Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் அபிலாசைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விவாததுக்காக எனக்கு தோன்றுவதை வைக்கிறேன் @goshan_che

இன்று இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது இந்தியாவோ இருந்துவிட்டு போகட்டும். 

கிடைக்கிறதை வாதிட்டு எடுக்க கூடிய ஒரு தீர்வுக்கு நகர்ந்து அதை சட்டமாக்கி அரசியல் திருத்தமாக்கி மாற்றமுடியாதவாறு செய்துவிட்டு தொடந்து போராட முடியாதா.?

நேரடி முதலீடு,தாயக பொருளாதார அபிவிருத்தியில் தலையிட முடியாத ஒரு தீர்வுக்கு நகர்ந்து ஒரு பொருளாதார சமநிலையற்ற நிலையை உருவாக்கி எங்களை வளப்படுத்த முடியாதா.?

இன்று எங்கள் பரம்பரை இருக்கும் மட்டுமே இந்த தாயக அபிவிருத்தியும் புலம்பெயர் முதலீடும் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து தொடர்து உரிமைக்காக போராட முடியாதா.?

வந்தால் மலை என்ற ஒரே எண்ணத்தில் தான் நகரவேண்டுமா.?

இப்போ ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் இனி தமிழினம் எதற்குமே போராடமாட்டோம் என்று ஒதுங்கிவிடும் என்ற பயம் இருந்தால் மட்டுமே இறுதித்தீர்வை பற்றி இப்போ யோசிக்க வேண்ட்டும். 

இல்லையெனில் …..

  • Replies 65
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1....முதலில் இப்படி ஒரு பேச்சுவார்த்தை தமிழர்களின் பெயரில் நடப்பதை நான் விரும்பவில்லை......வரவேற்கவில்லை  காரணம் இதன் முடிவு பேச்சுவார்த்தை தொடங்க முதலே   எனக்கு மிகவும் தெளிவாக தெரியும்    இது பேச்சுவார்த்தை இல் பங்கேற்பவரர்களுக்கும். தெரியும்  ......முடிவு தெரிந்தும்  ஏன்   இவர்கள் பேசுகிறார்கள் ?.     இப்படி பேச்சுவார்த்தை நடத்து.வது1...பிழை இல்லையா....?.2...குற்றம் இல்லையா....?..3...இந்த குற்றவாளிகளுக்கு  தண்டனை” வழங்க முடியாத.....  ?

2....எங்கள் பெயரில் ...இலங்கை தமிழர்கள் பெயரில்   ....அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துவோர்.1...ஒரு தீர்வுக்கு உடன்படிக்கை எட்டாத போதும்.....2...ஒரு உடன்படிக்கைக்கு வந்தும்   அதனை அமுல் செய்யாத போதும் ...இதில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் கடுமையாக தண்டிப்படவேண்டியவார்கள்  

3...தண்டனை”...1..அரசியலில் ஈடுபடமுடியாத.....அதாவது பாராளுமன்ற...மாநகரசபை...நகரசபை...கிராமசபை....போன்றவற்றிற்கான தேர்தலில் பங்கு பற்றக்கூடாது...2..செத்துகள் பறிக்கப்படவேண்டும்.  ....3. வெளிநாட்டு பயணம் செய்ய முடியாது 

4....பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முதல் ..ஒரு சுற்றறிக்கை வழங்கப்படவேண்டும். ...பேச்சுவார்த்தை நடத்துபவரும்.   பங்கேற்பர்வார்களும்...கண்டிப்பாக தீர்வு ஒன்றுக்கு வரவேண்டும் ...இல்லையென்றால் தண்டனை” உண்டு”....

பிறகு தொடர்ந்து எழுதுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 14:09, முதல்வன் said:

ஒரு விவாததுக்காக எனக்கு தோன்றுவதை வைக்கிறேன் @goshan_che

இன்று இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது இந்தியாவோ இருந்துவிட்டு போகட்டும். 

கிடைக்கிறதை வாதிட்டு எடுக்க கூடிய ஒரு தீர்வுக்கு நகர்ந்து அதை சட்டமாக்கி அரசியல் திருத்தமாக்கி மாற்றமுடியாதவாறு செய்துவிட்டு தொடந்து போராட முடியாதா.?

நேரடி முதலீடு,தாயக பொருளாதார அபிவிருத்தியில் தலையிட முடியாத ஒரு தீர்வுக்கு நகர்ந்து ஒரு பொருளாதார சமநிலையற்ற நிலையை உருவாக்கி எங்களை வளப்படுத்த முடியாதா.?

இன்று எங்கள் பரம்பரை இருக்கும் மட்டுமே இந்த தாயக அபிவிருத்தியும் புலம்பெயர் முதலீடும் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து தொடர்து உரிமைக்காக போராட முடியாதா.?

