Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்படம் - 12.09.2007

Featured Replies

s2b.jpg

* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பணர்கள் தமிழ் கலாச்சாரத்தில் திணித்த இந்து மத மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து, பகுத்தறிவு நோக்கிய பயணத்தை விபரிக்கும் கருத்துப்படம் மிகவும் அபாரமாக உள்ளது. சிந்தனையாளகளுக்கும் ஓவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-சபேஸ்-

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பணர்கள் தமிழ் கலாச்சாரத்தில் திணித்த இந்து மத மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து, பகுத்தறிவு நோக்கிய பயணத்தை விபரிக்கும் கருத்துப்படம் மிகவும் அபாரமாக உள்ளது. சிந்தனையாளகளுக்கும் ஓவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-சபேஸ்-

இதில் சொல்லப்பட்ட விடயம் எவ்வாறு சைவக்கோவில்களை இடித்து விகாரைகளை உருவாக்குகிறார்கள் என்பதே. அதாவது தமிழர்களின் பூர்விக இடங்களை எவ்வாறு சிங்களவர்களின் இடங்களாக மாற்றுகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்லப்பட்ட விடயம் எவ்வாறு சைவக்கோவில்களை இடித்து விகாரைகளை உருவாக்குகிறார்கள் என்பதே. அதாவது தமிழர்களின் பூர்விக இடங்களை எவ்வாறு சிங்களவர்களின் இடங்களாக மாற்றுகிறார்கள் .

நீங்கள் சொல்லுறதும் சரிபோல தான் இருக்கு... இங்கை (யாழ்களத்தில) எப்பவுமே "கோயில இடிக்கிறதுதான் பகுத்தறிவு" எண்டு வாசிக்கிறதாலயோ என்னவோ, என்னுடைய சிற்றறிவும் அந்த பக்கத்தாலயே சிந்திச்சிட்டுது. விளக்கத்திற்கு நன்றி கந்தப்பு.

-சபேஸ்-

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது படைப்பலம் இருப்பவன்

"புத்தனை சிவன் ஆக்கலாம்

சிவனை புத்தன் ஆக்கலாம்" என்ன உலகம் அப்பா இது. சிவனும் புத்தனும் விசில் அடிச்சுக்கொன்டு ஜாலி யாக இருப்பார்கள் மேலுலகத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்லப்பட்ட விடயம் எவ்வாறு சைவக்கோவில்களை இடித்து விகாரைகளை உருவாக்குகிறார்கள் என்பதே. அதாவது தமிழர்களின் பூர்விக இடங்களை எவ்வாறு சிங்களவர்களின் இடங்களாக மாற்றுகிறார்கள் .

தமிழர்கள் எல்லாம் சைவர்கள் அல்ல இதில் கிறிஸ்தவர்களும் அடங்குவார்கள் இந்த கருத்து படத்தை போட்டுவிட்டு தமிழர்களின்பூர்வீகம் என்று சொல்வது அழகல்ல,சைவர்களின் பூர்வீகம் என்றால் தான் சரியாக இருந்திருக்கும்,இவ்வாறு கூறுவதால் ஏனைய கிறிஸ்தவ சகோதர்கள் மனதில் மனவருத்தம் ஏற்படும்,இவ்வாறு பிரித்து காட்டுவது ஒரு விதத்தில் எமது தேசிய போராட்டதிற்கு எதிரானது,ஏனெனில் எமது போராட்டதில் குறிப்பிட்ட விகிதம் கிறிஸ்தவசகோதரர்கள் போராடுகிறார்கள்.

*இதில் நாம் முக்கியமாக சொல்ல வருவது என்னவென்றால் சைவர்களுக்கு மட்டும் சிங்கள் பேரினதவாதத்தால் பாதிக்கபடவில்லை ஏனைய தமிழ் பேசும் கிறிஸ்தவ்,முஸ்லீம் மதத்தவர்களும் பாதிக்கபடுகிறார்கள்,இந்த கருத்து படத்தின் மூலம் சைவதமிழர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு என்ற கோட்பாடு வருகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் சிங்களவர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்களும் பேரினவாத சிந்தனையோடு தான் இருக்கின்றார்கள் என்பதை நிருபிக்க என்ன செய்யலாம் புத்தரே!

அப்படி என்றால் சிங்களவர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்களும் பேரினவாத சிந்தனையோடு தான் இருக்கின்றார்கள் என்பதை நிருபிக்க என்ன செய்யலாம் புத்தரே!

அவர்களை பற்றிய பேச்சு நமக்கு தேவையில்லை நமக்காக உயிர்தியாகம் செய்யும் நம் மண்ணிண் மைந்தர்களை பற்றி தான் கதைக்கபடுகிறது ,சிங்களவர்களிள் சைவர்கள் இருந்து அவர்களும் இனவாத சிந்தனையோடு இருந்திருந்தால் அவர்களும் பேரினவாதிகளே.

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை பற்றிய பேச்சு நமக்கு தேவையில்லை நமக்காக உயிர்தியாகம் செய்யும் நம் மண்ணிண் மைந்தர்களை பற்றி தான் கதைக்கபடுகிறது ,சிங்களவர்களிள் சைவர்கள் இருந்து அவர்களும் இனவாத சிந்தனையோடு இருந்திருந்தால் அவர்களும் பேரினவாதிகளே.

