Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில்... வட்டமிடும், சீன கப்பல்: அனுமதிக்காக... காத்திருப்பு !

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ள போதிலும் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்காது என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 மைல் தூரத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்காக அனுமதியை அவர்கள் கோரவில்லை என துறைமுக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சிக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது,

எனினும் இந்த முடிவை மாற்றியமைக்கும் வரை அந்த கப்பல் அங்கேயே வட்டமிடும் என இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டன.

எவ்வாறாயினும் இராஜதந்திர ரீதியில் எபிச்சுவார்தைகளை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்பிற்கு சீன தூதரகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

https://athavannews.com/2022/1294438

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அனுமதி கேக்க வேணும்.😆

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லக் சொல்லக்கேட்காமல் அமெரிக்க சபாநாயகர் தாய்வானுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன விமானங்கள் தாய்வான் எல்லைக்குள் பறந்ததும் ,தாய்வன் எல்லையோரங்களில் சீனக்கடற்படை உயிர்க்குண்டுகளைப் பாவித்து பயிற்சிகளில் ஈடுபட்டுப்மிரட்டியதைப் போல அதே விளையாட்டை இந்தியா காட்டப் போகின்றது.இண்டியா! வெயிற்றிங்!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஏன் அனுமதி கேக்க வேணும்.😆

ஒரு மரியாதைக்காக 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஏன் அனுமதி கேக்க வேணும்.😆

அதானே அவங்க நாடுதானே இது🤭🤭

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்..... வட்டிகாசை வரக்காட்டும். இல்லாட்டி உள்ள வரப்போறன்.... உந்த சேட்டையெல்லாம் இந்தியாவோட இருக்கட்டும்.

உள்ள வந்தா, வட்டியும், முதலும் வாங்காம நகரன்..... சொல்லியாச்சு....🤬

  • கருத்துக்கள உறவுகள்

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

  பெரியவரே! ஒருவரை சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 

சிறந்த நாடுகளில் எப்படி நடை பெறுகிறதோ அதற்கு எதிர்மாறாக செயல்படுவதை வைத்து கணிப்பிடலாம்.
உதாரணத்திற்கு யேர்மனியை எடுத்தால் மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சிகள் பல பாராளுமன்றத்தில் உள்ளன. திரு Scholz எப்படி அந்த நாட்டின் தலைவர் ஆனார் என்பதையும், சீனாவில் ஒரே ஒரு கட்சி கம்யுனிஸ்ட் கட்சி அந்த கட்சி அடக்கி ஒடுக்கி மேய்பதற்காக  அங்கே வாழ்பவர்கள்  சீன மக்கள். அந்த கட்சிக்கு சகலதுமாக நிரந்திர தவைனாக சீ ஜின்பிங் இருப்பதையும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,கனடா,இந்தியா,ஜேர்மனி,அவுஸ்ரேலியா போன்ற   சனநாயக  நாடுகளில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கின்றது. புதியவர்கள் வருகின்றார்கள். ஆனால் ஒரே உள்ளாட்டு கொள்கை. ஒரே வெளிநாட்டு கொள்கை.  இதுதான் சீனாவிலும் ரஷ்யாவிலும் நடக்கின்றது..    மேற்குலக தேர்தல் பிரச்சாரங்களில் மட்டும் வெவ்வேறு கொள்கை கொண்டவர்கள் போல் தெரியும். மற்றும் படி ஆட்சிக்கு வந்தபின்  எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

சீனா கம்யூனிச/சர்வாதிகார ஆட்சி என்றாலும் அதன் வளர்ச்சி மிக மிகப் பெரியது.இன்று முழு உலகிலுமே அவர்கள் தயாரிப்புகள் இல்லாத நாடுகளே இல்லை எனலாம்.தொழில் நுட்ப வளர்ச்சியில் அவர்களும் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.இவையெல்லாம் ஒரு தலைமையின் கீழ் மூலமே சாத்தியம்.

