Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
நீதியான சிறந்த குறள். சாலமன் பாப்பையா உரை -ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
ஒருவர் செய்த உதவியில் என்யோய் பண்ணி வாழ்ந்தபடி அவர் செய்த உதவியை மறந்து அவருக்கு எதிரான ஒரு கொடுங்கோலனை ஆதரிக்கும் இரட்டை வேடம் இன்னும் மோசமானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது எல்லாம் எமது ஆட்களை உற்சாகபடுத்த தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை என்று ரஷ்யாவின் பில்டப்.  புதின் தான் 2 நாட்களில் உக்ரேனை ஆக்கிரமித்துவிடலாம் என்று நம்பின மாதிரியே அவரது  ஈழதமிழ் பக்தர்களும்  புதின் 2 நாட்களில் ஆக்கிமித்துவிடுவார் என்று உறுதியாக நம்பினார்கள்.அவர்கள் தற்போது உற்சாகம் இழந்து உள்ளனர்.

உண்மையிலேயே விடயம் விளங்கி எழுதிறீங்களா.. இல்லை..!

ஏவுகணைகளின் தரத்தில்.. அதன் மேல் எழுகை தூரம் தான் வீச்சு தூரத்தை தீர்மானிக்கும். அதன் வீச்சுக் கோணம் மாற்றப்படும் போது.. தூரம் குறையும். மேல் எழுகை தூரம் தான் வீச்சை தீர்மானிக்கும்... வீச்சுக் கோணத்திற்கு ஏற்ப. 

உ+ம்:

North Korea tests banned intercontinental missile - BBC News

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பு:உதாரணத்துக்காக படம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிபிசி ஊடகச் செய்திகள் எல்லாமே நடுநிலை என்று அர்த்தப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | குறள் எண் – 110

மு. வரதராசன் உரை : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

நீங்கள் வாழும் நாடு உங்களுக்குச் செய்த நன்மைகளுக்காக அந்த நாட்டிற்கு நன்றியுடைய்வர்களாக இருக்க வேண்டும் என்பது சரியே. அந்த நன்றிக் கடனுக்காக அவர்களது பிழைகளை சரியென்று  வரிந்துகட்டிக்கொண்டு நிற்க வேண்டும் என்கிற  அவசியம் இல்லை. 

மேற்கு நாடுகளின் தூண்டுதல் இல்லாவிடின் இந்த உக்ரேன் யுத்தம் ஆரம்பித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக்  குறைவே. 

அதுசரி, வள்ளுவனை ஏன் இங்கே அனாவசியமாக இழுத்து வருகிறீர்கள்? 

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

என்றும் வள்ளுவன் கூறியுள்ளார். 

மு.வரதராசன் விளக்கம்:

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

முதலில் எழுதப்பட்ட கருத்தாளர்களின் கருத்துக்களை நுனிப்புல் மேய்வதையும் கருத்தாளர்களின் சுயவாழ்வை பரிசோதனை செய்து நீங்களாகவே ஒரு முகமூடியை பொருத்திப் பார்ப்பதையும் நிறுத்தினாலே கருத்துக்களும் கருத்தாளர்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, விசுகு said:

முதலில் எழுதப்பட்ட கருத்தாளர்களின் கருத்துக்களை நுனிப்புல் மேய்வதையும் கருத்தாளர்களின் சுயவாழ்வை பரிசோதனை செய்து நீங்களாகவே ஒரு முகமூடியை பொருத்திப் பார்ப்பதையும் நிறுத்தினாலே கருத்துக்களும் கருத்தாளர்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

நன்றி

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, இணையவன் said:

நீங்கள் குறிப்பிட்ட COWARD OPERATION தாக்குதலில் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?

