Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கு தையிட்டியில் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரை : மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

( எம்.நியூட்டன்)

வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை  சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது.

வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பிலிருந்து ஆரம்பித்த பேரணியானது விகாரைவரை சென்று பிரதான வாசலில் போராட்டம் இடம்பெற்றது இதில் கலந்து கொண்டவர்களால் எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு ,மக்கள் வெளியில் புத்தர் வெளியில் , எங்களை நிம்மதியாக வாழ்விடு போன்றகோசங்கள் எழுப்பி யிருந்தார்கள் இப்போராட்டத்தில் தபிழ்தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன்  மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

20230503_160418.jpg

20230503_161434.jpg

வலிவடக்கு தையிட்டியில் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரை : மக்கள் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விஹாரையை சுமந்திரன், மாவை பார்வையிட்டனர்

image_28e58b3952.jpg

நிதர்ஷன் வினோத்

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விஹாரையையும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விஹாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தையிட்டி-விஹாரையை-சுமந்திரன்-மாவை-பார்வையிட்டனர்/71-316742

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் விகாரை : பொலிஸ் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு

Published By: DIGITAL DESK 5

04 MAY, 2023 | 10:27 AM
image

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி பொலிஸ் முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து , கலந்துரையாடினர். 

விகாரையை அகற்ற கோரி புதன்கிழமை (3) முதல் வெள்ளிக்கிழமை (5) வரையில் விகாரை முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கும் நோக்குடன் நாடாளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

01__11_.jpg

அந்நிலையில் நேற்றைய தினம் இரவு அவ்விடத்தற்கு வந்த பொலிஸார் , போராட்டக்காரர்களின் கொட்டகையை அங்கிருந்து பிடுங்கி , அகற்றினர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இங்கிருந்து விலகி செல்ல வேண்டும் . இல்லையெனில் அனைவரையும் கைது செய்வோம் என கூறி பலரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

அதேவேளை வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி , போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வேறு எவரும் செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தினார். 

01__10_.jpg

பொலிஸாரின் மிரட்டல்களை செவி சாய்க்காது நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களுக்கான உணவு , நீர் மற்றும் மருந்து ஆகியவற்றை வழங்கவும் பொலிஸார் அனுமதிக்கதாக நிலையில் சுமார் 7 மணி நேரத்தின் பின்னர் மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்டவர்களின் அழுத்தங்கள் காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலையே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டது. 

01__8_.jpg

அதே நேரம் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் நின்ற பெண் உள்ளிட்ட ஐவரை எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இன்றி பலாலி பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் பொலிஸ் தடைகளை மீறி உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ கஜேந்திரன் உள்ளிட்டவர்களை சந்தித்தது தமது ஆதரவை தெரிவித்து கலந்துரையாடினார்கள். 

01__9_.jpg

அதேநேரம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் , உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள் , வீதி தடை கம்பிகள் என்பவற்றை விகாரைக்கு அருகில் வீதிகளில் போட்டு , வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். 

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு , கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

01__2_.jpg

01__3_.jpg

01__4_.jpg

01__5_.jpg

01__6_.jpg

01__7_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/154463

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சட்டவிரோத விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக போராடிய ஐவர் கைதுnews-02-2.jpg

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களில் மூன்று பேர் நேற்றிரவும், இன்று காலை மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/252096

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு

தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு எம்.பி களுடன் அங்கஜனும் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