நானும் இதை தான் நினைத்தேன் அதை ஜம்முபேபி தெளிவாக சொல்லிவிட்டது .............. :D B)

போனமுறை வந்த கருத்துப்படத்துக்கும் இந்தமுறை வந்த கருத்துப்படத்துக்கும் தொடர்பு இருக்குப் போல. போனமுறை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் பற்றி வந்தது. இந்தமுறை சைவர்கள் பற்றி வந்திருக்கு. அடுத்தமுறை கிறிஸ்தவர்கள் பற்றி வருமா? நான் நினைக்கவில்லை. கிறிஸ்தவம் சம்மந்தமான விடயத்தில் பெளத்த சிங்களப் பேரினவாதம் தலையிடாது என்றே நினைக்கிறேன்.

போனமுறை வந்த கருத்துப்படம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=27973

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை தான் நினைத்தேன் அதை ஜம்முபேபி தெளிவாக சொல்லிவிட்டது ..............

கந்தப்பு சொல்வது போன்று இங்கே கருத்துப்படம் என்பது ஒரு கருத்தைச் சொல்லவே இணைக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதை மதச் சிந்தனையாக நோக்கியது தங்களின் தவறு. ஒரு கருத்துப்படத்தில் எல்லோரையுமோ, அல்லது எல்லா விடயங்களையுமோ பேசப்பட வேண்டிய தேவையில்லை. அதைத் தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

சைவ சின்னங்களை இப்படி அழித்து அதற்குப் பௌத்த மேலாதிக்கத்தைச் செலுத்துவது புதுமையான ஒன்றல்லவே. அவ்வாறு இடைச் செருகலால் தான், சிவனைத் தவிர, மிகுதி இந்துக் கடவுள்களை இலங்கையில் பௌத்தர்கள் இன்னமும் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது சான்று.

ஐமுனாவை யம்முபேபி என்பதில் ஒரு தவறுமே இருப்பதாகத் தெரியவில்லை. என்னத்தைப் பற்றிக் கதைக்கின்றார்கள் என்பதே பிள்ளை அறியுமோ தெரியவில்லை. மண்ணின் மைந்தர்களைப் பற்றி இங்கே கதைக்கின்றோமாம். ரெம்பக் கொடுமை....

போனமுறை வந்த கருத்துப்படத்துக்கும் இந்தமுறை வந்த கருத்துப்படத்துக்கும் தொடர்பு இருக்குப் போல. போனமுறை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் பற்றி வந்தது. இந்தமுறை சைவர்கள் பற்றி வந்திருக்கு. அடுத்தமுறை கிறிஸ்தவர்கள் பற்றி வருமா? நான் நினைக்கவில்லை. கிறிஸ்தவம் சம்மந்தமான விடயத்தில் பெளத்த சிங்களப் பேரினவாதம் தலையிடாது என்றே நினைக்கிறேன்.- இளைஞன்

----------------------------------------------------------------------

அப்படி சொல்ல முடியாது இளைஞன். ஜிம் பிறவுண் அடிகளாரின் கதி என்ன ஆயிற்று. நவாலி சென் பீற்றர் தேவாலயத்தின் உயிர்ப்பலி என்னவாயிற்று. கிருத்துவ தலங்கள் மீதும் தென்னிலங்கையில் தாக்குதல் நடந்துள்ளதே. பல தேவாலயங்களை இலக்கு வைத்து குண்டுகள் வீசப்பட்டுள்ளதே.

----------------------------------------------------------------------------------------------------

அப்படி என்றால் சிங்களவர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கின்றார்களேஇ அவர்களும் பேரினவாத சிந்தனையோடு தான் இருக்கின்றார்கள் என்பதை நிருபிக்க என்ன செய்யலாம் புத்தரே!- தூயவன்

-----------------------------------------------------------------------------------------------

பிறேமதாசாவும் கதிர்காமம் போய் கும்பிட் டிருக்கின்றார் மகிந்தவும் போகின்றார். அதற்காக அவர்கள் சைவத்தை மதிக்கின்றார்கள? பௌத்த இனவாதம் என்பது மதத்தை தாண்டி விஸ்வரூபம் எடுக்கின்றது. அப்படி எடுக்கும் போது அவர்கள் மதத்தை அது எதுவாக இருந்தாலும் (கிறித்துவம் இஸ்லாம் சைவம்) அவர்களை தமிழர்கள் என்றே அடிக்கின்றனர். வேற்று மதங்களை அழித்து பொளத்த மதத்தை நிறுவ முற்படுகின்றனர். இதிலிருந்து தெரிவது இனவாதத்தை வளர்க்க பொளத்தம் பயன்படுத்தப்படுகின்றது தவிர சிங்களத்திடம் இருப்பது இன வாரியான அணுகுமுறை. சிங்கள மொழி இன வாரியான அணுகு முறையில் சிங்களத்தின் அனைத்து மதப்பிரிவினரும் ஒன்றுபடுகின்றனர். தவிர சிங்கள கிருத்துவர்கள் தமிழ் கிருத்துவர்கள் தாக்கப்படும் போது சிங்கள அரசுக்கு எதிராக கிளர்ந்து எழாமல் அடக்கி வாசிக்கின்றனர். அதே போல் சிங்கள முஸ்லீம்களும். அதே போல் கதிர்காமத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் சிங்களவர்கள் தொண்டமனாறு தேர் எரித்ததுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்களா? மதத்தை தாண்டிய இனவாதம் சிங்களம் என்ற இனத்தின் அடிப்படையில் உண்டு. தமிழ் பேசும் மக்களும் கிருத்துவம் சைவம் இஸ்லாம் என்ற மதத்தை தாண்டி தமிழர்கள் என்ற உணர்வில் தேசியத்தின் பால் ஒன்றுபட வேண்டும்.

