Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

78 members have voted

  1. 1. புலத்தில் ஈழத்தமிழர் வாழ்வதற்கு சிறந்த நாடு எது?

    • ஒன்றும் இல்லை
      10
    • கனடா
      22
    • அமெரிக்கா
      1
    • அவுஸ்திரேலியா
      11
    • யூகே
      4
    • பிரான்ஸ்
      2
    • டென்மார்க்
      1
    • சுவிஸ்
      7
    • ஜேர்மனி
      4
    • நோர்வே
      4
    • சுவீடன்
      0
    • நெதர்லாந்து
      7
    • இத்தாலி
      0
    • நியூசிலாந்து
      1
    • சிங்கப்பூர், மலேசியா
      0
    • இந்தியா
      2
    • தென் அமெரிக்க நாடுகள்
      0
    • ஏனைய ஐரோப்பிய நாடுகள்
      0
    • ஏனைய ஆசிய நாடுகள்
      0
    • ஆபிரிக்க நாடுகள்
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஈழத்திற்கு அடுத்தபடியாக அதிக ஈழவர்கள் வாழும் இடம் ஸ்ரீ லன்கா........ ஆகவே புலத்தில் சிறந்தது சிங்கள மலமே.

:P

  • Replies 124
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர்வீழ்சிகள்

உதை பாக்கத்தான் ஒராள் எங்களைக் கூட்டிக்கொண்டு போனவர். போய்ப் பார்த்தால் 10 பேர் சேர்ந்து நின்று ------------ போன மாதிரி இருந்தது. நல்ல வீழ்ச்சிதான் போங்கள். அதை பாக்கிறதுக்கு காடு மேடு என சுத்தல் வேறை..

சிட்னியில இரவில துரத்தி செல்போன் புடுங்கிற ரவுடிப் பயல்கலைத் தவிர்த்து (ஓடிய ஓட்டத்தை இப்ப வரை மறக்க முடியவில்லை :D ஓசி நல்ல நாடு தான்.

ஆனா நிறைய சம்பளம் கிடைக்கோணுமெண்டால் ... அதுக்கு சுச்சர்லாந்து தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் அமெரிக்காவை தெரிவு செய்துள்ளேன்.

நன்மைகள்

1.நல்ல வேலை எடுக்க முடியும்

2.படிப்பதற்கான செலவு குறைவு

3.மிக தரமான பொருட்கள் நியாயமான விலையில்

4. பழகுவதற்கு அருமையான மக்கள்

5. தனி மனித சுதந்திரத்தை புத்தகத்தில் படித்ததுண்டு.ஆனால் நிஜ வாழ்வில் நான் இங்கு வந்து தான் அது என்ன என்பதை காண்கிறேன்

6.மிக நல்ல கால நிலை

7. தமிழ் ஆட்களின் சண்டைகள்,குழுக்கள் இல்லை

8. நல்ல மருத்துவ வசதி வேலை செய்பவர்கட்கு

9.வேலை செய்யும் நிறுவனங்கள் வேலை செய்பவர்களை நடத்தும் முறை அதாவது ஸ்ரொக் கழிவு (50%) விலையில் ,சிறு தொகை பணத்தை சம்பளத்தில் கழித்து மிகுதியை நிறுவனமே கொடுத்து(401கே),ஒருவர் வேலையில் இருந்து ஓய்வெடுக்கும் போது மிக பெரும் தொகையை எடுக்க முடியும்.இதே பணத்தை வேலை செய்யும் போதே ஸ்ரொக்,பாண்ட் போன்றவற்றில் முதலிடவும் முடியும்.

10.மிக சிறந்த தொழில் நுட்பத்தை(எத்துறையாயினும்) முதலாவதாக பெற்றுக்கொள்ள முடியும்.

11.களியாட்ட வகையென்று பார்த்தால் ஆங்கில பாடல்கள்,திரைபடங்கள்,இப்படிய

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு அவுத்திரேலியா தான் சிறந்ததுஎன்று ஒரு பட்டியலையே போட்டுட்டிங்க.

இங்கு வாக்கு போட்டவர்களுக்கு ஒரு கேள்வி....