👉சீனா சர்வாதிகார ஆட்சி போல் தோன்றினாலும் பொருளாதாரத்தில் தாராளமயமாகவே நடந்து கொள்கின்றது. உலகில் ஒரு சில இன மக்கள் உள்ள நாடுகளுக்கு சட்டங்கள்,திட்டங்கள்,பொருளாதாரத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க சர்வாதிகாரம் போன்ற அரசியலும் அதற்கேற்ற ஒரு தலைமையும் அவசியம் தேவை.👈

ஜேர்மனியில் யுத்தத்தின் பின்னரான ஆட்சிக்காலங்களில்  சில தலைவர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களாகவே இருந்துள்ளனர். அவர்கள் காலத்திலேயே நாடு அதிக பட்சமாக முன்னேறியது. ஏனைய தலைவர்கள் கட்டி முடித்த வீட்டை பராமரிப்பவர்கள் போல் நாட்டை ஆட்சி செய்தார்கள் / செய்கின்றார்கள்.

மேற்குலக நாடுகள் தங்களுக்குள் கட்டிப்பிடித்து ஒற்றுமை என படம் காட்டினாலும்  பல்லாயிரம் கருத்து வேறுபாடுகளுடனேயே வண்டியை ஓட்டுகின்றார்கள்.

பெருமதிப்புக்குரிய சிரிலங்காவும் ஜனநாயக நாடுதான்.கிரமமாக தேர்தலும் நடக்குதுதான். ஆனால் கொள்கையில் ஒரு துளி மாற்றமுமில்லை. அதுவும் கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

  பெரியவரே! ஒருவரை சர்வாதிகாரி என எந்த அடிப்படையில் வைத்து  கணிக்க முடியும்? 😎

மிக சுலபமாக கண்டு பிடிக்கும் வழி:

1. ஈழத்தமிழன் எங்கே சுயவிருப்பில் ஓடிப்போய், செட்டில் ஆகி, கோவில் கட்டி, வியாபாரம், கல்வி, தொழில் என சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறானோ அவை ஜனநாயக நாடுகள் (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, யூகே, ஈயூ, நோர்வே, சுவிஸ், சிங்கப்பூர்)

2. அதே ஈழத்தமிழன் எங்கே படிக்க, வேலைக்கு என்று போனாலும் கூட, வந்த வேலை முடிந்ததும் நாட்டை விட்டு எஸ் ஆகிறானோ அவை சர்வாதிகார அல்லது குறை-ஜனநாயக நாடுகள் (ரஸ்யா, இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா).

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இல்லை. வெளியுறவு கொள்கை ஒரே மாதிரியாக இருந்தாலும். உள்நாட்டு, பொருளாதார கொள்கைகள் பல சமயங்களில் 180 பாகை எதிராகவே இருக்கும்.

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஆகவே மக்களுக்கு எல்லா விதமான கொள்கைகள் உள்ள கட்சிகளையும் தேரும் “தெரிவு” இங்கே இருக்கிறது. மக்கள் இவற்றை தவிர்த்து, அரசியலில் மத்தியமாக இருக்கும் வலது-மத்தி, இடது-மத்தி (centre-right, centre-left) கட்சிகளை மாறி, மாறி தேரக்காரணம் - மக்களின் அரசியல் நிலைப்பாடு மத்தியமாக (centrist) இருப்பதே.

ஆனால் எப்போதும் இப்படி இராது, நாட்டின் பிரதமர், பெரும்பாலான ஆளும் கட்சி எம்பிகள், எதிர்கட்சி தலைவர், எதிர்கட்சி எம்பிகள் அநேகர், மூன்றாவது, நான்காவது கட்சியினர் சகலரும் எதிர்த்த போதும் யூகே யில் மக்கள் பிரெக்சிற்றை ஆதரித்து வாக்கு போட்டார்கள். அதை நடைமுறைபடுத்தவும் வேண்டி இருந்தது.

