Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை"  எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை,  ஜேர்மனியில் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜேர்மனியில் ஆரம்பம்!

உலகிலேயே... முதல் முறையாக, "ஹைட்ரஜனை"  எரிபொருளாகக் கொண்டு.. இயங்கும் ரயில் சேவை,  ஜேர்மனியில் ஆரம்பம்!

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இரயில்களின் சேவை ஜேர்மனியில் நேற்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

லோயர் சாக்ஸோனி மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ள 14 ஹைட்ரஜன் ரயில்கள் மூலம், 4 நகரங்களை இணைக்கும் 100 கி.மீ. இரயில் பாதையில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் தயாரித்த ரயில்கள், குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் பக்ஸ்டெஹூட் ஆகிய வடக்கு நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பிராந்திய ரயில் நிறுவனமான எல்.என்.வி.ஜி.ஆல் இயக்கப்படுகிறது.

இதுவரை பயன்படுத்தப்பட்ட டீசல் இரயில்களுக்கு மாற்றாக, புவியை வெப்பமாக்கும் வாயுக்களை முற்றிலும் வெளியிடாத ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

9.3 கோடி யூரோக்கள் செலவில் தொடங்கப்பட்டுள்ள இந்த இரயில் திட்டத்தால் ஆண்டுக்கு 4,400 டன் கரியமில வாயு காற்றில் கலப்பது தடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோரடியா ஐலின்ட் ரயில்கள் 1,000 கிலோமீட்டர்கள் (621 மைல்கள்) மற்றும் அதிகபட்ச வேகம் 140 KPH வரை இருக்கும் என்று அல்ஸ்டோம் கூறுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதன் மூலம் ரயில்கள் ஆண்டுக்கு 1.6 மில்லியன் லிட்டர் (422,000 கேலன்களுக்கு மேல்) டீசல் எரிபொருளைச் சேமிக்கும்.

ஹைட்ரஜன் தற்போது வேதியியல் செயல்முறைகளில் ஒரு துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் ஜேர்மன் சிறப்பு எரிவாயு நிறுவனமான லிண்டே மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1296053

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ரயில் பல வருடங்களாக பரீட்சார்த்த சேவையில் இருந்தது.பிரான்ஸ் தொழில்நுட்பவியாளர்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளார்கள் என நினைக்கின்றேன்.

இதேபோல் இப்போது சீனாவில்   பறக்கும்  Transrapid  எனும்   வேக ரயிலும் ஜேர்மனியில் தான் கண்டு பிடிக்கப்பட்டது....

  • கருத்துக்கள உறவுகள்

140/150 கி.மீ  என்பது ரயில்களுக்கு நிதானமான வேகம்.......தொடரட்டும் தொழில்நுட்பம்......!   👏

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

இதை, ஒரு மாதம் கைமாத்தா எடுக்க என்ன செய்யோணும்.

சிலோனிலை டீசல் தட்டுப்பாடு. பாவிச்சுப்போட்டு, பத்திரமா தல்லாம்..

1 hour ago, தமிழ் சிறி said:

உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில் சேவை ஜேர்மனியில் ஆரம்பம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

@குமாரசாமி

இதை, ஒரு மாதம் கைமாத்தா எடுக்க என்ன செய்யோணும்.

சிலோனிலை டீசல் தட்டுப்பாடு. பாவிச்சுப்போட்டு, பத்திரமா தல்லாம்..

தலதா மாளிகையிலை இருக்கிற, புத்தரின் பல்லை தந்தால்… இந்த, ரயிலை தரலாம். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, Nathamuni said:

இதை, ஒரு மாதம் கைமாத்தா எடுக்க என்ன செய்யோணும்.

சிலோனிலை டீசல் தட்டுப்பாடு. பாவிச்சுப்போட்டு, பத்திரமா தல்லாம்..

