Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

இளைஞர்களின்  வேலை இல்லா தன்மையை டக்ளஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்.

அதை எப்படி சிங்களம் பயன்படுத்துகிறதோ, அதையே அது நம் இனத்துக்கு செய்கிறது. அதைவிட மேலாக செய்வதற்க்கு அதனிடம் என்ன தகுதி, திறமை இருக்கிறது? இனத்தை விற்று பிழைப்பு, நமக்குள்ளேயே இருந்து நம்மை வேரோடு அழிக்கும் இந்த புல்லுருவியின் செயற்பாடுகளை சர்வதேசம் அறியச்செய்ய வேண்டும், அரசியற் தீர்வை சிங்களம் நமக்கு வைக்காமல் இழுத்தடிப்பதற்கும், ஆக்கிரமிப்பதற்கும்,  ஏமாற்றுவதற்க்கும் இந்த கோடரிக்காம்புகளை பயன்படுத்துவதையும், இவர்களை வைத்து அப்பாவிகளை அச்சுறுத்துவதையும் வெளிப்படுத்தவேண்டும். இப்படியானவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சந்திப்புகளை தவிர்க்கும்படி வலியுறுத்தவேண்டும். மக்களின் ஆணை பெற்றவர்கள் தூங்கினால், இப்படியான களைகள் தோன்றி வேரூன்றி அழிப்பது தவிர்க்கப்படமாட்டாது இது வெளிப்படையாக செய்யுது, மற்றவர்கள் தெரியாததுபோல் செய்து இப்படிப்பட்டதுகளுக்கு வழிசெய்து கொடுக்குதுகள். இதுகளை மனிதராக மதிக்கவே மனம் வரவில்லை. தாம் நோகாமல், மக்களை ஏமாற்றி, விற்று பிழைப்பதற்கு வெள்ளை வேட்டியும், படிப்பும் உதவுகிறது சிலதுகளுக்கு, அது இல்லாததுகள் வாயையும், கற்ற கலையையும் (கொலை கொள்ளை)  வைத்து ஏமாற்றுவதும் தற்போதைய தந்திரமான  வேலை.  கஷ்ரப்பட்டவனெல்லாம் சிறையில்!  

  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபத்தின் இறுதி நாள் நிகழ்வில் நடந்தது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்+

https://www.facebook.com/100002537511716/posts/pfbid02vPTSog1v8uHY3hJuZEmGfPoyomacKryEkRnHYH3VGL7q3TLYPVbJDGMUg6XkHqzBl/?app=fbl

ஆர் ஆக்கள் என்டு பாருங்கோ

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் பார்க்க திலீபன் அண்ணா இல்லை என்பது மட்டுமே மகிழ்வான விடயம்.

மக்கள் பிரச்சனைக்கு அகிம்சைவழி தீர்வுகாண எந்தவித முன்னேடுப்புகளும் செய்யாத அரசியல்கட்சிகள்/தலைவர்கள், தங்களை பிரபலப்படுத்த அடிபடுவது தமிழ் சமுதாயத்தின் தற்போதைய வெற்றிடத்தை அப்பட்டமாக காட்டிநிற்கிறது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். சுதந்திர தமிழீழம் மலரட்டும் - லெப்.கேணல் திலீபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2022 at 11:22, Kapithan said:

திலீபன் யாருக்கெதிராக உண்ணாவிரதமிருந்தார்?

அவர்கள்தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம். 

எத்தனை யுகங்கள் சென்றாலும், திலீபனும் பூபதியும் இந்திய பயங்கரவாதிகளுக்குச் சிம்ம சொற்பனம்தான்.

🙏

உண்மை,

அதனால்தான் இந்தியத் துணைத்தூதரகம் அமைக்குமுன்பே தியாக தீபத்தின் நினைவிடத்தை இடிப்பித்தார்கள்.ஆனால் அதன்பின் ஆண்டுதோறும் நினைவுகூற அதிகரித்துவரும் மக்கள்தொகை இந்தியனுக்கு கடுப்பை ஏற்றக் கைக்கூலிகளை இறக்கிவிட்டுக் குழப்புகிறார்கள்.  

