Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, சுவைப்பிரியன் said:

இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.

Yashasvi Jaiswal ஒரு நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர். அவரை உள்ளே கொண்டுவருவதானால் ரோஹித் அல்லது சுப்மான்  கில் வெளியே செல்லவேண்டும். அதனால் ரோஹித் ஓய்வை அறிவித்தபின்தான் அவர் உள்ளே வர முடியும். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் விளையாடுவர்.

இஷான் கிஷானையும் வெளியில் அனுப்ப முடியாது. ஏனெனில் அவர்தான் reserve விக்கெட் காப்பாளர்.

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

403164975_6714694465313644_5729605923055

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Eppothum Thamizhan said:

Yashasvi Jaiswal ஒரு நல்ல ஆரம்ப துடுப்பாட்ட வீரர். அவரை உள்ளே கொண்டுவருவதானால் ரோஹித் அல்லது சுப்மான்  கில் வெளியே செல்லவேண்டும். அதனால் ரோஹித் ஓய்வை அறிவித்தபின்தான் அவர் உள்ளே வர முடியும். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் விளையாடுவர்.

இஷான் கிஷானையும் வெளியில் அனுப்ப முடியாது. ஏனெனில் அவர்தான் reserve விக்கெட் காப்பாளர்.

KL RAHUL இந்தியா அணிக்கு விளையாடும் வ‌ரை ராகுல் தான் விக்கேட் கீப்பிர‌ செய‌ல் ப‌டுவார் ந‌ண்பா

ரின்ச‌ ப‌ண்ட் காய‌த்தில் இருந்து மீண்டு வ‌ந்தால் இஷான் கிஷானை இந்திய‌ அணியில் காண‌ முடியாது...............ஏதும் சின்ன‌ நாட்டுட‌ன் இந்தியா விளையாடும் நிலை வ‌ந்தால் பெரிய‌வ‌ர்க‌ளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு B அணிய‌ விளையாட‌ விடுவின‌ம் அதில் இவ‌ர் இட‌ம் பெருவார் என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரிதாபங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

399274959_6798704673528268_4429573838035

403044738_2945037038965176_4473633020486

402937087_339626038668918_63362891452715

403776937_339146535383535_34627264966471

402469333_753483480125040_42236550300576

402652022_753179096822145_50705894256088

402575619_753150210158367_35479321654533

402650248_754178723388849_18578126015567

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 19/11/2023 at 22:27, ஏராளன் said:

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. மைதானத்தில் உள்ள 5ஆம் எண் ஆடுகளம் போட்டிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆடுகளம், “இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்த மைதானத்தைவிட சற்று வித்தியாசமானது. இந்த ஆடுகளம் நன்கு காய்ந்துள்ளது, அதிகமாக ரோலிங் செய்யப்படவில்லை.

ஆடுகளம் நன்கு காய்ந்து, ஆங்காங்கே திட்டுத் திட்டாக சமனற்று இருக்கிறது. இந்த இடங்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தை பிட்ச் செய்தால் நன்கு ட்ர்ன் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து நன்கு டர்ன் ஆகியிருக்காது.

இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தால், ரன் ஸ்கோர் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்ப்பது அவசியம். இந்தியா போன்ற வலிமையான அதைப் பற்றிக் கவலைப்படாமல் ரன்களைச் சேர்த்துவிடும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் ஸம்பா பந்துவீச்சு முக்கியத்துருப்புச்சீட்டாக இருக்கும்.

நரேந்திர மோதி மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மூன்று போட்டிகளில், இரண்டாவது பேட் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது.ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அது ஆஸ்திரேலியாவாகும்.

இந்தியா இந்த உலகக் கோப்பை போட்டியில் நரேந்திர மோதி மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி,வெற்றி பெற்றது.

இந்த மைதானத்தில் இது வரை ஆடிய எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை

போட்டி ஆரம்பமாவதற்கு முதல் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது.

