Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்

சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'

'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்

மின்சாரமே கனவு!'

:D

-------------------------------------------------------------------------------------------------------------

சார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !

என்னவாம் ?

நிலம் நிலமறிய ஆவல்னு !

  • Replies 1k
  • Views 155.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை அக்பர் கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீர்பால் மன்னரின் பின்புறத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். உடனே அக்பருக்கு கோபம் வந்து "ஏய் யாரங்கே உடனே பீர்பாலை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவையிலிருந்தவர்கள் மன்னா மன்னிக்க வேண்டும்.அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சினம் தணிந்த அக்பரும் அப்படியெனில் பீர்பால் இதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டும், அக் காரணம் இத் தவறை விட கூடுதலானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

உடனே சபையோரும் பீர்பால் தாமதிக்காமல் காரணத்தை கூறிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள் என்றார்கள்.

சிறிது யோசித்த பீர்பால் மெல்ல அக்பரின் அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படி " அரசே உண்மையாகவே அது நீங்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மகாராணியார்தான் குனிந்து நிக்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்" மன்னிக்கவும் என்றார்! :wub:

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'

'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'

'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'

'மாப்பிளைக்கு சோதனை காலம் ஆரம்பம் அதான்' :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1000 ரூபாய்க்கு பழைய கார்’ என்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒருவர் கார் உரிமையாளரைப் பார்க்கச் சென்றார். விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பெண்மணி.

காரைப் பார்த்தார். புத்தம் புதிது போலிருந்தது. அசல் விலை 10 லட்சம் இருக்கும் என்று தோன்றியது. இவ்வளவு விலையுயர்ந்த காரை எதற்கு வெறும் 1000 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார்:

“இது என் கணவருக்குச் சொந்தமான கார். போன வாரம் தனது செகரட்டரியுடன் ஓடிப் போய்விட்டார். நேற்று எனக்கு அவரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனது காரை விற்று, அதில் வரும் பணத்தை அனுப்பி வைக்கவும் என்று கூறியிருந்தார். அதனால்தான் விற்கிறேன்” :D

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது……

அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.

கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.

‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.

அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..

ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.

நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!

இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?

புலம்பலை ரசித்த இடம்: http://sengovi.blogspot.com

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெனாலிராமன் தந்த பெரிய பரிசு

thenaliraman.jpg

மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம். மக்கள் தங்கள் பிறந்த நாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுவர்களுக்கு விருந்து என மிகப் பிரமாண்டமாய் இருந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடந்தன.

முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர்.

அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்க்க ஆவலாக இருந்தனர்.

மன்னருக்கும் தெனாலிராமன் கொண்டு வந்த பரிசைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.

அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் அதைக் கவனித்தனர்.

கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான்.

அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று மட்டும் இருந்தது.

அவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டு, தெனாலிராமனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்றபடி தெனாலிராமனைப் பார்த்து,

"ராமா இந்த சிறிய பொருளை எனக்கு பரிசாக அளிக்க விரும்பியதன் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

மன்னர் தன் ஆசனத்தைவிட்டு எழுந்து வந்து தெனாலிராமனைத் தழுவிக் கொண்டு, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது.” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் அனைவரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்றாலே காமெடி தான்! அதுவும் தேர்தல் வந்துவிட்டால் மெகா காமெடி தான்! இதோ இங்கே சில கற்பனை மற்றும் எப்போதோ படித்த காமெடிகள்.

சிவகாசி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘வெண்கல குரலோன்’ வைகோ அவர்கள், ” அமெரிக்காவிலே, நான் சென்று வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலே(!!) நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை உரைக்க செய்து, ஜெய் ஹோ என்று பாடி பாராட்டு பெற்று , ஒன்றுக்கு இரண்டு விருது பெற்ற தங்க தமிழன் ரஹ்மானை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பாடிய அந்த பாடலை களவாணி காங்கிரஸ் கட்சி அபகரித்து தேர்தலுக்கு பயன்படுத்துகிறது ( தோளை உலுக்கிக் கொண்டு ), அது ‘ஜெய் ஹோ ‘ அல்ல ‘ ஜெய கோ ‘ . தமிழகத்தின் இதய தெய்வம் அன்னை அவர்களின் முதல் எழுத்தையும் எனது பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து தான் தம்பி ரஹ்மான் இசை அமைத்தார். ஆகவே அந்த பாடலை எங்கள் வெற்றிக் கூட்டணிக்கே உரியது” என்று “ஜெய கோ ” என்று ரஹ்மான் போல் உடலை வளைத்து அவர் பாட ஆரம்பிக்க , கூட்டம் தலை தெறிக்க பறக்கிறது!

