Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்தகரணாகொடவிற்கு எதிரான அமெரிக்க தடை - ரஸ்யா அதிருப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்க; சவேந்திர சில்வா  தப்பிவிட்டார். 

அடுத்தது;  கமல் குணரட்ண ⁉️

அதற்கடுத்தது;  ஒரு முஸிலிம் அமைச்சர்/தளபதி/எம் பி 

😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அவர்களுக்கு இலங்கை அரசு தமிழரா சிங்களவரா என்பது பிரச்சனை  இல்லை

சகிக்க முடியவில்லை. ஆக, ரஸ்ஸியத் தூதுவர் இப்போது கூறியிருப்பது வசந்த கரன்னகொடவைப் பற்றி அல்ல என்கிறீர்கள்? அப்போ, அது என்னவாக இருக்கும்? 

இலங்கைக்குப் பாதகமாக ஒரு விடயம் நடக்கிறதென்பதால்த்தான் ரஸ்ஸியத் தூதுவர் அப்படிக் கூறினார் என்று நான் நினைக்கிறேன். தனது நேச நாடான இலங்கையின் முன்னாள் கடற்படை அட்மிரல் ஒருவருக்கெதிராக தடையொன்று விதிக்கப்பட்டிருப்பதாலேயே ரஸ்ஸியா இப்படிக் கூறவேண்டி வந்தது எனது எனது அபிப்பிராயம். ஆனால், நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்பதற்கும், வசந்த கரன்னகொடவின் தடைக்கும் தொடர்பே இல்லையென்கிறீர்கள்.

நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்.

மற்றும்படி அந்த இந்தியா பிரிவது, தமிழ்நாடு பிரிவது, ரஸ்ஸிய ஆதரவு, சீன ஆதரவு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கத் தேவையில்லை. 

2 hours ago, vasee said:

இது போன்ற ஒரு ஒரு நிகழ்வினை

போர்க்குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதால் தமிழருக்குத் தீமைதான் உருவாகும் என்று கருதுகிறீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அந்த இந்தியா பிரிவது, தமிழ்நாடு பிரிவது, ரஸ்ஸிய ஆதரவு, சீன ஆதரவு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கத் தேவையில்லை. 

முக்கிய பொயின்ரை கவனித்தீர்களோ  இந்தியா உடைந்து தமிழ்நாடு தனிநாடாகும்போது  தமிழர்களின் தமிழ்நாட்டிற்கு ஆதாரவாக ரஷ்யா நிற்கும் ஆகவே ஈழதமிழர்கள் ரஷ்யாவிற்கு பின்னால் அணிதிரளவேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

அமெரிக்காவின் இந்த தடைதமிழர்களிற்கு எந்த நன்மையினை செய்யபோகிறது?

அமெரிக்கா இலங்கை படைகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்கி வருகிறது, இந்த நிலையில் சில இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு தடை வழங்குவதன் மூலம் இலங்கை இராணுவததிற்கு வெள்ளை அடிக்கும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபடுகிறது.

முன்னர் ஐ எம் எப் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என கோரும் என தவறான கருத்தினை வெளியிட்டு அது சமூக வலைத்தளத்திலிருந்து சிந்தி சாதாரண மக்களிலிருந்து தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான கால அவகாசத்திற்காக (மக்களை ஏமாற்ற) அதனை பயன்படுத்தி பின்னர் எல்லாம் ஒன்றும் அற்ற ஏமாற்றமாக முடிவடைந்துவிட்டது.

இது போன்ற ஒரு ஒரு நிகழ்வினை தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பதால் இதற்கு யாழ்கள உறவுகள் இரு அணியாக பிரிந்து இந்த அமெரிக்காவின் வெள்ளை அடிப்பு முயற்சியினை பிரபலமாக்காமல் இருப்பது நல்லது.

சரி

அப்படியானால் தமிழர்களுக்கான தீர்வு எங்கே? எங்கிருந்து?? யாரால்???

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 08:57, Kapithan said:

1) அதை யாம் வழிமொழியும்

2) ரஸ்ய தூதுவர் வசந்த கரனகொடவிற்குத் தடைவிதிததற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரா அல்லது  இன்னொரு நாட்டின்(இலங்கையின்)  உள் விவகாரங்களில் தலையீடு செய்வதை ஒட்டி கருத்துக் கூறினாரா ? இராசதந்திரிகள் பொதுவாக தனிநபரைக் குறிப்பிட்டு கருத்துக் கூறுவது இல்லை என்பது என் பொதுவான கணிப்பீடு. 

