Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்க் கவிதை

Featured Replies

இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது.

ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்

நாய்க் கவிதை

அது ஒரு அழகிய கிராமம்

அங்கே மனிதர்களோடு

ஒரு நாயும் இருந்தது

நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள்

தன்னையும் அடைத்துக்கொண்ட

அந்த நாய்

ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது

அந்த நாய்

வருவோரையும் கடித்தது

போவோரையும் கடித்தது - உணவு

தருவோரையும் கடித்தது

ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள்

பொறுப்பானவர்கள் நாயை சூ என்று

விரட்டி விட்டு அமைதியானார்கள்

விரட்டிய கோபமோ என்னவோ

நாயே ஒருநாள் தானாக ஊரை விட்டு

ஓடிவிட்டது

ஊர்மக்கள் மகிழ்ச்சி உற்றார்கள்

நாயின் ஊளையை கேட்டுத்

தூங்கிப் பழகிய சிலர் கவலையுற்றார்கள்

திடீரென்று நாய் மீண்டும் வந்தது

தானாக வரவில்லை

ஊளைச் சங்கீதத்தை ரசித்தவர்கள்

அழைத்து வந்திருந்தார்கள்

இப்பொழுது

ஊர்மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

விரட்டப்பட வேண்டியது

நாய் மட்டும் அல்ல!

நம்முள்ளே புல்லுருவியாக உள்ள மனிடனை சாட்டையால் அடிக்கும் உங்கள் கவிதையின் தொனி நன்றாக உள்ளது சபேசன்.

எல்லாருக்கும் நாயோட ஒரு சேட்டையாப் போச்சிது..

திடீரென்று நாய் மீண்டும் வந்தது

தானாக வரவில்லை

ஊளைச் சங்கீதத்தை ரசித்தவர்கள்

அழைத்து வந்திருந்தார்கள்

இப்பொழுது

ஊர்மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

விரட்டப்பட வேண்டியது

நாய் மட்டும் அல்ல!

ஹீஹீ.

உங்கள் கவிதை நல்லா இருக்குதுங்கோ

நல்லவங்கள் இருக்கும் கும்பலுக்குள் ஒரு கெட்டவனாவது இருப்பானுங்கோ.

இப்பொழுது

ஊர்மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

விரட்டப்பட வேண்டியது

நாய் மட்டும் அல்ல!

சமூகத்தின் பிரச்சினைகளை எமக்குத் தீர்க்கத் தெரியவில்லை என்பதனால், அல்லது எமது தலைமைத்துவத்தையும் பெறுமதிகளையும் சமூகம் ஏற்கவில்லை என்பதனால் அந்தச் சமூகத்தையே அழித்துவிடுவோம் என்ற சிந்தனையோடு என்னால் உடன்பட முடியவில்லை.

சபேசன் மாமா நாயை பற்றி எழுதிய கவிதை நன்றாக இருகிறது மாமா வாழ்த்துகள்............. :P

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் கூறியது போன்று ஒரு அர்த்தமும் ஏறக்குறைய (முற்றுமுழுதாக அல்ல) இந்தக் கவிதையில் வருவது உண்மை.

கவிதைகள் சில வேளைகளில் பலவிதமான அர்த்தங்களை கொடுத்துவிடும். அதுவும் உவமைக் கவிதைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆனால் நான் இன்னுமொருவன் சொன்ன அர்த்தத்தில் எழுதவில்லை.

  • தொடங்கியவர்

ஞானக்கூத்தன் எழுதிய நாய்க் கவிதையை தேடிக் கண்டுபிடித்துவிட்டேன்.

அந்தக் கவிதை இதுதான்:

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்

எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்

ஆள் நடவாத தெருவில் இரண்டு

நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன

ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்

அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன

நகர நாய்கள் குரைப்பது கருதிச்

சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன

நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்

கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு

வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்

கடைசி நாயை மறித்துக்

காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

அது எங்கடை பண்பாடு கலாச்சாரம் சந்ததி சந்திதியாக செய்துவருகிறோம் அதன் மூலம் எமக்குள் இருக்கும் ஒற்றுமையை காட்டிறம் உணர்வு சம்பந்தப்பட்டது அதன் மூலம் மனநிம்மதி ஆறுதல் கிடைக்குது என்று கூறும்.

நாய்கள் பற்றி இங்கு கதைக்கப்படுவதால், நான் வாசித்த நாய்கள் பற்றிய சில ஆக்கங்களையும் முன்மொழிகிறேன். வாசித்துவிட்டு குரைக்கவும். :P இந்த ஆக்கங்கள் அனைத்தும் அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்தவை. நாய்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் வெளிவந்த ஆக்கங்கள் இவை. நாய்கள் வாழ்க. மனிதர்கள் வள் வள்.

