Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா??

அவர்களுடன்  பேசி  இருக்கின்றோமா?  என்றால் இல்லை  என்பது  தானே  எமது  பதில்?

நான் அப்படி யாரும்  அருகில் வந்தால் அல்லது அவர்களின்  பக்கத்தால்  போகவேண்டி வந்தால்

கடந்து  செல்லும்வரை மூச்சை  நிறுத்துபவன்

அல்லது  முகத்தை  முழுமையாக  கிடைப்பதால் மூடுபவன் நான்.

ஆனால்  அவர்களும் மனிதர்கள்

இந்த நிலைக்கு  அவர்கள்  வர ஏதாவது  வலுவான  காரணமுண்டல்லவா?

நாம்  சிந்தித்துண்டா?

முதன் முதலில் வீதிக்கு  வரத்தான்  கடினமாக  இருக்கும்

வந்துவிட்டால்???

இப்படித்தான்  பாரிசின்  வீதிகளில்  பல நூறுபேர்...

நான்  கண்டு கொண்டதில்லை

எந்த  உதவியும் செய்ததில்லை

கண்டால் மூச்சையே நிறுத்துபவனால்  எப்படி  அருகில் சென்று உதவமுடியும்??

அண்மையில் எனது  சின்ன  மகளுடன் நடந்து  சென்று  கொண்டிருந்தேன்

எனது  கடைக்கு  பக்கத்தில் இவ்வாறு  வீதியில் இருக்கும்  ஒரு  பெண்ணைக்கண்டதும்

நான் முகத்தை  மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு  அகல

எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

என்ன  என்று  கேட்க அவருக்காக ஒரு  சாப்பாடு  தான் வாங்கி  வந்ததாக  சொன்னாள்.

இப்படி பலரும்  அவளுக்கு சாப்பாடும்  தண்ணீரும் உடுப்புக்களும்  கொடுப்பதை  பலமுறை  நானும் கண்டிருக்கின்றேன்

ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது  செய்து  கொண்டே  இருக்கிறது என்பதும்

இவர்கள் தங்க பல இடங்களை  அரசு  ஒதுக்கி  இருக்கிறது 

ஆனால் இவர்கள் அதை  பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை  இருந்தது

நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர்   வந்தார்

அந்த  பெண்ணுடன்  இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன்

அவருடன்  பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு  வந்தது

அதனால் இவரிடம் எனது  மகளும் சாப்பாடு  கொடுத்ததை  சொல்லி

இவர்கள் பற்றிய அவரது  கருத்தைக்கேட்டேன்

அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

 தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

யாழுக்காக  விசுகு...............

Edited by விசுகு
சில வரிகள் சேர்க்க
  • Like 9
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு…. நீங்கள் சொல்லும் மன நிலையில்தான்,
வீதியில் இருந்து யாசகம் பெறுவோரை இது  வரை நினைத்திருந்தேன்.
அரசு கொடுக்கும் இடங்களில்… அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போது…
அவர்களும் நடுவீதிக்கு வரத்தானே வேண்டும்.

மூன்று கிழமைக்கு முன்…. இப்படி யாசகம் பெற்றுக் கொண்டு இருந்தவரை கடந்து சென்றேன்.
ஏனோ தெரியவில்லை, அவரின் முகம் அடிக்கடி நினைவில் வருகின்றது.
கொஞ்ச காசாவாது கொடுத்திருக்கலாமே… என்று இரு தடவை அந்த இடத்திற்கு
சென்று பார்த்திருக்கின்றேன்.  அங்கு அவர் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது.

சமூகப் பார்வையுடன் எழுதிய ஆக்கத்திற்கு நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் முன்பு இருந்த இடத்தில் பலருடன் நன்றாகவே பழகி இருக்கிறேன்......மேலும் பல செய்திருக்கிறேன் சொல்வது அழகல்ல.......பகிர்வுக்கு நன்றி விசுகர்.......!  😢

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

 தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

நியூயோர்க்கிலும் இப்படி ஒருவருடன் பேசும்போது உங்களுக்குத் தானே எவ்வளவு வசதிகள் செய்து தருகிறார்கள் அங்கு ஏன் தங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள் என்றால்

உள்ளே பல மாபியாக்கள் அவர்களின் அடியாட்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் தொல்லையைவிட வெளியே குளிரோ மழையோ பனியோ பரவாயில்லை என்றார்.

1 hour ago, விசுகு said:

எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

எனது மூத்த மகளுக்கும் இதே பழக்கம் உண்டு.

சாப்பாடு உடுப்புகள் என்று எப்போதும் கொடுப்பார்..