பதிலுக்கு நன்றி சுகன்... நீங்கள் சொல்வது போல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடந்தனதான். ஆனால், அவற்றை யுத்தம், யுத்தத்தினாலான பாதிப்பு என்பதன் கீழ் உள்ளடக்கிவிடுவார்கள். அதே போல பாதிரியார் பற்றிய விடயம் கூட ஒட்டுக்குழுக்கள் என்பதன் கீழ் அடக்கிவிடுவார்கள். தமிழர் பூர்வீக நிலங்களுக்கு வெளிப்படையாகவே சிங்களப் பெயர்கள் சூடுவது போலவும், போன கருத்துப்படத்தில் சொல்லியிருந்த மசூதி விடயம் போலவும் கிறிஸ்தவ விடயத்தில் தலையிடுவார்களா?

அது தவிரவும் நீங்கள் சொன்னது போல் இங்கு மதம் முதன்மைப் பிரச்சனையில்லை. சிங்களப் பேரினவாதம் முதன்மைப் படுத்தப்பட்ட போதும் அந்தச் சிங்களப் பேரினவாதம் தன்னை பெளத்தப் பேரினவாதமாகவே அடையாளப்படுத்துகிறது. இல்லையென்று சொன்னால் திடீரென்று தோன்றும் புத்தர் சிலைகளுக்கு என்ன காரணமாக இருக்கமுடியும். அப்படியிருந்தும் நீங்கள் சொன்னதுபோல் தெற்கில் பெளத்தர்கள் கிறிஸ்தவர்களாகவும், இந்துக் கோயில்களுக்கு செல்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

சிலவேளை இப்படியொரு கேள்வியைக் கேட்டுப்பார்த்தால் பிரச்சனை விளங்கும்: தமிழர்கள் எல்லோரும் பெளத்தர்கள் ஆகிவிட்டால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துவிடுமா? அல்லது தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களாக (சிங்கள மொழி பேசுபவர்களாக) மாறிவிட்டால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துவிடுமா? :D

Edited by இளைஞன்

சிலவேளை இப்படியொரு கேள்வியைக் கேட்டுப்பார்த்தால் பிரச்சனை விளங்கும்: தமிழர்கள் எல்லோரும் பெளத்தர்கள் ஆகிவிட்டால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துவிடுமா? அல்லது தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களாக (சிங்கள மொழி பேசுபவர்களாக) மாறிவிட்டால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

---------------------------------------------------------------------------------------------

தமிழர்கள் எல்லோரும் பொளத்தர்கள் ஆகிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று ஜே ஆர் ஜேவர்த்தனா முன்பு சொல்லியிருக்கின்றார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. ஏனெனில் இனம் ஆதன் கட்டுமானம் எப்படி உள்ளது என்று பார்த்தால் சிங்கள இனம் தம்மை ஆரியர் என்கின்றது. ஆனால் கடசி சிங்கள மன்னன் தமிழில்தான் கையெழுத்திட்டான் என்கின்றது வரலாறு.

ஆரயர் திராவிடர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கின்ற மனோநிலையில் கட்டப்பட்ட உயர் குடிகள் என்ற கருத்துருவாக்கம் பொளத்த பேரின வாதத்தில் கலந்துள்ளதே பெரிய பிரச்சனை.

இந்த பிரச்சனையில் தமிழகத்தின் திராவிட ஆரிய வாதங்கள் தலையிடுகின்றது ஒரு தொடர்கதையாக சிங்களத்தை வலுப்படுத்துகின்றது. குறிப்பாக திராவிடர் சார்ந்த கொள்கையுடையோர் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும் ஆரியர் என்று சொல்லப்படுவோர் சிங்களத்தை அனுசரித்து போவதும்தற்போதைய சூழ் நிலையில் சுட்டிக்காட்டினாலும் அடிப்படையில் மதவாரியான ஏற்றதாழ்வுகள் ஈழத்தமிழர்கள் ஆரியரல்ல திராவிடர் என்று பறைசாற்றுகின்றது.