அவனுகளுக்கு வருசம் முழுக்க எரிச்சு எறிக்கிற சூரிய வெப்பத்தையே உபயோகிக்க தெரியேல்ல.....இந்த லட்சணத்திலை தண்ணியில ஓடுற ரயில் கேக்குதோ? 😂😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அவனுகளுக்கு வருசம் முழுக்க எரிச்சு எறிக்கிற சூரிய வெப்பத்தையே உபயோகிக்க தெரியேல்ல.....இந்த லட்சணத்திலை தண்ணியில ஓடுற ரயில் கேக்குதோ? 😂😁

அண்ணன் தம்பிகளையே உபயோகிக்க தெரியாது கண்டால் கொல் என்பவர்களிடம்??? ☹️

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் பார்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது.. இந்த தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய காரை தயாரித்து பரீட்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களோடு கலந்தாலோசித்த போது.. இந்த தொழில்நுட்பம் வீதிக்கு வருவதற்கு இன்னும் காலமெடுக்கும் என்று சொன்னார்கள்.

காரணம்.. ஐதரசனை சேமித்து வைப்பதில் உள்ள பிரச்சனை. ஒரு விபத்து நிகழும் என்றால்.. உயர் அழுத்தத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஐதரசன் வெடிச்சு சிதறினால்.. பெரும் அழிவு ஏற்படும். அந்த வகையில் தகுந்த பாதுகாப்புப் பொறிமுறை இன்றி இதனை வீதிக்கு இறக்க முடியாது. மேலும் ஐதரசனை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, விசுகு said:

அண்ணன் தம்பிகளையே உபயோகிக்க தெரியாது கண்டால் கொல் என்பவர்களிடம்??? ☹️

2009 ன் பின்னர் திருந்துவார்கள் என்று பார்த்தால்  மாறாக நேரடி இனவாத வக்கிரத்தையே காட்டினார்கள்.
பஞ்சம் தலைக்கு மேல் வந்து சிங்கள மக்களே தங்கள் தலைமைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை வந்த போதாவது சிங்கள இனவாதம் தன்னை சுதாகரித்து கொள்ளும் என்று பார்த்தால் அதுவுமில்லை.

சிங்களம் தனது தற்போதைய பண/பஞ்ச பிரச்சனையை ஏதோ சர்வதேச பிரச்சனைபோல் நினைத்து உலகுடன் பேச்சுவார்த்தை செய்கின்றது.

சிந்திக்க....
அண்மைக்காலங்களில் தமிழ்பகுதிகளில் நடக்கும் கோவில் கொண்டாட்டங்களை குறிப்பாக நல்லூர் தேர் மக்கள் சமுத்திரத்தை  உலக நிதி நிறுவனங்கள் பார்த்தால் சிங்களத்திற்கு கடன் வழங்குவார்களா என்பது சந்தேகமே.தமிழ் பகுதிகளில் புதிதாக தோன்றியிருக்கும் ராஜகோபுரங்களை பார்த்தாலே பிரமித்து போவார்கள்.

இப்போது சொல்லுங்கள் பணம் யாரிடமில்லை. சிங்களவனிடமா அல்லது தமிழனிடமா? இல்லையேல் சிங்கள இனவாத அரசிடமா?

நான் சொல்ல வருவது என்னவெனில் தமிழனின் பக்கபலம் இல்லாமல் இலங்கை எவ்விதத்திலும் மீள சாத்தியமில்லை. குறிப்பாக தேயிலைத்தோட்ட தொழிலாளர் தொடக்கம்  அரசியல்/பொருளாதார ஆலோசகர் வரைக்கும் தமிழரின் பங்கு இவர்களுக்கு முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நானும் உங்கள் கருத்தையே எதிர்மறையாக சொன்னேன் அண்ணா 👏

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் பார்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது.. இந்த தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய காரை தயாரித்து பரீட்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களோடு கலந்தாலோசித்த போது.. இந்த தொழில்நுட்பம் வீதிக்கு வருவதற்கு இன்னும் காலமெடுக்கும் என்று சொன்னார்கள்.

காரணம்.. ஐதரசனை சேமித்து வைப்பதில் உள்ள பிரச்சனை. ஒரு விபத்து நிகழும் என்றால்.. உயர் அழுத்தத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஐதரசன் வெடிச்சு சிதறினால்.. பெரும் அழிவு ஏற்படும். அந்த வகையில் தகுந்த பாதுகாப்புப் பொறிமுறை இன்றி இதனை வீதிக்கு இறக்க முடியாது. மேலும் ஐதரசனை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன. 

