Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரேனிலிருந்து கருங்கடல் தீபகற்பம் இணைக்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி கிரிமியாவிற்குச் சென்ற ஒரு நாளுக்குப் பின்னர் இந்த விஜயம் அமைந்துள்ளது.

கருங்கடல் துறைமுக நகரமான செவஸ்டோபோலுக்கு அவர் சென்றதாகவும் அவருடன் மொஸ்கோவால் நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆளுநரும் பயணம் செய்திருந்ததாகவும் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா 2014 இல் கிரிமியாவை இணைத்துக்கொண்டது.

இருப்பினும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகள் மற்றும் தீபகற்பத்தில் இருந்து வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி கடந்த ஆண்டு முதல் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1328014

  • Replies 118
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் ரஸ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள நகருக்கு திடீர் விஜயம்

Published By: Rajeeban

20 Mar, 2023 | 10:40 AM
image

ரஸ்யா ஆக்கிரமித்துள்ள  உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஸ்யஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  எதிர்பாரத விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஒருவருட கால யுத்தத்தில் தனது படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிக்கு புட்டின் விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை

putin-mariupol-ukraine-visit-0319.jpg

சர்வதேச நீதிமன்றம்  பிடியாணை பிறப்பித்து சில நாட்களிற்கு பின்னர் மேற்கொண்ட இந்த விஜயத்தின் மூலம் அவர் தான் அந்த பிடியாணையை அலட்சியப்படுத்துவதை  வெளிப்படுத்தியுள்ளார்.

மரியுபோலிற்கு ஹெலிக்கொப்டர் மூலம்  சென்ற விளாடிமிர் புட்டின் அந்த நகரை காரில் சுற்றிபார்த்துள்ளதை காண்பிக்கும் புகைப்படங்களை ரஸ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஆச்சரியத்துடன் காணப்படும் பொதுமக்களை புட்டின் சந்திப்பதை பார்க்க முடிகின்றது.

நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முயலவேண்டும் என புட்டின் மரியுபோலை சேர்ந்த ஒருவரிடம் தெரிவிக்கின்றார்.

இந்த விஜயம் தன்னிச்சையானது என தெரிவித்துள்ள கிரெம்ளின் எனினும் இந்த விஜயம் எப்போது இடம்பெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.

putin-mariupol-ukraine-visit-031911.jpg

இரவு நேரத்திலேயே புட்டின் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு இரவில் திருடன் மேற்கொண்ட விஜயம் இது என  குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/150930

  • கருத்துக்கள உறவுகள்

 பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார்,

இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது).

அதில் ஒன்றாக இரஸ்ய புதிய பொருளாதார கூட்டணிகளின் சந்திப்பினை கூறுகிறார்கள்.

இரஸ்சியா உக்கிரேனின் மீது ஆக்கிரமிப்பு போரினை ஆரம்பித்த போது இரஸ்சியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் இரஸ்சிய அரச பணமுறி வாங்கியவர்கள் நட்டமடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

Bid-ask spread of Russian sovereign bonds and CDS increased

தற்போது உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஐரோப்பிய வங்கி ஒன்று முறிவடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலை வரை போர் ஐரோப்பாவிற்கும் பரவிவிட்டது (பொருளாதார தடை இல்லாமலே).

Image

இந்த CDS (Credit default swaps)அமெரிக்காவில் 2008 பொருளாதார சரிவின் போது பெரிதும் பேசு பொருளாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

கிரெடிட் சூசே யை யூஎஸ்பி 2 பில்லியனுக்கு வாங்கி விட்டதே? இந்த டீலை 100 பில்லியன் வரை சுவிஸ் மத்திய வங்கி உத்தரவாதம் செய்துள்ளது (போனகிழமை மதிப்பு 7 பில்லியன் - முதலீட்டாளருக்கு கோவிந்தா, கோவிந்தா).

ஆனால் கிட்டதட்ட 1 வருடமாக இந்த வங்கி சேடம் இழுத்தது. பலர் short செய்து நல்ல காசு பார்த்தார்கள்.

என்ன இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீகள். புட்டின் மட்டும் அல்ல, உலகின் எந்த பெரிய நாட்டின் தலைவரும் பாதுகாப்பு ஏற்பாட்டில் கவனம் எடாமல் விடுவதில்லை.

அதுவும் புட்டின் சொந்த பாதுகாப்பு அமைச்சரையே 8 அடி தள்ளி வைப்பவர்🤣

போன முறை கிரைமியாவில் பென்ஸ் S class ஓடினார். இந்த முறை Toyota (Land Cruiser?). ரஸ்ய தயாரிப்புகளின் தரத்தில் அத்தனை நம்பிக்கை 🤣.

Edited by goshan_che
புட்லர் ➡️ புட்டின் - சில விதந்துரைக்கும் பதங்கள் (நியாயமாக) தடை செய்ய பட்டிருப்பதால். இந்த கிண்டல் பதத்தை சுயவிருப்பில் கை விடுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது).

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது

உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம்

மது உண்மைநிலை?

எமது  பலம் என்ன?

எமக்கென்று எத்தனை நாடுகள்??