அப்படி இருந்தாலும் ரஷ்யா மற்றைய நாட்டு உள்விவகாரங்கள் பற்றியோ , தனி நபர் பற்றியோ கருத்து கூறும் தகுதியை இழந்து விட்ட்து.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Cruso said:

அப்படி இருந்தாலும் ரஷ்யா மற்றைய நாட்டு உள்விவகாரங்கள் பற்றியோ , தனி நபர் பற்றியோ கருத்து கூறும் தகுதியை இழந்து விட்ட்து.

ரஸ்யா, கரன்னகொட தொடர்பாக கருத்துக் கூறியதாகத் தெரியவில்லை .

ஒருநாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது எனக்கூறியாத மட்டுமே  செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

ரஸ்யா, கரன்னகொட தொடர்பாக கருத்துக் கூறியதாகத் தெரியவில்லை .

ஒருநாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முடியாது எனக்கூறியாத மட்டுமே  செய்தி. 

இன்னொரு நாடடை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு அப்படி பேசும் தகுதியை ருசியா இழந்துவிட்ட்து. எனவே மற்றய நாட்டின் உள்விவகாரம் பற்றி பேசுதட்கு தகுதியற்ற நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

இன்னொரு நாடடை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு அப்படி பேசும் தகுதியை ருசியா இழந்துவிட்ட்து. எனவே மற்றய நாட்டின் உள்விவகாரம் பற்றி பேசுதட்கு தகுதியற்ற நாடு.

இதை சொன்னால் நீங்கள் மேற்கின் அடிமையாக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

"தட்டையாப் போட்டா தோசை, உருட்டிப் போட்டா இட்லி!" தத்துவம் இந்த திரியில் வந்த ஒரு சிலரது கருத்துக்கு எப்படி பொருந்துது.😂♥️

வேற லெவல் ... சான்ஸே இல்ல !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Cruso said:

இன்னொரு நாடடை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு அப்படி பேசும் தகுதியை ருசியா இழந்துவிட்ட்து. எனவே மற்றய நாட்டின் உள்விவகாரம் பற்றி பேசுதட்கு தகுதியற்ற நாடு.

ஆக்கிரமிப்பு,மனித உரிமை மீறல் எல்லாம் தவறுதான். அதை   உலகையே ஆக்கிரமித்து ஆட்டைய போட்டவர்கள் தான் ரஷ்யாவை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவது  சகிக்க முடியல்ல...

யோக்கியமானவர்கள் சொல்லணும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 14:44, ரஞ்சித் said:

போர்க்குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதால் தமிழருக்குத் தீமைதான் உருவாகும் என்று கருதுகிறீர்களா? 

On 29/4/2023 at 18:40, விசுகு said:

சரி

அப்படியானால் தமிழர்களுக்கான தீர்வு எங்கே? எங்கிருந்து?? யாரால்???

இந்த செய்தியில் உள்ள நிகழ்தகவினை அடிப்படியிலானது எனது கருத்து.

இந்த செய்தியில் முற்று முழுதாக நன்மை இல்லை என கூற முடியாது என்பதனை ஒத்து கொள்கிறேன்(எமது தரப்பில் இதுவரை சிறிய சாதகமான விடயமும் நிகழவில்லை, கடலில் தத்தளிப்பவன் கையில் அகப்பட்ட துரும்பு போல).

இந்த செய்தியினை தலைப்பினை பார்த்தவுடன் மனதில் உடனடியாக தோன்றும் எண்ணம், சரி வடக்கில் சிங்கள குடியேற்றம் தொடங்க போகிறார்கள் என தோன்றியது பின்னர் அந்த செய்தியினை வாசித்த போது அதனை அறிவித்தவர் தமிழர் என அறிந்தவுடன் வடக்கில் உள்ள ஏழை மக்களுக்கு கூறுகிறார் என இயல்பாக நினைக்கதொன்றும்.

எமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம், ஆனால் தாயகத்தில் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் தீர்வு என ஏமாற்றுவதற்கு நாங்களும் உடந்தையாக கூடாது என்பதற்காக கூறப்பட்டது.

