Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

பையா பொறுமையாக இரு! நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். புலத்தில் உள்ள பலருக்கு தலைவரின் வருகை தேவையாய் இருக்கிறது போலும். பொறுத்திருந்து பார்ப்போம்.

ச‌ரி ந‌ண்பா
ப‌ழ‌நெடுமாற‌ன் வுடைய‌த்தில் ஒதுங்கி இருக்கிறேன்
ஆனால் நிஜ‌ வாழ்வில் த‌லைவ‌ர் 20வ‌ருட‌ம் க‌ழித்தும் வ‌ர‌ போவ‌தில்லை

த‌லைவ‌ரை உயிருக்கு உயிரா நேசித்த‌ கார‌ண‌த்துக்காக‌ தான் ப‌ழ‌ நெடுமாற‌ன் மேல் இம்ம‌ட்டு வெறுப்பு

இதோட‌ நிறுத்தி கொள்ளுறேன் இந்த‌ திரியில் எழுதுவ‌தை ந‌ண்பா

இன்னொரு திரியில் ச‌ந்திப்போம்............... 

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் முட்டை போட்ட ஆமையின் கதை தான் ஞாபகம் வருது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

ஆயிரம் முட்டை போட்ட ஆமையின் கதை தான் ஞாபகம் வருது 🤣

அட நீங்களுமா தல…..

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

நெடுமாறன் ஐயா இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இம் முறை  அவர் வெளியிட்ட அறிவித்தலை யாழ்களத்து பெரியோர்கள் அவரின் வயதை  காரணம் காட்டி முதுமைகாரணமாக அவர் அப்படி சொல்லிவிட்டார் என்று நியாயபடுத்தியுள்ளார்கள். இதை அவர் பார்த்தால் இனி ஒவ்வொரு வருடமும் இப்படி அறிவிப்பை வெளியிடுவாரோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இம் முறை  அவர் வெளியிட்ட அறிவித்தலை யாழ்களத்து பெரியோர்கள் அவரின் வயதை  காரணம் காட்டி முதுமைகாரணமாக அவர் அப்படி சொல்லிவிட்டார் என்று நியாயபடுத்தியுள்ளார்கள். இதை அவர் பார்த்தால் இனி ஒவ்வொரு வருடமும் இப்படி அறிவிப்பை வெளியிடுவாரோ தெரியவில்லை.

இப்ப நம்ம அப்பா இப்படி பேசினா? அவருக்கு அறளைக்குணம் வந்திட்டுது குறைவிளங்காதீங்கோ என்று சொல்லி அப்பாவை வீட்டில் வைத்திருப்போமா? 

இல்லை உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை என்று வெளியே கலைத்து விடுவோமா?

(இதுக்கும் நெடுமாறன் ஐயாவுக்கும் தொடர்பில்லை. ஒரு உதாரணத்திற்கு மட்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

அட நீங்களுமா தல…..

அட நான் சொன்னது தவளையை தவறா புரிஞ்சிட்டீங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

அட நான் சொன்னது தவளையை தவறா புரிஞ்சிட்டீங்க🤣

இதில‌ பெரிய‌ த‌ல‌வ‌ளை யார் சின்ன‌ த‌வ‌ளை யார் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இல்லை என்று கூறிய முன்னாள் போராளி அச்சுறுத்தல் வருவதாக புகார்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழீழ விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

அரவிந்தன், முன்னாள் போராளி

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து, தனக்கு தொடர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவிக்கிறார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பிரபாகரனுடன் இறுதிவரை இருந்து போரிட்டதாக கூறியே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக குறிப்பிட்டு வவுனியாவில் இன்று (2023 பிப்ரவரி 18) ஊடக சந்திப்பொன்றை அவர் நடத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடந்த 13ம் தேதி தமிழ்நாட்டில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தானது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில், இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில், பிரபாகரனுடன் களத்திலிருந்து போராடிய போராளியான அரவிந்தனிடம், பிபிசி தமிழ் வினவியது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2009ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி வரை தான், இறுதிக் கட்ட முள்ளிவாய்க்கால் மோதலில் ஈடுபட்டதாக அரவிந்தன் தெரிவித்திருந்தார்.

''எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புகின்ற கசப்பான உண்மை, அண்ணன் இல்லை என்பது தான்" என அரவிந்தன் அன்றைய தினம் கூறியிருந்தார்.

