Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு

By SETHU

05 JAN, 2023 | 03:10 PM
image

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் தன்னை உடல் ரீதியாக தாக்கினார் என இளவரசர் ஹரி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தனது மனைவி மேகன் மேர்கெல் தொடர்பான வாக்குவாதத்தின்போது இச்சம்பவம் இடம்பெற்றதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். 

38 வயதான இளவசர் ஹரி, Spare எனும் தனது நூலில் இதைத் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் இந்நூல் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், அந்நூலின் சில பகுதிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என  இளவரசர் வில்லியம் கூறினாரெனவும், அதன்பின், தன்னை அவர் தாக்கினார் எனவும் ஹரி தெரிவித்துள்ளார்.

William-Kate---Harry-Megan.jpg

வில்லியம், ஹரி. மேகன், கேட்

"அவர் எனது சட்டைக் கொலரை பற்றிப்பிடித்தார். எனது நெக்லஸை பிய்த்தார். என்னை தரையில் வீழ்த்தினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது நான் வீழ்ந்தேன். எனது முதுகின் கீழ் அப்பாத்திரம் உடைந்தது. அதன் சில துண்டுகள் எனக்கு காயமேற்படுத்தின" என மேற்படி நூலில் இளவரசர் ஹரி குறிப்பிட்டுள்ளார் பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பின்னர் கவலையாக காணப்பட்ட வில்லியம், மன்னிப்பு கோரினார் எனவும் ஹரி குறிப்பிட்டதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேகன் மேர்கெல், கடுமையானவர், முரட்டுத்தனமானவர் என  இளவரசர் வில்லியம் கூறினாரெனவும், அதன்பின், தன்னை அவர் தாக்கினார் எனவும் ஹரி தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

அதன்பின், 'இது குறித்து மேகிற்கு (மேகன்) சொல்லத் தேவையில்லை' என வில்லியம் கூறினார்.

நீங்கள் என்னைத் தாக்கியமை குறித்தா என  ஹரி கேள்வி எழுப்பினார்.

'நான் உங்களைத் தாக்கவில்லை' என வில்லியம் பதிலளித்தார் எனவும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹரியும். மேகன் மேர்கெலும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் இருவரும் அரச பணிகளிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/145057

  • கருத்துக்கள உறவுகள்

கார்ட்டியனில் இருந்த முக்கியமான ஒரு பகுதியை வீரகேசரி விழுங்கி விட்டது.

தன்னை அடித்த பின் “ நீ என்னை திருப்பி அடி, நாம் முன்னர் அடிபட்டு கொள்வதை போல் சகோதரராக அடிபடுவோம்” என வில்யம் கூறினார் என்கிறார் ஹரி.

  • கருத்துக்கள உறவுகள்

மேகனும்.. ஹமீலாவும் அரச குடும்பத்தை பலிவாங்கனுன்னே வந்திருக்காய்ங்க. நடந்துக்கிறது எல்லாம் அப்படி. அப்பன் சார்ள்ஸும்.. மகன் ஹரியும் செய்த தவறுகளால்... அண்ணன் தம்பி சண்டை கூட.. பப்பராசிகளுக்கு தீனி போடுவதாகிவிட்டது. என்ன பொம்பிளையள் என்றால் ஒளிச்சிருந்து குளிக்கிற படம் எடுத்துப் பிழைப்பாங்கள். இது ஆம்பிளையள் ஆச்சு.. ஆளையாள் கொழுவல் போட வைச்சு பிழைக்கிறாங்கள் அவ்வளவும் தான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

இளவரசர் வில்லியம் என்னை உடல்ரீதியாக தாக்கினார்: இளவரசர் ஹரி தெரிவிப்பு

குத்துப்படுங்கோ.....குத்துப்படுங்கோடா...... உங்களையெல்லாம் ஒரு குடிலுக்கு கீழை கட்டையிலை கட்டி வைக்க கிழவியும் இப்ப உயிரோடை இல்லை.கொப்பரும் ஒழுங்கான மனிசன் இல்லை. வந்த சித்தியும் அந்த மாதிரி....😁
எப்பிடியிருந்த கிரேட் பிரிட்டிஷ் இப்பிடியாகிட்டுது 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

