Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடினின் நெருங்கிய நண்பரின் மகள் கார் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு!

புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.

29 வயதான தர்யா டுகினா மாஸ்கோவிற்கு வெளியே ஒரு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, குண்டு வெடிப்பில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

‘புடினின் மூளை’ என்று அழைக்கப்படும் அவரது தந்தை ரஷ்ய தத்துவஞானி அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார்.

அலெக்சாண்டர் டுகினும் அவரது மகளும் மாஸ்கோவிற்கு அருகில் ஒரு திருவிழாவில் கலந்துக்கொண்டனர். அங்கு தத்துவஞானி சனிக்கிழமை மாலை விரிவுரை வழங்கினார்.

நிகழ்வினை முடித்துக்கொண்டு, இருவரும் ஒரே காரில் இடத்தை விட்டு வெளியேற இருந்தனர். ஆனால், டுகின் கடைசி நிமிடத்தில் தனித்தனியாக பயணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

போல்ஷியே வியாசெமி கிராமத்திற்கு அருகில் காரை ஓட்டி வந்த தர்யா டுகினா சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்துச் சிதறியதாகவும், வாகனம் தீப்பிடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, டெலிகிராம் பதிவில், உக்ரைனிய தொடர்பு கண்டறியப்பட்டால் அது ‘அரச பயங்கரவாதத்திற்கு’ சமம் என்று கூறினார்.

ஆனால், உக்ரைனிய அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தில் உக்ரைனிய தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இதனிடையே உக்ரைனின் தென்கிழக்கு பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியான சபோரிஸியாவில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு உக்ரைன் விஷம் கொடுத்துள்ளதாக ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்ய வீரர்கள் காலாவதியான இறைச்சியை சாப்பிட்டதால் உடல் நலம் சரியில்லாமல் ஆகி இருக்கலாம் என்று உக்ரைன் விளக்கம் அளித்துள்ளது.

alexx-600x400.jpg

https://athavannews.com/2022/1295674

  • Replies 65
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு!

இதற்காகவே உக்ரேன் பெரிதாக இழக்க வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

டுகின், ரஷ்ய ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என நம்பப்படும் ஒரு முக்கிய அதி-தேசியவாத சித்தாந்தவாதி ஆவார்.

இலக்கு வைக்கப்பட்டவர் புட்டினின் நண்பர் என்பதை விட அவரின் சித்தாந்த வழிகாட்டி என்பதே பொருத்தமாக இருக்கும்.

ஈயூரேஸ்யனிசம் என்ற ரஸ்யா மைய, புதிய ரஸ்யா சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற தத்துவதின் முன்மொழிவாளர்களில் பிரதானமானவர் இவர். 

கிட்டதட்ட தலைவருக்கும், பாலா அண்ணைக்கும் போன்றது இவர்கள் உறவு.

கடைசி நேரத்தில் வாகனம் மாறி ஏறியதால் மகள் உயிர் போக தந்தை பிழைத்துள்ளார். மகளும் தந்தையை போலவே இந்த சித்தாந்தத்தில் ஊறிய ஒரு ஊடக பிரபலம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதற்காகவே உக்ரேன் பெரிதாக இழக்க வேண்டியிருக்கும்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். உக்ரேனிய அதிகாரிகளும் கடும் எதிர் வினையை எதிர்பார்ப்பதாக நம்பபடுகிறது.

இந்த போரில் ரஸ்யாவின் முதலாவது சிவிலியன் இழப்பு இது. ஆனால் உக்ரேன் பலதை கண்டு விட்டது.

ஆனாலும் ரஸ்யா இன்னமும் நேரடியாக கியவ்வை குற்றம் சொல்லவில்லை. தடவியல் அறிக்கைக்கு பின் குற்றம் சாட்ட கூடும்.

அதே வேளை இதை ரஸ்யாவில் உள் இருந்து ஆட்சி மாற்றத்துக்காக போராடும் அமைப்பு என தம்மை அறிவித்து கொண்டுள்ள ஓர் அமைப்பும் உரிமை கோரியுள்ளது.

நிச்சயமாக இதை தன் அருகில் இருக்கும் ஒருவரின் சதி என்ற கோணத்திலும் புட்டின் யோசிப்பார்.

