Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்!

%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%

பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு.  இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சி சார்பில் பிரதமராக, சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். உலகிலேயே மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு வந்த பெருமை இவருக்கு உண்டு. 

2019ஆம் ஆண்டு பின்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். பதிவியேற்றதிலிருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவருகிறார்.

sanna marin dance party

அப்படித்தான் இப்போது அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு சன்னா மரீன் ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

sanna marin dance party

பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊடகங்களும், எதிர்கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றன.

sanna marin dance party

ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்புணர்வின்றி மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடலாமா என்று ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியினரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடவில்லை என்பதை சன்னா மரீன் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து உறுதிபடுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சன்னா மரீன் அளித்துள்ள விளக்கத்தில், “இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

நான் போதை பொருட்களை எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கான நேரத்தை எனது நண்பர்களுடன் செலவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். 

sanna marin dance party

ஏற்கனவே கொரோன காலகட்டத்தில் சன்னா மரீன்  நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட வீடியோ அப்போது வைரலானது.

எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு பிறகு இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.
 
https://minnambalam.com/prime-minister-sanna-marin-punched-at-a-wine-party/

  • Replies 76
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண குடும்பத் தலைவர்களுக்கே முதிர்ச்சி வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு நாட்டின் அதிப்ருக்கு எவ்வளவு முதிர்ச்சி இருக்க வேண்டும் ? 

அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி தானாகவே எழுகிறது 😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு பிறகு இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருந்தார்

எப்படி பட்ட தலைவர் பின்லாந்து நாடு👍
அவர் என்ன ஊழல் மோசடியா செய்தார்
புரின் செய்கின்ற கொடுமைகள் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால் ரஷ்யவில் என்ன நிலைமை 🥶

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எப்படி பட்ட தலைவர் பின்லாந்து நாடு👍
அவர் என்ன ஊழல் மோசடியா செய்தார்
 
உண்மைதான்

பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூசுத்தனமான நாடுகளாய் கிடக்கு.
தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் எண்டு போட்டு தண்ணியடிக்கக்கூட சுதந்திரமில்லையா? இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் அவ கட்டையாய் மினி ரொக் போட்டதுக்கும் ஏதோ புறு புறுத்தாங்கள்.

உந்த பிக்குமாரும் பாதிரியார்மாரும்  எங்கடை மனிச சாமியளும் கண்ட கண்ட களிசடை வேலையள் செய்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பினமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து போல ஒரு முன்னேறிய நாட்டில் இதை எல்லாம் ஒரு விடயமாக கருதுகிறார்கள் என்பதே வியப்பாக உள்ளது.

எந்த சட்டமும் மீறப்படவில்லை.

இப்படி நாள்பூரா பார்ட்டியில் நிண்டு கூத்தடிச்சு பொறுப்பை சரியாக கவனிக்கவில்லை என்றும் சொல்ல ஆதாரம் இல்லை.

நாடு ஒரு அவசரகால நிலையிலும் இல்லை.

தனது நண்பர்களுடன் பொழுது போக்கியதெல்லாம் ஒரு விடயமா?

எல்லாருக்கும் down time, me time வேண்டும். சிலருக்கு நடை, சிலருக்கு புத்தகம், சிலருக்கு இசை, சிலருக்கு இப்படியான பார்டிகள்.

பிகு

சேர்ச்சில் குடியாத, குடியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

சேர்ச்சில் குடியாத, குடியா

அது தானே  சங்கத்தலைவன் பொறிஸ் ஜெல்சின் குடிக்காத குடியா?😂
அவர் குடிச்சு ஈரல் எரிஞ்சு சாகும் மட்டும் நாடும் உலகமும் நிம்மதியாத்தானே இருந்தது🤣

Best of drunk Boris Yeltsin! on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் பிரதமர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை காணொளி மூலம் உலகுக்கு காட்டுவது எந்த அளவில் சரியானது,பொறுப்பானது. போதைபொருள் பாவித்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

எப்படி பட்ட தலைவர் பின்லாந்து நாடு👍
அவர் என்ன ஊழல் மோசடியா செய்தார்
புரின் செய்கின்ற கொடுமைகள் ஊழல்கள் பற்றி கேள்வி கேட்டால் ரஷ்யவில் என்ன நிலைமை 🥶

நாய்க்கு எங்கே கல்லடிபட்டாலும் காலைத்தான் தூக்கும் என்பதுபோல உள்ளது தங்களின் கருத்து.