இந்த போட்டியினை முழுமையாக பார்த்தேன், ஆரம்பத்தில் இந்தியணி அவுஸின் பந்துவீச்சினை சிதறடித்த போது இந்திய முன்னால் ஆட்டக்காரரும் தற்போதய வர்ணனையாளருமான சஞ்சே மஞ்சுரேக்கர் கூறினார் அவுஸ் நாணய சுழற்சியில் வென்று தவறாக பந்து வீச்சினை தேர்வு செய்துவிட்டது, ஏனெனில் ஆடுகளம் மைதான ஈரப்பதன் ஏற்படும் போது ஏற்கனவே உள்ள மெதுவான ஆடுகளத்தில் பந்து, மேலும் காய்ந்து போன ஆடுகளம் ஈரப்பதன் ஏற்படும் போது பசை தன்மை போல் பந்தினை தாமதிக்கும்(என்பதான அர்த்தத்தில் கூறினார் sticky) அது துடுப்பாட்டத்தினை கடுமையாக்கும் என ஆனால் எதிர்மாறாக நிகழ்ந்தது, ஆடுகளத்தின் மேற்பரப்பு ஈரப்பதத்தில் இறுக்கமாகி பந்து முதலாவது இனிங்ஸினைவிட தாமதிக்காமல் மட்டைக்கு இலகுவாக வரத்தொடங்கிவிட்டது.

இந்தியாவும் மைதான ஈரப்பதன் வருவதற்கு முன்னரராக சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்திவிட வேண்டும் என 10 ஆவது ஓவரில் இரண்டு பக்கமுமாக சுழற்பந்து விச்சாளர்களை பயன்படுத்தியது.

ஆனால் மைதான ஈரப்பதன் குறைவான அளவில் ஏற்பட்டது, மைதானத்தின் போக்கினை கணிப்பது கடினமாகவே இர்குந்தது என்பதனை நேர்முக வர்ணனையாளர்களின் கருத்தின் மூலம் தெளிவாகியிருந்தது.

அவுஸிற்கு ஒரு அதிர்ஸ்டம் என்றே நான் கருதுகிறேன், மறுவளமாக இந்தியணி தோற்றுப்போன அதிர்ஸ்டமற்ற அணி, ஆனால் இந்தியணியின் தோல்விக்கு காரணம் இறுதிப்போட்டியில் அவர்களின் தரத்திற்கு அவர்கள் விளையாடததுதான் காரணம் என கருதுகிறேன்.

On 19/11/2023 at 19:53, suvy said:

எனது கணிப்பின்படி அவுசுக்கு சாதகமான சூழல் குறைவாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவுஸ் வெல்லும், வெல்லவேணும்.......!  🦘 👍

மிக சரியாக கணித்துக்கூறியுள்ளீர்கள்.

On 19/11/2023 at 21:15, பையன்26 said:

ச‌கோ பார்த்திங்க‌ளா இந்தியா வீர‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ முடியாம‌ திணறுகினம்
இந்தியா க‌ப்ட‌ன் பெரிய‌ த‌வ‌று செய்து விட்டார் இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் க‌ள‌ம் இற‌ங்கி இருக்கிறார்..........நேற்று சொன்னான் தானே இது சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்
ஆனால் இர‌வு ஆன‌தும் சுழ‌ல் ப‌ந்து பெரிசா எடுப‌டாது பாப்போம்.................

இந்தியணிக்கு இந்த போட்டியில் ஏற்பட்ட ஒரு தோல்வியின் மூலம் அதன் போட்டிக்கான தயாரிப்புகளை குறைசொல்லமுடியுமா தெரியவில்லை, இந்தியணி 5 பந்துவீச்சாளர்களுடனேயே பல சாதனைகளை இந்த போட்டியில் ஏற்படுத்தியுள்ளது, மறுவளமாக அவுஸ் ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரையும் 3 முழுநேர வேக பந்து வீச்ச்சாளர்க்ளை கொண்ட மொத்தமாக 4 பந்து வீச்சாளர்களுடன் பகுதிநேர பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியினை வென்றுள்ளது.

இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது.

இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும், ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை.

