Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லலிதாவின் கதை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தெய்வக் குற்றம் முற்பிறப்பு பாவ புண்ணியங்கள் தான் இந்தப் பிறப்பில் உங்கள் வாழ்கையைத் தீர்மானிக்கிறது. செய்த பாவங்களிற்கு பிராயச்சித்தம் செய்து விடுதலை பெறுங்கள் அதற்கு வசதியில்லாவிட்டால் அனுபவித்து தான் கழிக்க முடியும். ஆண்டவனின் வரவு செலவுக் கணக்கில் எந்தத் தில்லு முல்லும் செய்ய முடியாது. அவன் இன்றி அணுவும் அசையாது என்று சும்மாவா சொன்னார்கள்?அததோடு இன்னுமொருவன் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" பற்றி ஆய்வு ஒன்றைச் செய்து மிகவும் முக்கியமான விடையம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அதாவது கடவுள் பயபக்த்தி இல்லாத பெரியாரிஸ்ரிகளின் போதனை புலம்பெயர்ந்த சமூகத்து இளைஞர்கள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கிறது. எவற்றையுமே தம்மால் மாற்ற முடியும் அது சமூகப்பிரச்சனை என்றாலும் பறவாயில்லை என்ற தான் தோன்றித்தனம் இவ்வாறு தான் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாவ புண்ணியங்கள் பற்றி நம்பிக்கை அற்றவர்களால் தான் கள்ள மட்டை கூட அடிக்க முடியும். அதாவது பெரியாரிஸ்ரிக்களால் தான் நம்மவர்கள் மத்தியில் கள்ள மட்டைப் பிரச்சனை கூட என்று கூறினால் மிகையாகாது.
இந்த மனுசனுக்கு உண்மையிலேயே வேப்பங்குழையாலை அடிச்சுத்தான் அம்மனை விரட்டோணும் :D
குறுக்காலபோவானின் கடவுச் சொல்லைத் திருடிய ...........னை வன்மையாகக் கண்டிக்கின்றேன் :D:D:D
:):lol::lol::lol::lol::lol:
  • Replies 71
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கும் டென்மார்க்கில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் லலிதாவிடம் செல்வதில்லை. அயல் நாடுகளில் உள்ளவர்கள்தான் செல்கின்றனர். சொந்த நாடான ஈழத்தில் பிரேமானந்தாவை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அவரை கடவுள் என்று நம்பி பலர் ஏமாந்து போகவில்லையா? அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.

சரியாக சொன்னீர்கள்.. நாங்கள் உவாவை இங்கே டென்மார்க்கில் மதிக்கிறதே இல்லை. வெளிநாடுகளில் இருக்கிற நீங்கள்தான் துாக்கி பிடிக்கிறீங்கள். முழுவதற்கும் காரணம் உந்த நோர்வேயில் இருப்பவர்கள்தான்.

உவாவை பற்றி இன்னும் பல விடயங்கள் இருக்கு. கட்டாயாம் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது. நான் அவற்றை இப்ப இதிலே எழுதினால் பச்சையாக கதைக்கிறேன் என்று என்னை இந்த களத்தைவிட்டே துாக்கியெறிந்துவிடுவீர்கள். எனவே அவற்றை தவிர்த்துக்கொள்கின்றேன்.

இதில கொடுமையிலும் கொடுமை வயது வேறுபாடின்றி, கோயிலுக்கு வருகிற அனைவரும் இவாவின்ரை காலிலை விழுந்தால்தான் திருநுாறு கொடுப்பா. அதிலும் வயதுபோன பாட்டிகள் காலில் விழும் போது, உண்மையிலே மனதிற்கு சங்கடமாக இருக்கிறது எனக்கு, அவர்களின் அறியாமையை நினைத்து.

காலிலை விழுந்துதான் திருநுாறு பெறவேண்டும் என்பதற்காக பலர் உவாவின் கோயிலில் திருநுாறு பூசுவதே இல்லை. அதை அறிந்த உவா இப்ப காலிலை விழாவிட்டாலும் குடுக்கிறா, ஒரு முறைச்ச பார்வையோடு.. :D

ஒரு விசியத்திலை உவா யார் என்று தெட்டத்தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டலாம்..

டென்மார்க்கில் இரண்டு பிரபலமான கோயில்கள் இருக்கின்றன். அதில் ஒன்று நான் வசிக்கிற கேர்ணிங் நகரில் இருக்கிற பிள்ளையார் கோயில். மற்றது உவாவின்ரை அம்மன் கோயில். பிள்ளையார் கோயிலிலை "தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்" உண்டியல்களை வைப்பதற்கு அனுமதித்திருக்கிறார்கள். (பிள்ளையார் கோயிலில் ஒருமுறை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உண்டியல் களவுபோனது, அது வேறை கதை)

உவா மட்டும் "தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின்" உண்டியல்களை வைப்பதற்கு ஒருபோதுமே அனுமதிப்பதில்லை. ஏன் என்றால் தன்னுடை வருமானம் வீழ்ச்சியடைந்துவிடும் என்ற பயம். இதுவரை எனக்குத் தெரிந்தவரைக்கும் "தாயக மக்களுக்காக" ஒரு சில்லறை காசுகூட மனுசி பங்களிப்பு செய்யவில்லை.

Edited by Kishaan

என்ரை ஊரிலை இருக்கிற ஒருத்தர் சொன்னார் தான் டென்மார்க் அம்மனை குடும்பத்தோடை போய் தரிசித்துட்டு வந்தாப் பிறகுதான் தன்ரை மூண்டு பொம்புளைப்பிள்ளையளுக்கும் கலியாணப்பேச்சுக்கள் எல்லாம் சரி வந்துட்டுதாமே என்னப்பா ஒரு இழவும் விளங்குதில்லை :D

உது பரவாயில்லை இங்கை ஒருத்தர் விடுறார் அங்கை போட்டு வந்தாப்பிறகு தானாம் தனக்கு swiss பிரஐாவுரிமை வந்ததாம்

:D :P :lol:

ஓய் கு சா உந்த அம்மாவுக்கு சுவிசில ஒரு பிராஞ் இருக்கு காணும் பக்ககோடிகள் வேற ஓய் வாயை விட்டுடாதையும் பின்னிப்போடுவாங்கள்

:) :P :lol:

தெய்வக் குற்றம் முற்பிறப்பு பாவ புண்ணியங்கள் தான் இந்தப் பிறப்பில் உங்கள் வாழ்கையைத் தீர்மானிக்கிறது.

செய்த பாவங்களிற்கு பிராயச்சித்தம் செய்து விடுதலை பெறுங்கள் அதற்கு வசதியில்லாவிட்டால் அனுபவித்து தான் கழிக்க முடியும். ஆண்டவனின் வரவு செலவுக் கணக்கில் எந்தத் தில்லு முல்லும் செய்ய முடியாது. அவன் இன்றி அணுவும் அசையாது என்று சும்மாவா சொன்னார்கள்? - குறுக்கால போவான்

---------------------------------------------------------------------------------------

தாங்களின் கருத்தின் பிரகாரம் ஈழத்தில் கொல்லப்படும் அப்பாவிமக்கள் குழந்தைகள் அங்கவீனப்படும் மக்கள் அகதி யாக்கப்படும் மக்கள் பட்டிணிவாழ்வுக்கு உட்பட்டிருக்கும் மக்கள் அனைவரின் வாழ்வும் அவலமான வாழ்வாக இருப்பதற்கு முற்பிறப்பு பாவ புண்ணியங்கள் தான் காரணமா? இந்த மக்கள் எவ்வாறு தெய்வத்துக்கு பிராயச்சிததம் செய்ய வேண்டும் தங்கள் வாழ்வின் அவல நிலை போவதற்கு? ஆண்டவனின் வரவு செலவில் தானா இதை எல்லாம் அணுக வேண்டும்? வேறு மார்க்கம் எதுவும் இல்லையா?

கோவில்களிலும் குண்டு போட்டார்களேஇ அப்படியானால் உள்ளிருந்த சாமிகளும் முற்பிறப்பில் குற்றம் செய்தார்களா? அவனின்றி அணுவும் அசையாதென்றால் இதெல்லாம் சாத்தியமா? உங்கள் கருத்தில் இருந்து எனக்கெழுகின்ற சந்தேகங்கள் இவைகள் இந்த கேள்விகளுக்கு விடை தருவீர்களா?

நீங்கள் சொன்ன கருத்தின் பிரகாரம் எல்லா அவலத்துக்கும் தெய்வக்குத்தமும் முற்பிறப்பு பாவபுண்ணியங்களும் தான் காரணம் என்று எந்த தடுப்பு முயற்சியும் எடுக்க கூடாதா? உங்கள் கருத்தின் அடிப்படையில் தான் எல்லாம் நடக்கும் என்று அப்படியே சாக வேண்டியது தானா?

-----------------------------------------------------------------------------------------

அததோடு இன்னுமொருவன் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" பற்றி ஆய்வு ஒன்றைச் செய்து மிகவும் முக்கியமான விடையம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அதாவது கடவுள் பயபக்த்தி இல்லாத பெரியாரிஸ்ரிகளின் போதனை புலம்பெயர்ந்த சமூகத்து இளைஞர்கள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கிறது. எவற்றையுமே தம்மால் மாற்ற முடியும் அது சமூகப்பிரச்சனை என்றாலும் பறவாயில்லை என்ற தான் தோன்றித்தனம் இவ்வாறு தான் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாவ புண்ணியங்கள் பற்றி நம்பிக்கை அற்றவர்களால் தான் கள்ள மட்டை கூட அடிக்க முடியும். அதாவது பெரியாரிஸ்ரிக்களால் தான் நம்மவர்கள் மத்தியில் கள்ள மட்டைப் பிரச்சனை கூட என்று கூறினால் மிகையாகாது.- குறுக்காலபோவான்

---------------------------------------------------------------------------------------------------------------------

மனிதர்கள் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் சாதிய பிளவுகளை ஏற்படுத்தும் மதத்திலும் மூட நம்பிக்கைகளில் இருந்தும் விடுபட்டு சுய மரியாதையுடனும் மானத்துடனும் வாழ வேண்டும் என்று கூறும் பெரியாரின் கூற்றுக்கு இசைவாகவே ஈழத்தில் தமிழர்கள் உரிமை சுயநிர்ணயம் போன்றவற்றுக்காக போராடுகின்றார்கள். கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் ஒடுக்கப்படும் மக்கள் தங்கள் உரிமைக்காக சுயமரியாதைக்காக சுதந்திரமான வாழ்வுக்காக போராடுவது போல தானே சிங்கள பௌத்த பேரினவாத அரசிடம் இருந்து எமது மக்கள் உரிமைக்காக போராடுகின்றார்கள். இதெல்லாம் பாவமா?