முதலில் செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள. அதன் பின்னர் பதிலளிக்கலாம்.  செய்தியை அரை குறையாகப் படித்தால் இப்படித்தான் கருத்துக்கள் வெளிவரும். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அது தானே  சங்கத்தலைவன் பொறிஸ் ஜெல்சின் குடிக்காத குடியா?😂
அவர் குடிச்சு ஈரல் எரிஞ்சு சாகும் மட்டும் நாடும் உலகமும் நிம்மதியாத்தானே இருந்தது🤣

Best of drunk Boris Yeltsin! on Make a GIF

இவர்தான் தெய்வதின்ர தெய்வம் 🤣.

ஒருக்கா அயர்லாந்து ஷனன் ஏர்போர்ட் வந்தார். விமானத்தின் கீழே அந்த நாட்டு பிரதமர் பரிவாரங்கள் வரவேற்க காத்திருந்தார்கள்….

சிங்கன் மணி கணக்கில் இறங்கவே இல்லை. பிறகு துணை பிரதமர் மட்டும் இறங்கி வந்து ஒப்புக்கு பேசி விட்டு போனார்.

ஜனாதிபதிக்கு விரித்த சிவப்பு கம்பளத்தை சுருட்டு பரணில் வைத்தார்கள்🤣.

சிங்கன் விமானத்தில் வரும் வழியில் “ஒவராகி” முட்டை ஆம்லெட் போடும் நிலைக்கு போய் விட்டாராம் என சொல்வார்கள் 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

உண்மைதான்

பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? 

அவர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதல்ல பிரச்சனை. அந்தப் பாட்டியில் பேசப்பட்ட விடயமும் (ஹெரோயின்) அவர் அங்கு இருந்த (3) ஆண்களோடு நடனமாடிய முறையும்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 

(அவர் திருமணமாகி ஒரு பிள்ளைக்கும் தாயாக உள்ளார் )

2 minutes ago, goshan_che said:

இவர்தான் தெய்வதின்ர தெய்வம் 🤣.

ஒருக்கா அயர்லாந்து ஷனன் ஏர்போர்ட் வந்தார். விமானத்தின் கீழே அந்த நாட்டு பிரதமர் பரிவாரங்கள் வரவேற்க காத்திருந்தார்கள்….

சிங்கன் மணி கணக்கில் இறங்கவே இல்லை. பிறகு துணை பிரதமர் மட்டும் இறங்கி வந்து ஒப்புக்கு பேசி விட்டு போனார்.

ஜனாதிபதிக்கு விரித்த சிவப்பு கம்பளத்தை சுருட்டு பரணில் வைத்தார்கள்🤣.

சிங்கன் விமானத்தில் வரும் வழியில் “ஒவராகி” முட்டை ஆம்லெட் போடும் நிலைக்கு போய் விட்டாராம் என சொல்வார்கள் 🤣.

அமெரிக்காவிலும் இப்படி  ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுவும் எங்கள் பில் கிளின்ரனுடன் இருக்கும்போது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ஒரு நாட்டின் பிரதமர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை காணொளி மூலம் உலகுக்கு காட்டுவது எந்த அளவில் சரியானது,பொறுப்பானது. போதைபொருள் பாவித்ததாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

தடை செய்ய பட்ட மருந்து பாவித்திருந்தால் - வீட்டை உடனடியாக போக வேண்டும். சோதனை முடிவுகள் வரட்டும்.