சுப்ரமணிய சுவாமியிடம் நிருபர்கள் ‘இந்த தேர்தல்ல எந்த கட்சி ஆட்சிய பிடிக்கும்னு நினைக்கிறிங்க?’ , ‘எவாளும் பிடிக்க மாட்டா!! (அதையே ஆங்கிலத்தில்) nobody is going to win !! கடைசியா எலக்சன் முஞ்சு என்ட வந்து நிப்பா! ‘

நிருபர்கள் திகைப்புடன் ,’ நீங்க தான் தேர்தல்ல போட்டியிடலையே ?’ ,

‘ அதுனால என்ன இப்போ, என்கு இப்வே 225 எம்.பிஸ் சபோர்ட் இருக்கு , அதோட சீனா ஆதரவுல கம்யூனிஸ்ட் சப்போர்ட் வாங்கி ஆட்சிய புச்சுடுவேன், அடுத்த PM நான் தான்!! ‘ – நிருபர்கள் அனைவரும் எஸ்கேப்!

படித்தவை :

1. விஜய்காந்த் ஒரு கூட்டத்தில், குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ‘பிரேமா’என்று தன் மனைவியின் பெயரை வைத்துள்ளார். ‘தலைவா, அது ஆண் குழந்தை என்று குழந்தையின் அப்பா கூவிச் சொன்னவுடன், ’சரி, சரி அப்படியானால் ‘பிரேமானந்தா’ என்று பெயர் சூட்டுகிறேன்”என்று கூறியுள்ளார்.

பிள்ளையின் பெற்றோர்கள் திகைத்துப் போய்விட்டனர். ‘இப்படி ஒரு பெயரா, வேண்டாம் வேறு பெயர் சூட்டுங்கள”; என்று கேட்க, ‘பிறகெதற்கு என்னிடம் வந்தீர்கள்? நீங்களே பெயர் வைத்துக் கொள்வதுதானே’என்று கோபமாகப் பேசியுள்ளார்.

2. காலத்தின் கோலம்?

”சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்!”

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்"

நன்றி நுணா பகிர்வுக்கு, எனக்கு இரண்டு பேரும் ஒன்றுதான். சுபாஸ் சந்திர போஸினால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, அதை மறைத்து பிரிட்டிஷ் அரசாங்கம் மீசையில் மண் ஓட்டவில்லை என காந்தியினால்தான் தாம் வெளியேறுவதாக கூறி ஒப்படைத்து சென்றுவிட்டார்கள்

சுபாஷ் சந்திர போஸ் -

மறக்க பட்டது உன் பெயர்

மாறி விட்டது சுதந்திரம்

விடுதலைக்கு வேண்டுகிறோம்

விரைவாக பிறந்து வா

கொடி நிறம் முழுவெள்ளை

கோடி சுமத்தும் பிணங்களையே - உன்னால்

வீர மரணமாய் இராணுவத்தில்

வெற்றிக்கு போர்த்தியது மூவண்ணம்

நாட்டுக்கு உயிர் அற்பணிதாய்

நன்றி மறப்பது சடங்களுக்கு

கண்ணீர் விடுவது உதடுகளும்

கைகள் தொழுவது உன் காட்சிக்குத்தான்

- கவி

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"

" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.

" அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் அவர் டென்ஷனாக.

ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.

ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 20 ரூபாய் விலை குறைந்தது.

எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான்.

ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.

அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!

"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.

"என் தாத்தா...ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.

" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்.

ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்"

ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?"

ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பயத்தோடு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “ஏங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்குப் பு¡¢யவில்லை. “எப்படி?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சி¡¢த்தார் சர்தார்ஜி.

“நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!” என்றார் நண்பர்.

“அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே...” என்றார் சர்தார்ஜி.

“ஏன்?” என்றார் நண்பர்.

“நான்... மெகா சீ¡¢யல் பார்க்கப் போகிறேன்” என்றார் சர்தார்ஜி!

