Jump to content

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த , கோட்டா உள்ளிட்ட நால்வர் மீதான தொடர்ச்சியான தடைக்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் கனடா

21 JAN, 2023 | 07:05 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தின் போது மனித உரிமைகளை மீறில்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி அண்மையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பல்வேறு முக்கிய தடைகளை விதித்தது.

இந்நிலையிலேயே சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் மெலின் ஜோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :

கேள்வி : ஜனவரி 10 நான்கு இலங்கையர்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கான காரணம் மற்றும் காலக்கெடு குறித்து இன்னும் தெளிவான புரிதல் இல்லையே?

பதில் : நாம் இது தொடர்பில் ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதைப் போன்றே , நீதி நிலைநாட்டப்படுவது தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். கனடா அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகிறது. அதே போன்று கனடா பல வருடங்களாக சர்வதேச ரீதியில் பொறுப்பு கூறல் தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளது.

அதற்கமைய பொறுப்பு கூறலில் பிரச்சினைகள் காணப்பட்டால் அங்கு சர்வதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. இதன் காரணமாகவே நாம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் ஏனைய இருவருக்கும் தடை விதித்தோம். இதன் ஊடாக கனடாவில் காணப்படும் அவர்களது சொத்துக்களுக்கு தடை விதிப்பதோடு , அவர்களுக்கும் கனடாவிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கேள்வி : இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட உக்ரேன் போன்ற நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஜி7 நாடுகளின் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறும். இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஜி7 உறுப்பினர்களை ஊக்குவிப்பதன் மூலம் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

பதில்: இதுவே எமது இலக்காகும். இது தொடர்பில் நாம் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வோம். இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தினர் இதுவே உண்மை என்பதை அறிவார்கள். அமைதியை அடைய , உண்மையை சுட்டிக்காட்ட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றார்.

https://www.virakesari.lk/article/146396

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

ரஸ்யா என்ன மாரியாம்? 🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

Map ஆகட்டும், எதுவாகட்டும் கனடாவுக்கு பின்னால் இருப்பது அமெரிக்காதானே🤣

அமெரிக்காவின் கோட்டில் தொங்குவது பிரிட்டன், காற்சட்சையில் தொங்குவது பிரான்ஸ், ஜேர்மனி, சப்பாத்தில் தொங்குவது கனடா🤣

Edited by goshan_che
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:
5 hours ago, தமிழ் சிறி said:

கனடாவின் முயற்சி, விரைவில் வெற்றி பெற வேண்டும்.

ரஸ்யா என்ன மாரியாம்?

இலங்கையும் ரசியாவும் காதலர்கள்.

57 minutes ago, goshan_che said:

Map ஆகட்டும், எதுவாகட்டும் கனடாவுக்கு பின்னால் இருப்பது அமெரிக்காதானே🤣

அமெரிக்காவின் கோட்டில் தொங்குவது பிரிட்டன், காற்சட்சையில் தொங்குவது பிரான்ஸ், ஜேர்மனி, சப்பாத்தில் தொங்குவது கனடா🤣

கொறியாகாரி இலங்கைக்கு போகும்போதே சொன்னார்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ரஸ்யா என்ன மாரியாம்? 🤣

இந்தியா எப்படியோ அப்படியே.....:smiling_face_with_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

இந்தியா எப்படியோ அப்படியே.....:smiling_face_with_sunglasses:

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

👆🏼 இந்த கூற்றை ஏற்கிறீர்களா?

  • Like 2
  • Haha 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

👆🏼 இந்த கூற்றை ஏற்கிறீர்களா?

இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி ரஷ்யா எதுவும் செய்யாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இலங்கை விடயத்தில் இந்தியாவை மீறி ரஷ்யா எதுவும் செய்யாது.

அதாவது இந்தியாவின் நிலைப்பாடு = ரஸ்யாவின் நிலைப்பாடு?

சரிதானே?

அப்போ, 

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது எனில்,

ரஸ்யாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி இந்தியாவின் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

சரியா?

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இதற்குப் பின்னால் அமெரிக்காவாக இருக்குமோ?

அப்போ அமெரிக்கா இவர்களுக்கு தடை போட பயந்து, சும்மா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துவிட்டு இவர்களை கனடா பக்கம் விட்டதோ?

2 hours ago, goshan_che said:

ரஸ்யா என்ன மாரியாம்?