இந்த திரியினை வளர்க்க விரும்பவில்லை, அதே நேரம் பதில் கருத்தெழுதாமல் கடந்து செல்வது முறையற்றது என்பதலாலேயே பதில் இட்டேன், அதனால் மேற்கொண்டு குறித்த நாட்டின் இந்த விடய அரசியல் பற்றி கருத்திடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, vasee said:

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய அவசியமான விடயங்களை இவ்வாறு கடந்து செல்வதும் நன்றன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 14:44, ரஞ்சித் said:

சகிக்க முடியவில்லை. ஆக, ரஸ்ஸியத் தூதுவர் இப்போது கூறியிருப்பது வசந்த கரன்னகொடவைப் பற்றி அல்ல என்கிறீர்கள்? அப்போ, அது என்னவாக இருக்கும்? 

இலங்கைக்குப் பாதகமாக ஒரு விடயம் நடக்கிறதென்பதால்த்தான் ரஸ்ஸியத் தூதுவர் அப்படிக் கூறினார் என்று நான் நினைக்கிறேன். தனது நேச நாடான இலங்கையின் முன்னாள் கடற்படை அட்மிரல் ஒருவருக்கெதிராக தடையொன்று விதிக்கப்பட்டிருப்பதாலேயே ரஸ்ஸியா இப்படிக் கூறவேண்டி வந்தது எனது எனது அபிப்பிராயம்.

ரஸ்ஸியத் தூதுவர் பொதுவாக அல்லாமல் இந்த தடை தொடர்பாகவே நேரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் என ஊடங்கள் தெரிவிக்கிறது 

Meanwhile, Russian Ambassador to Sri Lanka Levan Dzhagaryan speaking at a press conference Thursday afternoon hit out at the Biden administration over its decision to bar Karannagoda and his wife from entry to the US over alleged gross violations of human rights.

Dzhagaryan said the decision was “totally unacceptable”, noting that the US nor any other Western power has the right to interfere in the internal affairs of a sovereign state.

https://economynext.com/sri-lanka-rejects-us-decision-to-sanction-ex-navy-chief-russia-cries-foul-119291/

மேலும் மூலங்கள் 

https://www.newsfirst.lk/2023/04/28/nobody-has-the-right-to-lecture-you-russian-ambassador-slams-us-for-blacklisting-karannagoda-and-interference/

https://www.adaderana.lk/news/90123/russian-envoy-in-sri-lanka-hits-out-at-us-for-banning-karannagoda

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஆக்கிரமிப்பு,மனித உரிமை மீறல் எல்லாம் தவறுதான். அதை   உலகையே ஆக்கிரமித்து ஆட்டைய போட்டவர்கள் தான் ரஷ்யாவை நோக்கி சுட்டுவிரல் நீட்டுவது  சகிக்க முடியல்ல...

யோக்கியமானவர்கள் சொல்லணும்.

ஆர் யோக்கியமானவர்கள் என் நீங்கள் கருதுகிறீர்கள்? பாபராசரா? தலாய்லாமாவா? சங்கராச்சாரியரா? ஐக்கியநாடுகள் சபையா? இவர்கள் தலைமை தாங்கும் அமைப்புகளும் தீர ஆராய்ந்தால் தூய்மை தன்மை பற்றி உண்மைகள் வெளிவரும்.

இதே நிலப்பாட்டை எமது விடயத்திலும் பலர் எடுப்பதுண்டு . ஆனால் நாம் யோக்கியமானவர்கள் என்று தேடி அலைந்து வாழ்நாளை செலவழித்தால் நாமே எமது தெரிவால் முற்றாக அழிந்து போய்விடுவோம். ஆக நாங்களே எம்மை அழித்துவிடுவோம். ஆங்கிலத்தில் self sabotage என்று சொல்வார்கள்.

அடுத்தது யோக்கியமானவர்கள் என்று நாங்கள் கருத்துபவர்களுக்கு அதை பாவித்து எண்களின் விடிவுக்கு உதவ சக்தி (soft or hard power) உள்ளவர்களாக இருக்க  சந்தர்ப்பம் மிக குறைவு. 