நன்றி கெட்டதுகள்

கண்களில் வேட்டைப்பற்கள்;

காயத்தை தின்னும் ஈக்கள்.

கால்களிடைத்

தொங்கும் நிமிராவால்.

காலடியை முகரும் என் நாய்.

தாண்டிச்சென்றால் குதறிடுமோ?. . . .

என்னில்

பசியாறிடுமோ?. . . .

நன்றி கெட்டது

நாயா . . . நானா..?

அல்ஷேசன், பார்மேனியன்

மேல்சாதியானால்

மடியில் தோளில்

ஏன்

சைக்கிளிலிலும் பெட்டிகட்டிக்

காவிச் சென்றிருக்கலாம்.

ஆனால் நீ!

ஊர் நாய்

தெரு நாய்,

பற நாய் . . .

ஐம்புலனும் ஒடுங்க

அந்தகாரம் சூழும்.

வேட்டைகள் தொடங்கும்

எம் விழியாய், செவியாய்

உணர் நரம்பாய்

நீ இருந்தாய்.

அந்நிய வாடை சுமந்த

காற்றையும் எதிர்த்தாய்.

இந்திய ஜெனரல்களின்

சிம்ம சொப்பனமானாய்.

இசையின் சுருதியென

குலைப்பினில் உரைத்தாய்.

உயர்சாதி நாயெல்லாம்

ஷோபாவில், குஷனில்

ஒய்யாரமாய் ஓய்வெடுக்க

மண் விறாண்டிக் கிடங்கெடுத்து

ஊர் முனையில் காவல் இருந்தாய்.

இருந்தும் தான் என்ன?

கைவிடப்பட்டாய்.

அப்படிப் பார்க்காதே.

கம்பியால் இழைத்த

சுருக்குத் தடத்தினுள்

உன் மூதாதையரின்

உயிரின் யாசிப்பு.

நாய்களின் தொல்லையென

முன்னம் ஒரு நாளில்

காட்டிக்கொடுத்தது.

உனக்கு

நினைவுத் தொடர் உண்டா?

ஐந்தறிவு ஜீவன்

வாஞ்சையுடன் தாவுகின்றது.

பரிதவிப்பின் முனங்கல்.

புண்களின் வீச்சம்.

கண்களில் சுடரிட

செவிமடல் துடிக்கின்றது.

அன்னதண்ணி இல்லாமல்

எப்படி நீ...?

சோற்றுப் பருக்கையுமின்றி

விடுப்பல்லவா

பார்க்க வந்தேன்.

ஈனப் பிறவியடா நான்.

இந்த எஜமானனுக்காகவா

நீ...

மூசி..மூசி

மூச்சிரைத்து, சிணுங்கி

பிறாண்டி, கவ்விப்

பிடித்துழுத்து,

வானை மோப்பமிட

தெற்கிலிருந்து வரும்

சாவின் இரைச்சல்.

நிலத்தில் முகம் கவிழ

நான்.

மூச்சிழந்திருந்தது

நாய்.

கண்களில் வேட்டைப்பற்கள்...

-ஓகஸ்ட் 1990. யாழ்ப்பாணம்.

பரிதாபத்துக்குரியவர்கள்

கொடிதுயர்

நன்றி கெட்டதுகள்

ரொமி - காலம் ஆகிவந்த கதை

நாய்கள் - நாங்கள்

கண்ணன் எங்கள் நாய்

ஊர்க்காவல்

Edited by இளைஞன்

இன்னுமொருவன் கூறியது போன்று ஒரு அர்த்தமும் ஏறக்குறைய (முற்றுமுழுதாக அல்ல) இந்தக் கவிதையில் வருவது உண்மை.

கவிதைகள் சில வேளைகளில் பலவிதமான அர்த்தங்களை கொடுத்துவிடும். அதுவும் உவமைக் கவிதைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

ஆனால் நான் இன்னுமொருவன் சொன்ன அர்த்தத்தில் எழுதவில்லை.

சபேசன் விளக்கத்திற்கு நன்றி,

உங்களது கவிதையினை நான் புரிந்து கொண்ட விதத்தில் புரிந்து கொண்டமைக்கான காரணத்தையும் கூறி விடுகிறேன்.