இப்படியான சுயமரியாதை சிந்தனை எல்லாம் கள்ளமட்டை அடிக்கவும் வன்முறையை தூண்டவும் வழிவகுக்கின்றதா?

கடவுள் பெயரால் சாதி பிரிப்பது ஏற்ற தாழ்வுகளை உண்டுபண்ணி மனுசனை மனுசன் ஏறி மிதிப்பதெல்லாம் புண்ணியமுங்களா?

சகோதரம் வேறுசாதியை காதலித்ததுக்காக வெட்டுக்குத்துப்பட்ட சம்பவங்கள் புலம்பெயர் தேசத்தில் ஏராளமுண்டுங்க. இந்த வெறித்தனத்துக்கும் பெரியர்தான் காரணமுங்களா?

ஆண் ஆயிரம் தரம் கற்பை இளக்காலம் பெண்ணுக்கு அப்படி இல்லை என்று மதம் சொல்லுது. ஆண்பெண்க்குள் சமத்துவம் வேண்டும் என்று பெரியார் சொல்லுறார். மனைவிய சந்தேகப்பட்டு மாடியில இருந்து தள்ளி கொல்லுறாங்க. போதததுக்கு மகளையும் சேர்து கொன்ற சம்பவங்களும் இருக்குங்க. கத்தியால குத்தின சம்பவங்கள் நிறைய இருக்குங்க. இப்படியான தான்தோன்றித்தனத்துக்கெல்லா

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகனண்னை இங்க எழுதிரதோட நிக்காமல் வேப்பங்குழையடிச்சு மூலிகை பாழையத்தம்மனுக்கு பால் அபிசேகம் செஞ்சு வேண்டுகோள் விடுங்கோ. சுனாமி வந்தான்ன ஆமி வந்தான்ன அவா காப்பாத்துவா

சுகனண்னை இங்க எழுதிரதோட நிக்காமல் வேப்பங்குழையடிச்சு மூலிகை பாழையத்தம்மனுக்கு பால் அபிசேகம் செஞ்சு வேண்டுகோள் விடுங்கோ. சுனாமி வந்தான்ன ஆமி வந்தான்ன அவா காப்பாத்துவா- ஆதி

-------------------------------------------------------------------------------------

ஆதி உங்கள் கஸ்டம் புரிகின்றது. அதனால் உங்களுக்கு முன்பு நான் எழுதியதை இங்கு இணைக்கின்றேன். நீங்கள் சொல்லும் அர்த்தத்தில் நான் கருத்தை முன்வைத்ததில்லை. கீழே நான் கூறியவைகளை தருகின்றேன்

_------------------------------------------------------------------------------

ஆதி உங்கள்கேள்வி திரும்பவும் ஒரே இடத்தில் தான் வருகின்றது. நீங்கள் ராமன் கடவுளா ஈஸ்வரன் கடவுளா என்றதில் நிற்கின்றீர்கள். நான் இரண்டுக்கும் அப்பால் ஒரு இடத்தில் நிற்கின்றேன். இது ஒரு கடினமான விடயம் ஏனெனில் ஒன்று கடவுள் மதம் என்று செல்கின்றது அடுத்தது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று செல்கின்றது. இரண்டு தரப்புக்கும் ஏராளமான காரணங்கள் நியாயப்பாடுகள் உண்டு. இதன் அடிப்படையில் செல்லும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும்.

நான் செல்லும் சிவன் என்பது உருவமன்று அது சீவனைக்குறிக்கும். எமக்குள் இருக்கும் உயிர். இந்த உயிரின் உருவாக்கமும் அதன் வளர்ச்சியும் அதன் பராமரிப்புமே எமது மூதாதையரின் கடவுள். இதில் முட்டாள் தனத்துக்கோ அல்லது ஏமாற்று வேலைக்கோ எதுவும் இல்லை.

சைவ சமய அடிப்படையில் பல நூறு தேவாரங்கள் உண்டு. உதாரணமாக துப்பார் துருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு என்று முடியும் தேவாரத்தை எடுத்துக்கொள்வோம். இதை பல நூறு ஆண்டு காலம் பாடி சைவ நெறியில் திழைத்துக்கொண்டு வருகின்றோம். இந்தப்பாடல் ஏன் எங்கிருந்து வருகின்றது என்ன சொல்கின்றது என்று யாரும் கற்று தருகின்றார்களா? இது சைவம்

அடுத்து பிராமணர் செய்யும் சமஸ்கிரத பூசைகளில் பக்தி கொண்டு வருகின்றோம் இதில் என்ன நடக்கின்றது சொல்லப்படுகின்றது என்று யாருக்கும் தெரியாது காரணம் எமது மொழியில் இல்லை.

அடுத்து நாத்திகம் அது கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கின்றது. அந்த வாதத்திற்கு நிறைய நியாயங்கள் உண்டு. மிக மோசமாக கடவுள் பெயரால் நடக்கும் அடக்கு முறை அவ்வாறு ஒரு மார்கத்துக்கு வழி கோலியது. இதை மறுப்பதற்கில்லை.

இவ்வாறு பிரதான கருத்துக்கள் பலமாக நிற்கும் போது நான் சொல்ல வரும் விடயம் பலவீனமானதாகவே படும்.

ஒரு அடித்தளத்தை கொண்டுதான்மேற்கண்ட பிரிவுகள் தோன்றின. அந்த அடித்தளத்தை தோண்டி எடுக்கும் போது அங்கேதான் உன்னதமான ஆன்மீகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். நான் மேற்சொன்ன தேவரமானதற்கு விளக்கத்தை பார்ப்போமானால். தும்பை குப்பை மேனி கையான் தகரை செருப்படி போன்ற மூலிகைகளை தப்பாமல் பயன்படுத்தி வந்தால் பிணி அண்டாது என்று பொருள். இது பத்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த பிள்ளையாரை எந்த வித கேள்வி விளக்கமும் இன்றி தொழுவதோடு நிற்கின்றது. உண்மை தென்னாட்டு சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் உள்ளது.

இன்று இணையமும் கோயில் வியாபாரமும் மத வெறியும் அது சார்ந்த ஆய்வுகளும் அதற்கெதிரான வாதங்களும் என்று நகரும் காலத்தில் ஓலைச்சுவடிகள் ஆதாரங்கள் பற்றி நிறுவுவது கடினமானது. தவிர அரச கருவூலங்களில் திட்டமிட்டு கறையான் உண்ண விடப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கிலாகும். அவைகள் வெளியில் வர அதிகாரம் விடாது என்பதே உண்மை. இருந்தும் முயற்சிகள் மிகச்சிறு அளவில் நடக்கின்றது.

எமக்கென்று ஒரு வாழ்க்கை முறை எமது புவியியல் தரைத்தோற்றத்துக்கேற்ப அதில் விழையும் தாவரங்களுக்கேற்ப வளங்களுக்கேற்ப இருந்தது. அந்த வாழ்கை முறைக்கேற்ப எமக்கென்று ஒரு ஆன்மீக வடிவம் இருந்தது. நீண்டகால வாழ்கைமுறையில் எமது உற்பத்திக்கும் வாழ்வியல் ஆதரத்துக்கும் கருப்பொருளான சூரியன் வணக்கத்துக்குரிய ஒன்றானது. நோய்தீர்கும் தாவரங்கள் வணக்கத்துக்குரியதானது. பயன்பாட்டுக்கு உரியதானது. உடல் கோயில் வடிவமானது உயிர் கடவுளானது. கோயிலினுள்ளே நோய் தீர்க்கும் அருமருந்துகளினால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது. அதை சுவாசித்தும் பாலை ஊற்றி பருகியும் நோய் தீர்கப்பட்டது. இவ்வாறு ஒரு அடித்தளம் எம்மிடம் இருந்ததுக்கு இன்னும் சுவடுகள் இருக்கின்றது.

இன்றும் வெறும் மேனியில் வேப்பிலை கட்டி பிணிதீர்கும் பழக்கம் பாழயத்தம்மன் கோயிலில் இருக்கின்றது பட்டி தொட்டிகளில் இருக்கின்றது. பயிர் விழையும் காலத்தில் சூரியனுக்கு பொங்கி படைக்கத்தான் செய்கின்றோம். தேவாரங்களுக்கு உட்பொருள் தென்னாட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் இருக்கின்றது. மாற்றங்கள் கண்டாலும் மூலிகைகளை இறைவனுக்கு சாத்துகின்றனர். உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம் வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுர வாசல் தௌ;ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் என்று திருமூலர் பாடிய பாடல் இன்றும் இருக்கின்றது.

நான் சொல்லும் எமது புராதன ஆன்மீகம் இறைபொருள் என்பவற்றுடன் பெரியாரியம் முரண்பட ஒன்றுமில்லை. மதம் என்ற வெறி வர ஒன்றுமில்லை. சமஸ்கிரதத்தில் புசை செய்ய வேண்டிய அவசியமில்லை. சாதி பிரிவுகள் இறைவன் பெயரால் வர எதுவித மார்க்கமும் இல்லை.

சீவன் சிவனாகி ஈஸ்வரனாகி அவனுக்கு உருவம் கொடுத்து கிருஸ்ணருக்கு மச்சானாகி ஆயிரத்தெட்டு புராணங்களில் புரட்டி எடுத்து இன்று இராமர் பாலத்தில் நின்று தர்கிக்கின்றோம்.