குத்துப்படுங்கோ.....குத்துப்படுங்கோடா...... உங்களையெல்லாம் ஒரு குடிலுக்கு கீழை கட்டையிலை கட்டி வைக்க கிழவியும் இப்ப உயிரோடை இல்லை.கொப்பரும் ஒழுங்கான மனிசன் இல்லை. வந்த சித்தியும் அந்த மாதிரி....😁
எப்பிடியிருந்த கிரேட் பிரிட்டிஷ் இப்பிடியாகிட்டுது 😎

ஆ…வீரகேசரி விழுங்கிய இன்னொரு விடயம்…

பிலிப் செத்த நேரம் “இந்த வயசு போன காலத்தில் என்னை சாவடியாதேங்கோ” என மகன்மாரை கேட்டாராம் சார்ள்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச குடும்பத்துக்குள் நடக்கும்…. அடி,தடி எல்லாம் செய்தியாக வரும் என்று எதிர் பார்க்கவில்லை. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எப்பிடியிருந்த கிரேட் பிரிட்டிஷ் இப்பிடியாகிட்டுது 😎

தீவிர Sun வாசகர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரப்போகிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மனிசியின் எகிப்து முஸ்லீம் கனக்சனால வெடி விழுந்தது. இப்ப இவரது கனக்சனால + கதையால என்ன நடந்து தொலையுதோ தெரியவில்லையே... 🤨 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

தாய் மனிசியின் எகிப்து முஸ்லீம் கனக்சனால வெடி விழுந்தது. இப்ப இவரது கனக்சனால + கதையால என்ன நடந்து தொலையுதோ தெரியவில்லையே... 🤨 🤦‍♂️

ஹரி, அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டார் என நினைக்கின்றேன்.
ஆனபடியால்…. மேகனுக்கு, பூரண ஆயுசு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

ஹரி, அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டார் என நினைக்கின்றேன்.
ஆனபடியால்…. மேகனுக்கு, பூரண ஆயுசு. 😁

வெடி வைக்கிற எண்டால், பேட்டை ரவுடியே? உளவுத்துறை ஏன் இருக்கிறது ?

  • கருத்துக்கள உறவுகள்

மேகன் ஒரு கூத்தாடி. ஹரிப்பிள்ளையர் அதின்ர ஆண்டத்துக்கு ஆடுறார். அப்பர் ஹமீலான்ட ஆட்டத்துக்கு ஆடின கணக்கா. மேகனுக்கு தேவை காசு. இப்ப ஹரிட புத்தகமே மில்லியன் கணக்கு பேரத்தில வாங்கப்பட்டிருக்குது. எல்லாம் வியாபாரம். கூத்தாடிய கட்டினால்.. இதுதான் நிகழும். ஒருவேளை இதை தான் வில்லியம் சொல்லி தம்பியை தட்டி வைக்க நினைச்சிருப்பாரோ..??! ஏனெனில் ஹரி எப்பவுமே வில்லியத்துக்கு அவசியமான தம்பியாக இருக்கனுன்னே டயானா விரும்பி இருக்கிறார். முடிக்குரியவன் வில்லியம் என்ற வகையில். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Who knows if I'm even your father!"

நான் உன் தந்தையா என்று யாருக்குத் தெரியும்!"

CHARLES’ ANGEBLICHER HERZLOS-SATZ ZU HARRY„Wer weiß, ob ich überhaupt dein Vater bin!“

Prinz Harry schreibt in seinen Memoiren über prägende Momente in seinem Leben. Sein Vater, König Charles, machte einst üble Scherze über seinen Sohn

https://www.bild.de/unterhaltung/royals/leute/charles-sagte-zu-prinz-harry-wer-weiss-ob-ich-

என்னப்பா கதை இப்பிடி இறுகிக்கொண்டு போகுது? 😂

https://www.bild.de/unterhaltung/royals/leute/charles-sagte-zu-prinz-harry-wer-weiss-ob-ich-ueberhaupt-dein-vater-bin-82463030.bild.html?dicbo=v2-8cde4c82dcaa06c4f724f8674c110849&cid=kooperation.article.outbrain.desktop.AR_4.bild

James Hewitt junger Offizier der Household Cavalry. Zwischen 1986 und 1991 soll er eine Affäre mit Harrys Mutter, Prinzessin Diana, gehabt haben

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க
 
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி
பச்ச மலப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
 
பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

Who knows if I'm even your father!"