வந்தால் மலை என்ற ஒரே எண்ணத்தில் தான் நகரவேண்டுமா.?

இப்போ ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் இனி தமிழினம் எதற்குமே போராடமாட்டோம் என்று ஒதுங்கிவிடும் என்ற பயம் இருந்தால் மட்டுமே இறுதித்தீர்வை பற்றி இப்போ யோசிக்க வேண்ட்டும். 

இல்லையெனில் …..

இது தான் என் கருத்தும். இதே கருத்தைத் தான் யதீந்திரா இன்னொரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருகிறார்.

புலிகள் அமைப்பு பாடசாலைகளில் பிரச்சாரத்திற்கு வரும் காலங்களில் பேசுபவர் ஒரு கேள்வி கேட்பார்:

"தனி நாட்டுக்குக் குறைவான தீர்வை ஏற்றுக் கொண்டு சமாதானமாக வாழலாமா?"

ஓரிருவர் மிக கமுக்கமாக "ஓம்" என்பர்.

"அப்ப இது வரை உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு என்ன பதில் சொல்லலாம்?" என்று பேச்சாளர் மீள ஆரம்பிப்பார்.

இதே  sunken cost theory அடிப்படையிலான கேள்வி தான் இடைக்காலத் தீர்வு/நிவாரணம் எதையும் சில தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளத் தடையாக இருக்கிறதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

1...பண்டா-செல்வா. ஒப்பந்தம் 

2...டல்லி -செல்வா ஒப்பந்தம் 

3....1987 இல் இந்தியா -இலங்கை ஒப்பந்தம் 

4....திம்புவில்.   இயக்கங்கள் இலங்கை உடன் சேர்ந்து செய்த ஒப்பந்தம் 

5.....நோர்வே....சுவிற்சர்லாந்து.....போன்ற நாடுகளில் பறுந்து திரிந்து செய்த ஒப்பந்தம் 

6....ஜே..ஆரின். வட்டமேசை. மாகாநாடு 

 இப்படி நிறைய பேச்சுவார்த்தைகள்.....தீர்வுகள்   கண்டுயிருக்கிறோம...இவற்றுக்கு என்ன நடந்தது ஏன் அமுல் செய்யப்படவில்லை?.  இந்த ரணில் இதற்கு பதில் கூற வேண்டும்    இவற்றை விட நாங்கள் பெரிதாக யோசனைகள் வைத்து விட முடியாது....அப்படி வைத்தாலும் அவை அமுலுக்கு வரபோவதில்லை...

வரவிடமாட்டார்கள்...அது அவர்களின் கொள்கை தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று பலதடவைகள் வெளிப்பாடாய் சொல்லி விட்டார்கள்  அப்படியென்றால் ரணில் ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்?.    

1....தமிழர்களை மேலும் சிறு சிற....பிரிவுகளாக்கலாம்

2....இலங்கை தமிழராகிய உங்களுக்கு இலங்கையில் நாங்கள் ஒருபோதும் தீர்வு வழங்கப்போவதில்லை என்பதை தமிழருக்கு உறுதியாக புரிய வைத்தால் 

3....பேசி பிரச்சனை தீருங்கள் என்று சொல்லும் வெளிநாடுகளுக்கு...பேச்சுவார்த்தை வைத்தேன் தமிழர்களில் பல  முரண்பாடுகள் இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என பதில் கொடுக்கலாம் 

4....

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாதா.  ?. நிச்சயம் போக வேண்டும்    

பேச்சுவார்த்தை மேசையில்...காணி அதிகாரம்........பொலிஸ் அதிகாரம்....

இப்படியாக    கோரக்கூடாது.   ஏனென்றால் அவர்கள் தரப்போவதில்லை   மாறாக ஒற்றை ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமனாக. அமுல்படுத்தப்படவேண்டும் .....இலங்கை நீதிமன்ற தீர்ப்புகளில்.  நம்பிக்கை இல்லை  ...இந்தியாவில் அல்லது சீனாவில்...மேல் முறையீடு.  செய்யக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேணடும். ...   தமிழரின் தீர்வு விடயத்தில்  இந்தியா இலங்கை சீனா     ஒன்றுமையாக.  இருக்க கூடாது   முரண்பாடு எற்படவேண்டும்.   

1...இந்தியா சீனா முரண்பாடுகள் 

2....இந்தியா இலங்கை முரண்பாடுகள் 

3...இலங்கை சீனா முரண்பாடுகள்     

4...எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது 

5.  ...பேச்சுவார்த்தை எப்போதும் தமிழர்....சிங்களவர் அடிப்படையில் தான் நடைபெறவேண்டும்     முஸ்லிம்களும் தமிழர்கள் தான்   ....விரும்பினால் சிங்களவராகவும்.   இருக்கட்டும்     😄😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகு
1. கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் கருத்துக்களையும் உள் எடுத்து கீழே உரையாடலை தொடர்கிறேன். 