உலகில் உள்ள எந்த நாடோ, சந்ததிகளோ தூய்மையான வரலாற்றை கொண்டவை அல்ல. நாங்கள் உட்பட. தர்மமும் அதர்மமும் எமது மனித வரலாற்றில் ஒன்றாக பயணிப்பவை. அதனால் தான் ஒரு காலத்தில் எதிரிகள் இன்னொரு காலத்தில் உற்ற நண்பர்களாகி தங்கள் பொது எதிரியை அழிக்க ஒருங்கிணைவார்கள்.
அது ஒருவகை சந்தர்ப்பவாதம் (self interest). எனவே  இந்த வரலாற்று பயணத்தில் நாங்களும் சந்தர்ப்பங்களை பாவித்து எம்மை தக்கவைக்க பழகவேண்டும். வளர்க்க பழகவேண்டும். 

இந்த களத்தில் பலர் சிங்கபூரிடம் இருந்து சிங்களவர் பாடம் கற்க வேண்டும் என்று எழுதுவார்கள். அதே சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யு எவ்வாறு பல எதிரிகளை (உள்ளூர் மற்றும் வெளிச்சக்திகள் சீன உட்பட) சமாளிக்க வெவேறு சக்திகளுடன் இணைந்து காரியத்தை முட்கொண்டு போனார் என்று எமது இனம் முதல் பாடம் கற்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை செய்த அதே கொடூரம், சொல்லும் அதே காரணங்கள் ரஷ்யாவின் பக்கம் இருக்கிறது, அல்லது சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கும் நாடுகளுக்கு உண்டு. அவர்கள் அழுவது; இலங்கைக்கு இன்று  போடும்  தடைகள், நெருக்குவாரங்கள் நாளைக்கு தமக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவும், அதே வேளையில், இலங்கை தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, saravanar said:

ஆர் யோக்கியமானவர்கள் என் நீங்கள் கருதுகிறீர்கள்? பாபராசரா? தலாய்லாமாவா? சங்கராச்சாரியரா? ஐக்கியநாடுகள் சபையா? இவர்கள் தலைமை தாங்கும் அமைப்புகளும் தீர ஆராய்ந்தால் தூய்மை தன்மை பற்றி உண்மைகள் வெளிவரும்.

இதே நிலப்பாட்டை எமது விடயத்திலும் பலர் எடுப்பதுண்டு . ஆனால் நாம் யோக்கியமானவர்கள் என்று தேடி அலைந்து வாழ்நாளை செலவழித்தால் நாமே எமது தெரிவால் முற்றாக அழிந்து போய்விடுவோம். ஆக நாங்களே எம்மை அழித்துவிடுவோம். ஆங்கிலத்தில் self sabotage என்று சொல்வார்கள்.

அடுத்தது யோக்கியமானவர்கள் என்று நாங்கள் கருத்துபவர்களுக்கு அதை பாவித்து எண்களின் விடிவுக்கு உதவ சக்தி (soft or hard power) உள்ளவர்களாக இருக்க  சந்தர்ப்பம் மிக குறைவு. 

உலகில் உள்ள எந்த நாடோ, சந்ததிகளோ தூய்மையான வரலாற்றை கொண்டவை அல்ல. நாங்கள் உட்பட. தர்மமும் அதர்மமும் எமது மனித வரலாற்றில் ஒன்றாக பயணிப்பவை. அதனால் தான் ஒரு காலத்தில் எதிரிகள் இன்னொரு காலத்தில் உற்ற நண்பர்களாகி தங்கள் பொது எதிரியை அழிக்க ஒருங்கிணைவார்கள்.
அது ஒருவகை சந்தர்ப்பவாதம் (self interest). எனவே  இந்த வரலாற்று பயணத்தில் நாங்களும் சந்தர்ப்பங்களை பாவித்து எம்மை தக்கவைக்க பழகவேண்டும். வளர்க்க பழகவேண்டும். 

இந்த களத்தில் பலர் சிங்கபூரிடம் இருந்து சிங்களவர் பாடம் கற்க வேண்டும் என்று எழுதுவார்கள். அதே சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யு எவ்வாறு பல எதிரிகளை (உள்ளூர் மற்றும் வெளிச்சக்திகள் சீன உட்பட) சமாளிக்க வெவேறு சக்திகளுடன் இணைந்து காரியத்தை முட்கொண்டு போனார் என்று எமது இனம் முதல் பாடம் கற்கவேண்டும். 

சொல்ல வார்த்தைகள் இல்லை

நன்றி ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, saravanar said:

 இந்த வரலாற்று பயணத்தில் நாங்களும் சந்தர்ப்பங்களை பாவித்து எம்மை தக்கவைக்க பழகவேண்டும். வளர்க்க பழகவேண்டும். 

