Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு

Featured Replies

பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு

- ச. சாமிநாதன்

தற்காலத்தில் உலகெங்கிலும் பெண்கள் அணியும் ஒரு ஆடை தமிழனின் கண்டுபிடிப்பு என்று தோன்றுகிறது. பெண்கள் அணியும் மார்க் கச்சு தமிழனின் கண்டுபிடிப்பு என்றால் வியப்பாகத் தான் தோன்றும். இதற்குச் சங்க இலக்கியத்திலும் பிற்காலத் தமிழ் இலக்கியத்திலும் சில எடுத்துக்காட்டுக்கள் கிடைக்கின்றன.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி...

...

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே

- புறம் 189 -

மரக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய இப் புறநானூற்றுப் பாடலில் மக்கள் அனைவரும் உண்பது நாழி அளவு என்றும் ஆண்களும் பெண்களும் உடுப்பது இரண்டே ஆடைகள் என்றும் கூறுகிறார். பழந்தமிழர்களில் ஆண்கள் வேட்டியும் மேல் துண்டும் அணிந்தனர். பின்னர் மேல் துண்டு சட்டையாக மாறியது. பெண்கள் புடவையும் மேல் துண்டும் அணிந்தனர். பின்னர் மேல் துண்டு மார்க் கச்சு (பிரா) ஆகவும், இரவிக்கையாகவும் மாறின. பிற்கால இலக்கியங்களில் இந்த ஆடை வளர்ச்சியைத் தெளிவாகக் காண முடியும்.

'உடுப்பவை இரண்டே' என்று நக்கீரர் கூறினாலும் அந்த இரண்டு உடை என்ன என்பதை அவர் கூறவில்லை. ஆனால் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, சீன, ரோமானிய, கிரேக்க, அசீரிய, மாயா, இன்கா நாகரீகப் படங்களைப் பார்த்தோருக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். தமிழர் சிலைகளிலும், ஓவியங்களிலும் மட்டும் தான் மார்க் கச்சைக் காண முடியும். இது வரை வெளியான உலகத் தமிழ் மாநாட்டு மலர்களிலும் தமிழர் இலக்கிய நூல்களிலும் இத்தகைய பெண்களின் ஓவியங்களைக் காணலாம். இது வழி வழியாக வந்த மரபைப் பின்பற்றி வரைந்த ஓவியங்களாகும்.

அகத்துறை இலக்கியப் பாடல்களில் பெண்களின் உடல் அழகை வருணிக்கும் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஆடைகளப் பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இதில் இன்னொரு வியப்பான விஷயமும் தெரிய வருகிறது. ஆடைகளுக்குக் கஞ்சி போட்டு அவைகளை விறைப்பாக வைத்திருப்பதையும் தமிழன் தான் கற்பித்தான் போலும்.

கஞ்சி போடுதல்

கஞ்சி போட்டுத் துணிகளை உலர வைத்த காட்சியை

"நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்து"?

- குறுந்தொகை 330 -

"பசைசொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி"

- அகம் 34 -

என்ற பாடல்களில் புலவர்கள் குறிப்பிடுகிறார்கள். நற்றிணை (90), புறநானூறு (311) முதலிய பாடல்களிலும் இதே காட்சியைக் காணலாம். தமிழர்கள், தங்கள் ஆடைகளப் பற்றியும் அதைப் பராமரிப்பது பற்றியும் எவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டார்கள் என்பதற்கு இந்த எடுத்துக் காட்டுக்களே போதும்!

நன்றி

நிலாச்சாரல்

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி... :angry: :angry:

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

Edited by Danklas

டங்கு அண்ணா என்ன நக்கலா............. :angry:

தமிழன் எவ்வளவு கஷ்டபட்டு உடுப்பை கண்டு பிடித்து இருகிறான் அதை பாராடுவோம் என்று இல்லை..............உடுப்பை கண்டுபிடித்த தமிழனால் பட்ட்னை எங்கே வைகிறது என்று கண்டுபிடிக்க ஏலாம போய்விட்டது அதை கண்டுபிடித்து உலகிற்கு வெள்ளைகாரன் காட்டி போட்டான் அண்ணே........எல்லாவிசயத்தையும் செய்யிற டமிழன் இப்படி சின்ன விசயத்தால எல்லாத்தையும் இழந்து போறான்.............எவ்வளவு பீலிங்கா இருக்கு........... :P :P :D

உடுப்பை கண்டுபிடித்த தமிழனால் பட்ட்னை எங்கே வைகிறது என்று கண்டுபிடிக்க ஏலாம போய்விட்டது

:D:lol::)

Edited by வெண்ணிலா

பிட்டு ..இடியப்பம் தான் தமிழனின் கண்டுபிடிப்பென்று கேள்விப் பட்டிருக்கிறேன்... ஆனால் பெண்களின் உள்ளாடையும் தமிழன் கண்டுபிடிப்பென்று ரசிகை சொல்லித்தான் தெரியும் .... ரொம்பப் பெருமையா இருக்கு.... :D

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி... :angry: :angry:

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

நாட்டைக் கண்டு பிடிக்கத்தான் தமிழனையே படைச்சான் danklas

தமிழன் என்னும் எவ்வளவு காலம் இப்படி நான் அதை கண்டுபிடிச்சன் இதைக்கண்டு பிடிச்சன் என்று தற்பெருமைபேசிட்டு இருக்கபோறான்.

