சியர்களை முன்னிலைப்படுத்தி இடங்களை பிடித்தல். நமக்கு மணலாறிலும், கிழக்கிலும் நடந்தது போல. புடின் அதிகாரத்ததுக்கு வந்த பின்னர் இது இன்னும் வேகமாக  நடைபெறுகிறது. அங்கு நாங்கள் இவ்வளவு அடி  வாங்கியபின்னரும், மற்றவனுக்கு நடக்கும்போது எப்பிடி சிரிக்க முடியுது. ரஷ்யாவின் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு இருப்பது இரு தெரிவுகள்தான், ஒன்று ரஸ்சியாவிற்கு அடங்கி அவர்களின் சுயத்தை இழப்பது, அல்லது எதிர்த்து தங்கள் சுயத்தை பாதுகாப்பது. உக்கிரேன் ரஸ்சியாவிற்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மறைமுகமாக எங்கள் போராட்டம் தவறு, நாங்களும் சிங்களவர்களுக்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள். புடினின் மேலுள்ள காதல், உக்கிரைன் ரஸ்சியாவின் ஒரு பகுதி என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது, இதை ரசிஷ்யர்களே எதிர்பார்க்க மாட்டார்கள்.  இந்த நாடுகள் எல்லாம் ஏன் நேட்டோவிற்கு ஓடுகிறார்கள் என்பதை ஊகிக்க ராக்கெட் சயின்ஸ் படித்திருக்க தேவையில்லை, அதேபோல்  நேட்டோ ஏன் இவர்களை பாவிக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ரஷ்யா நினைத்திருந்தால் அக்கம் பக்கத்து நாடுகளின் உரிமையை/சுயத்தை அங்கீகரித்து, அனுசரித்து பெரியண்ணன் ஆக இருந்திருக்கலாம், மேற்கு செய்வது இப்படித்தான், ஆனால் செய்ததோ பழைய ஸ்டைலில் பக்கத்து நாடுகளை பிடித்தல், அவர்களை கொத்திக்கலைத்து மற்றவனிடம் சேர்த்து விடுதல். 
இன்னுமொரு விளங்காத  விஷயம், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்ததால் எப்பிடிபுடின் நல்லவராகி விட்டார் என்று புரியவில்லை, யாரவது புரிகிறமாதிரி சொல்லுங்கள். "எமது" ஜனாதிபதியின் மேல் அவ்வளவு பாசமா எங்களுக்கு?

பிகு:
உங்கள் வசந்தகால விடுமுறை கிளுகிளுப்பாக போக வாழ்த்துக்கள் 

நன்றி. 

கிளுகிளுப்பிலும் (யாழுக்கு வந்து) ஒரு ரணகளம்😆 என்று போகிறது விடுமுறை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது.

வரிக்கு வரி அழகான விளக்கங்கள்👍.
நேட்டோ மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் செய்வது  இலங்கை அண்ணைமார் ரஷ்யாவுக்காக அடிக்கிற கூத்துக்கள் விளக்கம் சிறப்பு👍
நீர்வேலியான் சொன்னார் தன்னால் இப்படி எழுத முடியாது என்று என்னால் இப்படி அழகாக எழுதுவதை நினைத்தும் பார்க்க முடியாது.😂

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

1 hour ago, நீர்வேலியான் said:

இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை.

🤣  தமிழர்களுக்காக ஒரு சிறு துசியை கூட தட்டிவிடாத பூடின் மீதும் அவர் வாழுகின்ற  ரஷ்யா மீதும் எவ்வளவு பாசம்

1 hour ago, நீர்வேலியான் said:

இன்னுமொரு விளங்காத  விஷயம், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்ததால் எப்பிடிபுடின் நல்லவராகி விட்டார் என்று புரியவில்லை, யாரவது புரிகிறமாதிரி சொல்லுங்கள்.

புரின் ஒரு நல்லமனம் கொண்ட உலக தலைவர் அவர் நல்லதையே செய்வார் என்று பார்க்கிறார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2022 at 16:00, நிழலி said:

தான் வாழ்கின்ற நாட்டுக்கு எல்லா விடயத்திலும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும் அதன் தவறுகளை சுட்டிக் காட்டி எதிர்க்க கூடாது என்றும் நீங்கள் சொல்வதைத் தான் மிக மோசமான போர்க் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தினரை ஆதரிக்கும் சிங்களவர்களும் சொல்கின்றனர். இந்த விடயத்தில் நீங்கள் அவர்களுடன் ஒத்துப் போகின்றீர்கள்.