குறிப்பாக @புலவர் @முதல்வன்@Kandiah57 @Justin  அண்ணைகள் சொன்னவற்றில் சிலதை தேவைகளின் பட்டியல் என்ற தொனிப்பொருள் அலசப்பட்டபின் அலசுவது பொருத்தமாய் இருக்கும் என்பதால் இப்போதைக்கு அந்த விடயங்களை தரித்து வைக்கிறேன் ( parking them for the time being). 

2. இடையில் வந்த கண்நோய், வேலையில் எதிர்பாராமல் வந்த பழு காரணமாக புதனன்று தொடர முடியாமல் போய்விட்டது. பரவாயில்லை எப்படியும் பெப்ரவரி 4 ம் திகதி வரைக்கும் டைம் இருக்குத்தானே🤣.

3. எனது ஜனநாயகம், மேற்கு நாடுகள், தனி நாட்டு கோரிக்கை பற்றிய நிலைப்பாடு இங்கே அநேகர் அறிந்ததே. ஆகவே கோஷான் எவரிடமோ (மேற்கு) காசு வாங்கி கொண்டு ஏலவே தீர்மானிக்கப்பட்ட திட்டம் ஒன்றை தமிழர் தலையில் கட்ட, ஒரு “நிலத்தை பண்படுத்தும்” (preparing the ground) செயலில் இறங்கி உள்ளார் என யாரும் நினைக்க கூடும். அது நியாயமான சந்தேகம்தான். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என்று சொல்வதை தவிர என்னால் வேறு ஏதும் செய்யமுடியாது என்பதால். 

“அப்படி எந்த உள் நோக்கமும் இல்லை” என சொல்லி தொடர்கிறேன்.
 
தேவைகளின் பட்டியல் (திரட்டப்படாதது - non-consolidated)

1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல்.

2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது).

3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல்.

4. உயிர் அச்சமும் இன்றி, வன்முறை, அடக்குமுறை இன்றி இயங்கும் வாழ்வியல். 

5. பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கல்வி  / பொருளாதார,  சுதந்திரம்.

6. என்னுடைய பாரம்பரிய நிலம், சுற்றுச்குழல், இயற்கை வளம் இவற்றை அடாத்தாக யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கும் உரிமை.

7. என்னுடைய பிறந்த மண்ணில்  இரண்டாம் பிரஜையாக நடாத்தப்படாமல் கௌரவமாக வாழ ஒரு அரசியல்.

8. என்னுடைய மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு விழுமியங்கள் நான் விரும்பும் படியே ஒழுகி கடைபிடிக்கும்  தடையில்லாத வாழ்வியல். 

9. ஆண், பெண், மற்றும் இதர வர்க்கங்களுக்கிடையே சமூக ஒடுக்கு முறைகள்/வேறுபாடுகள்  கலைந்த தமிழ் தேசியம்.

10. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு
11.  நிலம் மீது உரிமை
12.  மொழி  

13. இணைந்த வடகிழக்கு

14. காணி 

15. பொலிஸ்

16. கல்வி அதிகாரங்கள் உள்ள ஒரு அலகு.

17. எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ளதில் ஓரளவுக்கு எமது தேவைகளை பட்டியல் இட்டு உள்ளோம் என நான் நினைக்கிறேன்.

இனி இவற்றை ஒரு தலைப்பில் திரட்டி, ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

திரட்டப்பட்ட தேவைகளின் பட்டியலும், அலசலும்

(List of needs (consolidated), discussion)

உயிர் பாதுகாப்பு/பொலிஸ் அதிகாரம்

மேலே உள்ள பட்டியலில் 1, 4,5, 7, 10, 15 புள்ளிகளை இது தொட்டு நிற்கிறது.

எனது கருத்து

நாம் ஏன் பொலிஸ் அதிகாரம் கோருகின்றோம்?

ஏனென்றால் இலங்கை பொலீஸ் இனவாதமானது. எம்மை இன அடிப்படையில் முன்னர் பல ஆண்டுகளாக வஞ்சித்தது.

நம்மை நாமே ஒழுங்கு படுத்த விரும்புகிறோம். எம்மை ஒழுங்கு படுத்துவோர், எம்மை போன்றோராக, எம்மில் இருந்து வருவோராக, எம் கூட்டு மக்கள் விருப்புக்கு கட்டுப்பட்டோராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

பொலீஸ் அதிகாரம் எம்மிடம் வந்தால் முன்பை விட எப்படி நிலைமை மாறும்?