எனது மனைவி 

பாம்புக்கு பாலை வார்த்தாலும் ஒரு நாளைக்கு உனக்கு கொத்தும் அப்ப பார் என்பா.

சன்பிரான்சிஸ்கோ போய் வந்தவர்களுக்கு வீடில்லாமல் தெருவோரம் இருப்போரை பார்க்காமல் திரும்பவே முடியாது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலும் பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடல் வேண்டும். 

பொதுவாக கேட்போருக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி, உடைத்து நான் ஒன்றை எடுத்து விட்டு (கடையில் கொடுத்து காசாக்கி குடு/குடிப்பதை தடுக்க) மிகுதியை கொடுப்பதுதான் வழக்கம்.

ஆனால் வீதி விளக்கில் நின்று யாசகம் எடுப்பவர்கள் பலர் இவ்வாறு உணவை வாங்க மாட்டார்கள்.  அல்லது வேண்டா வெறுப்பாக வாங்குவார். தொடர்ந்து போகும் வழி என்றால் - அடுத்து உங்கள் காரை தவிர்த்து விட்டு (இந்த லூசன் பிஸ்கெட்தான் தருவான்🤣) அடுத்த காருக்கு போவார்கள்.

அவர்கள் செய்வது வேலை. மாபியாக்கள் முதலாளிகள்.

நான் கடவுள் படம் தத்திரூபமாக காட்டி இருக்கும்.

அதே போல் ஒரு சாண்ட்விச் வாங்கி தா என கேட்பவரும் உண்டு.

37 minutes ago, ஈழப்பிரியன் said:

பாம்புக்கு பாலை வார்த்தாலும் ஒரு நாளைக்கு உனக்கு கொத்தும் அப்ப பார் என்பா.

இங்கே இப்படி பாவம் பார்த்து வீட்டை கொண்டு போய் வச்சு, வேலையும் எடுத்து கொடுத்த ஆட்களை திரும்பி ஒருநாள் திடீரென வந்து குத்து கொண்டதும் உண்டு. தாயும் 13 மகனும் அவுட். தந்தைக்கு பலத்த காயம்.

https://www.independent.co.uk/news/uk/crime/mother-and-son-killed-stourbridge-west-midlands-took-homeless-man-in-tracey-peter-pirece-wilkinson-tripple-stabbing-a7661501.html?amp

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதிலும் பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடல் வேண்டும். 

பொதுவாக கேட்போருக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி, உடைத்து நான் ஒன்றை எடுத்து விட்டு (கடையில் கொடுத்து காசாக்கி குடு/குடிப்பதை தடுக்க) மிகுதியை கொடுப்பதுதான் வழக்கம்.

ஆனால் வீதி விளக்கில் நின்று யாசகம் எடுப்பவர்கள் பலர் இவ்வாறு உணவை வாங்க மாட்டார்கள்.  அல்லது வேண்டா வெறுப்பாக வாங்குவார். தொடர்ந்து போகும் வழி என்றால் - அடுத்து உங்கள் காரை தவிர்த்து விட்டு (இந்த லூசன் பிஸ்கெட்தான் தருவான்🤣) அடுத்த காருக்கு போவார்கள்.

அவர்கள் செய்வது வேலை. மாபியாக்கள் முதலாளிகள்.

நான் கடவுள் படம் தத்திரூபமாக காட்டி இருக்கும்.

அதே போல் ஒரு சாண்ட்விச் வாங்கி தா என கேட்பவரும் உண்டு.

இங்கே இப்படி பாவம் பார்த்து வீட்டை கொண்டு போய் வச்சு, வேலையும் எடுத்து கொடுத்த ஆட்களை திரும்பி ஒருநாள் திடீரென வந்து குத்து கொண்டதும் உண்டு. தாயும் 13 மகனும் அவுட். தந்தைக்கு பலத்த காயம்.

https://www.independent.co.uk/news/uk/crime/mother-and-son-killed-stourbridge-west-midlands-took-homeless-man-in-tracey-peter-pirece-wilkinson-tripple-stabbing-a7661501.html?amp

நான் சொல்ல வருவது வேறு சகோ. மாஃபியா கும்பல் சார்ந்தது அல்ல 

உண்மையில் வீட்டை விட்டு வீதிக்கு வருவோர் பற்றியது. இவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள். கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா??

அவர்களுடன்  பேசி  இருக்கின்றோமா?  என்றால் இல்லை  என்பது  தானே  எமது  பதில்?