எமக்கு  இன்னும் தெரியாது

அது  தெரியும்வரை

உக்ரென் என்பது  ஒரு  தனிதேசம்  என்பதும்

அதன் அங்கீகரித்த  நாடுகள் 100க்கு  மேல்  என்பதும் கண்ணுக்கு  தெரியப்போவதில்லை

இப்படி  மாயையிலேயே இருந்து  மடிவோம்

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

 பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார்,

இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது).

அதில் ஒன்றாக இரஸ்ய புதிய பொருளாதார கூட்டணிகளின் சந்திப்பினை கூறுகிறார்கள்.

இரஸ்சியா உக்கிரேனின் மீது ஆக்கிரமிப்பு போரினை ஆரம்பித்த போது இரஸ்சியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் இரஸ்சிய அரச பணமுறி வாங்கியவர்கள் நட்டமடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

Bid-ask spread of Russian sovereign bonds and CDS increased

தற்போது உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஐரோப்பிய வங்கி ஒன்று முறிவடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலை வரை போர் ஐரோப்பாவிற்கும் பரவிவிட்டது (பொருளாதார தடை இல்லாமலே).

Image

இந்த CDS (Credit default swaps)அமெரிக்காவில் 2008 பொருளாதார சரிவின் போது பெரிதும் பேசு பொருளாக இருந்தது.

வ‌ண‌க்க‌ம் அண்ணா 
 போர் குற்ற‌வாளிய‌ விசாரிக்க‌ குறைந்த‌து இர‌ண்டு வ‌ருட‌ம் த‌ன்னும் எடுக்கும் ஆர‌ச்சி எல்லாம் செய்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌................சீனா  ஜ‌னாதிப‌தி ர‌ஸ்சியாவுக்கு ப‌ய‌ண‌ம் செய்ய‌ இருப்ப‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது.................
போர் குற்ற‌வாளிக‌ளை த‌ண்டிக்க‌னும் என்றால் முத‌ல் அது அமெரிக்காவில் இருந்து தான் தொட‌ங்க‌ப் ப‌ட‌ வேண்டும்...............
புட்டின்ட‌ நிழல கூட நெருங்க முடியாது...............இது வெறும் செய்தியாய் ம‌ட்டும் தான் இருக்கும்....................நிஜ வாழ்வில் நடக்கப் போவ தில்லை அண்ணா😏.....................

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை.

ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளின் தலைவர்கள் இப்படியான பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டிருக்கிறார்கள்: சேர்பியாவின் ஸ்லோபோடான் மிலோசேவிக், சூடானின் பஷீர், இப்போது புட்டின்.

மிலோசேவிக், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் வாய்ப்பை நாடிய சேர்பியாவினால் கைது செய்யப் பட்டு ஹேக் சிறைக்கு அனுப்பப் பட்டார், அங்கேயே மாரடைப்பினால் இறந்தார்.

பஷீர் பிடிவிறாந்தை செயல்படுத்த மறுத்த சில ஆபிரிக்க நாடுகளில் சுற்றித் திரிந்தாலும், ஒரு தென்னாபிரிக்க பயணத்தின் போது நீதிமன்றமொன்று அவரைக் கைது செய்ய வேண்டுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது தென்னாபிரிக்காவை விட்டு அவசரமாக வெளியேறித் தப்பித்தார். இப்போது பதவியிழந்து சூடானிலேயே சிறையில் இருக்கிறார்.

எனவே, புட்டின் சில நாடுகளுக்குப் பயணங்கள் செய்யலாம்! ஆனால், உள்ளூரில் பதவி போகாமல் பார்த்துக் கொள்ள வேணும். பதவி போனால், பொருளாதாரத் தடைகளை நீக்க ஒரு நிபந்தனையாக "புட்டினை" பாசல் செய்து ஹேக் சிறைக்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு ரஷ்யர்கள் நாட்டுக்குள் இருக்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

கிரெடிட் சூசே யை யூஎஸ்பி 2 பில்லியனுக்கு வாங்கி விட்டதே? இந்த டீலை 100 பில்லியன் வரை சுவிஸ் மத்திய வங்கி உத்தரவாதம் செய்துள்ளது (போனகிழமை மதிப்பு 7 பில்லியன் - முதலீட்டாளருக்கு கோவிந்தா, கோவிந்தா).

ஆனால் கிட்டதட்ட 1 வருடமாக இந்த வங்கி சேடம் இழுத்தது. பலர் short செய்து நல்ல காசு பார்த்தார்கள்.

நன்றி இந்த விடயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது

உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம்

மது உண்மைநிலை?

எமது  பலம் என்ன?

எமக்கென்று எத்தனை நாடுகள்??

எமக்கு  இன்னும் தெரியாது

அது  தெரியும்வரை

உக்ரென் என்பது  ஒரு  தனிதேசம்  என்பதும்

அதன் அங்கீகரித்த  நாடுகள் 100க்கு  மேல்  என்பதும் கண்ணுக்கு  தெரியப்போவதில்லை

இப்படி  மாயையிலேயே இருந்து  மடிவோம்

இதற்கு கருத்து எழுதாவிட்டால் உங்களது கருத்திற்கு மதிப்பளிக்காதது போல தோன்றலாம் ஆனால் உங்களது பதிலிலேயே உங்களது கேள்விக்கான விடை உள்ளது.