எமது ஊரில் இருக்கும் பொலிஸ் எமது மக்கள் பிரதி நிதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். இனவாதம் இராது. சிங்களவர் என்பதால் யாருக்கும் எந்த சிறப்புரிமையும் கொடாது. தமிழர், முஸ்லிம் என்பதால் புறம் தள்ளியும் நடவாது.

ஏன் சிங்களவர்கள் எமக்கு பொலிஸ் அதிகாரம் பகிர மறுக்கிரார்கள்?

அது தம் கட்டுப்பாட்டில் இருந்து இந்த மண்ணை அகற்றி விடும் என நினைக்கிறார்கள். 

தனிநாட்டின் முதல் படியாகி விடும் என நினைக்கிறார்கள்.

அப்படி ஒரு பொலிஸ் சேவை சிங்களவருக்கு அநியாயம் செய்யும் என நினைக்கிறார்கள்

சரி இங்கே இரு பகுதியின் நலன்களும் என்ன?

தமிழர் - இனவாதம் அற்ற, உள்ளூர் மக்கள் சேவையில் இருக்கும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆனால் சுயாதீனமான பொலிஸ் சேவை.

சீங்களவர் - இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட, பச்சையாக சொல்வதானால் ஒரு சிங்களவரின் மேற்பார்வையில், அநேகம் சிங்களவர் இருக்கும், ஒரு பொலீஸ் சேவை.

இங்கே இரு பகுதியின் நலன்களும் ஒன்றோடு ஒன்று 180 பாகையில் முரண்படுவதாக தெரிகிறது?

இதில் இருந்து இருபகுதி நலன்களும் நிறைவாகும் ஒரு நிலையை எப்படி அடையலாம்?

உங்கள் கருத்துகளை பிரேரியுங்கள்.

கவனத்தில் எடுக்கவும்:

1. பொலிஸ் சேவை என்பது, அவர்கள் கட்டுப்படுத்தும் உள்ளூர் சமூகம் பரிச்சயமான மனிதர்களால், உள்ளூர் சமூகத்தின் அணைவுடன் நடத்தப்படவேண்டும் என்பதே உலக நடைமுறை.

2. நீங்கள் வாழும் நாடுகளில் எப்படி பொலிஸ் சேவை உள்ளூரியல் (localism), சுயாதீனம் (independence), அதிகார பரவலாக்கல் (decentralisation), போன்ற இயல்புகளை உள்வாங்குகிறது என்பதை கவனத்தில் எடுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2022 at 13:21, goshan_che said:

பொலிஸ் சேவை நகர மட்டத்தில் நிர்வகிக்கப் படுவது தான் சிறந்த தெரிவாக இருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் நிதி ரீதியாக இதைச் செய்ய இயலாது (அரசியலும் இடம் கொடுக்காது என்பது இன்னொரு காரணம்). இலங்கையில் நகரங்களுக்கு மத்திய அரசு போல வருமானங்கள் இருப்பதில்லை.

எனவே, குறைந்தது மாகாண மட்ட பொலிஸ் தான் உள்ளூர் மக்களைத் திருப்தி செய்யும் நிலைக்குக் கிட்டவாக வர முடியும் இலங்கையில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

நன்றி

உங்களுக்கும் (ஏனையோருக்கும்). மேலே ஜஸ்டின் அண்ணா பொலீஸ் அலகின் பூகோள வீச்சு (geographical reach) பற்றி சொல்லி உள்ளார்.

இதை போலவே அந்த பொலிஸ் அலகின் சேர்மானம், ஆட்சி கூம்பு (composition and command structure)

அதிகாரப்புலம் (jurisdiction)

இந்த பொலிஸ் அலகை யார் மேற்பார்வை செய்வார்கள் ( supervise )

யார் முறைப்பாடுகளை விசாரிப்பார்கள் 

என்பவை பற்றியும் கருத்துக்களை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

ஓம், அரச/முடிக்குரிய மதம் என்ற நிலை இருக்கக் கூடாதென்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நன்றி

உங்களுக்கும் (ஏனையோருக்கும்). மேலே ஜஸ்டின் அண்ணா பொலீஸ் அலகின் பூகோள வீச்சு (geographical reach) பற்றி சொல்லி உள்ளார்.

இதை போலவே அந்த பொலிஸ் அலகின் சேர்மானம், ஆட்சி கூம்பு (composition and command structure)

அதிகாரப்புலம் (jurisdiction)

இந்த பொலிஸ் அலகை யார் மேற்பார்வை செய்வார்கள் ( supervise )

யார் முறைப்பாடுகளை விசாரிப்பார்கள் 

என்பவை பற்றியும் கருத்துக்களை எழுதுங்கள்.

