Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிக்கு உதவுங்கள் : சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலாகாலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச்செய்து தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

உதவிகளை தமது வங்கிக்கணக்குக்கு (கணக்கு உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி - C.V.Wigneswaran & V.P.Sivanathan, No: 232, Temple Road, Nallur, Jaffna, கணக்கு இலக்கம் - 0085686756, கிளை முகவரி - No:358, Bank of Ceylon, Nallur Branch, Jaffna, Sri Lanka, ஸ்விஃப்ட் குறியீடு - BCEYLKLX) அனுப்பிவைக்குமாறும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்ததுபோன்று உடனடியாக பற்றுச்சீட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என்றும் நிதி உதவி செய்பவர்கள் தங்கள் பெயர் விபரங்களை   cvwoffice18@gmail.com,  cv.wigneswaran@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிக்கு உதவுங்கள் : சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

உடான்சு சுவாமிகள் £100 கொடுப்பதாக அறிவித்துள்ளதால், நானும், £10 கொடுப்பதாக அறிவிக்கிறேன். 😤

@goshan_che

உடான்சர் அளவுக்கு வசதி இல்லாவிடினும், ஏதோ நம்மால முடிஞ்சது. 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டி எடுத்து தந்த உடனே cash payment $100000.- ரெடி. மேற் சொன்ன வங்கி இலக்கத்தில் வைப்பில் இடப்படும்.  தமிழ் ஈழம் எடுத்து தந்தால் தொகை இரட்டிப்பாக்கப்படும். 

இப்படி மக்கள்  டீலிங் செய்தால் விரைவில் பிரச்சனை தீரலாம்.😂

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய சிந்தனையும், ஆற்றலும், தூய கரங்களும் கொண்ட இளையோர்களைக் கொண்ட தனது வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்யும் முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியில் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்து எதிர்வரும் தேர்தலை முற்றுமுழுதாக மக்களை நம்பி எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், சில அவசியமான செலவுகளை செய்வதற்கான நிதி உதவிகளை முடிந்தளவு செய்துதவுமாறு நிலத்திலும் புலத்திலும் உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலாகாலமாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளதாகவும் அதனால் தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துச்செல்வதற்கு இளையோர்களைத் தயார்படுத்தி அவர்களின் கைகளில் அரசியலை ஒப்படைக்கும் தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான இளையோர்களை எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் இளையோர்களை வெற்றிபெறச்செய்து தமிழ் அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை அளிக்க வேண்டும் என்றும் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு உதவும்வகையில் இயன்றளவு நிதி உதவிகளை அவர்களுக்கு வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் முதன்முறையாக இம்முறை தேர்தலில் களம் இறங்குவதாலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல் பிரசார செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் புலம்பெயர் நாடுகளிலும் உள்நாட்டிலும் வாழும் நண்பர்கள், தனது மாணவர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தம்மால் இயன்றளவுக்கு நிதி உதவி செய்யவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

உதவிகளை தமது வங்கிக்கணக்குக்கு (கணக்கு உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி - C.V.Wigneswaran & V.P.Sivanathan, No: 232, Temple Road, Nallur, Jaffna, கணக்கு இலக்கம் - 0085686756, கிளை முகவரி - No:358, Bank of Ceylon, Nallur Branch, Jaffna, Sri Lanka, ஸ்விஃப்ட் குறியீடு - BCEYLKLX) அனுப்பிவைக்குமாறும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் செய்ததுபோன்று உடனடியாக பற்றுச்சீட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்படும் என்றும் நிதி உதவி செய்பவர்கள் தங்கள் பெயர் விபரங்களை   cvwoffice18@gmail.com,  cv.wigneswaran@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிக்கு உதவுங்கள் : சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் | Virakesari.lk

ஐயா கட்சியை மூடிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி ஆத்மீக பாதையில் சென்றீர்கள் என்றால் பணம் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியருக்கு சம்பளம் கொடுக்க வழியில்லை என்று அரசாங்கம் கையை விரிக்குது, எரிபொருளுக்கு கையேந்திக்காத்திருக்குது என்பதையும் நோக்குக, மற்ற கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது எனவும் ஆராய்க!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

உடான்சு சுவாமிகள் £100 கொடுப்பதாக அறிவித்துள்ளதால், நானும், £10 கொடுப்பதாக அறிவிக்கிறேன். 😤

@goshan_che

உடான்சர் அளவுக்கு வசதி இல்லாவிடினும், ஏதோ நம்மால முடிஞ்சது. 😎

பிச்சை ஏடுத்துதாம் பெருமாளு அதை புடுங்கி திண்டதாம் அனுமாரு 🤣.

நம் இருவர் சார்பில் நண்பர் @பாலபத்ர ஓணாண்டி110, தன்சார்பில் 1001. மொத்தமாக £1111 ஐ வழங்குவார் என என் நண்பர் சபைக்கு அறிவிக்கும் படி கேட்டுள்ளார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்....சும்மா வாய்க்கு வந்தபடி  திட்டிக்கொண்டிருக்காமல்    உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கட்சி நிதி என்றொரு விடயம் இருக்கின்றது.

கட்சி அங்கத்தவர்கள் பணம் கட்ட வேண்டும். நிதிகள் சேகரிக்க வேண்டும். கட்சி வளர பணம் வேணும் அல்லவா?

பல செயல்களுக்கு,கட்சி விளம்பரங்களுக்கு பணம் வேண்டும் அல்லவா? 

இதை எல்லாம் யார் கொடுப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் விக்கினேஸ்வரன் மட்டுமே கட்சிக்கு நிதி கேட்க்கிறார்? கனடாவில் இருந்து வந்த பணத்துக்கு கணக்கு கேட்டதற்காக சக உறுப்பினரை கட்சியில்  இருந்து நீக்கிய கட்சிகளுமுண்டு. அதைப்பற்றி யாரும் இப்போ பேசப்போவதில்லை. விக்கினேஸ்வரனை துரத்திவிட்டு பிறகு பேசுவோம் அதைப்பற்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சி நிதி விசயமாய் சம்பந்தனை எப்பவோ திரத்தியிருந்தால் கனக்க நல்லது நடந்திருக்கும் :406:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

கட்சி நிதி விசயமாய் சம்பந்தனை எப்பவோ திரத்தியிருந்தால் கனக்க நல்லது நடந்திருக்கும் :406:

இருபக்கமும் நிதி வேண்டி, சுகம் கொடுத்த கதிரையை விட்டு இறங்க இன்னும் விரும்பவில்லை. ஒருநாள் கதிரையில இருக்க முடியாமல் பொறிஞ்சு கொட்டுண்ணப்போறார்! எவ்வளவு காலத்துக்கு கதிரையும் தாங்குமிவரை? அதுக்கும் புதிய ஒருவரை  சுமக்க ஆசையாயிருக்குமோ இல்லையோ? அதுக்கும் கதைக்க முடிந்தால் சொல்லும், இவரை சுமந்து தானனுபவித்த துயரக்கதையை.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'Fb Friend Bro, உங்க Facebook account இருந்து யாரோ காசு கேட்டு Message பண்ணியிருக்காங்க Bro Me MEME SIYA அது நான் தான் Bro'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.