சர்தார்ஜி வாரப் பத்தி¡¢கைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப் பத்தி¡¢கையின் காம்ப்ளிமெண்ட்¡¢ காப்பியும், சன்மானமும் அவருக்கு வருவதுண்டு.

ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப் போனார் சர்தார்ஜி. “ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை அனுப்பவில்லை?” எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் சர்தார்ஜி.

சர்தார்ஜி டூ வீலா¢ல் ஒரு லா¡¢யை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.

அவா¢ன் வினோதமான ஆக்ஷனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லா¡¢யின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது!

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொ¢க்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதி¡¢ ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, “என்னடி தொ¢யாத மாதி¡¢ கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

812.bsap88saa1mqgws48g0w4k4sw.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th.jpeg

மனைவி வீட்டில் தனியாக இருந்தாள்.

யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள்.

அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான்.

ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா?

இல்லை!. கடைக்குப் போயிருக்கின்றார். உங்களுக்கு அவசரமென்றால் அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார்.

நன்றி சொல்லிவிட்டு அவன் வரவேற்பறையிலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.

ஒரு முறை செருமியபடி சாரா.. என்றான் அவளது கணவனின் நண்பன்.

சாரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உனது மார்பகங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன…

அவள் கூச்சத்தோடு தன் இருக்கையில் நெளிந்தாள்.

நீ உன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினால் 100 டாலர்கள் தருகின்றேன் என்றான் அவன்.

அட இதென்ன தொல்லையாக இருக்கின்றது. மார்பைக் காட்டட்டுமாம். 100 டாலர் தருகிறானாம்.

அவளுக்குள் சபலம் தட்டியது. ஒரு தடவை காட்டினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகின்றது? 100 டாலர் இலாபந்தானே.?

ஒரு கணம் தயங்கியவள் மறு கணம் தன் மேலாடையை விலக்கி தன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினாள். ஆசை தீர அவன் பார்த்துவிட்டு மேசையில் 100 டாலர் நோட்டு ஒன்றை வைத்தான். தன் மேலாடையைச் சரிசெய்து கொண்ட அவள் ஆவலோடு அந்த 100 டாலர் தாளை எடுத்துக் கொண்டாள்.

அழகே அழகுதான். ஒன்றைப் பார்த்த எனக்கு மற்றையதையும் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கின்றது. இரண்டாவதையும் நீங்கள் காட்டினால் இன்னொரு 100 டாலர் தருகின்றேன் என்றான் அவன்.

எந்த நரி முகத்தில் இன்று நான் விழித்தேன்? இன்னொரு 100 டாலரா?

ஆசை யாரைத்தான் விட்டது? கையில் கிடைத்த 100 டாலரின் ருசி வெட்கத்தை ஓரத்தில் தள்ள தன் மேலாடையை அகற்றி தன் இரு மார்பகங்களையும் அவனுக்குக் காட்டினாள் அவள்.

அடடா அற்புத அழகு.. அவன் கண்கள் அவள் மார்பகங்களில் மொய்த்தன. ஆசை தீரப் பார்த்து விட்டு அடுத்த 100 டாலர் தாளை அவளிடம் நீட்டினான்.

அவன் எழுந்தான். எனக்கு நேரமாகின்றது. இன்னொரு தினம் ரொம்மிடம் வருகின்றேன். கேட்டதாகச் சொல்லுங்கள்.

அவசரமாக எழுந்து அவன் போய்விட்டான். இருநூறு டாலர் சம்பாத்தியத்தில் மெய்மறந்து போயிருந்த அவள் அவசரம் அவசரமாக தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். 200 டாலரை மெல்ல தன் உட் சட்டைக்குள் செருகிக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக

டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம்.

வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள்.

நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.

அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள்.[/size]

[size=3][size=4]தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான். [/size][/size]

[size=3][size=4]ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.

மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.

மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்.

"வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.

மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்

எண்ணி மகிழ்ந்தார்.

பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.[/size][/size]

Edited by nunavilan

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

hum-club-logo+copy.jpg

ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ஏதோ சிந்தனையில் இருந்தவர்,. சட்டென்று, “ குப்பை..குப்பை” என்றார்.. அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:

``இதோ பாருங்கோ, நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்ராயம் தெரிவிப்பது தவறு.''

*

ஒரு அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. ``இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்'' கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.'