எனது கருத்து வெறும் கருத்து மட்டுமே, அதுதான் சரி என்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

இதற்கு கருத்து எழுதாவிட்டால் உங்களது கருத்திற்கு மதிப்பளிக்காதது போல தோன்றலாம் ஆனால் உங்களது பதிலிலேயே உங்களது கேள்விக்கான விடை உள்ளது.

எனது கருத்து வெறும் கருத்து மட்டுமே, அதுதான் சரி என்பதல்ல.

இதுபற்றி விரிவாக  ஆராய்வீர்கள்  என  எதிர்பார்த்தேன்

மழுப்பிச்செல்கிறீர்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார்,

புட்டினுக்கு பின்னால் கறுப்பு உடை அணிந்த ஒரு சாதாரண பொதுமகன் 2 படங்களில் இருப்பதை அவதானித்தீர்களா .?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

 பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார்,

இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது).

அதில் ஒன்றாக இரஸ்ய புதிய பொருளாதார கூட்டணிகளின் சந்திப்பினை கூறுகிறார்கள்.

இரஸ்சியா உக்கிரேனின் மீது ஆக்கிரமிப்பு போரினை ஆரம்பித்த போது இரஸ்சியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் இரஸ்சிய அரச பணமுறி வாங்கியவர்கள் நட்டமடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

Bid-ask spread of Russian sovereign bonds and CDS increased

தற்போது உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஐரோப்பிய வங்கி ஒன்று முறிவடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலை வரை போர் ஐரோப்பாவிற்கும் பரவிவிட்டது (பொருளாதார தடை இல்லாமலே).

Image

இந்த CDS (Credit default swaps)அமெரிக்காவில் 2008 பொருளாதார சரிவின் போது பெரிதும் பேசு பொருளாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா, ரஸ்யா, சீனா என்று கிட்டதட்ட 80 வருடமாக இருந்த உலக தரவரிசை…..

அமெரிக்கா, சீனா, ரஸ்யா என மாறுவதை கட்டியம் கூறும் முதலாவது நிகழ்வு.

புட்டின் : நீங்கள் ஜனாதிபதி ஆனமைக்கு வாழ்த்து. அண்மைய கால சீன அபிவிருத்தியை நாம் மெச்சுகிறோம். ஏன் பொறாமை கூட படுகிறோம்.

ஷி: சீனா ரஸ்யா இடையான மூலோபாய உறவு தொடர்ந்து உறுதியாக பயணிக்கும் என நம்புகிறேன்.  சர்வதேச நியாயப்பாட்டை உறுதி செய்யவும், இரு நாட்டின் நல்வாழ்வை பெருக்கவும் இது உதவும்.

கிட்டதட்ட ரொமேனியன் ஜனாதிபதியும், பைடனும் கதைப்பது போல் இருக்கிறது power dynamics. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை.

ஆனால், அவரது சர்வதேச பயணங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் நோக்கமே பிரதானமானது. புட்டினோடு சேர்த்து இது வரை மூன்று நாடுகளின் தலைவர்கள் இப்படியான பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டிருக்கிறார்கள்: சேர்பியாவின் ஸ்லோபோடான் மிலோசேவிக், சூடானின் பஷீர், இப்போது புட்டின்.

மிலோசேவிக், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் வாய்ப்பை நாடிய சேர்பியாவினால் கைது செய்யப் பட்டு ஹேக் சிறைக்கு அனுப்பப் பட்டார், அங்கேயே மாரடைப்பினால் இறந்தார்.

பஷீர் பிடிவிறாந்தை செயல்படுத்த மறுத்த சில ஆபிரிக்க நாடுகளில் சுற்றித் திரிந்தாலும், ஒரு தென்னாபிரிக்க பயணத்தின் போது நீதிமன்றமொன்று அவரைக் கைது செய்ய வேண்டுமா என்று ஆராய்ந்து கொண்டிருந்த போது தென்னாபிரிக்காவை விட்டு அவசரமாக வெளியேறித் தப்பித்தார். இப்போது பதவியிழந்து சூடானிலேயே சிறையில் இருக்கிறார்.

எனவே, புட்டின் சில நாடுகளுக்குப் பயணங்கள் செய்யலாம்! ஆனால், உள்ளூரில் பதவி போகாமல் பார்த்துக் கொள்ள வேணும். பதவி போனால், பொருளாதாரத் தடைகளை நீக்க ஒரு நிபந்தனையாக "புட்டினை" பாசல் செய்து ஹேக் சிறைக்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு ரஷ்யர்கள் நாட்டுக்குள் இருக்கிறார்கள். 😂

அருமையான கருத்து.

இந்த ஐசிசி க்கு அதிகாரம் கொடுக்கும் ரோம் சட்டத்தில் 123 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. பிடியாணை பிறப்பித்த பின் இந்த நாடுகளுக்கு போனால் சட்டப்படி நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கலாம். (அது புட்டின் பதவியில் இருக்கும் வரை நடைமுறை சாத்தியம் இல்லை என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும்). 

வழமையாக நாட்டின் அதிபர்களுக்கு இருக்கும் immunity ஐசிசி பிடிவிறாந்துக்கு இல்லை - என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்கள் கருத்து.