சிரிப்பு காட்டாமல் சொல்லுங்கள்:

பிரெக்சிற், ஸ்கொட்லாந்து, கியூபெக் பிரியும் வாக்கெடுப்பு போல, ரஸ்யா செச்னியாவிலோ, அல்லது சீனா தாய்வானிலோ நடத்த முன் வருமா?

எதிர்கட்சி தலைவரை நஞ்சூட்டும் நாடு ரஸ்யா. அலிபாபா அதிபர் ஜக்மா கொஞ்சம் மெல்லிதாக விமர்சித்த படியால் ஆளை காணாமல் ஆக்கிய நாடு சீனா.

இந்த நாடுகளில் நடப்பதும், மேற்கில் நடப்பதும் (கவனிக்க வெளியுறவு கொள்கையில் அல்ல) ஒன்றே என்று எழுதுபவர்கள்;

ஒன்றில்

1. கண் முன்னால் நடப்பதை கூட உய்துணர முடியாது உள்ளார்கள்.

அல்லது

2. நெஞ்சார பொய் கற்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கொரானாவுக்கு முதல் என்று நினைக்கிறேன் சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டில் வைத்து பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து  இந்தியா வரவேற்றது.

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இல்லை. வெளியுறவு கொள்கை ஒரே மாதிரியாக இருந்தாலும். உள்நாட்டு, பொருளாதார கொள்கைகள் பல சமயங்களில் 180 பாகை எதிராகவே இருக்கும்.

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஆகவே மக்களுக்கு எல்லா விதமான கொள்கைகள் உள்ள கட்சிகளையும் தேரும் “தெரிவு” இங்கே இருக்கிறது. மக்கள் இவற்றை தவிர்த்து, அரசியலில் மத்தியமாக இருக்கும் வலது-மத்தி, இடது-மத்தி (centre-right, centre-left) கட்சிகளை மாறி, மாறி தேரக்காரணம் - மக்களின் அரசியல் நிலைப்பாடு மத்தியமாக (centrist) இருப்பதே.

ஆனால் எப்போதும் இப்படி இராது, நாட்டின் பிரதமர், பெரும்பாலான ஆளும் கட்சி எம்பிகள், எதிர்கட்சி தலைவர், எதிர்கட்சி எம்பிகள் அநேகர், மூன்றாவது, நான்காவது கட்சியினர் சகலரும் எதிர்த்த போதும் யூகே யில் மக்கள் பிரெக்சிற்றை ஆதரித்து வாக்கு போட்டார்கள். அதை நடைமுறைபடுத்தவும் வேண்டி இருந்தது.

சிரிப்பு காட்டாமல் சொல்லுங்கள்:

பிரெக்சிற், ஸ்கொட்லாந்து, கியூபெக் பிரியும் வாக்கெடுப்பு போல, ரஸ்யா செச்னியாவிலோ, அல்லது சீனா தாய்வானிலோ நடத்த முன் வருமா?

எதிர்கட்சி தலைவரை நஞ்சூட்டும் நாடு ரஸ்யா. அலிபாபா அதிபர் ஜக்மா கொஞ்சம் மெல்லிதாக விமர்சித்த படியால் ஆளை காணாமல் ஆக்கிய நாடு சீனா.

இந்த நாடுகளில் நடப்பதும், மேற்கில் நடப்பதும் (கவனிக்க வெளியுறவு கொள்கையில் அல்ல) ஒன்றே என்று எழுதுபவர்கள்;

ஒன்றில்

1. கண் முன்னால் நடப்பதை கூட உய்துணர முடியாது உள்ளார்கள்.

அல்லது

2. நெஞ்சார பொய் கற்கிறார்கள்

எந்த சிந்தனைமுறைகளும் உயர்ந்தவையோ தாழ்ந்தவையோ / நிரந்தரமானவையோ அல்ல. 

