Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் பழையபடி வேலைக்குப் செல்லத் தொடங்கியது மகிழ்ச்சியான விடயம் சிறி அண்ணா!!

satan கூறிய ஒரு விடயம் //  இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.// 

இது சரிதானே.. அவரைப் பற்றித் தெரியாமல் கூறுவது சரியில்லை.. 

ஆனாலும்  இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌

  • Thanks 1
  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 22:27, தமிழ் சிறி said:

அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது.

ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை  எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு  பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!        

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 11:15, nedukkalapoovan said:

இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள்.

நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம். 

வரவுக்கும், கருத்துக்கும்... நன்றி நெடுக்ஸ்.
உடலை உடனே வருத்தக் கூடாது என்றுதான்... படிப்படியாக 
குறைந்த நேரத்தில் இருந்து வேலையை ஆரம்பிக்க சொல்லியுள்ளார்கள்.  
ஆக முடியாவிட்டால், மீண்டும் விடுப்பு எடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.
இது வரைக்கும் சிறிதான வலி இருந்தாலும், சமாளிக்கக் கூடியதாக உள்ளது.  

வீட்டில் இருந்து உடம்பு வளர்ப்பதை விட, 
வேலைக்குப் போவதால்... மனதும் உற்சாகமாக உள்ளது. 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 11:42, Nathamuni said:

மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள்.

அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ.

இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். 

சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁

வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜

இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣

நாதம்ஸ்... எனக்கு  விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே,
விபத்து ஏற்படுத்தியவரும் தனக்கு  மனம் சரியில்லை,  மேலும் தவறு நடந்து விடுமோ என்று...
மூன்று கிழமைக்கு மேல் சுகவீன விடுப்பில் நின்றதாக மற்றையவர்கள் சொன்னார்கள்.

அவன் சாதாரணமாகவே... ரென்ஷன் பார்ட்டிதான். ஆனால் நல்ல வேலைகாரன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 21:11, vasee said:

எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் இது ஒரு பாரதூரமான குற்றம் என நினைக்கிறேன் (crime negligence).

அவர் மீது வழக்கு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டமையால் அவர் தப்பித்தார் என நினைக்கிறேன், நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தினரும் தான். உங்களுக்கு வேலையிலிருந்து நட்ட ஈடு கிடைக்கவில்லையா?(சரியாக தெரியவில்லை எனது கருத்து தவறாக இருக்கலாம்), 

வசி.... அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போல் 
வேலை விபத்து சட்டமும், நடை முறையும் ஜேர்மனியில்  மிக வித்தியாசமானது.
தற் செயலாக நடந்த... வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள். 

அவர் வேண்டுமென்றோ,  என்னை பழிவாங்கவோ விபத்தை ஏற்படுத்தி இருந்தால்...
(அதனை கண்ட சாட்சிகள்  இருவர் இருக்க வேண்டும்)... வழக்கு தொடுத்து  
நட்ட ஈடு பெறலாம்.

அல்லது  காலோ, கையோ... துண்டிக்கப் பட்டு அன்றாட கருமங்களை 
ஆற்ற  முடியாத நிலையில் இருந்தாலும் பல வித சோதனைகளுக்குப் பின்... 
அதற்குரிய விகிதாசாரத்தில் நட்ட ஈடு கிடைக்கும்.

கடைசியாக அந்த விபத்தால்... இதுவரை செய்த வேலைகளை, 
உடல் அசைவுகளை முன்பு போல் செய்ய முடியாமல் இருந்தால்... 
கொஞ்சப் பணம் மாதாந்தம் தருவார்கள். 
அதனையும் பல சோதனைகளின் பின் நிரூபித்த பின் தான் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

வசி.... அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போல் 
வேலை விபத்து சட்டமும், நடை முறையும் ஜேர்மனியில்  மிக வித்தியாசமானது.
தற் செயலாக நடந்த... வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள். 

இங்கு உங்கள் காரை பின்னால் வந்து மெதுவாக முட்டினால் காணும்..