*

ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. ``என்ன விலை?'' என்று கேட்டார். ``விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை'' என்று கடைக்காரர் குழைந்தார்.

``சேச்சே... இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்'' என்றார்.

கடைக்காரர் உடனே, ``சரி, இதன் விலை இரண்டு ரூபாய்'' என்றார்.

சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, ``அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடு'' என்றார்.

*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.

``என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?''

``ஆமாம்.''

``நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்' என்ற ஜோக்கும்...''

``ஆமாம். என்னுடையதுதான்.''

``இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?''

``அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை'' என்றார் அந்த முதியவர்.

*

சர்வாதிகாரிக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. ``இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்'' என்று உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.

சர்வாதிகாரியின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.

அவரைப் பார்த்து சர்வாதிகாரி, ``என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?'' என்று கேட்டார்.

``பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.''

``அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்'' என்றார்.

``ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது'' என்றார் ஜோக் எழுத்தாளர்.

*

பயில்வான் போன்று இருந்த ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.

நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, ``ஏ... என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?'' என்று கேட்டான்.

``நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?'' என்று கர்ஜித்தான் பயில்வான்.

``அதுதானே.கேட்டேன்.. ஆமா,.. எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்...'' என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.

*

பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ``அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்...'' என்றாள்.

ஒரு மாணவன், ``டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே'' என்றான்.

டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, ``இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அதுபோல் கடவுளும் கற்பனைதான்'' என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..

மகன் : 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் : இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் : நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் : சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

:D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
editpreview.gif

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மகா கஞ்சன்

ஒரு ஊரில் ஒரு கஞ்சன் மற்ற கஞ்சர்களுக்கு வகுப்பு நடத்தினான். இரவுதானே, வாயால் மட்டுமே கதைக்கிறோம் என்று விளக்கை அணைத்து விட்டு ஒரு மணி நேரம் வகுப்பு நடத்தினான். வகுப்பு முடிந்ததும் விளக்கை ஏற்ற போக ஒரு மாணவன் குரல் வந்தது " சார் இப்போ விளக்கை போட வேண்டாம்" என்றான். ஏன் என்று வாத்தியார் கஞ்சன் கேட்க, "சார் இரவுதானே என்று நிலத்தில் இருக்கும் போது வேட்டி ஊத்தையாகிவிடும் என்று கழற்றி வைத்து விட்டேன், இப்போ எனக்கு அதை உடுத்த நேரம் வேண்டும்" என்றான். அதற்கு வாத்தியார் கஞ்சன் " நீ குருவை மிஞ்சி விட்டாய், நீதான் இன்று முதல் மகா கஞ்சன் என்றான்

  • கருத்துக்கள உறவுகள்

சிரியுங்கள் - உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்

அழுங்கள் - நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டு இருப்பீர்கள்

நீங்கள் சிரிப்பதால் உங்கள் முகம் அழகானதாக இருக்கும்

மற்றவரை சிரிக்க வைப்பதால் உங்கள் அகம் சுத்தமாக்கப்படும்.

சிறந்த முயற்சி தொடருங்கள் நுணாவிலான்

  • 4 weeks later...

[size=3]812.bsap88saa1mqgws48g0w4k4sw.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th.jpeg[/size]

[size=3]பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக[/size]

[size=3]டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம்.[/size]

[size=3]வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள்.[/size]

[size=3]நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.[/size]

ரொம்மின் மனைவி (தனக்குள்) "நல்ல காலம் டேவிட் இவரிடம் 300 டாலர் கடன் வாங்கவில்லை"

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்லூரி மாணவர்களுக்கு பரிட்சை வைக்கப்படுகிறது.4 மாணவர்கள் பரீட்சைக்கு முதல் நாள் குடித்து விட்டு தூங்கியதால் அடுத்த நாள் நித்திரையால் எழும்ப பிந்தி விட்டது. பேராசிரியாருக்கு தங்களின் ஊருக்கு சென்று திரும்புகையில் காரின் ரயருக்கு காற்று போய்விட்டது. அதனால் நேரத்துக்கு பரீட்சைக்கு சமூகமளிக்க முடியவில்லை என்றார்கள். அப்படியா என பேராசிரியர் கேட்டு விட்டு உங்களுக்கு ஒரு கிழமை தருகிறேன்.படித்து விட்டு வாருங்கள்.அடுத்த கிழமை உங்களுக்கு பரீட்சை வைக்கிறேன் என்றார். மாணவர்களும் சந்தோசப்பட்டார்கள்.பரீட்சை நாள் அன்று பேராசிரியர் நால்வரையும் வெவ்வேறு அறையில் பரீட்சை எழுதுமாறு செய்து விட்டு அவர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாதவாறு செல்பேசியையும் வாங்கி விட்டார்.