இந்த போட்டியில் அவுஸின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது இந்தியாவின் களத்தடுப்பு மோசம் ஆனால் வளமையான இந்தியணியின் சிறப்பான பந்துவீச்சும் இந்த போட்டியில் காணாமல் போய்விட்டது.

ஒரு அணியின் தரத்தினை ஒரு போட்டியின் முடிவினை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது தவறாகும் என கருதுகிறேன், இதனை இந்திய இரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும், அவுஸ்ரேலியர்கள் இதனை நன்றாக உணர்ந்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது, இந்த போட்டியின் வெற்றியினை அவுஸ்ரேலிய அணியும், இரசிகர்களும் சாதாரணமாக கடந்து செல்வதன் மூலம், ஆனால் இந்திய இரசிகர்கள் மட்டும் இந்த தோல்வியினை தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறார்கள். 

Edited by vasee
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, vasee said:

போட்டி ஆரம்பமாவதற்கு முதல் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது.

இந்த போட்டியினை முழுமையாக பார்த்தேன், ஆரம்பத்தில் இந்தியணி அவுஸின் பந்துவீச்சினை சிதறடித்த போது இந்திய முன்னால் ஆட்டக்காரரும் தற்போதய வர்ணனையாளருமான சஞ்சே மஞ்சுரேக்கர் கூறினார் அவுஸ் நாணய சுழற்சியில் வென்று தவறாக பந்து வீச்சினை தேர்வு செய்துவிட்டது, ஏனெனில் ஆடுகளம் மைதான ஈரப்பதன் ஏற்படும் போது ஏற்கனவே உள்ள மெதுவான ஆடுகளத்தில் பந்து, மேலும் காய்ந்து போன ஆடுகளம் ஈரப்பதன் ஏற்படும் போது பசை தன்மை போல் பந்தினை தாமதிக்கும்(என்பதான அர்த்தத்தில் கூறினார் sticky) அது துடுப்பாட்டத்தினை கடுமையாக்கும் என ஆனால் எதிர்மாறாக நிகழ்ந்தது, ஆடுகளத்தின் மேற்பரப்பு ஈரப்பதத்தில் இறுக்கமாகி பந்து முதலாவது இனிங்ஸினைவிட தாமதிக்காமல் மட்டைக்கு இலகுவாக வரத்தொடங்கிவிட்டது.

இந்தியாவும் மைதான ஈரப்பதன் வருவதற்கு முன்னரராக சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்திவிட வேண்டும் என 10 ஆவது ஓவரில் இரண்டு பக்கமுமாக சுழற்பந்து விச்சாளர்களை பயன்படுத்தியது.

ஆனால் மைதான ஈரப்பதன் குறைவான அளவில் ஏற்பட்டது, மைதானத்தின் போக்கினை கணிப்பது கடினமாகவே இர்குந்தது என்பதனை நேர்முக வர்ணனையாளர்களின் கருத்தின் மூலம் தெளிவாகியிருந்தது.

அவுஸிற்கு ஒரு அதிர்ஸ்டம் என்றே நான் கருதுகிறேன், மறுவளமாக இந்தியணி தோற்றுப்போன அதிர்ஸ்டமற்ற அணி, ஆனால் இந்தியணியின் தோல்விக்கு காரணம் இறுதிப்போட்டியில் அவர்களின் தரத்திற்கு அவர்கள் விளையாடததுதான் காரணம் என கருதுகிறேன்.

மிக சரியாக கணித்துக்கூறியுள்ளீர்கள்.

இந்தியணிக்கு இந்த போட்டியில் ஏற்பட்ட ஒரு தோல்வியின் மூலம் அதன் போட்டிக்கான தயாரிப்புகளை குறைசொல்லமுடியுமா தெரியவில்லை, இந்தியணி 5 பந்துவீச்சாளர்களுடனேயே பல சாதனைகளை இந்த போட்டியில் ஏற்படுத்தியுள்ளது, மறுவளமாக அவுஸ் ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரையும் 3 முழுநேர பந்து வீச்ச்சாளர்க்ளை கொண்ட மொத்தமாக 4 பந்து வீச்சாளர்களுடன் பகுதிநேர பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியினை வென்றுள்ளது.

இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது.

இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும் ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை.

இந்த போட்டியில் அவுஸின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது இந்தியாவின் களத்தடுப்பு மோசம் ஆனால் வலமையான இந்தியணியின் சிறப்பான பந்துவீச்சும் காணாமல் போய்விட்டது இந்த போட்டியில்.

ஒரு அணியின் தரத்தினை ஒரு போட்டியின் முடிவினை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது தவறாகும் என கருதுகிறேன், இதனை இந்திய இரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும், அவுஸ்ரேலியர்கள் இதனை நன்றாக உணர்ந்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது, இந்த போட்டியின் வெற்றியினை அவுஸ்ரேலிய அணியும், இரசிகற்களும் சாதாரணமாக கடந்து செல்வதன் மூலம், ஆனால் இந்திய இரசிகர்கள் மட்டும் இந்த தோல்வியினை தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறார்கள். 

வார‌ கிழ‌மை இந்தியா எதிர் அவுஸ்ரேலியா 20ஓவ‌ர் போட்டிக‌ளில் விளையாடின‌ம்..........அந்த‌ போட்டியில் இள‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ள் தெரிவு செய்ய‌ப் ப‌ட்டு இருக்கின‌ம்........ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கின‌ம் மீத‌ம் உள்ள‌ வீர‌ர்க‌ளுக்கு ஓய்வு அளிக்க‌ப் ப‌ட்டு இருக்கு........இள‌ம் இந்திய‌ன் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள்.................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது.

இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும் ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை.

தோனி எப்படி அத்தனை பட்ஸ்மன்களின் அசைவுகளையும் நுணுக்கமாய் தனக்குள் சேமித்து வைத்து தனது பந்து போடுபவர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்தினாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவுஸ் காப்டனும் இந்திய பாட்ஸ்மன்களின் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு, களத்தடுப்பு,பந்து போடுதல் மூலம்  இந்த வெற்றியை சாதித்து இருக்கின்றார்.......! 👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்களுக்கான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளோம் ; முதல் இரண்டு போட்டிகளில் தோற்றவுடன் எங்களுக்கான வாய்ப்புகள் குறைவு என நினைத்தேன் - சிட்னி விமானநிலையத்தில் பட்கமின்ஸ்

Published By: RAJEEBAN   22 NOV, 2023 | 11:43 AM

image

2023 உலக கிண்ண வெற்றிக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனக்கான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது என அணித்தலைவர் பட்கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

403625865_887886425754335_38302447268284

வெற்றியை இந்தியாவில் சில நாட்கள் கொண்டாடிய பின்னர் அவுஸ்திரேலிய அணியினர் தங்கள் தேசத்தில் இன்று காலடி எடுத்துவைத்துள்ளனர்.

இந்தியாவுடனான ரி 20 போட்டிக்காக அணியின் ஏழு வீரர்கள் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியுள்ளனர்.

அவர்கள் தங்களிற்கான பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளனர் என பட்கமின்ஸ் சிட்னி விமானநிலையத்தில் தெரிவித்துள்ளார்.

austrail-team_aus.jpg

உலக கிண்ணம் என்பது நான்கு வருடங்களிற்கு ஒரு முறை கிடைக்கின்ற வாய்ப்பு அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் விளையாடுவது மிகவும் கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு வெளியே ஆசஸ் தொடர் உலக டெஸ்ட் சம்பியன்சிப் போன்றவற்றில் விளையாடிய பின்னரே உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடினோம் என தெரிவித்துள்ள அவர் இதனை விடசிறந்த முறையில் எங்களால் திட்டமிட்டிருக்க முடியாது நாங்கள் மிகவும் திருப்தியுடன் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றியின் எதிரொலி தனக்குள் இன்னமும் ஒலித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள கமின்ஸ் முதல் இரண்டு போட்டிகளில் தோற்றவுடன் உலக கிண்ணப்போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்கான வாய்ப்புமுடிவிற்கு வந்துவிட்டது என நினைத்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை சொல்வதென்றால் எங்களிற்கு மிகவும் குறைந்தளவு வாய்ப்பே உள்ளதாக நான் நினைத்தேன் என குறிப்பிட்டுள்ள பட் கமின்ஸ் உண்மயில் அது திடீர் மரணமாக காணப்பட்டது முதல் இரண்டு போட்டிகளின் பின்னர்  நாங்கள் அரையிறுதிக்கு செல்வதென்றால் எந்த தவறையும் செய்யக்கூடாது என நினைத்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதன் பின்னர் அவ்வாறே பயணித்தோம்,வெற்றிகளிற்கான வழிகளை கண்டுபிடித்தோம்,உலக கிண்ணத்திற்கு முன்னரே இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/169937

