Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடியப் பிரஜைகளைத் தாக்கிப் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார்.

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம் | A New Twist In The Investigation

வாள்களுடன் வந்தவர்கள்

அத்துடன் வீட்டு மின் இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்குத் தங்கியிருந்துள்ளார். அன்றைய தினம் இரவு வீட்டுக்குள் வாள்களுடன் மூவர் நுழைந்துள்ளனர்.

அவர்கள் முகத்தை மூடிக்கட்டியிருந்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த ஆசிரியரையும், மின் இணைப்பு திருத்தத்துக்காகத் தங்கியிருந்தவரையும் கட்டியுள்ளனர்.

"உங்களுடன் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. அமைதியாக இருங்கள். இல்லையென்றால் வெட்டிவிடுவோம்" என்று வாள்களுடன் வந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த வீட்டின் உரிமையாளரை வாளால் தாக்கியுள்ளனர். அவரை வெளியில் இழுத்துச் சென்று "சி.ஐ.டி.யிடம் கொடுக்கக் கொண்டு வந்த ஆவணம் எங்கே?" என்று கேட்டுத் தாக்கியுள்ளனர்.

யாழ்.அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்: விசாரணையில் புதிய திருப்பம் | A New Twist In The Investigation

கைதாகவில்லை

அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் எதனையும் தாக்குதலாளிகள் கொள்ளையிடவில்லை. அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு இருந்த பொதிகளை அவிழ்த்துச் சோதனையிட்டு அதிலிருந்த ஆயிரத்து 20 கனேடிய டொலர் மற்றும் 25 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் என்பனவற்றை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளனர்.

"குருநகர் அல்லது ஊர்காவற்றுறையிலிருந்து படகுமூலம் அனலைதீவுக்கு தாக்குதலாளிகள் வந்துள்ளார்கள். கனேடிய கடவுச்சீட்டு, கனேடிய டொலர் மற்றும் இலங்கைப் பணத்தை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். தாக்குதலாளிகள் இதுவரை கைதாகவில்லை" என ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசத்தில் நிலவிய முற்பகைமை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகப் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

https://tamilwin.com/article/a-new-twist-in-the-investigation-1677498127

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலுக்குள்ளானவர் ரொரண்டோ ஐயப்பன் ஆலயத்தின் பிரதான குருசாமி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனாலும்,இத் தகவலை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

தாக்குதலுக்குள்ளானவர் ரொரண்டோ ஐயப்பன் ஆலயத்தின் பிரதான குருசாமி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனாலும்,இத் தகவலை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

அது சரியான தகவலே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் படங்கள் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பாக, 2008 வங்கிகள் தள்ளாடும் முன்னர், வீடுகள் வாங்குவது மிக எளிது. அப்படி பல இந்தியர்கள் இங்கே குடும்பத்துக்கு சொல்லாமல் அல்லது பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று வீடுகளை வாங்கி, அவைகளை நிர்வகிக்க முகவர்களிடம் கொடுத்து விடுவார்கள். 30, 40 முதல் 120 வீடுகள் வைத்திருந்த இந்தியர்கள் இருந்தார்கள்.

நாளைடைவில் பணம் பெருமளவில் வந்ததால், ஊருக்கு போய் நீண்ட நாள் தங்கி இருக்க தலைப்பட்டார்கள். இப்படி போன பலர், கொலையாகி இருக்கிறார்கள். பெரும் வன்முறை இல்லாமல், உணவில் விசம், விழுந்து இறத்தல், அல்லது வாகனத்தில் மோதி என்று மேலே போய் கொண்டிருந்தார்கள். இந்திய போலீசுக்கு காரணம் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை. பிரிட்டிஷ் போலீசும், போன இடத்தில் இறந்து விட்டார் என்று முடித்து விட்டுக்கொண்டிருந்தார்கள். நூறு பேர் வரை இப்படி இல்லாமல் போய் கொண்டிருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஸ் பத்திரிகை இதை இந்தியாவில் உயிரிழக்கும் மில்லாலியனெயர் லாண்ட் லோட்ஸ் என கட்டுரையாகப் போட்டது.

இது குறித்து ஒரு அனுபவமிக்க முகவரிடம் பேசும் போது, சிரித்த வாறே சொன்னார். பிரிட்டிஷ் சட்டப்படி, உரிமையாளர் வாடகை வாங்காவிடில், 15 வருடத்தின் பின்னர் அவர் உரிமை கொண்டாடி வரமுடியாது. இதனை இலங்கையில், ஆட்சி உரித்து என்பார்கள்.