மாகாண பொலிஸ் என்று வைத்துக் கொண்டால், பணிக்குச் சேர அந்த மாகாணங்களில் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வாழ்ந்திருக்க வேண்டும், அந்த மாகாணங்களில் பெரும்பான்மையான மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும், இரண்டாவது மொழியில் ஒரு குறிப்பிட்ட நிலைப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்பன தகுதிகளாக இருக்கும்.

மாகாண பொலிஸ் ஆணையாளர் (commissioner) அல்லது பொலிஸ்மா அதிபர் (IG) தான் படைக்குப் பொறுப்பு.

ஆனால், மாகாணங்களிடையேயான குற்றத் தடுப்பிற்கு எப்படியும் ஒரு மத்திய பொலிஸ் படை தேவை, CBI, FBI, Carabinieri போல. அதை மத்திய அரசே இயக்கும்.

பொலிஸ் ஆணைக்குழு (Police Commission) என்ற ஒன்று இப்போது இலங்கையில் இருக்கிறது, இது IOPC போல பொலிசை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பா எனத் தெரியாதெனக்கு. ஆனால், IOPC போல ஒன்று உருவாக வேண்டும் இலங்கையில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

நன்றி அண்ணா. எனது கருத்தையும் விரைவில் இடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

நன்றி நுணா. அரச நிதி உதவியோ, முதன்மை/மத அந்தஸ்தோ, எந்த மதத்துக்கும் இருக்க கூடாது என்பதுதான் அந்த புள்ளி என நினைக்கிறேன். 

ஆனால் இது எமது “தேவையா”? அவர்கள் பெளத்தத்துக்கு அள்ளி கொடுப்பதா எம் பிரச்சனை ? அல்லது பெளத்தம் எமது பகுதியில் அத்துமீறி நுழைவதா?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக தீர்வு பல முறை எட்டப்பட்டபோதும்.     குழப்பத்தில் முடிந்துள்ளது     குழப்பத்தில் முக்கிய பங்கு பௌத்த மதத்துக்கு உண்டு”      எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்         இதை நேரடியாக சொல்ல முடியவில்லை    எனவே மேற்படி முறையில்   நாகரிகமாக சொல்லியுள்ளோம்.  எதேயினும். பிழையுண்டா  ?   கைதடியன்.   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

   எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்

அண்ணை, இதை விட தனி நாடு அமைப்பது இலகுவான விடயமாயிருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை, இதை விட தனி நாடு அமைப்பது இலகுவான விடயமாயிருக்கும்?

எனக்கு பிரச்சனையில்லை எடுங்கள் 🤣 எனது நம்பிக்கை அரசியல்வாதிகள் உடன்பாட்டாலும்.   பௌத்தமதம். ஒருபோதும் விடாது    எனவேதான் முதலில் ஒழிக்கவேண்டியது    அரசாங்கம் மதங்களுக்கு நிதியுதவி வழங்குவது    மக்கள் பங்களிப்புடன். மதங்கள் இயங்கலாம.....வளர்ச்சி அடையலாம்”    ஏன் அரசாங்கம் மதத்தை வளர்க்க வேண்டும் ஒரு மதத்தை வளர்த்து கொண்டு எப்படி நல்ணிணக்கம். பேச முடியும்  ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

நல்லிணக்கம் சாத்தியமில்லாமல் இருக்கலாம், போகலாம். ஆனால் பெளத்தத்தின் முன்னுரிமையை,  நிதி உதவியை தடுத்துத்தான் எமக்கு தீர்வு வரும் என காத்திருந்தால் - 3023 வரை காத்திருப்பதே ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

நல்லிணக்கம் சாத்தியமில்லாமல் இருக்கலாம், போகலாம். ஆனால் பெளத்தத்தின் முன்னுரிமையை,  நிதி உதவியை தடுத்துத்தான் எமக்கு தீர்வு வரும் என காத்திருந்தால் - 3023 வரை காத்திருப்பதே ஒரே வழி.

எதையுமே பெற்று கொண்டு தமிழர்களின் ராஜதந்திர திறமைமூலம் அடுத்த கட்டத்திற்கு நகருவதே சரியானதாக இருக்கும். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் நிராகரித்து செல்லம் மனநிலை தொடருமானால் நீங்கள் கூறியதுபோல் 3023 வரை காத்திருக்கலாம் அதற்கு மேலும் காத்திருக்கலாம். 😢

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக தீர்வு பல முறை எட்டப்பட்டபோதும்.     குழப்பத்தில் முடிந்துள்ளது     குழப்பத்தில் முக்கிய பங்கு பௌத்த மதத்துக்கு உண்டு”      எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்         இதை நேரடியாக சொல்ல முடியவில்லை    எனவே மேற்படி முறையில்   நாகரிகமாக சொல்லியுள்ளோம்.  எதேயினும். பிழையுண்டா  ?   கைதடியன்.   🤣