:lol::):lol:

நிலா அக்கா என்ன சிரிப்பு பிழையா சொல்லிட்டோமோ...... :D

பிட்டு ..இடியப்பம் தான் தமிழனின் கண்டுபிடிப்பென்று கேள்விப் பட்டிருக்கிறேன்... ஆனால் பெண்களின் உள்ளாடையும் தமிழன் கண்டுபிடிப்பென்று ரசிகை சொல்லித்தான் தெரியும் .... ரொம்பப் பெருமையா இருக்கு.... :lol:

பின்னே கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி நாங்கள்............இதை எல்லாம் நாங்கள் கண்டுபிடிக்காம யார் கண்டுபிடிபாங்கள் ஆனா நான் முதல் சொன்ன மாதிரி பட்டன் வைகிறது தான் பிரச்சினை......... :P :P :lol:

Edited by Jamuna

ஆகா...... சிங்களவன் அப்பவே முளைத்து தமிழனின் '''கண்டுபிடிப்பை''' தடுத்திருக்ககூடாதா.... :D

ஆகா...... சிங்களவன் அப்பவே முளைத்து தமிழனின் '''கண்டுபிடிப்பை''' தடுத்திருக்ககூடாதா.... :D

ஆஹா... பனங்காய்க்கு ஆசை தோசை அப்பளம் வடை... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் எல்லாரும் :D நல்லது நடந்தால் பிடிக்காதே உங்களுக்கு :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் அக்காலத்து தன்மானச்சிங்கங்களைப்பற்றி என்ன நினைகின்றீர்கள் :angry: இவ்வளவு பெரிய விடயத்தை கண்டுபிடித்த நம் மூதாதையருக்கு பட்டன் எங்கே வைப்பது என்பது அவர்களுக்கு தெரியாமல் விடவில்லை என்பதனை இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் B)

  • தொடங்கியவர்

கிழிஞ்சுது போ... டவலுக்கு நன்றி...

அவனவன்(ள்) உடுப்பை போடுவமா வேண்டாமா எண்டு யோசிச்சுக்கொண்டு இருக்காங்க, இதுக்க உடுப்புகளை கண்டுபிடிச்சது தமிழனாம் எண்டு கொண்டு இருக்காங்க, உலகத்தில எல்லாத்தையும் கண்டுபிடிச்ச தமிழன் தனக்கெண்டு ஒரு நாட்டை கண்டுபிடிக்காமல் விட்டுட்டான்.. :angry:

அக்காச்சி கொலை விழுப்போகுது... :angry:

:lol::D:lol::blink::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் இனத்த கண்டு பிடிச்சதே தமிழன்தான், கல்தோன்றி மண்தொன்றா காலத்திலயே வல்லினம் மெல்லினம் இடையினம் எண்டு யோசிச்சு நம்ம மூதாதயர் பேரு வைச்சிருக்கிரினம், உங்களுக்கு தெரியாதோ? :blink:

எங்கள் அக்காலத்து தன்மானச்சிங்கங்களைப்பற்றி என்ன நினைகின்றீர்கள் :angry: இவ்வளவு பெரிய விடயத்தை கண்டுபிடித்த நம் மூதாதையருக்கு பட்டன் எங்கே வைப்பது என்பது அவர்களுக்கு தெரியாமல் விடவில்லை என்பதனை இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் B)

கு.சா தாத்தாவிற்கு பட்டனை பற்றி கதைக்க கோவம் வந்துட்டுது போல...............ஓ பட்டன் வைக்க தெரிந்தது ஆனா பட்டன் எப்படி செய்யிறது என்று தெரியாம ஊசி குத்திவிட்டீனமோ தாத்தா............. :P :P :blink:

என்ன செய்ய கண்டை மட்டும் பிடிச்சிட்டு இருக்கிறம். இன்னும் மாட்டை பிடிக்கேல்லை

  • கருத்துக்கள உறவுகள்

கணவன்: இஞ்சேருங்கோ இந்தக் கழுசான் பட்டனைக் கெதியாய் தைச்சுத் தாங்கோ?