உங்கள் கவிதை உருவகத்தின் மூலப் பிரச்சினை ஒரு விசர் நாய். அது விசர் நாய் என்பது வெறும்

அபிப்பிராயம் என்பதற்கு அப்பால் அது விசர்நாய் தானென்பதை, அந்நாயின் செயற்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு உங்களது கவிதை நிரூபிக்கின்றது (நிரூபணம் ஏற்புடையதா இல்லையா என்பதற்கப்பால் கவிஞரின் மனதில் அது விசர் நாயென்பது முடிந்த முடிபு என்பதை கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன). இந்நிலையில்;, அறிவாளிகளான, சமூக கரிசனையுடைய சில ஊராரின் முயற்சிகளின் பலனாக நாய் ஊரை விட்டுக் கலைக்கப்படுகின்றது. ஆனால் அறியாமை மிகுந்த சில ஊர் மனிதர்கள் விசர் நாயின் ஊளைச் சத்தத்தின் மீது கொண்டிருந்து அடிமைத்தனத்தின் பயனாக விசர் நாய் ஊரிற்குள் மீளழைத்து வரப்படுகிறது. இதைக்கண்டு, அந்நாயைக் கலைப்பதற்கு முயற்சித்த ஊரார்கள் நினைக்கிறார்கள், இந்த அறிவிலிச் சனத்திற்கு விசர் நாயின் ஊளைச்சத்தம் மீதான அடிமைத்தனம் இருக்கும் வரை நாய்ப் பிரச்சினை முற்றாகத் தீர்க்கப்பட முடியாதது என்று.

இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. கவிதைக்குப் பொய் அழகு என்ற போதிலும், கற்பனைக்கு எல்லை இல்லை என்ற போதிலும், ஒரு கவிதை முற்று முழதாக புனையியல் என்ற இலக்கிய வட்டத்திற்குள் மட்டும் நிற்கின்றதா அல்லது அதற்கு அப்பால் ஏதேனும் அரசியல் பேசுகின்றதா என்ற அடிப்படையில் ஒரு கவிதையின் வகை தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஒரு சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் பற்றியும் அவர்களது சிந்தனைககள் தொடர்பான விமர்சனமாகவும், இன்னமும் சொல்வதானால் கவிஞரின் கொள்கை விளம்பலாகவும், கவிஞர் தான் சார்ந்த சமூகம் தொடர்பாக நிறுவ விரும்புகின்ற ஒரு கருத்தினை நிறுவுவதற்கான மறைமுக அடிப்படையாகவும் முழைக்கின்ற ஒரு உருவகக் கவிதைக்கு லொஜிக் அவசியம். ஏனெனில் அத்தகைய ஒரு அரசியல் கவிதையும் கட்டுரை போன்றதே!

அப்படிப் பார்க்கையில் உங்களது கவிதையின் உருவகத்தில் லொஜிக் உதைக்கின்றது. அதாவது, எவ்வாறு விசர் நாயின் நோய் குணப்படுத்தப்பட முடியாத ஒன்றாக, நாய் அப்புறப்படுத்தப்படுவது தான் ஒரே தீர்வாகக் கவிதையினால் சித்தரிக்கப்படுகின்றதோ, அதே அளவிற்கு உண்மையானது விசர் நாய் அதிக காலம் உயிர் வாழ மாட்டாது என்பதும். இந்நிலையில், அவ்விசர் நாய் துரத்தப்பட்டு, அதனால் அதன் சத்தத்தை வேண்டிச் சில ஊரார் ஏங்கி, அதன்பயனாக அந்த நாய் மீள அழைத்து வரப்படல் என்பது எத்தனையோ பரிமாணத்தில் லொஜிக்கிற்குப் புறம்பானது. விசர் நாயின் பிரச்சினை நாட்கணக்கில் மட்டுமே நீள்வது என்ற அடிப்படையில், உங்கள் கவிதை சித்தரிக்கும் அளவு காட்டமான, நீட்சியுடைய ஒரு சமூகப் பிரச்சினைக்கு (அது என்ன பிரச்சினையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) விசர் நாய் உருவகம் ஏற்புடையது அல்ல. (ஒருவர் ஒரு உருவகக் கவிதை எழுதும் அளவிற்குக் காட்டமான சமூகப் பிரச்சினை நிட்சயம் காட்டமானதாக, நீட்சியுடையதாகத் தான் இருக்க முடியும். )