காணொளியில் ஒரு தப்பும் இருப்பதாக நான் எண்ணவில்லை. நானெல்லாம் ஒரு Zero Coke குடித்து விட்டு இதை விட அதகளம் பண்ணுவேன். இப்ப முழங்கால் நோவதால் அடக்கி வாசிப்பது🤣.

இப்படி ஒரு யதார்தமான, எம்மை போலவே சாதாரணமான, அதையும் வெளிப்படையாக காட்டும் தலைவர் வாய்ப்பது என்னை பொறுத்த மட்டில் ஒரு நல்ல விடயமே.

49 minutes ago, Kapithan said:

அவர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதல்ல பிரச்சனை. அந்தப் பாட்டியில் பேசப்பட்ட விடயமும் (ஹெரோயின்) அவர் அங்கு இருந்த (3) ஆண்களோடு நடனமாடிய முறையும்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 

(அவர் திருமணமாகி ஒரு பிள்ளைக்கும் தாயாக உள்ளார் )

50 minutes ago, goshan_che said:

மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் நடக்கும் பார்ட்டிகளில் நடக்காத எதுவும் இங்கே நடக்கவில்லை.

49 minutes ago, Kapithan said:

அமெரிக்காவிலும் இப்படி  ஒரு சம்பவம் நடைபெற்றது. அதுவும் எங்கள் பில் கிளின்ரனுடன் இருக்கும்போது. 🤣

ஓம் இப்ப நியாபகம் வருது 😆. பில் லும் பொரிசும் போட்ட பல கூத்துகள் யூடியூப்பில் உண்டு.

பாவம் பொரிஸ் யெல்சின். ரஸ்யாவை ஒரு கட்டத்தில் தைரியமாக காத்து நிண்ட நெஞ்சுரம் மிக்க தலைவர். இல்லாவிடில் 90 இல் ரஸ்யா இன்னும் மோசமாக உடைந்து சிதறி இருக்கும்.

ஆனால் மதுவை கட்டுப்படுத்த முடியாமல் கோமாளி ஆகி விட்டார்.

ஆனால் எங்கட பொரிஸ் அப்படி அல்ல.

அவர் எப்பவும் கோமாளிதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

லூசுத்தனமான நாடுகளாய் கிடக்கு.
தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் எண்டு போட்டு தண்ணியடிக்கக்கூட சுதந்திரமில்லையா? இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் அவ கட்டையாய் மினி ரொக் போட்டதுக்கும் ஏதோ புறு புறுத்தாங்கள்.

உந்த பிக்குமாரும் பாதிரியார்மாரும்  எங்கடை மனிச சாமியளும் கண்ட கண்ட களிசடை வேலையள் செய்தால் வாயை மூடிக்கொண்டு இருப்பினமாக்கும்.

ஓம் அண்ணா

இனி இளைய தலைமுறையினர் பொதுச்சேவைக்கு வர வைக்கும் ஆப்பாக இது அமையப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

.

மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வெள்ளி கிழமையும் நடக்கும் பார்ட்டிகளில் நடக்காத எதுவும் இங்கே நடக்கவில்லை.

சப்பைக் கட்டு கட்டாதீர்கள் கோசான்.

ஒரு நாட்டின் பிரதமரும், சாதா பிரசைகளும் ஒன்றல்ல என்பது புரியாத ஆளல்ல நீங்கள். 

புட்டினை கிண்டலடிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

ஆனால் எங்கட பொரிஸ் அப்படி அல்ல.

அவர் எப்பவும் கோமாளிதான்🤣

இஞ்சை ஜேர்மனியிலையும் ஒரு பொறிஸ் இருக்கு.
ஆள் இப்ப உங்கையிருந்து கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தடை செய்ய பட்ட மருந்து பாவித்திருந்தால் - வீட்டை உடனடியாக போக வேண்டும். சோதனை முடிவுகள் வரட்டும்.