ஆரியம் திராவிடம் எல்லாம் ஒன்றும் கிடையாது ஆரியரும் இந்தியாவின் பூர்வகுடிகள் என்ற வாதம் தற்போது தலை தூக்கினாலும் இந்தியாவில் வகுப்பு வாதப்பிரச்சனைகள் தாழ்தப்பட்ட மக்கள் பிரச்சனைகள் இருக்கும் வரை ஆரியர் திராவிடர் என்ற கருத்து இருந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் சிங்களத்தின் ஆரியம் திராவிடம் என்ற வாதம் இந்தியாவில் வலு இழக்கும் வரை தொடரும் என்றும் கொள்ளலாம்.

"சிங்களப் பெருந்தேசிய இனத்தின் அடிப்படைகளும் மேலாதிக்கமும்" என்ற நூலில் ஒரு பந்தியை ஆதாரமாக தருகின்றேன்பக்கம் 28இ 29" -சமுத்திரன்

------------------------------------------------------------------------------------

"சிங்கள பொளத்த மறுமலர்ச்சியின் பெரும் தலைவராக விளங்கியவரான அநாகரிக தர்மபாலா (1864-1933) பொளத்த புனித நகரான அனுராதபுரவிலிருந்து கிறிஸ்தவ கோவில்கள் மட்டுமல்லாது முஸ்லீம்களின் கசாப்பு கடைகளையும் மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சிலும் எழுத்திலும் சிங்கள பொளத்தர்கள் அல்லாதோர் குறிப்பாகத் தமிழர் முஸ்லீம்கள் இ மலையாளத்தார் எல்லோரும் வந்தேறு குடிகள்இ வெளியார்இ அகற்றப்பட வேண்டியவர்கள் என்ற கருத்தே வலுப்பெற்றிருந்தது. தமிழர்களை தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்களாக சிங்கள பௌத்த நாகரீகத்தை அழிக்க முயன்ற எதிரிகளின் பரம்பரையினரினராக கண்ட தர்மபாலா முஸ்லீம்களை வியாபாரம் செய்ய வந்து அழையா விருந்தாளிகளாய்ச் சிங்களத்தீவில் தங்கிவிட்டவர்களாக் குறிப்பிட்டார்.

இலங்கையின் உண்மையான உரிமையாளர்கள் சிங்கள பொளத்தர்களாயிருக்கும் போது அவர்களுக்குரிய இடங்களைத் தமிழர்கள்இ முஸ்லீம்கள்இ கிறிஸ்துவர்கள் பெற்றிருப்பது அநியாயம் என்று செய்தியை ஜனரஞ்சகப்படுத்துவதற்கு உதவியாக தர்மபாலா போன்றோர் சில புராணக்கதைகளின் உதவியை நாடினார்கள். முதலில் இந்த நாடு சிங்கள பௌத்தர்களின் நாடு மட்டுமே என்ற உணர்வினை மக்கள் மத்தியில் பரப்புவது அவசியமாயிற்று. சிங்கள பௌத்தர்களின் உரிமைப்பாட்டினையும் உயர்வான இரத்தத்தையும் நிருபிக்க மூன்று புராணக்கதைகளைப்பயன் படுத்தினார். ஓன்று. விஜயன் ஒரு வட இந்திய இளவரசன். ஓர் ஆரியன். அவனும் அவனுடைய உயர்வம்ச சகாக்கள் எழுநூறு (700) ஆண்களும் இ தர்மபாலாவினால் 1902 ம் ஆண்டு அமரிக்காவில் வெளியிடப்பட்ட பிரசுரமென்றின் படி இ இரண்டாயிரத்து நானூற்றி நாற்பத்தாறு வருடங்களுக்கு முன் இலங்கை மண்ணில் வந்திறங்கினர். இலங்கை மண்ணில் பூர்வீக குடிகளை அடிமைகளாக்கிய விஜயன் இன்னொரு "ஆரிய மன்னனாம் மதுரை பாண்டியனின் மகளை மணம் செய்தான். இதே மன்னன் விஜயனின் சகாக்களும் 699 உயர்வர்க்க கன்னிகளை மணம் செய்ய அனுப்பி வைத்தானாம். ஆகவே இரண்டு ஆரிய குடும்பங்களின் சேர்க்கையினால் எழுந்தது சிங்கள இனம்.

இந்த கட்டுக்கதை இரண்டாவது கட்டுக்கதைக்கு வழிவகுத்தது. அதுவே சிங்களவர் பரிசுத்தமான ஆரிய இரத்தத்தை கொண்ட உயர்பிறப்புக்கள் என்பதாகும். தர்மபாலாவின் காலத்தில் ஆரியர் மற்றய இனங்களை வெற்றி கொண்ட உயர் இனத்தவர் என்ற கருத்துக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இதற்கேற்பக் கர்ண பரம்பரைப் புராணக் கதைகளுக்குப் புத்துயிரும் புது உருவும் கொடுப்பதில் வெற்றி கண்டார்கள் தர்மபாலா பேன்றோர்.