அரவிந்தன் வெளியிட்ட இந்த கருத்தானது, உலகம் முழுவதும் பாரிய பேசுப் பொருளாக மாறியது.

இந்த நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை என தன்னால் பிபிசிக்கு வெளியிடப்பட்ட கருத்தை அடுத்து, தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அரவிந்தன், ஊடக சந்திப்பொன்றை நடத்தி இன்று (18) கூறியிருந்தார்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

''இன்றைய தினம், நேற்றைய தினம் உட்பட சில தினங்களாகவே நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு நிலைமை காணப்படுகின்றது. பழ.நெடுமாறன் ஐயாவினுடைய, 'அண்ணன் வருகிறார்' என்ற கருத்துக்கு பதிலாக 'அண்ணன் இல்லை' என்ற கருத்தை நான் பிபிசிக்கு வழங்கியிருந்தேன். அதனைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் கருத்து கேட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தேசத்திலிருந்தும், இங்கே இருக்கக்கூடிய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இன்பராசா அவர்களிடம் இருந்தும் ஒரு அச்சுறுத்தல் வந்தது.

நான் இராணுவத்தோடு பணியாற்றுவதாகவும், கருணாவோடு பணியாற்றுவதாகவும் வட்டுவாகலில் நின்று போராளிகளை காட்டிக் கொடுத்ததாகவும் அவர் சில கருத்துக்களை என்னிடம் தெரிவித்திருக்கிறார். அது சார்ந்து ஃபேஸ்புக் பதிவுகள் சிலதையும் அவர்கள் இட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பில் நான் கரிசனைப்பட வேண்டிய தேவையில்லை. நான் உண்மையை பேச வேண்டியவனாக இருக்கின்றேன்.

இப்போதும் நான் சொல்கின்றேன், துவாரகாவையோ, சார்லஸையோ, அல்லது அண்ணியையோ, அண்ணணையோ, பாலசந்திரனையோ கொண்டு வந்து, என் முன் நிறுத்துவார்களாக இருந்தால், நான் (வெளியிட்ட கருத்துக்காக) தற்கொலை செய்துகொள்ளக்கூட தயாராக இருக்கின்றேன். உண்மையானவர்களாக, இதனை சொல்ல வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அண்ணன் இல்லை என்று கூறும் போது, எங்களுக்கு மிகுந்த வலியும், வேதனையும் ஏற்படக்கூடிய விடயம்." என அரவிந்தன் கூறினார்.

கந்தசாமி இன்பராசாவின் பதில்

கந்தசாமி இன்பராசா

பட மூலாதாரம்,INBARASA

படக்குறிப்பு,

கந்தசாமி இன்பராசா

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அரவிந்தனுக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''நாங்கள் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. ஏன் தம்பி நீ இப்படி செய்தாய்" என்று முன்னாள் போராளியான அரவிந்தனிடம் தான் தொலைபேசியுடாக வினவியதாக அவர் கூறுகிறார்.

உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் கதைத்ததாகவும், தான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பில் வினவியபோது, தனக்கும், அரவிந்தனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு வந்ததாக அவர் கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு,

பிரபாகரன் உயிர்: கடைசி யுத்தத்தில் போரிட்ட முன்னாள் போராளி பிபிசி தமிழுக்கு பேட்டி

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - கந்தசாமி இன்பராசா

நிச்சயமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

''அவர் உயிருடன் இருக்கின்றார். காரணம் என்னவென்றால், அவரது இறந்த உடலை 12,000 போராளிகளுக்கு இலங்கை அரசாங்கம் காட்டவில்லை. அதனால், அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு ஆகியன இன்று வரை விடுதலைப் புலிகள் மீதான தடையை எடுக்காததும், அண்ணன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு ஒரு காரணம் என சொல்ல வேண்டும். நாங்கள் உண்மையைதான் சொல்கின்றோம். எங்களுடைய தேசிய தலைவர் உயிருடன் வந்தாலும், ஆயுத ரீதியாக வரமாட்டார். ஜனநாயக ரீதியாக வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் அவர் வரத்தான் போகிறார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கத்தான் போகிறது. எங்கட தமிழ் மக்களுக்கு வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமை, ஜனநாயக ரீதியாக கிடைக்கத்தான் போகிறது" என தெரிவித்தார் கந்தசாமி இன்பராசா.

https://www.bbc.com/tamil/sri-lanka-64689647

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

தலைவருடன் நின்ற  போராளிகள்  சொல்லட்டும்  என்றோம்

இப்ப  இருவரும் இப்படி  சொல்கிறார்கள்  முரணாக...?