ஆதி உங்களுக்கு மற்றங்களையும் ஆன்மீகத்தின் பெயரால் நடந்த ஆக்கிரமிப்புக்களையும் விளங்கப்படுத்த உதாரணங்கள் சொன்னேன்.தவிர இராமனோ நீங்கள் சொல்லும் ஈஸ்வரனோ எனது கடவுள் இல்லை எமது உயிரே கடவுள். --------------------------------------------------------------------------------

மேற்கண்டவற்றை தான் நான் கூறினேன. நீங்கள் இதை இவ்வாறு "சுகனண்னை இங்க எழுதிரதோட நிக்காமல் வேப்பங்குழையடிச்சு மூலிகை பாழையத்தம்மனுக்கு பால் அபிசேகம் செஞ்சு வேண்டுகோள் விடுங்கோ. சுனாமி வந்தான்ன ஆமி வந்தான்ன அவா காப்பாத்துவா" என்று ஒரு தவறான அர்த்ததை என்மூலமா வழங்க முற்படுகின்றீர்கள்.

----------------------------------------------------------------------

சைவ நெறியில் திழைத்த வள்ளலார் சித்தர் மரபுக்குள் நுழைந்த பின் சன்மார்க்கத்தை உருவாக்கினார். சன்மார்கம் என்பதர்க்கு வள்ளலார் கொண்ட விளக்கம் தன்னைப்போல் பிறரை நேசித்தல் என்பதாகும்.

எமது உயரையும் உடலையும் காக்கும் வழிமுறைகளை தேடுதல் அவற்றை பிரயோசனப்படுத்தல் அவற்றுக்கு நன்றி சொல்லுதல் இந்த அடிப்படையில் தான் நன் சொல்லும் ஆன்மீகத்தின் கருத்து உள்ளது. இதன்பால் தான் உயிர்வாழ மூலாதரமான சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்குகின்றோம் உடல் உபாதையில் இருந்து காக்கும் மூலிகைகளை நன்றி சொல்லி வணங்குகின்றோம்.

சுனாமிவந்தால் காப்பாற்றுகின்ற கதை எல்லம் இங்க இழுத்து திரிக்க வேண்டிய அவசியம் இல்லையே. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய உள்ளங்கள் கடவுள் என்பது தான் எனது கருத்தின் பொருளாகும். வருமுன் காக்கும் நடவடிக்கையை செய்பவர்கள் கடவுள். எம்மினத்தை சிங்களக் பேரனவாதத்தில் இருந்து காக்கும் எம் தேசத்து வீரர்கள் கடவுள். இதுதான் எம்மிடம் புராதனத்தில் இருந்த ஆன்மீகம் என்பது எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சார்..

மதம் சாதியை உருவாக்குகிறது.. என்றதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறீங்கள்.

சாதிய அடிப்படை என்பது தொழில்சார் நிலையில் தான் இருந்தது. மதம் சார் அடிப்படையில் அல்ல.

பெரியாரிஸ்டுக்கள்.. பகுத்தறிகிறார்களோ இல்லையோ இந்து மதக் கடுப்பில் இருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார் சாதிப் பிரிவுகள் உண்டு.. மதம் சார் பிரிவுகளும் உண்டு.. முஸ்லீம்கள் மத்தியில் மத ரீதியான.. சுனி சியா என்று பிரிவுகள் உண்டு. முஸ்லீம்களுக்குள்ளும் தொழில்சார் பிரிவுகள் உண்டு.

மனிதன் உயிரியல் ரீதியாக தனி இனமாக இருந்தும்.. நிறம்.. நாடு.. மொழி.. பண்பாடு கலாசாரம்.. மதம்.. தொழில்.. கல்வி.. வருவாய் என்று மனித இயற்றுகைக்கு உள்ளான பல வடிவங்களால் பிரித்தாழப்படுகிறானே.. இதில்.. தொழில் சார்ந்து எழுந்த சாதியப் பிரிவை மட்டும் மதத்தோடு கலந்து குற்றம் சாட்டுவதுதான்.. பகுத்தறிவின் தொனிப்பா..???!

பாவம்.. புண்ணியம் இருக்கோ இல்லையோ.. சுயநலத்தை விடுத்து அயலவனையும் உன்னைப் போல் நேசி என்ற நிலையை உங்களுக்குள்ள வளர்த்திருக்கிறீர்களா.. அதைத்தான் மத அடிப்படை தத்துவங்கள் போதிக்கின்றன. அப்படி நேசிப்பீர்கள் என்றால்.. பாவம் புண்ணியம் பற்றி கவலைப்படத் தேவையில்ல. அவற்றை கவனத்தில் எடுத்து பினாத்தவும் அவசியமில்ல. பகுத்தறிவை அடுத்தவைக்குப் புகட்ட.. கறுப்பு சட்டைதான் போடனும் என்று நினைக்கிறது மூட நம்பிக்கை இல்லையா..??! ஏன் வெள்ளைச் சட்டை கலர் சட்டை போட்டா பகுத்தறிவு வளராதா..??! :):lol:

மனிதர்கள் மனிதர்களை சமனாக மதிக்கவும் நேசிக்கவும் செய்யனுமே தவிர மதம் தான் அதற்கு எதிர் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மதமும் மனிதர்களை அன்பின் பால் இணைக்கத்தான் வழிகாட்டுகின்றனவே தவிர பகுத்தறிவு என்று பிராமணனை தூக்கி எறிஞ்சி.. கறுப்புச்சட்டை போட்டு கத்தி தூக்கி சிலைகளை உடைக்கச் சொல்லேல்ல..!

இக்கருத்தில் அடங்கும் பெண்மணி காவியை தரித்து அம்மன் உருவத்தில் முகத்தை புதைத்துவிட்டதற்காக அவர் மதப் பிரச்சாரகர் அல்ல. அவர் மத அடிப்படைகளை மீறி.. மத அடையாளங்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தி பிழைப்பு நடத்துகின்றார்.

இந்துமதமோ சைவமோ.. சாஸ்திர சம்பிரதாயங்களில் மக்களை நம்பிக்கை கொள்ளச் சொல்லேல்ல. ஆன்மீகம் என்பது.. ஒரு மெய்யியல் கலை. மனிதன் சிந்தனையாலும் செயலாலும் தன்னை கட்டுப்படுத்தவும் ஆழவும் செய்யும் நிலை.

மதக் கோட்பாடுகளை சரிவர படிக்காதவர்களால் ஆன்மீக வழிமுறைகளில் சமூகத்தை பார்க்க முடியாது.

மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம். மதக் கோட்பாடுகள் மெஞ்ஞான அடிப்படையில் எழுந்தவை.

சாஸ்திரம்.. குறி சொல்லுதல்.. பேயோட்டல்.. மூடநம்பிக்கைகள்.. மூடப் பழக்க வழக்கங்கள்.. வன்முறைகள்.. காவி தரித்தல்.. தொழில்சார் வர்க்க பேதங்கள் இவை எவற்றிற்கும் மெஞ்ஞான அறிவூட்டலுக்கும் தொடர்பில்லை. இதை மதத்தின் பெயரால்.. மெஞ்ஞான அறிவற்ற கூட்டம்.. செய்கிறது. அதே கூட்டம் தொடர்கிறது.

ஆன்மீக அறிவியலின் படி.. பதி பசு பாசம்.. இவை உயிர்கள் அனைத்துக்கும் சமன். இந்த அடிப்படையை நீங்க புரிஞ்சிருக்கிறீங்களா...???! மனிதன் மட்டுமல்ல.. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தினதும் வாழ்வுரிமையை நாம் மதிக்கவும் அதனை சமனாகக் கருதவும் வேண்டும் எங்கிறது இந்துமதம். யார் செய்கிறீர்கள்.

மதம் என்னவோ சொல்ல முனைய.. நீங்கள் எதையோ செய்து கொண்டு.. இங்கு உங்களின் நிலையற்ற மனதால் எழும்..தெளிவற்ற நிலைக்கு நேரடியாக பதில் கூற நாதியற்ற மதத்தைப் போட்டு மாங்கு மாங்கென்று வாங்கி.. உங்கள் வீரத்தை பகுத்தறிவு என்று கறுப்புப் போர்வையால் போர்த்தி.. காட்டினால் போல..காவி தரித்த கள்வர்களுக்கும் பெரியார் கூட்டத்துக்கும் பெரிய வேறுபாடு என்று கருதி தலையில தூக்கி வைத்து ஆட முடியாது.

காவி தரித்தவர்கள் மதத்தை உச்சரித்துக் கொண்டு மதக் கோட்பாடுகளுக்கு வெளியில் வாழ்வது போல.. பகுத்தறிவு புகட்டிறம் என்று கறுப்புச் சட்டையை அணிந்து கொண்டு.. சாமி சிலைக்கு கல்லாலடிக்கும்.. கூட்டத்தையும்.. பல பெண்களோடு உறவாடி.. பெண்களின் பாலியல் இச்சைக்கு தீர்வு தேடிக் கொடுக்கும்.. பகுத்தறிவுப் போதனைகளையும் கேட்க மெய் சிலிர்க்குது. :D:lol:

சமூகப் பிரிவினைகளுக்கு அடிப்படை எங்கையோ இருக்க.. எங்கையோ.. அடி முடி தேடித் திரிகிறார்கள்.. அவர்கள். அது அவர்களுக்குப் பிழைப்பு. மதம் என்பது அன்பை.. சமத்துவத்தைப் போதிக்க முயல.. அதை அரைகுறையில் விளங்கிக் கொண்டு பேயோட்டப் பயன்படுத்துவது.. மனிதர்களின் தவறே அன்றி.. மதக் கோட்பாடுகளை வகுத்த மெஞ்ஞானிகளதல்ல.

