Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் பெண் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் பெண் சாட்சியம்

Published By: Sethu

27 Apr, 2023 | 10:02 AM
image

டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நீதிமன்றில் வாக்குமூலம் சாட்சியம் அளித்தார்.

ஈ. ஜீன் கரோல் எனும் இப்பெண், நியூஹோர்க்கின் மென்ஹட்டன் சமஷ்டி நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாட்சியம் அளித்தார். 

1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில்  வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என தற்போது 79 வயதான கரோல், சாட்சியமளித்தார்.

இச்சம்பவத்தினால் தான் அவமானமாக உணர்ந்ததாகவும் காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ள தன்னால் முடியாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

'ட்ரம்ப் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால் நான் இங்கு வந்துள்ளேன்' என அவர் கூறினார். 

2017 முதல் 2021 ஆம் ஆண்டுவரை அமெரிக்க  ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப், 2020 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றார். 79 வயதான அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 

பெண்களின் உள்ளாடையொன்றை வாங்குவது தொடர்பாக வேடிக்கையாக ஆலோசனை கேட்ட ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையின் சுவரை நோக்கி தன்னை ட்ரம்ப் தனது உடலினால் தள்ளி அழுத்தியதுடன் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் கரோல் கூறினார். 

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது நூல் ஒன்றில், ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முதன்முதலில் கரோல் முன்வைத்திருந்தார். 

அதையடுத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் அவதூறுபடுத்தினார் எனவும் ஈ ஜோன் கரோல் குற்றம் சுமத்தியுள்ளார்.

தன்  மீதான பாலியல் குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக மறுத்து வருகிறார். டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொள்ளும் பல்வேறு வழக்குகளில் ஒன்றாக இது உள்ளது.

https://www.virakesari.lk/article/153862

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

image1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில்  வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என தற்போது 79 வயதான கரோல், சாட்சியமளித்தார்.

ச்சீய்…. ட்றம்பின்ரை ரேஸ்ற்ரே… வித்தியாசமாய் இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ச்சீய்…. ட்றம்பின்ரை ரேஸ்ற்ரே… வித்தியாசமாய் இருக்கு. 😂

1996 இல் இளமையாக இருந்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அமெரிக்காவின் கீழ்த்தரமான 3ம் தர அரசியல் இதுதான். பெண்களை வைச்சு.. அரசியல் செய்வது. இப்படி அமெரிக்காவில் தமக்கு வேண்டாதவர்கள் மீது திருட்டுப் பழி.. பாலியல் பழி.. பெண் பழி... போடுவது சர்வசாதாரணம்.

கிளிங்டன் - மோனிக்கா விடயம் 90களில் சக்கை போடவில்லையா..?! விக்லீக்ஸ் நிறுவனர் மீதும் இப்படித்தான் போட்டது அமெரிக்கா..?!

அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த காவாலி சன நாய் அக நாடு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

1996 இல் இளமையாக இருந்திருப்பார்

1 minute ago, nedukkalapoovan said:

என்ன அமெரிக்காவின் கீழ்த்தரமான 3ம் தர அரசியல் இதுதான். பெண்களை வைச்சு.. அரசியல் செய்வது. இப்படி அமெரிக்காவில் தமக்கு வேண்டாதவர்கள் மீது திருட்டுப் பழி.. பாலியல் பழி.. பெண் பழி... போடுவது சர்வசாதாரணம்.

கிளிங்டன் - மோனிக்கா விடயம் 90களில் சக்கை போடவில்லையா..?! விக்லீக்ஸ் நிறுவனர் மீதும் இப்படித்தான் போட்டது அமெரிக்கா..?!

அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த காவாலி சன நாய் அக நாடு. 