அவர்களின் கோழைத்தன தாக்குதல்களை வெற்றிகரமாக  முறியடித்துவிட்டரார்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல்😎👍

அமெரிக்காவில் பாடசாலை சிறுவர்கள் கூட நிம்மதியாக பாடசாலை செல்ல முடியாமலிருக்கு, எங்க எப்ப யார் எந்த வித ஆயுத்துடன் வந்து கொள்ளுவார்களென, உள் வீட்டை அசுத்தமாக வைத்துக்கொண்டு மற்ற நாடுகளில் கோழைத்தனமான தாக்குதல்களில் ஈடுபடுவது ஏனோ

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, இணையவன் said:

மேற்கு விசுவாசிகள் என்று அடிக்கடி சீண்டும் விதமாக எழுதும் உங்கள் நோக்கம் என்ன ?

அப்ப ரசியா விசுவாசிகள் என அழைப்பவர்களைப்பற்றி நீங்கள் இதுவரை இப்படியொரு கருத்தை வைத்ததாக தெரியவில்லை ஏனோ? 🤔 மறைமுகமாக நீங்களும் அதை ஆதரிக்கின்றீர்களா?

 மேற்குலக விசுவாசிங்கள் என்பதில் என்ன பிழையுண்டு, அப்ப நீங்கள் மேற்குலகு தப்பாக செயல்படுகின்றது என வெளிப்படையாக சொல்கின்றீர்களா?, ஏனொன்றால் இப்படி சொல்வதால் அவர்கள் மனநிலை பாதிப்படைகின்றது என நீங்கள் நினைக்க வைக்கின்றீர்கள் யாழ்கள வாசகர்கள் &  உறுப்பினர்களை.  இல்ல தப்பாக நான் நினைக்கின்றேனா?🤔

விசுவாசம் என்பது தனி மனித சுதந்திரம், என்னுடைய விசுவாசத்தில் மற்றவர்கள் மூக்கை உளைக்க முடியாது👍

22 hours ago, Kapithan said:

1) உ.ங்களைச் சீண்டுவதற்காக எழுதவில்லை. பொதுவாக மேற்குலகின் அதிதீவிர பக்தர்களைச் சுட்டி எழுதினேன். மேற்கின் விசுவாசிகள் என்று பலர் பகிரங்கமாகவே இங்கு எழுதியதை வாசிக்கவில்லையா? 

உங்களை மட்டும் குறிப்பிட்டு எழுத விரும்பினால் அதை @இணையவன்என்று எழுதுவேன். 

2) அமெரிக்காவுக்கு வெள்ளையடிக்கவோ அல்லது அமெரிக்காவின் விசுவாசமாகவோ கருத்துகளை எழுதமாட்டார்கள். ஆனால் மெதுவாக, நாசூக்காக, பட்டும்படாமல், தொட்டும் தொடாமல் கூறுவார்கள்.  சீனா, ரஸ்யா, வட கொரியா மீது கண்டணம் வைக்கும்போது எள்ளி நகையாடுவார்கள். 👍

ஒரு கண்ணிற்குச் சுண்ணாம்பும், மறு கண்ணிற்கு வெண்ணையும் தடவுவார்கள். 

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தை அழித்திட வேண்டும் " 

அப்படியில்லை "தனியொரு மனிதனிக்கு கருத்து சுதந்திரமில்லையென்றால்.................."

 "ஆனால் மெதுவாக, நாசூக்காக, பட்டும்படாமல், தொட்டும் தொடாமல் கூறுவார்கள்.  சீனா, ரஸ்யா, வட கொரியா மீது கண்டணம் வைக்கும்போது எள்ளி நகையாடுவார்கள். 👍 

22 hours ago, குமாரசாமி said:

Bild

ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு.:face_with_tongue:
உந்த சண்டை அமர்களத்திலும் ஐயா போலந்துக்கு போனது தங்க சொகுசு ரயிலாம்.....:beaming_face_with_smiling_eyes:

மேற்குலகின் விளையாட்டு பொம்மை😄

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, விசுகு said:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | குறள் எண் – 110

மு. வரதராசன் உரை : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

21 hours ago, விசுகு said:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | குறள் எண் – 110