ஆக, சிம்பிளால பல வீடுகளை வாங்கி, வாடகைக்கு விட்டிருக்கும் ஆளை, அங்கேயே முடித்து விட்டால், அந்த வீடுகள் முகவருக்கு சொந்தமாகிவிடும்.

தமிழரிடையே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தென் லண்டனில், ஒரு கோயில் தனி முதலாளி. உண்டியல் காசில் மொத்தம் 72 வீடுகள் அவர் பெயரில். மேலும், உறவினர்கள் பெயரில் பல வீடுகள்.

அவர் கோவிலுக்கு வந்த மொரிசியஸ் பெண்ணை இந்தியாவுக்கு தள்ளிக் கொண்டு போய், ரகசிய கலியாணம் செய்து, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில்தமிழகத்தில், விபத்தில் இறந்து போனார்கள். திருப்பி வந்திருந்தால், சகலமும், அந்த பெண்ணுக்கே போயிருக்கும் அல்லவா.

அதேபோல, ஜெயலலிதா காலத்தில், லண்டனில் தமிழ் கடை வைத்திருந்த ஒரு தமிழ் தம்பதி தமிழக யாத்திரை போன இடத்தில், அவருடைய கடையில் வேலை செய்த ஒருவன் செய்த வேலையால் தமிழகத்தில் கடத்தப்பட்டு, பணம் கப்பமாக கோரி, கடைசியில், லண்டன், தமிழக போலீசாரின் வேலையால் மீட்கப்பட்டு, சகலரும் உள்ளே போனார்கள்.

ஆகவே, அந்த வகையிலே என்ன சொல்ல வருகிறேன் என்றால், இப்ப, இந்த வியாதி உழைத்து, ஓய்வு பெற ஊருக்கு திரும்பும் எம்மவர் மேலும் நடக்கிறது.

புரிஞ்சு, ஊருக்கு போனால், பந்தா காட்டாமல், நம்ம உடான்ஸ் சாமியார் மாதிரி, துன்னூரை அள்ளி பூசிக்கொண்டு, 'சச்சிதானந்தம், நீலகலகண்டம்' என்று இருங்கோ.  ஓணாண்டியார் மாதிரி, கார், கார் ஓட்டுனர், வேலைக்காரி என்று இராதீங்கோ. (ஓணாண்டி, இதை கோசன் தான் திண்ணையில சொன்னவர். எனக்கு தெரியாது)

Edited by Nathamuni

ஆக, இந்திய இறக்குமதிக் கடவுள் ஐயப்பனால் தன் பிரதான குருசாமியைக் கூட வாள் வெட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அச்சோ அச்சோ...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஓர் ஆவணத்தைத் தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் தெரியவருகின்றது

இவர்களே உருவாக்கிய கதையா அல்லது கதை தெரிந்தவர்கள் அங்கே இருந்தார்களா?

8 hours ago, பெருமாள் said:

தாக்குதலாளிகள் இதுவரை கைதாகவில்லை"

8 hours ago, பெருமாள் said:

அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் எதனையும் தாக்குதலாளிகள் கொள்ளையிடவில்லை. அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு இருந்த பொதிகளை அவிழ்த்துச் சோதனையிட்டு அதிலிருந்த ஆயிரத்து 20 கனேடிய டொலர் மற்றும் 25 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் என்பனவற்றை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளனர்.

அணிந்திருந்த தாலிக்கொடியை விட கொள்ளையடிக்கப்பட்ட தொகை பெரிது, அதில் கொள்ளையர்களுக்கு வெள்ளையடிப்பு வேற!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அவர் கோவிலுக்கு வந்த மொரிசியஸ் பெண்ணை இந்தியாவுக்கு தள்ளிக் கொண்டு போய், ரகசிய கலியாணம் செய்து, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில்தமிழகத்தில், விபத்தில் இறந்து போனார்கள். திருப்பி வந்திருந்தால், சகலமும், அந்த பெண்ணுக்கே போயிருக்கும் அல்லவா.

இங்கு கிட்டு புலிக்கு பெல் கட்ட வெளிகிட்டதால் ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றல்லவா கதைகிறார்கள் .

ஆனாலும் அவரின் சொத்துகளில் பாதி கோவிலில் எடுபிடி செய்பவனின் பெயரில் அவனுக்கு தெரியாமல் பினாமியாக வைத்து இருந்தார் ஆனால் அவன் ஒப்புக்கு நடிப்பவன் கட்டிட வேலை செய்பவன் போல் திரிவார் அவரின் இறப்புக்கு பின் அவரே முதலாளி  ஆனல் மாதம் ஒன்றானால் சாவிகொத்துடன் கிளம்பி விடுவார் வாடகை கலக்செனுக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அணிந்திருந்த தாலிக்கொடியை விட கொள்ளையடிக்கப்பட்ட தொகை பெரிது, அதில் கொள்ளையர்களுக்கு வெள்ளையடிப்பு வேற!