சரி லொஜிக் தொடர்பான ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு, கவிதையை சும்மா ஒரு கற்பனையாக இரசிக்க முயன்றால், அங்கு வருகின்ற கருத்தானது, விசர் நாய் என்ற பிரச்சினைக்கு ஒரே முடிவு என்பது சமன்பாட்டில் இருந்து அந்த நாய் அகற்றப் படுதல் மட்டுமே என்பதைக் கவிதை வரிந்து கட்டிக்கொண்டு வாதிடுகிறது. இந்நிலையில், கவிஞர், "விரட்டப்படவேண்டியது நாய் மட்டுமல்ல" என்ற தனது வார்த்தைப் பிரயோகத்தை அந்நாயின் சத்தம் விரும்புவோர் நோக்கிப் பாவிப்பதானது, ஒரே பொருளை மட்டும் தான் கொடுக்கின்றது. அதாவது, கவிஞர் நாயின் சத்தம் விரும்பும் மக்களையும் நாய் போன்றே விரட்டி விடச் சொல்கின்றார், சமன் பாட்டில் இருந்து அகற்றி விடக்கோருகின்றார் என்பது மட்டுமே.

என்னடா இவன், சும்மா ஓரு கவிதையைப் படிச்சோமா இரசிச்சோமா என்றில்லாமல் ஆராயிறன் பேர்வழி என்று இத்தனை நோண்டு நோண்டுறான் என்று நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பதிவினை இடுகிறேன்.

Edited by Innumoruvan

எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிய இன்னுமொருவன் இன்னுமொன்றைச் சுட்டிக்காட்ட மறந்துவிட்டார். :rolleyes:

அங்கால வன்னி மைந்தன் எழுதிய கவிதைக்கும் இந்த "விசர் நாய்க்" கவிதைக்கும் எந்தவகையிலான தொடர்பு இருக்கிறது என்பதை :)

எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிய இன்னுமொருவன் இன்னுமொன்றைச் சுட்டிக்காட்ட மறந்துவிட்டார். :rolleyes:

அங்கால வன்னி மைந்தன் எழுதிய கவிதைக்கும் இந்த "விசர் நாய்க்" கவிதைக்கும் எந்தவகையிலான தொடர்பு இருக்கிறது என்பதை :)

இளைஞன்,

ஒரு தலைப்பில் கருத்து எழுதும் போது, யாழ் களத்தில் பதியப்பட்டிருக்கும் அத்தனை தலைப்பையும் படித்து மனதில் வைத்துக் கொண்டு தான் கருத்து எழுதலாம் என்றால், அநேகமாக இங்கு கருத்துப்பகிர்வது எனக்குச் சாத்தியப் படாது.

எந்தத் தலைப்பில் கருத்தெழுதத் தோன்றுகிறதோ அங்கு மட்டுமே எழுத முடியும், அத்தலைப்பைப் பற்றி மட்டுமே எழுத முடியும்.

நான் கூறிய கருத்துப் பிழை என்றால் அது தொடர்பில் சுட்டிக் காட்டுங்கள், தவறென்றால் திருத்திக் கொள்கின்றேன், இல்லை என்றால் விவாதிக்க முனைகிறேன்.

நன்றி.

  • தொடங்கியவர்

இன்னுமொருவன் உங்கள் விமர்சனம் எனக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது.

நீங்கள் சொல்கின்ற கருத்து கவிதையில் வருவதை நான் மறுக்கவில்லை.

ஆனால் ஊளைச் சத்தத்திற்காக மட்டும் விசர்நாய் விரட்டப்படவில்லை. ஊளையை சகித்துக்கொள்கின்ற பக்குவம் எனக்கு இருக்கிறது.

ஆனால் அந்த நாய் எல்லோரையும் கடிக்கிறது. விசர்நாய் கடிப்பது ஆபத்தானது. ஆனால் அந்த ஆபத்தை உணராது "சங்கீதம்" வேண்டும் என்று சிலர் அழைத்து வருகிறார்கள்.

இந்த இடத்தில் என்னுடைய கோபம் அழைத்து வந்தவர்கள் மீதும் திரும்புகிறது.

வெறும் ஊளைக்காக மட்டும் நாயும் ஊளையை ரசிப்பவர்களும் விரட்டப்பட வேண்டும் என்று சொன்னால், அது பாசிசத்தனம் மிக்க கருத்தாகவே இருக்கும். அவ்வாறான கருத்தை என்னுடைய கவிதை தருமானானல் அது நான் வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமே

ஆனால் அவ்வாறான கருத்து வருவது போன்று நான் எழுதவில்லை என்று நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் ஒரு நாய்க் கவிதை அகப்பட்டது.

ஒரு கிழட்டு நாய்!

olddogsignmq5.jpg

அன்றாடம் எதையாவது

மலம் தேடி அலைகிறது

ஒரு கிழட்டு நாய்..

மனிதர் அழைத்தால்

சிநேகமாய் வாலாட்டுவதில்லை

இப்போதெல்லாம்...