காணொளியில் ஒரு தப்பும் இருப்பதாக நான் எண்ணவில்லை. நானெல்லாம் ஒரு Zero Coke குடித்து விட்டு இதை விட அதகளம் பண்ணுவேன். இப்ப முழங்கால் நோவதால் அடக்கி வாசிப்பது🤣.

இப்படி ஒரு யதார்தமான, எம்மை போலவே சாதாரணமான, அதையும் வெளிப்படையாக காட்டும் தலைவர் வாய்ப்பது என்னை பொறுத்த மட்டில் ஒரு நல்ல விடயமே.

10 minutes ago, விசுகு said:

இளைய தலைமுறையினர் பொதுச்சேவைக்கு வர வைக்கும் ஆப்பாக இது அமையப்போகிறது?

சில யதார்த்தங்களை ஏற்பற்றதாகவே இந்த உலகு பார்க்கிறது. இது அரசியற் காழ்ப்புணர்வின்பாற்பட்டுக்கூட விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கலாம். ஒரு பிரதமாரகத் தனிமனித வாழ்வைக் கொண்டாடுதல் தவறா? அதைவிட இளையோர் மீதான தாக்குதலாகக் கூட இருக்கலாம். இளையோரை ஓரம்கட்டும், இளையோர் இப்படித்தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கமும் இருக்கலாம். ஆனால் தனது தனிப்பட்ட ஒரு மாலைப்பொழுதைப் பொதுவெளியில் பகிர்ந்ததோடு, தன்னை பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்மை அவரது நேர்மையைக் காட்டவில்லையா? மூடிய கதவினுள்ளே தமது சகாக்களோடு எதுவும் செய்யாமல் அப்படியே நாடாளுமன்றிலிருந்தோ அல்லது பணியகத்திலிருந்தோ நேராகக் கட்டிலில் சாய்ந்துவிடுகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சப்பைக் கட்டு கட்டாதீர்கள் கோசான்.

ஒரு நாட்டின் பிரதமரும், சாதா பிரசைகளும் ஒன்றல்ல என்பது புரியாத ஆளல்ல நீங்கள். 

புட்டினை கிண்டலடிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.

ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்துதல் ஆடுதல் தவறா? அப்படியாயின் எப்படி இளைய தலைமுறையினரை உள் வாங்கப்போகிறோம்??

2 minutes ago, nochchi said:

சில யதார்த்தங்களை ஏற்பற்றதாகவே இந்த உலகு பார்க்கிறது. இது அரசியற் காழ்ப்புணர்வின்பாற்பட்டுக்கூட விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கலாம். ஒரு பிரதமாரகத் தனிமனித வாழ்வைக் கொண்டாடுதல் தவறா? அதைவிட இளையோர் மீதான தாக்குதலாகக் கூட இருக்கலாம். இளையோரை ஓரம்கட்டும், இளையோர் இப்படித்தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கமும் இருக்கலாம். ஆனால் தனது தனிப்பட்ட ஒரு மாலைப்பொழுதைப் பொதுவெளியில் பகிர்ந்ததோடு, தன்னை பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்மை அவரது நேர்மையைக் காட்டவில்லையா? மூடிய கதவினுள்ளே தமது சகாக்களோடு எதுவும் செய்யாமல் அப்படியே நாடாளுமன்றிலிருந்தோ அல்லது பணியகத்திலிருந்தோ நேராகக் கட்டிலில் சாய்ந்துவிடுகிறார்களா?

அதே

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kapithan said:

சப்பைக் கட்டு கட்டாதீர்கள் கோசான்.

ஒரு நாட்டின் பிரதமரும், சாதா பிரசைகளும் ஒன்றல்ல என்பது புரியாத ஆளல்ல நீங்கள். 

புட்டினை கிண்டலடிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு வெள்ளையடிக்காதீர்கள்.

வெள்ளை புரவியில் ஏறி வானில் இருந்து வந்த  மீட்பர்கள் இல்லை பிரதமர்கள். அவர்களும் எம்மை போன்றோரே.