மு. வரதராசன் உரை : எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

சாலமன் பாப்பையா உரை : எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை  -

நல்ல கலைஞர் விசுவாசி தேடி இணைக்குமளவிற்கு இது இருக்கு, இந்த கலைஞர் பொது வாழ்கையில் சொல்லுமளவுக்கு நடந்துகொண்டாரா விசுகு அவர்களே, அல்லது கடைசி நேரத்தில் அவர் எமது போராட்டத்தை எப்படி கையாண்டார் ஏன தெரியாதளவுக்கு நீங்கள் இருக்கின்றீர்களா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, உடையார் said:

கருணாநிதி திருக்குறள் எழுதினாரா?? புதிய செய்தி. உங்களுக்கு விளக்கப்படுத்த என்னிடம் எதுவும் இல்லை. நன்றி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

கருணாநிதி திருக்குறள் எழுதினாரா?? புதிய செய்தி. உங்களுக்கு விளக்கப்படுத்த என்னிடம் எதுவும் இல்லை. நன்றி. 

நுனிபுல் மேய்தால் இப்படிதான்😄

4 minutes ago, விசுகு said:

கருணாநிதி திருக்குறள் எழுதினாரா?? புதிய செய்தி. உங்களுக்கு விளக்கப்படுத்த என்னிடம் எதுவும் இல்லை. நன்றி. 

நீங்கள் இணைத்த செய்தி கூட தெரியாத அளவுக்கு கருத்திடுகின்றீர்களே, மற்றவர்களை நுனிபுல் மேய்தால் என செல்வதேனோ😎

22 hours ago, விசுகு said:

கலைஞர் உரை : எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை

அட வெட்டி இணைப்பதால் உங்களுக்கு நீங்கள் பதிவது ஏதுவன தெரியவில்லை போல🤔

  • Haha 1
Posted
On 12/4/2023 at 14:10, இணையவன் said:

போர் தொடங்கியதில் இருந்து ரஸ்யாவுக்குள் பொதுமக்கள் கொல்லப்படவில்லை  (அல்லது பொதுமக்களைக் குறிவைக்காத தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருசிலர்).

On 12/4/2023 at 14:29, உடையார் said:

இந்த மேற்குலகு தன் படைகளுடன் உக்ரைனுக்குள் புகுந்து தங்கள் COWARD OPERATION நடத்துவதை அறிய மட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்😎,

தன் மக்களை மேற்குலகின் சதி திட்டத்திலிருந்து பாது காக்கும் புட்டின் சிறந்தவரே👍

On 12/4/2023 at 14:44, இணையவன் said:

நீங்கள் குறிப்பிட்ட COWARD OPERATION தாக்குதலில் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் ?

1 hour ago, உடையார் said:

அவர்களின் கோழைத்தன தாக்குதல்களை வெற்றிகரமாக  முறியடித்துவிட்டரார்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல்😎👍

ஒத்துக்கொண்டதற்கு நன்றி. 😁
இதற்காக இந்த அளவு நீட்டி மடக்கியிருக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, இணையவன் said:

ஒத்துக்கொண்டதற்கு நன்றி. 😁
இதற்காக இந்த அளவு நீட்டி மடக்கியிருக்கத் தேவையில்லை.

நீங்களும் ஒத்துக்கொண்டத்திற்கு நன்றி கோழைத்தனாமா தாக்குதல்களுக்கு, என்ன செய்வது சிலருக்கு நீட்டி முழங்காவிட்டால் அவர்களுக்கு விளங்குதில்லையே, என்ன செய்ய, நாமதான் பொறுமையா, சாந்தமாக நிதானமா மீண்டும் மீண்டும் விளங்கப்படுத்த வேண்டியிருக்கே😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, உடையார் said:

நுனிபுல் மேய்தால் இப்படிதான்😄

நீங்கள் இணைத்த செய்தி கூட தெரியாத அளவுக்கு கருத்திடுகின்றீர்களே, மற்றவர்களை நுனிபுல் மேய்தால் என செல்வதேனோ😎