அதன் மனதுக்குள்

கொண்டிருக்கும் குள்ளநரித்

தந்திரங்களை மக்கள்

பார்க்கக் கூடும்...

எல்லோருக்கும் தெரிந்தாலும்

கவலை கொள்வதில்லை..

கல்லால், கழியால் அடித்தாலும்

சதா குரைத்துக் கொண்டே

இருக்கிறது கிழட்டு நாய்...

நாயின் அகோரக் குரைப்புகண்டு

ஒதுங்குபவர்களை

அஞ்சி ஓடுவதாக மனதுக்குள்

நினைத்துக் கொள்கிறது!

அறிவின்றி ஓநாய்போல்

செயலாற்றும் இதன்

தந்திரங்களை மக்கள்

அறிந்தே வைத்திருக்கின்றனர்...

சாகும் தருவாயிலும்

தன்னை இளமையாய்க்

காட்டிக் கொள்கிறது

இந்த கிழட்டு நாய்...

மக்கள் மவுனமாகச்

சிரிக்கின்றனர்

இன்னும் எத்தனை நாளைக்கு

அதன் வீரமும் கோபமும்..

எல்லா நோயும் கொண்ட

அந்த கிழநாய்

விரைவில் சாகலாம்

அமைதியாக கல்லெடுக்காமல்

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

நான்!

http://okkamakkaa.blogspot.com/2007/02/blog-post_26.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு நாய்க் கவிதை. பசுவய்யா (சுந்தர ராமசாமி) வின் "107 கவிதைகள்" தொகுப்பில் பக்கம் 74 இல் இருந்து....

நாய் குரைப்பின் காலங்கள்

நாய்க் குரைப்பின் பொருள் என்க்குத் தெரியும்போது

என் பொருள் சிக்கலும் விடுபட்டுப்போகும்.

என்னைச் சுற்றிச் சதா இந்த நாய்க் குரைப்பு

என் குடியிருப்பு அப்படி.

நாய்க் குரைப்பின் பொருள்பற்றி நான்

யோசிப்பது ஏனெனில்

வேறெங்கும் பொருளற்ற திவிரம் இப்படிப்

பீறிடுவதை நான் கண்டதில்லை.

தன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து

அடி வயிற்றை எக்கி,

சூன்யத்தில் தலை தூக்கி,

நாய்கள் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.

நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ

பொருளின்மையோ தெரியும்போது

அவை எப்படிக் குரைக்கும்?

குரைக்குமா?

ஒருசமயம் அவை குரைப்பதை விட்டு

வாலை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கலாம்.

அந்தக் காலம் இப்போதைவிடவும் நன்றாக இருக்கும்.

திடீரென்று நாய் மீண்டும் வந்தது

தானாக வரவில்லை

ஊளைச் சங்கீதத்தை ரசித்தவர்கள்

அழைத்து வந்திருந்தார்கள்

இப்பொழுது

ஊர்மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

விரட்டப்பட வேண்டியது

நாய் மட்டும் அல்ல!

கவி எண்டாலே குரங்குதானே... சம்பந்த சம்பந்தமில்லாமல் எதையாவது எழுதுவதுதான் புதுக்கவிதை... இதன் பொழிப்பை சரியாக விளங்கித்தான் சபேசன் கவியை எழுதினாரோ எண்டு சந்தேகமாக இருக்கு..

விசர் நாய்.... (( மூண்டு நாளிலை செத்து போகும் )) போகட்டும்.. போற வாறவரை கடித்தது(( அப்ப ஊர்காறர் கட்டாயம் அதை கொண்று இருக்கவேண்ணும்))... ஆனால் அதன் ஊழை சங்கீத்தை ரசித்தவர்கள் அதை திரும்ப அழைத்து வந்தனர்..(( அன்பே சிவம் என்னும் சிவனடியார்களாக தான் இருக்க வேணும்)) இப்போ விரட்ட பட வேண்டியது நாய் மட்டும் அல்ல என்கிறார் சபேசன் (( பார்பணனை கொல்வோம் , பாப்பாத்தீயை விபச்சாரி ஆக்குவோம் எண்று சொன்ன பெரியாரின் சீடன் போலும்))

விசர் நாயை யாரும் ஊருக்கை வைத்து இருக்க மாட்டார்கள்... எல்லாருக்குமே அதன் பாதிப்பு தெரியும்... அதுக்கு பதிலாக விசர் இல்லாத நாயாக்கத்தான் கொண்டு வருவார்கள்.... காரணம் எல்லா நாயும் ஒரே மாதிரித்தான் ஊழையிடும்... சங்கீதம் ஒண்றுதான்..