வாக்களிப்பில் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு சென்று

வசித்துப்பார்த்துவிட்டா உங்களுக்கு பிடித்த நாட்டிற்கு

வாக்களித்தீர்கள்? :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிறது பிச்சை எண்டு முடிவு செய்தா பிறகு அதை பிள்ளையார் கோயில் வாசல்லை எடுத்தா என்ன பெருமாள் கோயில் வாசல்லை எடுத்தா என்ன எல்லாம் ஒண்டுதான் நான் பிரான்சிலை எடுக்கிறன.; இதுவும் நல்ல நாடுதான.; ஓ தலைப்பை மறந்திட்டன் அதாவது தமிழர் வாழ சிறந்த நாடு பிரான்ஸ்

புலம் பெயர்ந்து வாழ சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்,அவுஸ்ரெலியா தான்.அவுஸ்ரெலியா தான்,

நாங்கள் சிறிலங்கா நாட்டில் சந்தொசமாகவும் எந்த மனித உரிமை மீறல்கள் அடக்குமுறைகள் எதுவும் இல்லாமல் சந்தொசமாக வாழ்ந்து கொண்டு தான் இருந்தனாங்கள்.கலைஞன் கூறிய நாடுகளின் அரசாங்கங்களிற்கு எமது சேவை தேவைபட்டதால் தான் எங்களை வரும்படி அழைத்ததால் நாங்கள் இங்கு வாழ்கிறோம் சேவை செய்கிறோம் எமது சேவை மேற்கூறிய நாடுகளிற்கு நிச்சயம் தேவை இல்லாவிடில் இந்த நாடுகள் இயங்க முடியாது குறிப்பாக புத்தன்,ஜம்முபேபி,சுண்டல் ஆகியோரின் உன்னதமான சேவையை அவுஸ்ரெலியா எதிர் பார்த்து கொண்டிருகிறது, :P நாங்கள் சிறிலங்காவிற்கு போக நினைத்தாலும் அவுஸ்ரெலிய அரசாங்கம் விடாது காலில் விழாத குறையாக கெஞ்சுவார்கள்.ஆகவே தான் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா என்ற தென்னிந்திய தெய்வீக கானத்தை காலையும்,மாலையும் வானொலியில் ஒலிபரப்பி கொண்டிருக்கிறோம். :)

சில காரணங்கள்

1)கோயில் இல்லாத இடத்தில் குடி இருக்க வேண்டாம் என்று எமது மூதாதையர் கூறிய கூற்றிற்கு ஏற்ப எம்மால் விரும்பிய (இஸ்ட தெய்வம்) கோயில் கட்டி பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்,உடனடியாக கோஒயில் கட்ட வசதி இல்லை எனின் கிழமைக்கு நூறு டொலர் கொடுத்து பாடசாலை மண்டபத்தை எடுத்து அங்கு தற்காலிக கோயிலை அமைத்து அதாவது தெய்வீக சிலையை ஜயரின் வீட்டில் வைத்து ஒவ்வொரு கிழமையும் அந்த சிலையை மண்டபதிற்கு கொண்டு வந்து,பூசை செய்து எமது பக்தியை இறைவனுக்கு இலகௌவாக தெர்விக்க கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.இதன் மூலம் கிடைக்கும் வருமாணத்தை வைத்து பிரமாண்டமான கோயில் கட்டி நாங்கள் எமது இஸ்ட தெய்வதிற்கு பூசை செய்ய கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.அரோகரா..அரோகரா.

மேற்கூறிய கஷ்டங்கள் இந்துமத தமிழர்களிற்கு தான் இருகிறது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தமிழர்களிற்கு இந்த கஷ்டங்கள் இல்லை,சில தேவாலயங்கள் வெள்ளை இனத்தவர்களாள் கவனிபாரற்று விடபடிருக்கும் அதை இவர்கள்(கிறிஸ்தவ தமிழர்கள்) போய் துப்பரவு செய்து சில தேய்விக பாடல்களை பாடி கர்த்தரின் ஆசியை பெற்று இன்புற்றிருக்க ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்..ஆலேலோயா...ஆலேலோயா.

இஸ்லாம் மதத்தை சார்ந்த தமிழ பேசுபவர்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை காரணம் ஏனைய இஸ்லாமிய உலக சகோதர்கள் அவர்களிற்கு பள்ளிவாசல் கட்டி வைத்திருகிறார்கள் இவர்கள் போய் தொழுகை செய்ய வேண்டியது தான் இவர்களின் கடமை.அதையும் செய்யாவிடில் இவர்கள் அல்லாவின் (அரபி மொழியில் ஆண்டவனின் பெயர்) குற்றதிற்கு ஆளாவார்கள்.