யுத்தங்கள் என்பது சித்தாங்களின் மோதல் என கூறுபவர்களும் உள்ளனர். 

நடைமுறையில் கடந்த 30 ஆண்டுகளில் சீனா 600 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளத. ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் எட்டாக்கனிதான. 

இவையெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல,  ஆனாலும்  விதண்டாவாதத்திற்கு மல்லுக்கட்டுவீர்கள். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சர்வாதிகாரி ? 

கண்ணிருந்தும் குருடர் 🤦🏼‍♂️

உங்கள் பார்வையில் ஒற்றை கட்சி ஆட்சியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவால் மட்டுமே தெரிவு செய்யபட்ட தலைவரை எப்படி அழைப்பீர்கள்? ஜனநாயகவாதி என்றா?

சர்வாதிகாரி என்றால் ஒரு நாட்டின் மீது பூரண அதிகாரம் செலுத்தும் ஒருவர்.

சீனாவில் உண்மையில் அதிபர் பதவி என்பது சம்பிராயபூர்வமானதே. உண்மையில் அதிகாரம் உள்ள பதவியின் பெயர் paramount leader, அல்லது supreme leader, சீனத்தில் 最高领导人. 

இதன் தமிழ் அர்த்தம் சர்வ அதிகாரம் உடையவர் என கொள்ளலாம் என நினைக்கிறேன். 

最高领导人 பதவியில் இருப்பவர்தான் பெரும்பாலும் (தற்போதும்) சீன அரசின், சீன மக்கள் இராணுவத்தின், சீன அரசாங்கத்தின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயளாலராக, சீன இராணுவ ஆணையகத்தின் தலைவராகவும் இருப்பார்கள்.

இவை எல்லாம் ஏனைய சீன அதிபர்களுக்கும் பொருந்தினாலும். இத்தனை முறைதான் ஜனாதிபதியாகலாம் என்ற கோட்பாட்டை தனக்காக மாற்றி அமைத்து அனைவரிலும் விட அதிக சர்வாதிகாரியாக துலங்குகிறார் Xi.

நீடித்து பதவியில் இருக்க முனைவது ஒரு சர்வாதிகாரிக்குரிய அடிப்படை இயல்பு. புட்டின், முகாபே, ஸ்டாலின், மகிந்த, சந்திரிகா, ஜே ஆர் இப்படி இதை செய்பவர்கள் எல்லாரையும் பார்த்தாலே இது புரியும்.

மறுவளமாக, வாசிங்டன், மண்டேலா, காந்தி என பதவிக்குரிய காலத்தை மட்டும் அல்லது பதவியையே விலத்தி நடந்தவர்களும் உண்டு.

அமெரிக்காவில் கூட முதலில் இரு தரம் மட்டும்தான் என்பது ஒரு கனவான் ஒப்பந்தமாகவே இருந்தது ரூசவேல்ட் என நினைக்கிறேன் அதை மீறிய பின், அரசியல் சட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

எந்த சிந்தனைமுறைகளும் உயர்ந்தவையோ தாழ்ந்தவையோ / நிரந்தரமானவையோ அல்ல. 

யுத்தங்கள் என்பது சித்தாங்களின் மோதல் என கூறுபவர்களும் உள்ளனர். 

நடைமுறையில் கடந்த 30 ஆண்டுகளில் சீனா 600 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளத. ஆனால் இந்தியாவில் வறுமை ஒழிப்பு என்பது இன்னமும் எட்டாக்கனிதான. 

இவையெல்லாம் உங்களுக்கு தெரியாததல்ல,  ஆனாலும்  விதண்டாவாதத்திற்கு மல்லுக்கட்டுவீர்கள். 

🤣

அப்படி என்றால் ஆண்டான் அடிமை முறையும், வர்ணாசிரமும் கூட சிந்தனைகள்தானே? அவையும் சித்தாந்தங்கள் தானே?