சூடான் அதிபர் தென்னமரிக்கா போனபோது, தென்னாபிரிக்க நீதிமன்றம் - இம்யூனிண்ட்டி தொடர்கிறது என தீர்பளித்ததே அவர் தப்ப காரணம் என நினைக்கிறேன்.

உண்மையில் என் பார்வையில் இந்த பிடி விறாந்து கொடுக்கும் விளைவுகள்:

1. அணு ஆயுத மிரட்டல் - புஸ் ஆகி விட்டது. புட்டினுக்கு பிடி விறாந்து வரை போனாலும், புட்டின் அணு ஆயுதத்தை தொட முடியாது என்பதை நிறுவியாகி விட்டது.

2. சீனாவுக்கு செய்தி. புட்டினுக்கு பிடி விறாந்து கொடுத்த நாம் - உங்களை இதுக்ககா வர்தக ரீதியில் பகைக்கவும் தயங்கோம். புட்டினா? லாபமா?

3.நீங்கள் கூறியது போல் இது ரஸ்யாவில் புட்டின் வட்டத்தில் இருந்தே அவரை தள்ளி விட்டு தாம் முன்னுக்கு வர நினைப்போருக்கு ஒரு கதவை திறக்கிறது.

4. மிக முக்கியமாக நீங்கள் சொன்ன புட்டின் பதவியில் இருந்து இறங்கியதும், அவரை காவு கொடுத்து விட்டு, மேற்குடன் உறவை சீர்செய்யும் ஒரு நிலமை வரலாம். 

இதன் தொடர்சியாக - இனி புட்டின் சாகும் வரை கதிரையை விட்டு இறங்க மாட்டார். இறங்கினால் மிலோசவிச்சுக்கு நடந்ததுதான் நடக்கும் என்ற பயம் அவரை துரத்தும். 

ஒருவர் எவ்வளவு காலம் பதவியில் நீடிக்கிறாரோ, நீடிக்க முனைகிறராரோ அந்தளவுக்கு அவருக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு வலுக்கும் - இது மனித இயல்பு.

இப்படி பல கட்ட செஸ் நகர்வில் இது ஒரு நகர்வு.

பிகு

1. பதவியில் இருக்கும் போதே பிடியாணை பெற்றோர் - கடாபி, பசீர், புட்டின்.

2. பிடியாணை பற்றிய கருத்தாடலை உரிய திசைக்கு இட்டு வந்ததுக்கு நன்றி.

ஆவா குரூப் வந்து படலையை ஆட்டி ஒரே அட்டகாசம். ரொக்ஸ் குரூப் ஒரு சிலமனும் காட்டவில்லை.

சினம் தலைக்கேறியா ஆவாக்கள் சும்மா தன்ர வேலையை பார்த்து கொண்டு நிண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் மேல பாஞ்சு கடிச்சு வச்சிட்டினம்🤣.

திரியிம் தமிழர்கள் போல உள்ளகமாக இடம்பெயர்ந்து விட்டது.

———//////-//////——

அபாய அறிவிப்பு 🤣

——/////-//////——-

ஆவா, ரொக்ஸ் பற்றிய என் கருத்துக்கு பதில் எழுதி நீங்கள் பிரச்சனையில் மாட்ட வேண்டாம்🙏🏾.

இங்கே திருபள்ளி எழுச்சி தினமும் உங்கள் பெயரில்தான் அதோடு இதுவும் சேர வேண்டாம்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இதுபற்றி விரிவாக  ஆராய்வீர்கள்  என  எதிர்பார்த்தேன்

மழுப்பிச்செல்கிறீர்கள்

நன்றி

நான் அவதானித்த வகையில் @vasee ஒருவரது கருத்தையும் மறுதலிப்பதில்லை. எல்லோரிடமிருந்தும் அறிவதற்கு ஏதாவது இருக்கும் என்ற தேடல் உள்ளவர். தனது கருத்துக்களை மென்மையாக வைப்பவர்!

ஆனால் இங்கு கருத்தாடலில் உங்கள் கேள்விகளுக்கு இலகுவான விடைகள் கிடையாது. அப்படி இலகுவாக இருந்தால் எமது பிரச்சினைகள் எப்போதோ தீர்ந்திருக்கும்.!

நிற்க,

புட்டின் உக்கிரேனை ஆக்கிரமித்தது உலகை உய்யவைக்கவல்ல. அமெரிக்காவின் உலகப் பொலிஸ்காரன் நிலையை இல்லாமல் செய்யத்தான். அதற்காக உக்கிரேன் மக்களை பலியெடுக்கின்றார். இப்பலியெடுப்புக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநயாகம் நிலவும் நாடுகள் ஆதரவளிக்கவில்லை. சீனா, வடகொரியா, ஈரான் போன்று மக்கள் மீது அதிகாரம் செலுத்தவே ஆட்சியிலுள்ளவர்கள் ஆதரவளிக்கின்றார்கள். 

ஒடுக்கப்பட்ட மக்களாகிய தமிழர் ஒடுக்குவோர் பக்கம் நிற்பது முரண்நகை. ஆனால் இவர்கள் சிறுபான்மையினரே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

 பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமல் சாதாரணமாக பொதுமக்களை சந்திக்கிறார்,

இவரின் மீதான போர் குற்றவாளி குற்றச்சாட்டு அவசர அவசரமாக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதற்கு பல பின்புலம் உள்ளதாக கூறுகிறார்கள் (இலங்கை அரசின் போர் குற்றம் 14 வருடங்களுக்கு மேலாக இழுபட்டு கொண்டுள்ளது).