தமில்வின்னும்  நேரத்துக்கு ஏற்றமாதிரி தலையங்கத்தை மாற்றி மாற்றி போட்டு கடைசியில் இங்கு இணைத்த தலையங்கதுக்கே வந்து நிக்குது . இங்கு நட்டத்தில் ஓடுவதாக கணக்கு காட்டி டப் அலைவரிசைக்கு நாமம் போட்டு விட்டார்கள் ibc எனும் பெயரில்  இப்ப நம்ம ஊபர் ஓடும் தமிழர்களுக்கு ஆதவன் fmதான் கடவுள் போல் .

இந்த விடயத்தில் நம்ம  தமிழ் ஊடகங்களும் சேர்ந்தே கூட்டு களவாணித்தனம் பண்ணுகினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இங்கு கிட்டு புலிக்கு பெல் கட்ட வெளிகிட்டதால் ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றல்லவா கதைகிறார்கள் .

ஆனாலும் அவரின் சொத்துகளில் பாதி கோவிலில் எடுபிடி செய்பவனின் பெயரில் அவனுக்கு தெரியாமல் பினாமியாக வைத்து இருந்தார் ஆனால் அவன் ஒப்புக்கு நடிப்பவன் கட்டிட வேலை செய்பவன் போல் திரிவார் அவரின் இறப்புக்கு பின் அவரே முதலாளி  ஆனல் மாதம் ஒன்றானால் சாவிகொத்துடன் கிளம்பி விடுவார் வாடகை கலக்செனுக்கு .

பிள்ளையாரே, சா...ச பெருமாளே... நீங்கள் சொன்னது புது கேஸ். நான் சொன்னது பழைய கேஸ். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பிள்ளையாரே, சா...ச பெருமாளே... நீங்கள் சொன்னது புது கேஸ். நான் சொன்னது பழைய கேஸ். 

இன்னும் நிறைய இருக்கு மணியர் இப்படியும் நடக்குது என்று கொசிப்பு போட்டால்தான் பேப்பர் யாபரமாகுது என்று பேப்பர் முதலாளி அழுதவர் அதனால் இப்படி  இடையிடையே மசாலா 😀தூவணும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நான் கேள்விப்படாத அறிந்திருக்கவேண்டிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி நாதமுனி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

ஆக, இந்திய இறக்குமதிக் கடவுள் ஐயப்பனால் தன் பிரதான குருசாமியைக் கூட வாள் வெட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அச்சோ அச்சோ...

எமது இந்துக்கடவுள்கள் யாரையும் இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவரவர் விளக்கத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப உருவ வழிபாட்டையோ, ஆன்மிக வழியையோ அல்லது ரெண்டயுமோ பின்பற்றலாம். எமது சமயம் அதைதான் கூறுகிறது. எமது அப்பா அவரது இளமைக்காலத்தில் இருந்து அய்யப்பன் சிலையை சாமி அறையில் வைத்திருந்து அய்யப்பன் பாடல்களையும் கேட்டுவந்தவர். இது ஒரு உதாரணம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தமில்வின்னும்  நேரத்துக்கு ஏற்றமாதிரி தலையங்கத்தை மாற்றி மாற்றி போட்டு கடைசியில் இங்கு இணைத்த தலையங்கதுக்கே வந்து நிக்குது . இங்கு நட்டத்தில் ஓடுவதாக கணக்கு காட்டி டப் அலைவரிசைக்கு நாமம் போட்டு விட்டார்கள் ibc எனும் பெயரில்  இப்ப நம்ம ஊபர் ஓடும் தமிழர்களுக்கு ஆதவன் fmதான் கடவுள் போல் .

இந்த விடயத்தில் நம்ம  தமிழ் ஊடகங்களும் சேர்ந்தே கூட்டு களவாணித்தனம் பண்ணுகினம் போல் உள்ளது .

எரிகிற வீட்டில் புடுங்கிய லாபம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

புரிஞ்சு, ஊருக்கு போனால், பந்தா காட்டாமல், நம்ம உடான்ஸ் சாமியார் மாதிரி, துன்னூரை அள்ளி பூசிக்கொண்டு, 'சச்சிதானந்தம், நீலகலகண்டம்' என்று இருங்கோ.  ஓணாண்டியார் மாதிரி, கார், கார் ஓட்டுனர், வேலைக்காரி என்று இராதீங்கோ. (ஓணாண்டி, இதை கோசன் தான் திண்ணையில சொன்னவர். எனக்கு தெரியாது)

          உ

         சிவமயம் 

  - திருச்சிற்றம்பலம் -

கார், கார் ஓட்டுனர் எண்டு இருந்தாலும் காரியம் இல்லை. வேலைக்காரியே கதி என்று இராதேங்கோ.

