Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் புதிய வெளியுறவுக்கொள்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் விளாடிமிர் புடின் இந்த புதிய வெளியுறவுக்கொள்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக இணைத்து ரஷ்ய கூட்டமைப்பை திட்டமிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள் | Ukrain Russian War Russia Special Announce

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள் | Ukrain Russian War Russia Special Announce

ஐரோப்பிய சந்தைகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா எரிசக்தி விநியோகத்தை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைக்கு மாத்திரம் அழைப்பு விடுத்து வரும் நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.   

https://tamilwin.com/article/ukrain-russian-war-russia-special-announce-1680376277

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களும் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து  தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களும் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து  தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். :cool:

சைனாக்காரன் சட்டையில்லாமல் நல்லூர் முருகனிடம் வர எங்கடை அரசியல் வாதி கூட்டம் புத்துக்குள் தானே வாழ்ந்தது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

BRI(NDIA)CS

இப்ப விளங்கி இருக்கும் சர்வதேச சதுரங்க அரசியல்வாதிகளுக்கு வட இந்திய நச்சு பாம்பு கூட்டத்தை பற்றி அநேகமா மற்றொரு அதானி Hindenburg ஏவுகணை போல் மற்றொரு ஏவுகணை  டெல்லியை தாக்கும் அறிகுறி தெரிகிறது .

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இப்ப விளங்கி இருக்கும் சர்வதேச சதுரங்க அரசியல்வாதிகளுக்கு வட இந்திய நச்சு பாம்பு கூட்டத்தை பற்றி அநேகமா மற்றொரு அதானி Hindenburg ஏவுகணை போல் மற்றொரு ஏவுகணை  டெல்லியை தாக்கும் அறிகுறி தெரிகிறது .

மேற்குக்கு “உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு” என்ற முகம்.

கிழக்குக்கு “தவிர்க்க முடியாத வளர்முக நாடு” என்ற வால்.

ஈழத்தமிழருக்கு - எப்போதும் காட்டும் பிராந்திய வல்லூறின் நரித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 23:42, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களும் இந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து  தம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். :cool:

இந்த அணியில் தான் சிறீலங்கா இருக்கிறது. தமிழர்கள் எப்படி உள்நுழைவது???

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 23:28, பெருமாள் said:

 உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் புதிய வெளியுறவுக்கொள்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் விளாடிமிர் புடின் இந்த புதிய வெளியுறவுக்கொள்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி, எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக இணைத்து ரஷ்ய கூட்டமைப்பை திட்டமிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள் | Ukrain Russian War Russia Special Announce

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

ரஷ்யாவின் முக்கிய கூட்டணியில் இணையும் இரு நாடுகள் - பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள் | Ukrain Russian War Russia Special Announce

ஐரோப்பிய சந்தைகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா எரிசக்தி விநியோகத்தை வழங்கி வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தைக்கு மாத்திரம் அழைப்பு விடுத்து வரும் நிலையில் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.   

https://tamilwin.com/article/ukrain-russian-war-russia-special-announce-1680376277

ரஷ்யாவுக்கு பாராட்டுக்களும்...வாழ்த்துக்களும்.     ...ஏனென்றால் இந்தியா சீனா எல்லை சண்டையை தீர்த்து வைத்ததற்கு    ......மீறி சண்டை தொடங்குவார்கள் என்றால்...மேற்கு பாரபட்சமின்றி இரண்டு பகுதிக்கும்.  ஆயுதம்...ஆதரவு..வழங்கும்      🤣...🤣.    ..ரஷ்யாவின். நிலைப்பாடு என்னவோ  ...????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இந்த அணியில் தான் சிறீலங்கா இருக்கிறது. தமிழர்கள் எப்படி உள்நுழைவது???

