Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து மாறியுள்ளது.

பட்டியலில் இரண்டாவது இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாவது இடம் ஐஸ்லாந்துக்கும் கிடைத்துள்ளது.

pinland-1024x632.jpg
பட்டியலில் அடுத்த இடத்தில் இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பேர்க் மற்றும் நியூசிலாந்து என்பன உள்ளன.

Finland_Porvoo_NikoLaurila6_-1024x697.jp
சமூக ஆதரவு, வருமானம், சுகாதாரம், சுதந்திரம், இனம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சி குறிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

https://thinakkural.lk/article/245542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து  உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக இருப்பது ஏன் தெரியுமா?

 

பின்லாந்து : உலகின் மகிழ்ச்சியான நாடாக இருக்க காரணம் என்ன?
பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக இந்த பெருமையைப் பெறுகிறது.

பின்லாந்து, டென்மார்க், நார்வே உள்ளிட்ட வடக்கு முனையில் உள்ள நாடுகள் மிகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முக்கிய இடத்தைப்பிடிக்கின்றன.

பின்லாந்து மக்கள் தொகை சுமார் 55.4 இலட்சம் தான்.   கடும் குளிர், ஆண்டின் பெரும்பாலான நாட்கள் இருளாகவே இருக்கும் இந்த நாடுகள் எப்படி மகிழ்ச்சியான நாடாக திகழ்கின்றன என்ற கேள்வி நமக்கு எழலாம்.

மழை, பனி, குளிர் காற்று எதுவும் பின்லாந்து மக்கள் ஆக்டிவாக இருப்பதைத் தடுப்பது இல்லை என்பது தான் இதற்கு பதில்.

மகிழ்ச்சியான நாடு என்பது அங்குள்ள இடங்கள், காலநிலை பற்றியது மட்டுமல்ல. மகிழ்ச்சியான நாடு என்பது மக்களின் மனநிலையே!

சைக்கிள் ஓட்டுதல், கயாக்கிங், ஹைகிங், காம்பிங் என பின்லாந்து மக்கள் கோடைக்காலம் முழுவதும் தங்களை பிஸியான சாகசக்காரர்களாக வைத்துக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தை விட சிறந்த காலநிலையை கொண்ட பல நாடுகள் இருக்கின்றன, பணக்கார நாடுகள் பல இருக்கின்றன, மக்கள் தொகை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள நாடுகள் பல இருக்கின்றன. ஆனால் ஏன் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இருக்கின்றதுப் என்பதைக் காணலாம்.

newssensetn%2F2023-03%2F25398622-5f4f-40
 

அழகான இடங்கள், இயற்கை வளங்கள்

உலகின் அழகான இடங்களின் பட்டியலில் பின்லாந்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும் என்பது உறுதி. ஏனெனில் அங்கு பல பழமையான காடுகள், பளிங்கு போல தெளிவான ஏரிகள், வன விலங்குகள் இருக்கின்றன.

காற்றிலும் நீரிலும் மாசு மிகக் குறைவு. இதுவே மனதளவில் மக்களை ஃப்ரெஷாக வைத்திருக்கும்.

இங்குள்ள மக்கள் எப்போதும் இயற்கைவளங்கள் சூழ்ந்த பகுதியிலேயே வசிக்க விரும்புகின்றனர். வீட்டுக்குள் அடைந்து கிடைப்பதை அவர்கள் விரும்புவதில்லை, இதுவும் மகிழ்ச்சிக்கான இரகசியங்களில் ஒன்று.

 
newssensetn%2F2023-03%2F1d1703d7-ca4c-4e
வாழ்க்கை முறை

மிகவும் சுதந்திரமான மற்றும் நிதானமான வாழ்க்கை முறையை மக்கள் பின்பற்றுகின்றனர். இறுக்கமான சட்டங்கள் இல்லை என்றாலும் மிகவும் அமைதியான நாடாக இருக்கிறது பின்லாந்து.

பின்லாந்து கலாச்சாரம் மற்றொரு காரணம். மக்கள் போட்டிப்போடுவதை விட ஒன்றாக இணைந்து செயல்படுவதே ஊக்குவிக்கப்படுகிறது.

newssensetn%2F2023-03%2F2953c9e5-6504-44
 

கல்வியும் சமத்துவமும்

பின்லாந்து மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் அங்கு குற்றங்கள் மிகக் குறைவு என்பதுதான்.