2)சமூக் விரோத செயல்கள் களவு,வீதி ஒழுங்குகளை மீறல்,இன்சுரன்ஸ் எடுக்க காரை எரித்தல்,ஒரே வீட்டில் சந்தோசமாக இருந்து கொண்டு அரசமானியங்கள் பெறுவதிற்காக மட்டும் விவாகரத்து பெறல்,போன்ற செயல்களிற்கு சிறந்த இடம் அவுஸ்ரெலியா தான்.இவை எல்லாம் மாட்டுபட்டால் அரசாங்கத்திடம் ரேசிசம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லி தப்ப கூடிய இடம் அவுஸ்ரெலியா தான்.

3)குடும்ப உறவுகளை விரைவில் அழைக்க கூடிய ஒரே இடம் அவுஸ்ரெலியா தான்.

தமிழினி கூறிய நாடுகளிள் மலேசியா,சிங்கபூர்,பிஜீ,தென்ன

  • தொடங்கியவர்

கருத்துக்கணிப்பில் பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி!

கண்டவாரியாக கருத்துக்கணிப்பு இவ்வாறு சொல்கின்றது...

ஐரோப்பா கண்டம் - முதலிடம் - 19 ஓட்டுக்கள்

வட அமெரிக்கா கண்டம் - இரண்டாம் இடம் - 16 ஓட்டுக்கள்

அவுஸ்திரேலியா கண்டம், ஒன்றும் இல்லாத கண்டம் - மூன்றாம் இடம் - தலா 06 ஓட்டுக்கள்

ஜெனரல், நுணாவிலானின் விரிவான பயன் உள்ள தகவல்கள், சிந்தனைகளிற்கு மிக்க நன்றி!:)

மற்றவர்களும் விரிவாக இதுபற்றிய உங்கள் எண்ணங்களை கூறினால் பலருக்கு இந்த தகவல்கள் எதிர்காலத்தில் பயன்படும்.

சாத்திரி நகைச்சுவையாக கூறினாலும், ஆழமான கருத்து ஒன்றை கூறிச்சென்று இருக்கின்றார். நன்றி! :lol:

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் கனடாவை பற்றி இன்னும் சில தகவல்களை இப்போது தருகின்றேன். இவை எதிர்மறையான எண்ணங்கள்.

1. இந்த பிரச்சனை புலத்தில் பல நாடுகளில் காணப்படுகின்றது. இங்கு சின்னப் பிள்ளைகளிற்கு இருக்கும் உரிமைகள் பற்றி அவர்களிற்கு பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படுவதால் குழந்தைகள் சில தடவைகளில் பெற்றோரை பயமுறுத்த பார்க்கிதுகள் அல்லது குழந்தைகள் குழப்படி செய்யும்போது அவற்றை பெற்றோரால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

இதற்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். எனது ஒன்றுவிட்ட அண்ணாவின் மகன் ஒருநாள் சரியான குழப்படி செய்துகொண்டு இருந்தான். அப்போது நான் அவனை சாதுவாக வார்த்தைகளால் வெருட்டினேன். அதற்கு அவன் எனக்கு இவ்வாறு பதில் கூறினான்.

"சி த் த ப் பா இப்ப நான் ஒ ன் ப து ஒ ண் டு ஒ ண் டு (911) ஐ அமத்த போறன்.. இது உங்கட ஊர் மாதிரி இல்ல, தெரியும் தானே?"

இவ்வளவுக்கும் அவனுக்கு அப்போது ஏழு வயது. எனக்கு இப்படி கூறியதோடு மட்டுமல்லாது தொலைபேசியில் 911 இலக்கத்தை (இதை அழுத்தினால் போலிசை, அம்புலன்சை அவசரத்துக்கு அழைக்க முடியும்) அழுத்துவது போல் தொலைபேசி ரிசீவரை தூக்கிவிட்டு எனக்கு தண்ணி காட்ட தொடங்கினான். இவனது செயல்களை பார்த்ததும் எனக்கு காற்சட்டையுடன் ஒண்டுக்கு போகாத குறை. நான் இவன் உண்மையில் போலிசை அழைக்க போகின்றான் என்று பயந்துவிட்டேன். இதன்பின் நான் பகிடிக்கு கூட குழந்தைகளை அவை என்ன தலைகீழாக நின்று குழப்படி செய்தாலும் அதுகள் செய்யும் அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்துவிடுவேன்.