சிறீலங்காவில் கலந்து ஒற்றுமையாக  ரஷ்யாவை பலப்படுத்துதல் என்ற கொள்கையோடு  ரஷ்ய அணியில் உள்ளே நுழைந்துவிடலாம். தமிழர்கள்  பிரச்சனைகளுக்கும் முடிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிறீலங்காவில் கலந்து ஒற்றுமையாக  ரஷ்யாவை பலப்படுத்துதல் என்ற கொள்கையோடு  ரஷ்ய அணியில் உள்ளே நுழைந்துவிடலாம். தமிழர்கள்  பிரச்சனைகளுக்கும் முடிந்தது. 

ஏற்கனவே இந்தியா என்ற அரக்கனை நம்பி கச்சையோடு.   

 இதில் இன்னும் இரண்டு. ...,??

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

ஏற்கனவே இந்தியா என்ற அரக்கனை நம்பி கச்சையோடு.   

 இதில் இன்னும் இரண்டு. ...,??

ஈழத்தமிழர் நீங்கள் கச்சை எல்லாம் கட்டுற அளவுக்கு பெரிய ஆட்கள் ஆயிட்டியளா? 

அதையும் உருவாமல் விடமாட்டோம்.

# BRI(ndia)CS

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இந்த அணியில் தான் சிறீலங்கா இருக்கிறது. தமிழர்கள் எப்படி உள்நுழைவது???

மற்றைய அணியில் தமிழர்களுக்காக போராடிய வி.புலிகள் இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார்கள். ஆயுதங்கள். மெளனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

இந்த அணியில் தான் சிறீலங்கா இருக்கிறது. தமிழர்கள் எப்படி உள்நுழைவது???

 தமிழர்கள் யாராவது முயற்சித்தார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

 தமிழர்கள் யாராவது முயற்சித்தார்களா?

அந்த வேலைக்கு மிக சரியான...சிறந்த நபர்...இந்த உலகத்தில்...நீங்கள் மட்டுமே ஆகும் 🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மற்றைய அணியில் தமிழர்களுக்காக போராடிய வி.புலிகள் இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார்கள். ஆயுதங்கள். மெளனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன.

அதே நேரத்தில் சிறீலங்கா அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கும் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஏதாவது ஒன்றை சிறீலங்கா அரசுக்கு எதிராக ஏதாவது செய்துள்ளதா??

1 hour ago, குமாரசாமி said:

 தமிழர்கள் யாராவது முயற்சித்தார்களா?

வரலாறு எம் கண்முன்னே நடந்தது.

இந்தியா சீனா ரசியாவின் கரங்களையே ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் நம்பினர். அவர்களது போராட்டங்களையும் கொள்கைகளையுமே முன்னுதாரணமாக கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மற்றைய அணியில் தமிழர்களுக்காக போராடிய வி.புலிகள் இன்னும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார்கள். ஆயுதங்கள். மெளனிக்கப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன.

மிகவும் சாதுரியமான பதில் ஆனால் பாதி உண்மை (half truths).

1. இவர்கள் பட்டியல் இட்டு வைத்துள்ளார்கள்

2. அவர்களுக்கு பட்டியலே இல்லை. இலங்கயில் தடை என்றால் - இந்த நாடுகளில் கேள்வியே இல்லாமல் தடைதான். தவிரவும் எமது போராட்டத்தை முதுகில் குத்திய, நேரடியாக அழித்த தென் ஆபிரிக்கா, இந்தியா இந்த அணியில் அச்சாணிகள். சீனா, ரஸ்யாவின் இலங்கை பாசம் யாவரும் அறிந்ததே.

3. விசுகு அண்ணா சொன்னது போல - மேற்கில் இலங்கை படை அதிகாரிகளை பட்டியலில் வைத்துள்ளார்கள், இலங்கை மீது ஐநா மனித உரிமை சபையில் பிரேரண கொண்டு வந்துள்ளார்கள், காலம் தாழ்தப்பட்டாலும் இவை ஒன்றும் இல்லாத நிலையோடு ஒப்பிட்டால் - ஏதோ ஒரு வகை முன்நகர்வுதான். கோட்டாவின் விசாவை நிராகரிதாத்கள். நிமலராஜன் சந்தேக நபரை கைது செய்துள்ளார்கள். மகிந்தவை கனடா தடை செய்தது. இராஜதந்திரிகளாக நியமிக்க பட்ட இராணுவ அதிகாரிகளை திருப்பி உள்ளார்கள்.