சிங்கள இனத்தவரின் தூய்மை பற்றி பெருமைப்பட்ட தர்மபாலா தம் இனத்தவர்களிடம் அடிமை இரத்தம் இல்லை என்றும் அவர்களைப் புற மதத்தினரான தமிழராலோ அல்லது கலாச்சார சின்னங்களை அழித்தொழிக்கும் ஐரோப்பியர்களாலோ ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாவில்லை என்றும் கூறினார். ஆரிய மனப்பாங்கினை பரப்பி சிங்களவர் மற்ற இலங்கையர்களையும் விட விசேடமான உயர் இனத்தவர் என்ற சிந்தனையை ஆழமாக்கி சிங்களவர்களின் தனித்துவத்துக்கு ஒருவித தார்மீக ஆளுமையையும் கொடுக்கும் நோக்குடன் மூன்றாவது புராணக்கதையையும் பயன்படுத்தினார். அதுவே புத்த பகவானின் இலங்கை விஜயம் ஆகும். புத்த பகவானே நேரில் வந்து ஆசீர்வதித்து அருள்பலித்த விசேடமான சிங்கள பொளத்தர்களின் நாடு இலங்கை என்பது ஜனரஞ்சக வரலாறாயிற்று.

------------------------------------------------------------------------------------------------------------------------------

இவ்வாறு கட்டப்பட்ட சிங்கள இனத்தின் உளவியல் அதாவது உயர்குடிகள் என்ற உளவியல் ரீதியான மனோபாவம் தான் இனவாதத்தின் அச்சாணி என்று கூட சொல்ல முடியும்.

தமிழர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை சிங்களம் நன்கு பயன்படுத்துகின்றது. மத முரண்பாடுகள் சாதிய முரண்பாடுகள் வர்க முரண்பாடுகள் எல்லாம் நன்கு பயன்படுத்துகின்றது. இதன் தற்போதைய விழைவை சிங்களத்துடன் கூட்டு சேர்ந்தியங்கும் தமிழர்களின் துரோகப்போக்கை குறிப்பிடலாம். முஸ்லீம் களின் அரசியல் நிலைப்பாட்டை குறிப்பிடலாம். இந்தியாவின் இந்து பத்திரிகை ராம் போன்றவர்களை குறிப்பிடலாம்.

தமிழர்களை மூர்கத்தனமாக கொல்லவும் அவலப்படுத்தவும் சிங்களம் துணிந்திருக்கின்றது என்ற இனவாத பின்னணி ஒரு பழிவாங்கல் பின்புலத்தை கொண்டது. காலனித்துவக்காலத்தில் தமிழர்களின் உயர்வர்கம் படிப்பிலும் உத்தியோகத்திலும் கோலோச்சிய போது தமிழர்கள் தென்னிலங்கை சிங்களவர்களை பலவாறாக நிந்தித்துள்ளனர் என்பது வரலாறாக தெரிகின்றது. ஆனால் சிங்கள பெருந்தேசியவாதம் உருவான பின் தாம் தம்மை விட தாழ்ந்தவனிடம் அடிமைப்பட்டிருந்தோமா என்ற ஆத்திரம் அடிமட்ட சிங்களமக்களிடம் விதைக்கப்படுவதன் விழைவு மேற் கண்ட மூர்கத்தனத்தின் காரணி என்றும் கருத இடமுண்டு. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவெனில் சிங்களவர்களை நிந்தித்த தமிழர்களின் உயர்வர்கம் சிங்களவனுடன் ஒன்றியது போக லண்டன் கனவுகளுடன் சென்றுவிட்டனர். அடிவாங்குவது சம்மந்தமில்லாத மக்களே அதிகம். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது எமது முரண்பாட்டின் விழைவு. போரட்டம் தோற்றப்பாடு சிங்களம் மூர்கம் கொண்டு தாக்கும் போது ஏற்படுகின்றது. அந்த மூர்கத்தனத்தின் பின்னணியில் அநாகரிக தர்மபாலா போல் பல உயர்குடி தமிழர்கள் அடங்குகின்றனர். இன்று அவர்களின் வாரிசுகள் என்ன அவலம் நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பவர்களாக, போராட்டத்தை சர்வதேச மட்டத்தில் சிதைப்பவர்களாக பலர் உள்ளனர். இவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு சிங்கள பேருந்தேசிய இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பார்களானால் பிரச்சனை விரைவில் தீரும் ஆனால் அப்படி நடக்க எமக்குள் இருக்கும் முரண்பாடுகள் வழிவிடுமா? மதவாரியான முரண்பாடுகளை பயன்படுத்தும் சிங்களம் பிரதேசவாரியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எது எப்படி நடந்தாலும் பெரும் சுமையும் பொறுப்பும் போராட்ட சக்திகள் மீதே விழுகின்றது. அதில் பங்கெடுக்க தமிழர்கள் ஒன்றுபடுவதே பிரச்சனைகளை தீர்கும்.

நன்றி சுகன் உங்களின் விளக்கமாக பொறுமையான பதிலுக்கு :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் வாகரையை புதிய அகழ்வாராய்ச்சிப் பிரதேசமாக அறிவித்ததிலிருந்து கருக்கொண்டவையே இந்தப் படங்கள்.