https://athavannews.com/2023/1331368

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

கைதானவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப் பட்டமைக்கான காரணத்தை விசாரிக்காது, கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கும் நீதிமன்றம். இதனாலேயே நிஞாயமான போராட்டங்களை தடுக்கவும், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து மக்களின் போராட்டங்களை முடக்குகிறது சிங்களம். போராட்டத்தை தூண்டும் காரணிகளை தடுக்க முடியவில்லை, அவர்களை கேள்வி கேட்க திராணியில்லை, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்து அவர்களின் திட்டங்களுக்கு துணை போகும் நீதிமன்றங்கள். தடுத்து வைக்கப்பட்டவர்ளை பார்வையிட சட்டத்தரணி சுகாஷ் முயன்றபோது, அங்கு நின்ற தமிழ்ப்பொலிஸார் ஒருவர், சுகாஷ் மதுபோதையில் கலகம் செய்வதாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழரை அமைச்சர்களாகவும், இப்படிப்பட்ட உத்தியோகங்களில் அமர்த்துவதற்கும், அழைப்பு விடுவதற்கும், கூட்டங்களில் அமர்த்துவதற்கும் காரணம் இதுவே. ஆனால் இப்படிப்பட்ட ஆர்பாட்டங்களின்போது வெளிநாட்டு ஊடகவியலாளர்களை முடிந்தால் அழைப்பது நல்லது. 

14 hours ago, தமிழ் சிறி said:

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின்

கடற்தொழில் அமைச்சர், கோமாளிமாதிரி மூக்கு நுழைக்காத இடமேயில்லை. கடற்தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை, அது அப்படியே இருக்கிறது, இந்த லட்ஷணத்தில ஓடித்திரியிறாராம் எதுக்குமே லாயக்கில்லாதவர். அடுத்தவர் ஆளுநர்; இவரது இடத்துக்கு ஜோன் அமரதுங்க நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன.  இவ்வளவு காலமும் உறங்கிக்கிடந்து, தமிழரை எப்படி அடிபணிய வைப்பது என திட்டம் போட்டு, இப்போதுதான் இவர் அவசரமாக உழைப்பதுபோல் பாசாங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிய விகாரையை விட்டுக்கொடுக்க புத்த துறவிகள் உடன்படுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கட்டிய விகாரையை விட்டுக்கொடுக்க புத்த துறவிகள் உடன்படுவார்களா?

நிச்சயமாக அது நடக்காது.  அதனாலதான் அதை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்கும் போராட்டமாக இது மாறியுள்ளது.

On 3/5/2023 at 20:19, பிழம்பு said:
image

( எம்.நியூட்டன்)

வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை  சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது.

esari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

உரிய அனுமதி பெறாது, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட எத்தனையோ கட்டிடங்கள் நகராட்சியாலும், நீதிமன்ற உத்தரவுகளாலும் உடைக்கப்பட்டன வடமாகாணத்தில். ஆனால், இங்கே சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே அடாவடி பண்ணுகிறார்கள், நீதிமன்றம் வளைந்து கொடுக்கிறது. இவர்கள் எப்படி நாட்டில் அமைதி, சமாதானத்தை கட்டியெழுப்புவார்கள்? மனித உரிமைகள் சபையிலிருந்து வருபவர்களை நேரடியாக தளத்திற்கு கூட்டிக்கொண்டு போய் காட்டி விளக்குவதை விட்டு, அவர்களோடு உரையாடினார்களாம், இங்கே இவர்கள் பார்வையிடுவார்களாம். எப்பவுமே பார்ப்பதுதானே, இனியென்ன பிரதியேகமாய் பாப்பது? படம் பத்திரிகையில் வருமெல்லே, அதுதான் முக்கியம்!   

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், சி. சிறிதரன், த. சித்தார்த்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

என்னது வெளிநடப்பா ....அவ்வளவுதான் 
அமெரிக்கனின் பசிபிக் fleet உடனடியாக தரையிறக்கம் மேற்கொள்ள ரெடியாவதாக கேள்விப்பட்டேன் 
இனியென்ன தையிட்டி விகாரை சுக்குநூறு தான் .
கூத்தாடீஸ் உலகமே தனி உலகமப்பா அவர்களது வால்களுக்கோ அதைப்பார்த்து ஒரே சோக்குதான்பா 

  • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவு சச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு முன்னால் வரவும் 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பகிடி said:

மறவன் புலவு சச்சி எங்கிருந்தாலும் மேடைக்கு முன்னால் வரவும் 

கிறிஸ்தவ மதம் சம்பந்தமாக இன்னுமொரு சர்ச்சை(??) வரும்வரை அவர் வெளியே வர மாடடார். காவிகளுக்கிடையில் எழுதப்படாத ஒப்பந்தம் இருக்குதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்களத்தில் அவமதிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் – தூக்கி வீசப்பட்ட உணவுப்பொருட்கள்!