விஞ்ஞானம் கூட மெஞ்ஞானத்தை மதிக்கிறது. மிதிக்கல்ல. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாலை, சூரவத்தை பகுதியில் இருந்த களவாடை அம்மன் என்று அழைக்கப்படுபவரும் இவர் தானா?.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த லலிதா என்பவரை அம்மனாக நினைப்பவர்கள், அவரது கணவர் சிறிபாலனை சிவனாக நினைக்கிறார்களா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழாலை, சூரவத்தை பகுதியில் இருந்த களவாடை அம்மன் என்று அழைக்கப்படுபவரும் இவர் தானா?.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த லலிதா என்பவரை அம்மனாக நினைப்பவர்கள், அவரது கணவர் சிறிபாலனை சிவனாக நினைக்கிறார்களா? :D

கணவர்தான் பூசகர்.

அததோடு இன்னுமொருவன் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" பற்றி ஆய்வு ஒன்றைச் செய்து மிகவும் முக்கியமான விடையம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அதாவது கடவுள் பயபக்த்தி இல்லாத பெரியாரிஸ்ரிகளின் போதனை புலம்பெயர்ந்த சமூகத்து இளைஞர்கள் மத்தியில் வன்முறையை ஊக்குவிக்கிறது. எவற்றையுமே தம்மால் மாற்ற முடியும் அது சமூகப்பிரச்சனை என்றாலும் பறவாயில்லை என்ற தான் தோன்றித்தனம் இவ்வாறு தான் ஊக்குவிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட பாவ புண்ணியங்கள் பற்றி நம்பிக்கை அற்றவர்களால் தான் கள்ள மட்டை கூட அடிக்க முடியும். அதாவது பெரியாரிஸ்ரிக்களால் தான் நம்மவர்கள் மத்தியில் கள்ள மட்டைப் பிரச்சனை கூட என்று கூறினால் மிகையாகாது.

கருத்துத் திரிப்பு என்பது எப்போதுமே கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆரோக்கியமற்ற ஒன்று. அந்த அடிப்படையில், மேலே உள்ள உங்களின் கருத்துத் தொடர்பில் கூற என்னிடம் ஏதுமில்லை.

இருப்பினும், உங்கள் கருத்தின் ஊடாக முன்வைக்கப்படும் "எவற்றையும் தம்மால் செய்யமுடியும் அது சமூகப் பிரச்சினையாக இருப்பினும் கூட" என்ற அடிப்படையில் அமையும் இளைஞர்களின் தன்னம்பிக்கைக்கு எனது முந்தைய கருத்து எதிரானது என்ற அடிப்படைத் தொனி தொடர்பில் இக்கருத்து.

முதலில், புலம் பெயர் சூழலையும் தாயகச் சூழலையும் போட்டுக் குழப்பிக் கொள்வதனை நாம் தவிர்க்க வேண்டும். ஒரு பேரினவாதம் இனச்சுத்திகரிப்பினைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கையில், ஒடுக்கப்படுகின்ற இனம் தன்மீதான பேரினவாதத்தின் தொடரும் மூர்க்கத் தனங்களை எதிர்கொண்டு இல்லாதொழிக்கவும் தனது இருப்பினை உறுதிப்படுத்தவும் எடுத்துக் கொண்ட மிகக் கடைசி மார்;கத்தை (அதாவது அனைத்து இதர மார்க்கங்களும் செயலற்றதன் பின்னர் எமக்கிருந்து இறுதி மார்க்கம, அது மட்டுமன்றி தலைவரே பலதடவைகள் கூறியுள்ளது போல ஆயதப் போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னரும் கூட இதர வழிகளிற்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கின்றன) எடுத்த எடுப்பில் புலம்பெயர் தமிழ் வாழ்வியலிற்குட் திணிப்பது அபத்தமான சிந்தனை. மேலும் இத்தகைய திணிப்புக்கள் ஒட்டுமொத்த வாழ்வியல் மீதும், போராட்டத்தின் மீதும், இச் கூழலில் உருவாகும் எமது புதிய தலைமுறை எமது போராட்டத்தை எவ்வாறு நோக்குகின்றது என்பதன் மீதும் இன்னும் எத்தனையோ முனைகளிலும் எத்தகை ஆபத்துக்களi ஏற்படுத்துகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

இளைஞர்கள் தன்னம்பிக்கையோடும் வினைத்திறனோடும் செயற்படுவதற்கான புலம்பெயர் சூழலின் வழிமுறைகளில் வன்முறையும் ஒன்று என்பதில் எனக்கு அறவே உடன்பாடு இல்லை. தன்னப்பிக்கையை வளர்க்கவும் தன்னம்பிக்கையோடும் வினைத்திறனோடும் செயற்படவும் வழிகள் இங்கு ஏராளம். புலம் பெயர் தமிழ் இளைஞர்களிடையே நிலவுகின்ற வன்முறை நிகழ்வுகளுகளிற்கான அடிப்படைகள் பற்றிச் சிந்திப்பதும் கூட எமது இளையவர்கள் மீதான கரிசனையே. மேலும், எமது சமூகத்தில் அப்பப்போ அரிதாய் ஏனும் வெளிப்படும் வன்முறையினை தமிழ் விரோத சக்திகள் எமது போராட்டத்தோடு தொடர்பு படுத்தித் திரிப்பதும், எமது இனம் பற்றிய சிங்களத்தின் நயவஞ்சகத் சித்தரிப்புக்களிற்கும் இச்செய்திகள் உதவுவதும் பற்றியும் சிந்திப்பதும் கூட எமது இளைஞர்கள் மீது மட்டுமன்றி எமது இனத்தின் மீதான கரிசனையே. (நேற்றைய தினம் கூட ஒஸ்லோவிற்குச் சமூராய் வாழுடன் சென்று கத்திச் சண்டை செய்த தமிழ்க் குழு என்ற செய்தி தமிழ்நெற்ரில் வெளியாகி இருந்தது.).

மேலும், நாம் விரும்புகின்றோமோ இல்லையோ, எமது புதிய சந்ததிகள் இப்புதுச் சூழலில் உருவாகிக்கொண்டிருக்கையில் விடயங்களை வன்முறை ரீதியில் இச்சூழலில் அணுகும் அங்கீகரிக்கும் சமூக இயல்பின் தாக்கங்கள் பற்றி நான் கூறி விளங்கவேண்டிய நிலையில் யாரும் இங்கில்லை.

எனது முந்தைய கருத்தில் நான் குறிப்பிட்டிருந்தது போன்ற ஐரோப்பாச் செய்திகளில், இளைஞர்களின் சில வகையான வன்முறைகள் அங்கீகரிக்கப்படுவது போலிருப்பது மட்டுமன்றி அது இளைஞர்களின் கடமையாகக் கூட மறைமுகமாகச் சித்தரிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நான் எழுப்பியிருந்த எந்தக் கேள்வியையும் அணுகாது வெறுமனே எனது கேள்விக்கான ஒற்றைக் காரணம் பெரியார் மறுப்பு மட்டுமே என்ற கோணத்தில் (நான் சற்றிலும் சிந்திக்காத நினைக்காத கோணத்தில்) நீங்கள் எனது கருத்தினை அணுகி உள்ளமை உண்மையில் ஏமாற்றம் அளிக்கின்றது.

Edited by Innumoruvan

இன்னுமொருவன்

நீங்கள் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" என்ற பதத்திற்கு கொடுத்த நீண்ட sinister interpretation விட நான் அதிகமாக உங்கள் கருத்தை திரிக்கவில்லையுங்கோ.

"இளைஞர்கள் தலையிட்டார்கள்" அந்த தலையீடு என்பது வன்முறை சார்ந்தது அல்லது சார்ந்து இருக்கலாம் என்ற spin ஏன் இந்த தலைப்புக்குள் வந்தது? அதன் நீட்சியாக குழுச்சண்டைகளையும் இணைத்துப் பார்ப்பது மிதமிஞ்சிய கருத்துத் திரிப்பாகத் தெரியவில்லையா?

இளைஞர்களின் தலையீடு ஒரு சமூகக் கட்டமைப்பு சார்ந்த கலந்துரையாடலில் ஒன்றுகூடல்களில் ஆதாரங்களோடு கேட்க்கப்பட்ட கேள்விகளாக இருக்க முடியாதா?

உங்கள் interpretation சரி இளைஞர்களின் தலையீடு சட்ட திட்டத்திற்கு புறம்பாக இருந்தது என்றால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் சட்டத்தை அணுகலாம் தானே. புலம்பெயர்ந்த நாடுகளிலும் சட்ட நிர்வாகங்களில் ஊழல் பிரச்சனைகள் இருக்குது என்ற வியாக்கியானத்தை வைத்திடாதேங்கோ.

இல்லை கோவில் கட்டி வியாபாரம் நடத்துபவர்களிற்கு இங்கு இடம் வலம் தெரியாது பாசை தெரியாது மூக்கைப் பிடிச்சா ஆவெண்ணத் தெரியாத அப்பாவிகள் அது தான் வேறு நகரத்துக் ஓடினவையா?

இந்தியாவில் இருந்து வரும் தமிழ்ச் சினிமா விதைக்காத raw uncensored அப்பட்டமான வன்முறை குழுச் சண்டை கலாச்சாரத்தையா புலம்பெயர்ந்த இளைஞர்கள் தமது சமூகவிடையங்களில் ஆர்வமெடுப்பதால் அதன் விளைவால் தலையிடுவதால் வரப்போகிறது? இந்திய தமிழ் திரைப்படங்களின் வெறும் காட்சிகள் மாத்திரமா வன்முறையை தூண்டுது? கதாபாத்திரங்கள் அவர்களது உணர்ச்சி பொங்கிய வசனநடைகள் படத்தின் கதை நகரும் முறை கோணங்கள் முக்கியப்படுத்தப்படும் விடையங்கள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம். அதாவது வன்முறை என்பது அந்தப் படத்தின் கதையைச் சொல்லுவதற்கு தவிர்க்க முடியாது என்ற அளவில் சிக்கனமாக காட்டப்படவில்லை கைய்யாளப்படவில்லை. வன்முறையை மய்யமாக வைத்தோ தான் விதம் விதமாக creative ஆக எடுக்கிறார்கள்.

தலையீடு என்பது ஆர்வம் சார்ந்தது.