குறைந்தது ஒரு லட்சம் டாலர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 23:34, Kandiah57 said:

சிறியண்ணை  மீண்டும் வேலைக்கு போவது மிகவும் மகிழ்வான விடயம் ...உங்களுக்கு தாக்குதல் எற்படுத்தியவனும்.   நீங்களும் முன்பு ஒரே பகுதியில் வேலை செய்தீர்கள். ...இப்போது மாத்தி விட்டார்களா   ? அதுவும் நல்லது தான்  சிலசமயம். நீங்கள் அவனுக்கு சாத்தவும்.  கூடும்   🤣 அவனுக்கும். கூட அந்த பயம் இருக்கலாம்  ...மனிதாபிமானம் வேண்டும் தான்...அது ஏற்கனவே வழக்கு போடமால் விட்டதில். காட்டப்பட்டுள்ளது..இனி நீங்கள் வழியப்போய். கதைப்பது அழகு இல்லை   ஏனெனில் உங்களில் பிழை என்று ஒரு விம்பம். எற்பட வாய்ப்புகள் உண்டு”  ஆனால் அவன் மன்னிப்பு கேட்டு கதைத்தால். தொடர்ந்தும். பழைய மாதிரி  பாழாகி கொள்ளலாம்...எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டும்  

கந்தையா அண்ணை...   நானும் அவனும் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்ல, 
ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும், வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்தாலும்..
அடிக்கடி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகம்.

தற்காலிகமாக... சில கிழமைகள்  நான் வேறு ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் 
பழைய இடத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பமும் வரலாம்.

நீங்கள் சொல்வதும் சரி. நான் நிச்சயமாக... 
வலியப் போய் கதைக்க மாட்டேன்.  
அவன் வந்து கதைத்தால்... கதைப்பேன். 🙂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/2/2023 at 03:02, satan said:

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை, தொடருங்கள்!  மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை, மன்னிப்பது மகா மகா பெருந்தன்மை. சிலர் தம் தவறை மற்றவர்மேல் போட்டு தப்பித்துவிடுவார் இது பெரும்பாலும் பலரில் காணலாம் தற்போது, அல்லது அதற்கொரு விளக்கம் கொடுப்பார். இன்னும் சிலர் குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் தம்மையே வருத்திக்கொண்டும், தவித்துக்கொண்டும் எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தெரியாமலும் ஒதுங்கியிருப்பர். சிலநேரம் அது மிகவும் இலகுவானது ஆனால் பயம் விடாது அல்லது இப்படி ஒரு வழி இருக்கிறது என்பது புரியாமல் அவர்கள் பழிவாங்கி விடுவார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்கிற உணர்வு. சிலநேரம் ஈகோ. ஒவ்வொருவரின் மனநிலை, ஏற்றுக்கொள்ளும் தன்மையிலுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.

சாத்தான்... உண்மையில் அவனும், நானும்... நீண்ட காலமாகவே அறிமுகமானவர்கள்.
வேலை இடத்திலும் நாம்... சுமூகமான உறவையே கொண்டிருந்தோம்.
அவன் பாலஸ்தீனத்தை சேர்ந்தவன்.  நன்றாக வேலை செய்யக் கூடியவன்.
ஆனால்... காரணம் இல்லாமல் ரென்ஷனில் நிற்பது அவன் சுபாவம்.

இன்னும் அவன் குற்ற உணர்விலிருந்து மீளவில்லையோ 
அல்லது எல்லாம் நாடகமோ என்று என்னால் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. 🙂

On 20/2/2023 at 01:44, satan said:

ஒரு வைர வியாபாரியின் மகன் தன்தந்தையிடம் வந்து கேட்டானாம், அப்பா நான் வாழ்க்கையின் பெறுமதியை  எப்படி அளப்பது? எப்படி அதற்கேற்ப என் வருங்காலத்தை அமைத்துக்கொள்வது என்று கேட்டானாம். அதற்கு அப்பா, நாளைக்கு வா நான் சொல்லித்தருகிறேன் என்றாராம். அடுத்தநாள் மகன் வந்தபோது அவன் கையில் ஒருவித கல்லைக்கொடுத்து இதை நீ உன்கையில், மற்றவரின் கண்ணில் படும்படி வைத்துக்கொண்டு குப்பை கொட்டும் இடத்தில் காலையிலிருந்து மாலைவரை நில். என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். மாலையில் வீடு வந்தமகன், அந்தக்கல்லை யாரும் பெரிதாக எண்ணவில்லை, ஏதோ வந்து பார்த்துவிட்டுப்போய் விட்டார்கள் என்றானாம். அடுத்தநாள் இதை பல்பொருள் அங்காடியில் வைத்துக்கொண்டு நில் என்றாராம், மாலையில் வந்த மகன் அதை சிலர் வந்து பார்த்தார்கள் சில்லறை விலை கேட்டார்கள் என்றானாம். மறுநாள் படித்தவர்கள் கூடும் இடமான நூல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாராம், வந்த மகன் சொன்னாராம், யாரும் பெரிதாக அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, வந்து பார்த்தார்கள் அது என்ன விலை என்று கேட்டார்கள் போய் விட்டார்கள் என்றானாம். இன்னொருநாள் மிகுந்த ஆடம்பரமான செல்வர்கள் கூடுமிடத்தில் வைத்துக்கொண்டு நிற்கும்படி கூறினாராம். மகனுக்கு ஒரே ஆச்சரியம், என்னதான் சொல்லித்தருகிறார், கடைசியாக இதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணிக்கொண்டு போய் நின்றாராம். அவன் அங்கே நின்ற போது ஒரு  பணக்காரர் அலங்கார உடையுடன் பெரிய காரில் வந்து இறங்கினாராம், இவனது கையில் கிடந்த கல்லைக்கண்டதும் அவனருகில் சென்று என்ன இங்கே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்துச்சென்று விலையுயர்ந்த ஆசனத்தில் அமரவைத்து உபசரித்து அவனது கல்லின் பெருமையையும் விலை மதிப்பையும் கூறினாராம். அவர் யாருமல்ல, வைர வியாபாரி. அதே போலவே நாம் மற்றவர்மேல் காட்டும் மரியாதை, அன்பு, இரக்கம் போன்றவையும். அதை மதிக்கத் தெரிந்தவர்களுக்கே அதன் பெருமை புரியும். நீங்கள் அவரின் குடும்ப பின்னணி, எதிர்காலம், வயதை எண்ணி மன்னித்திருந்தாலும் அவர் அதை உங்களில் பிழை இருந்தபடியாலேயே அதை செய்தீர்கள் என தவறாக நினைத்திருக்கலாம். இருந்தாலும்; உங்களை கண்டத்தில் மகிழ்ச்சி என்று ஒரு வார்த்தை சொல்ல தகுதியற்றவரோ என எண்ணத்தோன்றுகிறது. உங்களில்தான் பிழை என கருதுவாராகில் அவர் மீண்டும் தவறு செய்ய வாய்ப்புண்டு, அப்போ யாரும் உங்களைப்போல் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஏற்கெனவே சிலர் இந்த விடயத்தில் அவரைப்பற்றி புரிந்திருப்பார்கள், அவரது செயலுக்கான குறிப்பும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், அப்போ அவர் உங்கள் பெருந்தன்மையை புரிந்துகொள்வதுடன் அதற்க்கும் சேர்த்து விலை கொடுக்க வேண்டி வரலாம். போலீசார் நடவடிக்கை எடுப்பதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட போது, அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக எப்படி நடக்கவேண்டுமோ அப்படி மரியாதை செலுத்தியிருப்பார். ஆனால் அவருக்கு நெருக்கடி கொடுத்து அவரை மன்னிப்பு கேட்க செய்யாமல் காட்டிய பெருந்தன்மையை அவர் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கலாம். எது என்னவாக இருந்தாலும் பெரியவா பெரியவாள் தான்!        

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 19/2/2023 at 06:32, புங்கையூரன் said:

வேண்டாம் தமிழ்சிறி..!

நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்!

அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!

ஆம் புங்கையூரான். உங்கள் கருத்திற்கு நன்றி. 🙏

On 19/2/2023 at 08:50, சுவைப்பிரியன் said:

மீன்டும் வேலையில் சேந்தமை மகிழ்ச்சி.

நன்றி சுவைப்பிரியன். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙂

On 19/2/2023 at 23:47, பிரபா சிதம்பரநாதன் said:

மீண்டும் பழையபடி வேலைக்குப் செல்லத் தொடங்கியது மகிழ்ச்சியான விடயம் சிறி அண்ணா!!

satan கூறிய ஒரு விடயம் //  இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.// 

இது சரிதானே.. அவரைப் பற்றித் தெரியாமல் கூறுவது சரியில்லை.. 

