Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

75 வருடங்களில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு -சந்திரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக மாறியுள்ளதாகவும், நீதித்துறை, பொலிஸ் மற்றும் பொது சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களை கீழிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்க சுதந்திர இலங்கை பல்வேறு இன மற்றும் மத சமூகங்களை “ஒன்றாக இணைக்க” தவறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியா அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி இணைந்து நடத்திய ஒன்லைன் நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/249361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் 'தோல்வியடைந்த அரசாக' மாறியுள்ள இலங்கை - சந்திரிக்கா கவலை

Published By: DIGITAL DESK 5

17 APR, 2023 | 03:34 PM
image

இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தபோது வரவேற்கத்தக்க பல்வேறு சமூகக்காரணிகள் தென்பட்ட போதிலும், சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் இலங்கை ஓர் 'தோல்வியடைந்த அரசாக' மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

'ஒரு நாடு குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு 75 வருடங்கள் என்பது மிகநீண்டகாலமாகும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியாளர்கள் சுமார் 450 வருடங்களாக நாட்டை சீரழித்த பின்னரும்கூட, இலங்கை சுதந்திரமடைந்தபோது பெரிதும் வரவேற்கத்தக்கவாறான பல்வேறு சமூக - பொருளாதாரக்காரணிகள் தென்பட்டன. 

ஆனால் சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இலங்கை ஓர் தோல்வியடைந்த அரசாக மாறியுள்ளது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியப்பேரவை மற்றும் ஆசிய ஊடகக்கற்கைகள் கல்லூரி ஆகியவற்றினால் நிகழ்நிலை முறைமையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'யுனெஸ்கோவுக்கான தூதுவர் மதன்ஜீத் சிங் ஞாபகார்த்த உரை' நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'நாட்டின் உள்ளக விவகாரங்களைக் கையாள்வதற்கான இயலுமையை நாம் இழந்திருக்கின்றோம்' என்றும் அவர் இதன்போது விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் 'கடன்களை மீளச்செலுத்தமுடியாத வங்குரோத்து நிலையில் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது உலகின் எந்தவொரு நாடும் மிக அரிதாக முகங்கொடுக்கக்கூடிய சூழ்நிலையாகும். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கின்றது. 

விவசாயத்துறையும் சிறிய மற்றும் நடுத்தரளவிலான கைத்தொழில்களும் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. சுற்றுலாத்துறை வீழ்ச்சிகண்டுள்ளது' என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாரியளவிலான ஊழல்மோசடிகளும் நாட்டைக் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கத்தின் தோல்வியுமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான அடிப்படைக்காரணங்களாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/153029

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகரமாக ஆடசி செய்த அதிமேதாவி சொல்கிறார் ...... 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசியல் கோமாளி குரங்குகளை எங்காவது ஒரு நாட்டில் ஏலம் போட்டு ... கூறுபோட்டு விற்று இருந்தால் நாடு இன்றைக்கு ஹொங்கோங், தாய்வான், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு போயிருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் 'தோல்வியடைந்த அரசாக' மாறியுள்ள இலங்கை - சந்திரிக்கா கவலை

தோல்விக்கு உங்கள் பங்கு அளப்பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்

75 வருடத்தில யாருக்கு சுதந்திரம் குடுத்தீங்கள் என்று சொல்ல முடியுமா...................அம்மா, மகள், தம்பி என்று தலைமுறைகளாக ஆட்சியைப் பிடித்ததை தவிர என்னத்தை செய்து கிளிச்சனீங்கள்..இன்னும் மக்கள் சாப்பாட்டுக்கே வளியியில்லாது வாழ்கிறார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

monkey business என்பது சொறிலங்காவில் சீரியஸ் ஆக போகுது ஆனால் இங்கு monkey business என்றால் வேறு அர்த்தம் ஒளித்து நிற்கும் @goshan_cheஅவர்களை மேடைக்கு அழைக்கிறோம் பொழிப்புரை ஆற்ற .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தோல்விக்கு உங்கள் பங்கு அளப்பெரியது.

அவர்களின் முழு குடும்பமுமே

16 minutes ago, பெருமாள் said:

monkey business என்பது சொறிலங்காவில் சீரியஸ் ஆக போகுது ஆனால் இங்கு monkey business என்றால் வேறு அர்த்தம் ஒளித்து நிற்கும் @goshan_cheஅவர்களை மேடைக்கு அழைக்கிறோம் பொழிப்புரை ஆற்ற .

இப்போதைக்கு வரமாட்டார், ஒருவர் மறைய வேண்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த சில வருடங்களாக இலங்கையை நாசமாக்க அடித்தளம் இட்ட பண்டாரநாயக்கா குடும்பத்தின் இரத்தம் தோய்ந்த வரலாற்றுக்கு வெள்ளை அடிப்பதில் மும்மரமாக திரிகிறார். வங்காள தேசத்தில் ஹசீனாவின் ஆட்சியை பார்த்து தானும் தன்னை புதுப்பித்து மீண்டும் அரியணை ஏறலாம் என  அங்கலாய்க்கிறார்.