கேள்வித்தாள் வழங்கப்பட்டது.

கேள்வி 1: உங்களின் பெயர் என்ன? 2 புள்ளிகள்.

கேள்வி 2: காரின் எந்த ரயருக்கு காற்றுப்போனது?? 98 புள்ளிகள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]காஸ்மீர் பகுதியில் பொது மக்களின் நடமாட்டத்துக்கு திறந்துவிடப்படாத ஒரு பகுதியில் ஒரு நாள் அதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடு பட்ட ஒருவரை கைது செய்த பாதுகாப்பு படை வீரனுக்கும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கும் இடையில் நடந்தத ஒரு சம்பாசனை .

படை வீரர் :- (பயிற்சியில் ஈடு பட்டவரிடம் ) உங்களை நான் கைது செய்கிறேன் .

பயிற்சியில் ஈடுபடுபவர் :- ஏன் ?

படை வீரர் :- நீங்கள் நட மாட கூடாத, வர கூடாத இடத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள் .!!

பயிற்சியில் ஈடுபடுபவர் ஐயோ!! இல்லை இது பற்றி நான் அறிந்திருக்கவில்லை , என்னை மன்னித்து, விட்டு விடுங்கள்.

படை வீரர் :-முடியாது நீங்கள் இந்த நாட்டிற்கு பாதகம் விளைவிக்க கூடிய பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறேன், -

பயிற்சியில் ஈடுபடுபவர்;-ஐயோ !!!அப்பிடி ஒண்ணுமே இல்லை சார்'''!

படை வீரர் :-சரி உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஏதாவது ஆவணங்கள் வைத்திருக்குறீர்களா ?

பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் இந்த நடை பயிற்சிக்கு வரும் போது அதெல்லாம் எடுத்து வருவாங்களா ?

படை வீரர் :-இல்லை,, ஆகவே உங்களை கைது செய்கிறேன்

பயிற்சியில் ஈடுபடுபவர்:-ஐயோ சார் நான் இந்த நாட்டின் 'பாராளுமன்ற உறுப்பினர் ''.

படை வீரர் :-அப்பிடியா அப்பிடியென்றால் உங்கள பாராளும்ற உறுப்பினர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பியுங்கள் , நான் நம்புகிறேன்.

பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் அதனையும் நான் கொண்டு வரவில்லை..

படை வீரர் :- உங்களை நான் நம்புவதற்கு எந்த விதமான அடையாளத்தையும் நீங்கள் வைத்திருக்க வில்லை ம்ம் என்ன செய்வது ......???......................சரி , நமது தேசிய கீதத்தை பாடுங்கள்.

பயிற்சியில் ஈடுபடுபவர்:-!!!?????? இல்லை சார் அது வும் தெரியாது ..

படை வீரர் :- ம்ம் இப்பொழுது நம்புகிறேன் நீங்கள் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் தான். நீங்கள் போகலாம். !!! [/size]

Edited by nunavilan

நாவலருடைய குறும்கதை ஒன்றை பாருங்கள். Politically incorrect என்பதற்கு ஒரு உதாரணம்.

சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். அன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.

இரண்டு மாகா கஞ்சர்கள் ஒரு நாள் மதிய உணவுண்டார்கள். ஒருவன் வெறுஞ்சோற்றை மற்றக்கஞ்சன் உண்ணும் கறி மணத்தோடே மூச்சுப் பிடித்துண்டான்.

"என் கறி மணத்தில் தானே உண்டாய். காசு தா!" என்றான் கஞ்சன் நம்பர் ஒன்.

"அதெப்படி ?" இது கஞ்சன் #2.

வாக்கு வாதம் முற்ற நீதிபதியிடம் சென்றார்கள்.

அவரும் தீர்ப்புக் கொடுத்தார். கஞ்சன் #2 இடம் "இரண்டு ரூபாய் குற்றியை எடு" என்றார்.

