Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி

By T. SARANYA

08 DEC, 2022 | 04:46 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மாலைவேளை வரையும் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான மழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகின்றது.

பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, நேற்று புதன்கிழமை(07) இரவு 11.30 மணியளவில் சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. அச்சூறாவளிப் புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இது திருகோணமலையிலிருந்து கிழக்காக 370 கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6 பாகை கிழக்காகவும், மையம் கொண்டுள்ளது.

இப்புயல் மேற்கு, வடமேற்குத்திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை 9 ஆம் திகதி இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மேகமூட்டமான வானம் காணப்படும்.

வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 தொடக்கம், 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும். மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மன்னார் முதல் காங்கேசங்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களிலும், மீனவ சமூகத்தினரும் கடலில் பயணம் செய்வோரும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேற்குறிப்பிட்ட கடற் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீற்றரிலிருந்து, 3.5 மீற்றர் வரை எழக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 26 அடி 10 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9 அங்குலமும்,  வாகனேரிக்குளத்தின் நீரமட்டம் 15 அடியும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 7 அங்குலமும், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7 அடி 2 அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீரமட்டம் 13 அடியும், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8 அடி 7 அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 23 அடி 8 அங்குலமும், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 6 அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/142553

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிர் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு!

கடும் குளிர் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு!

கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.

மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.

இந்த நிலையில், அவற்றை மீட்டு, தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

https://athavannews.com/2022/1314736

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கடல்நீர் கரையை அரிக்கிறது கவனமாக இருத்தல் வேண்டும்........! 

வீடியோ நன்றாக இருக்கின்றது, நன்றி தனி.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

சிறி @nilmini    க்கு ஒரு போனைப் போட்டு பாருங்க.இப்ப தான் நிறைய பணத்தைக் கொட்டி வீடு கட்டியிருந்தா.

7 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

ஈழப்பிரியன்... இந்தக் காணொளி  தனிக்காட்டு ராஜாவின் முகநூல் பக்கத்தில் இருந்தது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி @nilmini    க்கு ஒரு போனைப் போட்டு பாருங்க.இப்ப தான் நிறைய பணத்தைக் கொட்டி வீடு கட்டியிருந்தா.

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

சிறி , கிருபா அண்ணா 1௦௦ வருடம் நின்று பிடித்த வீடு. புயலுக்கு அசையாமல் இருக்கு.

9 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

சங்கக்கடைக்கு பக்கத்துக்கு வீடு போல இருக்கு சிறி. ரோட்டும் மாறி, கடைகளும் புது வீடுகளும் வந்து இடமே உரு மாறுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

நன்றி அண்ண அந்த கடற்படை முகாம் அமைந்திருப்பது நான் பிறந்து வளர்ந்த காணி சுனாமியின் பின்னர் கடற்படை கைப்பற்றியது (அரச காணியென அறிவித்தது அரசு) தினம் அங்க போவது வழமை ஏதோ ஓர் நிம்மதி போல. ஊரை காக்க எல்லையில் ஒரு கோவிலையும் கட்டி வைத்தோம் இன்று அதுவும் கடலுக்குள்வீழ்ந்துள்ளது மதில் 30 வருடத்திற்கு மேலாக இருந்த பூவரசும் சாய்ந்துள்ளது கடலில். தொழில் செய்வதும் இனி சவாலே கரைவலை இழுப்பது. 

4 hours ago, suvy said:

கடல்நீர் கரையை அரிக்கிறது கவனமாக இருத்தல் வேண்டும்........! 

வீடியோ நன்றாக இருக்கின்றது, நன்றி தனி.......!  👍

நன்றி அண்ணை  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

சிறி , கிருபா அண்ணா 1௦௦ வருடம் நின்று பிடித்த வீடு. புயலுக்கு அசையாமல் இருக்கு.

சங்கக்கடைக்கு பக்கத்துக்கு வீடு போல இருக்கு சிறி. ரோட்டும் மாறி, கடைகளும் புது வீடுகளும் வந்து இடமே உரு மாறுகிறது

நில்மினி… சங்கக் கடைக்கு பக்கத்து வீடு போல்தான் தெரிகின்றது.
அவ்விடத்தில் ஒரு Pharmacy‘ம் புதிதாக  உள்ளது.

8 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

ஆஹ.. நீங்களும் தனியின் முக நூலில் உள்ளீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

ஆஹ.. நீங்களும் தனியின் முக நூலில் உள்ளீர்கள்...

கன காலமாக…. “டம்மி”  பெயரில், பல யாழ்.கள உறவுகளின் முகநூலில் உள்ளேன். 😁

Just now, தமிழ் சிறி said:

கன காலமாக…. “டம்மி”  பெயரில், பல யாழ்.கள உறவுகளின் முகநூலில் உள்ளேன். 😁

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

புல நாய் கண்டு பிடிக்காது. அதுக்கே… அல்வா கொடுத்து விடுவோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ocean and nature

2001 என நினைக்கிறன் திருவாதிரை தீர்த்ததில் சக நண்பர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள் அவர்கள் நினைவாக கட்டியது இந்த நினைவு தூபி 

May be an image of nature, ocean, tree and beach

கடற்படை முகாம் 

May be an image of 5 people, tree, body of water and text that says 'A T KTV-KTV'