ஆனாலும்  இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌

பிரபா சிதம்பரநாதன் அவர்களே... உங்கள்  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 🙏

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

காரணம் இல்லாமல் ரென்ஷனில் நிற்பது அவன் சுபாவம்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், உடல்நிலையில் வெளியே சொல்லமுடியாத, சொல்ல யாருமற்ற பிரச்சனைகள், நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். குற்ற உணர்விலிருந்து மீண்டு வர காலம் எடுக்கும். உடற்காயம் கண்ணுக்கு தெரிவதால் மருந்திட்டு குணப்படுத்தலாம், மனக்காயம் அப்படிப்பட்டதல்ல. ஒருவேளை நீங்கள் கதைக்காமல் இருப்பதும் அவரை தண்டிக்கக்கூடும். இவ்வளவும் செய்த நீங்கள் அவரை நேர்நேரே சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எல்லோரும் தவறு விடுவது இயல்பு, இது ஒரு விபத்து என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் மன்னிப்பை அவர் உணரும்போது அது குணமடையும். அது அவர் மேல் நீங்கள் காட்டும் பரிவு, அவன்மேல் உங்களுக்கு கோபமில்லை என்பதை எடுத்துக்காட்டும் செயல் போதுமானது. கொஞ்ச கால அவகாசம் கொடுத்துப்பாருங்கள். நீங்கள் எந்த  எதிர்பார்ப்புமில்லாமல் அவருக்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டீர்கள் அது பாராட்டத்தக்கது. ஆகவே விடுங்கள் ஒருநாள் வருவார், தனது வருத்தத்தை தெரிவிப்பார். இல்லையேல் அவருடன் வேலை செய்ய நேரிட்டால் கூடுதல் கவனம் எடுங்கள்.

5 hours ago, தமிழ் சிறி said:

 எனக்கு  விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே,
விபத்து ஏற்படுத்தியவரும் தனக்கு  மனம் சரியில்லை,  மேலும் தவறு நடந்து விடுமோ என்று...
மூன்று கிழமைக்கு மேல் சுகவீன விடுப்பில் நின்றதாக மற்றையவர்கள் சொன்னார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

நீங்கள் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்.... 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 09:44, தமிழ் சிறி said:

பிற் குறிப்பு: கால் விரலுக்கு, Qtex பூசுறனீங்களா  என்று கேட்டு, கடுப்பேத்த வேண்டாம்.  😂 🤣

வேலைக்கு போக தொடங்கி இருப்பீர் என்று தெரிந்தாலும் இந்தப்பதிவை இன்றுதான் பார்த்தேன் சிறி. வீட்டில கவனிப்பு பலமாக இருந்திருக்கு.  வேலையில் ஓடியாடி பிசியாக இருக்கும்போது உடல் நிறை விரைவாக குறைந்து விடும். உமது அனுபவங்களை தொடர்ந்து பதிவிடும். பிகு: அது எப்படி  Qtexபற்றி கேட்காமல் இருக்கமுடியும்?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/2/2023 at 15:17, தமிழ் சிறி said:

வீட்டில் இருந்து உடம்பு வளர்ப்பதை விட, 
வேலைக்குப் போவதால்... மனதும் உற்சாகமாக உள்ளது. 🙂

இது எனக்கு பிடித்துள்ளது👍

On 22/2/2023 at 16:06, தமிழ் சிறி said:

வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள்.

எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/2/2023 at 16:14, ஈழப்பிரியன் said:

இங்கு உங்கள் காரை பின்னால் வந்து மெதுவாக முட்டினால் காணும்..

குறைந்தது ஒரு லட்சம் டாலர்.

  animiertes-badezimmer-bild-0008.gif

ஆம்... ஈழப்பிரியன், அமெரிக்கன் கொடுத்த நட்ட ஈடுகளைப் பற்றி 
சுவராசியாமாக பத்திரிகை செய்திகளில் வரும். 🙂

அதில் ஒன்று... கொரோனா நேரம், வீட்டில் இருந்து  வேலை (Home Office) 
செய்து கொண்டு இருந்த ஒருவர், தன்னுடைய வீட்டு பாத் ரூமுக்கு போகும் போது... 
அங்கு நிலம் ஈரமாக இருந்து, வழுக்கி விழுந்ததுக்கும் 
பெரும் தொகையான நட்ட ஈடு  எடுத்தவர். 🤣

On 22/2/2023 at 21:22, satan said:

அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், உடல்நிலையில் வெளியே சொல்லமுடியாத, சொல்ல யாருமற்ற பிரச்சனைகள், நெருக்கடிகள் காரணமாக இருக்கலாம். குற்ற உணர்விலிருந்து மீண்டு வர காலம் எடுக்கும். உடற்காயம் கண்ணுக்கு தெரிவதால் மருந்திட்டு குணப்படுத்தலாம், மனக்காயம் அப்படிப்பட்டதல்ல. ஒருவேளை நீங்கள் கதைக்காமல் இருப்பதும் அவரை தண்டிக்கக்கூடும். இவ்வளவும் செய்த நீங்கள் அவரை நேர்நேரே சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் எல்லோரும் தவறு விடுவது இயல்பு, இது ஒரு விபத்து என்று சொல்லிப்பாருங்கள். உங்கள் மன்னிப்பை அவர் உணரும்போது அது குணமடையும். அது அவர் மேல் நீங்கள் காட்டும் பரிவு, அவன்மேல் உங்களுக்கு கோபமில்லை என்பதை எடுத்துக்காட்டும் செயல் போதுமானது. கொஞ்ச கால அவகாசம் கொடுத்துப்பாருங்கள். நீங்கள் எந்த  எதிர்பார்ப்புமில்லாமல் அவருக்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டீர்கள் அது பாராட்டத்தக்கது. ஆகவே விடுங்கள் ஒருநாள் வருவார், தனது வருத்தத்தை தெரிவிப்பார். இல்லையேல் அவருடன் வேலை செய்ய நேரிட்டால் கூடுதல் கவனம் எடுங்கள்.             

நீங்கள் சொல்வதும் சரி சாத்தான். 
அவசரப் படாமல், கொஞ்ச நாளைக்கு பொறுப்பம்.
நான் போய்... கதைக்க வெளிக்கிட்டால் 
தன்னில் பிழை இல்லை என்றும் நினைத்து விடுவார். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/2/2023 at 01:36, நன்னிச் சோழன் said:

நீங்கள் வேலைக்குத் திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்.... 

நன்றி... நன்னிச் சோழன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/2/2023 at 02:07, nilmini said:

வேலைக்கு போக தொடங்கி இருப்பீர் என்று தெரிந்தாலும் இந்தப்பதிவை இன்றுதான் பார்த்தேன் சிறி. வீட்டில கவனிப்பு பலமாக இருந்திருக்கு.  வேலையில் ஓடியாடி பிசியாக இருக்கும்போது உடல் நிறை விரைவாக குறைந்து விடும். உமது அனுபவங்களை தொடர்ந்து பதிவிடும். பிகு: அது எப்படி  Qtexபற்றி கேட்காமல் இருக்கமுடியும்?

  Nailcare GIFs - Get the best GIF on GIPHY

நில்மினி... வீட்டிலும் உணவு விடயத்தில் 
நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப்
குரக்கன் மா புட்டுக்கு... பாரை  மீன் குழம்பு,  மரவள்ளிக்கிழங்கு கறி..  
பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று  நல்ல கவனிப்பு கவனித்து..
பத்து கிலோ... ஏறி விட்டது. 😂

தெரப்பி செய்த குழுவினரையும்  மிகவும் பாராட்ட  வேண்டும். 👍
எலும்பு பொருந்தவும், நரம்புக்கும், சதை வளர்ச்சிக்கும், உடல் சமநிலையை பேணவும்...
எவ்வளவோ... பொறுமையாக அவர்கள் மேற்கொண்ட 
ஒவ்வொரு விடயமும் பிரமிக்க வைத்தது. 

நீங்களுமா நில்மினி.... 
வீட்டிலேயே  மனைவி, பிள்ளைகள்  Qtex பாவிப்பதில்லை, அப்படியிருக்க... 
நான் பூசுவதென்றால்... பக்கத்து வீட்டு அன்ரியின் 
Qtex  போத்தலை  வாங்கித்தான் பூச வேணும்.   animiertes-lachen-bild-0116.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/2/2023 at 22:39, விளங்க நினைப்பவன் said:

எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂

விளங்க நினைப்பவன், ஜேர்மனியில்... வேலை விபத்துக்கு பணம் கொடுப்பது வெகு அரிது. 🙂
ஆனால்.... விபத்திலிருந்து  மீண்டு வர எவ்வளவு பணம் என்றாலும் செலவழிப்பார்கள்.
வேலை விபத்து ஆட்களுக்கு வைத்தியம் செய்வதற்காகவும், தெரப்பி செய்யவும் என்று 
குறிப்பிட்ட  இடங்களில் மருத்துவ மனைகள் உள்ளது.
அதில் உயர்தர உணவு,  சிகிச்சைகளுடன், சென்று வர வாகன வசதிகள் என்று..
எது தேவையோ.. அவற்றை அவர்களே ஒழுங்கு செய்து தருவார்கள்.  