4. BRICS? ஐநா மனித உரிமை கவின்சிகில், பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு நிபந்தனை அற்ற கவர். இலங்கையில் நடந்தது, நடப்பவை பற்றி ஒரு மூச்சு கூட இல்லை.

5. மிக முக்கியமாக - மேற்கு கூட்டணியில் இந்தியா ஒரு முகவர் மட்டுமே. அப்படி இருக்க எமக்கு இந்தளவு ஆப்பு அடித்தார்கள். BRICS இல் நடுநாயகமே இந்தியாதான். பிரிக்ஸ்சை அணுகி எமக்கு தீர்வை எடுக்கலாம் என்றால் - அது சும்மா குதர்கமே அன்றி வேறில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

எமது  மக்களுக்கான நீதி எங்குள்ளது என்பது தான் எமது  தேடல்.
14 வருடங்களுக்கு பின் தடை செய்து என்ன பலன்?
லண்டனில்  மகிந்தவுக்கு நடந்ததின் எத்தனை மடங்கு கனடாவில் நடக்கும் என்பது மகிந்தவுக்கு தெரிவதை விட ஜஸ்டின் ரூடோவுக்கு தெரியும்.
ஆனால் ஒரு கண் துடைப்புக்காக மகிந்தவை தடை செய்தார்கள். 
இதை ஏன் சொல்கிறேன் எனில் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்து எத்தனையோ நாள் கடல் பயணத்தின் பின் சன்சீயில்  வன் கூவரில்  கனடிய அரசால் கிரினினல்கள் போல் நடாத்தப்பட்டார்கள்.( ஏன் கிருமினல் என்பதற்கான ஆதாரம் வேணுமெனில் தரலாம்) 
இன்று யூக்ரேனியர்களுக்கான இராஜ மரியாதை மேற்கின் இரட்டை வேடம் உள்ளங்கை நெல்லிக்கனி.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

ஓம் நீங்கள் சொல்வதில்தான் உங்களின் தேடலுக்கான பதிலும் உள்ளது.

சன்சீக்கும் செலன்ஸிக்கும் காட்டப்படும் வித்தியாசத்தை கண்டு கொள்ளும் நாம்….

அதன் ஒரே காரணம் மேற்கின் சுயநலம் என்பதை கண்டு கொள்ளும் நாம்….

நாம் எப்படி சன்சீ….நிலமையில் இருந்து செலன்ஸ்கி நிலமைக்கு போகலாம் என சிந்தித்து…ஒரு அணியாகி, ஒரு அடியை எடுத்து வைத்தால்…. உங்கள் தேடலின் முடிவின் முதல் படியாக அது இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு எதிர்ப்பு என்பது புரிந்து கொள்ளக் கூடிய உணர்வு தான். ஆனால், எவ்வளவு காலம் தான் உணர்வில் மட்டுமே தங்கி நிற்க முடியுமெனத் தெரியவில்லை, நம் ஆட்கள் சிலர் இதை அப்படியே பேசிக் கொண்டிருக்க மட்டும் பாவிக்கிறார்கள், ஆனால், செயல் எங்கே?

உண்மையில் செயல் இருப்பது இந்த உணர்வுகளைப் பின் தள்ளி விட்டு, சிங்கள அரசுக்கெதிராக பயணத் தடைகளையும், தீர்மானங்களையும் இயற்ற உழைக்கும் மேற்கின் தமிழ் வம்சாவழி அரசியல்வாதிகளிடம் தான்! இவர்களிடம் மேற்கு எதிர்ப்பு,ம் ரஷ்ய, இந்திய சீன ஆதரவு மனநிலைகளும் பரவாமல் காக்க வேண்டியது அவசியம்.