ரஸ்யா உக்ரேயினில் எப்படி நடந்து கொள்கிறதோ அதற்கு என்ன காரணம் சொல்கிறதோ அது ஏற்கெனவே நம் நாட்டில் நடந்தேறி விட்டதே. இதற்குப்பின் எதற்கு விளக்கம். "உன் நண்பனைக்காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

அதாவது இந்தியாவின் நிலைப்பாடு = ரஸ்யாவின் நிலைப்பாடு?

சரிதானே?

அப்போ, 

இந்தியாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி தன் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது எனில்,

ரஸ்யாவின் நிலைப்பாடு தமிழரை நாதி அற்றவராக்கி இந்தியாவின் கையை எதிர்பார்த்து இருக்கும் படி செய்வது.

சரியா?

இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது ஆக்கிரமிப்புப்போர் ஒன்றினைக்ன்கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை மீட்கவே அவர்களைக் கொல்கிறேன் என்று கூறும் ரஸ்ஸியாவிற்கும், தமிழினத்தை இனவழிப்புச் செய்துகொண்டே மபிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூறும் இலங்கைக்கும் அதிக வேறுபாடில்லை.

அப்படியானால் ரஸ்ஸியா எந்தப்பக்கம் என்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்காது. ஆனால் என்ன, ரஸ்ஸியாவை நியாயப்படுத்த வெளிக்கிட்டால், இலங்கை செய்வதையும் நியாயப்படுத்தவேண்டி வரும். அதையும் செய்வோம்!

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

முழங்காலுக்கும், மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவதில்... நம்ம ஆக்கள் விண்ணர்கள். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

வரவேற்க வேண்டிய கருத்துகள்..100 % சரியானது ஆனால் இப்படியான உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?🤣🙏

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நம்மவர்கள் உக்ரேன் பிரச்சனையையும் ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் சேர்த்து சாம்பாராக்கி வைத்துள்ளார்கள்.
உக்ரேன் தனி நாடு.சகல உரிமைகளுடனும் வாழும் நாடு.
ஈழத்தமிழர்  அப்படியா? நாடே இல்லை. யாரும் அங்கீகரிக்கவும் இல்லை. இப்படியிருக்க.......

அண்ணை,

இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாடுதான் ரஸ்யாவின் நிலைபாடும் என்றவர் நீங்கள்.

அப்போ ஒரு போரில் நாம் இந்தியாவை ஆதரிப்பதும். ரஸ்யாவை ஆதரிப்பதும் ஒன்றே!

இது மொட்டந்தலை+முழங்கால் இல்லை.

தலிபான்கள் போல அதீத அமெரிக்க வெறுப்பால் உந்த பட்டு, ரஸ்யாவை ஆதரித்த உங்கள் நிலைப்பாட்டின் கொள்கை-கையறு நிலை.

விளங்கு தமிழில் சொன்னால் -

#முட்டுச் சந்து🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வரவேற்க வேண்டிய கருத்துகள்..100 % சரியானது ஆனால் இப்படியான உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?🤣🙏

எமக்கான நாடு என ஒன்றும் இல்லை. தமிழீழம் எனும் முகவரி உண்டு.தமிழ் அரசியல்வாதிகள் முயற்சி செய்தால் சகலதும் சுபமாக முடியும்.

மற்றும் படி கருத்து சுதந்திரம் யாருக்கும் உண்டு. இது ரஷ்யாவிலும் உண்டு.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

முழங்காலுக்கும், மொட்டந் தலைக்கும் முடிச்சு போடுவதில்... நம்ம ஆக்கள் விண்ணர்கள். 🙂

இரண்டு நாடுகளும் தாங்கள் செய்யும் போர் முறைகளும், அதற்கு சொல்லப்படும்  காரணங்களும் ஒன்றுக்கொன்று ஒத்துவருகிறது என சொல்லவந்தோம், வேறொன்றுமில்லை...... இதை போர் என்று சொல்ல முடியாது. தங்கள் சுயநலத்திற்காக மக்களை கொடூரமாக கொன்று  அடிபணிய வைக்கும் செயல். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

உக்ரேன் அழிக்கப்படுவதையும். சிலர் ஆதரிக்கிறார்கள்   ....அதுவும் இந்த நாடே இல்லாத ஈழத்தமிழர்களிருத்து வந்தவர்கள்...இவர்களை எந்த நாடு   ?எவ்வாறு அங்கீகரிக்க முடியும்?