நான் அப்படி யாரும்  அருகில் வந்தால் அல்லது அவர்களின்  பக்கத்தால்  போகவேண்டி வந்தால்

கடந்து  செல்லும்வரை மூச்சை  நிறுத்துபவன்

அல்லது  முகத்தை  முழுமையாக  கிடைப்பதால் மூடுபவன் நான்.

ஆனால்  அவர்களும் மனிதர்கள்

இந்த நிலைக்கு  அவர்கள்  வர ஏதாவது  வலுவான  காரணமுண்டல்லவா?

நாம்  சிந்தித்துண்டா?

முதன் முதலில் வீதிக்கு  வரத்தான்  கடினமாக  இருக்கும்

வந்துவிட்டால்???

இப்படித்தான்  பாரிசின்  வீதிகளில்  பல நூறுபேர்...

நான்  கண்டு கொண்டதில்லை

எந்த  உதவியும் செய்ததில்லை

கண்டால் மூச்சையே நிறுத்துபவனால்  எப்படி  அருகில் சென்று உதவமுடியும்??

அண்மையில் எனது  சின்ன  மகளுடன் நடந்து  சென்று  கொண்டிருந்தேன்

எனது  கடைக்கு  பக்கத்தில் இவ்வாறு  வீதியில் இருக்கும்  ஒரு  பெண்ணைக்கண்டதும்

நான் முகத்தை  மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு  அகல

எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

என்ன  என்று  கேட்க அவருக்காக ஒரு  சாப்பாடு  தான் வாங்கி  வந்ததாக  சொன்னாள்.

இப்படி பலரும்  அவளுக்கு சாப்பாடும்  தண்ணீரும் உடுப்புக்களும்  கொடுப்பதை  பலமுறை  நானும் கண்டிருக்கின்றேன்

ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது  செய்து  கொண்டே  இருக்கிறது என்பதும்

இவர்கள் தங்க பல இடங்களை  அரசு  ஒதுக்கி  இருக்கிறது 

ஆனால் இவர்கள் அதை  பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை  இருந்தது

நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர்   வந்தார்

அந்த  பெண்ணுடன்  இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன்

அவருடன்  பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு  வந்தது

அதனால் இவரிடம் எனது  மகளும் சாப்பாடு  கொடுத்ததை  சொல்லி

இவர்கள் பற்றிய அவரது  கருத்தைக்கேட்டேன்

அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

 தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

யாழுக்காக  விசுகு...............

விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன்.

புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, புங்கையூரன் said:

  தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!

அருமை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியவிற்கு வந்த ஆரம்பத்தில் இப்படியானவர்களைப் பார்த்தவுடன், “ அட இங்கேயுமா” என்று வியப்பாக இருந்தது.. 

முன்னேறிய நாடு, பின் தங்கிய நாடு என்ற வேறுபாடில்லாமல் இவர்களைக் காணலாம் என்றதை விளங்கிக்கொள்ளமுடிந்தது.. 

அப்பாவிகளும் உள்ளனர் அதே நேரம் ஆபத்தானவர்களும் இருக்கிறார்கள்.. பல்வேறு காரணங்களால் வீதிக்கு வந்தவர்களும் உள்ளனர்.. 

நன்றி விசுகு அண்ணா!!

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 28/2/2023 at 11:59, விசுகு said:

வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா??

அவர்களுடன்  பேசி  இருக்கின்றோமா?  என்றால் இல்லை  என்பது  தானே  எமது  பதில்?

நான் அப்படி யாரும்  அருகில் வந்தால் அல்லது அவர்களின்  பக்கத்தால்  போகவேண்டி வந்தால்

கடந்து  செல்லும்வரை மூச்சை  நிறுத்துபவன்

அல்லது  முகத்தை  முழுமையாக  கிடைப்பதால் மூடுபவன் நான்.

ஆனால்  அவர்களும் மனிதர்கள்

இந்த நிலைக்கு  அவர்கள்  வர ஏதாவது  வலுவான  காரணமுண்டல்லவா?

நாம்  சிந்தித்துண்டா?

முதன் முதலில் வீதிக்கு  வரத்தான்  கடினமாக  இருக்கும்

வந்துவிட்டால்???

இப்படித்தான்  பாரிசின்  வீதிகளில்  பல நூறுபேர்...

நான்  கண்டு கொண்டதில்லை

எந்த  உதவியும் செய்ததில்லை

கண்டால் மூச்சையே நிறுத்துபவனால்  எப்படி  அருகில் சென்று உதவமுடியும்??