அதுக்கு குருநகரில் இருந்து வாள் குரூப் எல்லாம் இல்லை, வீட்டிலயே அம்மியோ, குழவியோ, உலக்கையோ கையில ஆப்பிடுறத வச்சு ஆப்பிழுத்து போடுவார்கள்.

- திருச்சிற்றம்பலம் -

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

பிரிட்டிஷ் சட்டப்படி, உரிமையாளர் வாடகை வாங்காவிடில், 15 வருடத்தின் பின்னர் அவர் உரிமை கொண்டாடி வரமுடியாது. இதனை இலங்கையில், ஆட்சி உரித்து என்பார்கள்.

இங்கத்தையான் சட்டம்தான் இலங்கையிலும் இருக்கிறது. Adverse Possession என்பார்கள். 12 வருடம், காணிக்கு உரியவர், உரிமை கோராமல் அதே சமயம் இன்னொருவர் உரிமையாளரின் அனுமதி இன்றி காணியை தனது போல் போவித்தால் - காணியின் title அவருக்கு போகலாம்.

ஆனால் இது நடக்க வாய்ப்பு குறைவு.

1. உரிமையாளர் இறந்தாலும் அவரது சொத்துரிமை அவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்படும். அப்போ வாரிசுகள் 12 வருடம் காத்திராமல் உரிமை கோர வாய்ப்பு அதிகம்.

2. அடுத்து - இது squatters எனும் உரிமையாளர் அனுமதி இன்றி குடி இருபோருக்கு உரியதே. இதை சட்டப்படி long leasehold அல்லது வருடாந்தம் புதுபிக்கப்படும் short term tenancy யில் இருப்போர் அனுபவிக்க முடியாது.

3. எனக்கும் ஒருக்கா @பாலபத்ர ஓணாண்டி வயிற்றில் புளியை கரைக்க ஆசைதான். ஆனால் நமக்கு பின் என்ன நடக்க வேண்டும் என்ற wills and probate வேலைகளை ஒழுங்காக செய்து வைத்திருந்தால் இதில் இருந்து தப்பலாம்.

4. மோர்கேஜ்ஜை முழுவதும் கட்டாமல் பாங்கில் ஒரு தொகை ஈட்டை வைத்திருப்பது - title மாற்றும் போதாவது ஒரு எச்சரிக்கையை தரும். ஆனால் அதற்குள் 12 வருடம் ஓடி இருந்தால் - too late.

5. இதில் களவு கூட நடப்பது, இறந்தவரின் வாரிசு உரிமை இல்லாதபோது அல்லது பொய்யாக ஒருவரை வாரிசு என கூட்டி வரும் போதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

நீங்கள் சொன்ன விடயத்துடன் இன்னோரு விசயமும்.

வீட்டுக்காரி செலவாளி. அவவுக்கு தெரியாமல் கொஞ்சம் சேமிக்க வேணும் என்று வீட்டுக்காரர் நினைப்பதுவே இதன் அடிப்படை.

சீட்டு போட்டு வரும், 1,000, 2,000 தை போட்டு வீட்டுக்காரிக்கு தெரியாமல் வீடு வாங்கி விட்டவர்கள் பலர். காரணம் வீடு வாங்குவது மிக எளிதான சமாசாரம். (இப்ப இல்லை)

அதேபோல சேமிப்பு கணக்குகளில் போட்டு வைத்து, மேல்சொன்ன செலவாளி விடயத்தால் வீட்டுக்கு சொல்லாமல், அப்படியே மண்டையை போட்டு ஒருவருக்குமே பிரயோசனம் இல்லாமல் செய்தவர்கள் பலர்.

டேவிட் கேமரன் அரசில், வங்கிகள் இந்த காசை அமுக்குவதை அறிந்து, புதிய சட்டம் கொண்டு வந்தார். அதன் படி 15 வருடத்துக்கு மேல் உரிமை கோராமல் இருக்கும் வங்கி கணக்குகளில் உள்ள பணம் அரசினை சேர்ந்து விடும். அரசு அந்த பணத்தினை, ஒரு சமுக நம்பிக்கை அமைப்புக்கு கொடுக்கும். அது சமூகம் தொடர்பான வேலைகளுக்கு உதவும்.