இது உண்மை. ஆனால் பௌத்த முன்னுரிமையை இல்லாமலாக்குவது நமக்கு நடைமுறையில் அவசியமான ஆணியா என்று யோசிக்க வேண்டும். இல்லையென்றே நினைக்கிறேன்:

1. இந்தியா மதச்சார்பற்ற, உலகாயத (secular) ஜனநாயகம் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இன்று இந்து மதத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் நாடு. 75% பௌத்தர்கள் கொண்ட சிறிலங்காவில் சட்டத்தை மாற்றி பௌத்த மேலாண்மையை பெயரளவில் இல்லாமல் ஆக்கினாலும், மதச்சார்பின்மைச் சட்டம் ஏனைய மதங்களைக் குறி வைக்கும், பௌத்த மேலாண்மை குறையாது - இது என் கணிப்பு.

2. பௌத்த மேலாண்மை எங்கள் மாகாணங்கள் அல்லது அலகுகளில் உள் நுழையாமல் இருக்க வேறு நுட்பங்களைப் பாவிக்கலாம். உதாரணம்: காணி உரிமை. காணிகளை எந்த மதக் கட்டுமானத்திற்கும் வழங்க முன்னர் அந்த மாகாண அதிகார அமைப்பின் ஆய்வு, அனுமதி தேவையென்று ஒரு சட்டம் இருந்தால் இதைச் செய்யலாம். இது pie in the sky தான். ஆனால், உதாரணமாகச் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

சரி தான் ....1...காணி

2..பொலிஸ்..

3....நிதி.....

இப்படியாக.    கேட்டதையோ.   திரும்பத்.   திரும்பக்  கேட்க்கிறோம்.    அவர்களும்...இல்லை   இல்லை என்கிறார்கள்    இது ஒரு காலவரையின்றி பேசப்படும் பேச்சுவார்த்தை        ஆனால் எதுவுமே நடக்க போவதில்லை எனவேதான் விரைவில் கிடைக்கும்படியானவற்றைக் கேட்க்கலாம்.  உதாரணமாக   நாடு முழுவதும்   ஒரே சட்டத்தின் ஆட்சி        குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டணை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் பலர் வாசிப்பார்கள் என நம்புகிறேன். 

அதிகம், அதுவும் மாறுபட்ட கருத்துகளை எதிர்பார்க்கிறேன். 

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -2

என் கருத்து

அதிகாரப்புலம்

1. இன்னும் என்ன அலகை கோருவது என நாம் சிந்திக்கவில்லை. அது நகர, மாவட்ட, மாகாண போலிஸ் படையாக இருக்கலாம். இப்போதைக்கு இந்த பூகோள வீச்செல்லையை - அலகு என அழைப்போம்.

2. இலங்கயில் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் ஒரு தேசிய பொலிஸ் படையும், பல உள்ளூர் பொலிஸ் படைகளும் இருக்கலாம்.

3. உள்ளூர் பொலிஸ் படைகள் - அவர்களின் அலகுகளினுள் குறித்த வகையான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் முழு அதிகாரம் உடையவராய் இருப்பர். உதாரணமாக - முழு நாட்டிற்கும் பொதுவான வீதி கோவை, போக்குவரத்து விதிகளை, அந்தந்த அலகுகளில் அவர்களின் உள்ளூர் படையே 100% அமல் படுத்தும். இதே போல் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், குற்றங்களை விசாரித்தல் போன்றவற்றையும் இந்த பொலிஸ் படையே செய்யும். அதாவது உள்ளூர் மக்களோடு முகத்துக்கு-முகம் கொடுக்கும், நாளாந்த பொலிஸ் சேவையின் 90% ஆனவை (day to day policing) இந்த உள்ளூர் அலகினாலேயே நடத்தப்படும். ஒவ்வொரு ஊரிலும் இந்த சேவைக்கு ஒரு நிலையம் இருக்கும். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொலிசாராக இருப்பர் (தமிழீழ காவல்துறையும், லண்டன் மெட் பொலிசும் 90% நேரம் அளவில் ஆயுதம் ஏந்துவதில்லை, ஏந்தியதில்லை).

4. அப்போ தேசிய பொலிஸின் அதிகாரப்புலம் என்ன? பயங்கரவாத எதிர் நடவைக்கைகள், நாட்டின் இறைமைக்கு எதிரான குற்றங்கள், கிளாஸ் A வகை போதை பொருள் எதிர் நடவடிக்கை, போன்றவற்றை இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். தேவைப்பட்டால், கொலை உட்பட்ட, 5 வருடத்துக்கு மேல் தண்டனை கிடைக்க கூடிய குற்றங்களையும் இவர்கள் கையாளலாம். மாவட்டத்துக்கு ஒரு நிலையத்தில் இவர்கள் நிலை கொள்ளலாம். இவர்களுடன் உள்ளூர் பொலிசின் இணைப்பதிகாரிகளும் இருப்பர். மக்கள்-முக (public-facing) நடவடிக்கைக்கு இவர்கள் போகும் போது இந்த இணைப்பதிகாரிகளுடன் போக வேண்டும்.