மணைவி: நாங்கள்(பெண்கள்) இல்லையென்டால் இதெல்லாம் யாரைக் கொண்டு தைப்பீங்கள்!

கணவன்: ம்ம் நீங்கள் இல்லையென்டால் எங்களுக்கு என்னத்துக்கு கழுசான். :lol::)

கை நாட்டை யாரப்பா கண்டு பிடித்தது. :P :P

என்ன செய்ய கண்டை மட்டும் பிடிச்சிட்டு இருக்கிறம். இன்னும் மாட்டை பிடிக்கேல்லை

மாஸ்டர் மாட்டை நான் பிடித்தனான்............ :P

கணவன்: இஞ்சேருங்கோ இந்தக் கழுசான் பட்டனைக் கெதியாய் தைச்சுத் தாங்கோ? மணைவி: நாங்கள்(பெண்கள்) இல்லையென்டால் இதெல்லாம் யாரைக் கொண்டு தைப்பீங்கள்! கணவன்: ம்ம் நீங்கள் இல்லையென்டால் எங்களுக்கு என்னத்துக்கு கழுசான். :lol::) கை நாட்டை யாரப்பா கண்டு பிடித்தது. :P :P

பெரியப்பா நல்லா இருக்கு பகிடி எல்லாம் கை நாட்டை கண்டுபிடித்தது யாரோ வேற யாரா இருக்கும் எதற்கும் கந்தப்பு தாத்தாவிட்ட கேட்டு சொல்கிறேன்...... :P :P :D

Edited by Jamuna

ரசிகை நல்ல விசயம். நானும் கொஞ்ச காலதிற்கு முன் எங்கள் தமிழ் பெண்களுக்காக மிகவும் கஸ்டப்பட்டு ஒரு உடையை கண்டுபிடித்தேன். மக்களின் ஆதரவு போதாமையாலும், மேலும் இந்தக்கண்டுபிடிப்பை முன்பே இன்னொரு விஞ்ஞானி செய்துவிட்டார் என்று சிலர் வாதம் செய்ததாலும் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பை கைவிட்டுவிட்டேன்..

அதைப்பற்றி அறிய இஞ்ச போங்கோ... http://www.yarl.com/forum3/index.php?showtopic=20273&hl=

நீங்கள் எல்லாரும் ஆதரவு தந்தால் இப்படி இன்னும் இன்னும் நல்ல புதிய கண்டுபிடிப்புக்களை செய்யலாம்.

ஆனா உங்களிடம் ஒரு கேள்வி: எங்களுக்கு படிபிச்ச ஆசிரியர் சொல்லுவார், அந்தக்காலத்தில் தமிழ்ப்பெண்கள் பிளவுஸ் கூட போடுவதில்லை. வெறும் சாரியை மாத்திரம் உடம்பில் சுற்றிக்கட்டுவார்கள் என்று. அதாவது சுற்றிக்கட்டும் ஒரு புடவையை தவிர தமிழ்ப்பெண்களுக்கு உரிமை கோர உடைகள் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லித்தந்தார். இதேபோல் வேட்டி மட்டுமே தமிழ் ஆண்களின் உடை எண்டு சொன்னார்.

ரசிகை

உங்கள் கூற்றில் ஒத்துப் போக சற்று தயக்கமாக இருக்கிறது. வேட்டி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க இல்லை. கிரேக்கரது ஆடை வடிவமே தமிழருக்கு வேட்டியாக வந்தது என்று எங்கேயோ வாசித்ததாக நினைவு.

  • தொடங்கியவர்

ரசிகை

உங்கள் கூற்றில் ஒத்துப் போக சற்று தயக்கமாக இருக்கிறது. வேட்டி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்க இல்லை. கிரேக்கரது ஆடை வடிவமே தமிழருக்கு வேட்டியாக வந்தது என்று எங்கேயோ வாசித்ததாக நினைவு.

ஆரவல்லி

இந்தக் கட்டுரையை நான் எழுதவ்ல்லை ஏதோ தேடும்போது கிடைத்ததை இணைத்தேன்.