மறுபக்கம், மேற்கு எதிர்ப்புணர்வை சில புல்லுருவிகள் அப்படியே தங்கள் செயல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையையும் யாழ் களத்திலேயே காண்கிறோம். கேம்பிரிட்ஜ் அனலிரிகா நுணுக்கமாக receptive minds கண்டு பிடித்து ட்ரம்ப் வாக்குகளைக் குவித்த மாதிரி, பெண்ணுரிமை, ஒருபால் மணம், இடைப்பாலினம் ஆகியவற்றிற்கு யார் யாரெல்லாம் "ஒவ்வாமை" காட்டுகிறார்களோ, அவர்களைக் குறி வைத்து அடிக்கிறார்கள் இந்தப் புல்லுருவிகள்.😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

அதே நேரத்தில் சிறீலங்கா அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கும் இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் ஏதாவது ஒன்றை சிறீலங்கா அரசுக்கு எதிராக ஏதாவது செய்துள்ளதா??

வரலாறு எம் கண்முன்னே நடந்தது.

இந்தியா சீனா ரசியாவின் கரங்களையே ஆரம்பத்தில் அனைத்து இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் நம்பினர். அவர்களது போராட்டங்களையும் கொள்கைகளையுமே முன்னுதாரணமாக கொண்டனர்.

என்ன விசுகர் விளையாடுறீங்களா?

80 களிலிருந்தே நாங்கள் எல்லோரும் மேற்குலகில் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? அன்று தொடக்கம்   புலம்பெயர்மண்ணில் நாம் செய்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள்,கண்டன ஊர்வலங்கள் எல்லாம் மறந்து போய்விட்டதா? விசா உள்ளவன் விசா இல்லாதவன்  நாடு திருப்பி அனுப்பப்படப்போறவன் எல்லோரும் கூட்டாக சேர்ந்து எமது நாட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி கதறியதெல்லாம் ஞாபகமில்லைலையா? அப்போதெல்லாம் யாராவது விசா தங்குமிட அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினார்களா? எல்லாம் எம் மண்ணுக்காக,விடுதலைக்காக,உரிமைக்காகத்தானே வீதி வீதியாக இறங்கி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடத்தினார்கள். அப்போது காது கேட்காத மேற்குலகத்திற்கு இனி காது கேட்கும், அல்லது சிந்திக்கும் என நம்புகின்றீர்களா?

ரஷ்ய சீன கூட்டுக்கள் தமிழினத்திற்கு உதவி செய்யுமென  சொல்லவரவில்லை. ஆனால்  மேற்குலகு எமக்கு எதுவுமே செய்ய முன்வரப்போவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஓம் நீங்கள் சொல்வதில்தான் உங்களின் தேடலுக்கான பதிலும் உள்ளது.

சன்சீக்கும் செலன்ஸிக்கும் காட்டப்படும் வித்தியாசத்தை கண்டு கொள்ளும் நாம்….

அதன் ஒரே காரணம் மேற்கின் சுயநலம் என்பதை கண்டு கொள்ளும் நாம்….

நாம் எப்படி சன்சீ….நிலமையில் இருந்து செலன்ஸ்கி நிலமைக்கு போகலாம் என சிந்தித்து…ஒரு அணியாகி, ஒரு அடியை எடுத்து வைத்தால்…. உங்கள் தேடலின் முடிவின் முதல் படியாக அது இருக்கும்.

எத்தனை அணிகளில் மேற்கில் ஊர்வலங்கள் நடாத்தி இருப்போம்.ஒன்ற்மே மேற்க்குக்கு புரியவில்லையா?

உண்மையில் மேற்கின் மாற்றான் தாய் மனப்பான்மை என்பதை ஏற்க மறுக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

எத்தனை அணிகளில் மேற்கில் ஊர்வலங்கள் நடாத்தி இருப்போம்.ஒன்ற்மே மேற்க்குக்கு புரியவில்லையா?

உண்மையில் மேற்கின் மாற்றான் தாய் மனப்பான்மை என்பதை ஏற்க மறுக்கிறீர்கள்.