இதுவே ஒரு 60 வயது ஆள் என்றால் மொரிஸ் டான்ஸ் அல்லது மீன் பிடிக்கு போயிருப்பார். இவர் 36 வயது. அதன் படி நடக்கிறார்.

உண்மையிலேயே இதில் என்ன பெரும்பிழை என எனக்கு விளங்கவில்லை.

45 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலையும் ஒரு பொறிஸ் இருக்கு.
ஆள் இப்ப உங்கையிருந்து கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் 🤣

ஓம்🤣. பேர் ராசி 🤣

44 minutes ago, nochchi said:

சில யதார்த்தங்களை ஏற்பற்றதாகவே இந்த உலகு பார்க்கிறது. இது அரசியற் காழ்ப்புணர்வின்பாற்பட்டுக்கூட விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கலாம். ஒரு பிரதமாரகத் தனிமனித வாழ்வைக் கொண்டாடுதல் தவறா? அதைவிட இளையோர் மீதான தாக்குதலாகக் கூட இருக்கலாம். இளையோரை ஓரம்கட்டும், இளையோர் இப்படித்தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கமும் இருக்கலாம். ஆனால் தனது தனிப்பட்ட ஒரு மாலைப்பொழுதைப் பொதுவெளியில் பகிர்ந்ததோடு, தன்னை பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்மை அவரது நேர்மையைக் காட்டவில்லையா? மூடிய கதவினுள்ளே தமது சகாக்களோடு எதுவும் செய்யாமல் அப்படியே நாடாளுமன்றிலிருந்தோ அல்லது பணியகத்திலிருந்தோ நேராகக் கட்டிலில் சாய்ந்துவிடுகிறார்களா?

100% உடன்படுகிறேன். இதை எதிர்கட்சிகளும் கு சா அண்ணை சொல்வது போல் ரஸ்ய ஆதரவு சக்திகளும் ஊதி பெருபிப்பதாகவே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வெள்ளை புரவியில் ஏறி வானில் இருந்து வந்த  மீட்பர்கள் இல்லை பிரதமர்கள். அவர்களும் எம்மை போன்றோரே.

இதுவே ஒரு 60 வயது ஆள் என்றால் மொரிஸ் டான்ஸ் அல்லது மீன் பிடிக்கு போயிருப்பார். இவர் 36 வயது. அதன் படி நடக்கிறார்.

உண்மையிலேயே இதில் என்ன பெரும்பிழை என எனக்கு விளங்கவில்லை.

கோசான், 

1) drugs பரிசோதனையை கோரியிருப்பது அந்த நாட்டினர்.

2)/அவர்கள் தங்கள் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் எனும்  குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் "கிடுகுவேலி" யினர் இருப்பதுதான் முரண்நகை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kapithan said:

புலம்பெயர் "கிடுகுவேலி" யினர்

என்னது கிடுகு வேலியினர்?????? 🤣🤣🤣🤣

இனி காவோலை வேலி,கருக்குமட்டை வேலை,அலம்பல் வேலி,கம்பி வேலி,தென்னம் மட்டை வேலி  எல்லாம் வரிசையில வரப்போவுது.😂
தயவு செய்து மதில் எட்டத்த நிக்கவும்......😎

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டிப்பம் டிப்பட டிப்ப டப்பம் டிப்பம்
டப்பம் டிபக்கு டப்பம்
டிப்பட டிப்பட டிப்பட டிப்பட

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

கோசான், 

1) drugs பரிசோதனையை கோரியிருப்பது அந்த நாட்டினர்.

2)/அவர்கள் தங்கள் பிரதமர் எப்படி இருக்க வேண்டும் எனும்  குறைந்தபட்ச எதிர்பார்ப்பைக் கூட புரிந்துகொள்ள முடியாத நிலையில் புலம்பெயர் "கிடுகுவேலி" யினர் இருப்பதுதான் முரண்நகை. 

அந்த நாட்டில் பரிசோதனை வேண்டும் என என்ன சர்வஜன வாக்கெடுப்பு நடந்ததா? அல்லது பாராளுமன்ற வாக்கெடுப்பாவது நடந்ததா?

