Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை

4-12.jpg

உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கமைய , உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமை இலங்கைக்குரியதாகும்.

தவறான தகவலால் எழுந்துள்ள சர்ச்சை
இந்நிலையில்,அரசியல்வாதியாகவும்,பலரும் இரசிக்க கூடிய நடிகராகவும் உள்ள கமல்ஹாசன் இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளமை பலர் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.

இருப்பினும், இது தொடர்பில் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதுடன்,அடுத்த வார நிகழ்ச்சியில் இதற்கு பதிலளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டார நாயக்க கணவரின் மரணத்தை அடுத்து பிரமதராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், ‘உலகின் முதலாவது பெண் பிரதமர்’ எனும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://akkinikkunchu.com/?p=232596

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால்... 
சம்பந்தப் பட்டவர் அதற்கு விளக்கம் கொடுப்பதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்... தாம் விரும்பும் ஆட்களுக்கு  முட்டுக் கொடுப்பதை  
பல இடங்களில் காண்பது வெறுப்பை தருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம்.

இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார்.

ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார்.

அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அந்த மணியை… சவுக்கு சங்கர் எடுத்த பேட்டியில்,
விடுதலைப் புலிகள் பற்றி… சவுக்கு சங்கர் கேட்க,
மணியோ…. உருட்டு கண்களுடன் சொன்ன பதில்களை பார்த்த பின்…
இருவரின் “யூ ரியூப்” விடியோக்களையும் நான் பார்ப்பதில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாச தவிர்ந்த சுதந்திரத்துக்கு பின்  இலங்கையை ஆண்ட கூட்டம்கள் அனைத்தும் கண்டிய மேல்குடி சிங்கள கூட்டம் இதுக்குள் ஆண் ஆண்டாள் என்ன பெண் ஆண்டாள் என்ன தமிழனுக்கு விடிவு வந்ததா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால்... 
சம்பந்தப் பட்டவர் அதற்கு விளக்கம் கொடுப்பதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்... தாம் விரும்பும் ஆட்களுக்கு  முட்டுக் கொடுப்பதை  
பல இடங்களில் காண்பது வெறுப்பை தருகின்றது.

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

சரியாக சொன்னீர்கள்.
அரசியலில் கூட… அவருடன் சேர்ந்து இருந்தவர்கள் பலர் விலத்தி விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

கமல் மட்டுமா, ரசனியும் தான்...🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம்.

இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார்.

ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார்.

அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.

🤣 நம்ம உடான்ஸ் சாமிக்கே டப்ஹ் கொடுப்பார் போல இருக்கே மணி🛎️

9 hours ago, தமிழ் சிறி said:

அந்த மணியை… சவுக்கு சங்கர் எடுத்த பேட்டியில்,
விடுதலைப் புலிகள் பற்றி… சவுக்கு சங்கர் கேட்க,
மணியோ…. உருட்டு கண்களுடன் சொன்ன பதில்களை பார்த்த பின்…
இருவரின் “யூ ரியூப்” விடியோக்களையும் நான் பார்ப்பதில்லை. 😂

யாழிலும் மணியை அந்த நேரம் எல்லாரும் போட்டு அடித்தது நியாபகம் இருக்கும்.

9 hours ago, பெருமாள் said:

பிரேமதாச தவிர்ந்த சுதந்திரத்துக்கு பின்  இலங்கையை ஆண்ட கூட்டம்கள் அனைத்தும் கண்டிய மேல்குடி சிங்கள கூட்டம் இதுக்குள் ஆண் ஆண்டாள் என்ன பெண் ஆண்டாள் என்ன தமிழனுக்கு விடிவு வந்ததா ?

இல்லை என்று நினைக்கிறேன். 

சிறீமா, விஜேதுங்க மட்டும்தான் உண்மையான கண்டியர். சேனாநாயக்ககள், பண்டாஸ், ராஜபக்சாஸ், கொத்தலாவல, ஜே ஆர் ….கீழ் நாட்டு சிங்களவர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

வெளிவேசத்தில் ரஜனியை மிஞ்சி விடுவார்.  தன்னை ஒரு அறிந்தவராக, முற்போக்குவாதியாக காட்டி கொள்ளும் பக்கா சங்கி. வயது போக, போக அவரை மீறி நூல் பாசம் வெளிக்காட்டி விடுகிறது.

# நூலிபான்

  • கருத்துக்கள உறவுகள்

நூலிபான்  பூநூல்களுக்கு சரியான பெயர்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழிலும் மணியை அந்த நேரம் எல்லாரும் போட்டு அடித்தது நியாபகம் இருக்கும்.

Glockenerneuerung in St.Marien Marienberg  Kollywood Journalist Mani Biography, News, Photos, Videos | NETTV4U

🔔  மணி  என்றால்.... அடிக்கத்தானே வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நூலிபான்  பூநூல்களுக்கு சரியான பெயர்.🤣

எனதல்ல. ஏலவே புழக்கத்தில் உள்ள சொல்லாடல்தான்.