முடிவு???????

  • கருத்துக்கள உறவுகள்

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, ஏராளன் said:

எங்கட இனத்தில் வஞ்சகர்களுக்குப் பஞ்சமேயில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, முதல்வன் said:

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

அண்ணா ஒரு த‌ம்பியாய் உங்க‌ளுக்கு சொல்லும் சின்ன‌ அட்வெஸ்

இப்ப‌டியான‌ திரிக்குள் நேர‌த்தை வீன் அடிக்காதைங்கோ...........கூட‌ எழுத‌ வெளிக்கிட்டா ர‌த்த‌ அழுத்த‌ம் கூடும்

இர‌ண்டு நாள் இதுக்கை நான் எழுதி வேண்டின‌து த‌ல‌ இடியை...............

நாம் என்ன‌ பால் குடி பிள்ளைக‌ளா எல்லாத்தையும் ந‌ம்ப அல்ல‌து எதுக்கும் த‌லை ஆட்ட‌............

5 minutes ago, நன்னிச் சோழன் said:

எங்கட இனத்தில் வஞ்சகர்களுக்குப் பஞ்சமேயில்லை! 

ச‌கோ இந்த‌ திரியை விட்டு நீங்க‌ளும் த‌ள்ளி நில்லுங்கோ..........எம்மை அறியாமையே கோவ‌ம் வ‌ரும்............பிற‌க்கு எம‌க்கு பாட‌ம் எடுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் மீது தேவை இல்லா விரிச‌ல் வ‌ரும்...............

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, முதல்வன் said:

Backfire என்று ஆங்கிலத்தில் ஒருவார்த்தை உண்டு என்று நெறிப்படுத்திய உளவுத்துறை அறியாமலா இருக்கும்.

Eva Shop® Boomerang Australia 28 cm - Wurfspiel Flugspiel Wurfspiele  Bumerang aus hochwertigem Holz: Amazon.de: SpielzeugBoomerang போன்றது என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

இணைப்புக்கு ந‌ன்றி மூத்த‌வ‌ரே
இப்ப‌ தான் இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ தொட‌ங்கிறேன்...........................

  • கருத்துக்கள உறவுகள்
image

(ஆர்.ராம்)

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லையென்றால், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கையை பகிரங்கமாக வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஏன் மறுக்கின்றது என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது. தற்போது கணிசமான இடைவெளியில் எனது இருப்பினை உறுதிப்படுத்தும் நிகழ்வுகளும் தொடருகின்றன.

அவ்விதமான நபராக உள்ள நான் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆளாக எவ்வாறு இருக்க முடியும் என்றும் சீற்றமாக கேள்வி எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்ததன் பின்னரான சூழலில் இலங்கை இராணுவம் அதனை நிராகரித்துள்ளமை மற்றும் அக்கருத்துக்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரதிபலிப்புக்கள் தொடர்பில் வீரகேசரியிடம் கருத்து  வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாக இருக்கின்றார் என்ற பழ.நெடுமாறனின் கருத்துடன் நான் முழுவதுமாக உடன்படுகின்றேன். இதற்கு சில காரணங்கள் உள்ளன.  

முதலாவதாக, இறுதிப்போரின் போது பிரபாகரனுடன் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட போராளிகளில் யாரும் இதுவரையில் அவர் இறந்துவிட்டார் என்ற தகவலை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.

அடுத்ததாக, இலங்கை இராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், அவருடைய மரபணு பரிசோதனை அறிக்கை தங்களிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

இலங்கை இராணுவத்தினை பொறுத்தவரையில், அவர்கள் எமது எதிரிகள். அவர்களிடத்தில் உண்மையாகவே மரபணு பரிசோதனை அறிக்கை காணப்படுமாக இருந்தால், அதனை வெளியிடுவதில் தயக்கம் காண்பிப்பது ஏன் என்பதே பிரதான கேள்வியாகிறது. 

போர் நிறைவடைந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகின்ற நிலையில், இலங்கை இராணுவம் இன்னமும் பரிசோதனை அறிக்கையை வெளியிடத் தயங்குகின்றது என்றால் அதன் பின்னால் ஏதோ மர்மங்கள் உள்ளன என்பது வெளிப்படையான விடயமாகிறது.