இது trial by media எல்லா ஜனநாயக நாடுகளிலும் சில விடயங்களை இப்படி ஊதி பெருபிக்கும் அரசியல் நடப்பதுதான். அதுதான் பிரதமரே தானாக பரிசோதனைக்கு உடன்பட்டுள்ளார்.

2 hours ago, குமாரசாமி said:

என்னது கிடுகு வேலியினர்?????? 🤣🤣🤣🤣

இனி காவோலை வேலி,கருக்குமட்டை வேலை,அலம்பல் வேலி,கம்பி வேலி,தென்னம் மட்டை வேலி  எல்லாம் வரிசையில வரப்போவுது.😂
தயவு செய்து மதில் எட்டத்த நிக்கவும்......😎

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்
டிபக்கு டிப்பம் டிப்பட டிப்ப டப்பம் டிப்பம்
டப்பம் டிபக்கு டப்பம்
டிப்பட டிப்பட டிப்பட டிப்பட

முள்முருக்கு கதியால்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அப்படியாம், இப்படியாம். பூராயாமாம், பாராயமாம் என்ற தொனியில் பின்லாந்து பிரதமர் போதை பொருள் பற்றி கதைத்த பார்ட்டியில் நின்றார்( 🤣) என்றெல்லம் RT “news” பாணியில் சொல்லப்படுவதால், கீழே அவரின் நிலைப்பாடு பற்றிய அல்ஜசீராவின் செய்தியை பகிர்கிறேன்.

 தன் தனி உரிமையில் தலையீடு என்றாலும் தன் பாதுகாப்புக்கு, வதந்தி பரப்பும் வசந்திகளின் வாயை அடைக்க, தான் இன்று பரிசோதனை செய்து கொண்டதாயும். வாழ்வில் ஒரு போதும் போதை மருந்து எடுத்ததும் இல்லை, இந்த பார்ட்டியில் யாரும் பாவித்ததை தான் பார்த்ததும் இல்லை என கூறியுள்ளார்.

https://www.aljazeera.com/amp/news/2022/8/19/finlands-sanna-marin-takes-drug-test-after-party-video-emerges

இது பெரிய தவறா இல்லையா என்பது பினிஷ் மக்களின் முடிவுதான்.

ஆனால் இதை பற்றி தனது கருத்தை உலகின் எந்த மூலையில் இருக்கும் கதியால் முள்முருக்கும் முன்வைக்கலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்த நாட்டில் பரிசோதனை வேண்டும் என என்ன சர்வஜன வாக்கெடுப்பு நடந்ததா? அல்லது பாராளுமன்ற வாக்கெடுப்பாவது நடந்ததா?

இது trial by media எல்லா ஜனநாயக நாடுகளிலும் சில விடயங்களை இப்படி ஊதி பெருபிக்கும் அரசியல் நடப்பதுதான். அதுதான் பிரதமரே தானாக பரிசோதனைக்கு உடன்பட்டுள்ளார்.

அதைத்தான்  நானும் கூறுகிறேன். 

பரிசோதனைக்கு அவரே உடன்படுவதென்பது மக்களின், அதாவது Finnish மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறார் என்பதுதான் அர்த்தம். அந்த மக்களின் எதிர்பார்ப்பே அப்படி இருக்கும்போது, 

கிடுகுவேலியினருக்கு என்ன பிரச்சனை ? 

3 minutes ago, goshan_che said:

இங்கே அப்படியாம், இப்படியாம். பூராயாமாம், பாராயமாம் என்ற தொனியில் பின்லாந்து பிரதமர் போதை பொருள் பற்றி கதைத்த பார்ட்டியில் நின்றார்( 🤣) என்றெல்லம் RT “news” பாணியில் சொல்லப்படுவதால், கீழே அவரின் நிலைப்பாடு பற்றிய அல்ஜசீராவின் செய்தியை பகிர்கிறேன்.