இவர்களிடம் ஒரு ஆயுதப்படை இருக்கும். தேவைப்படும் போது இவர்களின் அதிகாரிகளும், உள்ளூர் படையின் அதிகாரிகளும் இந்த ஆயுதபடையின் உதவியை கோரலாம் (வாள்வெட்டு குழுவை சமாளிக்க). 

மேலே சொன்ன இரு பொலிஸ் படைகளும், அதிகாரிகள் தற்காலிக இடப்பெயர்வு (secondment), கூட்டு பயிற்சி, பட்டறைகள் மூலம் தமது ஒருங்கிணைப்பை, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.

இந்த முறையை நான் ஏன் பிரேரிக்கிறேன்?

இங்கே முடிந்தளவு எதிர் எதிர் துருவங்களாக இருக்கும்,

தமிழரின் தேவையான, நம்மை நாமே ஒழுங்கு படுத்துதல், அந்நியர் எம்மை அதிகாரம் செய்யது தவிர்த்தல், இதன் மூலம் ஏற்படும் இனவாத விழைவுகளை தவிர்த்தல், முதலியனவை,

சிங்களவரின் தேவை அல்லது பயமாக இருக்கும், பயங்கரவாதம் வளர்வதை கண்காணிக்க முடியாமல் போய்விடும், ஒரு ஆயுதம் தரித்த தமிழர் பொலீஸ் தனி தமிழ் அரசின் இராணுவத்தின் முதல்படியாகி விடும், வடக்கு-கிழக்கில் சிங்களவர் இரெண்டாம் தரமாக நடத்தப்படுவர் 

இரெண்டையும் சமாளிக்க முயல்கிறேன்.

இந்த அணுகுமுறையில் பல நிலை விட்டு கொடுப்புகள் இருக்கிறன. உதாரணமாக முழு அதிகாரம் உள்ள, ஆயுதம் தாங்கிய உள்ளூர் பொலிஸ் என்ற நிலையை நாமும், நாட்டின் சகல பகுதியிலும் சர்வ அதிகாரம் கொண்ட, ஜனாதிபதிக்கு கீழான ஒற்றை பொலிஸ் படை என்ற நிலையில் இருந்து சிங்களவரும் இறங்கி வர வேண்டி இருக்கும்.

ஆனால் நான் மேலே கூறிய இரு பக்க நலன்களிலும் அதிக இறக்கம் இல்லாமல் - ஒரு அணைவை எட்ட முடியும்.

இங்கே பல சர்ச்சையான விடயங்களை கூறி உள்ளேன். குறிப்பாக புள்ளி 4இல். இதை அப்படியே இனவாதிகள் ஏற்று பாலும் தேனும் ஓட விடுவார்கள் என்று அப்பாவி தனமான நம்பிக்கை ஏதும் எனக்கு இல்லை.

ஆனால் முன்பே சொன்னது போல் இது எம் தெரிவுகள் பற்றி நாம், நமக்குள் அலசுவது மட்டுமே.

கருத்துகள் - எதிர் கருத்துகள், சவால்கள் வரவேற்கப்படுகிறன.

அடுத்து,  உள்ளூர் படையில் சேர்மானம், பூகோள வீச்சு, அதிகார கூம்பு, இரு படைகளுக்குமான மேற்பார்வை, அரசியல் தலைமைதும் (political Leadership) எப்படி அமைந்தால் - இந்த “நலன்களை இணைக்கும்” முயற்சி வெற்றி அடைய கூடும் என ஆராய்வோம்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.

தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள்.

எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

—————-

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -3

என் கருத்து

உள்ளூர், தேசிய பொலிஸ் படைகளின் அரசியல் தலைமை

1. உள்ளூர் பொலிஸ் சேவையின் அரசியல் தலைமை பொறுப்பை இருவகையில் கைக்கொள்ளலாம்.

அ. மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பொலிஸ் கமிசனர்கள், இரண்டு அல்லது மூன்று உதவி கமிசனர்கள்.

இந்த முறையில் கட்சி சார்ந்து அல்லது சாராமல் யாரும் நான்கு பேர் சேர்ந்து ஒரு அணியாக (candidate +3 running mates) போட்டியிடலாம். ஆனால் நால்வரில் தலா ஒரு தமிழர், முஸ்லிம், சிங்களவர் இருக்க வேண்டும்.