அதில் ஒன்றாக இரஸ்ய புதிய பொருளாதார கூட்டணிகளின் சந்திப்பினை கூறுகிறார்கள்.

இரஸ்சியா உக்கிரேனின் மீது ஆக்கிரமிப்பு போரினை ஆரம்பித்த போது இரஸ்சியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் இரஸ்சிய அரச பணமுறி வாங்கியவர்கள் நட்டமடைவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

Bid-ask spread of Russian sovereign bonds and CDS increased

தற்போது உலகின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ஐரோப்பிய வங்கி ஒன்று முறிவடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ள நிலை வரை போர் ஐரோப்பாவிற்கும் பரவிவிட்டது (பொருளாதார தடை இல்லாமலே).

Image

இந்த CDS (Credit default swaps)அமெரிக்காவில் 2008 பொருளாதார சரிவின் போது பெரிதும் பேசு பொருளாக இருந்தது.

புட்டின்ட‌ ஆட்சி இன்னும் 13 வ‌ருட‌ம் தொட‌ரும் அப்போது புட்டினுக்கு 83வ‌யதாகிடும்.............அத‌ற்கு பிற‌க்கு புட்டினின் ஆத‌ர‌வோடு ர‌ஸ்சியாவை புட்டினின் ஆத‌ர‌வாள‌ர் ஆள்வார்.................போர் குற்றவாளி குற்றச்சாட்டு புட்டின‌ அசைத்து கூட‌ பார்க்க‌ முடியாது..............சீனா ஜ‌னாதிபதி புட்டின‌ இன்று நேரில் ச‌ந்திச்சு பேசி இருக்கிறார்................

இவேன்ட‌ போர் குற்ற‌வாளி சாட்டை த‌க‌ர்த்து எறியும் அள‌வுக்கு புட்டினின் ஆட்க‌ள் க‌ள‌த்தில் குதிச்சிட்டின‌ம்.............அதில் அவ‌ர்க‌ள் வெற்றியும் அடைவார்க‌ள்..................உல‌க‌ம் போர‌ போர்க்கை பார்த்தா மூன்றாம் உல‌க‌ போரை நோக்கி போய்கிட்டு இருக்கு
ம‌ற்ற‌ திசையில் வ‌ட‌ கொரியா அமெரிக்காவுக்கு எதிரா செய‌ல் ப‌டுது................சீனா தைவான் பிர‌ச்ச‌னையில் கூட‌ அமெரிக்கா மூக்கை நுழைத்து விட்ட‌து..................சீன‌ன் நினைச்ச‌தை சாதிப்பான்............தைவானை கைப‌ற்ற‌ சீன‌னுக்கு மிஞ்சி போனால் ஒரு கிழ‌மை போதும்..................அமெரிக்கான்ட‌ சொல்லுக்கு இப்போது ப‌ல‌ நாடுக‌ள் அடி ப‌னிய‌ ம‌றுக்கின‌ம்.............நீ பாட்டுக்கு ஓர‌மாய் நின்று குரை நாம் செய்யிற‌த‌ செய்கிறோம் என்று செய‌லில் இற‌ங்கிட்டின‌ம் ......................தைவான் சீனா பிர‌ச்ச‌னையையும் மேற்கு ஊட‌க‌ங்க‌ள் தூக்கி பிடிப்பின‌ம் அத‌ற்கு கிடையில் சீன‌ன் மின்ன‌ல் வேக‌த்தில் அவ‌னின் இல‌க்கை அடைந்து விடுவான் ................

அமெரிக்கான்ட‌ வீர‌ம்
ஈராக் அப்கானிஸ்தான் சோமாலியா போன்ற‌ நாடுக‌ளுட‌ன்....................அமெரிக்காவுட‌ன் சேர்ந்து 50 நாடுக‌ள் உக்கிரேனுக்கு ஆத‌ர‌வு...............இதுவ‌ரை புட்டின்ட‌ கை தான் அதிக‌ம் ஓங்கி இருக்கு...................இந்த‌ போர‌ சிம்பிலா பேசி தீர்வு க‌ண்டு இருக்க‌லாம் ஆர‌ம்ப‌த்திலே................என்ன‌ செய்வ‌து தேர‌ இழுத்து ந‌டுத் தெருவில் விட்ட‌ க‌தை போல் ஆகி விட்ட‌து உக்கிரேனின் நில‌மை.....................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நான் அவதானித்த வகையில் @vasee ஒருவரது கருத்தையும் மறுதலிப்பதில்லை. எல்லோரிடமிருந்தும் அறிவதற்கு ஏதாவது இருக்கும் என்ற தேடல் உள்ளவர். தனது கருத்துக்களை மென்மையாக வைப்பவர்!

ஆனால் இங்கு கருத்தாடலில் உங்கள் கேள்விகளுக்கு இலகுவான விடைகள் கிடையாது. அப்படி இலகுவாக இருந்தால் எமது பிரச்சினைகள் எப்போதோ தீர்ந்திருக்கும்.!