உதாரணத்துக்கு, அந்த பள்ளிவாசல் படத்தின் தலைப்பில் New archaeological zones என்று இருக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=340762

இப்படியான அகழ்வாராய்ச்சி அறிவிப்புக்களை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை விபரிப்பதாக அந்த பள்ளிவாசல் படமும் அதை தொடர்ந்து எவ்வாறு சந்திக்குச் சந்தி புத்தசிலைகள் உருப்பெற்று பின்னர் அவை "2500 வருடங்கள் பழமை வாய்ந்த" பௌத்த பிரதேசங்களாக மாறுகின்றன என்பதை விபரிக்க அந்த சிவன் விவகாரம் Srilanka archaeological department இல் நடப்பதாகவும் காட்டப்பட்டுள்ளன (அதாவது வாகரையில் ஒரு 2500 வருட பழமையான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்படக்கூடும் என்பதாக.)

ஆக, இந்தப்படங்கள் சில தற்கால நிகழ்வுகளை பிரதிபலிப்பவை என்பதை உறுதியாக கூறமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் பண்டிதர். இதுவரை வந்த கருத்துப்படங்களினை பார்த்தால் அண்மையில் நடந்தவையும், முக்கிய நிகழ்வுகளையும் தான் கருத்துப்படங்களாக யாழில் வரையப்பட்டதாக தோன்றுகிறது. தொப்பிக்கல வெற்றிக் கொண்டாடம், யூலைக் கலவரம், மகிந்தாவுக்கு உள்ள நெருக்கடிகள், ஜ. நா அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாகச் சொல்லும் சிங்கள அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மூஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், புலத்தில் ஈழத்தில் நடப்பது பற்றி கவலைப்படாத எம்மவர்கள், வாகரையில் அகல்வாராய்ச்சிகள். இங்கு மதம் பார்க்கப்படவில்லை. நடப்பவைகள் தான் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழீழப்போராட்டம் எல்லா மதத்துக்கும் பொதுவானது.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு சொல்வது போன்று இங்கே கருத்துப்படம் என்பது ஒரு கருத்தைச் சொல்லவே இணைக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அதை மதச் சிந்தனையாக நோக்கியது தங்களின் தவறு. ஒரு கருத்துப்படத்தில் எல்லோரையுமோ, அல்லது எல்லா விடயங்களையுமோ பேசப்பட வேண்டிய தேவையில்லை. அதைத் தாங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

சைவ சின்னங்களை இப்படி அழித்து அதற்குப் பௌத்த மேலாதிக்கத்தைச் செலுத்துவது புதுமையான ஒன்றல்லவே. அவ்வாறு இடைச் செருகலால் தான், சிவனைத் தவிர, மிகுதி இந்துக் கடவுள்களை இலங்கையில் பௌத்தர்கள் இன்னமும் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது சான்று.

ஐமுனாவை யம்முபேபி என்பதில் ஒரு தவறுமே இருப்பதாகத் தெரியவில்லை. என்னத்தைப் பற்றிக் கதைக்கின்றார்கள் என்பதே பிள்ளை அறியுமோ தெரியவில்லை. மண்ணின் மைந்தர்களைப் பற்றி இங்கே கதைக்கின்றோமாம். ரெம்பக் கொடுமை....

மத சின்னத்தை கருத்து படத்தில் போட்டால் மத சிந்தனை உடன் தான் சிந்திக்க முடியும்,என்னங்கோ நான் சொல்லுறது தப்போ,எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்று எண்ணிணால் அது தவறு.

நல்ல கருப்பொருள் நன்றிகளும் பாராட்டுகளும்

  • கருத்துக்கள உறவுகள்

சைவ சின்னங்களை இப்படி அழித்து அதற்குப் பௌத்த மேலாதிக்கத்தைச் செலுத்துவது புதுமையான ஒன்றல்லவே. அவ்வாறு இடைச் செருகலால் தான், சிவனைத் தவிர, மிகுதி இந்துக் கடவுள்களை இலங்கையில் பௌத்தர்கள் இன்னமும் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது சான்று.

தமிழர்களின் ஜம்பெரும் காப்பியங்களிள் மணிமேகலையும் சிலபதிகாரமும் அடங்கும் (அப்படி பழசுகள் சொல்லீனம் ஆதாரம் என்னிடம் இல்லை,மரபணுபரிசோதணை கேட்டா காட்ட முடியாது)அந்த இரு காப்பியங்களிளும் புத்த மதத்தை தழுவிய தமிழர்களை பற்றியதாக இருக்கின்றது ஆனால் தற்போது தமிழ் பெளத்தர்கள் எவரும் இல்லை எல்லாரும் கட்சி மாறீட்டாங்க போல இருக்கு (எல்லாரும் மதம் மாறிட்டாங்க போல இருக்கு) அது போக தமிழர்கள் ஒரு காலத்தில் மகாஜான பெளத்தர்களாக இருந்திருக்க கூடும் சிங்கள்வர்களில் பெருபாண்மையினவர்கள் தேரவாத பெளத்தர்களாக இருந்திருக்க கூடும்.