என்ன நுணா இது?

மேற்குக்கு தாய் மனப்பான்மை இருந்தால்தானே, எமக்கு செய்ததை மாற்றாந்தாய் மனப்பான்மை என சொல்ல முடியும்.

இவர்கள் உக்ரேன் என்ற கிறிஸ்தவ வெள்ளை தோலர்கள் அடிபடும் போது தாய் மனத்தோடு அதில் தலையிடுகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

ஒரு போதும் இல்லை.

உக்ரேனின் அமைவிடம், அதன் நலன்கள் மேற்கின் நலன்களோடு ஒத்து போவதால்தான் அதில் தலையிட்டார்கள்.

பச்சை சுய நலம் மட்டுமே தலையிடக்காரணம்.

அதே போலவே கொசவோவும். முஸ்லிம் கொசோவார்களுக்காக, கிறிஸ்தவ சேர்பியரை அடித்தார்கள். அங்கே மிலோசவிச் மட்டும் இல்லை என்றால் தலையிட்டிருக்க மாட்டார்கள்.

இப்பொ தாய்வானிக்கு ஓடுகிறார்களே? தென் கொரியா? ஜப்பான்?

தாயன்பா?

இல்லை தமது புவிசார்-அரசியல் நலன்.

இவர்களின் அணுகுமுறையை தீர்மானிக்கும் காரணி இது ஒன்று மட்டுமே.

ஒரு காலத்தில் பட்டியலிட்டு தடை செய்த மண்டேலாவை, பின் அரண்மனைக்கு அழைத்து விருந்து கொடுத்தார்கள்.

அதேபோல் அரண்மணைக்கு அழைத்து விருந்து கொடுத்த முகாபேயை பின் பட்டியல் இட்டார்கள்.

ஆகவே அவர்களின் சுயநலம், காலத்துக்கு ஏற்ப மாறும் கண்ணோட்டம்  சார்ந்து, எதுவும் மாறலாம், மாறும்.

இந்த மாற்றத்தை இயங்குசக்தியாக்க கூடிய இனமாக நாம் எம்மை தகவமைத்து கொள்ள வேண்டும்.

வரப்போகும் அவலத்தை உணர்ந்த நிலையில்,  போர் முடிய 6 மாதங்கள் முன்னான 2008 உரை சொன்னது அதைதான்.

தனியே போரை நிறுத்துங்கள் என்பதல்ல அந்த கோரிக்கை/கட்டளை. மாறாக இயக்க நிலையை தொடர்ந்து மேற்கில் முன்னெடுங்கள் என்பதே அந்த செய்தி.

கொடி பிடிப்பதா இல்லையா, கொள்ளையா இல்லையா? அந்த அணியா, இந்த அணியா என 14 வருடங்கள் காலத்தை வீணாக்கியவர்கள் நாம்.

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை குறை சொல்லும் நாம் அவர்களை விட ஒன்றும் திறமில்லை.

ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையான புலம்பெயர் தமிழர் தலைமை என ஒன்று வரும், மறுகணமே அது இலங்கை சனாதிபதியை சந்திக்கும். துரோகி கூச்சல் எழும். இதுதானே 14 வருட புலம்பெயர் தமிழர் அரசியல்?

நம்மை, இலங்கை புலம்பெயர் தமிழ் அரசியல் தலைமைகளை விட ஓரளவுக்கு ஐநாவிலும் ஏனைய இடங்களிலும் பொறுப்பு கூறலை மேற்கு நாடுகள் வலியுறுத்தி உள்ளன என்பதுதான் உண்மை.

அதுவும் முழுக்க முழுக்க சுயநல அடிப்படையில்தான்.

ஆனால் இதை ஒரு துரும்பாக பற்றி கொண்டு கரைசேர எம்மால் முடியும்.

நீண்டகால நோக்கில் எமது அழுத்த வலுவை அதிகரிக்க கூடிய இடத்தில் நாம் மேற்கில் இருக்கிறோம்.