"கஞ்சன் #1 இன் மூக்கருகே பிடி!"

"முகர்"

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாகா கஞ்சர்கள் ஒரு நாள் மதிய உணவுண்டார்கள். ஒருவன் வெறுஞ்சோற்றை மற்றக்கஞ்சன் உண்ணும் கறி மணத்தோடே மூச்சுப் பிடித்துண்டான்.

"என் கறி மணத்தில் தானே உண்டாய். காசு தா!" என்றான் கஞ்சன் நம்பர் ஒன்.

"அதெப்படி ?" இது கஞ்சன் #2.

வாக்கு வாதம் முற்ற நீதிபதியிடம் சென்றார்கள்.

அவரும் தீர்ப்புக் கொடுத்தார். கஞ்சன் #2 இடம் "இரண்டு ரூபாய் குற்றியை எடு" என்றார்.

"கஞ்சன் #1 இன் மூக்கருகே பிடி!"

"முகர்"

நல்ல தீர்ப்பு :D

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிக் களிக்கும் கிளப்.
 
சிலர் டென்னிஸ் ஆடி விட்டுத்  துண்டால் துடைத்துகொண்டே வந்து அமர்கின்றனர்.
 
சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
 
சிலர் கையில் மதுவோடு ஊர் வம்பு பேசிக் கொண்டிருக்கின்றனர்.
 
அப்போது அங்கே ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த கைபேசி அடிக்க ஆரம்பித்தது.
 
ஒருவர் அதை எடுத்து ஒலி பெருக்கியில் போட்டு எல்லோரும் கேட்கும்படிப் பேச ஆரம்பிக்கிறார்.
 
மறு முனையில் பெண் குரல்”அன்பே!க்ளப்பில்தானே இருக்கீங்க?”
 
"ஆமாம்” அவர்.
 
“டார்லிங்! நான் விரும்பிய மாதிரி வைர மாலை இன்று ஜி,ஆர்.டி.யில் பார்த்து விட்டேன். ஐந்து லட்சம்தான்”
 
"உனக்குப் பிடித்திருந்தால் வாங்கி விடு”
 
”நன்றி.அப்புறம் இன்னொரு செய்தி.என் நண்பி மங்களம் சொன்னாள்.நாம் பார்த்து ரசித்து வாங்க எண்ணிய வீடு விலைக்கு வந்திருக்கிறதாம்..அவளுக்குத் தெரிந்தவர்கள்தான்.சரி என்று சொல்லி இன்றே அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்து விடட்டுமா?”
 
” உன் இஷ்டம்!நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?”
 
“இச்,இச்!நீங்க ரொம்ப இனியவர்.நன்றி”
 
தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
 
அனைவரும் அவரையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 
அவர் கைபேசியைக் கீழே வைத்து விட்டுக் கேட்கிறார்”இந்தக் கைபேசி யாருடையது என்று யாருக்காவது தெரியுமா?!”
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமன்ஸ் கிரிக்கேட் டீம்ல இருக்காளே ஸ்பின் பௌலர், அவள் பேர் என்ன தெரியுமா?
தெரியாதே?

திருப்புற சுந்தரி. 

அவளைவிட பெட்டரா டாப் ஸ்பின் பௌலிங் போடறவ எதிர்த்த டீம்ல இருக்கா, அவள் பெயர் தெரியுமா உனக்கு?

என்ன?

பால திருப்புற சுந்தரி.

--------------------------------------------------------------

அப்பா,- “ நீ வளர்ந்த பின் யாரைப் போல இருக்க விரும்புகிறாய்?”

பையன் ;” காந்தியைப் போல”

“ வெரி குட், காந்திட்ட உனக்கு பிடிச்ச விஷயம் என்ன?

“ அதா? அவரு 13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்”””

------------------------------------------------------------------------------------------------------------------------

 

பேஸ்புக் லே ஏன் எப்பவும் 'லைக்' மட்டும் போடுறீங்க. கமெண்ட்ஸ் ஏன் போடுறதில்லை?

லைக்  படிக்காமலே போட்டுறலாம்.கமெண்ட்ஸ் அப்படி போட முடியாதே. அதான்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"

"வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

-------------------------------------------------------------------------------------------------------------------------

"என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?''

"ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்''

"புரியலை''

"என் மாமியாரைக் கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்''

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.