அட வெட்டி இணைப்பதால் உங்களுக்கு நீங்கள் பதிவது ஏதுவன தெரியவில்லை போல🤔

ஒருவர் திருக்குறளுக்கு விளக்கம் எழுதியதற்கும் அவரது வாழ்விற்கும் சம்பந்தப்படுத்தும் அளவுக்கு நான் இறங்கமாட்டேன்.  அவரவர் முகங்களை பார்க்க முடிகிறது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

ஒருவர் திருக்குறளுக்கு விளக்கம் எழுதியதற்கும் அவரது வாழ்விற்கும் சம்பந்தப்படுத்தும் அளவுக்கு நான் இறங்கமாட்டேன்.  அவரவர் முகங்களை பார்க்க முடிகிறது. நன்றி.

அதுசரி நீங்கள் தூக்கி கொண்டாடும்மளவிற்கு அவர் இருக்கும் வரை, நீங்கள் பிரான்சில் சிலை திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை😄, ஆனா எங்கேயோ இடிக்கின்றதே உங்கள் முதல் பதிவிற்கு

20 minutes ago, விசுகு said:

கருணாநிதி திருக்குறள் எழுதினாரா?? புதிய செய்தி. உங்களுக்கு விளக்கப்படுத்த என்னிடம் எதுவும் இல்லை. நன்றி. 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, உடையார் said:

அதுசரி நீங்கள் தூக்கி கொண்டாடும்மளவிற்கு அவர் இருக்கும் வரை, நீங்கள் பிரான்சில் சிலை திறந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை😄, ஆனா எங்கேயோ இடிக்கின்றதே உங்கள் முதல் பதிவிற்கு

ஏதோ திருக்குறளையே கருணாநிதி எழுதி அதன் படி நடக்கவில்லை என்பது போல நீங்கள் எழுதியதற்கு எழுதப்பட்டது அது.

நன்றி தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப நேரமும் இல்லை விருப்பமும் இல்லை. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, உடையார் said:

மேற்குலகின் விளையாட்டு பொம்மை😄

Bild

 நோக்கம் இப்ப புரியுதா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, உடையார் said:

மேற்குலக விசுவாசிங்கள் என்பதில் என்ன பிழையுண்டு,

என்னை பொறுத்தளவில்.  உக்ரேன் ஒரு சுதந்திரமான நாடு ...இதனை கிட்டத்தட்ட 190. நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ...எக்காரணம் கொண்டும்.  எந்தவொரு நாடும் இப்படியான நாட்டின் உள்கட்டமைப்புக்களை. தனது ஆயுதபலம் கொண்டு தாக்கியளிக்க முடியாது....இந்த செயலை உலகம். அனுமதிக்க கூடாது...இவ்வாறு சொல்வதால் நான் அல்லது வேறு எந்த நபர்களாயினும்.   உக்ரேன்...மேற்குலக. விசுவாசிகள். ..என்று அழைக்கப்பட முடியாது...கூடாது காரணம்   ரஷ்யாவின். முழு செயல்களையும்  எதிர்க்கவில்லை...அதேநேரம்  உக்ரேன்...மேற்குலக. முழு செயல்களையும் ஆதரிக்கவில்லை. .....100 %ஆதரவு இருந்தால் அல்லது பின்பற்றினாலே அதனை   விசுவாசம் எனலாம்    ஒரு செயலை ஆதரிப்பது /எதிர்ப்பது விசுவாசம் ஆகிவிடாது   ஏனென்றால் அடுத்து வரும் நிகழ்வுகளை எதிர்க்கலாம் /ஆதரிக்கலாம்...  எனவேதான் மேற்குலக விசுவாசிகள்.  என்பது மிகவும் பிழையான சொல்லாடல்.  .....சக தமிழனை  இப்படி அழைக்கும் நீங்கள் எப்படி?? ஒற்றுமையாகவும்.  ....தொடர்ந்து தமிழ்ஈழம்.  பெறவும் போகிறீர்கள்  ???