முன் பின் தெரியாத பெண்ணை,
கடையில்  கண்டவுடன், உடனே உடுப்பு மாற்றும் குட்டி அறையில் வைத்து 
பாலியல் வன்முறை செய்வது என்றால்… 
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி… காமம் தலைக்கு ஏறி, அலைந்து திரிந்திருக்க வேணும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

முன் பின் தெரியாத பெண்ணை,
கடையில்  கண்டவுடன், உடனே உடுப்பு மாற்றும் குட்டி அறையில் வைத்து 
பாலியல் வன்முறை செய்வது என்றால்… 
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி… காமம் தலைக்கு ஏறி, அலைந்து திரிந்திருக்க வேணும். 😁

இந்த அம்மணிக்கு ஓசி ஊடக விளம்பரமும்.. காசும் தேவை போல.. அமெரிக்க ஆளும் கட்சிக்கு ரம் எனி தலை தூக்கக் கூடாது. அதுசரி.. இதை எல்லாம் ரம் ஜனாதிபதியா இருக்கேக்க ஏன் இவை சொல்லேல்ல. பைடன் அடுத்த தேர்தலில் நிற்கப் போறன் என்ற அறிவிப்போடு தான்.. இதெல்லாம் வருகுது..! இதுவே அமெரிக்காவின் சாக்கடை சன நாய் அகம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இந்த அம்மணிக்கு ஓசி ஊடக விளம்பரமும்.. காசும் தேவை போல.. அமெரிக்க ஆளும் கட்சிக்கு ரம் எனி தலை தூக்கக் கூடாது. அதுசரி.. இதை எல்லாம் ரம் ஜனாதிபதியா இருக்கேக்க ஏன் இவை சொல்லேல்ல. பைடன் அடுத்த தேர்தலில் நிற்கப் போறன் என்ற அறிவிப்போடு தான்.. இதெல்லாம் வருகுது..! இதுவே அமெரிக்காவின் சாக்கடை சன நாய் அகம். 

பைடன் அடுத்த முறையும் வர வேண்டும், அப்பதான் வைச்சு சொய்வார்கள் சீனா, ரசியா, வடகொரியா, ஈரான்............. 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் கடந்த உறவு. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது அவர் ஜனாதிபதி அல்ல. ரம் ஒரு சாதாரண மனிதன். அப்படியான ஒருவர் ஒரு பொது இடத்தில் பலாத்காரம் செய்தபோது இவர் ஏன் மௌனமாக ஆதரித்தார்?? பணம்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 15:52, nedukkalapoovan said:

என்ன அமெரிக்காவின் கீழ்த்தரமான 3ம் தர அரசியல் இதுதான். பெண்களை வைச்சு.. அரசியல் செய்வது. இப்படி அமெரிக்காவில் தமக்கு வேண்டாதவர்கள் மீது திருட்டுப் பழி.. பாலியல் பழி.. பெண் பழி... போடுவது சர்வசாதாரணம்.

கிளிங்டன் - மோனிக்கா விடயம் 90களில் சக்கை போடவில்லையா..?! விக்லீக்ஸ் நிறுவனர் மீதும் இப்படித்தான் போட்டது அமெரிக்கா..?!

அமெரிக்கா ஒரு கடைந்தெடுத்த காவாலி சன நாய் அக நாடு. 

அட சீ அப்ப டிரம்ப் ஒரு தங்கமான மனிதர் என்று கூறுகின்றீர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ragaa said:

அட சீ அப்ப டிரம்ப் ஒரு தங்கமான மனிதர் என்று கூறுகின்றீர்களா? 

அமெரிக்க அரசியல்வாதிகளே  பாலியல்  சர்ச்சைகளில் அகப்படுபவர்கள் தானே?
டொனால்ட் ரம்ப் பதவியில் இருந்த போது பாலியல் சர்ச்சைகளில் ஈடுபடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க அரசியல்வாதிகளே  பாலியல்  சர்ச்சைகளில் அகப்படுபவர்கள் தானே?
டொனால்ட் ரம்ப் பதவியில் இருந்த போது பாலியல் சர்ச்சைகளில் ஈடுபடவில்லை.

Usa-trump GIFs - Get the best GIF on GIPHY

டொனால்ட் ட்ரம்ப் தான்... தன்னுடைய பதவிக்கும், 
வெள்ளை மாளிகைக்கும் மதிப்பு குடுத்த பெரிய  மனுசன். 
அடுத்த தேர்தலிலும்  ட்ரம்ப் வென்று... 
கப்பல் ஏறிய,  அமெரிக்க மானத்தை காக்க  வேண்டும். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

Usa-trump GIFs - Get the best GIF on GIPHY

டொனால்ட் ட்ரம்ப் தான்... தன்னுடைய பதவிக்கும், 
வெள்ளை மாளிகைக்கும் மதிப்பு குடுத்த பெரிய  மனுசன். 
அடுத்த தேர்தலிலும்  ட்ரம்ப் வென்று... 
கப்பல் ஏறிய,  அமெரிக்க மானத்தை காக்க  வேண்டும். 😎