எப்படி, யாருடன், விளக்க முடியுமா?  இப்படிதான் பலர் உபதேசித்துவிட்டு, எப்படியென்று கேட்டால் ஓடிவிடுகின்றார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, saravanar said:

உலகில் உள்ள எந்த நாடோ, சந்ததிகளோ தூய்மையான வரலாற்றை கொண்டவை அல்ல. நாங்கள் உட்பட. தர்மமும் அதர்மமும் எமது மனித வரலாற்றில் ஒன்றாக பயணிப்பவை. அதனால் தான் ஒரு காலத்தில் எதிரிகள் இன்னொரு காலத்தில் உற்ற நண்பர்களாகி தங்கள் பொது எதிரியை அழிக்க ஒருங்கிணைவார்கள்.

தற்போது யார் ஈழத்தமிழர்களின் பொது எதிரி? யார் உற்ற நண்பர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, saravanar said:

இந்த வரலாற்று பயணத்தில் நாங்களும் சந்தர்ப்பங்களை பாவித்து எம்மை தக்கவைக்க பழகவேண்டும். வளர்க்க பழகவேண்டும். 

அண்ணே அவர்கள் எல்லாம் புத்திசாலிதனத்துடன் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாவித்து தங்களுக்கான தனிபட்ட வாழ்கையை மேற்குலகநாடுகளுடன் அதி சிறந்த முறையில் கட்டிஅமத்து சிறப்புடன் வாழ்ந்துவருகிறார்கள். self sabotage எல்லாம் இல்லை.self care ல் நம்பர் 1.  ரஷ்யா சீனா பக்கம் தலையணையில் தலையை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணே அவர்கள் எல்லாம் புத்திசாலிதனத்துடன் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாவித்து தங்களுக்கான தனிபட்ட வாழ்கையை மேற்குலகநாடுகளுடன் அதி சிறந்த முறையில் கட்டிஅமத்து சிறப்புடன் வாழ்ந்துவருகிறார்கள். self sabotage எல்லாம் இல்லை.self care ல் நம்பர் 1.  ரஷ்யா சீனா பக்கம் தலையணையில் தலையை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

தலைவரும் மிகச்சிறப்பாகவே மேற்குலகை கையாண்டார், அவரைவிட இனியொருவர் வரப்போவதில்லை

இறக்கும் வரை தாளம் போட வேண்டியதுதான்

49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அண்ணே அவர்கள் எல்லாம் புத்திசாலிதனத்துடன் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாவித்து தங்களுக்கான தனிபட்ட வாழ்கையை மேற்குலகநாடுகளுடன் அதி சிறந்த முறையில் கட்டிஅமத்து சிறப்புடன் வாழ்ந்துவருகிறார்கள். self sabotage எல்லாம் இல்லை.self care ல் நம்பர் 1.  ரஷ்யா சீனா பக்கம் தலையணையில் தலையை வைத்தும் படுக்க மாட்டார்கள்.

கிந்தியா என்ன மேற்குலகு நினைத்தால் கூட 13 ஜ அமல்படுத்த முடியாது இனி இலங்கையில், அமல் படுத்த முயற்ச்சிப்பீர்களா " புத்திசாலிதனத்துடன் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பாவித்து தங்களுக்கான தனிபட்ட வாழ்கையை மேற்குலகநாடுகளுடன் அதி சிறந்த முறையில் கட்டிஅமத்து சிறப்புடன் வாழ்ந்துவருகிறார்கள்"???? 

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களால் போர் முடிந்து எத்தனை வருடங்களாகிவிட்டது?

, இன்னுமென்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?