மகாஜான பெளத்தர்கள் சிவனை சில அடையாள சின்னங்களை வைத்து வழிபட்டு இருந்திருக்கலாம்,உதாரணமாக சிவலிங்கம்,சூலம் போன்றவை.ஆனால் தேரவாத பெளத்தர்கள் புத்தரை மனித தெய்வமாக வழிபட்டு இருந்திருக்கலாம்.அதனால தான் தேரவாத பெளத்தர்களுக்கு சிவன் மேல் கோபம் போல் தெரிகிறது ஆகவே தான் சைவத்தின் முதன் முதல் கடவுளாகிய சிவனை வழிபடாம இந்துகளில் இருக்கும் விநாயகரையும்,முருகனையும் வழிபடுகிறார்களோ தெரியவில்லை.

எப்படி இருகிறது என்ட ஆராய்ச்சி சகிக்க முடியவில்லையா என்ன செய்வது இதுவும் நம்ம லொள்ளு கருத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்

போனமுறை வந்த கருத்துப்படத்துக்கும் இந்தமுறை வந்த கருத்துப்படத்துக்கும் தொடர்பு இருக்குப் போல. போனமுறை தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள் பற்றி வந்தது. இந்தமுறை சைவர்கள் பற்றி வந்திருக்கு. அடுத்தமுறை கிறிஸ்தவர்கள் பற்றி வருமா? நான் நினைக்கவில்லை. கிறிஸ்தவம் சம்மந்தமான விடயத்தில் பெளத்த சிங்களப் பேரினவாதம் தலையிடாது என்றே நினைக்கிறேன்.

சுகன் அருமையான விளக்கம் நன்றிகள்,

மற்றும் ஏனைய நண்பர்கள் அமோகமாக விளக்கம் கொடுத்திருந்தார்கள்,முதல் இஸ்லாமியர்களின் கருத்து படம் பிறகு சைவர்களின் கருத்து படம் கிறிஸ்தவர்களின் படமும் வரகூடும் என்று புல்லரிக்குது.இஸ்லாமியர்களி?் கருத்து படம் பார்க்கும் போது எமது தமிழர் விடுதலை கூட்டணியின் ஞாபகம் தான் வருகிறது,1975 ஆம் ஆண்டளவில் புத்தளம் பள்ளிவாசலில் 9 முஸ்லீம் மக்களை சிறிலங்கா பொலிசார் படுகொலை செய்தார்கள் அதை 1977 ஆம் ஆண்டு பொது தேர்தல் பிரசாரதிற்கு கூட்டணியினர் மேடைகளிள் பெரிதாக கூச்சலிட்டு கொண்டிருந்தார்கள்,ஆனால் அதே புத்தள தொகுதியில் ஜக்கியதேசிய கட்சியை சேர்ந்த நைனா மரிகார் என்பவர் வெற்றி பெற்று உதவி நிதி மந்திரியாகவும்,அரசாங்கத்தின? அங்கம் வகித்தார் அதன் மூலம் அநேக தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு அரச உத்தியோகங்கள்,வங்கி உத்தியோகங்கள் வாங்கி கொடுத்தார்.

அதே தமிழர் விடுதலை கூட்டணியின் வாரிசுகள் தான் நாங்கள் புலத்தில் இருக்கிறோம் என்ற ரீதியில்,உங்களுடைய (முஸ்லீம்கள்) பள்ளிவாசல்களை உடைத்து விகாரை ஆக்கிறான் என்று கருத்து படம் போடுகிறோம் இது எங்களின் கருத்து முஸ்லீம்களின் கருத்து எப்படி இருக்கும்??இந்த கருத்து படத்தை ஒரு முஸ்லீம் போட்டிருந்தால் அது அவர்களின் உண்மையான வெளிகாட்டாக இருக்கலாம்,ஆனால் தற்போதைய நிலையில் சில வேளை அவர்கள் இப்படி சிந்திகலாம்.ஒரு பகுதியில் விகாரையை வையுங்கோ மற்ற பகுதியில் பள்ளிவாசல் இருகட்டும் ஆனால் இந்து கோயில் வரகூடாது அவர்கள் இதை தமிழிலும் சொல்லலாம் சிங்களத்திலும் சொல்லலாம் இது தான் அவர்களின் கருத்து தற்போது ஆகும் இவ்வளவு வருட போராட்டத்தில் நாம் கண்ட கசப்பான அநுபவம் இது.

அண்மையில் தென் தமீழிழத்தில் பாராளுமன்ற சகோதரின் கொலைக்கு அந்த மதம் இந்த மதம் தான் காரணமாம் என்று கதை அடிபடுகிறது.

பேபி இழுத்தால் தான் கிழசுகளின்ட (கருத்து படங்கள்) கருத்துகள் கொடிகட்டி பறக்கும். :lol:

எல்லாம் அவன் செயல் அவன் இன்றி அணுவும் அசையாது அவன் சொல்லுறான் இவன் செய்யிறான் :P

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் தமிழ் சினிமா டொட் கொம்மில் (அல்லது வேறெங்கோ) ஒரு கட்டுரை வந்தது. அதாவது மலையாளப் படங்களை தமிழுக்கு மாற்றும்போது சில பைன் டீற்றெய்ல்ஸ் ஐ சேர்க்க வேண்டியிருப்பதாக. உதாரணத்துக்கு, படத்தின் முடிவில் நாயகன் ஆசுப்பத்திரிக்கு போகிறார் என்று மலையாளப்படத்தில் வந்தால், அதை தமிழுக்கு மாற்றும்போது, (ஆசுப்பத்திரியால் நாயகன் வந்து) நாயகனும் நாயகியும் பாய்ந்து வந்து கட்டிப்பிடிப்பது போல ஒரு காட்சி வைக்கவேண்டும்.