அதுபோல தான் நெடுக்கர்,

இந்த மின்சார கார் பிரச்சணைக்கும் தீர்வு வருகிறது.

போதிய சார்ஜ் பாயிண்ட் இன்மை, சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் பலரை தயங்க வைத்தது.

இப்போது, பற்றரி ஆஸ் ஏ சேர்விஸ் ஜடியா வருகிறது.

சார்ஜ் பண்ணப்பட்ட பற்றரி மாற்றப்படும் சேவை, பெற்றோல் நிலையங்கள் போலவே, பற்றரி நிலையங்கள் வரப்போகுது.

அடுத்த ஆண்டில் இருந்து, மின்சார கார்கள் சந்தை விரியும். ரெஸ்லா பங்கு விழும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Nathamuni said:

அதுபோல தான் நெடுக்கர்,

இந்த மின்சார கார் பிரச்சணைக்கும் தீர்வு வருகிறது.

போதிய சார்ஜ் பாயிண்ட் இன்மை, சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் பலரை தயங்க வைத்தது.

இப்போது, பற்றரி ஆஸ் ஏ சேர்விஸ் ஜடியா வருகிறது.

சார்ஜ் பண்ணப்பட்ட பற்றரி மாற்றப்படும் சேவை, பெற்றோல் நிலையங்கள் போலவே, பற்றரி நிலையங்கள் வரப்போகுது.

அடுத்த ஆண்டில் இருந்து, மின்சார கார்கள் சந்தை விரியும். ரெஸ்லா பங்கு விழும்.

தாய்வானில் மோட்டார் வண்டிகளுக்கான பற்றரி சார்ஜ் சேவை நிலையங்கள் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தாய்வானில் மோட்டார் வண்டிகளுக்கான பற்றரி சார்ஜ் சேவை நிலையங்கள் வந்து விட்டது.

இது சீன முயல்வு.

அமேரிக்காவில் Warren Buffet முதலிட்டு உள்ளதால், ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இன்னும் சில வருடங்களில் நாடு முழுவதும் முற்றுமுழுதாக மின்சார வாகன மயப்படுத்த அசுர வேகத்தில் செல்கிறதாம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இப்ப மின்சாரகார்கள் விற்கிற விலைக்கு வாங்கிற மாதிரியா இருக்கு?????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 இப்ப மின்சாரகார்கள் விற்கிற விலைக்கு வாங்கிற மாதிரியா இருக்கு?????

எவ்வளவு தூரம் ஒரு வாரத்தில் ஓடுகிறோம். என்ன வீதியில் (நகர், விரைவு வீதி) ஓடுகிறோம் என்பதை பொறுத்து தனி மனித பொருளாதார அடிப்படையில் - இப்போதைக்கு உள்ள ஒரு கிலோவாட்க்கான நாம் கொடுக்கும் விலை என்ன போன்ற காரணிகளை வைத்து - அடுத்த 5 வருட மொத்த செலவை கணித்து பாருங்கள்.

எலெக்ரிக் மலிவாக அல்லது அதே அளவு செலவாக இருக்கும் (காரின் விலை +5 வருட செலவு).

வீட்டில் சார்ஜர் பொருத்துவதே மிக மலிவான முறை. ஆனால் இதை எல்லா வீடுகளிலும் செய்வது கடினம்.

காலம் போக போக மின்சார காரின் விலை குறையும். ஆனால் பெற்றோலின் விலையில் பெரும் பகுதி அரச வரி. இனி விரைவில் பெற்றோல் வரியை மின்சாரத்துக்கு மாற்றுவார்கள் அல்லது வீதிகளை toll வீதிகளாக்குவார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, goshan_che said:

காலம் போக போக மின்சார காரின் விலை குறையும். ஆனால் பெற்றோலின் விலையில் பெரும் பகுதி அரச வரி. இனி விரைவில் பெற்றோல் வரியை மின்சாரத்துக்கு மாற்றுவார்கள் அல்லது வீதிகளை toll வீதிகளாக்குவார்கள்.