இதேநேரம் தற்போது பிரபாகரன் இருப்பதாக விடுக்கப்பட்ட அறிவிப்பு வடக்கு, கிழக்கு மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று பலர் கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். உண்மையில் அது தவறானதாகும். எமது நிலங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அச்சத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்படும் என்பதே யதார்த்தமாகும்.

அதேநேரம் பிரபாகரன் நலமாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்தினை தொடர்ந்து நாம் எவருக்கோ எடுபிடிகளாக செயற்படுகின்றோம் அல்லது நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றோம் என்ற விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்திய மத்திய அரசாங்கத்தினால் அல்லது உளவுத்துறையினரால் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். அவ்வாறானவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

நான் தாயகத்திலிருந்து வெளியேறி தமிழகத்துக்கு வருகை தந்த பின்னர் எனது கடவுச்சீட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிக்கப்பட்டது. நான் இந்தியாவுக்குள்ளே சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமையில் தான் உள்ளேன்.

இது பலர் அறிந்திருக்காத விடயம். அதுமட்டுமன்றி, நான் இப்போதும் எனது இருப்பினை பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டிய நிலைமைகள் இருக்கின்றன. 

அவ்வாறான நிலையில் நான் மத்திய அரசாங்கத்தின் ஆளாக இருக்க முடியுமா?

அதேநேரம் தமிழகத்தில் உள்ள சில திராவிட சக்திகள் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவையாக உள்ளன. எம்மை பொறுத்தவரையில், எமது விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் மத்தியில் எவர் ஆட்சியில் இருந்தாலும், அத்தரப்புக்களுடன் முறையான அணுகுமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. 

இந்த நிலைப்பாட்டில் தான் பிரபாகரன் கூட இறுதியான காலத்தில் இருந்தார். அதற்கு அவருடைய இறுதி மாவீரர் உரையும் சான்றாகின்றது.

மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள இந்து ஆலயங்கள் பௌத்தத்தின் பெயரால் அதிகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஆகவே, அவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பதால் என்னை ஒரு இந்து வெறியனாக சித்திரித்து பா.ஜ.க.வுடன் இணைத்துப் பார்க்கின்ற தரப்பினரும் உள்ளனர். அது தவறானதாகும்.

கள யதார்த்தத்தினை வெளிப்படுத்துகின்றபோது மத ரீதியான முத்திரை குத்தப்படுவது பொருத்தமற்ற செயற்பாடாகும். தாயகத்தில் பள்ளிவாசலோ தேவாலயமோ பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும்போது அதற்கு எதிராகவும் நான் குரல் கொடுப்பேன் என்றார்.

https://www.virakesari.lk/article/148545

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

பிரபாகரன் குறித்த கேள்விக்கு, லண்டனில், இலங்கையில் இருந்து சீமானை தொடர்பு கொண்ட முன்னால் போராளிகளின், (அவர் தொடர்பில் இல்லாததால்), தகவல்களை ஒலிப்பதிவு செய்ய  அதனை நேரடி ஒளிபரப்பில் போட்டு காட்டினார் சீமான்.

காணொளிய‌ இர‌வு முழுதாக‌  பார்த்தேன் சில‌ உண்மைக‌ளை உடைத்து பேசாட்டியும் 
ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவின் கூத்துக‌ளை தெளிவு ப‌டுத்தி இருக்கிறார்...............
இந்த‌ திரியில் பின் விளைவுக‌ள்  ப‌ற்றி தான் நான் அதிகம் எழுதினேன்............கோமாவில் இருந்து எழும்பி வ‌ந்த‌துக‌ளுட‌ன் வ‌ய‌தில் மூத்த‌வ‌ரும் என் கூட‌ கோவ‌ப் ப‌டும் வித‌மாய் ந‌ட‌ந்து கொண்டார்.............ப‌ழ‌ நெடுமாற‌னின் அறிக்கையால்  முத‌ல் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து ஈழ‌த்து எம் உற‌வுக‌ள் தான்...............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of 1 person

இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!

வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...

துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...

கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...

முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...

தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...

இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...

அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...

எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!

அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!

Nellai Nellaiyaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இருக்கிறாரோ – இல்லையோ: இலங்கையின் வடக்கும் – கிழக்கும் மோடியின் கைகளில்..!