ஆ. அல்லது அலகின் தேர்தெடுக்க பட்ட அரசியல் சபையின் உறுப்பினர்களில் இருந்து கட்சி விகிதாசார அடிப்படையிலும், பெரும்பான்மை இனம்: சிறுபான்மை இனங்களின் கூட்டு 50:50 ஆக இருக்கும் படியும் ஒரு பொலீஸ் ஆணையத்தை அமைக்கலாம்.

மேலே உள்ள (அல்லது இதை ஒத்த) பொறிமுறைகள் - ஒரு அலகில் வாழும் சிறுபான்மைக்கும் தம்மை ஒழுங்கு படுத்தும் பொலிஸ் மீது நம்பிக்கை, எமது என்ற உணர்வை கொடுக்கும் (confidence and sense of ownership). உதாரணமாக தற்போதைய வடக்கு மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது சோனகரும், சிங்களவரும். அதே போல் தற்போதைய மத்திய மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது தமிழரும், சோனகரும் நம்பிக்கை வைக்க, எமது என உணர இது வழிகோலும். 

2. மேலே போல்ட் செய்யபட்ட “நம்பிக்கை” “எமது என உணர்தல்” என்ற தத்துவங்களின் (principles) அடிப்படையில் தேசிய பொலிசின் அரசியல் தலைமையையும் உருவாக்கலாம் (ஏலவே பொறிமுறை பற்றி சொன்னதால் - நீட்டி முளக்கவில்லை). 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கோசான், எனக்கும் இந்தக் குறைந்த பங்களிப்பு அதிசயம் தருகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாகப் பேசிக் கொண்டும், யாசித்துக் கொண்டும் இருக்கும் சில lofty தீர்வுகளின் துல்லியமான கூறுகளைப் பேச அனேகர் தயாராக இல்லை, அயர்ச்சியா அல்லது வேறெதும் காரணமா தெரியவில்லை.

"ஒற்றை ஆட்சி" "எக்க ராஜ்ஜிய" "சமஷ்டி" ஆகிய சில சொற்களை வைத்துக் கொண்டு பக்கக் கணக்காக doctoral theses எழுதிய மக்கள்  granular details என்று வந்தால் பட்டியலிடத் தயங்குகிறார்கள்!

ஆனால், தொடருங்கள், நானும் எனக்குத் தெரிந்ததைப் பதிகிறேன். நேரத்திற்கு நன்றி! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசன் - சே அவர்களே, இங்கே யாரும் தமது கருத்துகளை அல்லது ஆலோசனைகளைப் பதியவில்லை என்று கருதாது கருத்துகளை முன்வைத்தால் வாசிப்பார்களென்றே எண்ணுகின்றேன். மற்றும் இங்கு கருத்தாடும் அனைவருக்கும் நன்றி. 

சத்தியாக்கிரகம் - அடிதடி – ஒப்பந்தம் - ஒப்பந்தம் கிழிப்பு – தமிழின அழிப்பு  - போர் - சமாதான ஒப்பந்தம் - தமிழின அழிப்பு என்று ஒரே வட்டமாகச் சுழன்றடிக்கும் தமிழர் வாழ்வு தந்த பட்டறிவு, விரக்திகூட எழுதத் தடையாக இருக்கலாம். தற்போதைய பேச்சுவார்தைகூட சிங்களம் தன்னை நிலைநிறுத்தத் தமிழரை ஏமாற்றும் மற்றொரு நகர்வென்பதே பெரும்பாலான தமிழரது நிலை. நிற்க....
------------------------------------------------------------------------------------------------
மாகாண எல்லைக்குட்பட்ட ஆட்சிப் பிரதேசத்தில் மாகாண காவற்றுறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு முதன்மைக் காவல்துறை ஆணையர், முன்று துணை ஆணையர்கள், பிராந்திய ஆணையர்கள் கொண்டதொரு பொறிமுறையின் கீழான காவற்றுறைக் கட்டமைப்பும், மத்திய அரசின் கீழ் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களையும் கையாள இணைந்த காவற்றுறைக் கட்டமைப்பும் அமைதல் பொருத்தமானது.
எந்தவகைக் காவற்றுறைக் கட்டமைப்பாயினும் சமத்துவமான சட்ட ஒழுங்குபேணல் தொடர்பான வரைவுகள் அவசியமாகும். இவையனைத்தையும் கட்டமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்துதல், கற்பித்தல் போன்றவற்றை அணியம் செய்ய தலைசிறந்த காவற்றுறை ஆணைக் குழு ஒன்று இருக்க வேண்டும். அது தமிழ், முஸ்லீம், சிங்கள உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் ஐயமற்ற அல்லது அச்சமற்ற செயற்பாடுகளுக்குத் துணைபுரியலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.