இப்படி காட்சிகள் வைப்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளது.

முதலாவது: சிலர் நினைக்கிறார்கள், தமிழ் ரசிகர்கள் என்ன அவ்வளவு மட்டமான ரசனையுள்ளவர்களா? இது தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தும் செயல் என்று.

வேறுசிலர் நினைக்கிறார்கள்: இப்படி மட்டமான காட்சிகளை வைத்து வைத்து தமிழ் ரசிகர்களை மட்டமான ரசனை கொண்டவர்களாக மாற்றியதே இந்த சினிமாக்காரர் தான் என்று.

மேற்சொன்ன இரண்டில் எது சரி என்று எனக்குத் தெரியாது.

இனி, புத்தன் சொன்ன கருத்துக்கு வருவோம்.

மத சின்னத்தை கருத்து படத்தில் போட்டால் மத சிந்தனை உடன் தான் சிந்திக்க முடியும்,என்னங்கோ நான் சொல்லுறது தப்போ,எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்று எண்ணிணால் அது தவறு.

உண்மை தான், புத்தரையும் சிவனையு கண்டால் மனம் வழமையான திக்கில் தான் சிந்திக்கும்.

ஆனால்,

பின்னால் இருக்கிற, archaeological department என்று இருப்பதை சேர்த்து வாசிப்பவருக்கு ஒரு கருத்தும்

இன்னும்,

அண்மையில் சில இடங்கள் New archaeological zones என்று அறிவிக்கப்பட்டதை நினைத்து வாசிப்பவருக்கு இன்னொரு கருத்தும் உருவாகும்.

இவ்வாறுதான் நடந்தது என்பதற்கு இங்கு வைக்கப்பட்ட பல பதில்கள் சான்று.

இனி கேள்விக்கு வருவோம்,

யாழ் களத்தில் கருத்துப்படம் இணைக்கும் போது,

1) யாழ்களத்தில் இருப்பவர்கள் எல்லாருமே புத்தனைப் போல நுனிப்புல் மேய்பவர்கள் என்ற கருதுகோள்களை எடுத்து அதற்கேற்றாற்போல காட்சிகள் வைத்து வரைய வேண்டுமா.

அல்லது

2) படத்தை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் கொஞ்சம் நேரம் செலவளித்து ஆழமாக நோக்குபவர்கள் என்ற அனுமானத்தில் வரைவதா?

மேலேஉள்ள கருத்துப்படத்தை புத்தன் ஒருவினாடிக்குமேல் பார்த்திருப்பாரா? இவ்வளவு கருத்துக்கள் அந்தப் படத்தைப்பற்றி வந்தபோதும் நீங்கள் அந்த முதல் வினாடியில் பெற்றவிம்பத்தை மட்டும் வைத்து கருத்து எழுதுவது ஏன்?

Edited by பண்டிதர்

எது எப்படியோ ஒரு கருத்துப்படம் பற்றிய கருத்தாடல்கள் 2 பக்கத்துக்கு வந்திருப்பது ஆர்வத்தின் வழர்ச்சியைக் காட்டுகிறது என்று சொல்லலாம்.

உங்கள் பலதரப்பட்ட எண்ணங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தொடர்ந்து எல்லா கருத்துபடங்களிற்கும் ஆர்வமாக பகிருங்கள்.

நன்றி

எது எப்படியோ ஒரு கருத்துப்படம் பற்றிய கருத்தாடல்கள் 2 பக்கத்துக்கு வந்திருப்பது ஆர்வத்தின் வழர்ச்சியைக் காட்டுகிறது என்று சொல்லலாம்.

உங்கள் பலதரப்பட்ட எண்ணங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தொடர்ந்து எல்லா கருத்துபடங்களிற்கும் ஆர்வமாக பகிருங்கள்.

நன்றி

ஆமால்ல குறுக்ஸ் .......

ஒவரு கருத்து ஒஅடங்களும் சிந்தனைகளை தூண்டுகிறது............

s2b.jpg

* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

சிவன்=கொள்கை.

சிற்பி= ஒட்டுக்குழு.

துறவி=சிங்களபேரினவாதம்.

ஒட்டுக்குழு சிங்களத்திம் இருந்து அற்ப இலாபங்களுக்காக தமது கொள்கையை தமது நியாமான உரிமையை இழந்து அவர்களின் காலடியில் விழுந்து கிடக்கிறது.

ஒட்டுக்குழுக்களின் கொள்கை பற்றைப் பார்த்து எமது வியப்பையும் உலகத்தின் கேலியையும் இரண்டாவது படத்தில் பிறைநிலவும் பாம்பும் விளக்கி நிக்குன்றன.

குறிப்பு: இரண்டாவது படத்தில் புத்தர் காலடியில் இருப்பதெல்லாம் ஒட்டுக்குழுக்கள் விட்டுக் கொடுத்த எமது உரிமைகள்.

Edited by வாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.