ஒரு முழுமையான நாடான உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிப்பதை, அழிக்கபடுவதை , ரஷ்ய போர் குற்றங்களை,  புரின் மீதுள்ள பற்றுதலினாலும், சித்தாந்த பற்றுதலினாலும் முழுமையாக ஆதரிக்கும் போதே தனி நாடு பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஈழத்தமிழர்கள் என்கின்றாகிவிட்டது.
அமெரிக்காவுக்கு பின்னால் ப‌ல‌ நாடுக‌ள் இருப்பதனால் அமெரிக்காவை பிடித்து தமிழீழம் எடுத்துவிட்டு பின்பு ரஷ்யாவின் நட்பு நாடாக மாறுவோம் என்கிறார் ஒருவர் அவ்வளவுக்கு பூலோக சொர்க்கம் ரஷ்யா🤣
இலங்கைக்கு கை கொடுக்கும் நண்பன் ரஷ்யா. தமிழீழத்துடன் நட்பு வைக்குமா ?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

 தங்கள் சுயநலத்திற்காக மக்களை கொடூரமாக கொன்று  அடிபணிய வைக்கும் செயல். 

ரஷ்யா இலங்கையின் செயல்களை சொல்லியுள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Sasi_varnam said:

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

100 வீதம் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அண்ணை,

இலங்கையில் இந்தியாவின் நிலைப்பாடுதான் ரஸ்யாவின் நிலைபாடும் என்றவர் நீங்கள்.

அப்போ ஒரு போரில் நாம் இந்தியாவை ஆதரிப்பதும். ரஸ்யாவை ஆதரிப்பதும் ஒன்றே!

இது மொட்டந்தலை+முழங்கால் இல்லை.

தலிபான்கள் போல அதீத அமெரிக்க வெறுப்பால் உந்த பட்டு, ரஸ்யாவை ஆதரித்த உங்கள் நிலைப்பாட்டின் கொள்கை-கையறு நிலை.

விளங்கு தமிழில் சொன்னால் -

#முட்டுச் சந்து🤣

நல்லது கெட்டதுகளுக்கப்பால் எல்லாம் பூகோள அரசியல்.
ஒரு இடத்தில் சரியென தெரியும் விடயம் இன்னொரு இடத்தில் பிழையாக தோன்றும்.

ஊரில் இருக்கும் போது சூரியன் சரியாக 6 மணிக்கு கிழக்கில் உதிக்கும் என சொல்வோம். மற்ற நாடுகளில் அப்படியில்லை.அப்படி சொல்லவும் முடியாது. ஜனநாயகமும் அரசியலும் சட்டங்களும் தண்டனைகளும் நாட்டுக்கு நாடு வேறுபடும். எல்லாம் அந்தந்த நாட்டு மக்களின் குணாதிசயங்களை பொறுத்தது. 

எனவே ஒப்பீடுகள் எல்லா இடங்களுக்கும் சரிவராது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

உங்களை பார்க்க பாவமா கிடக்கண்ணை.

தடிச்ச தமிழ் தேசியவாதி…புட்டினுக்கு சப்போர்ட் பண்ண போய்…இப்ப இந்தியா செய்யிறதுக்கும் முட்டு கொடுக்கும் அவல நிலை….

உண்மையிலே ஜோக்காக இல்லை…உங்கள் போன்றோரின் அமெரிக்க வெறுப்பு…உங்களை எப்படி கொள்கை சறுக்கலில் தள்ளி விட்டுள்ளது என பார்க்க கவலையாகத்தான் இருக்கு.

2 hours ago, Sasi_varnam said:

எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா  என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.

பிரெக்சிற் இலும் இதை நான் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உங்களை பார்க்க பாவமா கிடக்கண்ணை.

தடிச்ச தமிழ் தேசியவாதி…புட்டினுக்கு சப்போர்ட் பண்ண போய்…இப்ப இந்தியா செய்யிறதுக்கும் முட்டு கொடுக்கும் அவல நிலை….

உண்மையிலே ஜோக்காக இல்லை…உங்கள் போன்றோரின் அமெரிக்க வெறுப்பு…உங்களை எப்படி கொள்கை சறுக்கலில் தள்ளி விட்டுள்ளது என பார்க்க கவலையாகத்தான் இருக்கு.

நான் எங்கும் இந்தியாவிற்கு முட்டு கொடுக்கவில்லை. பிராந்திய அரசியலைப்பற்றியே பல இடங்களில் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.