இங்கு என்ன கூறவருகின்றேன் என்றால் நீங்கள் புலத்தில் பிள்ளைகளை ஊர்போல் வளர்க்க முடியாது. பிள்ளைகளை நீங்கள் வெருட்டினால் அதுகள் உங்களை வெருட்டுங்கள். பிள்ளைகளை அடிக்கவும் முடியாது.

ஒரு முறை ஓர் தாய் தனது பிள்ளை ஒன்றை தனது வாகனத்தில் வைத்து சிறிதாக அடித்துவிட்டதை தூரத்தில் இருந்த கடை ஒன்றில் இருந்த வீடியோ கமரா மூலம் அவதானித்த ஒருவன் போலிசில் முறையிட்டு இறுதியில் போலிசு அந்த தாயை கைதுசெய்து தொலைக்காட்சியில் செய்தியாகவும் வந்துவிட்டது. அதாவது தெரியாமல் கு* விட்டாலும் அதை மணந்து பிடித்து போலிசு உங்களை உள்ளே தள்ளிவிடும். பிள்ளைகள் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2. அடுத்த பிரச்சனை காலநிலை. காலநிலை என்றால் சும்மா சாதாரணம் என்று நினைக்ககூடாது. உயிரே போய் விடும். திடீரென்று ஊதலுடன் கூடிய குளிர்காற்று அடித்து மழை பெய்தால், அந்தநேரம் நீங்கள் ஏற்கனவே தயார்ப்படுத்தலில் இல்லாமல், தேவையான ஆடையை அணியாமல் இருந்தால் குளிரில் நீங்கள் அனுபவிக்கும் கொடுமை சொற்களில் விபரிக்க இயலாது. ஒவ்வொரு நரம்பும் சீண்டி இழுத்து நடுங்க வைத்து உயிரை எடுக்கும் துன்பம் தரும். காரில் எங்காவது போகும் போது அல்லது ஏதாவது எதிர்பாராதவிதமாக நீங்கள் சரியான ஆடைகளின்றி குளிரில் அகப்பட்டால் அது செத்ததுக்கு சமம். குளிர் இங்கு ஓர் மிகக் கொடிய அரக்கன்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குளிர் வாட்டினாலும், பெற்ற பிள்ளைகளே பயமுறுத்தினாலும், சன் டீவி கிடைக்காட்டிலும் கனடா கனடாதான். எந்த நாட்டில இப்ப 100 இடியப்பம் 5 டொலருக்குத் தருகினமாம்? கல்யாண மண்டபங்களென்ன அடுக்கடுக்கான கோயில்களென்ன.. அங்கே நிரம்பி வழியும் உண்டியல்களென்ன.. சா...கனடா கனடாதான்..

வேலைக்குப் போக முடியேல்லையெண்டா.. சமூக உதவித்தொகையென்ன.. ஓசி வீடென்ன... அசைலம் அடிக்கிறதென்ன.. 3 வருசத்தில சிட்டிசன் என்ன.. ஓசி வைத்தியமென்ன..எங்கைய்யா இதெல்லாம் கிடைக்கும்..?

கனடா கனடாதான்.. மற்றதெல்லாம் ச்ச்சும்மா...புருடா..!

:P

  • தொடங்கியவர்

அதில்ல பகிடி டங்குவர்,

எனக்கு ஒருவர் சொன்னார்.. டொரண்டோவில எங்கையோ இப்ப இடியப்பம் காசுக்கு இல்லாமல் சும்மாவும் குடுக்கிறீனமாம்! :):lol::)

தெருவில போறவன், வாறவன் எல்லாம் இடியப்ப மிசினை வச்சு இடியப்ப யாவாரம் செய்யுறாங்கள்.. :P

dscn1665ll7.jpg

கனடாவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தை

சுவிஸ் சுற்றி காட்ட அழைத்து போனேன்.

பாத்ரூம் போக சில இடங்களில் மட்டும்

பணம் மெசினில் போட வேண்டும்.

அந்த மனிதர்

இதுக்கு ரெண்டு பிராங்கா என்று

போட்ட கலாய்பில என் ரத்த நாடி அடங்கி போச்சு.

எனக்கு தெரியாம

காருக்கு பின்னால

இரண்டு முறை அடிச்சிருக்கார்.