1 hour ago, தமிழ் சிறி said:

மணி  என்றால்.... அடிக்கத்தானே வேணும். 🤣

இந்த மணியை உதைக்கோணும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த மணியை உதைக்கோணும்🤣

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

மணின்னாலே புரியணுமோன்னோ🤣

பராவாயில்லை அங்க நீங்க வந்து மணி அடிக்காதவரை நாங்க அங்கயே இருந்துகரோம் எண்டு சொல்லி உதையுங்கோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

இப்படி சொல்லியே எங்களை லூசர் ஆக்கிவிட்டார்கள் நூலிபான்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்பது பிழை. உலகில் முதலாவது பெண் பிரதமர் என்பதே சரி.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் அரசியல்வாதிகளில்

இருக்கும் கூத்தாடிகளின் 

கமல்ஹாசன் அறிவார்ந்தவரே. 

இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை 

மேடையில் பேசும் போது இவ்வாறான தவறுகள் வருவது சாதாரணம் 

  • கருத்துக்கள உறவுகள்

பிக் பாஸில் தன் தவறை ஒப்புக் கொண்ட கமல்ஹாசன்

பிக்பாஸ்: நடிகர் கமல் ஹாசன்

பட மூலாதாரம்,VIJAY TV

2 மணி நேரங்களுக்கு முன்னர்

"உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்" என, கடந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18) நிகழ்ச்சியில் அவர் திருத்திக் கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபாரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 6' நிகழ்ச்சியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் போட்டியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

அப்போது 'பிக்பாஸ்' வீட்டிலுள்ள போட்டியாளர்களிடம் கடந்த வாரம் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, அவர்கள் வழங்கிய பிழையான பதில்களை அவர் நினைவுபடுத்தி நகைச்சுவையாகப் பேசினார்.

இதன்போது ஒரு கட்டத்தில், உலகின் பெண் பிரதமர் தொடர்பாக, தான் கடந்த வாரம் தெரிவித்த பிழையான தகவல் பற்றியும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.   

"எனக்கே கூட பிழைகள் நேரும். அவற்றைச் சுட்டிக் காட்டும் போது மறுத்துப் பேசாமல், உடனடியாக ஒத்துக் கொள்வது சிறப்பு. ஏனென்றால் அது நம்மை மேம்படுத்தும்” என அப்போது கமல் கூறினார்.  

”இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்று, இந்திரா காந்தியைச் சொல்லி விட்டேன். அதன்பிறகு எனக்கு திருத்தம் சொல்லி பல பேர் செய்தியனுப்பினார்கள். சமூக ஊடகங்களில் நிறையப்பேர் சொன்னார்கள். உலகின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எனக்கு தெரியாமல் போனமைக்கு வயதுதான் காரணம்".

"எனக்கு அரசியலில் சின்னப் புரிதல் வரும் நேரத்தில் அந்த வரலாற்றை மறந்துவிட்டேன். என் நாட்டு பிரதமர் பற்றி பேச வேண்டுமென்று, பக்கத்து 'தங்கச்சி' நாட்டை மறந்து விட்டேன். அது ஒரு நினைவுப் பிழைதான்" என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; "நான் செய்த அந்தத் தவறு காரணமாக, சில பெண் தலைவிகள் பற்றி - சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்தன. அடுத்த தலைமுறை என்னைப் போல் இவ்வாறு மறதியில் தவறு செய்யாமலிருக்க அது உதவும்” என்றார்.

big boss kamal

பட மூலாதாரம்,VIJAY TV

நடந்த பிழை என்ன?

'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' என, கடந்த வாரம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து, அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பெண் விடுதலை தொடர்பாக பாரதியின் செயற்பாடுகள் குறித்து, அந்த நிகழ்ச்சியில் சிலாகித்த கமல்ஹாசன், ”பாரதி வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் 'சக்கரவர்த்தினி' என்ற ஒரு பத்திரிகையைத் துவங்கி - நடத்தி, அதில் பெண்களைக் கொண்டு எழுத வைத்தார்" என்று கூறியதோடு, "உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்பதை இந்தியாதான் செய்தது” என்றார்.  

ஆனால் கமல்ஹாசன் தெரிவித்த அந்த தகவல் பிழையானது. உலகின் முதல் பெண் பிரதமரைப் பெற்றுக் கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும். இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் சிறப்பையும் பெற்றார்.

indira gandhi sirimavo bandaranayake

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1973இல் இலங்கை பயணம் மேற்கொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க.

தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

நடிகர் கமல்ஹாசன் கடந்தவாரம் பேசும் போது இந்திரா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர் இந்திராவை மனதில் வைத்தே அந்தத் தகவலைக் கூறியிருந்தார்.

இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். அவருக்கும் பின்னர் எந்தவொரு பெண்ணும் இந்தியப் பிரதமர் பதவியை இதுவரை வகிக்கவில்லை.

எது எவ்வாறாயினும், 'உலகின் முதல் பெண் பிரதமர் யார்' எனும் தகவலை கமல் பிழையாக கூறினாரா? அல்லது மறந்து தவறாகப் பதிவு செய்தாரா என்பதை அவர் நேற்றைய நிகழ்ச்சியில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/clj3dxwxnywo

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் சிறப்பையும் பெற்றார்

பலரை கொன்று அவர்களின் இரத்ததில் பிரதமராகினவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.