எது எப்படியோ - யாரால் என்று சொல்லாமல், புட்டினுக்கு மிக நெருக்கமானவர்களை கூட இலக்கு வைக்க முடியும் என்ற செய்தி புட்டினுக்கு சொல்லப்பட்டுள்ளது.

அவரின் எதிர்வினை எப்படி இருக்கும்?

பொதுவான எதிர்பார்ப்பு - உக்ரேனில் எங்காவது பதிலடி கிடைக்கும் என்பது.

ஆனால் எப்போதும் பொது எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. புட்டின் வேறு விதமாக இதை அணுகலாம்.

Edited by goshan_che

திரும்பிப் பார்க்கின்றேன்

யுத்த காலங்களில் சிங்களத்தின் மூளையாக செயல்பட்ட, ஆயுதம் தரிக்காத சிங்கள தலைவர்களை புலிகள் கொல்லும் போது அமெரிக்கா உட்பட மேற்கு அவற்றை பயங்கரவாத தாக்குதல்கள் என்று முத்திரை குத்தின.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இப்பிடித்தான் சர்வாதிகாரிகள் எல்லோர் மீதும் பெரும் படம் இருக்கும். சதாம் ஹுசேன் அப்பிடி தாக்குவார் இப்பிடித்தாக்குவார் என்று மேற்குக்கு எதிரான ஜனநாயகக் காவலர்கள் நம்பினார்கள். உள்ள இறங்கி இரண்டு சாத்துச் சாத்தினால் சதாமைப் போல புட்டினும் கோவணத்தோடு சரணடைவார். ரஸ்யா ஒரு வெற்று வேட்டு.  ரஸ்யாவிடம் உள்தெல்லாம் பழைய பெருமை 😂 அதில் கனரக மற்றும் அணு ஆயுதங்களும் உள்ளடக்கம். எல்லாம் உழுத்துப் போனவை. நேட்டோ இறங்கி ஒரு ரெண்டு அடி போட எல்லாம் சரிவரும்.

இதை இப்படித்தான் அணுகலாம்!🤪

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

திரும்பிப் பார்க்கின்றேன்

யுத்த காலங்களில் சிங்களத்தின் மூளையாக செயல்பட்ட, ஆயுதம் தரிக்காத சிங்கள தலைவர்களை புலிகள் கொல்லும் போது அமெரிக்கா உட்பட மேற்கு அவற்றை பயங்கரவாத தாக்குதல்கள் என்று முத்திரை குத்தின.

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு, படக்கு எண்டுமாம்🤣.

பிந்திய செய்தி : தாக்குதலுக்கு உக்ரேன் காரணம் என ரஸ்யா அறிவிப்பு.

2 minutes ago, வாலி said:

இப்பிடித்தான் சர்வாதிகாரிகள் எல்லோர் மீதும் பெரும் படம் இருக்கும். சதாம் ஹுசேன் அப்பிடி தாக்குவார் இப்பிடித்தாக்குவார் என்று மேற்குக்கு எதிரான ஜனநாயகக் காவலர்கள் நம்பினார்கள். உள்ள இறங்கி இரண்டு சாத்துச் சாத்தினால் சதாமைப் போல புட்டினும் கோவணத்தோடு சரணடைவார். ரஸ்யா ஒரு வெற்று வேட்டு.  ரஸ்யாவிடம் உள்தெல்லாம் பழைய பெருமை 😂 அதில் கனரக மற்றும் அணு ஆயுதங்களும் உள்ளடக்கம். எல்லாம் உழுத்துப் போனவை. நேட்டோ இறங்கி ஒரு ரெண்டு அடி போட எல்லாம் சரிவரும்.

இதை இப்படித்தான் அணுகலாம்!🤪

உளுத்து போனது என்றாலும், தவறி கசிந்தாலே அணு ஆயுதம் பெரிய விளைவை தரவல்லது.

ஆகவே இறங்கி அடிப்பது பெரும் ஆபத்தில் முடியலாம்.

புட்டின் சாகாவரம் பெற்றவர் அல்லவே. காலம் புட்டினின் மிக பெரிய எதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு, படக்கு எண்டுமாம்🤣.

பிந்திய செய்தி : தாக்குதலுக்கு உக்ரேன் காரணம் என ரஸ்யா அறிவிப்பு.