ஆனால் காணி விடயத்தில் 15 வருட சட்டம் கொண்டு வர முடியாது. நீங்கள் சொல்வது போல, will எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வந்து வாழும் மக்களிடையே குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 12:46, goshan_che said:

wills and probate வேலைகளை ஒழுங்காக செய்து வைத்திருந்தால்

ஒருவர் தனது இறப்பிற்கு பின்பு உறவுகளிடையே ஏதாவது பிரச்சனை வரும் என நினைத்தால்.. அல்லது உயில் எழுத வேண்டிய தேவை இருந்தால் அல்லது உயில் எழுத வசதி கிடைத்தால் எழுதி வைப்பதே நல்லது.

எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொல்வேன் wills and probate இருந்தால் இலகு/பாதுகாப்பு. எழுதாவிட்டால் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரலாம். எழுதினால் மட்டும் போதாது அதனை உரியவாறு பதிவு செய்தும் வைத்திருந்தால்தான் நல்லது.  ஆனால் பொதுவாக உயிலை எழுத எல்லோரும் விரும்புவதில்லை என நினைக்கிறேன். ஏன் என விளங்குவதில்லை. 

ஆனால் ஒரு வயதினைக் கடந்தவுடன் அதனை எழுதி வைத்திருப்பதே நல்லது. எனக்கு தெரிந்த ஒருவர் உயிலை எழுதாமல் இறந்து போனார் .. அவர் இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின்பே சொத்துக்கள் உரியவர்களிடம் சேர வழி கிடைத்தது.... அதுவரைக்கும் பிள்ளைகளுக்கு இதனால் தேவையற்ற அலைச்சல் இருந்தது.. இதில் வெளிநாடு உள்நாடு என்ற இல்லை.

9 hours ago, Nathamuni said:

சீட்டு போட்டு வரும், 1,000, 2,000 தை போட்டு வீட்டுக்காரிக்கு தெரியாமல் வீடு வாங்கி விட்டவர்கள் பலர். காரணம் வீடு வாங்குவது மிக எளிதான சமாசாரம். (இப்ப இல்லை)

அதேபோல சேமிப்பு கணக்குகளில் போட்டு வைத்து, மேல்சொன்ன செலவாளி விடயத்தால் வீட்டுக்கு சொல்லாமல், அப்படியே மண்டையை போட்டு ஒருவருக்குமே பிரயோசனம் இல்லாமல் செய்தவர்கள் பலர்.

எனக்கு ஒரு சந்தேகம், கணவனே மனைவியோ இருவரில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவிக்குத் தானே இறந்தவரின் சொத்துகள் சட்டப்படி உரித்தாகும் (விதி விலக்காக  உயிலில் ஏதாவது எழுதியிருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர). 

உயில் எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வரும் மக்களிடம் மட்டுமல்ல உள்ளூர்வாசிகளிடமும் அரிது என நினைக்கிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு ஒரு சந்தேகம், கணவனே மனைவியோ இருவரில் ஒருவர் இறந்தால் உயிருடன் இருக்கும் கணவன் அல்லது மனைவிக்குத் தானே இறந்தவரின் சொத்துகள் சட்டப்படி உரித்தாகும் (விதி விலக்காக  உயிலில் ஏதாவது எழுதியிருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர). 

உயில் எழுதும் பழக்கம் வெளியில் இருந்து வரும் மக்களிடம் மட்டுமல்ல உள்ளூர்வாசிகளிடமும் அரிது என நினைக்கிறேன்.. 

உங்கள் சந்தேகத்துக்குரிய பதிலை நீங்களே தந்து விட்டீர்கள்

Spouse க்கு வாரிசுக்கு தெரியாமல் தேடிய தேட்டமே இப்படி சிக்கலாகும். 

மரண சாசணம் எழுதும் போது, சகல சொத்தையும் விபரமாக போடுவதால் நன்மை.

வங்கிகளில் பணம் போட்டு அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், வங்கிக்கு கடிதம் கொடுத்து வைக்கலாம். நான் வங்கியை குறித்த காலம் தொடர்பு கொள்ளாவிடில் (account inactive) எனது குடும்பத்துக்கு தெரியப்படுத்தவும். இவ்வகையில் அரசு கையகப்படுத்துவதை தடுக்கலாம்.

David Cameron recovered £800million!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

உங்கள் சந்தேகத்துக்குரிய பதிலை நீங்களே தந்து விட்டீர்கள்

Spouse க்கு வாரிசுக்கு தெரியாமல் தேடிய தேட்டமே இப்படி சிக்கலாகும். 

மரண சாசணம் எழுதும் போது, சகல சொத்தையும் விபரமாக போடுவதால் நன்மை.