உதாரணத்துக்கு.... சிறிய பிள்ளைகள் வீட்டில் இருந்து,
ஒரு பெண்  விபத்தில் சிக்கியிருந்தால்.. பிள்ளைகளை பராமரிக்க 
கணவனுக்கு சம்பளத்துடன் விடு முறையும், 
சமைக்கவும்  ஆட்களை  ஒழுங்கு பண்ணி தருவார்கள்.
அந்த வகையில் மிகவும் பயனுள்ள வேலைகளை செய்வதால்...
எமக்கும் அது மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். 👍

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 hours ago, தமிழ் சிறி said:

  Nailcare GIFs - Get the best GIF on GIPHY

நில்மினி... வீட்டிலும் உணவு விடயத்தில் 
நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப்
குரக்கன் மா புட்டுக்கு... பாரை  மீன் குழம்பு,  மரவள்ளிக்கிழங்கு கறி..  
பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று  நல்ல கவனிப்பு கவனித்து..
பத்து கிலோ... ஏறி விட்டது. 😂

தெரப்பி செய்த குழுவினரையும்  மிகவும் பாராட்ட  வேண்டும். 👍
எலும்பு பொருந்தவும், நரம்புக்கும், சதை வளர்ச்சிக்கும், உடல் சமநிலையை பேணவும்...
எவ்வளவோ... பொறுமையாக அவர்கள் மேற்கொண்ட 
ஒவ்வொரு விடயமும் பிரமிக்க வைத்தது. 

நீங்களுமா நில்மினி.... 
வீட்டிலேயே  மனைவி, பிள்ளைகள்  Qtex பாவிப்பதில்லை, அப்படியிருக்க... 
நான் பூசுவதென்றால்... பக்கத்து வீட்டு அன்ரியின் 
Qtex  போத்தலை  வாங்கித்தான் பூச வேணும்.   animiertes-lachen-bild-0116.gif

சாப்பாட்டு வகைகளை கேட்கவே நல்ல ருசியாக இருக்கு சிறி.எலும்பு சரியாக பொருந்துவது, நரம்பு சதைகள் மீண்டும் தொடர்பு கொள்வதெல்லாம் எமது உடல் கச்சிதமாக செய்தாலும், ஒரு தவறும் நடக்காமல் எல்லாம் சரிவந்து , சமநிலயையும் எடுத்துவிட்டது பெரிய ஒரு விடயம்தான்.பழையபடி வேலைக்கும் போகத்தொடங்கியதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. வேலைக்கு போனால் உடல் நிறை விரைவாக குறையும்

Edited by nilmini
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/2/2023 at 15:06, தமிழ் சிறி said:

வசி.... அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போல் 
வேலை விபத்து சட்டமும், நடை முறையும் ஜேர்மனியில்  மிக வித்தியாசமானது.
தற் செயலாக நடந்த... வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள். 

அவர் வேண்டுமென்றோ,  என்னை பழிவாங்கவோ விபத்தை ஏற்படுத்தி இருந்தால்...
(அதனை கண்ட சாட்சிகள்  இருவர் இருக்க வேண்டும்)... வழக்கு தொடுத்து  
நட்ட ஈடு பெறலாம்.

அல்லது  காலோ, கையோ... துண்டிக்கப் பட்டு அன்றாட கருமங்களை 
ஆற்ற  முடியாத நிலையில் இருந்தாலும் பல வித சோதனைகளுக்குப் பின்... 
அதற்குரிய விகிதாசாரத்தில் நட்ட ஈடு கிடைக்கும்.

கடைசியாக அந்த விபத்தால்... இதுவரை செய்த வேலைகளை, 
உடல் அசைவுகளை முன்பு போல் செய்ய முடியாமல் இருந்தால்... 
கொஞ்சப் பணம் மாதாந்தம் தருவார்கள். 
அதனையும் பல சோதனைகளின் பின் நிரூபித்த பின் தான் கிடைக்கும். 

சிறி அண்ணா,

எனக்கு ஜேர்மன் சட்டம் பற்றி அறவே தெரியாது.

ஆனால் ஒரு தொழில் நிறுவனத்தின் employers liability, மற்றும் உழைப்பாளர் நலன் பேணும் health and safety regulations எல்லா மேற்கு நாடுகளிலும் ஓரளவு ஒத்த மாதிரியே இருக்கும்.

வெளிப்பார்வைக்கு தற்செயல்/விபத்து என தெரியும் ஒரு விடயம் ஒரு நிறுவனத்தின் அல்லது மனிதரின் கவன குறைவால் அல்லது செயல் குறைபட்டால் நிகழ்ந்துள்ளது என்பதை அதை தீர விசாரிக்கும் போதுதான் புலப்படும்.