அவையும் குறைந்தவை இல்லை என்பீர்களா?

இதுவரை அறியப்பட்ட வேறு எந்த சித்தாந்ததுடனும் ஒப்பிடும் போது தேர்தல் ஜனநாயக முறை மிக முன்னேற்றகரமானது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

அதற்காக அது சிறப்பானது என்பதல்ல. எல்லா நாடுகளும் சமூக கூர்ப்பில் அதற்கு தயாராகவும் இல்லை (ஆப்கானிஸ்தான்). ஆனால் உள்ளதில் நல்லது. not a perfect system but better than the rest.

இந்தியாவில் வறுமை இருக்கலாம் ஆனால் சீனாவை விட பல சுதப்திரங்கள் அங்கே ஒப்பீட்டளவில் உண்டு. தவிரவும் சீனாவின் வறுமை ஒழிப்பு என்பது வலுகட்டாயமாக ஒரு பிள்ளை பெறு எண்டு ஏற்படுத்தப்பட்டது.

அத்தோடு இந்தியா ஊழல் மிகுந்த ஒரு குறை ஜனநாயக நாடு.

நீங்கள் வறுமை ஒழிப்பை ஒப்பிடுவதாயின் சீனாவுடன் சிங்கபூரை அல்லது தென் கொரியாவை ஒப்பிட வேண்டும். 

இதில் எனக்கு கிஞ்சித்தும் ஐயம் இல்லை. வாதத்துக்காக இல்லை. பல தவறுகள் இருந்தாலும், ஜனநாயகத்துக்கு ஈடான மாற்று கண்டுபிடிக்கபடும் வரை - இதுவே உள்ளதில் சிறந்தது.

சோழர் காலத்து குடவோலை தொட்டு இதில் எமது பங்கும் உண்டு, இது தனியே ஐரோப்பிய  முதுசமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உங்கள் பார்வையில் ஒற்றை கட்சி ஆட்சியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவால் மட்டுமே தெரிவு செய்யபட்ட தலைவரை எப்படி அழைப்பீர்கள்? ஜனநாயகவாதி என்றா?

சர்வாதிகாரி என்றால் ஒரு நாட்டின் மீது பூரண அதிகாரம் செலுத்தும் ஒருவர்.

சீனாவில் உண்மையில் அதிபர் பதவி என்பது சம்பிராயபூர்வமானதே. உண்மையில் அதிகாரம் உள்ள பதவியின் பெயர் paramount leader, அல்லது supreme leader, சீனத்தில் 最高领导人. 

இதன் தமிழ் அர்த்தம் சர்வ அதிகாரம் உடையவர் என கொள்ளலாம் என நினைக்கிறேன். 

最高领导人 பதவியில் இருப்பவர்தான் பெரும்பாலும் (தற்போதும்) சீன அரசின், சீன மக்கள் இராணுவத்தின், சீன அரசாங்கத்தின், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயளாலராக, சீன இராணுவ ஆணையகத்தின் தலைவராகவும் இருப்பார்கள்.

இவை எல்லாம் ஏனைய சீன அதிபர்களுக்கும் பொருந்தினாலும். இத்தனை முறைதான் ஜனாதிபதியாகலாம் என்ற கோட்பாட்டை தனக்காக மாற்றி அமைத்து அனைவரிலும் விட அதிக சர்வாதிகாரியாக துலங்குகிறார் Xi.

நீடித்து பதவியில் இருக்க முனைவது ஒரு சர்வாதிகாரிக்குரிய அடிப்படை இயல்பு. புட்டின், முகாபே, ஸ்டாலின், மகிந்த, சந்திரிகா, ஜே ஆர் இப்படி இதை செய்பவர்கள் எல்லாரையும் பார்த்தாலே இது புரியும்.