7-17.jpg

இலங்கையைப் பொறுத்தவரை வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாண மக்கள் நம்பியிருக்கிறார்கள். என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம். 13ஆவது திருத்தமே தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சுட்டிகாட்டியிருக்கிறார்.

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசியல் திருத்தம் நிரந்தரத் தீர்வாக அமையாது என்றும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் என்றும் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், அண்ணாமலை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து 13ஆவது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று நாம் கோரிக்கையை முன்வைத்தோம். இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும்,இலங்கையில் இப்போது இந்தியப் பிரதமர் மோடியே பேசுபொருளாக உள்ளார். அண்மையில் இந்திய மத்திய இணை அமைச்சர் முருகன் இலங்கை சென்றிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மண்டபத்தை இலங்கை மக்களுக்கு, அதாவது வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.

அங்கு வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்தியப் பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. அந்த மாகாண மக்களும் அவரையே நம்பியுள்ளனர். ஏனென்றால் அபிவிருத்தித் திட்டங்களை நாங்களே செய்கின்றோம்.

பலாலியில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம், மன்னாரூடாக இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து, யாழ்ப்பாணத்தில் 11 மில்லியன் டொலர் செலவில் கலாசார மண்டபம், கொழும்பு – யாழ்ப்பாணம் தொடருந்து தண்டவாளம் என்று எங்கு பார்த்தாலும் இந்திய அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தம்தான் தீர்வு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இலங்கைக்குச் சென்றிருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இந்த விடயத்தை அந்தநாட்டு அரசாங்கத்திடம் உறுதியாகத் தெரிவித்து வந்திருக்கின்றார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தேவை மாகாணத்துக்கான அதிகாரங்கள் தான். காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவை. இலங்கை சென்றிருந்த மத்திய இணை அமைச்சர் முருகனும் இது தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருந்தார். நிறைய விடயங்கள் அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் நடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் இருக்கிறாரா ? இல்லையா ? என்பது பற்றி பழ.நெடுமாறன் தொடர்ந்தும் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரையில் அவற்றையெல்லாம் தாண்டி இலங்கை மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் மோடி மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.
 
https://akkinikkunchu.com/?p=238713

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

தலைவருடன் நின்ற  போராளிகள்  சொல்லட்டும்  என்றோம்

இப்ப  இருவரும் இப்படி  சொல்கிறார்கள்  முரணாக...?

முடிவு???????

“தலைவர் கிருஷ்ணர் வரம்பெற்றவர்: அவருக்கு சாவு இல்லை”

image_8db48bb61f.jpg

 கனகராசா சரவணன்

விடுதலைப் புலிகள் தலைவருடன் பழநெடுமாறன் 40 வருடகாலமாக  நெருங்கிய தொடர்புடையவர் அவருக்கு மேல் இடத்தில் இருந்து அனுமதி வந்திருக்கலாம். அதேவேளை, கிருஷ்ணர் வரும் பெற்றவர் தலைவர். அவருக்கு சாவு என்றுமே இல்லை  அவர் மீண்டும் மக்கள் மத்தியில் வருவாராக இருந்தால் அது ஜனநாயக ரீதியில் எமது மக்களின் இனவிடுதலைக்கான முன்னெடுப்புகளுடன் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடனேயே அவர் தோற்றம் பெறுவார் என  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் கே. இன்பராசா தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவில்   வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தற்போழுது பெசும்பொருளாக இருக்கும் விடுதலைப் புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் தொடர்பாக பழ.நெடுமாறன் இவ்வாறான செய்தியை விட்டிருப்பதென்பது தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்வியுடன் ஒட்டுமொத்த உலகமே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது என்றார்.

இன்று தலைவர் தொடர்பான விடயத்தில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்ற கேள்விக்கு எத்தகைய பதில் கிடைக்குமோ அதே பதில்தான் தலைவரின் விடயத்திலும் இருக்கின்றது. அனைத்து மதங்களும் கடவுள் இருக்கின்றார் என்ற ஏதோவொரு நம்பிக்கையில் தான் செயற்படுகின்றன என்றார்.