உளுத்து போனது என்றாலும், தவறி கசிந்தாலே அணு ஆயுதம் பெரிய விளைவை தரவல்லது.

ஆகவே இறங்கி அடிப்பது பெரும் ஆபத்தில் முடியலாம்.

புட்டின் சாகாவரம் பெற்றவர் அல்லவே. காலம் புட்டினின் மிக பெரிய எதிரி.

காலம் புட்டினுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அது எதிரிதானன். 

யேசுக் கிறீஸ்து, புத்தர், முகம்மது நபிகள், ஹிட்லர், கோட்டாபய  என அது ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. 

காலம் உயினங்களை மட்டுமல்ல, மனிதர்களின்  சிந்தனைகளையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் உண்மை. 

ஆக, காலம் எல்லோருக்குமே எதிரிதான். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாலி said:

இப்பிடித்தான் சர்வாதிகாரிகள் எல்லோர் மீதும் பெரும் படம் இருக்கும். சதாம் ஹுசேன் அப்பிடி தாக்குவார் இப்பிடித்தாக்குவார் என்று மேற்குக்கு எதிரான ஜனநாயகக் காவலர்கள் நம்பினார்கள். உள்ள இறங்கி இரண்டு சாத்துச் சாத்தினால் சதாமைப் போல புட்டினும் கோவணத்தோடு சரணடைவார். ரஸ்யா ஒரு வெற்று வேட்டு.  ரஸ்யாவிடம் உள்தெல்லாம் பழைய பெருமை 😂 அதில் கனரக மற்றும் அணு ஆயுதங்களும் உள்ளடக்கம். எல்லாம் உழுத்துப் போனவை. நேட்டோ இறங்கி ஒரு ரெண்டு அடி போட எல்லாம் சரிவரும்.

இதை இப்படித்தான் அணுகலாம்!🤪

இப்படியும் அணுகலாம் தான். கடைசியில் ஆப்கானிஸ்தானில் வாங்கியது இன்னுமா நினைவில் இல்லை.  ஓட ஓட விட்டு கலைத்தது நினைவில் நிற்க வேண்டும். அது சரி உந்த பழைய ஆயுதத்தை வைத்தே 30 வீதமான இடத்தை யூக்ரேன் இழந்து நிற்கினம். நேட்டோவின் புதுமையான ஆயுதங்களுக்கு என்னாச்சு சார். செலன்ஸ்கிக்கு இப்ப வயித்தாலை போகும்🤣🤣.31ம் தேதி சுதந்திர தின கொண்டாத்துக்கு(யூக்ரேனிய) ரஸ்யா தங்களுக்கு செம சாத்து சாத்துமென்டு சொல்லி இருக்கிறார்.

Quote

புட்டின் சாகாவரம் பெற்றவர் அல்லவே. காலம் புட்டினின் மிக பெரிய எதிரி.

செலன்ஸ்கிக்கு காலம் நண்பரோ??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

காலம் புட்டினுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அது எதிரிதானன். 

யேசுக் கிறீஸ்து, புத்தர், முகம்மது நபிகள், ஹிட்லர், கோட்டாபய  என அது ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. 

காலம் உயினங்களை மட்டுமல்ல, மனிதர்களின்  சிந்தனைகளையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் உண்மை. 

ஆக, காலம் எல்லோருக்குமே எதிரிதான். 

😉

நீண்ட நோக்கில் காலம் எல்லாத்துக்கும் எதிரிதான். பிரபஞ்சம் ஒரு நாள் ஒளியற்று போகும் போது காலமும், காலமாகும்.

ஆனால் குறுகிய கால நோக்கில் காலம் தனி மனிதர்களுக்கு எதிரி ஆனால் அமைப்புக்களுக்கு (system) அல்ல.

ஆகவேதான் தனிமனித முயற்சி அமைப்பாகும் போது அது காலத்தை வெல்கிறது (யேசுவை காலம் வென்றது ஆனால் கிறிஸ்தவம் நிலைத்தது - குறுகியகால அட்டவணையில்). 

புட்டினுக்கு பின் ரஸ்யாவில் இதே அணுகுமுறையுள்ள ஒருவர் வருவாரா என்றால் சாத்தியம் மிககுறைவு.