வங்கிகளில் பணம் போட்டு அதை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், வங்கிக்கு கடிதம் கொடுத்து வைக்கலாம். நான் வங்கியை குறித்த காலம் தொடர்பு கொள்ளாவிடில் (account inactive) எனது குடும்பத்துக்கு தெரியப்படுத்தவும். இவ்வகையில் அரசு கையகப்படுத்துவதை தடுக்கலாம்.

 மனைவிக்குத் தெரியாமல் தேடிய சொத்துகள், சாதாரணமாகவே கணவன் இறந்தவுடன் மனைவிக்கும், மனைவி இல்லாத விடத்து பிள்ளைகளைக்கும் தானே போகும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் எழுதினீர்கள் அப்படிப் போகாது என்று அதுதான் எனது சந்தேகம். 

ஏனெனில் கணவனோ மனைவியோ, தனது துணைக்குத் தெரியாமல் சொத்துக்களை வைத்திருந்து இறந்துவிட்டால் உயில் இல்லாதவிடத்து உயிரோடு இருக்கும் துணை, சட்டப்படி சில உதவிகளை நாடி இவற்றை அறியலாம் என்றுதான் நினைக்கிறேன்(இங்கே). 

இங்கே உயில் இருந்தால் executor  இவர்கள் மூலம்  வங்கிகளுக்கு, காணி பதியும் தினைக்களத்திற்கு மற்றும் தேவையான அரச தினைக்களங்களுக்கு குறித்த நபர் இறந்ததை அறியத் தரும் பொழுது, இறந்தவரின் பெயரிலுள்ள சகல கணக்குகளும் காணிகளின் விபரங்களும் வழங்கப்படுவதால் தேடிய தேட்டம்/ஒளித்து வைத்திருந்த சொத்துகள் கூட முறையாக பகிரப்படும் என்றுதான் நினைக்கிறேன். 

 இந்த சொத்து விடயம் பெரிய பகுதிகளைக் கொண்டது, சட்ட நுணுக்கங்களும் உடையது. ஆகையால் நான் நினைப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அறிந்து வைத்திருப்பது நல்லதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

 மனைவிக்குத் தெரியாமல் தேடிய சொத்துகள், சாதாரணமாகவே கணவன் இறந்தவுடன் மனைவிக்கும், மனைவி இல்லாத விடத்து பிள்ளைகளைக்கும் தானே போகும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் எழுதினீர்கள் அப்படிப் போகாது என்று அதுதான் எனது சந்தேகம்.

அனாமத்து சொத்து என்று நீண்டகாலம் பூட்டி இருக்கும் வீடுகளை, உள்ளூர் அரசு கதைவை உடைத்து எடுக்கிறது. கேட்டால் உள்ளூர் வரி கட்டவில்லை, பக்கத்து வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள். அதனை எடுத்து திருத்தி, பாவனைக்கு அகதிகளுக்கு கொடுத்து விடுவார்கள்.

பதிவு செய்த சொந்தக்காரரின் உறவுகளை எங்கே அரசு தேடும்?

இங்கே, இப்படி அனாமத்து சொத்துக்களை கண்டறிந்து, அரசு கையகப்படுத்தும் காலத்துக்கு முன்னர், அவர்களது உறவுகளை தேடி பல விசாரணைகளை மேல் கொண்டு, தேடிப்பிடித்து அவர்களிடம், தமக்குரிய கட்டணத்தினை பங்காக எழுதி வாங்கிகொண்டு, விபரத்தினை சொல்லி, அவர்களே மிகுதி சட்ட அலுவல்களை செய்து பணம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள் பல உள்ளன. அப்படி ஒரு நிறுவன நிகழ்வுகள் டிவியில் தொடராக வந்தது.

அப்படி ஒரு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நல்ல காசு பார்க்கலாம்.

1977 கலவரத்தில் பல தமிழர்கள் அனுராதரபுர பகுதியில் கொல்லப்பட்டனர். மிகுதி பேர் திரத்தி அடிக்கப்பட்னர். அப்படி பல வீடுகள், 15 வருட காலத்தின் பின், ஆக்கிரமித்த சிங்களவர்களுக்கு போய் இருக்கும்.

அண்மையில் ஒரு யாழ் Youtubu காரர்கள் அங்கே போய் படமெடுத்த போது ஒரு பெரிய வீடு ஒன்றை காட்டினார்கள். யாருமே அங்கே குடி இருப்பதில்லை, பேய் வீடு என்பார்களாம் என்றார்.

