Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மேயர் வேட்பாளராக வித்தியாதரன்! – தமிழரசு தீர்மானம்

IMG-20230116-193914.jpg

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

எனவே, வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

உதயன்’, ‘சுடர்ஒளி’ பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான ந.வித்தியாதரன், சமூக விடுதலைக்காக – சமூக நீதிக்காக – தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எழுத்தாயுதம் ஏந்திப் போராடியவர். ஊடகத்துறையில் கோலோச்சி நின்றவர். தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் நன்கறியப்பட்டவர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் – கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராகப் பதவி வகித்த காலகட்டத்தில், இவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன்பின்னர் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

ஸ்தம்பித நிலையில் இருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக்குப் புத்துயிர் கொடுக்க முன்னின்று செயற்பட்டவர் இவர்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/01/183340/

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரனைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

அப்போ மாவைக்கு ஆப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அப்போ மாவைக்கு ஆப்பா?

மாவை… வாசிகசாலைக்கு கூட, தலைவராக இருக்க… லாயக்கு இல்லாத ஆள்.
அவரைப் போய்… மாநகர சபைக்கு…. 😂
அதுக்காக வித்தியாதரன், திறமான ஆள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

மாவை… வாசிகசாலைக்கு கூட, தலைவராக இருக்க… லாயக்கு இல்லாத ஆள்.
அவரைப் போய்… மாநகர சபைக்கு…. 😂
அதுக்காக வித்தியாதரன், திறமான ஆள் இல்லை. 

அப்ப மாவையின் மகன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்போ மாவைக்கு ஆப்பா?

அவர் அதற்கு  மேல்

மாகாணசபை  முதல்வர் கனவு

உண்மையில் வித்தியாதரனுக்கு இதனைக்கொடுப்பதே 

சின்னமீனைப்போட்டு பெரியமினைப்பிடிக்கும் மாவையின் அரசியல்  தான்

நல்ல  அரசியல்வாதி  தான் மாவை....☹️

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப மாவையின் மகன்.

மாவையின் மகன்…
அமரர் ரவிராஜின் மகளை திருமணம் செய்தவர்.
சென்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் யாழ். மத்திய கல்லூரியில்
அறிவிக்கப் பட்டுக் கொண்டு இருந்த போது….
முன்னணியில் இருந்த திருமதி ரவிராஜின் இடத்தை…
சுமந்திரன், தில்லு முல்லு செய்து எடுத்துக் கொண்டதாக பிரச்சினை எழுந்த போது…
அதனை தட்டிக் கேட்ட மாவையின் மகனுக்கு…
அங்கிருந்த இராணுவமும், அதிரடிப் படையும்… தாக்கியதில் இருந்து,
அவர் தமிழரசு கட்சியிலிருந்து விலகி விட்டார். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாநரகர சைபை மேயர் அல்லது மாகாண முதலமைச்சர் இரண்டு பதவிகளுக்கும்  நிர்வாகசேவையில் அனுபவம் மிக்க அல்லது நிர்வாக திறன் ஆளுமை உடைய ஒருவரையே     நியமிக்க வேண்டும்.  இதில் எந்த கட்சி என்றாலும் பரவாயில்லை.  

 

  • கருத்துக்கள உறவுகள்

மாநகரசபை முதல்வர் வேட்பாளர் என்பது  வித்தியாதரனின் கனவு. வெர் முதல்வர் வேட்பாளர் ஆக்கப்பட்டதன் கூலம் தமிழரசுக்கட்சிக்குள் சுமத்தினின் கை ணஓங்கியுள்ளது என்பது தெளிவு. ஆனால் மாவை இதில் பின்வாங்குவது மாவைக்கு நல்லதே. தமிழரசுக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. ஏனைய கட்சிகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  என்ந பெயரில் தேர்தலில் நிற்கவில்லை. கடந்ம முறைையே அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இந்த முறை அது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.மாலவ தப்பிவிட்டார் . அவர்மாகாணசபை முதல்வர்பதவிக்கு குறிவைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஜவ்ப்னா ஹிண்டு ஓல்ட் போய் வித்தியாதரன் போன இலக்சனில ஜனநாயக சிலந்திகளுக்கு ஆதரவாக நிண்டவர்😂

  • கருத்துக்கள உறவுகள்

தோற்கின்ற ஆள் தானே . நிற்கட்டும்.🙂
பல இடங்களிலும் கையை நனைக்கும் ஒருவர்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

மாநகரசபையில் யாரும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் - ஆணையாளர் நிர்வாகத்தை நடத்தும் படி ஆகும் என நினைக்கிறேன்?

அப்படி நடந்தால் - நாம் எந்தளவுக்கு சுய நிர்ணயத்துக்கு தகுதியான இனம் என்பதை உலகுக்கு சொன்னதாய் அமையும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.