நிற்க,

புட்டின் உக்கிரேனை ஆக்கிரமித்தது உலகை உய்யவைக்கவல்ல. அமெரிக்காவின் உலகப் பொலிஸ்காரன் நிலையை இல்லாமல் செய்யத்தான். அதற்காக உக்கிரேன் மக்களை பலியெடுக்கின்றார். இப்பலியெடுப்புக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனநயாகம் நிலவும் நாடுகள் ஆதரவளிக்கவில்லை. சீனா, வடகொரியா, ஈரான் போன்று மக்கள் மீது அதிகாரம் செலுத்தவே ஆட்சியிலுள்ளவர்கள் ஆதரவளிக்கின்றார்கள். 

ஒடுக்கப்பட்ட மக்களாகிய தமிழர் ஒடுக்குவோர் பக்கம் நிற்பது முரண்நகை. ஆனால் இவர்கள் சிறுபான்மையினரே.

குறுக்கிடுவ‌த‌ற்கு ம‌ன்னிக்க‌னும்

இந்த‌ ஒரு வ‌ருட‌ போரில் புட்டின் எத்த‌னை ஆயிர‌ம் உக்கிரேன் ம‌க்க‌ளை கொன்று குவித்தார்.............புள்ளி விப‌ர‌ம் இருக்கா...............

புட்டின் போர் குற்ற‌வாளி என்றால் எம் இன‌த்தை துடி துடிக்க‌ கொன்று குவித்த‌ ம‌கிந்தாவையும் அவ‌னின் அண்ண‌னையும் ஏன் ச‌ர்வ‌தேச‌ம் விட்டு வைச்சு இருக்கின‌ம்

ம‌கிந்த‌ அள‌வுக்கு புட்டின் கொடுர‌மாய் ந‌ட‌ந்து கொள்வ‌தாய் தெரிய‌ வில்லை............புட்டின்ட‌ பிற‌ந்த‌ நாள் அன்று பால‌ம் உக்கிரேன் ப‌டைக‌ளால் தகர்க்கப்பட்டது............அத‌ற்கு பிற‌க்கு தான் அதிக‌ ரோன் தாக்குத‌ல‌ ர‌ஸ்சியா உக்கிரேன் மீது ஏவிய‌து அதில் உக்கிரேனுக்கு பேர் இழ‌ப்பு..............நீங்க‌ள் மேல‌ சொல்லுவ‌து என‌க்கும் ச‌ரி என்று ப‌டுது................அமெரிக்காவா ர‌ஸ்சியாவா என்ற‌ போட்டி...............ஆனால் புட்டினின் ந‌ட‌வ‌டிக்கை த‌ன‌து நாட்டை பாதுகாப்ப‌து போன்று...............உதார‌ன‌த்துக்கு நேட்டோ.................நேட்டோவால் த‌ங்க‌ளின் நாட்டுக்கு ஆவ‌த்து என்று தான் புட்டின் அடிக்க‌டி த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளுக்கு சொல்லுகிறார்.............................

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலமாக மனித இனத்தால் ஏன் போர்களைத் தடுக்க முடியவில்லை?

 இது ஒரு சிக்கலான கேள்வி.  ஆனால் பதிலின் ஒரு பகுதி நமது மரபணு பரம்பரையில் வேரூன்றி இருக்கலாம்.

 எங்கள் மரபணுக்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவை சிம்பன்சிகள் மற்றும் போனபோஸ் இரண்டுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

 இரண்டு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த ஆல்பா ஆண் சிம்பன்சிகள் மோதும்போது அவை பொதுவாக சண்டையிடுகின்றன. ஆனால் போனபோஸ் பொதுவாக ஒத்துழைப்பை நோக்கிய ஆல்பா பெண்களால் வழிநடத்தப்படுகிறது.  போனோபோஸ் குழுக்கள் குறுக்கிடும்போது, அவை வழக்கமாக ஒன்றுகூடி, ஒருவரையொருவர் அழகுபடுத்தி, பின்னர் ஒருவரை ஒருவர் “குஷி”ப்படுத்துகின்றன.

உலகின் பலம்பொருந்திய நாடுகளை போனோபோஸ் போன்று ஆல்பா பெண்களால் ஆளும்வரை போர்களைத் தடுக்கமுடியாது!

2 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஒரு வ‌ருட‌ போரில் புட்டின் எத்த‌னை ஆயிர‌ம் உக்கிரேன் ம‌க்க‌ளை கொன்று குவித்தார்.............புள்ளி விப‌ர‌ம் இருக்கா...............

புட்டின் போர் செய்யவில்லையே. அது பழைய ரஷ்ய நாட்டை மீளவும் ஆட்சிக்குள் கொண்டுவரும் வெறும் ஸ்பெசல் நடவடிக்கைதானே.  ஸ்பெசல் நடவடிக்கை என்பதால் மக்கள் கொல்லப்படவில்லை. எல்லோரும் ரஷ்யாவின் பல்வேறு “சம்மர் காம்ப்”  போய் மகிழ்வுடன் ரஷ்யாவின் பெருமிதங்களைக் கொண்டாடுகின்றார்கள். 😀

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

நீண்ட காலமாக மனித இனத்தால் ஏன் போர்களைத் தடுக்க முடியவில்லை?

 இது ஒரு சிக்கலான கேள்வி.  ஆனால் பதிலின் ஒரு பகுதி நமது மரபணு பரம்பரையில் வேரூன்றி இருக்கலாம்.