 சிங்கள குடியேற்றங்கள்தான் அதிகரித்துக்கொண்டு போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகளும் கருத்துக்களும் உடையார், குமாரசாமி 

ராஜதந்திர அரங்கில் நிரந்தர எதிரிகளும் உற்ற நண்பர்களும் இல்லை. அதனால் தான் உற்ற நண்பர்கள் என்று வெளியில் சொல்லும் நாடுகள் தங்கள் நண்பர்களின் செயல்பாடுகளை உளவு பார்க்கிறார்கள். அதுபோலவே ஒரு நாட்டை பரம எதிரியாக பார்த்தவர்கள் இன்றைய சூழலுக்கும் தன நலம் சார்ந்தும் கைகோகிறார்கள். அமெரிக்காவை பரம எதிரியாக கருதிய வியட்நாம் தான் உரிமை கோரும் கடல் பகுதியில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்ததும் அமெரிக்க இந்த பகுதியில் வைத்திருக்கும் கரிசனைக்கும் தனது நலனுக்கும் இடையில் ஒற்றுமை கண்டு கைகோகிறார்கள். அருவரை ஒருவர் பூர்விக எதிரிகளாக கண்ட இஸ்ரலும்  சவூதியும் , தனது பொருளாதார, பூகோள நலன் கொண்டு உறவுகளை சுமூகமாக்கி கொண்டது. இன்று அதே சுனி (sunni) இஸ்லாமிய சவூதி தனது நலன் கருதி ஷியைட் (shite) இஸ்லாமிய ஈரானுடன் சமரசம் செய்ய முயல்கிறது. ஈரானும் தனக்கு எதிரான உள்ளக (pro-democracy protests) வெளியாக அழுத்தங்களை (against Nuclear Weapond Program) எதிர்கொள்ள சமரசத்துக்கு போகிறது. சில காலங்களுக்கு முன்னர் இவை நடக்கக்கூடும் என்று நாங்கள் எதிர்வு கூறியிருக்கமுடியாது. ஆனால் இவை எண்கள் கண் முன்னால் அரங்கேறுகின்ற நிகழ்வுகள். 

தமிழர் நலன் சார்ந்து சிந்தித்தால் நாங்கள் உலகநாடுகளை கீழ்கண்டவாறு வகை படுத்தலாம்.

1. இலங்கையின் பூகோள அமைவிடத்தினால் தங்கள் நலன் பாதிக்கப்படக்கூடும் என்று கருதுகிற சக்திகள் (powers). இதில் அமெரிக்கா, சீனா, இந்தியாவும் இரண்டாந்தர சக்திகள் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் அடங்கும்.

2. வரலாற்று ரீதியான பிணைப்புகளை  கொண்ட சக்திகள். இதில் இலங்கையுடன் வரலாற்று ரீதியான பிணைப்புகளை கொண்ட ஐக்கிய இராச்சியம், இந்தியா அடங்கும். தமிழருடன் சமூக கலாச்சார மற்றும் அரசியலில் பிணைப்புக்கு கொண்ட நாடுகள் இந்திய, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மொரிசியஸ் என்பன அடங்கும் 

3. மேட்கூறிய சக்திகளோடு தம் நலன் (பூகோளம், பொருளாதாரம், கடல் போக்குவரத்த்து) சார்ந்து இயங்கும் சக்திகள். இதில் ஒவொரு கண்டத்திலும் நாடுகள் உண்டு. உதாரணமாக கனடா, மற்றும் அவுஸ்திரேலியா, ஜப்பான், போன்றவை 

4. மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள்  (rights and values)மற்றும் சிறுபான்மை நலன் சார்ந்து இயங்கும் சக்திகள். கூடுதலாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் 

இந்த பட்டியல் உள்ள நாடுகளில் பலவற்றை 2004 - 2008 வரை யார் கிளிநொச்சி சென்று சந்திப்புக்களை நடத்திய இராஜதந்திரிகளை கொண்டு அடையாளம் காணலாம் (இந்தியாவை தவிர). அதுபோல ஐக்கியநாடுகலள்  மனித உரிமை பேரவையில் எங்களுக்கு சார்பாக முன்மொழிந்து பின்னர் வாகு போட்ட நாடுகளும் மேல உள்ள பட்டியலில் உள்ளன.

சரி பட்டியல் போட்டாச்ச்சு  இனி என்ன?. 

1. இந்த பட்டியலில் உள்ள நாடுகளின் நலனுடன் எங்களுக்கு உள்ள பொது நலனை (common interests/common values) அடையாளம் கண்டு இராஜதந்திர முனைப்புக்களி மேட்கொள்ளவேண்டும். இதனால் சிலர் செய்துகொண்டு வருகின்றனர். ஆனால் இந்த வேலை ஒரு நீண்டகால வேலை. 