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பையன்26 said:

வார‌ கிழ‌மை இந்தியா எதிர் அவுஸ்ரேலியா 20ஓவ‌ர் போட்டிக‌ளில் விளையாடின‌ம்..........அந்த‌ போட்டியில் இள‌ம் இந்திய‌ வீர‌ர்க‌ள் தெரிவு செய்ய‌ப் ப‌ட்டு இருக்கின‌ம்........ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌ இர‌ண்டு வீர‌ர்க‌ள் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கின‌ம் மீத‌ம் உள்ள‌ வீர‌ர்க‌ளுக்கு ஓய்வு அளிக்க‌ப் ப‌ட்டு இருக்கு........இள‌ம் இந்திய‌ன் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள்.................

அந்த பொயிலை வாயன்(சூரியகுமர்) தான் கப்டனாமே..அப்ப ரீம் உருப்பட்டதுபோல்தான்...அவருடைய வாய் அசைவதுபோல...துடுப்பு அசைவதில்லை....ஆக வாய் மட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, alvayan said:

அந்த பொயிலை வாயன்(சூரியகுமர்) தான் கப்டனாமே..அப்ப ரீம் உருப்பட்டதுபோல்தான்...அவருடைய வாய் அசைவதுபோல...துடுப்பு அசைவதில்லை....ஆக வாய் மட்டும்

அவ‌ர் எப்ப‌வோ ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்டு இருப்பார் தொட‌க்க‌த்தில் 20ஓவ‌ர் விளையாட்டில் 3செஞ்சேரி அடிச்ச‌வ‌ர் அத‌னால் இவ‌ருக்கு இந்திய‌ அணியில் நிர‌ந்த‌ இட‌ம் கிடைச்ச‌து.........இந்த‌ அவுஸ்ரேலியா தொட‌ரிலும் சுத‌ப்பினால் வீட்டில் இருந்து சுவிங்க‌ம் ச‌ப்ப‌ ச‌ரியா இருக்கும்.........இவ‌ரை விட‌ வ‌ய‌து குறைந்த‌ திற‌மையான‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்க‌ இவ‌ரை அணியில் வைத்து இருப்ப‌து அணிக்கு பின்ன‌டைவு..................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, suvy said:

இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது.

இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும் ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை.

தோனி எப்படி அத்தனை பட்ஸ்மன்களின் அசைவுகளையும் நுணுக்கமாய் தனக்குள் சேமித்து வைத்து தனது பந்து போடுபவர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்தினாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவுஸ் காப்டனும் இந்திய பாட்ஸ்மன்களின் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு, களத்தடுப்பு,பந்து போடுதல் மூலம்  இந்த வெற்றியை சாதித்து இருக்கின்றார்.......! 👍

நீங்கள் கூறுவது போலவே வர்ணையாளர்களும் குறிப்பிட்டிருந்தார்கள், சற்று மாறுதலாக உதாரணமாக அகலமான களத்தடுப்பின் மூலம் இரண்டு களத்தடுப்பு இடங்களை ஒரே நபர் கையாளும் விதமாக அதற்கேற்றவாறு களத்தடுப்பாளர்களும் தமது அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்தினர்.