நான் உன் தந்தையா என்று யாருக்குத் தெரியும்!"

CHARLES’ ANGEBLICHER HERZLOS-SATZ ZU HARRY„Wer weiß, ob ich überhaupt dein Vater bin!“

Prinz Harry schreibt in seinen Memoiren über prägende Momente in seinem Leben. Sein Vater, König Charles, machte einst üble Scherze über seinen Sohn

https://www.bild.de/unterhaltung/royals/leute/charles-sagte-zu-prinz-harry-wer-weiss-ob-ich-

என்னப்பா கதை இப்பிடி இறுகிக்கொண்டு போகுது? 😂

https://www.bild.de/unterhaltung/royals/leute/charles-sagte-zu-prinz-harry-wer-weiss-ob-ich-ueberhaupt-dein-vater-bin-82463030.bild.html?dicbo=v2-8cde4c82dcaa06c4f724f8674c110849&cid=kooperation.article.outbrain.desktop.AR_4.bild

James Hewitt junger Offizier der Household Cavalry. Zwischen 1986 und 1991 soll er eine Affäre mit Harrys Mutter, Prinzessin Diana, gehabt haben

பேட்டை  ரவுடிகளின் சண்டை மாதிரி, சந்தி சிரிக்குது.
ஐ.நா.  தலையிட்டு... இவர்களின் சண்டையை நிறுத்த வேணும்.
இல்லாட்டி.... இவர்கள்  மாறி, மாறி சாணியடித்து, 
இன்னும் நிறைய கேவலங்கள் வரும் போலை இருக்கு.
அரச குடும்பத்தில் இருந்த மரியாதையை... பார்க்கிறவனுக்கு அசிங்கமாக இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பேட்டை  ரவுடிகளின் சண்டை மாதிரி, சந்தி சிரிக்குது.
ஐ.நா.  தலையிட்டு... இவர்களின் சண்டையை நிறுத்த வேணும்.

ஓமோம் ஐ.நா உதுக்குத்தான் சரி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பேட்டை  ரவுடிகளின் சண்டை மாதிரி, சந்தி சிரிக்குது.
ஐ.நா.  தலையிட்டு... இவர்களின் சண்டையை நிறுத்த வேணும்.
இல்லாட்டி.... இவர்கள்  மாறி, மாறி சாணியடித்து, 
இன்னும் நிறைய கேவலங்கள் வரும் போலை இருக்கு.
அரச குடும்பத்தில் இருந்த மரியாதையை... பார்க்கிறவனுக்கு அசிங்கமாக இருக்கு.

ஐ.நா  .சபையின் நாணயக்கயிறு   இவர்களின் கையில் தான் இருக்கிறது....இவர்கள் இழுக்கும் இழுப்புகெல்லாம...உந்த. ஐ.நா.  சபை ஆடுவார்கள்.....🤣. இவர்களின் சண்டையை. உலகமகா ஐனங்கள்  பார்த்து களிப்படைவார்கள்.  அடுத்த நொடியில் மறந்தும்கூட விடுவார்கள்   பொது வெளியில் அவர்களை கண்டால் தொட்டுப்பார்க்க அல்லது கை கொடுக்க தங்களுக்கு உள்ளேயே அடிபட்டு காயங்களை எற்படுத்துவார்கள்.      

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அரச குடும்பத்தில் இருந்த மரியாதையை...

இதென்ன புது கதையா கிடக்கு…..🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இதென்ன புது கதையா கிடக்கு…..🤣

எலிசபெத் இருக்கும் போது  இருந்தது, தானே... 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

எலிசபெத் இருக்கும் போது  இருந்தது, தானே... 🙂

மரியாதை இருந்தது கிழவிக்கு மட்டும்.

சூழ இருந்த குடும்பம் அப்பவே “கண்டமனூர் ஜமீன் எதார்த்தமா கேட்டார், நானும் பதார்த்தமா கொடுத்திட்டேன்” ரகம்தான் 🤣.