 எங்கள் மரபணுக்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவை சிம்பன்சிகள் மற்றும் போனபோஸ் இரண்டுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

 இரண்டு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த ஆல்பா ஆண் சிம்பன்சிகள் மோதும்போது அவை பொதுவாக சண்டையிடுகின்றன. ஆனால் போனபோஸ் பொதுவாக ஒத்துழைப்பை நோக்கிய ஆல்பா பெண்களால் வழிநடத்தப்படுகிறது.  போனோபோஸ் குழுக்கள் குறுக்கிடும்போது, அவை வழக்கமாக ஒன்றுகூடி, ஒருவரையொருவர் அழகுபடுத்தி, பின்னர் ஒருவரை ஒருவர் “குஷி”ப்படுத்துகின்றன.

உலகின் பலம்பொருந்திய நாடுகளை போனோபோஸ் போன்று ஆல்பா பெண்களால் ஆளும்வரை போர்களைத் தடுக்கமுடியாது!

புட்டின் போர் செய்யவில்லையே. அது பழைய ரஷ்ய நாட்டை மீளவும் ஆட்சிக்குள் கொண்டுவரும் வெறும் ஸ்பெசல் நடவடிக்கைதானே.  ஸ்பெசல் நடவடிக்கை என்பதால் மக்கள் கொல்லப்படவில்லை. எல்லோரும் ரஷ்யாவின் பல்வேறு “சம்மர் காம்ப்”  போய் மகிழ்வுடன் ரஷ்யாவின் பெருமிதங்களைக் கொண்டாடுகின்றார்கள். 😀

செல‌ன்ஸ்கி த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளையே தானே கொன்று விட்டு ர‌ஸ்சியா மீது ப‌ழியை போட‌க் கூடிய‌ ம‌ன‌ம் ப‌டைத்த‌ ம‌னித‌ர்.........நிஜ‌ வாழ்வில் தான் ம‌க்க‌ளை சிரிக்க‌ வைச்ச‌வ‌ர் இப்போதைய‌ அவ‌ரின் செய‌ல் பாடுக‌ள் அவ‌ரை ஆத‌ரிச்ச‌ நாடுக‌ளே ச‌ந்தேக‌ப் ப‌டும் நிலைக்கு ஆள் ஆகி விட்டார்..............ப‌ல‌ நாடுக‌ள் உக்கிரேன‌ விட்டு எப்ப‌வோ வில‌கி இருப்பின‌ம் அமெரிக்காவின் சொல்லுக்கு க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌க்க‌ வேண்டிய‌ சூழ் நிலைக்கு த‌ள்ள‌ ப‌ட்டு விட்டார்க‌ள்.................. 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

நீண்ட காலமாக மனித இனத்தால் ஏன் போர்களைத் தடுக்க முடியவில்லை?

 இது ஒரு சிக்கலான கேள்வி.  ஆனால் பதிலின் ஒரு பகுதி நமது மரபணு பரம்பரையில் வேரூன்றி இருக்கலாம்.

 எங்கள் மரபணுக்களில் 98 சதவீதத்திற்கும் அதிகமானவை சிம்பன்சிகள் மற்றும் போனபோஸ் இரண்டுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.

 இரண்டு வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த ஆல்பா ஆண் சிம்பன்சிகள் மோதும்போது அவை பொதுவாக சண்டையிடுகின்றன. ஆனால் போனபோஸ் பொதுவாக ஒத்துழைப்பை நோக்கிய ஆல்பா பெண்களால் வழிநடத்தப்படுகிறது.  போனோபோஸ் குழுக்கள் குறுக்கிடும்போது, அவை வழக்கமாக ஒன்றுகூடி, ஒருவரையொருவர் அழகுபடுத்தி, பின்னர் ஒருவரை ஒருவர் “குஷி”ப்படுத்துகின்றன.

உலகின் பலம்பொருந்திய நாடுகளை போனோபோஸ் போன்று ஆல்பா பெண்களால் ஆளும்வரை போர்களைத் தடுக்கமுடியாது!

புட்டின் போர் செய்யவில்லையே. அது பழைய ரஷ்ய நாட்டை மீளவும் ஆட்சிக்குள் கொண்டுவரும் வெறும் ஸ்பெசல் நடவடிக்கைதானே.  ஸ்பெசல் நடவடிக்கை என்பதால் மக்கள் கொல்லப்படவில்லை. எல்லோரும் ரஷ்யாவின் பல்வேறு “சம்மர் காம்ப்”  போய் மகிழ்வுடன் ரஷ்யாவின் பெருமிதங்களைக் கொண்டாடுகின்றார்கள். 😀

ஜேர்ம‌னிக்கு உக்கிரேனை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு ர‌ஸ்சியா தான் முக்கிய‌ம்.................ஜேர்ம‌னி ஆர‌ம்ப‌த்தில் க‌ள்ள‌ மெள‌வுன‌த்தை க‌டை பிடித்து நாட்களை இழுத்து அடித்தார்கள் உக்கிரேனுக்கு உத‌வாம‌.................அமெரிக்காவின் வற்புறுத்தல் கார‌ன‌மாய் ஜேர்ம‌னி த‌ன‌து நிலைப்பாட்டை சிறிது மாற்றி கொண்ட‌து.................போர் சீக்கிர‌ம் முடிவுக்கு வ‌ந்தால் ந‌ல்ல‌ம்................ம‌ற்ற‌ நாடுக‌ள் உக்கிரேனுக்கு ஆயுத‌ம் கொடுக்க‌ கொடுக்க‌ போர் நீண்டு கொண்டு தான் போகும்...............