அவ்வாறு சேமித்த (வலது புறம்) களத்தடுப்பாளர்களை (இடது புறமாக) மறு பக்கம் அதிகளவில் பயன்படுத்தியிருந்தார் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு, குறிப்பாக பந்தினை மிக சரியான அளவுகளில் (முன் காலில் சென்று விளையாடினால் பந்து மட்டை உயரமான பகுதியில் பட்டு கட்டுப்பாட்டை இழக்கும், அதே நேரம் பின் காலில் சென்று தூக்கி அடிப்பதற்கு ஏற்ற உயரத்திற்கும் குறைவான ஒரு சிக்கலான அளவுகளில்) பந்து வீசினர் ( 3 விக்கெட்டுகள் அவ்வாறு இந்தியா இழந்த நினைவு கில், கோலி, மூன்றாம் நபர் நினைவில்லை).

அளவு குறைந்த பந்துகளை வீசி மட்டையாளர்களை தூக்கி அடிக்க தூண்டினர், அதனை பிடி எடுப்பதற்காக இடது புறமாக வழமைக்கு மாறாக அதிக வீரர்களை களத்தடுப்பில் பயன்படுத்தியிருந்தார்.

அவுஸ் அணித்தலைவர் தனது உத்தியினை சரியாக செயல்படுத்தியிருந்தார், மறுவளமாக இந்திய அணித்தலைவர் ஏற்கனவே திட்டமிடாத சில உத்திகளை  களநிலைக்கு ஏற்ப செயற்படுத்தி அதனால் பாதிப்பு ஏற்பட்டதோ என கருதுகிறேன் ( எனது கருத்து தவறாக இருக்கலாம்) உதாரணமாக சிராஜிற்கு பதிலாக சமி பந்து வீச்சு, அவசர அவசரமாக சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களை முடிக்க நினைத்தமை.

இந்தியணித்தலைவரின் முடிவு பற்றி வாதப்பிரதிவாதங்கள் பல உள்ளன சரியா  பிழையா என தெரியாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, alvayan said:

அந்த பொயிலை வாயன்(சூரியகுமர்) தான் கப்டனாமே..அப்ப ரீம் உருப்பட்டதுபோல்தான்...அவருடைய வாய் அசைவதுபோல...துடுப்பு அசைவதில்லை....ஆக வாய் மட்டும்

அவுஸ்ரேலியா தேர்வுக்குழுவாள்

தெரிவு செய்ய‌ப் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் அனுப‌வ‌ம் மிக்க‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ள்..........இந்த‌ கோப்பையையும் அவுஸ் வென்றால் ஒரே ஆண்டில் இந்தியா தொட‌ர்ந்து அவுஸ்ரேலியாவிட‌ம் கோப்பையை ப‌றி கொடுத்த‌ என்று பேச‌ப் ப‌டும் ஹா ஹா 😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, பையன்26 said:

பையா நடராஜன் நிலமை என்னாச்சு?

ஒரு சத்தத்தையும் காணமே?

Posted
On 22/11/2023 at 06:54, suvy said:

இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது.

இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும் ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை.

தோனி எப்படி அத்தனை பட்ஸ்மன்களின் அசைவுகளையும் நுணுக்கமாய் தனக்குள் சேமித்து வைத்து தனது பந்து போடுபவர்களை அதற்கேற்றவாறு பயன்படுத்தினாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் அவுஸ் காப்டனும் இந்திய பாட்ஸ்மன்களின் பலவீனங்களைத் தெரிந்து கொண்டு, களத்தடுப்பு,பந்து போடுதல் மூலம்  இந்த வெற்றியை சாதித்து இருக்கின்றார்.......! 👍

அவுஸ்திரேலியா ஐ பி எல்லில் இந்தியாவின் ஒவ்வொரு வீரரையும் மிக சரியாக  கணித்து அதற்கு ஏற்றால் போல் தம்மை தயார் படுத்தி உள்ளார்கள். மைதானங்கள் கூட அவர்கள் விளையாடிய படியால் (ஐ பி எல்லில்) பெரிய கஸ்டம் அவர்களுக்கு இருக்கவில்லை.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா நடராஜன் நிலமை என்னாச்சு?

ஒரு சத்தத்தையும் காணமே?