9-3.jpg

யாழ்ப்பாணம் தையிட்டி போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தையிட்டி விகாரையை அகற்ற கோரி கடந்த புதன்கிழமை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பங்கேற்றிருந்தார். அவர் போராட்டகாரர்களுக்கு சிற்றுண்டிகளையும் மென்பானங்களையும் வழங்கியிருந்தார்.

இவற்றை போராட்டகாரர்களில் ஒரு பகுதியினர் மாத்திரம் அவற்றை வேலியோரமாக குப்பையில் வீசியிருந்தனர். அந்த சமயம் அங்கயன் இராமநாதன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

அந்த கட்சியினரின் செயல்பாட்டை அங்கிருந்தவர்களும் கண்டித்தனர். ஆயினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=244912

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை - போராட்டத்தில் களமிறங்கிய தமிழர்கள்

இலங்கை போராட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 4 மே 2023

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிலைகள் இடித்தொழிக்கப்பட்டதாக அண்மையில் கூறப்பட்டு, பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இந்தியா மற்றும் இலங்கை எல்லையிலுள்ள கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னணியில், அதற்கு பாரிய எதிர்ப்புக்கள் இரு நாட்டிலிருந்தும் எழுந்திருந்தன.

இந்த பிரச்னை வலுப் பெற்ற நிலையில், குறித்த 'நிலை' அகற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதேபோன்று, இலங்கையின் பிரசித்தி பெற்ற கீரிமலை பகுதியிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவமும் அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு கடந்த சில மாதங்களாகவே சிங்கள பௌத்தர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமது அடையாளங்களை ஸ்தாபித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அவ்வாறான மற்றுமொரு பாரிய பிரச்னையொன்று தற்போது எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதியின் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட இடமே தையிட்டி.

இந்த தையிட்டியில் ஒரு பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்த பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்கள் இன்றும் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மக்களுக்கு சொந்தமான இடங்களை அக்கிரமித்து, படையினர் பௌத்த விகாரையொன்றை அமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

வலுக்கும் போராட்டம்

இலங்கை

மக்களின் நிலங்களை அக்கிரமித்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தது.

இந்த விகாரையை நிர்மாணிப்பதற்காக ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தமிழர் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை நிறுத்துமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை - காங்கேசன்துறை பிரதான வீதியின் கையிட்டி - கலைவாணி வீதியிலிருந்து ஆரம்பமான போராட்ட பேரணி, விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதி வரை சென்று, அங்கு எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தை அடுத்து, பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு போலீஸார் நேற்றிரவு முயற்சித்த சந்தர்ப்பத்தில், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இலங்கை

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், காணிகளின் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு, கட்சி பேதமின்றி ஆதரவை வழங்கியிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நேற்று முதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.

அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஸ்ரீதரன், எம்.ஏ.சுதந்திரன், சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

அரசாங்கத்தின் பதில்

இலங்கை
 
படக்குறிப்பு,

விதுர விக்ரமநாயக்க, தமிழ், புத்தசாசன, சமய மற்று கலாசார அலுவல்கள் அமைச்சர்

யாழ்ப்பாணம் - கையிட்டி பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழ், புத்தசாசன, சமய மற்றும்; கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு வினவியது.

இந்த விடயம் தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் பதிலளித்தார்.

எனினும், சமயமொன்றை பின்பற்றுவது அவரவர் உரிமை என அவர் கூறுகின்றார்.

வடக்கிலுள்ளவர்களுக்கு, தெற்கில் வருகைத் தந்து இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை என குறிப்பிட்டார்;.