ஆனால் டிரம்ப் வென்றாலும் கூட மேற்கின் அணுகுமுறை மாற சாத்தியம் குறைவு.

1 minute ago, kalyani said:

செலன்ஸ்கிக்கு காலம் நண்பரோ?

பதில் மேலே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நீண்ட நோக்கில் காலம் எல்லாத்துக்கும் எதிரிதான். பிரபஞ்சம் ஒரு நாள் ஒளியற்று போகும் போது காலமும், காலமாகும்.

ஆனால் குறுகிய கால நோக்கில் காலம் தனி மனிதர்களுக்கு எதிரி ஆனால் அமைப்புக்களுக்கு (system) அல்ல.

ஆகவேதான் தனிமனித முயற்சி அமைப்பாகும் போது அது காலத்தை வெல்கிறது (யேசுவை காலம் வென்றது ஆனால் கிறிஸ்தவம் நிலைத்தது - குறுகியகால அட்டவணையில்). 

புட்டினுக்கு பின் ரஸ்யாவில் இதே அணுகுமுறையுள்ள ஒருவர் வருவாரா என்றால் சாத்தியம் மிககுறைவு.

ஆனால் டிரம்ப் வென்றாலும் கூட மேற்கின் அணுகுமுறை மாற சாத்தியம் குறைவு.

பதில் மேலே.

  புட்டின் போல ஒருவர் வருவார் என்றே மேற்கு நினைத்ததோ??

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, kalyani said:

30 வீதமான இடத்தை யூக்ரேன் இழந்து நிற்கினம். நேட்டோவின் புதுமையான ஆயுதங்களுக்கு என்னாச்சு சார்.

ரஸ்ய கட்டுப்பாட்டில் இருப்பது 20.7%நிலம் என நினைக்கிறேன். அதில் பெரும்பகுதி 2014 இல் கைப்பற்றபட்ட கிரைமியா. அடுத்து ஏலவே கிளர்சிகாரர் கையில் இருந்த டொன்பாஸ் பகுதிகள்.2022  பெப்ரவரிக்கு பின் புட்சின் படைகள் பிடித்தது, பிடித்து விட்டு பின் விட்டு விட்டு ஓடியதை விட கொஞ்சம் கூட. அவவளவுதான்.

1 minute ago, kalyani said:

  புட்டின் போல ஒருவர் வருவார் என்றே மேற்கு நினைத்ததோ??

ஆருக்கு தெரியும் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பிஞ்ச ஆயுதத்தால் பிடித்தது என்கிறீர்கள்? மேற்கின் ஆயுதத்துக்கு என்ன நடந்தது?

2 minutes ago, goshan_che said:

ரஸ்ய கட்டுப்பாட்டில் இருப்பது 20.7%நிலம் என நினைக்கிறேன். அதில் பெரும்பகுதி 2014 இல் கைப்பற்றபட்ட கிரைமியா. அடுத்து ஏலவே கிளர்சிகாரர் கையில் இருந்த டொன்பாஸ் பகுதிகள்.2022  பெப்ரவரிக்கு பின் புட்சின் படைகள் பிடித்தது, பிடித்து விட்டு பின் விட்டு விட்டு ஓடியதை விட கொஞ்சம் கூட. அவவளவுதான்.

ஆருக்கு தெரியும் 🤣.

நினைக்காமல் ஒருவர் வந்திருக்கார் என்றால் இனியும் வர நிகழ்தகவு  உள்ளதல்லவா??🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனால் டிரம்ப் வென்றாலும் கூட மேற்கின் அணுகுமுறை மாற சாத்தியம் குறைவு.

மேற்கு மட்டுமல்ல  அல்ல, எல்லா ஏகாதிபத்தியங்களின் கொள்கைகளுமே மாறுவதில்லை. 

அவர்களுக்கான ஒரே ஒரு கசப்பு மருந்து காலம் மட்டுமே.

அந்தக் காலம் புதியவற்றை உருவாக்கும், பழையவற்றை அல்லது தன்னோடு இசைவாக்கம் அடையாதவற்றை அழிக்கும். 

எங்களை அழிந்தது போல....

