Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதகு - முதற்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு” திரைப்படத்திற்கு கம்போடியா அரசு தடை

hqdefault  “மேதகு” திரைப்படத்திற்கு கம்போடியா அரசு தடை
 
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும்   “மேதகு” திரைப்படத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சி நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கம்போடிய அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

தலைவர் பிரபாகரன்  குறித்த   மேதகு திரைப்படம்  ஓடிடி தளத்தில் வெளியாகி பலதரப்புகளின் வரவேற்பை பெற்றது.

மேலும் மேதகு திரைப்படம், கம்போடியாவின் சமூக ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் BS Value app எனப்படும் செயலிகளில் அதிகமாக பகிரப்பட்டு வரவேற்பைப்பெற்றிருந்த நிலையில் இந்தபடத்தை கம்போடிய தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப தயாராகியிருந்தன.

இந்தநிலையில்  சிறிலங்கா அரசாங்கத்தின்  அழுத்தம் காரணமாக    கம்போடிய தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு   குறித்த படத்தை ஒளிபரப்பு செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது.

https://www.ilakku.org/cambodia-bans-methagu-film/

  • 10 months later...
  • Replies 147
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

"மேதகு" முழு திரைப்படமும் இப்பொழுது யூடுயூபில் காணக் கிடைக்கிறது. 😌

 

 

FHD (1080p) துல்லிய தரத்தில் காணொளி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

 

"மேதகு" முழு திரைப்படமும் இப்பொழுது யூடுயூபில் காணக் கிடைக்கிறது. 😌

 

 

FHD (1080p) துல்லிய தரத்தில் காணொளி உள்ளது.

தகவலுக்கு நன்றி வன்னியர்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, beard and text that says 'உலகத் தமிழர்களின் பேராதரவோடு... பிரான்சு பாரிசில் மேதகு திரை ரக்களம் மேதக-ா Le Brady 39 Bd de Strasbourg -75010 paris Métro Château d'Eau ligne காலம் 19-08-2022 வெள்ளிக்கிழமை நேரம் 19:00 மணி காலம் 20-08-2022 சனிக்கிழமை நேரம் 16:30 மணி தொட ர்புகளுக்கு 06 62 84 66 06 06 13 88 ஒருங்கிணைப்புக் குழு-பிரானசு'

மேதகு இரண்டாம் பாகம்  (19/08/22) இன்று தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள், எங்கிலும் திரையிடப்படுகிறது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

காணொளியில் 03:39 நிமிசத்தில் வரும் பெரியவர் ஒருவர், நிதானமாக நல்ல விமர்சனத்தை சொல்லியுள்ளார். 👌💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன விளம்பரம் செய்யுறாங்களோ தெரியேல்ல. மேதகு II படம் வந்ததும் தெரியேல்ல. ஓடினதும் தெரியேல்ல.

லண்டன் ல எங்க ஓடுதாம்?

வெள்ளி திரையில் பார்க்க ஆசையாய் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேதகு-2ல் நடித்த அனுபவம் குறித்து மூத்த நடிகர் நாசர்

மேதகு 2 படத்தை பார்த்து கலங்கிய கவிஞர் தாமரை

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் திரையிடப்படவுள்ள மேதகு 2 திரைப்படம்..

Methaku-Landau.jpg

Methaku-Wuppetal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டனில் படம் பார்த்தவர்களின் கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு 1 பார்த்த மாதிரி ஏதாவது தளங்களில் வந்தால் தெரிந்தால் பதிவு பண்ணுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

மேதகு 1 பார்த்த மாதிரி ஏதாவது தளங்களில் வந்தால் தெரிந்தால் பதிவு பண்ணுங்கள்.

https://www.tamilsott.com/index.php

கடந்த இரண்டு நாளாக பதிவு செய்ய முடியவில்லை, ஏதோ இணையத்தில் பிரச்சினை உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.errimalai.com/wp-content/uploads/2022/08/IMG-20220819-WA0005-1024x768.jpg

பிரான்சில்...  "மேதகு 2"  முதல் காட்சிக்கு... அலை மோதிய மக்கள்!

பிரான்சில் மேதகு 2 திரைப்படம் இன்று (19.08.2022) வெள்ளிக்கிழமை மாலை 19.00 மணிக்கு திரையிடப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் இத்திரைப்படத்தின் முக்கியத்துவம் குறித்து பல கருத்துக்களைப் முடிந்தபின்னர் திரைப்படம் ஆரம்பமானது.

நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மீண்டும் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.errimalai.com/wp-content/uploads/2022/08/IMG-20220819-WA0014-1024x461.jpg

 

http://www.errimalai.com/wp-content/uploads/2022/08/IMG-20220819-WA0016-1024x461.jpg

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு )

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

"மேதகு இரண்டு"  திரைப்படத்தை... 
(24.08.) இன்று, தமிழக நேரம் காலை 10 மணிக்கு    பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

 

May be an image of 1 person and text that says 'Sumesh Kumar Sundaram is with கலைச்செல்வம் சண்முகம் and 58 others. 12h. தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது "மேதகு- திரைக்காவியம் TamilsOTT தளத்தில் வெளியாகவுள்ள தேதி நாளை (24/08) இந்திய நேரம் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது! #மீண்டும்வருகிறார்மேத்கு #Methagu_part2 #TamilsOTT 48 Like 6 comments 6 shares Comment Share'

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

மேதகு இரண்டு"  திரைப்படத்தை... 
(24.08.) இன்று, தமிழக நேரம் காலை 10 மணிக்கு    பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள்.

 

தகவலுக்கு நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, sky and text

  • கருத்துக்கள உறவுகள்+

மேதகு 2 திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன். அது எமது வரலாற்றை "இயன்றளவு" சரியாக எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகள். 

இத்திரைப்படத்தில் நான் 3 வரலாற்றுப்பிழைகளை அவதானித்தேன். 

 

 

  • சீருடையில் வரலாற்றுத் திரிபுகள்:

1) திருநெல்வேலித் தாக்குதல் சீருடை
அதில் காட்டப்பட்ட திருநெல்வேலித் தாக்குதலின் போது அணிந்ததென்ற சீருடையானது - உண்மையில் அணியப்பட்டதா என்பது பற்றிய வரலாற்றுக்குறிப்புகளை என்னால் காணமுடியவில்லை. ஆனால் இதையொத்த சீருடை இத்தாக்குதலிற்கு முன்னரான காலத்தில் புலிகளால் அணியப்பட்டது. - இத்தாக்குதலிற்கு முன்னரான காலகட்டத்தில் புலிகளால் அணியப்பட்ட சீருடையோடு ஒத்திப்போகவில்லை. அதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.

Methaku-Wuppetal.jpg

s4s4.jpg

'70களின் இறுதியில் அணியப்பட்டதாக புலிகளின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்சாரில்லா சீருடை.'

 

2) தமிழ்நாட்டுப் பயிற்சி முகாம் சீருடை

சீருடையில் கடைநிலை வீரர்கள்:

இங்கு கடைநிலை வீரர்களால் அணியப்பட்ட சீடையானது கடுஞ்சாம்பல் நிறமுடையதாகும். ஆனால் இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது வெளிறிய பச்சை ஆகும். வரலாற்றில் புலிகளால் பயன்படுத்தப்படாத சீருடைகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காட்டப்படுவது வரலாற்றுத் திரிபு ஆகும்.

Rise of the Tigers (3).jpg

'உத்தரப் பிரதேசப் பயிற்சி முகாமினுள் அக்கடுஞ்சாம்பல் சீருடை அணிந்து 'இயல்புநிலை'யில் நிற்கும் புலிவீரர்களைக் காண்க. '

 

old ltte memeber.jpg

'ஓர் புலிவீரனின் சீருடை, பயிற்சி முகாமினுள்.'

 

 

சீருடையில் கட்டளையாளர்கள்:

திரைப்படத்தில் தலைவர் மாமாவும் பச்சை(வரலாற்றுத்திரிபு கடைநிலை வீரர் சீருடை) சீருடை அணிவது போன்று காட்டப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில்....

main-qimg-a103352c4b68f283bda1a729b6961377.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்+
  • லெப். சீலனின் வீரச்சாவு நிகழ்வு வரலாற்றுத் திரிபு:

3)

விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் கட்டளையாளரான 'லெப். சீலன்' அவர்களின் வீரச்சாவானது சிறிலங்கா தரைப்படையினரின் சுற்றிவளைப்பினால்தான் நிக்ழந்தது. ஆனால் இத்திரைப்படத்திலோ அவர்கள் ஒரு வீட்டிற்குச் செல்வது போன்றும் அங்கு சிங்களப் படையினரின் நெடுஞ்சப்பாத்துக் காலடித்தடங்களைக் கண்டுவிட்டு பின்வாங்கி ஓடும் போது லெப் சீலனிற்கும் வீரவேங்கை ஆனந்திற்கும் ஏவுண்ணுவதும் அதால் சீலன் அவர்கள் அருணா அவர்களிடம் தன்னைச் சுட்டுவிட்டு தப்பிச் செல்லுமாறு கூறுவது போன்றும் ஆனந் அவர்கள் ஏவுண்ணியதால்தான் வீ.சா. அடைந்ததாகவும் வரலாற்றுத் திரிபாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

உண்மையில் நிகழ்ந்தது வேறு. தாக்குதல் கட்டளையாளர் லெப் சீலன், வீரவேங்கை ஆனந்த், மேஜர் கணேஸ், மற்றும் (தரநிலையிழந்த) அருணா ஆகியோர் 3  மிதிவண்டிகளில் (அருணா- 1, கணேஸ்- 1, வீரவேங்கை ஆனந்த் & லெப் சீலன் - 1) ஒரு ஒழுங்கைக்குள்ளால் சென்று கொண்டிருக்கும் போது படைய ஊர்திகளில் அதே ஒழுங்கையின் எதிர்திசையில் சிறிலங்காப் படையினரை அழைத்து வந்த 'தலையாட்டி' ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட இவர்கள் படையினரைக் கண்டுவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடினர்.

வேலிகள் ஏறிக்குதித்து அருகில் இருந்த ஒரு வெட்டைக்குள் தப்பி ஓடினர். அப்போது லெப் சீலன் அவர்களுக்கு முழங்காலின் புறப்பக்கத்தில் வெடிபட்டது அவரை அருணா அவர்கள் கைத்தாங்கலாக மேற்கொண்டு தாங்கிச் சென்றார். அவர்களை தொடர்ந்து கலைத்துச்சென்ற படையினருக்கும் எம்மவர்களுக்கும் அவ்வெட்டையில் சமர் எழுந்தது. 

தொடர்ந்து பின்வாங்குகையில் லெப் சீலன் அவர்களுக்கு இடது விலாவில் ஏவுண்ணுகிறது. எனவே அவரால் மேற்கொண்டு நடக்க இயலாமல் போக தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்த எடுத்துச் செல்லும்படி அருணாவிற்கு கட்டளையிடுகிறார் லெப் சீலன். முதலில் பாசத்தால் மறுத்தாலும் பேந்து கட்டளையை நிறைவேற்றுகிறார் அருணா. சமநேரத்தில் படையினரோடு மிண்டிக்கொண்டிருந்த வீரவேங்கை ஆனந்த் இடது வயிற்றில் ஏவுண்ணுகிறார். அவர்  அருணாவிடம் சீலனைப் போன்றே தன்னையும் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி வேண்ட அவ்வாறே செய்கிறார் அருணாவும். பின் மேஜர் கணேஸும் அருணாவும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடுகின்றனர். 

இதுவே நடந்தவை. ஆனால் திரைப்படத்தில் திரிவுபடுத்தி காட்சிப்படுத்தியுள்ளனர்.

சீலன் இவ்வரலாற்றை காட்டும் "வீரசீலம்" என்ற தவிபுவின் குறும்படம் இதற்கு வரலாற்றுச் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது. 

https://eelam.tv/watch/வ-ரச-லம_cM9kBMOfrUg2Vdj.html

 

 

 

இவையே நான் கண்ட மூன்று வரலாற்றுத் திரிபுகள் ஆகும். வரலாற்றுத் திரிபுகள் வரவெளிக்கிடத் தொடங்கிவிட்டன. இனிமேலாவது சரி செய்வார்களா அல்லது இன்னுமின்னும் திரிவுபடுத்துவார்களா என்பது பற்றி அவர்களே அறிவர்!

வரலாற்றைத் திரிக்காமல் இருந்தால் சரி.

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மேதகு-Iஐ தொடர்ந்து, மேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கி வரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியம்.

 

 

மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும் மேதகு-II திரைக்காவியம் - இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு... 