''சமயத்தை பின்பற்றுவது அனைவரது உரிமை. வடக்கிலுள்ளவர்கள், தெற்கிற்கு வருகைத் தந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை. அதற்கு நடைமுறையொன்று காணப்பட வேண்டும். அந்த நடைமுறையிலிருந்து வெளியேறினால் மாத்திரமே பிரச்னை ஏற்படும். வெடுக்குநாறி பகுதியில் காணப்பட்ட பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. கச்சத்தீவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது. எனது தலைமையில் கிளிநொச்சியில் இரண்டு ஆலயங்களை நாம் நிர்மாணிக்கின்றோம். அது தொடர்பில் யாரும் பேசுவதில்லை. இது அனைத்தும் எமக்கு சொந்தமானவை. நான் பொதுவாக இருந்து, பக்கச்சார்பின்றி செயற்பட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவேன்." என தமிழ், புத்தசாசன, சமய மற்றுமு; கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c3gp510v7ypo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வடக்கிலுள்ளவர்களுக்கு, தெற்கில் வருகைத் தந்து இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை

எங்கள் பணத்தில் எமக்கு தேவையானவற்றை நாம் அமைத்துக்கொள்வோம், பிற ஆலயங்களை, நிலங்களை ஆக்கிரமித்து தேவையற்ற கட்டிடங்களை அமைக்க யாரும் எங்களுக்கு அழைப்பு விடுக்கத்தேவையுமில்லை, அதற்கு எங்களுக்கு அவசியமுமில்லை. புத்த சாசன அமைச்சருக்கு புத்தமும் தெரியவில்லை, தர்மமும் புரியவில்லை,  சட்ட விளக்கமுமில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று இதுவரை தெரியவுமில்லை. பிறகு எதற்கு இவருக்கு அந்த அமைச்சுப்பதவி?

2 hours ago, ஏராளன் said:

சமயமொன்றை பின்பற்றுவது அவரவர் உரிமை என அவர் கூறுகின்றார்.

அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம் ஒருகாலத்தில் புத்த மதத்தை தழுவினோம் இப்போ அதை கைவிட்டு நமது பாரம்பரிய மதத்தை பின்பற்றுகிறோம் அது எமது சொந்த விருப்பு, உரிமையுங்கூட. அதற்குள் எமக்கு விருப்பமில்லாத சிங்கள பவுத்தத்தை ஏன் திணிக்கிறீர்கள்? அதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கேள்வி கேட்டால் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவேணும், இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேணும், தேவையற்ற பதில் சொல்லி விடயத்தை குழப்பக்கூடாது.

4 hours ago, கிருபன் said:

அங்கஜன் இராமநாதனால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அங்காலை சிங்களத்துக்கு இடம் பாத்து ஒற்றர் வேலை செய்வது, இங்காலை வாக்குக்காக நல்ல பிள்ளைக்கு நடிப்பது. தங்களைப்போல உந்த அற்ப சலுகைகளுக்கு எல்லோரும் விலை போவார் என்று நினைத்தாரோ?  இந்தக்கூத்தாடிகள் அழைக்கும், அமைக்கும் கூட்டங்களை பொதுமக்கள் நிராகரித்தாலே சிங்களத்தின் கெடுபிடிகள் குறையும். இவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவிட்டால் சிங்களம் இவர்களை வைத்து ஆடும் ஆட்டமும் முடிவுக்கு வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி தையிட்டியில் தொடரும் போராட்டம்

Published By: DIGITAL DESK 5

05 MAY, 2023 | 11:38 AM
image

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான வெசாக் தினத்தில் வெள்ளிக்கிழமை (05) காலை போராட்டம் ஆரம்பித்துள்ளது.

மழைக்கு மத்தியிலும் போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

IMG-20230505-WA0011.jpg

IMG-20230505-WA0013.jpg

IMG-20230505-WA0018.jpg

IMG-20230505-WA0019.jpg

IMG-20230505-WA0021.jpg

IMG-20230505-WA0024.jpg

https://www.virakesari.lk/article/154547

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் தையிட்டி விகாரை ஜூன் 3 இல் திறப்பு!

