Jump to content

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல

Published By: DIGITAL DESK 5

23 MAR, 2023 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. கடன் மறுசீரமைப்பிற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசாங்கத்துடன் இணைந்து நாட்டு மக்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எதிர்கால சந்ததியினருக்கு நாடு மிஞ்சும்.

பாரிய கடன்களை மீள செலுத்துவற்காக சில சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தீர்மானிப்பதற்கு விசேட குழுவொன்றும் காணப்படுகிறது.

அதன் அடிப்படையில் முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் செலுத்தும் சொத்துக்களையே விற்பனை செய்ய முடியும். நஷ்டமடைபவற்றில் முதலீடு செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை.

அத்தோடு இலாபம் கிடைக்கின்றது என்பதற்காக இலாபமீட்டும் சொத்துக்களை வைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. நாட்டுக்கு பாரிய இலாபம் கிடைக்கக் கூடியவாறு , கடனை மீள செலுத்துவதற்கு உதவும் வகையிலேயே சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இறக்குமதி தடைகளை ஒரே சந்தர்ப்பத்தில் நீக்க முடியாது. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும். எனவே நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பன இவ்விடயம் தொடர்பில் பொறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/151243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சொத்துக்களை வாங்குவதிலில் தமிழர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள்  பாலஸ்தீனியர்களிடம் இருந்து சொத்துக்களை குறிப்பாக நிலங்களை வாங்கியே தங்கள் நாட்டை உருவாக்கினர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

இந்தச் சொத்துக்களை வாங்குவதிலில் தமிழர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள்  பாலஸ்தீனியர்களிடம் இருந்து சொத்துக்களை குறிப்பாக நிலங்களை வாங்கியே தங்கள் நாட்டை உருவாக்கினர்.

அதே 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

இந்தச் சொத்துக்களை வாங்குவதிலில் தமிழர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள்  பாலஸ்தீனியர்களிடம் இருந்து சொத்துக்களை குறிப்பாக நிலங்களை வாங்கியே தங்கள் நாட்டை உருவாக்கினர்.

👍🏿 ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்ற பாதுகாப்போடு, உத்தரவாதத்தோடு, தனி மனிதர்களாக அன்றி, வெளிநாடுகளில் பதிய பட்ட கம்பெனிகளாக வாங்க வேண்டும். 

தனியே நாம் மட்டும் வாங்காமல் - வெள்ளையின பங்குதாரர்களையும் இணைத்து - வாங்கவேண்டும்.

பின்னர் ஒரு காலத்தில் தேசிய மயப்படுத்தினால், அல்லது கலவரங்கள் மூலம் பறித்தால், ம் நஸ்ட ஈடு கோரத்தக்க வகையிலும், வெளிநாட்டு அரசுகளின் தலையீட்டை உறுதி செய்தும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

👍🏿 ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்ற பாதுகாப்போடு, உத்தரவாதத்தோடு, தனி மனிதர்களாக அன்றி, வெளிநாடுகளில் பதிய பட்ட கம்பெனிகளாக வாங்க வேண்டும். 

தனியே நாம் மட்டும் வாங்காமல் - வெள்ளையின பங்குதாரர்களையும் இணைத்து - வாங்கவேண்டும்.

பின்னர் ஒரு காலத்தில் தேசிய மயப்படுத்தினால், அல்லது கலவரங்கள் மூலம் பறித்தால், ம் நஸ்ட ஈடு கோரத்தக்க வகையிலும், வெளிநாட்டு அரசுகளின் தலையீட்டை உறுதி செய்தும்.

அத்துடன் சிங்களவர்களை விட சிங்களத்தை நேசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ந்தும் கவனமாக இருக்கணும் 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 03:31, ஏராளன் said:

இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புத்திசாலி வாங்குகிறான், முட்டாள் விக்கிறான் இதில வெளியிடும் கருத்து மட்டும் புத்திசாலி என்கிற நினைப்பு!

On 24/3/2023 at 08:52, புலவர் said:

இந்தச் சொத்துக்களை வாங்குவதிலில் தமிழர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள்  பாலஸ்தீனியர்களிடம் இருந்து சொத்துக்களை குறிப்பாக நிலங்களை வாங்கியே தங்கள் நாட்டை உருவாக்கினர்.

அல்லிராஜா காட்டும் ஆர்வத்துக்கு என்ன விமர்சனம் நடக்கிறது என்பதையும்  முதலில் கவனிப்போம். தன் நாடு பறிபோனாலும் கஞ்சிக்கு வழியில்லாமல் தவித்தாலும் தமிழருக்கு ஒரு துரும்பும் கிடைக்க கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக செயற்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 17:31, ஏராளன் said:

பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல

அப்பிடியே வடகிழக்கு பகுதியையும் விற்றால் சிங்கள தேசத்தின் கடனை அடைக்கலாம். அதோட பொக்கற்மணியும் கொஞ்சம் தருவினம்...:gutenmorgen:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே வடகிழக்கு பகுதியையும் விற்றால் சிங்கள தேசத்தின் கடனை அடைக்கலாம். அதோட பொக்கற்மணியும் கொஞ்சம் தருவினம்...:gutenmorgen:

அதுவும் ஏற்கெனவே முடிந்ததோ யாரறிவார்? கச்சதீவு புத்தர் வெளிக்கிளம்பின மாதிரி ஒருநாள் பனையோலை உக்கிப்போக தானா வெளியே தெரியும். அதுக்குத்தானே காட்டிக்கொடுத்ததுகள், ஒதுக்கப்பட்டதுகள் எல்லாம் கூட இருக்குதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் ; கடனை திருப்பிச் செலுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் - பந்துல 

Published By: NANTHINI

27 MAR, 2023 | 05:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

ஆகவே, பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த அனைவரும் இனி கடுமையாக உழைக்க வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிய மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த ஓர் ஆண்டு காலமாக எதிர்கொண்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டோம். இனி பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதி தொகையை போக்குவரத்துத்துறைக்கு பயன்படுத்த முடியாது. இந்த மாதம் அரச சேவையாளர்களுக்கு சம்பளம், சமுர்த்தி கொடுப்பனவு உட்பட சமூக நல பணிகளுக்காக 196 மில்லியன் ரூபாய் செலவாகும்.

ஆனால், அரச வருமானம் 173 மில்லியன் ரூபாயாக காணப்படுகிறது. ஆகவே, இந்த மாதத்துக்கான அரச செலவுக்கும், அரச வருமானத்துக்கும் இடையில் 23 மில்லியன் ரூபாய் பற்றாக்குறை காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் டொலரில் ஒரு பகுதியை அரச சேவையாளர்களுக்கு சம்பளம், சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்கும் ஒதுக்க திறைசேரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பண்டிகை காலத்துக்குப் பின்னர் அரச செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்திக்கொள்ள  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் 10 நிபந்தனைகள் பிரதானமானவையாக காணப்படுகிறது. இவற்றை தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாமல் நிர்வாக கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/151509

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.