சிங்களவர்கள் இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் மீது போர் குற்றம் செய்த இலங்கை இராணுவத்தை ஆதரிக்கின்றனர். மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் ஒரு பகுதியினர் -  இவர்கள் போர் குற்றத்தால் பாதிக்கபட்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உக்ரைன் மீது போர் குற்றம் புரிகின்ற சர்வாதிகாரி புரினை ரஷ்யாவை ஆதரித்து தவறுகளை நியாயபடுத்தியும், மறைத்தும் தாங்கள் பாதுகாப்பாக வாழ்கின்ற நாட்டுக்கு எதிராகவும் பிரசாரம் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இனவழிப்பாளன் ஸ்ராலின் ரஷ்ய நாடை சேர்ந்தவன்தானே? தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்களேன்.  நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

முன்னாள் இனவழிப்பாளன் ஸ்ராலின் ரஷ்ய நாடை சேர்ந்தவன்தானே? தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து உறுதிப்படுத்துங்களேன்.  நன்றி!

அவரின் பூர்விகம் ஜோர்ஜியா என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்தான் அவனது கொடூரங்கள் நிகழ்ந்ததாக படித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

ரஷ்யாவிற்தான் அவனது கொடூரங்கள் நிகழ்ந்ததாக படித்த நினைவு.

ஓம்  கொடூரங்கள் நடத்தியது எல்லாம் ரஷ்யாவில்தான்.

32 minutes ago, நீர்வேலியான் said:

அவரின் பூர்விகம் ஜோர்ஜியா என்று நினைக்கிறேன் 

வேறு இனத்தவர் என்று தான் அறிந்து இருந்தேன் ஆனாலும் ரஷ்யர் மாதிரி தான்
இப்போது கொழும்பில் நடந்த போராட்டங்களை நடத்தியவர் ஒரு தமிழர் தானாம் ஆனால் அவர் சிங்களவர் மாதிரி அதுபோல் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, வி. நினைப்பவனுக்கு! 

இலங்கையில் பல அரசியல் தமிழரின் பூர்வீகம் தமிழ், ஆனால் தம் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக  அதை மறைத்து, சிங்களவருக்கு சேவகம் செய்வதில் சிங்களவரையும் மிஞ்சி விடுவார்கள். அதனாலேயே தமிழருக்கு ஒரு லாபமுமில்லை, எதிரி நம் திறமைகளை அங்கீகரிப்பதுமில்லை, இறுதியில் உறுதுணையாய் இருந்தவர்களும் வீழ்த்தப்பட்டு அவர்களது சேவைகளும் கொச்சைப்படுத்தப்படுகின்றன. பட்டாலும், படித்தாலும் திருந்துவதுமில்லை நாம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/7/2022 at 02:25, goshan_che said:

ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறை

சுற்றுலா சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் 🏄🏼‍♂️

Are you vaccinated for your holiday vacation trip? - UNI Urgent Care

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2022 at 16:44, Sasi_varnam said:

நேர்மையான யதார்த்தமான கருத்து உடான்ஸ் ஜீ... and I Like it. 😃

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

வரிக்கு வரி அழகான விளக்கங்கள்👍.
நேட்டோ மேற்குலகநாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் செய்வது  இலங்கை அண்ணைமார் ரஷ்யாவுக்காக அடிக்கிற கூத்துக்கள் விளக்கம் சிறப்பு👍
நீர்வேலியான் சொன்னார் தன்னால் இப்படி எழுத முடியாது என்று என்னால் இப்படி அழகாக எழுதுவதை நினைத்தும் பார்க்க முடியாது.😂

53 minutes ago, குமாரசாமி said:

சுற்றுலா சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள் 🏄🏼‍♂️

Are you vaccinated for your holiday vacation trip? - UNI Urgent Care

நன்றி🙏

On 27/7/2022 at 05:12, சுவைப்பிரியன் said:

அடிக்கடி உ.சா என்று வருவது வாசிக்கும் போது வேறு மாதிரி இருக்குது.😄ஆனால் பச்சை அதுக்கல்ல கருத்துக்கு.

🤣. நீங்கள் “ச்” சேர்த்து வாசிச்சால் அதுக்கு உ.சா பொறுப்பல்ல.😆

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@goshan_che

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

புட்டின் முக்கிய கேள்விகளை கேட்கிறார்:

1. அப்பாவி பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை மற்றும் அழித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
2. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், கியூபா, வியட்நாமில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று அழித்து, அவர்களின் வைரங்களையும் தங்கத்தையும் கூட திருடியதற்காக அமெரிக்காவுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
3. மும்மர் கடாஃப் கொல்லப்பட்டதற்கும் லிபியாவின் அழிவுக்கும் காரணமாக அமெரிக்கா/பிரேன்ஸுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
4. முன்னறிப்பிட்ட நாடுகளின் அப்பாவி பெண்கள்/குழந்தைகளை கற்பழித்து சித்திரவதை செய்ததற்காக ஒரு அமெரிக்க/நேட்டோ சிப்பாய் எப்போதாவது தண்டனை பெற்றிருக்கிறதா?
5. பல ஆப்பிரிக்க நாடுகளில் நெருக்கடி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக ஃப்ரான்ஸுக்கு எதிராக தடைகள் உள்ளதா இவை மிகவும் போர்க்குற்றங்கள் அமெரிக்காவும் நேட்டோவும் தண்டிக்கப்பட வேண்டும்.
நேட்டோ, அமெரிக்கா மற்றும் அதன் அனைத்து கூட்டாளிகளும் நமது காலத்தின் மிக ஆபத்தான தீமைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே நாம் உலகில் அதிகாரத்தின் சமநிலையை மாற்றி அனைவருக்கும் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்து, ஒடுக்குமுறை செய்பவர்களை நிறுத்த வேண்டும்.

முகநூலிருந்து.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2022 at 16:56, விளங்க நினைப்பவன் said:

நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

🤣  தமிழர்களுக்காக ஒரு சிறு துசியை கூட தட்டிவிடாத பூடின் மீதும் அவர் வாழுகின்ற  ரஷ்யா மீதும் எவ்வளவு பாசம்

நேட்டோ தட்டி விடாததா என்ன?  உங்களுக்கு எம்புட்டு பாசம் புலிகளை  பயங்கரவாதிகளாக்கியவர்களிடம். நினைக்கவே புல்லரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

@goshan_che

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

புட்டின் முக்கிய கேள்விகளை கேட்கிறார்:

1. அப்பாவி பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை மற்றும் அழித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
2. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், கியூபா, வியட்நாமில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று அழித்து, அவர்களின் வைரங்களையும் தங்கத்தையும் கூட திருடியதற்காக அமெரிக்காவுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
3. மும்மர் கடாஃப் கொல்லப்பட்டதற்கும் லிபியாவின் அழிவுக்கும் காரணமாக அமெரிக்கா/பிரேன்ஸுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
4. முன்னறிப்பிட்ட நாடுகளின் அப்பாவி பெண்கள்/குழந்தைகளை கற்பழித்து சித்திரவதை செய்ததற்காக ஒரு அமெரிக்க/நேட்டோ சிப்பாய் எப்போதாவது தண்டனை பெற்றிருக்கிறதா?
5. பல ஆப்பிரிக்க நாடுகளில் நெருக்கடி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக ஃப்ரான்ஸுக்கு எதிராக தடைகள் உள்ளதா இவை மிகவும் போர்க்குற்றங்கள் அமெரிக்காவும் நேட்டோவும் தண்டிக்கப்பட வேண்டும்.
நேட்டோ, அமெரிக்கா மற்றும் அதன் அனைத்து கூட்டாளிகளும் நமது காலத்தின் மிக ஆபத்தான தீமைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே நாம் உலகில் அதிகாரத்தின் சமநிலையை மாற்றி அனைவருக்கும் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்து, ஒடுக்குமுறை செய்பவர்களை நிறுத்த வேண்டும்.

முகநூலிருந்து.....

உடான்ஸ் சாமி பதில் சொல்கிறார்

1. இல்லை. புட்டினும் போடவில்லை.

2. இல்லை. முன்னர் ஆப்கானிஸ்தான், போலந்து, லத்வியா, ஜேர்மனி, ரொமேனியா, லித்துவேனியா, ஜோர்ஜியா விலும், பின்னர்  செச்னியா, ஜோர்ஜியாவிலும் ரஸ்யா செய்தமைக்கும் ஒரு தடையும் வரவில்லை.  2014 இல் கிரியாவின் பின் கூட சும்மா லுகுலுலா தடைகள்தான் போடப்பட்டன.

3. இல்லை. யூகேயில் லெட்வின்க்யெங்கோ கொலை மற்றும் செயில்ஸ்பெரி என்ற ஊரில் ஒரு முன்னாள் உளவாளியை குறிவைத்து கதிர்வீச்சு நஞ்சை நகரில் பரப்பியபோதும் யூகேயை தவிர வேறு யாரும் தடை போடவில்லை.

4. இல்லை. மேலே குறிப்பிட்ட நாடுகளில் ரஸ்ய சிப்பாய்களுக்கும் அதே நிலைதான்.

5. ஒ…சமநிலை என்பது ஒரு காடையனுக்கு எதிராக இன்னொரு காடையை வளர்த்து விடுவதா?

வல்லரசுகள் எப்போதும் வல்லூறு அரசுகளே. 

ஆகவே இதில் நலிந்த தேசிய இனங்களின் சுய நிர்ணயத்துக்காக மட்டுமே நாம் குரல் கொடுக்க முடியும்.