எத்தனை ஈழத்தமிழ் நகர சபை உறுபினர்கள், பாராளுமன்ற உறுபினர்கள் சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசிலில் உள்ளார்கள்?

ஆறரை கோடி பேர் இருந்து இந்தியாவில், பல நூறாயிரம் தமிழ் வம்சாவழி தென்னாபிரிகாவில் இருந்து கொடுக்க முடியாத அழுத்தத்தை புலம்பெயர் மேற்கு நாடுகளில் கொடுக்க முடிந்துள்ளது. அரைகுறையாக முயன்றர்கே.

4000 சொச்ச பிரித்தானியரை வைத்து 40 கோடி இந்தியரை கட்டி ஆண்டது பிரிட்டன்.

எண்ணிக்கை மட்டும் அல்ல, பொறுத்த இடங்களில் இருந்து, குறித்த துறைகளில் ஆதிக்கம் செலுத்தி,  ஒருங்கிணைந்த இயக்கத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என காட்டி நிற்கிறது சயோனிஸ்ட் இயக்கம்.

இந்த பாடங்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு, உணர்சியின் பால்பட்டு போவதால் வரும் ஆபத்தை காட்டி நிற்கிறது எண்ணிக்கையில் பெரிய பலஸ்தீன இயக்கம்.

நமக்கான வழி எது என்பது நம் கையில்தான் இருக்கிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

எத்தனை அணிகளில் மேற்கில் ஊர்வலங்கள் நடாத்தி இருப்போம்.ஒன்ற்மே மேற்க்குக்கு புரியவில்லையா?

உண்மையில் மேற்கின் மாற்றான் தாய் மனப்பான்மை என்பதை ஏற்க மறுக்கிறீர்கள்.

இவ்வளவு செய்தீங்கள் ஒருக்கால் தன்னும் கிழக்கில் ஒரு சின்ன நடை போட்டீர்களா!😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மறுபக்கம், மேற்கு எதிர்ப்புணர்வை சில புல்லுருவிகள் அப்படியே தங்கள் செயல் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையையும் யாழ் களத்திலேயே காண்கிறோம். கேம்பிரிட்ஜ் அனலிரிகா நுணுக்கமாக receptive minds கண்டு பிடித்து ட்ரம்ப் வாக்குகளைக் குவித்த மாதிரி, பெண்ணுரிமை, ஒருபால் மணம், இடைப்பாலினம் ஆகியவற்றிற்கு யார் யாரெல்லாம் "ஒவ்வாமை" காட்டுகிறார்களோ, அவர்களைக் குறி வைத்து அடிக்கிறார்கள் இந்தப் புல்லுருவிகள்.😎

மிக தெளிவான பார்வை.

ஆனால் யாழில் காலம் தாழ்த்தியேனும் பல மேற்கு எதிர்பாளர்கள்+ரஸ்ய ஆதரவாளர்கள், ஆசாரவாதிகள், ஒவ்வாமையுள்ளோர்,  புல்லுருவியை இனம் கண்டு விலத்தி நடக்கிறார்கள் என்பது ஒரு நம்பிக்கையான விடயம்.

ஒருவர் மட்டும் நீண்ட கால உறக்கத்தில் இருந்து வந்து நிலமை புரியாமல் பலியாகிறார். விரைவில் அனுபவம் புரியவைக்கும். எனக்கே பல வருடங்கள் எடுத்ததே.

ஆனால் எப்படி சீந்தாமல் விட்டாலும், கொடுப்பனவுக்காக எழுதுபவர்கள் எழுதவே செய்வார்கள்.

பேச்சுரிமைக்கு நாம் கொடுக்கும் விலை அது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வாலி said:

இவ்வளவு செய்தீங்கள் ஒருக்கால் தன்னும் கிழக்கில் ஒரு சின்ன நடை போட்டீர்களா!😎

கிழக்கு எங்களுக்கு ஒரு தேவை இல்லாத ஆணி.🙃

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

கிழக்கு எங்களுக்கு ஒரு தேவை இல்லாத ஆணி.🙃

ஒன்று 😆👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.