 தல ரம்ப் ஜனாதிபதியாய் இருக்கேக்கை வடகொரியா குள்ளன் சீனவெடிகூட  வெடிக்க வைக்கேல்லை.:face_with_tears_of_joy: உலகில் அத்தியாவசிய  பொருட்கள் விலையேற்றம் இல்லை. ஒரு லீட்டர் டீசல் 99 சென்ட்  ஐயா! :face_with_rolling_eyes: 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 தல ரம்ப் ஜனாதிபதியாய் இருக்கேக்கை வடகொரியா குள்ளன் சீனவெடிகூட  வெடிக்க வைக்கேல்லை.:face_with_tears_of_joy: உலகில் அத்தியாவசிய  பொருட்கள் விலையேற்றம் இல்லை. ஒரு லீட்டர் டீசல் 99 சென்ட்  ஐயா! :face_with_rolling_eyes: 

Video Shows Chinese Spy Balloon Shot Down in Atlantic Ocean, Near South  Carolina

பைடன் ஜனாதிபதியாக இருக்கும் போது...
சீனாக்காரன் 🎈 பலூன் விட்டு விளையாடுறான்.  🤣
இப்ப அமெரிக்கனின் ரகசிய தகவல்களை திரட்டி... 
அக்கு வேறை,  ஆணி வேறையாக... பிரித்து மேய்ந்து கொண்டிருப்பான்.  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

பைடன் ஜனாதிபதியாக இருக்கும் போது...
சீனாக்காரன் பலூன் விட்டு விளையாடுறான்.
இப்ப எத்தனை ரகசிய தகவல்களை திரட்டி... 
அக்கு வேறை ஆணி வெற்றியாக பிரித்து மேய்ந்து கொண்டிருப்பான்.  😂

மூஞ்சூறு தான் போக காணேல்லையாம். அதுக்குள்ள விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போன கதையாய் உக்ரேனுக்க நிண்டு முழிய பிரட்டுது.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மூஞ்சூறு தான் போக காணேல்லையாம். அதுக்குள்ள விளக்குமாத்தையும் காவிக்கொண்டு போன கதையாய் உக்ரேனுக்க நிண்டு முழிய பிரட்டுது.:rolling_on_the_floor_laughing:

Vladimir Putin Laugh GIF - Vladimir Putin Laugh Lol ...

இவையின்ரை சேட்டை... ரஷ்ய அதிபர் புட்டினிடம் எடுபடாது.
விரைவில்... பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி வருவினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 18:36, குமாரசாமி said:

அமெரிக்க அரசியல்வாதிகளே  பாலியல்  சர்ச்சைகளில் அகப்படுபவர்கள் தானே?
டொனால்ட் ரம்ப் பதவியில் இருந்த போது பாலியல் சர்ச்சைகளில் ஈடுபடவில்லை.

அதற்கு காரணம் டிரம்பின் வயசு, ஆசைப்பட்டாலும் ஒன்றும் நடத்தமுடியாது. நிமிர்ந்து நிக்காமல் வளைஞ்சு ( I mean முதுகு) நிக்கிற வயசு. இல்லாவிட்டால் ஆள் பயங்கர கில்லாடி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

அதற்கு காரணம் டிரம்பின் வயசு, ஆசைப்பட்டாலும் ஒன்றும் நடத்தமுடியாது. நிமிர்ந்து நிக்காமல் வளைஞ்சு ( I mean முதுகு) நிக்கிற வயசு. இல்லாவிட்டால் ஆள் பயங்கர கில்லாடி.

ட்ரம்பின்... முதுகு வளைந்திருக்குது நீங்கள் கண்டீர்களா. 😂
அவர் நிற்கும் படங்களில் எல்லாம், நேராகத்தானே நிற்கிறார். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ragaa said:

அதற்கு காரணம் டிரம்பின் வயசு, ஆசைப்பட்டாலும் ஒன்றும் நடத்தமுடியாது. நிமிர்ந்து நிக்காமல் வளைஞ்சு ( I mean முதுகு) நிக்கிற வயசு. இல்லாவிட்டால் ஆள் பயங்கர கில்லாடி.

முதுகு வளைஞ்சு போச்சுதா? கண்ணாடிய போட்டு பாருங்க :rolling_on_the_floor_laughing:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.