Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க 'குஷ்' கஞ்சா மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

25 APR, 2023 | 11:12 AM
image

கொழும்பு, பேலியகொடயிலுள்ள  களஞ்சியம் ஒன்றில்  பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று 'குஷ்' என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை  இன்று (25) கைப்பற்றியுள்ளது.

இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில்  மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில்  அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை  அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

340059375_135709319475746_25041523224649

https://www.virakesari.lk/article/153683

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில்  மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர்.

குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்படடிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில்  அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை  அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஊரில் இருந்து  அகதியாக... கனடா போய், அங்கிருந்து ஊருக்கு  கஞ்சா அனுப்புபவன் 
எவ்வளவு கேவலம் கெட்ட    மனநிலையில் உள்ளவன் என்று தெரிகின்றது. 😡

நம்ம ஆட்களே... பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை 
செய்வதை பார்க்க ஆத்திரமாக உள்ளது. 😡 

அங்குள்ள இளம் சமுதாயத்தை...  கெடுக்க என்றே உள்ள ஈனப்பிறவிகள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஊரில் இருந்து  அகதியாக... கனடா போய், அங்கிருந்து ஊருக்கு  கஞ்சா அனுப்புபவன் 
எவ்வளவு கேவலம் கெட்ட    மனநிலையில் உள்ளவன் என்று தெரிகின்றது. 😡

நம்ம ஆட்களே... பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமான வேலைகளை 
செய்வதை பார்க்க ஆத்திரமாக உள்ளது. 😡 

அங்குள்ள இளம் சமுதாயத்தை...  கெடுக்க என்றே உள்ள ஈனப்பிறவிகள். 😡

எங்களின் நிறத்தைக் கண்டாலே அந்த நாடுகளில் அப்படி ஒரு நல்ல எண்ணம் ஏற்கனவே இருக்கிறதாம்.இந்தச் செய்தியையும் அறிந்தான் என்றால் சுப்பர். இனிமேல் ஆத்திரவசரத்துக்குக் கூட ஒரு பொருளை அனுப்புவதென்றால் ? எத்தனை கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் எம்மவரைத் திருத்துவது இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நந்தி said:

எங்களின் நிறத்தைக் கண்டாலே அந்த நாடுகளில் அப்படி ஒரு நல்ல எண்ணம் ஏற்கனவே இருக்கிறதாம்.இந்தச் செய்தியையும் அறிந்தான் என்றால் சுப்பர். இனிமேல் ஆத்திரவசரத்துக்குக் கூட ஒரு பொருளை அனுப்புவதென்றால் ? எத்தனை கடவுள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் எம்மவரைத் திருத்துவது இயலாது.

உழைக்க வசதியும், வாய்ப்பும் எவ்வளவோ இருக்க...
மற்றவனின் வாழ்க்கையை கெடுத்து... காசு சம்பாதித்து  
சொகுசாய் இருக்க வேண்டும் நினைக்கும் ஆட்கள் இவர்கள்.
இவர்களை வாழ்க்கையில் வெளியே வர முடியாத அளவிற்கு மறியலில் போட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

உழைக்க வசதியும், வாய்ப்பும் எவ்வளவோ இருக்க...
மற்றவனின் வாழ்க்கையை கெடுத்து... காசு சம்பாதித்து  
சொகுசாய் இருக்க வேண்டும் நினைக்கும் ஆட்கள் இவர்கள்.
இவர்களை வாழ்க்கையில் வெளியே வர முடியாத அளவிற்கு மறியலில் போட வேண்டும்.

உள்ள மதிப்பையும் கெடுக்கின்றார்கள். இனி உண்மையாய் இருப்பவர்களுக்கும் சிரமங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டிகளை, கேரளா கஞ்சாவை, கடத்தல் அமைச்சர்களை கைது செய்யுங்கள் முதலில், இது தானாகவே ஒழிந்து போகும். ஒரு இலத்திரனியல் கம்பிகளை கொண்டுவர முடியவில்லை, இவ்வளவு தொகை கஞ்சாவை கொண்டுவர முடிகிறதென்றால் விமான நிலையத்தில் உள்ள ஓட்டை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்குமா? இங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு தப்பித்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், சுய தொழிலை விட்டு கஷ்ரப்பட்டு உழைப்பார்களா? முடியுமா அவர்களால்? தேகந்தான் வளையுமா? "கங்கையிலே குளித்தாலும் காகம் அன்னமாகாது." அண்மைய செய்தி கூறும் விடயமும் அதுவே. இங்கிருந்து அங்கு போய் செய்ததென்ன? இங்கு வந்து செய்ததென்ன? இவர்களால் எங்கு போனாலும் மாற்றிச் செயற்பட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

திரும்பவும் அதே பல்லவி தான் பாடுகிறார் சாத்தான்: நம்ம ஆக்களாக இருந்தாலும் சிங்களவன், அல்லது அவனோடு சேர்ந்து நிற்பவன் தான் இது போன்ற கடத்தல்களின் தோற்றுவாயாக இருக்கிறான் என்கிறார்.