வன்முறை என்பது வெறுமனே ஒரு அணுகு முறையே.

அதாவது ஆர்வத்தினால் வரும் செயல் வடிவங்களில் தவறான ஒன்றே அன்றி அதுதான் தலையீடு என்பதன் அர்த்தம் அல்ல.

சும்மா சொல்லக் கூடாது இந்து மத விடையங்கள் சீண்டப்படும் பொழுது பதிலடியாக நல்ல தரமான spin doctering செய்வதை இதற்கு முன்னரும் பலதடவை அவதானித்திருக்கிறன். அவற்றின் தரத்தையும் அதுக்குத் தேவையான உங்களிடம் இருக்கும் திறமையையும் நான் மதிக்கிறன்.

ஆனால் உந்தத் திறமையையும் ஆர்வத்தையும் தமிழ்த் தேசியத்தை தாயகத்திலும் புலத்திலும் பலவீனப்படுத்த நீண்டகால நோக்கி அரங்கேற்றப்படும் சதிகளிற்கான பதிலடிக்கும் பயன்படுத்துங்கோ புண்ணியமாகப் போகும்!

இன்னுமொருவன்

நீங்கள் "இளைஞர்கள் தலையிட்டார்கள்" என்ற பதத்திற்கு கொடுத்த நீண்ட sinister interpretation விட நான் அதிகமாக உங்கள் கருத்தை திரிக்கவில்லையுங்கோ.

"இளைஞர்கள் தலையிட்டார்கள்" அந்த தலையீடு என்பது வன்முறை சார்ந்தது அல்லது சார்ந்து இருக்கலாம் என்ற spin ஏன் இந்த தலைப்புக்குள் வந்தது? அதன் நீட்சியாக குழுச்சண்டைகளையும் இணைத்துப் பார்ப்பது மிதமிஞ்சிய கருத்துத் திரிப்பாகத் தெரியவில்லையா?

இளைஞர்களின் தலையீடு ஒரு சமூகக் கட்டமைப்பு சார்ந்த கலந்துரையாடலில் ஒன்றுகூடல்களில் ஆதாரங்களோடு கேட்க்கப்பட்ட கேள்விகளாக இருக்க முடியாதா?

.....

குறுக்காலபோவன்,

இந்தத் தலைப்பின் 19ம் பதிவை வாசித்தீர்களாயின், அதிலே நான் இத்தலைப்பின் எச்செய்தி பற்றிப் பேசுகின்றேன் என்ற விடயம் தெளிவாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தலைப்பைப் பதிந்தவர் சொன்ன செய்தி "இளைஞர்களால் எச்சரித்து விரட்டப்பட்டார்" என்பது தானே தவிர "இளைஞர்கள் தலையிட்டார்கள்"" என்பதில்லை. எனவே நியாயமாக நான் தான் உங்களிடம் "எச்சரித்து விரட்டப்பட்டார்கள்" என்பது எப்படி "தலையிட்hர்கள்"" என ஸ்பின் பண்ணப் பட்டது என்று கேட்க வேண்டும்.

ஓரு தவறான வாசிப்பின் பிரகாரம் ஆத்திரமுற்று, அடியற்ற ஒரு ஆத்திரத்தின் வெளிப்பாடாக இத்தனை பெரிய பதில் கருத்து எழுதிய நேரத்திற்கு, அந்த ஐந்து வரி மேற்கோளை மேலும் ஒரு தடவை நீங்கள் வாசித்து உண்மையில் அங்கு "தலையிட்டார்கள்" என்ற சொற்பதம் தான் பாவிக்கப்பட்டுள்ளதா என்பதனை

உறுதி செய்திருந்தால் நம் இருவரிற்கும் இந்தப் பொன்னான நேரத்தை வேறு உபயோகமான காரியங்களிற் செலுத்து உதவியிருக்கும் :lol:

இன்னுமொரு விடயத்தைக் கூறியாக வேண்டும், கடவுள் நம்பிக்கை பெரியார் போன்ற விடயங்கள் எவ்வித நகர்வுமின்றி ஒரே கொல்லைக்குள் யாழ் களத்தில் விவாதிக்கப்படுவதனால் தான் அம்முனையில் நான் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை (மேலும் நான் கடவுள் நம்பிக்கை உடையவன் என்பதற்காக மனிதர்களின் பித்தலாட்டங்களிற்கும் போலிச் சாமிகளிற்கும் வக்காலத்து வாங்குபவனாக இருக்க வேண்டும் என்பதில்லை. ). இந்தத் தலைப்புக் கூட வெறுமனே கடவுள் நம்பிக்கை பற்றிக் கதைத்திருந்தால் நிச்சயம் எனது கருத்து இங்கு பதிவாகியிராது.

எனினும், ஒரு தலைப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் உள்ளடக்கப் படும்பேர்து, உள்ளடக்கப்பட்ட கருத்துக்களில் அதனை வாசிக்கும் ஒருவரிற்கு எக்கருத்து பதில் கருத்தெழுதத் தூண்டுகிறதோ அது பற்றி மட்டும் தான் அவர் எழுத முடியும். அந்த வகையில் தான் இத்தலைப்பில் மதம் தொடர்பான மாமூல் உரையாடலிற்கு அப்பால் சர்வசாதராணமாக அணுகப்பட்டிருந்த இளையோர் தொடர்பான எனது பார்வையில் தவறான கருத்தியல் தொடர்பில் எனது கருத்து அமைந்தது.

முதலில,; எனது கருத்திற்குக் காரணமான குறிப்பிட்ட மேற்கோளைப் பிரித்தெடுத்துப் புதிய தலைப்பைத் தொடங்கலாம் என்று தான் எண்ணினேன், எனினும் அது கள விதிகளிற்கு உட்படுமா என்ற சந்தேகம் பிறந்ததனால் இத்தலைப்பிலேயே கருத்திட்டேன்.

ஆனால் துரதிஸ்ரவசமாக, நான் சொல்ல வந்த கருத்தைத் தவறாக புரிந்து நீங்கள் கருத்தெழுதியபோதும் தவறனான வாசிப்பின் பிரகாரம் (அதாவது "எச்சரித்து விரட்டினார்கள்" என்பதனைத் "தலையிட்டார்கள்" என்று நீங்கள் வாசித்தமை) குற்றம் சுமத்தியபோதும் கருத்துக்கள் தொடர வேண்டிய துரதிஸ்ரம் ஏற்பட்டது.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகனண்னா நீங்களே எல்லாத்தயும் சொல்லி உசுப்பேத்திப்போட்டு இப்ப கவிட்டா எப்பிடி?

துப்பார் துருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்பார் தமக்கு என்று முடியும் தேவாரத்தை எடுத்துக்கொள்வோம்.

நான் மேற்சொன்ன தேவரமானதற்கு விளக்கத்தை பார்ப்போமானால். தும்பை குப்பை மேனி கையான் தகரை செருப்படி போன்ற மூலிகைகளை தப்பாமல் பயன்படுத்தி வந்தால் பிணி அண்டாது என்று பொருள். உண்மை தென்னாட்டு சித்தர்கள் ஓலைச்சுவடிகளில் உள்ளது.

எமக்கென்று ஒரு வாழ்க்கை முறை எமது புவியியல் தரைத்தோற்றத்துக்கேற்ப அதில் விழையும் தாவரங்களுக்கேற்ப வளங்களுக்கேற்ப இருந்தது. அந்த வாழ்கை முறைக்கேற்ப எமக்கென்று ஒரு ஆன்மீக வடிவம் இருந்தது. நீண்டகால வாழ்கைமுறையில் எமது உற்பத்திக்கும் வாழ்வியல் ஆதரத்துக்கும் கருப்பொருளான சூரியன் வணக்கத்துக்குரிய ஒன்றானது. நோய்தீர்கும் தாவரங்கள் வணக்கத்துக்குரியதானது. பயன்பாட்டுக்கு உரியதானது. உடல் கோயில் வடிவமானது உயிர் கடவுளானது. கோயிலினுள்ளே நோய் தீர்க்கும் அருமருந்துகளினால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டது. அதை சுவாசித்தும் பாலை ஊற்றி பருகியும் நோய் தீர்கப்பட்டது.

இன்றும் வெறும் மேனியில் வேப்பிலை கட்டி பிணிதீர்கும் பழக்கம் பாழயத்தம்மன் கோயிலில் இருக்கின்றது பட்டி தொட்டிகளில் இருக்கின்றது. பயிர் விழையும் காலத்தில் சூரியனுக்கு பொங்கி படைக்கத்தான் செய்கின்றோம்.

எமது உயரையும் உடலையும் காக்கும் வழிமுறைகளை தேடுதல் அவற்றை பிரயோசனப்படுத்தல் அவற்றுக்கு நன்றி சொல்லுதல் இந்த அடிப்படையில் தான் நன் சொல்லும் ஆன்மீகத்தின் கருத்து உள்ளது. இதன்பால் தான் உயிர்வாழ மூலாதரமான சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்குகின்றோம் உடல் உபாதையில் இருந்து காக்கும் மூலிகைகளை நன்றி சொல்லி வணங்குகின்றோம்.

இதெல்லாத்தயும் சொன்னியள் நானும் நம்பி பாழயத்தம்மனிட்ட அட்டாங்கமா விழுந்திட்டன். சூரியன கும்பிட தொடங்கின நாளிலயிருந்து பலனும் கிடைக்கிறமாதிரி கிடக்கு. மனசு காத்தில பறக்கிறமாதிரி லேசா தெரியிது. தும்பை குப்பை மேனி கையான் தகரை செருப்படி போன்ற மூலிகயள் வேப்பங்குளையெல்லாம் ஓடர் பண்ணியாச்சு. பாழயத்தம்மனையும் கொண்டுவந்திட்டா பிணி அண்டாது. நீங்கள் சொன்னதுபோல பாழயத்தம்மன் கைகுடுப்பா.

B)

மன்னிக்கவும் இன்னுமொருவன் எனது தவறு தான்.