நான் நினைக்கிறேன் அங்கே தமிழ் உரிமையாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். 😥

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அப்படி ஒரு நிறுவனம் யாழ்ப்பாணத்தில் நல்ல காசு பார்க்கலாம்

யாழ்ப்பாணத்திலா??😅.. 

நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டனத்தில் செய்யுங்கோ.. ஏனென்றால் இரண்டு வகையான ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரு பகுதி இடம்பெயர்ந்து,   உரிமையாளர் தெரியாமல் காணி ஒன்றில் வீடு கட்டி காலம் காலமாக வாழ்பவர்கள்(20 வருடங்களுக்கு மேலாக).. காணிச் சட்டம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், அவர்களை திடீரென வெளிநாட்டிலிருந்து போனவர்கள் இது எனது பூர்வீக வீடு etc etc என்று, வீட்டில் உள்ளவர்களை எழும்பச் சொல்லி உள்ளூர் தாதாகளைக் கொண்டு மிரட்டுபவர்கள்.. 

இன்னொரு பகுதி வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்றுமே தெரியாதவர்கள் என ஏமாற்றுபவர்கள்.. 

இப்படி பல பகுதிகள், காசு வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நிறுவனங்களை அங்கே உருவாக்கி உள்ளதையும் யாராவது கெடுத்துக் கொள்வார்களா??

7 hours ago, Nathamuni said:

அண்மையில் ஒரு யாழ் Youtubu காரர்கள் அங்கே போய் படமெடுத்த போது ஒரு பெரிய வீடு ஒன்றை காட்டினார்கள். யாருமே அங்கே குடி இருப்பதில்லை, பேய் வீடு என்பார்களாம் என்றார்.

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது. உள்ளூர் பேப்பரில் வாடகைக்கு விடப்படும் என்ற பகுதியில் வரும் வீடுகளின் விபரங்களைப் பார்த்தால், ஏட்டிக்குப் போட்டியாக, தேவையற்ற விதத்தில் பெரிய வீடுகளைக் கட்டி பாராமரிக்க வசதியில்லாமல் வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் போடுகிறார்கள்..🤦🏽‍♀️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது.

முட்புதர், கறையான் புற்று படர்ந்து, பாம்புகளால் சூழப்பட்ட வீடுகளை திருத்தி பராமரித்த குடும்பங்களை பாராட்டுவதற்கு பதிலாக கால அவகாசம் கூட கொடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியிருந்தவர்களை விரட்டி தெருவில் விட்டிட்டு மீண்டும் பூட்டிப்போட்டு போனவர்களும், அவர்கள் கஷ்ரப்பட்டு திருத்திய வீட்டை அவர்கள் சொந்தமாக்கி விடுவார்கள் என்று அவர்களை எழுப்பி விட்டு வேறொருவரை குடியமர்த்தியவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை இங்கிருக்கும் ரவுடிக்கும்பல் ஒன்றுசேர்ந்து வெருட்டி பறிப்பவரும் உண்டு, அதேநேரம் தங்கள் வீடுகளை பராமரிக்கிறார்கள் என்று நன்றியோடு அவர்களுக்கு பணம் அனுப்புபவர்களும் உண்டு, தானமாக தங்கள் காணிகளை ஏழைகளுக்கு கொடுப்போரும் உண்டு. மனிதர் பலவகை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட ரவுடிக்கும்பல்களை சமாளிக்கக் கூடிய கம்பனி தான் நான் சொன்னது. அதாவது அப்படி ஒரு கம்பனியிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சகல விடயங்களையும் கவனிப்பார்கள். 😁

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்திலா??😅.. 

நீங்கள் இலவசமாக அல்லது குறைந்த கட்டனத்தில் செய்யுங்கோ.. ஏனென்றால் இரண்டு வகையான ஆட்கள் இருக்கிறார்கள்.. ஒரு பகுதி இடம்பெயர்ந்து,   உரிமையாளர் தெரியாமல் காணி ஒன்றில் வீடு கட்டி காலம் காலமாக வாழ்பவர்கள்(20 வருடங்களுக்கு மேலாக).. காணிச் சட்டம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள், அவர்களை திடீரென வெளிநாட்டிலிருந்து போனவர்கள் இது எனது பூர்வீக வீடு etc etc என்று, வீட்டில் உள்ளவர்களை எழும்பச் சொல்லி உள்ளூர் தாதாகளைக் கொண்டு மிரட்டுபவர்கள்.. 

இன்னொரு பகுதி வெளிநாட்டிலிருந்து வந்தால் ஒன்றுமே தெரியாதவர்கள் என ஏமாற்றுபவர்கள்.. 

இப்படி பல பகுதிகள், காசு வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நிறுவனங்களை அங்கே உருவாக்கி உள்ளதையும் யாராவது கெடுத்துக் கொள்வார்களா??