ஜேர்மனிக்கு இப்பவே அடிமனதில்  toll  திட்டம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு இப்பவே அடிமனதில்  toll  திட்டம் உண்டு. 

வேற வழியில்லை. பெற்றோலிய வரியில் வரும் அத்தனை வருமானத்தை அரசு இழக்க முடியாது.

இங்கே M6 விரைவு பாதைக்கு சமாந்திரமாக மிகவும் நெரிசல் வரும் ஒரு பகுதியில் பத்து வருடங்கள் முன் M6 Toll என்று ஒரு வீதியை கட்டி அதில் போக காசும் எடுக்கிறார்கள். 

இதை இனி எல்லா பெரிய A, M தர வீதிகளுக்கும் செய்யக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2022 at 14:13, Nathamuni said:

@குமாரசாமி

இதை, ஒரு மாதம் கைமாத்தா எடுக்க என்ன செய்யோணும்.

சிலோனிலை டீசல் தட்டுப்பாடு. பாவிச்சுப்போட்டு, பத்திரமா தல்லாம்..

யூரோ  இல் மீண்டும் இணையுங்கள். ஒன்றுமே தரவேண்டாம்.  திருப்பியும்  தர தேவையில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

யூரோ  இல் மீண்டும் இணையுங்கள். ஒன்றுமே தரவேண்டாம்.  திருப்பியும்  தர தேவையில்லை 🤣

சீலோனுக்குத் தானே கேட்டோம். ஈரோல சிலோன்.... எப்படி கந்தையர் ? 😁

 🍷?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

சீலோனுக்குத் தானே கேட்டோம். ஈரோல சிலோன்.... எப்படி கந்தையர் ? 😁

 🍷?

ஐயா நாதம்,

காரியத்தை கெடுக்காதீர் ஓய்!

கந்தையா அண்ணை சொன்னது சொன்னதுதான் எண்டு சொல்லி, சட்டு புட்டுன்னு சிலோனை ஈரோல சேர்த்து விடும் ஓய்🤣.

இந்த ஒண்ணுக்கும் உதவாத ருப்பீச குடி முழுகிடலாம்😆.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சீலோனுக்குத் தானே கேட்டோம். ஈரோல சிலோன்.... எப்படி கந்தையர் ? 😁

 🍷?

அப்படியா...?அணில்  விடுமா?.  தண்டவாளத்தில் படுத்திருக்குமோ  ? அ[ர]ணிலுக்கு மேலாக ஓட முடியுமா  ?. மேலும் சொன்னது சொன்னது தான் முடிந்ததால் யூரோ  இல் இணைந்து விடுங்கள்” 😂 தமிழ் ஈழம் விரைவில் கிடைக்கும்...ஒரு செலவுமில்லாமல். ஐரோப்பியர்கள் எவ்வாறு கொசோவை பிரித்தார்களோ. அப்படியே தமிழ் ஈழத்தையும் எடுத்து தருவார்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு 🍷ஓ அல்லது 🕉🌿 எண்டு சந்தேகமா கிடக்கு🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஐயா நாதம்,

காரியத்தை கெடுக்காதீர் ஓய்!

கந்தையா அண்ணை சொன்னது சொன்னதுதான் எண்டு சொல்லி, சட்டு புட்டுன்னு சிலோனை ஈரோல சேர்த்து விடும் ஓய்🤣.

இந்த ஒண்ணுக்கும் உதவாத ருப்பீச குடி முழுகிடலாம்😆.

ருப்பிதானே உங்களையெல்லாம் வளர்த்தெடுத்தது....... இப்ப பவுண்ஸ்ச கண்டவுடன எல்லாம் மறந்து போச்சுதோ? .நன்றி மறக்கப்படாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ருப்பிதானே உங்களையெல்லாம் வளர்த்தெடுத்தது....... இப்ப பவுண்ஸ்ச கண்டவுடன எல்லாம் மறந்து போச்சுதோ? .நன்றி மறக்கப்படாது 🤣

ஏது ருப்பி நம்மள வளத்துச்சா? எமது பெற்றார் தமது உழைப்பாலும், சேமிப்பாலும், முதலீட்டாலும் ருப்பியை வளர்த்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.