மேலும் பின்லாந்தின் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட கல்வி முறை மற்றோரு காரணம்.

பின்லாந்தின் பள்ளி அமைப்பு ஐரோப்பியாவில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது. இது இளைஞர்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது.

மேலும் பின்லாந்தில் சிறந்த மருத்துவ அமைப்பும் இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து இங்குள்ள மக்கள் உயர்தரமான வாழ்க்கையை அனுபவிக்க உதவுகிறது.

 
 
newssensetn%2F2023-03%2F5c722838-2d71-43
 

பின்லாந்து மக்கள் மகிழ்ச்சிக்கான மிக முக்கிய காரணமாக கருதப்படுவது ஏற்றதாழ்வுகள் இல்லாமை தான்.

வேற்றுமைகளைக் கடந்து சமத்துவத்தை முன்னிருத்தும் போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான உதாரணமாக பின்லாந்து திகழ்கிறது.

சமூகத்தின் எந்த பொருளாதார பின்னணியில் இருந்து வருபவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.

இங்கு அதிகமாக மிடில் கிளாஸ் மக்கள் இருக்கின்றனர். ஏழைகள் குறைவுதான். பின்லாந்தில் உள்ள பணக்காரர்கள் தங்களது செல்வ வளத்தை வெளிக்காட்ட கூச்சப்படுபவர்களாக இருக்கின்றனர்.

 
ஆடம்பரமான கார்கள், உடைகள் வாங்கும் பழக்கம் அங்கு பெரும்பாலனவர்களுக்கு இல்லை. ஏழைகளாக இருப்பவருக்கும் நல்ல கல்வியும், மருத்துவமும் கிடைக்கும். வீடில்லாமல் இருப்பவர்கள் யாருமில்லை.

நேரடியாக இந்த காரணிகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தாது. ஆனால் இவற்றின் மூலம் மக்கள் நிதானமாகவும் முழுமையாகவும் உணர்கின்றனர். இதுவே சமூகமாக அவர்களை மகிழ்ச்சியாக இருக்க வைக்கிறது.

https://thinakkural.lk/article/245707

Edited by ஏராளன்
இடைவெளி குறைப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மகிழ்ச்சி குறியீீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது தெரியுமா?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,குர்பிரீத் சைனி
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

பதில் - பின்லாந்து.

இது எப்படி முடிவு செய்யப்பட்டது என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு நாட்டின் மகிழ்ச்சியை எப்படி அளவிட முடியும்? உணர்வை அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் உணர்வை எப்படி அளவிட முடியும்?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. எந்த நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அடிப்படையில் நாடுகளும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கை கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

 

'உலக மகிழ்ச்சி அறிக்கை' என்று பெயரிடப்பட்ட இந்த ஆண்டறிக்கையை, ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு என்ற பிரிவு வெளியிடுகிறது.

இந்த அறிக்கை உலகின் பல்வேறு நாடுகளின் மகிழ்ச்சியை பல தேசிய மற்றும் சர்வதேச அம்சங்களின் அடிப்படையில் அளவிடுகிறது. மகிழ்ச்சிக் குறியீடு, நாடுகளின் மகிழ்ச்சியை 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் வரிசைப்படுத்துகிறது.

பின்லாந்து தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 7.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியவை முதல் 10 பட்டியலில் உள்ள மற்ற நாடுகள்.137 நாடுகளில் ஆப்கானிஸ்தான் எல்லாவற்றையும் விட கீழே உள்ளது . அதாவது இது மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு என்று அறிக்கை கூறுகிறது.

இது தவிர, லெபனான், ஜிம்பாப்வே, காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகள் பட்டியலில் கீழே உள்ளன.

இந்த ஆண்டு இந்தியா 125வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் பட்டியலில் அதன் இடம், அண்டை நாடுகளான நேபாளம், சீனா மற்றும் வங்கதேசத்தை விட கீழே உள்ளது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே சண்டை நடந்துவரும் போதும்கூட இந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட முன்னே உள்ளன. ரஷ்யா 70வது இடத்திலும், யுக்ரேன் 92வது இடத்திலும் உள்ளன.