திரும்பி வரும் போது சாதனையாக சொன்னார்.

மாட்டியிருந்தால்

100 முறை போற காசு கட்டியிருக்கலாம் என்றேன்.

விருந்தாளியா வந்ததால

வில்லங்கபடுத்தாம விட்டுட்டன் :P

  • கருத்துக்கள உறவுகள்

எகக்கு சுவிஸ் தான் பிடிச்சு இருக்கு.அளவோடு வேலை செய்தால் ஆனந்தமாக வாழலாம் :D

வணக்கமுங்கோ. நாம் வாழும் நாடுகளில் எமக்கு இருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். (அதற்காகவும்தானே அகதிகளானோம்)

அந்த ரீதியில் ஜேர்மனி சற்று பின் தள்ளப்படுகிறது. காரணம் நாசிகள்தொல்லை

பிரான்ஸ் அமெரிக்கா இங்கிலாந்து போன்றவை திருடர்கள் தொல்லை. (அதிக வேலைப்பழுவும்)

நோர்வே போன்ற நாடுகளில் வீதிகளில் கார்கள் உடைத்து திருட்டுக்கள் நடைபெறுகின்றன.

அவுஸ்திரேலியா பற்றி தெரியவில்லை.

கனடா எம்மவர்களால் சீரழிக்கப்பட்ட நாடு

பாதுகாப்பு வேலையால் போதிய வருமானம் என்பற்றில் சுவிஸ் முன்னிலை

  • தொடங்கியவர்

உங்கள் பயனுள்ள கருத்துக்களிற்கு நன்றி!

எத்தனை கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன என்று தெரியாது. நீங்கள் கள்ள ஓட்டு போட்டு இருந்தால் அது நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒரு தேசம் மீது வைத்துள்ள தேசப்பற்றையே காட்டுகின்றது. எனவே, அது பற்றி இங்கு குறைகூறுவதற்கு ஒன்றும் இல்லை.

இப்போதைய முடிவுகள்:

முதலாமிடம் - ஐரோப்பா கண்டம் 22 ஓட்டுக்கள்

இரண்டாம் இடம் - வட அமெரிக்கா கண்டம் 20 ஓட்டுக்கள்

மூன்றாம் இடம் - அவுஸ்திரேலியா கண்டம் 11 ஓட்டுக்கள்

இதுபற்றி தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வைக்கவும். அஜீவன் அண்ணா எம்மவர்களிற்கு தேவையான (நானும் அறிந்து வைத்து இருக்க வேண்டிய :D ) ஓர் முக்கிய தகவலை தந்தீர்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் குளிர் வாட்டினாலும், பெற்ற பிள்ளைகளே பயமுறுத்தினாலும், சன் டீவி கிடைக்காட்டிலும் கனடா கனடாதான். எந்த நாட்டில இப்ப 100 இடியப்பம் 5 டொலருக்குத் தருகினமாம்? கல்யாண மண்டபங்களென்ன அடுக்கடுக்கான கோயில்களென்ன.. அங்கே நிரம்பி வழியும் உண்டியல்களென்ன.. சா...கனடா கனடாதான்..

வேலைக்குப் போக முடியேல்லையெண்டா.. சமூக உதவித்தொகையென்ன.. ஓசி வீடென்ன... அசைலம் அடிக்கிறதென்ன.. 3 வருசத்தில சிட்டிசன் என்ன.. ஓசி வைத்தியமென்ன..எங்கைய்யா இதெல்லாம் கிடைக்கும்..?

கனடா கனடாதான்.. மற்றதெல்லாம் ச்ச்சும்மா...புருடா..!

:P

உது கொஞ்சம் யோசிக்க வைக்கிற விசயம் பாருங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தை

சுவிஸ் சுற்றி காட்ட அழைத்து போனேன்.

பாத்ரூம் போக சில இடங்களில் மட்டும்

பணம் மெசினில் போட வேண்டும்.

கனடாவில் உள்ள குறைகளில் பிரதானமானது வருமானமும், அவை சார்ந்த வரிகளும். சாதாரண வேலைக்குப் போனால் 10 டொலர் கிடைத்தால் மெத்த. ஆனால் சுய தொழில் செய்பவர்கள் (இடியப்பம் புழிவது உட்பட :P ) நல்ல காசு பார்க்கலாம். வரி மற்றும் பிடித்தங்கள் போக சிலவேளை 30% க்கு மேல் வருமானம் குறையும்.