நாளைக்கே ரஸ்யா குர்தீக்களின் பக்கத்தில் இறங்கி துருக்கியோடு மோதினால் (மோதாது ஏனென்றால் துருக்கி நேட்டோ உறுப்பினர்), அப்போதும் நாம் குர்தீக்கள் பக்கம் இருக்க வேண்டும்.

ஏனென்றால் நாமும்…ஒரு சுதந்திர வேட்கை உள்ள, நம் தலைவிதியை நாமே தீர்மானிக்க விழைகின்ற - நலிந்த தேசிய இனம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@goshan_che

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்

புட்டின் முக்கிய கேள்விகளை கேட்கிறார்:

1. அப்பாவி பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை மற்றும் அழித்ததற்காக இஸ்ரேலுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
2. ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், கியூபா, வியட்நாமில் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொன்று அழித்து, அவர்களின் வைரங்களையும் தங்கத்தையும் கூட திருடியதற்காக அமெரிக்காவுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
3. மும்மர் கடாஃப் கொல்லப்பட்டதற்கும் லிபியாவின் அழிவுக்கும் காரணமாக அமெரிக்கா/பிரேன்ஸுக்கு எதிராக ஏதேனும் தடைகள் உள்ளதா?
4. முன்னறிப்பிட்ட நாடுகளின் அப்பாவி பெண்கள்/குழந்தைகளை கற்பழித்து சித்திரவதை செய்ததற்காக ஒரு அமெரிக்க/நேட்டோ சிப்பாய் எப்போதாவது தண்டனை பெற்றிருக்கிறதா?
5. பல ஆப்பிரிக்க நாடுகளில் நெருக்கடி மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியதற்காக ஃப்ரான்ஸுக்கு எதிராக தடைகள் உள்ளதா இவை மிகவும் போர்க்குற்றங்கள் அமெரிக்காவும் நேட்டோவும் தண்டிக்கப்பட வேண்டும்.
நேட்டோ, அமெரிக்கா மற்றும் அதன் அனைத்து கூட்டாளிகளும் நமது காலத்தின் மிக ஆபத்தான தீமைகள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே நாம் உலகில் அதிகாரத்தின் சமநிலையை மாற்றி அனைவருக்கும் சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்து, ஒடுக்குமுறை செய்பவர்களை நிறுத்த வேண்டும்.

முகநூலிருந்து.....

அதாவது, மற்றவர்களுக்கு நிகழும்போது நீதிபதிகளாக மாறும் நாம், எமக்கென்று வரும்போது வக்கீல்களாக வாதாடுவோம். ஒருவர் செய்தது அல்லது செய்வது பிழை என்று சுட்டிக்காட்டும்போது நம் கை சுத்தமாக இருக்கவேணும், இல்லையெனில் அதற்கான தகுதி நமக்கில்லை, நாம் சந்தற்பவாதியாகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

நேட்டோ தட்டி விடாததா என்ன?  உங்களுக்கு எம்புட்டு பாசம் புலிகளை  பயங்கரவாதிகளாக்கியவர்களிடம். நினைக்கவே புல்லரிக்கிறது.

பலரால் பல தடவைகள் சொன்னது தான் . நேட்டோமேற்குலகநாடுகளால் தான் சில துசிகள் ஆவது விழாமல் தடுக்கபடுகிறது இந்த நாடுகளில் பாதுகாப்பாக வசதியாக வாழ்ந்து கொண்டு தான் இலங்கைக்கு பணம் அனுப்பி உறவினர்களை துன்பபடாமல் வைத்திருக்க முடிகிறது.
நல்தொரு சொல்லு புல்லரிக்கிறது எனக்கு அறிமுகபடுத்தினீர்கள் நன்றி

🤣   தமிழர்களுக்காக ஒரு சிறு துசியை கூட தட்டிவிடாத பூடின் மீதும் அவர் வாழுகின்ற  ரஷ்யா மீதும் எவ்வளவு பாசம் நினைக்கவே புல்லரிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாளைக்கே ரஸ்யா குர்தீக்களின் பக்கத்தில் இறங்கி துருக்கியோடு மோதினால்

நல்லாக தான் குர்தீக்களின் பக்கத்தில் ஒரு இனத்தின் பக்கத்தில் ரஷ்யா இறங்கும் 🤣
துருக்கி நேட்டோவில் இல்லாமல் இருந்தால் கூட குர்தீக்காகவோ அல்லது ஒரு பலவீனமான இனத்துக்காகவோ  புரினின் ரஷ்யா ஒரு போதும் இறங்காது ஆடசியாளர்களுடன் கூட்டு சேர்ந்து அழிக்க தான் முன்னுக்கு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.