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யாவின் பலம் சீனா,ஈரான்,சிரியா,வட கொரியாவுக்கு மட்டுமே தெரியும்.😎

சதாம் என்னட்டை ஒண்டுமே இல்லையெண்டு சொன்னாபிறகும் அடிச்ச அமெரிக்காவின்ட வீரம் இருக்கே செல்லி வேல இல்ல வாப்பா 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

உளுத்து போனது என்றாலும், தவறி கசிந்தாலே அணு ஆயுதம் பெரிய விளைவை தரவல்லது.

நரிக்குணம் கொண்ட மேற்குலகை  நம்பி ஆயுத குறைப்பு பேச்சுவார்தை மூலம் ரஷ்யா ஏராளமான ஆயுதங்களை அழித்து விட்டது.
நம்பிக்கெட்டது ரஷ்யா.

நீதி நேர்மை கொண்ட மாண்புமிகு புட்டின் அவர்கள் பல இடங்களில் மேற்குலகால் அவமானப்படுத்தப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

உந்த பிஞ்ச ஆயுதத்தால் பிடித்தது என்கிறீர்கள்? மேற்கின் ஆயுதத்துக்கு என்ன நடந்தது?

நினைக்காமல் ஒருவர் வந்திருக்கார் என்றால் இனியும் வர நிகழ்தகவு  உள்ளதல்லவா??🤣

ஒரு சப்போஸ்ட் வல்லரசு, பக்கத்தில இருக்குற ஒப்பீட்டளவில் சின்னம் சிறிய இராணுவத்தை எதிர்த்து ஆறு மாதமா முக்கி 5% அளவிலான நிலப்பரப்பை மட்டும் கைப்பற்ற வைத்துள்ளது 🤣.

நினைத்தார்களோ இல்லையோ, ஆருக்கு தெரியும் ? என்பதுதான் நான் சொன்னது.

13 minutes ago, குமாரசாமி said:

நரிக்குணம் கொண்ட மேற்குலகை  நம்பி ஆயுத குறைப்பு பேச்சுவார்தை மூலம் ரஷ்யா ஏராளமான ஆயுதங்களை அழித்து விட்டது.
நம்பிக்கெட்டது ரஷ்யா.

நீதி நேர்மை கொண்ட மாண்புமிகு புட்டின் அவர்கள் பல இடங்களில் மேற்குலகால் அவமானப்படுத்தப்பட்டார்.

நித்தாவால எழும்பியாச்சு போல 🤣.

தான்மை மிகு புட்டின் அமெரிக்கவை நம்பும் அளவுக்கு மொக்கு கேசா🤣.

49 minutes ago, Kapithan said:

மேற்கு மட்டுமல்ல  அல்ல, எல்லா ஏகாதிபத்தியங்களின் கொள்கைகளுமே மாறுவதில்லை. 

அவர்களுக்கான ஒரே ஒரு கசப்பு மருந்து காலம் மட்டுமே.

அந்தக் காலம் புதியவற்றை உருவாக்கும், பழையவற்றை அல்லது தன்னோடு இசைவாக்கம் அடையாதவற்றை அழிக்கும். 

எங்களை அழிந்தது போல....

☹️

ஜின் ஜிஸ்கான், தைமூர் காலம் தொட்டு இதுதான் கதை.

நாளைக்கு சீன சாம்ராஜ்யம் அமையும் போதும் இது தொடரும்.

அடுத்து தமிழர் சாம்ராஜ்யம் அமைந்தாலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, goshan_che said:

ஒரு சப்போஸ்ட் வல்லரசு, பக்கத்தில இருக்குற ஒப்பீட்டளவில் சின்னம் சிறிய இராணுவத்தை எதிர்த்து ஆறு மாதமா முக்கி 5% அளவிலான நிலப்பரப்பை மட்டும் கைப்பற்ற வைத்துள்ளது 🤣.

அதெப்படி அவ்வளவு துல்லியமாக சொல்கிறீர்கள்.சி என்என் பீப்பீசி பார்ப்பதை நிறுத்தி விட்டீர்களா?  😉

56 minutes ago, goshan_che said:

தான்மை மிகு புட்டின் அமெரிக்கவை நம்பும் அளவுக்கு மொக்கு கேசா🤣.