இதனாலோ என்னவோ சுவிசுக்கு வந்தவருக்கு உதறல் எடுத்திருக்கும்..! :D

கனடாவில் உள்ள குறைகளில் பிரதானமானது வருமானமும், அவை சார்ந்த வரிகளும். சாதாரண வேலைக்குப் போனால் 10 டொலர் கிடைத்தால் மெத்த. ஆனால் சுய தொழில் செய்பவர்கள் (இடியப்பம் புழிவது உட்பட :P ) நல்ல காசு பார்க்கலாம். வரி மற்றும் பிடித்தங்கள் போக சிலவேளை 30% க்கு மேல் வருமானம் குறையும்.

இதனாலோ என்னவோ சுவிசுக்கு வந்தவருக்கு உதறல் எடுத்திருக்கும்..! :lol:

தகவலுக்கு நன்றி

எனக்கு தெரியாத தகவல்..........!

இருக்கலாம் Danguvaar

இங்கும் வரி இல்லாமல் இல்லை.

இங்கும் அங்கும் உள்ள பிரச்சனையும் வெவ்வேறாக இருக்கிறது.

இருந்தாலும்

நாம் போகுமிடங்களில்

அந்த நாட்டு

சட்ட திட்டங்களை தெரிந்து

மதிக்க வேண்டும்.

இல்லாவிடில்

தேவையில்லா பிரச்சனைகளை தேடிக் கொள்ள வேண்டி வரும்?

அவற்றை மீறி அபராதம் கட்டி அவமானப்படக் கூடாது.

  • தொடங்கியவர்

நான் அறிந்தவரையில் புலத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் சுதந்திரமாக நாம் எமது இஸ்டப்படி நம்பர் 01, 02 இற்கு போக முடியாது. இது பொதுவாக முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன். இந்த நடைமுறையால் நாம் அனுபவிக்கவேண்டிய துன்பம் அனுபவித்து இருந்தால்தான் விளங்கும். சொற்களில் விபரிக்க முடியாது!! அவசரத்துக்கு சில ரெஸ்டோரண்ட்களில் சரணாகதி அடைந்தாலும், அங்கும் உணவுப்பொருட்கள் ஏதாவது வாங்கினால்தான் கோயில் உள்ளே போவதற்கு வீசா தருவார்கள்.. :lol::lol::)

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி

எனக்கு தெரியாத தகவல்..........!

இருக்கலாம் Danguvaar

இங்கும் வரி இல்லாமல் இல்லை.

இங்கும் அங்கும் உள்ள பிரச்சனையும் வெவ்வேறாக இருக்கிறது.

இருந்தாலும்

நாம் போகுமிடங்களில்

அந்த நாட்டு

சட்ட திட்டங்களை தெரிந்து

மதிக்க வேண்டும்.

இல்லாவிடில்

தேவையில்லா பிரச்சனைகளை தேடிக் கொள்ள வேண்டி வரும்?

அவற்றை மீறி அபராதம் கட்டி அவமானப்படக் கூடாது.

சரியாகச்சொன்னீர்கள் சகோதரரே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

எனக்கு தெரியாத தகவல்..........!

இருக்கலாம் Danguvaar

அஜீவன், நீங்கள் சொல்வது சரி. அதே நேரம் கனடாவிலும் வெளி இடங்களில் உச்சா போக முடியாது. மாமாக்காரன் ஆப்பு வைத்துவிடுவான். ஆதனால் Tim Horton போன்ற உணவகங்களுக்குச் சென்று இயற்கை உபாதைகளைத் தணிக்க வேண்டும். பெரும்பாலும் அவைகளில் கூட்டம் இருப்பதால் நீங்கள் அங்கே எதையும் வாங்காமல் வந்தாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லோரும் மரியாதைக்கு எதையாவது வாங்குவது வழக்கம்.

நீங்கள் கூட்டிச் சென்றவர் கனடாவில் ஓசியில் உச்சா போய் பழக்கப்பட்டவர் போல. :P

உதை பாக்கத்தான் ஒராள் எங்களைக் கூட்டிக்கொண்டு போனவர். போய்ப் பார்த்தால் 10 பேர் சேர்ந்து நின்று ------------ போன மாதிரி இருந்தது. நல்ல வீழ்ச்சிதான் போங்கள். அதை பாக்கிறதுக்கு காடு மேடு என சுத்தல் வேறை..