அபிராமி அம்மனுக்கு ஏதாவது என்றால் என்னால் தாங்க முடியாது அது தான் உணர்ச்சி வசப்பட்டுட்டன்.

-----

"எச்சரித்து விரட்டப்பட்டார்கள்" என்றதை திருட்டு டிவிடி யில சிவாஜி பார்த்துப் புறக்கணிப்பம் என்ற வரிசையில் வெற்றிகரமாக சேர்த்துக் கொள்ளுவம். :lol:

கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி குறுக்காலபோவான். தொடர்ந்து கருத்துக் களத்தில் சந்திப்போம்..

கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி குறுக்காலபோவான். தொடர்ந்து கருத்துக் களத்தில் சந்திப்போம்..

:P ummm.gif

:lol:

ummm.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சின்னா சுவிசிலை பேண் நகரிலை தான் அந்த அம்மனுக்கு ஒரு கிளை திறந்திருக்கினம் என்ரை கட்டுரை வெளி வந்தபோது சம்பத்த பட்டவையும் என்னோடை தொலை பேசியடிச்சு கதைச்சவை அந்த அம்மணியும் ஏழாலையை சேந்தவா தான் தேவை பட்டா மிச்ச விபரம் தாறன் :P அடுத்ததாக இங்கு கடவுள் மனிதரா அவதாரம் எடுத்தாரா அல்லது மனிதரா கடவுள் அவதாரம் எடுத்தாரா என்னபதல்ல பிரச்சனை அந்த லலிதா அதாவது அபிராமி ஒரு போலி பெண் சாமி என்பதை என்னால் நிருபிக்க முடியும் காரணம் அவரை எனக்கு ஏழாலையில் அவர் ஆட தொடங்கிய காலத்தில் இருந்தே தெரியும் அது மட்டுமல்ல சிறி பாலனையும் தான் :D:D கட்டுரை சம்பந்தமாக என்னை பழி வாங்க போவதாக சொல்லியே இரண்டு வருசமாகிது நான் இன்னமும் உயிரோடைதான் இருக்கிறன் இது வேறை தொல்லை :lol::D

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா???????????????´போறபோக்கைப்பார்த்தால் வெட்டுக்குத்து வரும்போலை கிடக்கு அதாகப்பட்டது நான் சொல்ல வந்தது எங்கடை நிர்வாகம் கத்திகடப்பாரையோடை இந்தப்பக்கம் வந்தாலும் வரலாம் :lol:

சுகன் சார்..

மதம் சாதியை உருவாக்குகிறது.. என்றதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறீங்கள்.

சாதிய அடிப்படை என்பது தொழில்சார் நிலையில் தான் இருந்தது. மதம் சார் அடிப்படையில் அல்ல.

பெரியாரிஸ்டுக்கள்.. பகுத்தறிகிறார்களோ இல்லையோ இந்து மதக் கடுப்பில் இருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்கள் மத்தியிலும் தொழில்சார் சாதிப் பிரிவுகள் உண்டு.. மதம் சார் பிரிவுகளும் உண்டு.. முஸ்லீம்கள் மத்தியில் மத ரீதியான.. சுனி சியா என்று பிரிவுகள் உண்டு. முஸ்லீம்களுக்குள்ளும் தொழில்சார் பிரிவுகள் உண்டு.

மனிதன் உயிரியல் ரீதியாக தனி இனமாக இருந்தும்.. நிறம்.. நாடு.. மொழி.. பண்பாடு கலாசாரம்.. மதம்.. தொழில்.. கல்வி.. வருவாய் என்று மனித இயற்றுகைக்கு உள்ளான பல வடிவங்களால் பிரித்தாழப்படுகிறானே.. இதில்.. தொழில் சார்ந்து எழுந்த சாதியப் பிரிவை மட்டும் மதத்தோடு கலந்து குற்றம் சாட்டுவதுதான்.. பகுத்தறிவின் தொனிப்பா..???!

பாவம்.. புண்ணியம் இருக்கோ இல்லையோ.. சுயநலத்தை விடுத்து அயலவனையும் உன்னைப் போல் நேசி என்ற நிலையை உங்களுக்குள்ள வளர்த்திருக்கிறீர்களா.. அதைத்தான் மத அடிப்படை தத்துவங்கள் போதிக்கின்றன. அப்படி நேசிப்பீர்கள் என்றால்.. பாவம் புண்ணியம் பற்றி கவலைப்படத் தேவையில்ல. அவற்றை கவனத்தில் எடுத்து பினாத்தவும் அவசியமில்ல. பகுத்தறிவை அடுத்தவைக்குப் புகட்ட.. கறுப்பு சட்டைதான் போடனும் என்று நினைக்கிறது மூட நம்பிக்கை இல்லையா..??! ஏன் வெள்ளைச் சட்டை கலர் சட்டை போட்டா பகுத்தறிவு வளராதா..??!

மனிதர்கள் மனிதர்களை சமனாக மதிக்கவும் நேசிக்கவும் செய்யனுமே தவிர மதம் தான் அதற்கு எதிர் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மதமும் மனிதர்களை அன்பின் பால் இணைக்கத்தான் வழிகாட்டுகின்றனவே தவிர பகுத்தறிவு என்று பிராமணனை தூக்கி எறிஞ்சி.. கறுப்புச்சட்டை போட்டு கத்தி தூக்கி சிலைகளை உடைக்கச் சொல்லேல்ல..!

இக்கருத்தில் அடங்கும் பெண்மணி காவியை தரித்து அம்மன் உருவத்தில் முகத்தை புதைத்துவிட்டதற்காக அவர் மதப் பிரச்சாரகர் அல்ல. அவர் மத அடிப்படைகளை மீறி.. மத அடையாளங்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தி பிழைப்பு நடத்துகின்றார்.

இந்துமதமோ சைவமோ.. சாஸ்திர சம்பிரதாயங்களில் மக்களை நம்பிக்கை கொள்ளச் சொல்லேல்ல. ஆன்மீகம் என்பது.. ஒரு மெய்யியல் கலை. மனிதன் சிந்தனையாலும் செயலாலும் தன்னை கட்டுப்படுத்தவும் ஆழவும் செய்யும் நிலை.

மதக் கோட்பாடுகளை சரிவர படிக்காதவர்களால் ஆன்மீக வழிமுறைகளில் சமூகத்தை பார்க்க முடியாது.

மெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம். மதக் கோட்பாடுகள் மெஞ்ஞான அடிப்படையில் எழுந்தவை.

சாஸ்திரம்.. குறி சொல்லுதல்.. பேயோட்டல்.. மூடநம்பிக்கைகள்.. மூடப் பழக்க வழக்கங்கள்.. வன்முறைகள்.. காவி தரித்தல்.. தொழில்சார் வர்க்க பேதங்கள் இவை எவற்றிற்கும் மெஞ்ஞான அறிவூட்டலுக்கும் தொடர்பில்லை. இதை மதத்தின் பெயரால்.. மெஞ்ஞான அறிவற்ற கூட்டம்.. செய்கிறது. அதே கூட்டம் தொடர்கிறது.

ஆன்மீக அறிவியலின் படி.. பதி பசு பாசம்.. இவை உயிர்கள் அனைத்துக்கும் சமன். இந்த அடிப்படையை நீங்க புரிஞ்சிருக்கிறீங்களா...???! மனிதன் மட்டுமல்ல.. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தினதும் வாழ்வுரிமையை நாம் மதிக்கவும் அதனை சமனாகக் கருதவும் வேண்டும் எங்கிறது இந்துமதம். யார் செய்கிறீர்கள்.

மதம் என்னவோ சொல்ல முனைய.. நீங்கள் எதையோ செய்து கொண்டு.. இங்கு உங்களின் நிலையற்ற மனதால் எழும்..தெளிவற்ற நிலைக்கு நேரடியாக பதில் கூற நாதியற்ற மதத்தைப் போட்டு மாங்கு மாங்கென்று வாங்கி.. உங்கள் வீரத்தை பகுத்தறிவு என்று கறுப்புப் போர்வையால் போர்த்தி.. காட்டினால் போல..காவி தரித்த கள்வர்களுக்கும் பெரியார் கூட்டத்துக்கும் பெரிய வேறுபாடு என்று கருதி தலையில தூக்கி வைத்து ஆட முடியாது.

காவி தரித்தவர்கள் மதத்தை உச்சரித்துக் கொண்டு மதக் கோட்பாடுகளுக்கு வெளியில் வாழ்வது போல.. பகுத்தறிவு புகட்டிறம் என்று கறுப்புச் சட்டையை அணிந்து கொண்டு.. சாமி சிலைக்கு கல்லாலடிக்கும்.. கூட்டத்தையும்.. பல பெண்களோடு உறவாடி.. பெண்களின் பாலியல் இச்சைக்கு தீர்வு தேடிக் கொடுக்கும்.. பகுத்தறிவுப் போதனைகளையும் கேட்க மெய் சிலிர்க்குது.

சமூகப் பிரிவினைகளுக்கு அடிப்படை எங்கையோ இருக்க.. எங்கையோ.. அடி முடி தேடித் திரிகிறார்கள்.. அவர்கள். அது அவர்களுக்குப் பிழைப்பு. மதம் என்பது அன்பை.. சமத்துவத்தைப் போதிக்க முயல.. அதை அரைகுறையில் விளங்கிக் கொண்டு பேயோட்டப் பயன்படுத்துவது.. மனிதர்களின் தவறே அன்றி.. மதக் கோட்பாடுகளை வகுத்த மெஞ்ஞானிகளதல்ல.

விஞ்ஞானம் கூட மெஞ்ஞானத்தை மதிக்கிறது. மிதிக்கல்ல. - நெடுக்கால போவான்

----------------------------------------------------------------------------

மனிதர்கள் பல தொழில்களை செய்தார்கள். தொழில் செய்யாமல் எப்படி இருந்த இடத்தில் இருந்து நோகாமல் வாழ்வதென்றதுக்கு கடவுளை காரணம்காட்டி கோட்பாடுகளை உருவாக்கி தொழில்சார்நிலையை சாதிவாரியாக்கியது தான் மதம். இதற்காகத்தான் மனுநீதி எழுதப்பட்டது. வர்ணாசிரம கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இதன் மூலமே முதலிளி வர்கம் ; கட்டப்பட்டது. அது வே ஆழும் வர்கமும் ஆனது.