அமெரிக்காவை நம்பவில்லை. மதிப்பிற்குரிய புட்டின் நூல் விட்டு ஆழம் பார்த்ததின் விளைவுதான் உக்ரேனுக்கான சணல் அடி.

ஆங்கிலேயன் எப்பவும் நம்ப வைச்சு கழுத்தறுக்கிறதிலை விண்ணன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதெப்படி அவ்வளவு துல்லியமாக சொல்கிறீர்கள்.சி என்என் பீப்பீசி பார்ப்பதை நிறுத்தி விட்டீர்களா?  😉

3 hours ago, goshan_che said:

தரவு இங்கே உள்ளது. தரவை சரிபார்க்க ஒரு ரூலரும் உக்ரேனின் மேப்பும், அடிப்படை கல்கிலேட்டரும் போதும்.

https://www.newstatesman.com/world/europe/ukraine/2022/07/ukraine-war-map-occupied-territory-interactive

4 hours ago, குமாரசாமி said:

நரிக்குணம் கொண்ட மேற்குலகை  நம்பி

சொன்னது நீ(ங்கள்) தானா, சொல், சொல், சொல் என்ர அண்ணை🤣

2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவை நம்பவில்லை

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இலக்கு வைக்கப்பட்டவர் புட்டினின் நண்பர் என்பதை விட அவரின் சித்தாந்த வழிகாட்டி என்பதே பொருத்தமாக இருக்கும்.

ஈயூரேஸ்யனிசம் என்ற ரஸ்யா மைய, புதிய ரஸ்யா சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற தத்துவதின் முன்மொழிவாளர்களில் பிரதானமானவர் இவர். 

கிட்டதட்ட தலைவருக்கும், பாலா அண்ணைக்கும் போன்றது இவர்கள் உறவு.

கடைசி நேரத்தில் வாகனம் மாறி ஏறியதால் மகள் உயிர் போக தந்தை பிழைத்துள்ளார். மகளும் தந்தையை போலவே இந்த சித்தாந்தத்தில் ஊறிய ஒரு ஊடக பிரபலம்.

Alexander Dugin னும் Alexander Solzhenitsyn னும் இரு வேறு நபர்கள். 

Akexander Solzhenitsyn தான் புடினின் மூளை எனக் கூறப்படுபவர். 

Western mediaவை நம்பிங், இதிங்தாங் நடிக்கும். 

🤣

(Foundations of Geopolitics எழுதினால் மட்டும் புடினின் மூளை ஆக முடியுமென நம்பவில்லை 😉)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

Alexander Dugin

இவர் இன்னும் உயிரோடு இருப்பவர் (மகள் இறந்தவர்).

1 hour ago, Kapithan said:

Alexander Solzhenitsyn

இவர் 2008ம் ஆண்டு போய் சேர்ந்து விட்டார்.

இவர் இறக்கும் போது இவருக்கு 90 வயது. இவர் கம்யூனிச எதிர்பாளர். நாவலாசிரியர்.

நான் அவரை இவர் என தப்பாக கருதவில்லை.

இருவரின் கருத்துகளும் ஈரேஸ்யனிசம், உக்ரேனிய தேசியத்தை மறுத்தலில் ஒத்ததாக இருந்தாலும் - புட்டினின் வட்டத்தில் இருப்பவர், ஆலோசனை சொல்பவர் டுகின். சொல்ஸ்டைன் புட்டினை சந்திருக்கிறார் ஆனால் அவரின் வட்டத்தில் இருந்ததில்லை. புட்டின் உக்ரேன் மீது முதல் வேட்டை தீர்க்க பல ஆண்டுகள் முன்பே படைதவனை பார்க்க போய்விட்டார்.

பிகு

அப்பனுக்கே அரைகோவணம் இதுல மகண்ட டவுசர்ல ஓட்டை எண்டு சிரிச்சாராம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவர் இன்னும் உயிரோடு இருப்பவர் (மகள் இறந்தவர்).

இவர் 2008ம் ஆண்டு போய் சேர்ந்து விட்டார்.

இவர் இறக்கும் போது இவருக்கு 90 வயது. இவர் கம்யூனிச எதிர்பாளர். நாவலாசிரியர்.

நான் அவரை இவர் என தப்பாக கருதவில்லை.