On 28/9/2022 at 11:52, nunavilan said:

இந்திய அரசு எப்பொழுதும் எமக்கு கழுத்து அறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களுக்கு மிண்டு கொடுப்பவர்களை தமிழ் மக்கள் இனம் கண்டு  ஒதுக்க வேண்டும்.

தமிழினம் செய்யுமா?

On 28/9/2022 at 12:02, புலவர் said:

ibc,dan,thinakural,veerakesarari,lankasri உடபட உனைத்து ஊடகங்களும் தமிழ்த்தேசி முன்னனி மீது கூசாமல் பழியைப் போட்டன. அனைத்தும் இந்தியாவின் தாளத்திற்கு ஆடும் கூட்டங்கள். தமிழ்த்தேசிய மக்கள முன்னனி இந்தியாவுடன் அனுசரித்துப் டபோகாத காரணத்தாலேயே அதன் மீது சேறு பூசும் வேலைகளில் இந்தியாவின் அனுசரணையோடு இந்தத்தரகர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்களைத் தமிழ் ஊடகமென்று அழைப்பதே தவறு. சிங்களத்துக்கும் இந்தியத்துக்கும் ஏவல் செய்யும் தமிழ்மொழி ஊடகம். கிட்டத்தட்ட பிபிசி தமிழ் மாதிரி

On 28/9/2022 at 12:57, satan said:

சிங்களம்  இப்போ இருக்கும் நிலையில், நினைவஞ்சலிக்கு தடையேற்படுத்தி சர்வதேசத்திடம் மாட்டுப்பட்டு அவப்பெயரை சம்பாதிக்காமல்,  தான் குழப்பாமல் குழப்பிகளை களமிறக்கிவிட்டுள்ளது. அதற்காகவே ரணில் பதவிக்கு வந்ததும் வராததுமாக டக்கிளஷை அவசரமாக அழைத்தார். இவருக்கு என்ன தகுதியிருக்கென்று முண்டியடித்து கூப்பிட்டார்? இப்படியான தமிழரை குழப்பும் வேலைகளை குத்தகைக்கு விடுவதற்கே. தென்னிலங்கையில் மாவீரருக்கு சுடரேற்றி நினைவு கூர்ந்தார்கள், இன்று எங்கள் மண்ணில் இந்த அவலநிலை. இனிமேற் காலத்தில் இந்த நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டம். கலகம் செய்வோரை பாருங்கள், கவலை ஏதும் தெரிகிறதா அவர்கள் முகத்தில்? அவர்கள் யார் எந்தக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்கு மேல் இவர்கள் தமிழரா? டக்கிளஸ் எதற்கு எப்போதும் ஒப்பாரி வைத்து அறிக்கைகள் விட்டு மக்களை தன்பக்கம் அழைக்குது என்பதை மக்கள் புரிந்து வெறுத்து ஒதுக்க வேண்டும்.        

நினைவஞ்சலிகள் நடைபெறாமல் தடுக்கும் திட்டத்திற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையே இதுவாகும் என்பதே 100வீத உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

தமிழினம் செய்யுமா?

இருப்பு கேள்விக்குறி ஆகிக்கொண்டு வரும் போது  தமிழ் மக்களுக்கு உள்ள அடுத்த தெரிவு சிறந்த தலையை  தெரிவு செய்ய வேண்டும்/ உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் ஒரு சில இனங்களுக்கு கையில் பிரம்புடன் ஒரு தலைவன் தேவை. தமிழினத்திற்கும் அப்படியான ஒரு தலைவன் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் பங்கெடுக்காத ஓநாய்கள், காட்டிக்கொடுத்து கூத்தாடியதுகள் எல்லாம் பங்கு கேட்டு கொழுத்தாடுதுகள். இயக்கமே இல்லை, இருந்திருந்தால் இவர்கள் இருக்குமிடம் வேறு, இதில நானும் இயக்கம்! கேக்கவே சிரிப்பாய் இருக்கு. இதுகள் எல்லாம் தமது உலகத்தில் இருந்து இன்னும் விழிக்கவில்லை, கஷ்ரப்பட்டு உழைக்க கள்ளச் சரீரம் விடாது, அடுத்த உழைப்புக்கு திறமையில்லை, உள்ளதெல்லாம் வெருட்டி, உருட்டி, தட்டி, அடுத்தவர் பெயரை கெடுத்து அல்லது அடுத்தவர் உழைப்பில் வாழ்வது. இது சுகமானது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

இணைப்புக்கு நன்றி நுணா.