அதேபோல யேசுநாதர் பிறந்தார் மக்களுக்காக கஸ்டப்பட்டார் அவரை கடவுளாக மக்கள் வனங்கி கொள்கின்றனர் அதே மாதிரி கிருஷ்ணன் பிறந்த வரலாறு புத்தர் பிறந்த வரலாறு இருக்கின்றது. அதுபோல தேசிய தலைவரின் வரலாறு இருக்கின்றது. எங்கள் தேசியத் தலைவர் ஒட்டு மொத்த போராளிகள் மட்டுமல்ல எமது மக்களின் இதையத்தில் அன்று தொட்டு இன்று மட்டுமல்ல என்றும்  வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அவர் இல்லை என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கின்ற விடயங்கள் எல்லாம் எமது தலைவர்களால் தீர்க்க தரிசனமாக 1990களிலேயே சொல்லப்பட்டவை. ஓரு கட்டத்தில் எமது போராட்டம் பல நாடுகளின் உதவியுடன் நசுக்கி ஆயுதம் மௌனிக்கப்படும் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம் தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற சர்ச்சை வரும் அக்காலத்தின் பின் எமது தலைவரின் பெயர் ஏதொவொரு வகையில் வெளிவரும் அந்த சமயத்தில் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்துடன் வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வொன்று தலைவர் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் என அன்று கபிலஅம்மான் எமக்கு படம் கற்பிக்கும் போது  தீர்கத்தரிசனமாக சொல்லப்பட்டது என்றும் இன்பராசா தெரிவித்தார்.

தலைவர் இல்லை என்று அரசாங்கம் சொல்லட்டும். இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை, கைது செய்யப்பட்டவர்கள் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களில் சிலர் தற்போது வந்தார்கள், கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் என்றார்.

ஒரு விடுதலையை நோக்கிப் போராடிய இயக்கம். போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று பதின்மூன்று வருடங்களாக எந்தவித ஆயுதமேந்திய போராட்டங்களையும் மேற்கொள்ளாத நிலையில் எமது இயக்கத்தின் போராட்டத்தை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரிக்க வேண்டும். அந்த இயக்கம் எதற்காகப் போராடியதோ அந்த உரிமையைக் கொடுக்க வேண்டும் அந்த நியதி இருக்கின்றது என்றும் இன்பராசா மேலும் தெரிவித்தார்.

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் இன்றுவரை விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் இயங்கவில்லை என்ற ரீதியில் நாங்கள் நேர்மையானவர்கள், நேர்த்தியானவர்கள் என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டு எமது தேசியத் தலைவரின் கோட்பாட்டின் கீழ் ஜனநாயக ரீதியில் அனைத்து நாடுகளும் இணைந்து தலைவரின் வழிநடத்தலில் வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தை அவரின் கைகளில் வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இன்பராசா தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைவர்-கிருஷ்ணர்-வரம்பெற்றவர்-அவருக்கு-சாவு-இல்லை/175-312629

  • கருத்துக்கள உறவுகள்

E652-BA2-B-D8-F5-4-F2-E-953-C-37-FB7-E77

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையும் திரியோடு சம்பந்தப்படுவதால் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration of 1 person

இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!

வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...

துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...

கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...

முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...

தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...

இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...

அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...

எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!

அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!

Nellai Nellaiyaan

த‌மிழ் சிறி அண்ணா 
இதை எழுதின‌து ப‌ழைய‌ யாழ்  க‌ள‌வு உற‌வு நெல்லையன் அண்ணாவா 

நேர்மையான‌ ந‌ல்ல‌ உற‌வு 

முக‌ம் பார்காட்டியும் ந‌ல்ல‌ உற‌வு போல் என் ம‌ன‌தில் இருக்கிறார்.................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா 
இதை எழுதின‌து ப‌ழைய‌ யாழ்  க‌ள‌வு உற‌வு நெல்லையன் அண்ணாவா 

நேர்மையான‌ ந‌ல்ல‌ உற‌வு 

முக‌ம் பார்காட்டியும் ந‌ல்ல‌ உற‌வு போல் என் ம‌ன‌தில் இருக்கிறார்.................

பையன்...  அவர் தனது முகநூல் பக்கத்தில், 
இந்தத் கவிதைக்கு மேல் Copy என்று எழுதியுள்ளமையால் 
வேறு எவரோதான்.. இந்தக் கவிதையை எழுதியுள்ளதாக ஊகிக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

பையன்...  அவர் தனது முகநூல் பக்கத்தில், 
இந்தத் கவிதைக்கு மேல் Copy என்று எழுதியுள்ளமையால் 
வேறு எவரோதான்.. இந்தக் கவிதையை எழுதியுள்ளதாக ஊகிக்கின்றேன். 

அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.