சிட்னியில இரவில துரத்தி செல்போன் புடுங்கிற ரவுடிப் பயல்கலைத் தவிர்த்து (ஓடிய ஓட்டத்தை இப்ப வரை மறக்க முடியவில்லை ஓசி நல்ல நாடு தான்.

ஆனா நிறைய சம்பளம் கிடைக்கோணுமெண்டால் ... அதுக்கு சுச்சர்லாந்து தான்

அண்ணா மெல்பனில இருந்தனீங்களோ பிறகா சிட்னிக்கு வந்தனீங்க இப்ப ஏன் ஆசியை விட்டு போயிட்டீங்க ;) ..........அட நீங்கள் எங்கையோ தொலைவிற்கு போய் இருக்கிறீங்க எவ்வளவு நிர்வீழ்ச்சி இருக்கு நீங்க எங்கே போய் பார்தனீங்க சயந்தன் அண்ணா........ :P

செல்போன் துறத்துற சனம் நீங்க இருக்கும் போது கூட போல இப்ப அவ்வளவு இல்லை அப்ப அண்ணா நல்லா ஒடி இருக்கிறார் போல செல்போனில இருந்து 000 அடித்தா வந்திடுவான் தானே அண்ணா அது தெரியாம ஓடினீங்களா :P ...... இன்னுமா மறக்கவில்லை அந்தளவிற்கு ஓடி இருக்கிறீங்க போல அது தான் நாட்டை விட்டே ஓடிவிட்டீங்களோ??ஆசி நல்ல நாடு என்று நீங்களே சொல்லிவிடீங்க மிக்க சந்தோசம்....... :)

சம்பளம் இங்கே குறைவு தாம் மற்றைய நாட்டிலும் பார்க்க ஆனா வாழ்கைதர செலவு இங்கு மிகவும் குறைவு ஏனைய வசதிகளும் குறைவு தானே எல்லாவற்றையும் எதிர்பார்க்க முடியாது தானே!! :huh:

யம்மு அவுத்திரேலியா தான் சிறந்ததுஎன்று ஒரு பட்டியலையே போட்டுட்டிங்க.

கறுப்பி அக்கா இப்ப என்ன சொல்லுறீங்க அவுஸ்ரெலியா நல்ல நாடு தானே........ :)

அவுஸ்திரேலியா கண்டம், ஒன்றும் இல்லாத கண்டம் - மூன்றாம் இடம் - தலா 06 ஓட்டுக்கள்

ஜெனரல் அவுஸ்ரெலியாவிற்கு 6 வாக்குகள் இல்லை 11 வாக்குகள் நான் ஒரு வார்த்தை சொன்னவுடன் 4 வாக்குகளாக இருந்த அவுஸ்ரெலிய வாக்குகள் 11 ஆக உயர்ந்திருப்பதில் இருந்து அவுஸ்ரெலிய மக்கள் என் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை பார்தீங்களா B) .....நிச்சயமாக தேர்தல் கேட்டா பிரதமராக வந்துவிடுவேன் அவுஸ்ரெலியாவிற்கு................ :(

அட பேச்சுக்கு சொன்னா இப்படியா கள்ளவாக்கு போடுறது அவுஸ்ரெலியாவில இருக்கிறதே 4 பேர் அதில 11 வாக்கு கிடைத்தா நம்புவாங்களா என்ன கொடுமை. :blink: .....என்றாலும் வாக்கு போட்ட என்னுயிர் மக்களுக்கு மிக்க நன்றிகள்....... :)

நோர்வேயை மிகவும் சிறந்த நாடு. அதுவும் குறிப்பா பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துபவர் வந்து வாழ வேண்டிய இடம். அலுப்பை பாராமல் அடுக்கடுக்காய் பிள்ளை பெத்தால் ஒருநாளைக்கு 24 மணிநேரம் சம்பளம் வாங்குறவையும் பார்க்க நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி இலவச வீடும் கிடைக்கும். கிடைச்ச வீடு காணாட்டி அடுத்த பிள்ளையை பெத்தப் போட்டு இன்னும் பெரிய வீட்டுக்கு விண்ணபிக்க வேண்டியதுதான்.