ஆனால் இது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக மகிழ்ச்சிக் குறியீட்டின் வரிசை, ஆய்வு தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஆய்வை கெல்லப் வேர்ட் கணக்கெடுப்பு முகமை நடத்துகிறது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது அதன் மாதிரி அளவு ஆகும். இவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில், தரவு தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் பதிலளிக்க வேண்டும். 0 என்றால் மோசம் மற்றும் 10 என்றால் மிகச்சிறந்த அனுபவம்.

இந்தக் கேள்விகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெருந்தன்மை, சமூக ஆதரவு, சுதந்திரம் மற்றும் ஊழல் போன்ற ஆறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதுபோன்ற சில கேள்விகள் ஆய்வில் கேட்கப்படுகின்றன.

நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்தார்களா? இதற்கான பதிலை, நீங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மதிப்பிட வேண்டும்.

உதவிக்காக உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை இந்த அளவு காட்டுகிறது. உங்கள் பதில் 10 என்றால் நீங்கள் அவர்களை 100% நம்புகிறீர்கள் என்று அர்த்தம்.

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாழ்க்கையில் நமக்கு விருப்பமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நம் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது. தொழிலைப் போலவே, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான உணவை உண்ணும் சுதந்திரம், விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியும் கேட்கப்படுகிறது. இது 0 முதல் 10 வரையிலான அளவிலும் மதிப்பிடப்பட வேண்டும்.

இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தீர்களா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார் என்று நம்பப்படுகிறது. ஆய்விலும் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுவதற்கு இதுவே காரணம்.

ஊழல் தொடர்பான கேள்வியும் இருக்கும். உங்கள் நாட்டின் ஆட்சியில் எவ்வளவு ஊழல் இருக்கிறது, வியாபாரத்தில் எவ்வளவு ஊழல் இருக்கிறது? ஏனெனில் நாட்டில் ஊழல் இல்லாதது செழிப்பைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.

இது போன்ற பல கேள்விகளை கேட்டு, இந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையில் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

மகிழ்ச்சி குறியீட்டின் நோக்கம் என்ன?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2011 ஜூலையில் ஐக்கிய நாடுகள் சபை, "மகிழ்ச்சி: வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை நோக்கி" என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லா அரசுகளிடமும் ஐநா கூறியது.

2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிஷனை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது, அதை பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையும் இந்த கமிஷனுக்கு இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என்றும் இந்த கமிஷன், ஐநா பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே மற்றும் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி.சாக்ஸ் ஆகியோர் தலைமையில் உலக மகிழ்ச்சி தினத்தின் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசை அனைவரின் பேசுபொருளாக இருந்துவருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cw8d73gpl17o

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் கடன் கிடைக்கும் என்றதற்கே வெடி கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததை ஐ நா கவனிக்காதை வன்மையாக கண்டிக்கிறேன்.🙃

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த பின்லாந்து, சுவீடன், ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய ஸ்கண்டினேவிய நாடுகள் பற்றிய செய்தி நமக்குத் தற்போதைய உலகப் பின்னணியில் பல பாடங்களைத் தருகிறது:

1. எல்லோரையும் பாரபட்சமின்றி  நடத்தினால், எல்லாம் சுபமே இருக்கும். இது இல்லாத நாடுகள், சமூகங்கள் என்ன தான் குத்தி முறிந்தாலும் முன்னேற இயலாது!

2. சமூகத்தில் அரைப்பங்கினராகிய பெண்களை ஒதுக்கி வைக்காமல் இணைத்தால் அதுவே ஒரு பெரிய ஊக்கி முன்னேற்றத்திற்கு (இல்லையேல், எத்தனை ஆயிரம்  பெண் தெய்வங்களை வணங்கினாலும் ஒரு உய்வும் வராது!😎)

3. பத்திரிகை, ஊடக சுதந்திரம் அச்சாணி போல. சுவீடன், பத்திரிகைச் சுதந்திரத்தை முதலில் அறிமுகம் செய்த நாடென நினைக்கிறேன்.

4. முறைசார், முறைசாரா கல்வி மிகவும் முக்கியம். பின்லாந்தின் கல்வி முறை உலகிற்கே முன்னுதாரணம். அங்கேயெல்லாம் பொய்ச்செய்திகளை மக்களிடையே பரப்புவதே கடினம்.