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Kandiah57 said:

..சக தமிழனை  இப்படி அழைக்கும் நீங்கள் எப்படி?? ஒற்றுமையாகவும்.  ....தொடர்ந்து தமிழ்ஈழம்.  பெறவும் போகிறீர்கள்  ???

இதையெல்லாம் இன்னுமா நீங்க நம்புறீங்கள்? 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

ஏதோ திருக்குறளையே கருணாநிதி எழுதி

அவர் எழுதியதை படித்து கருணாநிதி தான் திருகுறளை எழுதியிருப்பாரோ என்று நானும் குழம்பி போய்விட்டேன்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

என்னை பொறுத்தளவில்.  உக்ரேன் ஒரு சுதந்திரமான நாடு ...இதனை கிட்டத்தட்ட 190. நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ...எக்காரணம் கொண்டும்.  எந்தவொரு நாடும் இப்படியான நாட்டின் உள்கட்டமைப்புக்களை. தனது ஆயுதபலம் கொண்டு தாக்கியளிக்க முடியாது....இந்த செயலை உலகம். அனுமதிக்க கூடாது...இவ்வாறு சொல்வதால் நான் அல்லது வேறு எந்த நபர்களாயினும்.   உக்ரேன்...மேற்குலக. விசுவாசிகள். ..என்று அழைக்கப்பட முடியாது...கூடாது காரணம்   ரஷ்யாவின். முழு செயல்களையும்  எதிர்க்கவில்லை...அதேநேரம்  உக்ரேன்...மேற்குலக. முழு செயல்களையும் ஆதரிக்கவில்லை. .....100 %ஆதரவு இருந்தால் அல்லது பின்பற்றினாலே அதனை   விசுவாசம் எனலாம்    ஒரு செயலை ஆதரிப்பது /எதிர்ப்பது விசுவாசம் ஆகிவிடாது   ஏனென்றால் அடுத்து வரும் நிகழ்வுகளை எதிர்க்கலாம் /ஆதரிக்கலாம்...  எனவேதான் மேற்குலக விசுவாசிகள்.  என்பது மிகவும் பிழையான சொல்லாடல்.  .....சக தமிழனை  இப்படி அழைக்கும் நீங்கள் எப்படி?? ஒற்றுமையாகவும்.  ....தொடர்ந்து தமிழ்ஈழம்.  பெறவும் போகிறீர்கள்  ???

ஒற்றுமையாக இருந்துதான் நீங்கள் எமது தலைவனின் வழியில் வந்து நீங்கள் போராட்டத்தை காப்பாற்றீனீர்கள், நீங்கள் இன்னும் கனவு காண்கின்றீர்களா ஈழத்தை இந்த மேற்குலகு உங்களுக்கு தாரை வார்த்து தருமென்று, ஒற்றுமையென்ன்றாலென்ன இங்கு சொல்ல கருத்து சொல்ல வருபவர்களுக்கு எல்லாம ஆமா போட வேண்டுமென்றா

15 hours ago, Justin said:

இதையெல்லாம் இன்னுமா நீங்க நம்புறீங்கள்? 😂

உங்களின் நளினங்களிருக்கும் நம்புபவர்கள் இருப்பார்கள்

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர் எழுதியதை படித்து கருணாநிதி தான் திருகுறளை எழுதியிருப்பாரோ என்று நானும் குழம்பி போய்விட்டேன்.

அந்தளவுக்கு விளக்கமில்லாதவரா, நுனிபுல்லை மேயாமல் பதித்த கருத்தை வடிவாக விளங்கி கொள்ளுங்கள் விளங்கநினைப்பவரே, அப்படியும் விளங்காவிட்டால் சொல்லுங்கள் விளக்கமா உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன் விளங்கநினைப்பவரே👍

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.