காயமாக இருந்தவர். ஐ பி எல்லின் கடைசி போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
1st T20I (N), Visakhapatnam, November 23, 2023, Australia tour of India
 
AUS FlagAUS
(1.3/20 ov) 15/0
IND FlagIND

India chose to field.

17 minutes ago, nunavilan said:
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா நடராஜன் நிலமை என்னாச்சு?

ஒரு சத்தத்தையும் காணமே?

காயமாக இருந்தவர். ஐ பி எல்லின் கடைசி போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

ஒதுக்கி விட்டார்கள் போல தெரிகிறது.

அடுத்த ஐபிஎல் இல் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://crichdplayer.com/willow-cricket-live-stream-play

தற்போது நடைபெறும் விளையாட்டைப் பார்க்க.

கணனியில் மட்டும் முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

பையா நடராஜன் நிலமை என்னாச்சு?

ஒரு சத்தத்தையும் காணமே?

இனி அவ‌ர் இந்திய‌ அணிக்குள் வ‌ருவ‌து சிர‌ம‌ம் அண்ணா

மூன்று வ‌ருட‌ம் ஆக‌ போகுது அவ‌ர் க‌ட‌சியா இந்திய‌ அணியில் விளையாடி...........கோலி மாதிரி கிரிக்கேட்டில் உட‌ம்பை எப்ப‌வும் க‌ட்டுக் கோப்பாய் வைத்து இருக்க‌னும்..........பயிற்ச்சின் போது மிக‌ க‌வ‌ண‌மாய் இருக்க‌னும்...............இந்தியா அணிக்குள் உள்ள‌ வ‌ர‌ எத்த‌னையோ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் காத்து இருக்கின‌ம்

ந‌ட‌ராஜ‌னை இனி ஜ‌பிஎல்ல‌ தான் பார்க்க‌ முடியும்.............முன்னாள் த‌மிழ‌க‌ வீர‌ர் ப‌த்திரிநாத்த‌ எப்ப‌டி ஓர‌ம் க‌ட்டினார்க‌ளோ அதோ போல் ந‌ட‌ராஜ‌னை ஓர‌ம் க‌ட்டி விட்டு வ‌ட‌ நாட்டானை கொண்டு வ‌ந்து போடுவானுங்க‌ள்

உவ‌ங்க‌ட‌ எளிய‌ ம‌ன‌சுக்கு தான் இந்தியா ப‌ல‌ வ‌ருட‌மாய் கோப்பை தூக்காம தோல்விய‌ ச‌ந்திச்சு வெறும் கையோட‌ போகின‌ம்😁................

Edited by பையன்26
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, பையன்26 said:

ந‌ட‌ராஜ‌னை இனி ஜ‌பிஎல்ல‌ தான் பார்க்க‌ முடியும்.............முன்னாள் த‌மிழ‌க‌ வீர‌ர் ப‌த்திரிநாத்த‌ எப்ப‌டி ஓர‌ம் க‌ட்டினார்க‌ளோ அதோ போல் ந‌ட‌ராஜ‌னை ஓர‌ம் க‌ட்டி விட்டு வ‌ட‌ நாட்டானை கொண்டு வ‌ந்து போடுவானுங்க‌ள்

கடந்த ஐ பி எல் லிலும் பெரிதாக சாதிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

கடந்த ஐ பி எல் லிலும் பெரிதாக சாதிக்கவில்லை.

இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ ர‌ன்சை க‌ட்டுப் ப‌டுத்தினார்........பாப்போம் அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ எப்ப‌டி விளையாடுகிறார் என்று.........விளையாட்டுக்கு அப்பால் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் ந‌ல்லா விளையாட‌னும் என்று த‌ன‌து ஊரில் மைதான‌ங்க‌ள் க‌ட்டி இள‌ம் பெடிய‌ங்க‌ளுக்கு ந‌ல் வ‌ழி காட்டி இருக்கிறார்............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காணொளியில் அவுஸின் களத்தடுப்பு,ஆடுகளத்தன்மை (மேலே கூறிய விடயம்) பற்றியும் அஸ்வின் கூறுகிறார்.

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.