5. உடற்பயிற்சி மிகவும் முக்கியம்: ஐஸ்லாந்து பற்றிய ஒரு ரி.வி தொடரில் ஒரு பாத்திரம் உறைபனியில் சாதாரணமாக காலை ஓட்டம் செல்வதைப் பார்த்த பின்னர், நானும் - 10 C வெப்ப நிலை நாட்களில் கூட வெளியே ஓட்டம் போயிருக்கிறேன். அந்த "ஐஸ்லாந்து ஓட்டத்தின்" பலன்கள் வேற லெவல்! 😂

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் நோர்வே இந்த இடத்தில் இருந்தது. நோர்வே கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்க அகதிகளுக்கும் உக்ரைனுக்கும் வாயிலைத் திறந்துவிட்டு.. தரந்தாழ்ந்துவிட்டது. 

இப்போ.. ஸ்கான்டிநேவியாவில் நோர்வே கடைநிலைக்குப் போய்விட்டது. சுவீடன் கூட ஓரம்கட்டிவிட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்

உந்த பட்டியல் தயாரிச்சவையள் இந்த மகிழ்ச்சி ஆரவாரத்தையும் பார்த்து புள்ளி போட்டிருப்பினம் எண்டு நினைக்கிறன் :smiling_face_with_hearts:

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ந்து முதலிடம்

தேவதை ஆளும் தேசம் ❤️. லிஸ்டில் 1ம் இடத்தில் வராது போனால்தான் செய்தி.

ஓ…சானா…வாழ்வோடு பக்கம் வந்தாய் …

ஓ…சானா…சாவோடும் பக்கம் வந்தாய் …🤣

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் காய்ச்சல் இங்கேயும் வீசும் போல இருக்கே?😂

சரி, கணக்குப் பார்க்கலாம்:
நோர்வேயும், பின்லாந்தும் ஏறத்தாழ ஒரே சனத்தொகை (5.5 மில்லியன்?)

2022 இல் நோர்வே எடுத்துக் கொண்ட உக்ரைன் அகதிகள் ~30,000.
2022 இல் பின்லாந்து எடுத்துக் கொண்ட உக்ரைன் அகதிகள் ~ 45,000.

பின்லாந்து மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதல் இடம்! நோர்வே பின் தங்கி விட்டது.😂

கணக்கு முக்கியம்! #facts matter! 😎

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும்  இலங்கை தமிழர்கள் சிலரது இதயங்கள் வாழ்கின்ற நாடுகள் 70 க்கும் 64 வது இடத்துக்கும் வந்தது கவலை தருகிறது.

4 hours ago, Justin said:

சமூகத்தில் அரைப்பங்கினராகிய பெண்களை ஒதுக்கி வைக்காமல் இணைத்தால் அதுவே ஒரு பெரிய ஊக்கி முன்னேற்றத்திற்கு (இல்லையேல், எத்தனை ஆயிரம்  பெண் தெய்வங்களை வணங்கினாலும் ஒரு உய்வும் வராது!😎)

இந்தியா பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு 😂

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து தொடர்ந்து நோவேயை விட குறைந்த அளவு குடிவரவாளர்களையே கொண்டிருந்திருக்கிறது. அதனால்.. சொந்தச் சனத்தொகையிடையே வளப் பரம்பலை மகிழ்ச்சிக்குரிய மட்டத்தில் வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக சமூகத் தேவைகளாக வீடு மற்றும் அடிப்படைவசதிகள். டென்மார்க்.. சுவீடன்.. பின்லாந்து ஈயுவிலும் அங்கத்துவம் வகிப்பதால்.. ஈயு நிதிப் பங்கீடு அவர்களுக்கும் அமையும். நோர்வே அப்படியன்று. இதுவும் ஒரு காரணியாக இருக்கும். 

 

மக்கள்

https://www.statista.com/statistics/1296469/immigration-nordic-countries/

 

Edited by nedukkalapoovan

1 hour ago, nedukkalapoovan said:

முன்னர் நோர்வே இந்த இடத்தில் இருந்தது. நோர்வே கிழக்கு ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்க அகதிகளுக்கும் உக்ரைனுக்கும் வாயிலைத் திறந்துவிட்டு.. தரந்தாழ்ந்துவிட்டது. 