ஆனாலும் கடித்த நாய்க்கு விசர் இருக்கா இல்லையா என்பதில் சந்தேகம் இருக்கு... நாய் கடிக்கும் அதுதான் அதன் பிறவி குணம்... ஆனால் நண்றி உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது.

ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள்

நாய்க் கவிதை

அது ஒரு அழகிய கிராமம்

அங்கே மனிதர்களோடு

ஒரு நாயும் இருந்தது

நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள்

தன்னையும் அடைத்துக்கொண்ட

அந்த நாய்

ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது

அந்த நாய்

வருவோரையும் கடித்தது

போவோரையும் கடித்தது - உணவு

தருவோரையும் கடித்தது

ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள்

பொறுப்பானவர்கள் நாயை சூ என்று

விரட்டி விட்டு அமைதியானார்கள்

விரட்டிய கோபமோ என்னவோ

நாயே ஒருநாள் தானாக ஊரை விட்டு

ஓடிவிட்டது

ஊர்மக்கள் மகிழ்ச்சி உற்றார்கள்

நாயின் ஊளையை கேட்டுத்

தூங்கிப் பழகிய சிலர் கவலையுற்றார்கள்

திடீரென்று நாய் மீண்டும் வந்தது

தானாக வரவில்லை

ஊளைச் சங்கீதத்தை ரசித்தவர்கள்

அழைத்து வந்திருந்தார்கள்

இப்பொழுது

ஊர்மக்கள் உணர்ந்து கொண்டார்கள்

விரட்டப்பட வேண்டியது

நாய் மட்டும் அல்ல!

கவிதை அல்ல "கதை" வடித்தேன் என்று சொல்லுங்கள்..! உங்கள் சொந்தக் கதையா இது..??! எல்லாம் வன்னி மைந்தன் தந்த பாதிப்புப் போல...! :lol::lol:

  • தொடங்கியவர்

கதையது கதையது என்றுரைத்தாய்

கவிதை என்றே நான் உரைத்தேன்

இல்லென இல்லென என்றுரைத்தாய்

அறிவுரை அறிவுரை நீ விரித்தாய்

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

:D:D:D:D

:lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கதையது கதையது என்றுரைத்தாய்

கவிதை என்றே நான் உரைத்தேன்

இல்லென இல்லென என்றுரைத்தாய்

அறிவுரை அறிவுரை நீ விரித்தாய்

அறிவினையதிலே நீ வீழ்ந்தாய்

:D:D:D:D

:lol::lol::D

வாழ்க வன்னி மைந்தன்.. உங்களின் கவிதை சபேசனுக்கு மட்டும் நங்கு புரிகிறது மட்டுமன்றி.. அவரைக் கவர்ந்தும் உள்ளது என்பதை இதுவும் காட்டி நிற்கிறது. தொடர்ந்து வாருங்கள் தாருங்கள். :D :P

காளையர் பாவையர்

கவிதையை யெல்லாம்

கதை கதையெனவே

கதையாய் உரைத்தாய்...

இன்றென்ன வந்து

இங்கது உரைத்தாய்

கவிதை யென்றேன்

கவிதையை கொன்றாய்...??

பாவலன் நீயென

பாரெல்லாம் உரைத்தாய்

பாவதை கானோம்

பாவதை கொடுப்பாய்...

படிக்கவே படிக்கவே

மனசது துடிக்குது

பாவலன் நீயே

பாவொன்றை தருவாய்...

சந்தங்கள் இழந்த

சங்கீத மென்றாய்

வித்துவ ஞானியே- உன்

விதையது இதுவோ...??

மாற்றானை சாடிட

மன்ரேறி வரமுன்

ஒருமுறை ஒருமுறை

உன்னை திருத்தாய்...

படைப்பாளி நெஞ்சது

படைப்பதை இழியாது

அகந்தை அகமது

அதையின்று புரியாது...

இனியெனும் உணர்வீர்

இன்றது திருந்தீர்

இழிநிலை மடமைகள்

இன்றது களைவீர்...

மனிதரில் மனிதரில்

மனிதனை தேடு

நல்ல சிந்தையுள்

நானில மேறு...!

:lol::lol::lol::lol:

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தம்பி வன்னிமைந்தன்!

நான் இங்கே சொல்லாடல்களுடன் கூடிய சில கவிதைகளை எழுதிக் காட்டியிருக்கிறேன்.

பொதுவாக இங்கே கவிதை எழுதுபவர்களின் கவிதை வரிகளில் ஒருபக்கமே எதுகைமோனை வரும். நான் இரு பக்கமும் வருவது போன்று எழுதியிருக்கிறேன்.