கொஞ்சக் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இப்படி பெரிய வீடுகள் பேய் வீடுகளாக மாற சந்தர்ப்பம் உள்ளது. உள்ளூர் பேப்பரில் வாடகைக்கு விடப்படும் என்ற பகுதியில் வரும் வீடுகளின் விபரங்களைப் பார்த்தால், ஏட்டிக்குப் போட்டியாக, தேவையற்ற விதத்தில் பெரிய வீடுகளைக் கட்டி பாராமரிக்க வசதியில்லாமல் வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் போடுகிறார்கள்..🤦🏽‍♀️

5 hours ago, satan said:

முட்புதர், கறையான் புற்று படர்ந்து, பாம்புகளால் சூழப்பட்ட வீடுகளை திருத்தி பராமரித்த குடும்பங்களை பாராட்டுவதற்கு பதிலாக கால அவகாசம் கூட கொடுக்காமல் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியிருந்தவர்களை விரட்டி தெருவில் விட்டிட்டு மீண்டும் பூட்டிப்போட்டு போனவர்களும், அவர்கள் கஷ்ரப்பட்டு திருத்திய வீட்டை அவர்கள் சொந்தமாக்கி விடுவார்கள் என்று அவர்களை எழுப்பி விட்டு வேறொருவரை குடியமர்த்தியவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை இங்கிருக்கும் ரவுடிக்கும்பல் ஒன்றுசேர்ந்து வெருட்டி பறிப்பவரும் உண்டு, அதேநேரம் தங்கள் வீடுகளை பராமரிக்கிறார்கள் என்று நன்றியோடு அவர்களுக்கு பணம் அனுப்புபவர்களும் உண்டு, தானமாக தங்கள் காணிகளை ஏழைகளுக்கு கொடுப்போரும் உண்டு. மனிதர் பலவகை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2023 at 07:38, Nathamuni said:

இப்படிப்பட்ட ரவுடிக்கும்பல்களை சமாளிக்கக் கூடிய கம்பனி தான் நான் சொன்னது. அதாவது அப்படி ஒரு கம்பனியிடம் கொடுத்து விட்டால் அவர்கள் சகல விடயங்களையும் கவனிப்பார்கள். 😁

கரோ பகுதியில் ஒரு தம்பதி: 2 பிள்ளைகள், வளர்ந்து வேறு இனத்தவரை கலியாணம் செய்து போய்விட்டனர். யாழ்கொட்டடியில் ஒரு வீடு. முன்வளவில் பெரிய வீடு. பின்வளவில் ஒரு சின்ன வீடு. இரண்டையும் உறவினருக்கு கொடுத்து இருந்தார்கள். முன்வீட்டில் இருந்தோர் கடந்த வருடம் கனடா குடிபெயர, பின்வீட்டு வயது போன தூரத்து சின்னம்மா முன்வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டார். 

வேறு உறவினர் தந்த தகவலை வைத்து நேரே போன போது, தம்பிக்கு தெரியாது போல, உன்ர கொம்மா, அப்பவே எனக்கெல்லே எழுதீட்டா என்றாவாம். இதென்னடா வில்லஙகம் எண்டு பொலீசுக்கு போனா, போலீஸ் விசாரணைக்கு கூப்பிட, ஆள் ஆஸ்பத்திரில போய் படுத்துவிட்டா.

இவரும், வந்து திருப்பியும் போக, உறுதியெல்லாம் கோட்டில காட்டுறம். வீட்டுப்பக்கம் வந்து தேவையில்லாமல் பயமுறுத்த வேணாம் என்று எச்சரிக்க, போலீசுக்கு சொல்லிவிட்டாவாம்.

பின்ன பண்ணிப் பாருங்கோவன்🥺

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நாதம்ஸ் இதெல்லாம் பகுதி பகுதியாக பிரிக்க வேண்டிய விடயம்.

முதலில் ஜூனியர் மட்டத்தில் ஓர் சட்டத்தரணி. அவரிடமே வழக்கை வாதி இன்றி நடத்திட அனுமதி ( பிரயாணச் செலவை தவிர்த்தல்)

பிரதிவாதியை முற்றாக வெளியேற்றாமல் தொடர்ந்து பின்னால் உள்ள வீட்டில் ( Tenancy Agreement) உடன்படிக்கையுடன் இருப்பதற்கு அனுமதிக்கலாம் என்று வாதிட்டால் வழக்கு விரைவில் முடிவுற்கு வரும்.

வழக்கு வென்றவுடன் வழக்குச் செலவையும் கோரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.