 தன் தனி உரிமையில் தலையீடு என்றாலும் தன் பாதுகாப்புக்கு, வதந்தி பரப்பும் வசந்திகளின் வாயை அடைக்க, தான் இன்று பரிசோதனை செய்து கொண்டதாயும். வாழ்வில் ஒரு போதும் போதை மருந்து எடுத்ததும் இல்லை, இந்த பார்ட்டியில் யாரும் பாவித்ததை தான் பார்த்ததும் இல்லை என கூறியுள்ளார்.

https://www.aljazeera.com/amp/news/2022/8/19/finlands-sanna-marin-takes-drug-test-after-party-video-emerges

இது பெரிய தவறா இல்லையா என்பது பினிஷ் மக்களின் முடிவுதான்.

ஆனால் இதை பற்றி தனது கருத்தை உலகின் எந்த மூலையில் இருக்கும் கதியால் முள்முருக்கும் முன்வைக்கலாம் 🤣.

தங்கள் பிள்ளைகளை வேறு சாதியிலேயே திருமணம் முடித்துக் கொடுக்க விரும்பாத புலன்பெயர் கிடுகுவேலியினர்தான் பின்லாந்துக்காறருக்கு பாடமெடுக்கின்றனர்.  அதுதான் சகிக்க முடியவில்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதைத்தான்  நானும் கூறுகிறேன். 

பரிசோதனைக்கு அவரே உடன்படுவதென்பது மக்களின், அதாவது Finnish மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறார் என்பதுதான் அர்த்தம். அந்த மக்களின் எதிர்பார்ப்பே அப்படி இருக்கும்போது, 

கிடுகுவேலியினருக்கு என்ன பிரச்சனை ? 

ஒரு பிரச்சனையும் இல்லை. 

இங்கே யாரும் அவர் பரிசோதனைக்கு உட்பட்டிருக்க கூடாது என்று எழுதவில்லையே?

கீழே இந்த திரியில் பதிந்த முதல் கருத்தை மீள தந்துள்ளேன். 

நானறிய இவர் பினிஷ் இல்லை. அல்லது இவருக்கு பெரும்பாலான பினிஷ் மக்களின் விருப்பு என்ன என்று தெரியவும் வாய்ப்பில்லை.

அவர்களின் பிரதமர் கஞ்சா வலிச்சா இவருக்கு என்ன? ஹெரெயி இழுத்தால் இவருக்கு என்ன (கிடுகு வேலித்தனம் இதுவும் தானே🤣).

15 hours ago, Kapithan said:

சாதாரண குடும்பத் தலைவர்களுக்கே முதிர்ச்சி வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு நாட்டின் அதிப்ருக்கு எவ்வளவு முதிர்ச்சி இருக்க வேண்டும் ? 

அவருடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி தானாகவே எழுகிறது 😏

ஆகவேதான் சொல்கிறேன். இந்த விடயம் பற்றி அவரவர் கருத்தை யாரும் சொல்லலாம்.

பினிஷ் சனம் நினைப்பதுதான் (அப்படி ஆதாரம் ஏதும் இல்லை) நமது கருத்தாக இருக்க வேண்டும் என்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? 

அதே தான். சட்டபடி அனுமதிக்கபட்ட ஒன்றை தானே செய்திருக்கிறார்.

12 hours ago, goshan_che said:

பின்லாந்து போல ஒரு முன்னேறிய நாட்டில் இதை எல்லாம் ஒரு விடயமாக கருதுகிறார்கள் என்பதே வியப்பாக உள்ளது.

உந்த நாடும் ஓசி விசுகோத்து இலவச படிப்பை முழுமையாக செயல்படுத்தும் நாடு தாளே 😂

5 hours ago, விசுகு said:

ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மது அருந்துதல் ஆடுதல் தவறா?

பின்லாந்து நேட்டோவில் சேர்ந்தது உங்களை பாதிக்கவில்லை. அதனால் சுதந்திரமாக சிந்திக்க முடிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.