உங்களுக்கு அலுக்கவில்லையா இது போன்ற மண்ணுக்குள் தலை புதைத்த நிலை? அல்லது நீங்களே நம்பாமல் இங்கே சும்மா கருத்தாகப் பதிகிறீர்களா?😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மதிப்பு என்பது அவர்களது உழைப்பாலும் நேர்மை மற்றும் நேர ஒழுக்கத்தாலும் ஏற்கனவே நன்றாக இருக்கிறது. அதனை ஒரு சிலரது தனிப்பட்ட செயலை வைத்து வளர்ந்த நாட்டு மக்கள் முடிவுக்கு வருவார்கள் என்று நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2023 at 15:56, தமிழ் சிறி said:

உழைக்க வசதியும், வாய்ப்பும் எவ்வளவோ இருக்க...
மற்றவனின் வாழ்க்கையை கெடுத்து... காசு சம்பாதித்து  
சொகுசாய் இருக்க வேண்டும் நினைக்கும் ஆட்கள் இவர்கள்.
இவர்களை வாழ்க்கையில் வெளியே வர முடியாத அளவிற்கு மறியலில் போட வேண்டும்.

நல்ல கருத்து சிறி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா துறைமுக சுங்கப்பிரிவை பற்றி பலரும் சரியாக அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. அங்கு இலஞ்சமும்.. பதவி மோகமுமே.. தலை விரித்தாடுகிறது.

இது கூட அவைட திட்டமிட்ட செயலோ யார் அறிவார். என்ன இதனை வைச்சு புலம்பெயர் தமிழர்கள் அனுப்பும் பெட்டிகள் எல்லாம் திறக்கப்பட்டு.. பெறுமதியான பொருட்கள் கபளீகரம் செய்யப்படும். இப்பவும் அப்படி நடக்குது.. எனி இன்னும் அதிகரிக்கும்.

அதற்கு தான் இந்தப் படங்காட்டல். சிங்களவர்கள் சொகுசுக்கார் அது இதென்று களவாக இறக்கித் தள்ளுகிறார்கள்.. அனுப்பித் தள்ளுகிறார்கள்.. அதெல்லாம்.. இலஞ்சம் வழி இலகுவாக சோதனைகளை தாண்டியும் விடுகின்றன. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனுப்புபவர்களுக்கு (யாழ்ப்பாணத்தானுக்கு) தெரியாதா சிறிலங்கா சுங்கதுறைமுகத்தை கடந்து, சோதனைகளை தாண்டித்தான் யாழ்ப்பாணத்தை பொருள் சேர்ந்தடையுமென்று?   இதுகூடத்தெரியாமலா அனுப்புகிறார்கள்? அதைவிட கேரளா கஞ்சா இலகுவாக கிடைக்கும்போது கனடாவில் இருந்து அனுப்பி றிஸ்க் எடுக்கிறார்களோ?  நம்பும்படியாகவா இருக்கிறது? யாழ்ப்பாணத்தானை சொன்னால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறார்களோ? கனடாத் தமிழரை சுற்றி அதோ நடக்கிறது. 

ஒருவேளை, என்னை கிண்டல் செய்பவருக்கு இந்த நடைமுறை, உலக சுங்க பரிசோதனை நடைமுறை தெரியாமல் இருக்குமோ என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எனக்கும் இது புரியவில்லை. தென்னமெரிக்காவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற இடங்களுக்குக் கடத்துவது தான் வழமையாக நடப்பது..! இவர்கள் கனடாவிலிருந்து இலங்கைக்கும் கடத்த வேண்டும்..!

தமிழன் அந்தளவுக்கு மொக்கனாகி விட்டானா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புங்கையூரன் said:

எனக்கும் இது புரியவில்லை. தென்னமெரிக்காவிலிருந்து அமெரிக்கா, கனடா போன்ற இடங்களுக்குக் கடத்துவது தான் வழமையாக நடப்பது..! இவர்கள் கனடாவிலிருந்து இலங்கைக்கும் கடத்த வேண்டும்..!

தமிழன் அந்தளவுக்கு மொக்கனாகி விட்டானா?

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா அனுப்பியவர், இலங்கை சுங்கத்துறை சரியாக இயங்குகிறதாவென பரீட்ச்சித்துபாத்திருப்பார் போலுள்ளது. பொருட்களை நுட்பமாய் ஊடுருவி சோதனை செய்யும் கருவிகள் உள்ள சுங்கத்துறையில் இதுகளை கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ச்சியாம். ஒருதடவை பத்திரிகையில் வாசித்த செய்தி; நண்பர் கடமையில் இருக்கும்போது அவர் தடை செய்யப்பட்ட பொருளை அனுப்பியுள்ளார், எதிர்பாராத விதமாக அவர் அன்று கடமைக்கு வரவில்லை, அன்று கடமையில் இருந்த வேறொருவர் பொருளை கைப்பற்றியுள்ளார். ஆனால் அது வேறு, இது வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.