நான் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கவிதையில் வேறு சில வடிவங்களும் உண்டு.

அதை யாழ் களத்தில் பலர் தொடுவது இல்லை. ஆதாவா போன்ற ஒரு சிலர்தான் அப்படி எழுதுகிறார்கள்.

அதனால்தான் எதுகைமோனைகள் இல்லாமல் ஆனால் கருத்துக்களை சொல்லக் கூடிய கவிதைகளை இங்கு அதிகமாக தரலாம் என்று முயற்சிக்கிறேன்.

இது ஒரு முயற்சிதான். சில வேளைகளில் யாழ் களக் கவிஞர்கள் "இது கவிதையே இல்லை" என்று புறம் தள்ளக்கூடும். ஆனால் பறவாயில்லை.

நான் எழுதிய நாய் கவிதையோடு இங்கே வேறு பல நாய்க் கவிதைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவைகளிலும் எந்த ஒரு எதுகைமோனையும் இல்லை.

ஆனால் என்னுடைய நாய் கவிதையை விட மற்றைய நாய்க் கவிதைகளில் கவிதையின் வீச்சு அதிகம் இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பின்பு இங்கு "என்ன செய்ய?" என்ற கவிதை ஒன்றை இணைத்திருக்கிறேன். பாரதியின் கவிதை ஒன்றையும் இணைத்திருக்கிறேன்.

இவைகள் அனைத்துமே எதுகை மோனைக்கு முக்கியத்துவம் கொடுக்காது கருத்தை முன்னிறுத்துகின்ற கவிதைகள். வெறும் கோசங்கள் அல்ல.

சமூகத்திற்கு சில செய்திகளை சொல்வதை நோக்கமாகக் கொண்டவை. ஏற்பதும் ஏற்காததும் சமூகத்தின் முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ட நாய்கள் பலவிதம்.

நேற்றுப் பிறந்த

குறிதெரியாத "இள"ம்நாய்களிலிருந்து..

விரைவீங்கித் தொங்கும்

வாலிப வயோதிக நாய்கள் வரை..

நான் கண்ட நாய்கள் பலவிதம்.

சில நாய்கள்

கொள்கைக்காகக் கத்துவதாய்

சொல்லிக் கொள்கின்றன.

கொள்கை குறித்தி விசாரிக்கப் போனால்

கத்துவதை விடுத்து கடியையே பதிலாக தருகின்றன...

அந்நாய்களின் கொள்கைகளைக்

அவைகளே தீர்மானிப்பதில்லை என்பதைக்கூட

அறியாமலேயே வாழும் நாய்ப்பாடு பெரும்பாடு...

தனக்குக் கொள்கையில்லை

என்ற பிரகடனத்துடன்

தன் உள்மன அழுக்குகளையெல்லாம்

கொள்கையாக்கிக்

கத்துகிற நாய்கள் சில இங்குண்டு.

இன்னும் சில நாய்கள்

பொறாமையில் கத்தும்..

சில நாய்கள்

அரசியல் சார்பில்

அடியாட்களாய்க் கத்தும்...

ஜாதிகள் இல்லையென்று கொக்கரிக்கும்

சில நாய்கள் பின்னொருநாள்

ஜாதிக்கட்சிகளை நக்கி மகிழும்.

அந் நக்கலை நியாயப்படுத்த

ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.

என்றாலும்

பெண் துவாரம் தேடும்போது

ஜாதியை மறந்துவிடுகிற இவை

தன் ஜோடியை தேடும்போது மட்டும்

ஜாதியை மறக்காத சுபாவத்தை

இயற்கையிலேயே கொண்டிருப்பவை..

இலக்கியச் சேவையென்று

கத்துகிற நாய்கள் சில உண்டு..

எதிரே இல்லாத

பிடிக்காத எழுத்தாளனை

பாய்ந்து பிடுங்குவதாய்

வேஷம் கட்டும் அவற்றை

அவற்றின் கோஷத்தை வைத்தே

எளிதில் அடையாளம் காணலாம்...

பதவிக்காகக்

கத்துகிற நாய்களும் சில இங்குண்டு.

இந்நாய்களின் குரலில்

எஜமானன் மீதான நன்றியுணர்ச்சி வழியும்.

பதவி கொடுத்தமைக்கு

நன்றி தெரிவிக்கும் முகமாய்

பரம்பரை பழக்கத்தில்

இவை கத்திக் கொண்டிருக்கின்றன.