உதாரணமாக ஒரு வாகன விபத்து. உங்கள் வாகனத்தை இன்னொரு நிறுவன வாகனம் முட்டி விட்டது. இருவரிலும் பிழை இல்லை அல்லது இருவரிலும் 50% பிழை.

ஆனால் ஆழமாக ஆராயும் போது அந்த நிறுவனம் காசை மிச்சம் பிடிக்க ரயரை மாற்றவில்லை. புதிய ரயராக இருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என தெரிய வருகிறது. இப்போ விபத்துக்கான பொறுப்புகூறல் (liability) கிட்டதட்ட முழுக்க நிறுவனத்திடம் போய்விடும்.

இப்படி பல உதாரணங்கள். கருவிகள் ஒழுங்காக பராமரித்தல், கையாள்பவருக்கு போதிய பயிற்ச்சி, பயிற்சியின் வருடாந்த தொடர்ச்சி, ரென்சன் பார்ட்டியை இந்த தொழிலில் தொடர்ந்து வைத்திருந்தது சரியா? இப்படி பலதை ஆராய்ந்த பின்னே, இது உங்கள் நிறுவனத்தின் கவன குறைவால் நடக்கவில்லை என அறுதியாக கூறமுடியும்.

ஆகவே குறைந்த பட்சம் ஒரு no win no fees சட்ட ஆலோசகரையாவது அல்லது union இருந்தால் அவர்களையாவது நாடலாம் என நான் நினைக்கிறேன்.

இதனால் உங்களுக்கு இழப்பீடு மட்டும் அல்ல, இதே பிழை தொடர்ந்து மேலும் விபத்து வருவதும் தடுக்கப்படலாம்.

இப்படியான வழக்குகளுக்கு ஒரு limitation period இருக்கும். செய்வதாயின் அதற்குள் செய்ய வேண்டும். 

யோசிக்கவும்🙏🏾.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/2/2023 at 08:39, விளங்க நினைப்பவன் said:

எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂

நீங்கள் எனது கேள்வியினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன், வேலையிடத்து விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிறுவனம் மீண்ட்டும் பணி புரிய ஆரம்பிக்கும் வரை சம்பளத்தில் 80% மட்டும் வேலை செய்ய முடியாதகாலத்தில் வழங்கும்.

பாதிக்கப்பட்டவரின் மருத்துவ செலவுகள் மற்றும் இந்த 80% சம்பளத்தினை காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்கும்.

பின்னர் அது தனது காப்புறுதி பிரிமியத்தினை உயர்த்தும், இதனை நிறுவனங்கள் விரும்பாது அதனால் விபத்தினை ஏற்படுத்தினவரினை எதிர்காலத்தில் வேலையினை விட்டு தூக்க விரும்பும்.

இதனை அறியும் நோகில்தான் கேட்டேன்.

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள், அது உங்களது தவறல்ல.

இதனை Perception என கூறுவார்கள்.

கண்ணன் துரியோதனிடம் உலகை சுற்றி பார்த்து விட்டு வருமாறு கூறினாராம், துரியோதனனும் உலகை சுற்றி பார்த்துவிட்டு வந்து உலகம் முழுக்க அயோக்கியர்களாக உள்ளார்கள் என கூறினாராம்.

கண்ணன் தர்மனிடம் உலகை பார்த்துவிட்டு வந்து உலகு எவ்வாறு உள்ளது என கூற சொன்னார் அதே போல் உலகை சுற்றி பார்த்து விட்டு வந்த தர்மன், உலகில் தர்மம் மேலோங்கியுள்ளது என்றாராம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, vasee said:

கண்ணன் துரியோதனிடம் உலகை சுற்றி பார்த்து விட்டு வருமாறு கூறினாராம், துரியோதனனும் உலகை சுற்றி பார்த்துவிட்டு வந்து உலகம் முழுக்க அயோக்கியர்களாக உள்ளார்கள் என கூறினாராம்.

கண்ணன் தர்மனிடம் உலகை பார்த்துவிட்டு வந்து உலகு எவ்வாறு உள்ளது என கூற சொன்னார் அதே போல் உலகை சுற்றி பார்த்து விட்டு வந்த தர்மன், உலகில் தர்மம் மேலோங்கியுள்ளது என்றாரா

பின்னர் இருவரும் கண்ணைனை உலகை சுற்றி பார்க்க அனுபினார்களாம்.