மறுவளமாக, வாசிங்டன், மண்டேலா, காந்தி என பதவிக்குரிய காலத்தை மட்டும் அல்லது பதவியையே விலத்தி நடந்தவர்களும் உண்டு.

அமெரிக்காவில் கூட முதலில் இரு தரம் மட்டும்தான் என்பது ஒரு கனவான் ஒப்பந்தமாகவே இருந்தது ரூசவேல்ட் என நினைக்கிறேன் அதை மீறிய பின், அரசியல் சட்டம் இவ்வாறு மாற்றப்பட்டது.

 சர்வாதிகாரி என்பதற்கு விளங்க நினைப்பவர் கொடுக்கும் வலு/நிறை க்கும்,  நீங்கள் கூறும் விளக்க சர்வாதிகாரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

மிக சுலபமாக கண்டு பிடிக்கும் வழி:

1. ஈழத்தமிழன் எங்கே சுயவிருப்பில் ஓடிப்போய், செட்டில் ஆகி, கோவில் கட்டி, வியாபாரம், கல்வி, தொழில் என சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கிறானோ அவை ஜனநாயக நாடுகள் (அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, யூகே, ஈயூ, நோர்வே, சுவிஸ், சிங்கப்பூர்)

அது பொருளாதார அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது ஜனநாயகம் சம்பந்தப்பட்டது அல்ல. இங்கே வந்த குறுந்தலைப்பு சர்வாதிகாரியை எப்படி கண்டு பிடிப்பது?

10 hours ago, goshan_che said:

2. அதே ஈழத்தமிழன் எங்கே படிக்க, வேலைக்கு என்று போனாலும் கூட, வந்த வேலை முடிந்ததும் நாட்டை விட்டு எஸ் ஆகிறானோ அவை சர்வாதிகார அல்லது குறை-ஜனநாயக நாடுகள் (ரஸ்யா, இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், நைஜீரியா).

ஈழத்தமிழன் உலகெங்கும் பரவியிருக்கின்றான். அவையெல்லாம் மேற்குலக சார்பு நாடுகளல்ல. அப்பம் என்றால் அதை இனி பிரித்தெல்லாம் காட்ட முடியாது.

9 hours ago, goshan_che said:

2019 யூகே தேர்தலில் ஜோன்சனும், கோபினும் எதிரும் புதிருமான கொள்கைகளை முன் வைத்தனர். ஆகவே கோபின் வென்று இருந்தால் அது (வெளியுறவு கொள்கை தவிர) தெரேசா மேயின் அரசில் இருந்து முற்றிலும் வேறு பட்ட கொள்கையுடைய அரசையே தந்திருக்கும்.

மன்னிக்கவும்..... கோபின் வந்திருந்தால் அதன் நன்மைகள் பற்றி  அடியேனுக்கு சிறு விளக்கம் வேண்டும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, goshan_che said:

அதே போல் இரு பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலை இருந்தாலும், உதிரியாய் இருக்கும் ஜேர்மனியின் AfD, பிரான்சின் புரண்ட் நேஷனல் போன்ற கட்சிகள் பலத்த வேறுபாடுடைய கொள்கைகளையே கொண்டிருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் வரை எந்த நாஷி கட்சியும் எதையும் புதிதாக வெட்டி புடுங்க முடியாது. எல்லாவற்றுக்கும் வரையறை சட்டங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

நீங்கள் வறுமை ஒழிப்பை ஒப்பிடுவதாயின் சீனாவுடன் சிங்கபூரை அல்லது தென் கொரியாவை ஒப்பிட வேண்டும். 

சிங்கப்பூரும்,தென்கொரியாவும் ஒரு வளர்ச்சியை எட்டும் வரை சர்வாதிகார ஆட்சி போலவே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 சர்வாதிகாரி என்பதற்கு விளங்க நினைப்பவர் கொடுக்கும் வலு/நிறை க்கும்,  நீங்கள் கூறும் விளக்க சர்வாதிகாரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

சர்வாதிகாரி (dictator) என்பதற்கான ஏற்று கொள்ளபட்ட அர்தத்தை நான் மேலே கொடுத்துள்ளேன்.