சுகாஸ் பதறாமல் சிதறாமல் தெளிவாக பதிலளிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 01:46, புலவர் said:

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2022 at 00:08, nunavilan said:

குழப்பத்தின் பின்னணியில் யார்? | ததேமமு சுகாஸ் 

On 30/9/2022 at 17:46, புலவர் said:

2 hours ago, satan said:

அது சரி ....!. கதைக்கும்போது ஏன் மணிவண்ணனின் நா குறழுது? அவர் இல்லை இவர், இவரில்லை அவர், எவராக இருந்தாலும் தமிழரின் தியாகத்தினை கொச்சைப்படுத்தி அலங்கோலப்படுத்தியுள்ளார்கள், எப்படி தமிழரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு சேவை செய்வார்கள்? எங்கும் தமக்கே முன்னுரிமை தேடுகிறார்கள், அதற்காக வீரர்களின் தியாகங்களை பயன்படுத்துகிறார்கள். மணிவண்ணனுக்கு எதிராக குமார் பொன்னம்பலம் முதலில் வைத்த குற்றச்சாட்டு, கூட்டத்துக்கு கலகக்காரரை அழைத்து வந்தது என்பதே! குமார் பொன்னம்பலத்தை பழிவாங்க, சாதாரண மக்களையும், அவர்களின் கொள்கைகளையும், துயரங்களையும், இழப்புகளையும் அடகு வைக்கிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது?  அவர் சேர்ந்த இடம் அவருக்கு தோதானதே.

எனக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மேல்...
கொஞ்ச நல்ல அபிப்பிராயம் இருந்தது.
இதோடை... எல்லாத்தையும் பாழாக்கி விட்டார்.
ஒருவன் சேருகின்ற  கூட்டத்தை வைத்து, அவனை காலம் காட்டிக் கொடுத்து விடும்.

நல்ல காலத்துக்கு... இந்தக் காணொளிகள், சில ஒளிப்பதிவுகள் கிடைத்தது.
இல்லா விட்டால்,  முழுப் பழியும் கஜேந்திரகுமார் கட்சி மேல் விழுந்திருக்கும். 

வேலன் சுவாமியின் முகத்திரையும்.. ஆரம்பத்திலேயே.. கிழிந்தது நல்லதாய் போச்சு.
இதற்காகத் தன்னும்... திலீபன் அண்ணாவுக்கு நன்றி.    🙏

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மரண வீட்டில் கூட நானா நீயான்னு சண்டை பிடிக்கிற ஒரு கீழ்த்தரமான இனம் தாம் நம் தமிழினம். இது காக்கா குருவியில் கூட இல்லாத மிகக் கீழ்த்தரம். அதிலும் ஒட்டுக்குழுக்களும் ஒற்றர்களும் எதிரிகளும் நிறைந்த மண்ணில் திலீபனை நினைவுகூற விடுவினமோ..

காந்திக்கு பூமாலை போடும் பொழுது ஒரு சண்டையும் இல்லை. ஆனால் திலீபன் நினைவிடத்தில் சண்டை. ஆக இந்தச் சண்டைகளின் பின்னால் யார் இருக்கினம்.. அவைட தேவை என்ன என்பதை இன்னும் புரியாவிட்டால்.. அவர்கள் சராசரி தமிழர்களே அல்ல.

இதையும் தாண்டி திலீபன் நினைவுகூறப்பட்டான் என்பதே இப்போதைக்குப் போதுமென்றாகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாக தீபம் திலீபத்தின் நினைவுகளின் தொகுப்பை இந்தத் திரிக்கப் பொருத்தமாக இருப்பதால் இணைத்துள்ளேன்.

நன்றி - யூரூப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.