இவருடைய வண்டவாளங்களை இன்னும் கிழிக்க சண்டே லீடர் லசந்த இல்லை என்ற துணிவும் இவருக்கு இருக்கு. பதவியில் இருக்கும் பொழுது திட்டமிட்டு பேச்சுவார்த்தையை குழப்பி கவிட்டு கொட்டியவள் இவள். எழுந்தமானமாக, வர்த்தமானி பிரசுரத்தை தவிர்த்து, உயர்  பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தி தமிழரின் நிரந்தர அழிவுக்கு வித்திட்டவர் . இவர் தான் இப்ப நீதி, நியாயம் பேசுகிறார். இவரை தேவதையாக போற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, saravanar said:

இவர் கடந்த சில வருடங்களாக இலங்கையை நாசமாக்க அடித்தளம் இட்ட பண்டாரநாயக்கா குடும்பத்தின் இரத்தம் தோய்ந்த வரலாற்றுக்கு வெள்ளை அடிப்பதில் மும்மரமாக திரிகிறார். வங்காள தேசத்தில் ஹசீனாவின் ஆட்சியை பார்த்து தானும் தன்னை புதுப்பித்து மீண்டும் அரியணை ஏறலாம் என  அங்கலாய்க்கிறார்.

இவருடைய வண்டவாளங்களை இன்னும் கிழிக்க சண்டே லீடர் லசந்த இல்லை என்ற துணிவும் இவருக்கு இருக்கு. பதவியில் இருக்கும் பொழுது திட்டமிட்டு பேச்சுவார்த்தையை குழப்பி கவிட்டு கொட்டியவள் இவள். எழுந்தமானமாக, வர்த்தமானி பிரசுரத்தை தவிர்த்து, உயர்  பாதுகாப்பு வலயத்தை பிரகடனப்படுத்தி தமிழரின் நிரந்தர அழிவுக்கு வித்திட்டவர் . இவர் தான் இப்ப நீதி, நியாயம் பேசுகிறார். இவரை தேவதையாக போற்ற சில தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. 😡

இனப்பிரச்னையை தீர்க்க இவர் நீலனோடு சேர்ந்து எடுத்த முயற்சியை கெடுத்தவர் ரணில். ரணில் எடுத்த முயற்சியை பின்னர் இவர் கெடுத்தார். வாக்கு அரசியல் தான் காரணம். இன்றும் நீலன் திருச்செல்வம்- சந்திரிக்கா கொண்டு வந்த தீர்வுப் பொதியே எனக்குத் தெரிந்த வரை சிங்கள அரசு தமிழர்க்கு அளிக்க ஒப்புக்கொண்ட நல்ல தீர்வு. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் 'தோல்வியடைந்த அரசாக' மாறியுள்ள இலங்கை 

இதுவும் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடிய ஒரு  மாமெரும் வெற்றிதானே. இன்னும் 50 வருடங்களுக்குப் பின்னரும் இதே வாக்கியத்தை இன்னுமொரு ஆட்சியிழந்த சனாதிபதி சொல்லுவார்.ஒரு தமிழனிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

ஒரு தமிழனிடம் நாட்டைக் கொடுத்துப் பாருங்கள்.பிறகு சொல்லுங்கள்

வடக்கு மாகாணசபை, யாழ் மாநகரசபை, ஆகியவற்றை தமிழர் நிர்வகித்த விதத்தை பார்த்தமே........

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மலையான் said:

வடக்கு மாகாணசபை, யாழ் மாநகரசபை, ஆகியவற்றை தமிழர் நிர்வகித்த விதத்தை பார்த்தமே........

 

ஆளுநர் 
பயங்கரவாததடை  சடடம் 
சிங்கள அரசின் கைக்கூலிகள் 
சிங்கள இராணுவ போலீஸ் அதிகாரம் 

எல்லாம் இருக்கும்போது எப்படி? உங்களிடம் ஆடசி தந்தாலும் 
என்ன செய்யவேண்டும் என்பது பற்றி நீங்கள் முடிவெடுக்க முடியாது. 

அதனால் மட்டுமே இவர்கள் மக்களுக்கு சேவை  செய்யப்போவதில்லை 
யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழனுக்கு நல்லூர் கோவிலில் செருப்பு பார்க்கும் 
பொறுப்பு கொடுத்தாலும் எதோ தான்தான் செருப்பை கண்டுபிடிச்சமாதிரி 
ஒரு சீன் போட்டுக்கொள்வான். போலீஸ் ஆமியை எடுத்தால் போதும் பின்பு அவர்களுக்கு 
புரியும் பாஷையில் பேசிக்கொள்ளலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, மலையான் said:

வடக்கு மாகாணசபை, யாழ் மாநகரசபை, ஆகியவற்றை தமிழர் நிர்வகித்த விதத்தை பார்த்தமே........

 

இனவாத அரசின் கைக்கூலிகள்  ஆதிக்கம் இருக்கும் போது பொதுநலன்/தமிழர் நலன் விரும்பிகளால் என்ன செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இனவாத அரசாட்சி ஏற்படுத்திய சிறப்புக்கள் இவை! அதில் பெரும் பங்கு இவரின் குடும்பத்துக்கு உண்டு. ஒருதடவை நேர்காணலில் இவர் உதிர்த்த வாக்கியங்கள் "இலங்கை சிங்கள பவுத்தநாடு." இப்போ இப்படிப்பேசவேண்டிய தேவை இவருக்கு. இப்படிப்பேசிவிட்டால் தோல்வியில் தனக்கு பங்கில்லை என்றாகிவிடுமா? இதற்கெல்லாம் விலை கொடுக்கும் நாள் நெருங்கி விட்டது. இருந்தாலும் சில இனவாதிகள் பேதி நோயினால் அவதிப்படுகிறார்கள்.

On 18/4/2023 at 10:02, உடையார் said:

இப்போதைக்கு வரமாட்டார், ஒருவர் மறைய வேண்டும் 😂

சூரியன் மறைந்தாற்தானே சந்திரனை காண முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.