இப்படியும் ஒரு கட்டுரை வரையலாம் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்ததும் தமிழன் என அதுதான் புட்டு அவிக்கிரம் இட்டலி அவிக்கிறம் கொழுக்கட்டை அவிக்கிறம் நாம் அவிக்கிறதிலையே காலத்தை கடத்தினோம் ஆனால் வெள்ளையனோ நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தான் வேனுமெண்டால் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்தது தமிழன் என தற்பெருமை அடிக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் ஒரு கட்டுரை வரையலாம் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்ததும் தமிழன் என அதுதான் புட்டு அவிக்கிரம் இட்டலி அவிக்கிறம் கொழுக்கட்டை அவிக்கிறம் நாம் அவிக்கிறதிலையே காலத்தை கடத்தினோம் ஆனால் வெள்ளையனோ நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தான் வேனுமெண்டால் நீராவியின் பயன்பாட்டை கண்டுபிடித்தது தமிழன் என தற்பெருமை அடிக்கலாம்

எங்களுக்கு எல்லாம் நக்கலாய்த்தெரியுது? எங்கடை பழசுகள் எல்லாம் ஆவியிலை வேக வைச்சு சாப்பிட்டதாலைதான் வருத்தம் துன்பமில்லாமல் ஒரு டாக்குத்தர் பரியாரி எண்டு அலையாமல் பத்து பிள்ளையளையும் பெத்து ஆரோக்கியமாய் நூறு வருசம் வரைக்கும் வாழ்ந்தவையள்

இப்ப உந்த வெள்ளையளின்ரை சாப்பாட்டை ஸ்ரையிலாய் சாப்பிட வெளிக்கிட்டு வாற வருத்தங்களைக்கூட உந்த படிச்ச பரியாரிமாராலை கூட மாத்தேலாமல் இருக்கு.எதுக்கெடுத்தாலும் குளிசையளைத்தான் தாறாங்கள் பரிகாரம் ஒண்டும் சொல்லீனமில்லை

அந்தக்காலத்திலை ஒடியல்புட்டு, முட்டுக்காய்தேங்காய்ப்பூ போட்ட நீத்துப்பெட்டிப்புட்டு இப்புடி ஆவிவிலை செய்யுற விவகாரம் கனக்க இருக்கு.அதோடை தேங்காய்ச்சாப்பாடுகள் மூண்டு நேரமும் நிறையச்சாப்பிட்டுத்தான் வாழ்க்கையை நடத்தினவை.இப்ப என்னடாவெண்டால் தேங்காய் சாப்பாடே கூடாது எண்டு சொல்லுறாங்கள்.என்ரை கருத்து என்னவெண்டால் நல்லாய் சாப்பிடோணும் நல்லாய் உடம்பு களைக்க வேலை செய்யோணும் அப்பத்தான் கெட்ட கொழுப்புகளுக்கு வேலையிருக்கும்.

எங்கடை பழசுகளை மட்டம் தட்டித்தட்டியே காலத்தை ஓட்டுவம் அவையளின்ரை வாழ்க்கை முறையளைப்பத்தி ஆராவது யோசிச்சுப்பாத்தியளோ வெள்ளைக்காரன் கூட இப்ப எங்கடை சாப்பாடுதான் சுகாதரம் எண்டு சொல்லுறான் இப்ப நான் வேலை செய்யுற இடத்திலை சாப்பிடக்கொண்டு போற பச்சடியைக்கூட விட்டு வைக்கீனமில்லை :angry:

  • 3 weeks later...

**********

Edited by harikalan

யமுனாக்கா

வெள்ளக்காரன் கூட பொத்தானை பல காலத்தின் பின்பு தான் கண்டு பிடித்தார்கள்

தமிழர்களுக்கு நாகரீகம் இருக்கிறது ஆனால் அதைத் தவிர தற்போது எதுவுமே இல்லை

இவர்களுக்கு நாகரீகம் இல்லை இவர்களிடம் அதைத் தவிர தற்போது எல்லாம் இருக்கிறது

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான தலைவர் இருக்கிறார் தமிழர்களுக்கு !!!!!!!

கரிகாலன் அங்கிள்,

பல காலதிற்கு பின் கண்டு பிடித்தா என்ன கண்டுபிடித்தது கண்டு பிடித்தது தானே :rolleyes: !!அத்தோட பாருங்கோ ஒன்றை கண்டு பிடித்து போட்டு தமிழன் படுறபாடு அவன் எத்தனை விசயத்தை கண்டு பிடித்து போட்டு அமைதியா இருப்பாதோடு :rolleyes: ........அந்த விசயங்களை மற்றவனிற்கும் சொல்லுறான் ஆனா நாம அப்படியா :wub: .........அவன் சொல்லுறதை எல்லாம் கேட்டு போட்டு அவனிற்கு என்ன தெரியும் என்று கதைபோம் அந்தளவு தான் நம்ம அறிவு :rolleyes: !!அவர்களிடமும் நாகரிக்காம் இருகிறது பலவிதத்தில் அவற்றை நாம் கற்று கொள்ளவில்லை அவர்கள் செய்யும் பிழையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு அவர்களை குறை சொல்வது பிழையாகவே கருதுகிறேன் கரிகாலன் அங்கிள்!! <_<

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"என்னத்தை கண்டுபிடித்தாலும் அடக்கமா இருப்பவன் தான் அறிவாளி" <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.