---------------------------------------------------------------------

மதக் கோட்பாடுகளை சரிவர படிக்காதவர்களால் ஆன்மீக வழிமுறைகளில் சமூகத்தை பார்க்க முடியாது.- நெடுக்காலபோவான்

---------------------------------------------------------------------------------

கடவுளுக்கும் மனிதருக்கும் இடையில் தரகர் வேலை பார்ப்பவர் பிரம்மாவின் நெத்தியில் இருந்தும் நிலவுடமைக்காரர்கள் அரசாள்பவர் தோழில் இருந்தும் அடுத்த தட்டு இடுப்பில் இருந்தும் கூலி வேலை பார்ப்பவர் பிரம்மாவின் காலில் இருந்தும் என்று வகுக்கப்பட்டது. தரகர் வேலை பாரத்தவர்களே இன்று ஆழும் வர்கம் என்பதை அறிக.

தொழில் சார் அடிப்படையில் மக்கள் இருந்தது உண்மை அதை சுயநலத்துக்காக சாதிவாரியாக்கியது மதவாயிலாக ஆகும்.

------------------------------------------------------------------------------------

ஆன்மீக அறிவியலின் படி.. பதி பசு பாசம்.. இவை உயிர்கள் அனைத்துக்கும் சமன். இந்த அடிப்படையை நீங்க புரிஞ்சிருக்கிறீங்களா...???! மனிதன் மட்டுமல்ல.. உலகில் உள்ள உயிர்கள் அனைத்தினதும் வாழ்வுரிமையை நாம் மதிக்கவும் அதனை சமனாகக் கருதவும் வேண்டும் எங்கிறது இந்துமதம். யார் செய்கிறீர்கள்.- நெடுக்கால போவான்

------------------------------------------------------------------------------------

இந்த பசு பதி பாச பம்மாத்தெல்லாம் எவ்வளவு தூரம்?

உலகில் எந்த ஒரு மதமும் ஒரு மனிதனை தொட்டால் குளித்து தீட்டு நீக்க வேண்டும் என்ற ஒரு வக்கிர நிலையை தோற்றுவித்ததில்லை. மனுதர்மவாயிலாக நடைமுறைப்படுத்தப்படும் கோட்பாடுகள் இவ்வாறான ஒரு வக்கிர நிலையை ஏற்படுத்துவது மட்டுமின்றி இன்றளவும் நடைமுறையில் வைத்திருக்கின்றது.

பதி பசு பாசம் என்றும் உயிர்களை சமனாக மதிக்க வேண்டும் என்று இந்து மதம் கூறினால் ஏனைய்யா தீண்டாமை என்று தாழ்தப்பட்ட மக்களை வதைக்கின்றீர்கள்? கீழ் சாதிக்கடவுள் என்று கருப்பண்ணசாமியை ஏனையா கோயிலுக்கு வெளிய வைக்கிறீங்கள்? கர்பக்கிரகத்துள் நுளைவதுக்காகவே பல உயிர்கள் மடிந்ததே ஏனையா அது? கோயிலுக்குள்ளும் கோயிலை சுற்றியிருக்கும் வீதியிலும் நாய் பூனை நடக்கலாம் மாடாடு நடக்கலாம் தாள்த்தப்பட்ட மனுசன் நடக்க கூடாதொன்று கொள்கை வகுத்தாங்களே. அதற்காக போரட்டம் நடத்தி மடிந்தாங்களே அப்போதெல்லம் பசுவும் பதியும் பாசமும் எங்கே போனது?

யார் செய்கின்றீர்கள் என்று கேட்கின்றீர்களே யாரைக் கேட்கின்றீர்கள்? மனுசனை மனிதாபிமானமில்லாமல் கூறுபோடும் மனுநீதியை பாரத்து கேட்கின்றீர்களா இல்லை அதை நடைமுறைப்படுத்தும் மேல்சாதியைப் பார்த்து கேட்கின்றீர்களா? இல்லை அதே கோட்பாடு மேல்சாதி என்ற நிலையை பாவித்து ஆழும் வார்கமாகி ஆண்டு கொண்டிருப்பவர்களைப்பாரத்து கேட்கின்றீர்களா? இல்லை அதையும் மதம் கடவுள் என்று காரணம்காட்டி தீண்டத்தகாதவர்கள் என்று மிதிபடும் தாழ்தப்பட்ட மக்களைப்பார்து கேட்கின்றீர்களா?

----------------------------------------------------------------------------

பல்லாயிரம் இந்துக்கள் பௌத்தம் இஸ்லாம் கிருத்துவம் என்று மாறிக்கொண்டிருக்கின்றார்கள

Edited by sukan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானம் கூட மெஞ்ஞானத்தை மதிக்கிறது. மிதிக்கல்ல.

ஆமா விஞ்ஞானத்தின்ர பிரதிநிதி சொல்லுறார் எல்லாரும் கேளுங்கோ. :lol:

மதம் அத சொன்னது இத சொன்னது எண்டுகொண்டு ஒரே பல்லவிய எத்தின காலத்துக்கு பாடபோறியள். எந்தத் தலைப்பில போனாலும் இந்தத் தலையிடிதான்.

மதம் எண்டது தானா மேல இருந்து குதிச்சு வந்திதா? அது மனுசனாலதானே உருவாக்கப்பட்டது. பிறகென்ன மனுசன் உருவாக்கினது எண்டேக்க அது குறிப்பிட் ஒருசிலரால தானே உருவாக்கப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட சிலர் யார்? அவை தங்கட அனுபவங்கள அடிப்படையா வச்சுத்தானு.... தங்கட நலன்கள அடிப்படையா வச்சுத்தானே மதக்கோட்பாடுகள உருவாக்கியிருப்பினம். பிறகு ஒவ்வொரு காலத்திலயும் அந்தந்த கால வாழ்வியல் அனுபவங்்களுக்கூடா ஒரு குறிப்பிட்ட சிலரால் தங்கட நலத்துக்கேற்ற வகைல மேலதிகமா சில விசயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பிறகு மதத்தில நல்லதத்தான் சொல்லியிருக்கு மனுசர்தான் தேவையில்லாததுகள திணிச்சதெண்டுகொண்டு. மனுசன் திணிச்சதெண்டா மதத்த யாரு உருவாக்கினது????????????? மிருகமா?

சட்டங்கள உருவாக்கினது மனுசன். சட்டத்த மீறுறதும் மனுசன். அந்த சட்டத்த தேவைக்கேற்ப மாற்றியமைக்கிறவனும் மனுசன். ஆதிக்கத்தில இருக்குிறவன் சட்டங்கள இயற்றுறான். மற்றவன் அடங்கிப்போறான். இதானே காலகாலத்துக்கும் நடக்குது.

சும்மா மதம் நல்லதத் தான் சொல்லுது எண்டுறது வெறும் விதண்டாவாதம் தான். மதம் எண்டுறத தனியா பார்க்கமுடியாது. அது இறைநம்பிக்கை என்ற அடிப்படையில தான் கட்டப்பட்டிருக்கு. உண்மைல இங்க இந்துமதம் எண்டு சொல்லுறவை இலங்கைல இந்துமதம் எண்ட சொல் எப்பவில இருந்து பாவிக்கப்படுது எண்டு தேடுங்கோ. தங்கட மதம் என்னெண்டு தெரியாதவை இந்துமதம் எண்டுற இல்லாத மதத்த தங்கட மதம் எண்டுகினம். என்ன கொடுமை முருகா :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாலை, சூரவத்தை பகுதியில் இருந்த களவாடை அம்மன் என்று அழைக்கப்படுபவரும் இவர் தானா?.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இந்த லலிதா என்பவரை அம்மனாக நினைப்பவர்கள், அவரது கணவர் சிறிபாலனை சிவனாக நினைக்கிறார்களா? :lol:

அப்பிடித்தான் நான் கேள்விப்பட்டேன், ஆனால்உண்மையோ தெரியாது. இங்கை நிண்டு ஒருத்தர் டென்மார்க்குக்கு போனபோது அவாவிடமும் போனதாக ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அதில் அப்படி ஏதோ இருந்தமாதிரி ஞாபகம்... சரியா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா விஞ்ஞானத்தின்ர பிரதிநிதி சொல்லுறார் எல்லாரும் கேளுங்கோ. :lol:

மதம் அத சொன்னது இத சொன்னது எண்டுகொண்டு ஒரே பல்லவிய எத்தின காலத்துக்கு பாடபோறியள். எந்தத் தலைப்பில போனாலும் இந்தத் தலையிடிதான்.

மதம் எண்டது தானா மேல இருந்து குதிச்சு வந்திதா? அது மனுசனாலதானே உருவாக்கப்பட்டது. பிறகென்ன மனுசன் உருவாக்கினது எண்டேக்க அது குறிப்பிட் ஒருசிலரால தானே உருவாக்கப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட சிலர் யார்? அவை தங்கட அனுபவங்கள அடிப்படையா வச்சுத்தானு.... தங்கட நலன்கள அடிப்படையா வச்சுத்தானே மதக்கோட்பாடுகள உருவாக்கியிருப்பினம். பிறகு ஒவ்வொரு காலத்திலயும் அந்தந்த கால வாழ்வியல் அனுபவங்்களுக்கூடா ஒரு குறிப்பிட்ட சிலரால் தங்கட நலத்துக்கேற்ற வகைல மேலதிகமா சில விசயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பிறகு மதத்தில நல்லதத்தான் சொல்லியிருக்கு மனுசர்தான் தேவையில்லாததுகள திணிச்சதெண்டுகொண்டு. மனுசன் திணிச்சதெண்டா மதத்த யாரு உருவாக்கினது????????????? மிருகமா?