அதை விளங்க நினைப்பவன் என்ன அர்தத்தில் கொடுத்தார் என்பதை நீங்கள் என்ன அர்த்தத்தில் விளங்கி கொண்டீர்கள் என்பதை நான் அறிய முடியாதுதானே.

ஆனால் சர்வாதிகாரி என்றால் உலகெங்கும் ஒரே அர்த்தம்தான்.

1 hour ago, குமாரசாமி said:

அது பொருளாதார அகதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது ஜனநாயகம் சம்பந்தப்பட்டது அல்ல. இங்கே வந்த குறுந்தலைப்பு சர்வாதிகாரியை எப்படி கண்டு பிடிப்பது?

பொருளாதார அகதிகள் ஏன் குவைத், கட்டார், சவுதி, டுபாய் போன்ற இதர செல்வம் கொழிக்கும் நாடுகளை தவிர்கிறார்கள்?

நீங்களே சொன்னபடி எல்லா வளமும் உள்ளேயே இருக்கும் நாடு ரஸ்யா அதை ஏன் தவிர்கிறார்கள்.

இங்கேதான் இருக்கிறது ஜனநாயகத்தின் சூட்சுமம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழன் உலகெங்கும் பரவியிருக்கின்றான். அவையெல்லாம் மேற்குலக சார்பு நாடுகளல்ல. அப்பம் என்றால் அதை இனி பிரித்தெல்லாம் காட்ட முடியாது.

உகன்டாவிலும், பப்போ நுயுகினியிலும்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கோவில் கட்டி, சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் படி என எழுதினேன்.

இப்படி சீனாவிலும், ரஸ்யாவிலும் இல்லைதானே? அப்போ இப்படி மேற்கில் ஈழத்தமிழன் உயர எது காரணமாகியது?

தனி மனித சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், குறித்த காலத்தின் பின் நிரந்தர வசிக்கும் உரிமை, குடியுரிமை, இந்த நாட்டின் சுதேசிகளுக்கு நிகரான சம வாய்பு இவைதானே?

இவைதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கும், சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதனால்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தான் மட்டும் வந்ததோடு நில்லாமல் தனது கிராமத்தையே இந்த நாடுகளுக்கு கூட்டி வந்து உய்வித்தான்.

ரஸ்யா, சீனா வுக்கு படிக்க போனவர்கள் கூட அங்கே நிலைப்பதில்லை - எப்படியாவது மேற்குக்கு வந்து விடுவார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் மேற்கின் பல்லின, ஒப்பீடளவில் சகிப்புதன்மை, சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயக கட்டமைப்பே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

உகன்டாவிலும், பப்போ நுயுகினியிலும்தான் இருக்கிறார்கள். அதனால்தான் கோவில் கட்டி, சகல துறைகளிலும் கொடி கட்டி பறக்கும் படி என எழுதினேன்.

இப்படி சீனாவிலும், ரஸ்யாவிலும் இல்லைதானே? அப்போ இப்படி மேற்கில் ஈழத்தமிழன் உயர எது காரணமாகியது?

ஒரு இன மக்கள் தொகையினரை வைத்தே கோவில்கள் கட்டப்படும். கடைகள் திற்க்கப்படும். பள்ளிகளும் ஆரம்பிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்கவும்..... கோபின் வந்திருந்தால் அதன் நன்மைகள் பற்றி  அடியேனுக்கு சிறு விளக்கம் வேண்டும்? 

அவரின் தேர்தல் அறிக்கை படி, செல்வந்தர்களுக்கு அதிக வரி, உழைக்கும், நடுதர மக்களுக்கு சலுகைகள், தனியார் மயமான ஏரிசக்தி, நீர், ரயில் துறைகள் மீள அரசமயம். இப்படி பல.