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

ஜேர்ம‌னிக்கு உக்கிரேனை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு ர‌ஸ்சியா தான் முக்கிய‌ம்.................ஜேர்ம‌னி ஆர‌ம்ப‌த்தில் க‌ள்ள‌ மெள‌வுன‌த்தை க‌டை பிடித்து நாட்களை இழுத்து அடித்தார்கள் உக்கிரேனுக்கு உத‌வாம‌.

ஆமாம். கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்தபோது ரஷ்யாவின் (சோவியத்தின்) ஆதிக்கத்துக்கள் இருந்த பொற்கால வாழ்வை மறக்கமுடியுமா? மேற்கு நாடுகளின் சதியால் இழந்த வாழ்வை மீளப்பெற ரஷ்யா மீது எப்போதும் ஜேர்மனிக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும்.🤓

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

எனவே, புட்டின் சில நாடுகளுக்குப் பயணங்கள் செய்யலாம்! ஆனால், உள்ளூரில் பதவி போகாமல் பார்த்துக் கொள்ள வேணும். பதவி போனால், பொருளாதாரத் தடைகளை நீக்க ஒரு நிபந்தனையாக "புட்டினை" பாசல் செய்து ஹேக் சிறைக்கு அனுப்பி வைக்கும் அளவுக்கு ரஷ்யர்கள் நாட்டுக்குள் இருக்கிறார்கள். 😂

ஒம் புட்டின் சில நாடுகளுக்கு மட்டுமே பிரயாணம் செய்யலாம். நிச்சயமாக புட்டினின் ஈழத்து ஆதரவாளர்கள் விரும்பி நிரந்தரமாக குடியேறிய நாடுகளுக்கு அவர் செல்லவே முடியாது.

இவேன்ட‌ போர் குற்ற‌வாளி சாட்டை த‌க‌ர்த்து எறியும் அள‌வுக்கு புட்டினின் ஆட்க‌ள் க‌ள‌த்தில் குதிச்சிட்டின‌ம்.............அதில் அவ‌ர்க‌ள் வெற்றியும் அடைவார்க‌ள்.......]

யாராக இருக்கும் யாழ்களத்து ஆட்களோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

மிலோசேவிக், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் வாய்ப்பை நாடிய சேர்பியாவினால் கைது செய்யப் பட்டு ஹேக் சிறைக்கு அனுப்பப் பட்டார், அங்கேயே மாரடைப்பினால் இறந்தார்.

மிலோசவிச்சின் மரணம் இயற்கையானதல்ல என சேர்பியர்கள் இன்றும் வாதாடுகின்றார்கள்.

1 hour ago, கிருபன் said:

ஒடுக்கப்பட்ட மக்களாகிய தமிழர் ஒடுக்குவோர் பக்கம் நிற்பது முரண்நகை. ஆனால் இவர்கள் சிறுபான்மையினரே.

சிறுபான்மை இனமான குர்திஷ் இனமும் மேற்குலக பக்கம் நின்றது. இருந்தாலும் துருக்கியை மீறி மேற்குலகால் குர்திஷ் இனத்திற்கு எதுவுமே செய்ய முடியவில்லை அல்லது செய்ய முன் வரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது

உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம்

மது உண்மைநிலை?

எமது  பலம் என்ன?

எமக்கென்று எத்தனை நாடுகள்??

எமக்கு  இன்னும் தெரியாது

அது  தெரியும்வரை

உக்ரென் என்பது  ஒரு  தனிதேசம்  என்பதும்

அதன் அங்கீகரித்த  நாடுகள் 100க்கு  மேல்  என்பதும் கண்ணுக்கு  தெரியப்போவதில்லை

இப்படி  மாயையிலேயே இருந்து  மடிவோம்

ஈழத்தமிழினம் பலமாக இருந்த போது சர்வதேச ஆசியுடன் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடந்தனவே. ஏன்  எதுவும் வெற்றியளிக்கவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, கிருபன் said:

ஆமாம். கிழக்கு, மேற்கு எனப் பிரிந்திருந்தபோது ரஷ்யாவின் (சோவியத்தின்) ஆதிக்கத்துக்கள் இருந்த பொற்கால வாழ்வை மறக்கமுடியுமா? மேற்கு நாடுகளின் சதியால் இழந்த வாழ்வை மீளப்பெற ரஷ்யா மீது எப்போதும் ஜேர்மனிக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும்.🤓

பொருளாதார ரீதியாக ஜேர்மனிக்கு ரஷ்யா என்றும் தேவை.ஒன்றல்ல இரு எரிவாயு குழாய்கள் நிறுவும் அளவிற்கு ரஷ்யா ஜேர்மனிக்கு முக்கிய நாடு.

அதை விட....

கிழக்கு ஜேர்மனியில் உக்ரேனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிறையவே உண்டு. ஆனால் ஊடகங்களில் வெளிவரமாட்டாது. ஏனெனில் ஊடக சுதந்திரம் இங்கு மிச்சம் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.