இயக்குநர் - இரா.கோ.யோகேந்திரன் 

ஒளிப்பதிவு - வினோத் ராஜேந்திரன் 

இசையமைப்பாளர் - பிரவின் குமார் 

படத்தொகுப்பு - ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ)

கலை இயக்குநர் - இன்பத்தினேஸ் 

சண்டைப்பயிற்சி - ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்

ஆடை வடிவமைப்பு - முனீஸ்வரன்

பாடல் வரிகள் - கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா

கணினி வரைகலை - விமல் கார்த்திக்

ஒலி அமைப்பு - வசந்த் (Marov Records, Thanjavur)

ஒலிக்கலவை & மேம்பாடு - புவன் மற்றும் வசந்த்

ஒலிப்பதிவுக்கூடம் - யாழிசைப் பேழையகம் (Yazh Isai Records, Thanjavur)

இணை படத்தொகுப்பு - பாண்டி சீனிவாசன்

உதவி படத்தொகுப்பு - மதிவாணன்

உதவி கலை - பைலட் ஜீவன், சந்தோசு

வான் ஒளிப்பதிவு - வள்ளுவத்தேவன் உதய் 

புகைப்படங்கள் - உன்னி சங்கர், கவிமொழி 

இயக்குநர் குழு - கபில், பிரபாகரன், முனீஸ்வரன், வாசுதேவன், கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா 

தலைவராக - கௌரி சங்கர்

தயாரிப்பு நிர்வாகிகள் - தமிழன் சதிஸ், முருகன் பசுபதி, தங்க பிரபாகரன்

முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் - தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார் & திருக்குமரன்

கதை மற்றும் காட்சிகள் மேற்பார்வை - சுபன்

வரலாற்று தொகுப்பு - மேதகு திரைக்களம்

பிஆர்ஓ - கே.எஸ்.கே. செல்வா
 

  • நிழலி changed the title to மேதகு - முதற்பார்வை
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

 

 

மேதகு-Iஐ தொடர்ந்து, மேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கி வரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியம்.

 

 

மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும் மேதகு-II திரைக்காவியம் - இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு... 

இயக்குநர் - இரா.கோ.யோகேந்திரன் 

ஒளிப்பதிவு - வினோத் ராஜேந்திரன் 

இசையமைப்பாளர் - பிரவின் குமார் 

படத்தொகுப்பு - ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ)

கலை இயக்குநர் - இன்பத்தினேஸ் 

சண்டைப்பயிற்சி - ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்

ஆடை வடிவமைப்பு - முனீஸ்வரன்

பாடல் வரிகள் - கவிஞர். திருக்குமரன், ஏறன் சிவா

கணினி வரைகலை - விமல் கார்த்திக்

ஒலி அமைப்பு - வசந்த் (Marov Records, Thanjavur)

ஒலிக்கலவை & மேம்பாடு - புவன் மற்றும் வசந்த்

ஒலிப்பதிவுக்கூடம் - யாழிசைப் பேழையகம் (Yazh Isai Records, Thanjavur)

இணை படத்தொகுப்பு - பாண்டி சீனிவாசன்

உதவி படத்தொகுப்பு - மதிவாணன்

உதவி கலை - பைலட் ஜீவன், சந்தோசு

வான் ஒளிப்பதிவு - வள்ளுவத்தேவன் உதய் 

புகைப்படங்கள் - உன்னி சங்கர், கவிமொழி 

இயக்குநர் குழு - கபில், பிரபாகரன், முனீஸ்வரன், வாசுதேவன், கவிமொழி, வள்ளி விஸ்வநாத், வாசு நக்கீரன், பாரூக் அப்துல்லா 

தலைவராக - கௌரி சங்கர்

தயாரிப்பு நிர்வாகிகள் - தமிழன் சதிஸ், முருகன் பசுபதி, தங்க பிரபாகரன்

முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் - தஞ்சை குகன் குமார், சுமேஷ் குமார் & திருக்குமரன்

கதை மற்றும் காட்சிகள் மேற்பார்வை - சுபன்

வரலாற்று தொகுப்பு - மேதகு திரைக்களம்

பிஆர்ஓ - கே.எஸ்.கே. செல்வா
 

"மேதகு"  2´ம் பாக இணைப்பிற்கு நன்றி உடையார். 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@உடையார்

 இணைப்பிற்கு நன்றி உடையார். :thumbs_up:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.