அண்மையில் எனது  சின்ன  மகளுடன் நடந்து  சென்று  கொண்டிருந்தேன்

எனது  கடைக்கு  பக்கத்தில் இவ்வாறு  வீதியில் இருக்கும்  ஒரு  பெண்ணைக்கண்டதும்

நான் முகத்தை  மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு  அகல

எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

என்ன  என்று  கேட்க அவருக்காக ஒரு  சாப்பாடு  தான் வாங்கி  வந்ததாக  சொன்னாள்.

இப்படி பலரும்  அவளுக்கு சாப்பாடும்  தண்ணீரும் உடுப்புக்களும்  கொடுப்பதை  பலமுறை  நானும் கண்டிருக்கின்றேன்

ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது  செய்து  கொண்டே  இருக்கிறது என்பதும்

இவர்கள் தங்க பல இடங்களை  அரசு  ஒதுக்கி  இருக்கிறது 

ஆனால் இவர்கள் அதை  பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை  இருந்தது

நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர்   வந்தார்

அந்த  பெண்ணுடன்  இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன்

அவருடன்  பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு  வந்தது

அதனால் இவரிடம் எனது  மகளும் சாப்பாடு  கொடுத்ததை  சொல்லி

இவர்கள் பற்றிய அவரது  கருத்தைக்கேட்டேன்

அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

 தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

யாழுக்காக  விசுகு...............

வீதிக்கு வந்து கையேந்துபவர்களை நான் மட்டுக்கட்டுவதை தவிர்க்கவே விரும்புவது. முடியுமானால் வாகனத்தில் சில்லறைகள் கிடந்தால் எடுத்து கொடுப்பேன். நான் விரைவாக அலுவல்கள் நிமித்தம் செல்லும்போது அவர்களை கண்டு கொள்வது, முகத்தை பார்ப்பது கூட இல்லை.  ஆனால், இவர்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படாதபடி அவதானம் தேவை.

காலம், சூழ்நிலை, வசதி, வாய்ப்புக்கள், உறவு, நட்பு, சமூகம் என பல விடயங்கள் எமது வாழ்க்கையின் நிலமையை தீர்மானிக்கின்றன.

எமக்கு கிடைத்த வசதி, வாய்ப்பு, அறிவு, ஆரோக்கியம், இனிமை, சுகம், செளகரியங்களுக்கு நாம் நன்றி கூறுவோம்.  

வாழ்க்கையில் இக்கட்டான நிலையில் உள்ளவர்களில் கரிசனை அவசியம். 

🙏🏾🙏🏾🙏🏾

Edited by நியாயத்தை கதைப்போம்
  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒவ்வொரு அவலங்களுக்குப் பின்னாலும் தர்மத்தின் சாவும் மானுடத்தின் சிதைவும் நிச்சயம் இருக்கும் காது கொடுத்து கேட்காதவரை அது வெளியே தெரியாது.

  • Thanks 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படித்தான் ஒருவர் ALDI முன்னால் இருப்பார், அவருக்கு போகு போதெல்லாம் சாப்பாடும் பணமும் கொடுப்பது வழமை. ஓரு நாள் என்னை அதில் நிற்க வைத்துவிட்டார், அவருக்கு 1-2 அவசரம்🤣, அதனால அவருக்காக நான் அவரின் உடமைகளை பார்த்துக்கொண்டு நின்றேன்😂 அவர் மீண்டும் வரும் வரை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாய் வாழ்ந்து விபத்தில் சிக்கி குடும்பத்தை இழந்து நடுவீதிக்கு வந்து பிரமை பிடித்தவர்கள் போல் நிக்க வைத்து விடும் உண்மையான யாசகர்கள் யாசகம் கேட்பதில்லை கிடைப்பதை உண்டு வாழ்ந்து கொள்வார்கள் அவர்களுக்கு தேடி உதவி செய்வதில் எந்த பிழையும் இருக்காது .யாருக்கும் எப்பவும் இப்படி நடக்கலாம் .

ஆனால் சிக்னலில் யாசகர் போல் உலகமாகா நடிகர்கள் வருவார்கள் பிச்சை எடுப்பதே தொழிலாக வைத்து இருப்பார்கள் அவர்களை காணும் போது உண்மையான யாசகர்களையும் சந்தேகபட வைத்து விடுகிறார்களே எனும் கடுப்பில் நண்பன் ஒருத்தன்  சில  சமயம் தண்ணீரால் அபிசேகம் செய்து விடுவான்  அப்போது அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் பாய்ந்து பாய்ந்து துப்புவார்கள் அது மட்டும் காலை வளைத்து நடக்க முடியாதவர்கள் போல் இருந்தவர்கள் வாகனத்தை திரத்தி கொண்டு வருவார்கள் .

  • Like 1
  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.