இருவரின் கருத்துகளும் ஈரேஸ்யனிசம், உக்ரேனிய தேசியத்தை மறுத்தலில் ஒத்ததாக இருந்தாலும் - புட்டினின் வட்டத்தில் இருப்பவர், ஆலோசனை சொல்பவர் டுகின். சொல்ஸ்டைன் புட்டினை சந்திருக்கிறார் ஆனால் அவரின் வட்டத்தில் இருந்ததில்லை. புட்டின் உக்ரேன் மீது முதல் வேட்டை தீர்க்க பல ஆண்டுகள் முன்பே படைதவனை பார்க்க போய்விட்டார்.

பிகு

அப்பனுக்கே அரைகோவணம் இதுல மகண்ட டவுசர்ல ஓட்டை எண்டு சிரிச்சாராம்🤣

இதில் வயதில் மூத்தவர் நீங்கள் என்பதால், அப்பனும் அரைக் கோவணமும் உங்களுக்கு, மகனுடைய வயதில் நான் இருப்பதால் ஓட்டை ரவுசர் எனக்கு. 

🤣🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான்: ரஷ்யா திட்டவட்டம்!

புட்டினின்... நெருங்கிய நண்பரின், மகளை கொன்றது... உக்ரைன் சிறப்பு சேவைகள் தான்: ரஷ்யா திட்டவட்டம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ அருகே காரை ஓட்டிச் சென்ற 29 வயதான தர்யா டுகினா கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

தர்யா டுகினாவின் தந்தையான புடினுக்கு நெருக்கமான முக்கிய தீவிர தேசியவாதியான அலெக்சாண்டர் டுகின் தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ஆனால், இந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ள உக்ரைன் அதிகாரிகள், இந்த குண்டுவெடிப்பில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை, நேற்று இந்த வழக்கைத் தீர்த்துவிட்டதாகவும், உக்ரைன் இதற்கு நேரடியாகப் பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியது.

உக்ரைனிய சிறப்பு சேவை ஒப்பந்தக்காரரான உக்ரைனியப் பெண் ஒருவர் தனது இளம் மகளுடன் ஜூலை மாதம் ரஷ்யாவிற்குள் நுழைந்ததாகவும், அந்த பெண், டுகினா இருந்த அதே கட்டடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுத்து தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பெண், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று ஒரு மினி கூப்பரில் மாஸ்கோ வழியாக டுகினாவைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக அவர் மூன்று வௌ;வேறு உரிமத் தகடுகளைப் பயன்படுத்தினார்.

குண்டு வெடிப்புக்குப் பிறகு சந்தேக நபர் எஸ்டோனியாவுக்குத் தப்பிச் சென்றதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் ஆலோசகர், மைக்கைலோ போடோலியாக், ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை ஒரு கற்பனை உலகில் இருப்பதாக கூறினார்.

இதன்பிறகு, சந்தேக நபரின் கார் ரஷ்யாவுக்குள் நுழைவதையும், அவர் டுகினாவின் கட்டிடம் என்று கூறப்படும் இடத்திற்குள் நுழைந்து, ரஷ்யாவை விட்டு வெளியேறும் பாதுகாப்பு காட்சிகளையும் காட்டும் காணொளியினை ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவை வெளியிட்டது.

https://athavannews.com/2022/1295803

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

புட்டினின்... நெருங்கிய நண்பரின், மகளை கொன்றது... உக்ரைன் சிறப்பு சேவைகள் தான்: ரஷ்யா திட்டவட்டம்!

உக்ரேனுக்கு சிறப்பான பெரிய சம்பவம் ஒன்று காத்திருக்கு.....😎
பாவம் உக்ரேன் ஆர்ரையும் பேச்சைக்கேட்டு சாம்பலாக போகுது 😂

இதிலும் மாண்புமிகு புட்டின் ஐயாவை போற்ற வேண்டும். ஏனென்றால்  அதிக உயிரிழப்புகள் இல்லாத போராக வழிநடத்தி செல்கின்றார்.💓

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை நினைக்க பாவமாக இருக்கிறது

இது மிகப்பெரிய தோல்வி அவமானம்

அதையும் மீறி வெளியில் இதை சொல்கிறார் என்றால் உள் வீடு அதைவிட ஆபத்தில், அவமானத்தில், தோல்வியில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.