IMG-20230505-221136.jpg

யாழ்., வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை பொசனன்று திறந்து வைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டது.

இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விகாரையை அடுத்த மாதம் 3ஆம் திகதி பொசனன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/192944/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு

 

11 hours ago, ஏராளன் said:

வடக்கிலுள்ளவர்களுக்கு, தெற்கில் வருகைத் தந்து இந்து ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு தடையில்லை என குறிப்பிட்டார்;.

மகிந்த, ரனில், விமலின் காணிக்குள் அடாத்தாக கோயில் கட்ட அனுமதி உண்டா அமைச்சரே??

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரே வழிதான் இருக்கு. அவனுக்குப் புரிகின்ற மொழியில் நாம் பேசவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரஞ்சித் said:

இதற்கு ஒரே வழிதான் இருக்கு. அவனுக்குப் புரிகின்ற மொழியில் நாம் பேசவேண்டும்.

அது எந்த மொழி? சாணக்கியன் முழங்குற மொழி புரியாதா அவர்களுக்கு? பின் ஏன்தான் அவர் தொண்டை கிழிய கத்துகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அது எந்த மொழி? சாணக்கியன் முழங்குற மொழி புரியாதா அவர்களுக்கு? பின் ஏன்தான் அவர் தொண்டை கிழிய கத்துகிறார்?

தலைவர் பேசிய மொழி!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மொழிதான் எங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரியாமல் அழித்து விட்டோமே. அந்த தைரியந்தான் முட்டாள்களின் இந்த ஆட்டத்திற்கு காரணம். இனி அந்த மொழியை பேசக்கூடிய திறமையான ஒருவர்  தோன்றப்போவதில்லை, பேசப்போவதுமில்லை. அது ஒரே ஓர் கனாக்காலம், அது மறைந்துவிட்டது, திரும்பப்போவதில்லை. தெரிந்தும் எதிர்பார்கிறீர்களா? தேற்றிக்கொள்கிறீர்களா? முடிந்தால் நீங்கள் பேசிப்பார்க்கலாம். நீங்கள் அந்த எதிர்பார்ப்புடன் இருப்பதால் கேட்க்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை சர்ச்சை !! கைவிட்டுப்போனதா எம் நிலம் ?இதுவரையும் - இனியும்... !! ARV LOSHAN NEWS

 

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி மக்கள் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது !

kugenMay 6, 2023
 
thaiyi-transformed.jpeg

யாழ்ப்பாணம் – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டம், நேற்று இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தக்கட்ட செயற்பாடு தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள், கடந்த மூன்று நாட்களாக பதாகைகளை தாங்கியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்த மயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://www.battinews.com/2023/05/blog-post_53.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அந்த மொழிதான் எங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரியாமல் அழித்து விட்டோமே. அந்த தைரியந்தான் முட்டாள்களின் இந்த ஆட்டத்திற்கு காரணம். இனி அந்த மொழியை பேசக்கூடிய திறமையான ஒருவர்  தோன்றப்போவதில்லை, பேசப்போவதுமில்லை. அது ஒரே ஓர் கனாக்காலம், அது மறைந்துவிட்டது, திரும்பப்போவதில்லை. தெரிந்தும் எதிர்பார்கிறீர்களா? தேற்றிக்கொள்கிறீர்களா? முடிந்தால் நீங்கள் பேசிப்பார்க்கலாம். நீங்கள் அந்த எதிர்பார்ப்புடன் இருப்பதால் கேட்க்கிறேன். 

நாம் எல்லோரும் அதைப்பேசவேண்டிய காலம் மீண்டும் வரும். சிங்களவரே அதை உருவாக்கித் தருவார்கள். அதுவரை அந்த உணர்வுடன் நாம் இருக்கவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.