2. இராஜதந்திரம் என்பது இராஜதந்திரிகளை மட்டும் அவ்வப்போது சந்திப்பதட்கும் மேலாக அவர்களை மறைமுகமாக வழிநடத்தும் சிந்தைகூடங்கள் (think tanks), கொள்கை வகுப்பாளர்கள் (policy makers) என அவர்களை சுற்றியிக்கும் வலையமைப்புடன் நாம் தொடர்பாடுகளை செய்யவேண்டும். இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும். இது சிறியளவில் நடக்கின்றது. ஆனால் இன்னும் போதாது 

3. மேல உள்ள பட்டியலில் உள்ள 3ம் 4ம் தரப்பு சக்திகளுடன் தொடர்பாடல்களை அதிகரிப்பது மிக அவசியம். ஏனெனில் வாக்குகள் என்று வரும் பொழுதும், விழுமியங்கள் சார்ந்த கொள்கை வகுப்பு என்று வரும் பொழுது நாடுகள் என்ற ரீதியில் அவர்கள் மற்றைய சக்திகளை ஒருங்கிணைக்க கூடியவர்கள். மனித உரிமை பேரவை விவகாரங்களில் இவாறான ஒருங்கிணைப்பை சில நாடுகள் செய்திருந்தன. 

இதை யார் செய்வது? பூனைக்கு மணிகட்டுவது யார்?

இலங்கையின் அரசியல் அமைப்புக்கள் இயங்கும் தமிழ் தரப்பு இதை முழுமையாக செய்யமுடியாது. புலம்  பெயர் தமிழர் தான் இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிறிய அளவில் ஒவொரு நாட்டிலும் இயங்கலாம். திமோர் நாட்டின் ஜோஸ் ராமோஸ் ஹோர்டடா (Jose Ramos Horta) பல வ ருடங்களாக ஒரு தனிமனிதனாக பின்னர் ஒரு சிறு குழுவாக இயங்கினார். அது போலவே புலம் பெயர்ந்து இருந்த மியான்மார் மாணவர் சிலர், மௌங் சானி, (Dr. Maung Zarni) போனற்றோர் இயங்கினர். இன்றைய காலகட்டத்தில் தனி அமைப்புக்கள் தொடர்படைகளி விரிவாக்க (Government Relations) மேலும் உதவும். இதை தான் பல நிறுவனங்கள்  கூட தமது நலன் சார்ந்து அரசை நிர்பந்திக்க செய்கின்றன. உண்மையில் தமிழருக்குள் ஒவ்வொருநாட்டிலும் ஒரு ராஜதந்திரியயை  வளர்க்க நாம் ஒரு முதுமாணி புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தவேண்டும். அடுத்த 10 வருஷம் கடந்து போன 10 வருடத்தை விட எமக்கு நல்லதாக அமைய வேண்டுமானால் நாங்கள் வேறு வழியை பார்க்கவேண்டியது அவசியம் என்று எனக்கு படுகின்றது. 

எவரையும் புண்படுத்தவோ, அல்லது செயல்பாட்டாளர்கள் செய்தது போதாது என்று குற்றம் சொல்லவோ  நான்  எழுதவில்லை. மாறாக செயல்திறன் மேலோங்கவேண்டும் என்று மட்டும் விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, saravanar said:

இந்த பட்டியல் உள்ள நாடுகளில் பலவற்றை 2004 - 2008 வரை யார் கிளிநொச்சி சென்று சந்திப்புக்களை நடத்திய இராஜதந்திரிகளை கொண்டு அடையாளம் காணலாம் (இந்தியாவை தவிர). அதுபோல ஐக்கியநாடுகலள்  மனித உரிமை பேரவையில் எங்களுக்கு சார்பாக முன்மொழிந்து பின்னர் வாகு போட்ட நாடுகளும் மேல உள்ள பட்டியலில் உள்ளன.

இந்தியாவை மீறி சர்வதேச நாடுகள் ஒன்றாவது ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்குமா?

புலிகள் காலத்து பேச்சுவார்தைகளின் போது எரிக் சொல்கைம் ஒவ்வொரு தடவையும் இந்தியா சென்று தன் முகத்தை காட்டிவிட்டு வருவதை வழமையாக வைத்திருந்தது ஞாபகத்திற்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, saravanar said:

இது தான் இன்றைய  தேவை
அற்புதமான
யதார்த்தமான
அடுத்த  கட்டத்துக்கு நகர உதவும் கருத்து
நன்றி  ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.