May be an image of 6 people, ocean, beach and text that says 'KTV-KTV KTV'

May be an image of 6 people, beach, ocean, tree and text that says 'KTV-KTV KTV S'

அரித்து செல்லப்பட்டது இதுவரைக்கும் 100 மீற்றருக்கு மேல்

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

பயங்கர குழப்பம் போல இருக்கு அண்ணைக்கு

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி அண்ண அந்த கடற்படை முகாம் அமைந்திருப்பது நான் பிறந்து வளர்ந்த காணி சுனாமியின் பின்னர் கடற்படை கைப்பற்றியது (அரச காணியென அறிவித்தது அரசு) தினம் அங்க போவது வழமை ஏதோ ஓர் நிம்மதி போல. ஊரை காக்க எல்லையில் ஒரு கோவிலையும் கட்டி வைத்தோம் இன்று அதுவும் கடலுக்குள்வீழ்ந்துள்ளது மதில் 30 வருடத்திற்கு மேலாக இருந்த பூவரசும் சாய்ந்துள்ளது கடலில். தொழில் செய்வதும் இனி சவாலே கரைவலை இழுப்பது. 

நேற்று நீங்கள் இணைத்த காணொளியை பார்த்த போது…
கடலின் சீற்றத்தைப் பார்த்த எங்களுக்கே அச்சமாக இருந்தது.

பிறந்து வளர்ந்த காணியை… சுனாமியுடன்,
கடற்படை தமது உடமையாக்கிக் கொண்டது சோகமான விடயம். 😥

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

 கண்டு பிடிங்களன் பார்ப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி

By T. SARANYA

09 DEC, 2022 | 04:47 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த சூறாவளி நாளை காலை புயலாக மாறி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவியதோடு சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியது.

மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தினால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் காற்றினால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இம் மாவட்டங்களில் 1,305 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மூன்று உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

உடப்புஸ்ஸல்லாவை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று நுவரெலியா - ராகலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 54 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் 1,302 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/142669

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நேற்று நீங்கள் இணைத்த காணொளியை பார்த்த போது…
கடலின் சீற்றத்தைப் பார்த்த எங்களுக்கே அச்சமாக இருந்தது.

பிறந்து வளர்ந்த காணியை… சுனாமியுடன்,
கடற்படை தமது உடமையாக்கிக் கொண்டது சோகமான விடயம். 😥

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

எச்சரிக்கையாய் இருங்கள் தனி.
இரவு வீசிய காற்றால் தகரங்கள் எழுப்பிய சத்தத்தால் நிம்மதியா நித்திரை கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

சற்று முன் மேலே நீங்கள் இணைத்த படங்கள்… இரண்டு மீற்றருக்கு மேல் கடல்….
தரை மண்ணை, வாரி எடுத்துக் கொண்டு போயுள்ளது. மிகவும் ஆபத்தான அறிகுறி.
வேறு நாடுகளில் என்றால்… கடல் அரிப்புக்கு, எப்போதோ முன் நடவடிக்கைகளை
அரசு எடுத்திருக்கும். தமிழ் நிலம் என்றபடியால்… கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

எச்சரிக்கையாய் இருங்கள் தனி.
இரவு வீசிய காற்றால் தகரங்கள் எழுப்பிய சத்தத்தால் நிம்மதியா நித்திரை கொள்ள முடியவில்லை.

நன்றி ஏராளன் 

இங்கயும் அதுமட்டும் இல்லை நுவரேலியா போல கடும் குளிர்  பெரியவர்கள் , சிறியவர்கள் கடும் அவதியுற்றார்கள் மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

பயங்கர குழப்பம் போல இருக்கு அண்ணைக்கு

தெளிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சற்று முன் மேலே நீங்கள் இணைத்த படங்கள்… இரண்டு மீற்றருக்கு மேல் கடல்….
தரை மண்ணை, வாரி எடுத்துக் கொண்டு போயுள்ளது. மிகவும் ஆபத்தான அறிகுறி.
வேறு நாடுகளில் என்றால்… கடல் அரிப்புக்கு, எப்போதோ முன் நடவடிக்கைகளை
அரசு எடுத்திருக்கும். தமிழ் நிலம் என்றபடியால்… கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

அநேகமாக இந்த பகுதிகள் அனைத்தும் கடற்தொழிலுக்கு மிக முக்கியமான பிரதேசங்கள் அண்ண கல்லும் போட முடியாது தோணி படகு கரைக்கு இழுக்க முடியாது அதனால்  கடல் பின்னுக்கு போனால் தான் உண்டு சில இடங்களில் கல்லை இட்டு நிரப்பியுள்ள்ளார்கள் நிரப்பிய பகுதியை விட்டு மற்ற பகுதிக்குள் கடல் உள் வருகிறது அதில் எனது ஊரும் உண்டு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி ஏராளன் 

இங்கயும் அதுமட்டும் இல்லை நுவரேலியா போல கடும் குளிர்  பெரியவர்கள் , சிறியவர்கள் கடும் அவதியுற்றார்கள் மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்கள்

மாரிகாலம் தொடங்கியதற்கு நேற்றுத் தான் போர்வை போர்த்தி படுத்தது. 2 நாளா சூரியனை காணேல, நாளைக்கு உங்க வருவார்! எங்கட பக்கமும் அனுப்பிவிடுங்கோ.🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.