சட்டங்கள உருவாக்கினது மனுசன். சட்டத்த மீறுறதும் மனுசன். அந்த சட்டத்த தேவைக்கேற்ப மாற்றியமைக்கிறவனும் மனுசன். ஆதிக்கத்தில இருக்குிறவன் சட்டங்கள இயற்றுறான். மற்றவன் அடங்கிப்போறான். இதானே காலகாலத்துக்கும் நடக்குது.

சும்மா மதம் நல்லதத் தான் சொல்லுது எண்டுறது வெறும் விதண்டாவாதம் தான். மதம் எண்டுறத தனியா பார்க்கமுடியாது. அது இறைநம்பிக்கை என்ற அடிப்படையில தான் கட்டப்பட்டிருக்கு. உண்மைல இங்க இந்துமதம் எண்டு சொல்லுறவை இலங்கைல இந்துமதம் எண்ட சொல் எப்பவில இருந்து பாவிக்கப்படுது எண்டு தேடுங்கோ. தங்கட மதம் என்னெண்டு தெரியாதவை இந்துமதம் எண்டுற இல்லாத மதத்த தங்கட மதம் எண்டுகினம். என்ன கொடுமை முருகா :D

விஞ்ஞானத்தை நிறுவுபவன் எப்படி விஞ்ஞானி ஆனானோ.. அப்படியே மெஞ்ஞானத்தால் மதத்தை நிறுவியவன் மெஞ்ஞானி. மனிதர்கள் எல்லாம் விஞ்ஞானியும் அல்ல.. மெஞ்ஞானியும் அல்ல. மதம் தவறு செய்யச் சொல்லேல்ல. மதம் மெய்யியல் அடிப்படையில் மனித இருப்பை.. வலியுறுத்த.. மனிதனில் மெஞ்ஞான அறிவற்றவர்களின் செயலே அவனை தவறான வழியில் கொண்டு செல்கிறது.

சுகன்

தீண்டாமை.. தொடங்கி..எதுவும்.. மதம் போதித்ததல்ல. ஒரு வேளை தீண்டதகாத அளவில் அழுக்கோடு இருந்திருப்பாங்க.. அதுதான் தீண்டாமை வந்ததோ..??!

உங்களிடம் ஒரு கேள்வி.. இந்தியாவில் உள்ள குப்பங்களில் வாழும் மக்களின் நிலையை கண்டிருக்கிறீர்களா..??! அவர்கள் உலகால் தீண்டப்படாமலே (பொருளாதார ரீதியில்) வாழ்கின்றனரே. அதைப்பற்றிக் கவலைப் பட்டிருக்கிறீர்களா.. படமாட்டீர்கள்.. எவனே பூணூலைப் போட்டுக் கொண்டு.. அதுதான் மதம் என்று சொல்லி.. தீண்டாத.. உள்ள வராத என்பதை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அலையுறதுக்கு முன்னுக்கு நில்லுங்கோ..??! அவற்றை கவனத்தில் எடுக்காமல் புறக்கணிச்சிட்டு உங்கட வேலையைப் பார்த்திட்டு.. இப்படிப் பொருளாதார ரீதியில் தீண்டப்படாமலே உள்ள மக்களின் நிலையை தீண்டத்தகும் நிலைக்கு உயர்த்த முன்வவாருங்கோ.. அப்ப எல்லாத் தீண்டாமைகளும் தானே ஒழியும். அதை விட்டிட்டு.. தீண்டாமை ஒழிக்கிறன் என்று கறுப்புச் சட்டையைப் போட்டிட்டு மேடை வழில பேசி.. அரசியல் நடத்துறதால.. அப்பாவி மக்களின் தீண்டாமைகள் ஒழியப் போறதில்ல. ஆனால் விவாதம் நடத்த பொருள் கிடைக்கும். அரசியல் நடத்த இடம் கிடைக்கும்.. அதில காசு பார்க்க பெரிய மனிசர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்..! :angry:

நான் சிறுவனாக இருந்த போது தேவாலயத்துக்கும் செல்வேன்.. நல்லூருக்கும் செல்வேன். தேவாலயத்துள் சேட் போட்டிட்டுச் செல்ல விடுவார்கள். நல்லூருக்க விடமாட்டார்கள். ஒரு முறை சேட்டுடன் செல்ல ஒரு வயதானவர் வந்து சேட்டைக் கழற்று என்றார். ஏன் தேவாலயத்துக்குள்ள சேட் போடலாம்.. ஏன் இங்க போடக் கூடாது... என்று சொல்ல.. அது அப்படித்தான் என்றார். அது அப்படின்னா.. நான் இப்படித்தான் என்று விட்டு போனேன். அவர் அப்புறம் கண்டுக்கிறதே இல்ல. அப்புறம் சேட் போட்டே உள்ளே செல்வேன். இன்றும் கூட அதையேதான் செய்கிறேன். எவரும் கேள்வி கேட்டதில்ல...!

மதம் சொல்லேல்ல.. சேட்டைக் கழற்று என்று. தூய்மையான உடையணிந்து அடுத்தவை கோயிலில் மன ஒருநிலைப்படுத்துவதை குழப்பம் விளைவிக்காத வகையில் நடந்து கொண்டால்.. இது ஒரு விடயமே அல்ல.

சில மனிதர்கள் அருகில் போனதுமே கெட்ட வாடை வீசும். அப்படியான மனிதர்களை நீங்கள் தான் தீண்டுவீர்களா..! மீன் கடையில வேலை செய்யுறவரை கோயிலுக்க விட்டால் என்ன வாடை வீசும்.. கோயில் என்பது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய அமைக்கப்பட்ட ஒரு இடம். அங்க போய்.. மீன் வாடையோட நின்றால்.. இல்ல சாராய வாடையோட நின்றால்... அடுத்தவைக்கு தொந்தரவில்லா. ஒரு வேளை தீண்டாமை என்பது இப்படியான அசிங்கமா அடுத்தவனுக்கு டிஸ்ரப் பண்ணுறதா இருக்காதேங்க... என்று சொல்லுறதா இருக்கலாம்.

தீண்டாமை இன்று உலகில் பல்வேறு வடிவங்களில் நிலைத்திருக்க..நீங்கள் இன்னும்.. வர்க்க பேத நிலையில் அதற்கு பார்ப்பர்னிய.. வடிவத்துள் விளக்கம் அளித்து மதத்தோடு முட்டி மோதிக் கொண்டு காலம் தள்ளிட்டு இருக்கிறீர்கள்.

ஆபிரிக்காவில் 80 இலட்சம் பிள்ளைகள். எயிட்ஸ் மற்றும் பசியால் உலகில் தீண்டப்படாத ஜீவன் களாக வாழ்கின்றனர். அதைப் பற்றிய கவலை எதுவும் உங்களுக்க வந்திருக்கா..??! மதம் என்பதன் கோட்பாடுகளை தவறாக விளங்கிக் கொண்டு மனிதர்கள் இயற்றி உள்ள தீண்டாமைகளை அகற்றுவது இலகு.. வன்னியில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி தீண்டாமையை செய்யும் சிங்கள அரசுக்கு எதிராக போர் தொடுக்கத்தான் ஆளில்லை. எல்லோரும் ஐரோப்பாவுக்கு ஓடி வந்து வெள்ளைக்காரனிடம் தீண்டாமையை அனுபவிச்சிட்டு இருக்கினம்..!

இப்படி தீண்டாமைக்கு.. பல நிலைகள் இருக்கு மிஸ்டர் சுகன்..! எல்லாத் தீண்டாமைகளையும் உலகில் இருந்து அகற்றனும். வெறும்.. பார்பர்னியம்.. பிராமணம்.. தான் தீண்டாமையை செய்யுது என்ற குறுகிய வட்டத்தை.. விட்டு வெளில வாங்க. அது ஒரு யு யு பி தீண்டாமை..! :D

Edited by nedukkalapoovan

ஒய் சின்னா சுவிசிலை பேண் நகரிலை தான் அந்த அம்மனுக்கு ஒரு கிளை திறந்திருக்கினம் என்ரை கட்டுரை வெளி வந்தபோது சம்பத்த பட்டவையும் என்னோடை தொலை பேசியடிச்சு கதைச்சவை அந்த அம்மணியும் ஏழாலையை சேந்தவா தான் தேவை பட்டா மிச்ச விபரம் தாறன் :P அடுத்ததாக இங்கு கடவுள் மனிதரா அவதாரம் எடுத்தாரா அல்லது மனிதரா கடவுள் அவதாரம் எடுத்தாரா என்னபதல்ல பிரச்சனை அந்த லலிதா அதாவது அபிராமி ஒரு போலி பெண் சாமி என்பதை என்னால் நிருபிக்க முடியும் காரணம் அவரை எனக்கு ஏழாலையில் அவர் ஆட தொடங்கிய காலத்தில் இருந்தே தெரியும் அது மட்டுமல்ல சிறி பாலனையும் தான் :lol::lol: கட்டுரை சம்பந்தமாக என்னை பழி வாங்க போவதாக சொல்லியே இரண்டு வருசமாகிது நான் இன்னமும் உயிரோடைதான் இருக்கிறன் இது வேறை தொல்லை <_<<_<

:lol::lol::lol::lol::lol:

கணவர்தான் பூசகர்.

இப்பதான் எனக்கு சாத்திரியின் அவலம் முழுவதுமாக விளங்கியது :P எனக்கு விளக்கிய கிஸானுக்கு நன்றி <_<

தீண்டாமை.. தொடங்கி..எதுவும்.. மதம் போதித்ததல்ல. ஒரு வேளை தீண்டதகாத அளவில் அழுக்கோடு இருந்திருப்பாங்க.. அதுதான் தீண்டாமை வந்ததோ..??!- நெடுக்காலபோவான்

------------------------------------------------------------------------------------------------

மனுதர்மம் வருணாசிரம கோட்பாடுகள் எல்லாம் இந்து மதத்துக்குள் தான் உள்ளது தவிர வெளியில் இல்லை. இந்து மதம் போதிக்கும் கடவுள் பிரம்மாவின் படைப்பாக சித்தரித்து நடைமுறைப்படுத்தப்படுகின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.