தாயை போல் இல்லாவிடிலும் ஓரளவு மான, ஈனம் உள்ளவர் என்றால், மகள்,  3ம் மகன் அவர் மனைவியை சொல்லலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமிலாவை திருமணம் செய்யவேண்டாம் என தந்தையிடம் கேட்டோம் - ஹரி

By RAJEEBAN

10 JAN, 2023 | 12:10 PM
image

கமிலாவை திருமணம் செய்யவேண்டாம் என தந்தையிடம் இளவரசர் வில்லியமும் ஹரியும் கேட்டுக்கொண்டனர் என   ஹரி தனது புதிய நூலில் தெரிவித்துள்ளார்

இன்று சர்வதேச அளவில் வெளியாகவுள்ள ஸ்பெயர் என்ற தனது வாழ்க்கைவரலாற்று நூலில் ஹரி இதனை தெரிவித்துள்ளார்.

கமிலாவை மணம் முடிக்கவேண்டாம் என சார்ல்ஸை கேட்டுக்கொண்டதாக  புதிய நூலில் குறிப்பிட்டுள்ள ஹரி கமிலா இரக்கமற்ற சிற்றன்னையாக காணப்படுவார் என அஞ்சியதாக குறிப்பிட்டுள்ளார்.

தேநீருக்கு முன்னர் , கமிலா என்னிடம் இரக்கமற்ற விதத்தில் நடந்துகொள்வாரா கதைப்புத்தகங்களில் வருகின்ற இரக்கமற்ற சிற்றன்னைகள் போல நடந்துகொள்வாரா என நினைத்தது எனக்கு நினைவில் உள்ளது ஆனால் கமிலா அப்படி நடந்துகொள்வில்லை, வில்லியம் போல நானும் அதற்காக நன்றியுடைவனாக உள்ளேன் என ஹரி புதிய நூலில் தெரிவித்துள்ளார்.

download__60_.jpg

வில்லியமும் தானும் மற்றைய பெண் என்றே கமிலாவை அழைத்ததாக ஹரி எழுதியுள்ளார்.

தந்தைக்கு உள்ள காதல் உறவு குறித்து வில்லியம் நீண்ட காலமாக சந்தேகம் கொண்டிருந்தார்,அது வில்லியமை துன்புறுத்தியது குழப்பமடையச்செய்தது என தெரிவித்துள்ள ஹரி சந்தேகம் உறுதியானதும் தான் இதனை தடுப்பதற்காக எதனையும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியால் வில்லியம் பாதிக்கப்பட்டார் அதனால் அதன் பின் அவர் எதுவும் சொல்லவில்லை எனவும் எழுதியுள்ளார்.

கமிலாவுடனான உறவுகள் குறித்து தங்கள் தந்தை பகிரங்கமாக அறிவிக்க விரும்பியவேளை தானும் வில்லியமும் உத்தியோகபூர்வமாக முதல்தடவை கமிலாவை சந்தித்தாக  ஹரி புதியநூலில் எழுதியுள்ளார்.

https://www.virakesari.lk/article/145395

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு டெஸ்கோ போனேன்.

ஹரி விண்ட்சர் எழுதிய “உதிரி” புத்தகம் £15 பவுனுக்க்கு கிடந்து காயுது.

இதுவே ஹரி பொட்டர் எண்டா சாமம் 12 மணிக்கு கியூ கடைக்கு வெளியால நிக்கும். 

அநேகமா இரெண்டு மாதத்தில £1 டீலில் வரும் போல இருக்கு🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

அநேகமா இரெண்டு மாதத்தில £1 டீலில் வரும் போல இருக்கு🤣.

அப்பவதாவது காசு குடுத்து வாங்கி படிக்கிற பிளான் இருக்கோ? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

அப்பவதாவது காசு குடுத்து வாங்கி படிக்கிற பிளான் இருக்கோ? 🤣

🤣 

இதுவரைக்கும் நம்ம எப்படி?

எதுவுமே செய்யல

இனிமேலும் அதையே செய்துடுவோம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது பிரித்தானியா “முன்னோர் பாரம்பரியம் பேணுதல்” என்ற பெயரிலான சம்பிரதாயத்தை கைவிட்டு விடுவதன் மூலம் அரச குடும்பத்திற்கு ஒதுக்கும் நிதியை  வேறு  மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.