இந்த 24 மணிநேர வேலைகாரர் பாவம் வரி கட்டியே அறுந்து போவினம். அதெப்படி 24 மணிநேரம வேலை செய்யுறது என்டு சந்தேகம் வந்தால் உங்கள் நோர்வே நண்பர் உறவினரை தொடர்பு கொள்ளவும்.

நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் நோர்வேயின் கார் திருடு போகும் என்டு. என்ரை கார் களவு போகாதா என்டு நான் வேண்டாத கடவுள் இல்லை. அதுக்கு வாற காப்பூறுதி காசில அதைவிட நல்ல கார் வாங்கலாம். இங்க கள்ளனுக்கு காசு கொடுத்து தங்கட காரை களவெடுக்க சொன்ன எத்தின பேரை எனக்கு தெரியும்.

ஆகவே இப்போது பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவரும் அதோடு எதிர்காலத்தில் அதற்கான திட்டம் இருப்பவரும் நோர்வே வந்து வாழ வரவேற்று விடை பெறுகிறேன்.

நோர்வேயை மிகவும் சிறந்த நாடு. அதுவும் குறிப்பா பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்துபவர் வந்து வாழ வேண்டிய இடம். அலுப்பை பாராமல் அடுக்கடுக்காய் பிள்ளை பெத்தால் ஒருநாளைக்கு 24 மணிநேரம் சம்பளம் வாங்குறவையும் பார்க்க நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிரி இலவச வீடும் கிடைக்கும். கிடைச்ச வீடு காணாட்டி அடுத்த பிள்ளையை பெத்தப் போட்டு இன்னும் பெரிய வீட்டுக்கு விண்ணபிக்க வேண்டியதுதான்.

இந்த 24 மணிநேர வேலைகாரர் பாவம் வரி கட்டியே அறுந்து போவினம். அதெப்படி 24 மணிநேரம வேலை செய்யுறது என்டு சந்தேகம் வந்தால் உங்கள் நோர்வே நண்பர் உறவினரை தொடர்பு கொள்ளவும்.

நண்பர் ஒருவர் எழுதியிருந்தார் நோர்வேயின் கார் திருடு போகும் என்டு. என்ரை கார் களவு போகாதா என்டு நான் வேண்டாத கடவுள் இல்லை. அதுக்கு வாற காப்பூறுதி காசில அதைவிட நல்ல கார் வாங்கலாம். இங்க கள்ளனுக்கு காசு கொடுத்து தங்கட காரை களவெடுக்க சொன்ன எத்தின பேரை எனக்கு தெரியும்.

ஆகவே இப்போது பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவரும் அதோடு எதிர்காலத்தில் அதற்கான திட்டம் இருப்பவரும் நோர்வே வந்து வாழ வரவேற்று விடை பெறுகிறேன்.

வாசகன் முற்றிலும் தவறான கருத்து. பிற ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது நோர்வேயில் பிச்சை பணம் எடுப்பது மிகவும் கஸ்டம். ஏனெனில் எல்லாருக்கும் வேலை வாய்ப்பு தாராளமாக இருக்கின்றது. எப்படியும் வேலைக்கு அனுப்பி விடுவார்கள். நான் நினைக்கிறேன் ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது தமிழர்கள் ஆண் பெண் இரூவரும் வேலை செய்யும் நாடு நோர்வே தான் முதலிடமாக இருக்கும்.

தமிழ் பெண்கள் வீட்டில் இருப்பது குறைந்த நாடாகவும் சொல்லப்படுகிறது.......

நோர்வே தான் அமைதியான வாழ்க்கைக்கு

சிறந்த படிப்பு இங்கிலாந்து.

சுய தொழில் செய்ய இங்கிலாந்து , கனடா.

பிற்காலத்தில் (முதிர்ந்த வயதில்) காலநிலை சுவாத்தியம் , இறைவனடி சேர, மன ஆறுதலாக இளைப்பாற மலர்ப்போகும் எனது தாயகம் தமிழீழம் தான் சிறந்த நாடு.

Edited by நேசன்

  • தொடங்கியவர்

நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து நாடுகளை பற்றியும் யாராவது கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லாக இருக்கும். சுவீடனிலும் நிறைய தமிழர்கள் இருக்கிறீனம் தானே? இத்தாலியிலும் நிறைய தமிழர்கள் இருப்பதாய் ஓர் இணையத் தகவல் கூறுகின்றது. நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.