அதாவது மே, ஜோன்சன் இருவரின் உள்நாட்டு கொள்கைக்கும் கிட்டதட்ட நேரெதிர் கொள்கையை கோபின் முன்வைத்தார்.

1 hour ago, குமாரசாமி said:

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் வரை எந்த நாஷி கட்சியும் எதையும் புதிதாக வெட்டி புடுங்க முடியாது. எல்லாவற்றுக்கும் வரையறை சட்டங்கள் உண்டு.

AfD ஜேர்மனியில் தனித்து ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்து விட்டால் - ஜேர்மன் மக்களை Gerxit நோக்கி தள்ள அதிக காலம் எடாது.

5 minutes ago, குமாரசாமி said:

ஒரு இன மக்கள் தொகையினரை வைத்தே கோவில்கள் கட்டப்படும். கடைகள் திற்க்கப்படும். பள்ளிகளும் ஆரம்பிக்கப்படும்.

ஓம் ஆனால் அந்த இடம் நோக்கி மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக  நகர ஏது காரணம்?

நான் மேலே கூறிய ஜனநாயக பண்புகள்தானே?

டுபாய் முழுக்க இந்துக்களால் நிரம்பி வழிகிறது. ஒருக்கால் தேர் இழுத்து பார்ப்போமா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

தனி மனித சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், குறித்த காலத்தின் பின் நிரந்தர வசிக்கும் உரிமை, குடியுரிமை, இந்த நாட்டின் சுதேசிகளுக்கு நிகரான சம வாய்பு இவைதானே?

இவைதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கும், சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் உள்ள வித்தியாசம்.

இதனால்தான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் தான் மட்டும் வந்ததோடு நில்லாமல் தனது கிராமத்தையே இந்த நாடுகளுக்கு கூட்டி வந்து உய்வித்தான்.

ரஸ்யா, சீனா வுக்கு படிக்க போனவர்கள் கூட அங்கே நிலைப்பதில்லை - எப்படியாவது மேற்குக்கு வந்து விடுவார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் மேற்கின் பல்லின, ஒப்பீடளவில் சகிப்புதன்மை, சட்டத்தின் ஆளுமை உள்ள ஜனநாயக கட்டமைப்பே.

அரச உதவியில் மேற்படிப்பிற்காக வந்தவர்களை சீனா,ரஷ்யா போன்ற நாடுகள்  தங்களிடம் வைத்திருப்பதில்லை. படித்த படிப்பை பிறந்த நாட்டுக்கே உதவ வேண்டுமென நினைப்பவர்கள்.

ஆனால் சுரண்டல்வாத மேற்குலகம் திறமையானவர்களை வளைத்துப்போட்டு  படித்தவர்களின் பலாபலன்களை சுலபமாக பெற்றுவிடுவார்கள்.இந்த மேற்குலகம் அன்று நாடு நாடாக சென்று களவெடுத்து பிழைத்தார்கள். இன்றோ வறுமையில் சித்தித்தவிக்கும் நாடுகளில் உள்ள மூளைசாலிகளை களவெடுக்கின்றார்கள்.

5 minutes ago, goshan_che said:

அவரின் தேர்தல் அறிக்கை படி, செல்வந்தர்களுக்கு அதிக வரி, உழைக்கும், நடுதர மக்களுக்கு சலுகைகள், தனியார் மயமான ஏரிசக்தி, நீர், ரயில் துறைகள் மீள அரசமயம். இப்படி பல.

அதாவது மே, ஜோன்சன் இருவரின் உள்நாட்டு கொள்கைக்கும் கிட்டதட்ட நேரெதிர் கொள்கையை கோபின் முன்வைத்தார்.

இதெல்லாம் சமதர்ம நாடுகளுக்குத்தான் சரிவரும். பிரபுத்துவ நாடுகளுக்கு சரிவராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.