இப்போ.. ஸ்கான்டிநேவியாவில் நோர்வே கடைநிலைக்குப் போய்விட்டது. சுவீடன் கூட ஓரம்கட்டிவிட்டது. 

நெடுக்காலபோவான், தமிழர் மட்டும்தான் மனிதரா, கிழக்கு ஐரோப்பியரும் ஆபிரிக்கரும் தரம் தாழ்ந்த மனிதரா ?

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இணையவன் said:

நெடுக்காலபோவான், தமிழர் மட்டும்தான் மனிதரா, கிழக்கு ஐரோப்பியரும் ஆபிரிக்கரும் தரம் தாழ்ந்த மனிதரா ?

யாரிடைய தரத்தையும் நாம் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் நாம் நாடற்றவர்கள். நாடுள்ளவன் தயவு காட்டி அனுமதிக்கும் இடத்தில்.. அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் எவன் ஒருவனால்.. அந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பங்களிக்க முடியுதோ அவன் சிறந்த குடிமகன்/ள்.. அல்லது குடிவரவாளன்/ள்.

ஆனால்.. நோர்வே உள்ளிட்ட நாடுகளில்.. சொந்த நாட்டு மக்களிடம் வெறுப்பைச் சம்பாதிக்கக் கூடிய அளவில் நடந்து கொள்பவர்களில்.. இந்த கூட்டத்தினர் அதிகம். குறிப்பாக.. ஒரு காலத்தில் நோர்வேயில் போட்ட பொருள் போட்ட இடத்தில் கிடக்கும். இப்ப போடப்படும் பொருள் தங்களுக்கே சொந்தமென்று திருடிச் செல்ல ஆட்கள் இருக்கினம். இது நிச்சமாக எமக்குப் புதிதல்ல. ஆனால்.. நோர்வே வாழ் அதிக மக்களுக்கு புதிது.. மனக்கிலேசமானது.  இப்படி இன்னோரென்ன நிகழ்வுகள்.. அவர்களின் மகிழ்ச்சியைக் குறைத்திருக்கலாம்.

எப்பவுமே.. எமது பழக்கம் வழக்கத்திற்கு ஒவ்வாது இருக்க விரும்பும் இன்னொரு வீட்டாரின் வருகையையே அதிகம் சமாளிக்க முடியாத எம் நிலையில் இருந்து.. இந்த குடியேற்றக்காரர்களை அனுமதிக்கும் நாடுகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நாம் ஆற்றும் கைங்கரியம் விளங்கும். இது தமிழர்கள்.. கறுப்பர்கள்.. அல்பேனியர்கள்.. லுதுவேனியர்கள்.. போலந்துக்காரர்கள்.. ஹிந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள்.. சோமாலியர்கள்.. உட்பட எல்லோருக்கும் பொருந்தும். 

Edited by nedukkalapoovan

4 minutes ago, nedukkalapoovan said:

.. ஹிந்தியர்கள்.. பாகிஸ்தானியர்கள்.. சோமாலியர்கள்.. உட்பட எல்லோருக்கும் பொருந்தும். 

உங்கள் முதலாவது கருத்தில் மிகத் தெளிவாக எழுதியிருந்தீர்கள். 

சரி அகதிகள் வந்ததால் நாடு பாழாகி விட்டது என்பது சுத்தமான மேற்குலக தீவிர வலதுசாரிக் கருத்து அல்லவா ? அகதியாக வந்த நாம் இன்னொரு அகதியை மேற்குலக நிலையிலிருந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது கருத்துக்களைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

அமைதியாக மக்கள்  வாழ்ந்த இடத்தில் வெவ்வேறு கலாச்சார, பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்களை திடீரென கொண்டுபோய் நிறுத்தினால் ஏற்படக்கூடிய பதட்டத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களா இவர்கள்  ? 

ராச விசுவாசம் கூடிப்போச்சு 🤨

  • கருத்துக்கள உறவுகள்

 

தங்களுக்குள் நேர்மையாக இருப்பதும் ஒரு காரணம் என பின்லாந்து கூறுகிறது. 192 பணப்பை  உலகின் 16 நகரங்களில் வீசப்பட்டதாம். கெல்சிங்கில் எறியப்பட்ட 12 ல் 11 திருப்பி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

 

https://www.rd.com/list/most-honest-cities-lost-wallet-test/

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக இருப்பதுதான் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்குமமான ஒரே வழி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.