இவை

சில நேரங்களில்

எஜமானனுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு

எஜமானன் சொல்லாமலே கத்தி

உபத்திரவங்கள் கொண்டு வருவதுமுண்டு.

இனச்சேவை, மொழிச்சேவை என்ற பெயரில்

இருப்பை காட்ட கத்தும் சில நாய்கள்.

சினிமா சான்ஸு என்ற பெயரில்

சில்லரைக்காக கத்தும் சில நாய்கள்.

தன் குரல் தானே கேட்கிற மகிழ்ச்சியில்

குயிலென்று நினைத்துக் கொண்டு

தொடர்ந்து கத்துகின்ற நாய்களும் உண்டு.

பெரிய நாய்களோடு சேர்ந்து கத்தினால்

கவனிக்கப்படுவோமென்று

கத்துகிற குட்டிநாய்களும் உண்டு.

தனியாகப் பார்க்கும்போது

வாலைக் குழைத்து நெளிந்து வளைந்து

பின் -

கூட்டத்தில் தைரியமாகக்

கத்துகிற நாய்களும் உண்டு.

தன் குரலின் அருமை அறியாமல்

அடிக்கடிக் கத்திக்

கல்லடி வாங்குகிற நாய்களும் உண்டு.

கத்துவதற்கு நேரமில்லை

பின்னர் வருகிறேன் என்று

சொல்லிப்போகிற நாய்களும் உண்டு.

நாய்ப்பெருமை பேசித் திரியும்

இந்நாய்களை

யாரும் நாயென்று விளித்துவிட்டால்

இவற்றுக்குப் பிடிக்காது.

"யார் நாயென்று" தன்னினம் தாழ்த்தித்

தானே கத்துகிற சிந்தனைத்திறம் பெற்றவை இவை.

இருட்டில் வாழ்கிற இந்நாய்கள்

வெளிச்சத்துக்கு ஏங்குபவை.

ஆனால்

வெளிச்சத்தைக் கண்டால் அஞ்சுபவை.

அதனால் -

திருடர்களின் துணைகொண்டு

வெளிச்சக் கம்பங்கள்மீது

சிறுநீர் கழித்துச் சிரிக்கின்றன.

பின்னெழுகிற கோபத்தில்

சிலநேரங்களில்

தங்கள் கண்களுக்குள் தங்கள்

சிறுநீரைப் பீச்சிக் கொண்டு

வெளிச்சத்தைத் துரத்திவிட்டதாய்

ஆனந்தப்படுவதுமுண்டு.

தான் தின்றதைத்

தான் கக்கிப் பின்

தானே நக்கித்தின்னும் நாய்கள் அல்ல இவை.

எஜமானர்களின் ஏவலுக்கேற்ப

அவர்கள் சொல்லும் கக்கலை

அதிசுவாரஸ்யமாய் நக்கித் தின்பவை.

இவ்வாறு

இந்நாய்கள்

இருப்பை நியாயப்படுத்த

தொடர்ந்து கத்துகின்றன.

என்றாலும் -

தன்வீட்டைத் தாண்டிவந்து

பொதுமைதானத்தில்

பூனையுடன்

சண்டைபோடுகிற தைரியத்தைக்கூட

தம் விரைகள்

தமக்கு வழங்காத வருத்தம்

இந்நாய்களுக்கு உண்டு.

தன் குறியைத் தான் விறைத்து

தனக்குமுன்னே ஆட்டிக்காட்டி

அவ்வருத்தம் போக்கிக் கொள்ளும்

இந்நாய்கள்.

குரலையும் இரவல் வாங்கிக்

கத்துகிற இந்நாய்கள்

சுயமாய்க் கத்துகிற வக்கில்லாதவை.

கத்தலையே குரைத்தல் என்று

கற்பனையில் திளைப்பவை

என்றாலும் -

தங்களை

நாய்களென்று உணராதிருப்பதாலும்

பெரும்பாலான நேரங்களில்

தம்பெட்டையைத் திருப்திபடுத்த மட்டுமே

பிறர்மீது பாய்ந்துபிடுங்குவதாலும்

இந்நாய்களை நேசிக்கலாம் நாம்...

நான் ரசித்த நாய்(கவிதை)

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான கவிதை.. முகமூடியின் இணைப்பையும் கொடுத்திருக்கலாமே!

http://mugamoodi.blogspot.com/2006/05/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியமான கவிதை.. முகமூடியின் இணைப்பையும் கொடுத்திருக்கலாமே!

http://mugamoodi.blogspot.com/2006/05/blog-post_21.html

கிருபன்,இணைப்பை காட்டியமைக்கு மிக்க நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.