கண்ணன் பார்த்து விட்டு வந்து சொன்னானாம்…

“உலகம் பூரா செம பிகருகளாய் கிடக்குது ஓய்”🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

பின்னர் இருவரும் கண்ணைனை உலகை சுற்றி பார்க்க அனுபினார்களாம்.

கண்ணன் பார்த்து விட்டு வந்து சொன்னானாம்…

“உலகம் பூரா செம பிகருகளாய் கிடக்குது ஓய்”🤣

ம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/2/2023 at 09:47, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும்  இந்த திரியில் மனித மனம் பற்றி நிறைய அறிய முடிந்தது.. @vasee ம் @satan உங்கள் இருவரதும் கருத்துக்களும் 👌

வெளிநாடு வந்த ஆரம்பத்தில் ஆங்கில அறிவினை வளர்ப்பதற்காக இலகு நடையில் உள்ள ஆங்கில புத்தகங்கள் வாசிப்பதுண்டு, மேலே உள்ள நாவலின் சிறுகதை வடிவ புத்தகம் வாசித்திருந்தேன்.

ஆபத்து வரும்போது மனிதர்களோ மிருகமோ ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள், ஒன்று எதிர்த்து போரிடுவது அல்லது தப்பி ஓடுவது, இந்த கதையில் தனது எஜமானியினை விபத்திலிருந்து காக்க குதிரை புகையிரதத்துடன் போரிட முடிவு செய்கிறது (அது தன் அறிவிற்கேற்ப).

அந்த விபத்தின் பின் அந்த குதிரையும் அந்த மனிதர்களும் அடிப்படையில்லாமல் கோபமுள்ள முரட்டு மனிதர்களாகவும், குதிரையாகவும் மாறிவிடுகிறார்கள்.

சில மனிதர்கள் வெறுப்புணர்வுடன் எப்பொதும் இருந்தால் அவர்கள் மனதிலும் இவ்வாறான காயங்களே அவர்கள் இவ்வாறு மாறுவதற்கு காரணம் என்பதனை இந்த புத்தகத்தினை வாசித்ததின் பின்னர் உணர்ந்துகொண்டேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

  Nailcare GIFs - Get the best GIF on GIPHY

நில்மினி... வீட்டிலும் உணவு விடயத்தில் 
நாட்டுக் கோழி முட்டைக் கோப்பி, திரிபோசா மா உருண்டை, ஆட்டுக்கால் சூப்
குரக்கன் மா புட்டுக்கு... பாரை  மீன் குழம்பு,  மரவள்ளிக்கிழங்கு கறி..  
பயத்தம் பணியாரம், பகோடா, தோடம்பழ சாறு என்று  நல்ல கவனிப்பு கவனித்து..
பத்து கிலோ... ஏறி விட்டது. 😂

தெரப்பி செய்த குழுவினரையும்  மிகவும் பாராட்ட  வேண்டும். 👍
எலும்பு பொருந்தவும், நரம்புக்கும், சதை வளர்ச்சிக்கும், உடல் சமநிலையை பேணவும்...
எவ்வளவோ... பொறுமையாக அவர்கள் மேற்கொண்ட 
ஒவ்வொரு விடயமும் பிரமிக்க வைத்தது. 

நீங்களுமா நில்மினி.... 
வீட்டிலேயே  மனைவி, பிள்ளைகள்  Qtex பாவிப்பதில்லை, அப்படியிருக்க... 
நான் பூசுவதென்றால்... பக்கத்து வீட்டு அன்ரியின் 
Qtex  போத்தலை  வாங்கித்தான் பூச வேணும்.   animiertes-lachen-bild-0116.gif

நல்ல வயது போன நோமாக்கள் இருக்க வேணும்...😀🤭

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

விபத்திலிருந்து  மீண்டு வர எவ்வளவு பணம் என்றாலும் செலவழிப்பார்கள்.
வேலை விபத்து ஆட்களுக்கு வைத்தியம் செய்வதற்காகவும், தெரப்பி செய்யவும் என்று 
குறிப்பிட்ட  இடங்களில் மருத்துவ மனைகள் உள்ளது.
அதில் உயர்தர உணவு,  சிகிச்சைகளுடன், சென்று வர வாகன வசதிகள் என்று..
எது தேவையோ.. அவற்றை அவர்களே ஒழுங்கு செய்து தருவார்கள்.  

இதை விட வேறு என்ன வேண்டும் 👍

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.
    • அடேங்கப்பா… படத்தை பார்க்க  பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.