Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம்

ஸ்டாக்ஹோம்

உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன.

இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.

 இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கிகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.  

இந்தப் போட்டி வருகிற ஜூன் 8 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த போட்டியை நடத்த 'சுவீடன் செக்ஸ் பெடரேஷன்' ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.  
 
https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உடலுறவு-விளையாட்டுக்கு-அங்கிகாரம்/50-318518

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

உடலுறவு விளையாட்டுக்கு அங்கிகாரம்

'அங்கீகாரம்'

தேய்ந்து செல்லும் மனிதவள மேப்பாட்டுநிலையான மனித உறவுகளும், குடும்ப உறவுகளும் பிளவுண்டு சிதைவுண்டு செல்லும் சூழலில் திருமண இணையர்களிடையேயும், திருமணம் என்பதை வெறுக்கும் இளையோரிடையேயும் ஆரோக்கியமற்ற குமுகாய நிலை வளர்முகமாகிச் செல்கின்றது. இதுபோன்ற விளையாட்டுபோட்டிகள் சிலநேரம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஒரு பரப்புரையாகவும் அமையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டையே விளையாட்டாக விளையாடுறாங்களப்பா. அப்படி என்தான் விளையாடப்போறாங்களோ தெரியாது  😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

தம்பி இந்த போட்டியில் நாங்களும் கலந்து கொள்ளலாமா?

ஆம் என்றால் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி இந்த போட்டியில் நாங்களும் கலந்து கொள்ளலாமா?

ஆம் என்றால் எப்படி?

போட்டி விதி 1: “வயாகரா” குளிசை பாவிக்கக் கூடாதாம். 😂
போட்டி விதி 2: விளையாடும் கட்டிலை சுற்றி… நிறைய பார்வையாளர்கள், ரசிகர்கள் கரகோசம் போட்ட படி நிற்பார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வர வர மனிதனின் புத்தி வக்கிரமாகிக்கிட்டே போகுது.

இதிலும்.. போதை ஊசி பாவிச்சு விளையாடுவினமோ..???!

மேற்கு ஐரோப்பா.. மிக மோசமான சிந்தனையில் போய்க்கிட்டு இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

போட்டி விதி 1: “வயாகரா” குளிசை பாவிக்கக் கூடாதாம். 😂
போட்டி விதி 2: விளையாடும் கட்டிலை சுற்றி… நிறைய பார்வையாளர்கள், ரசிகர்கள் கரகோசம் போட்ட படி நிற்பார்கள். 🤣

சிறி நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டா?

அப்படியானால் ஒரு குழுவாக கலந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணம் உண்டா?

அப்படியானால் ஒரு குழுவாக கலந்து கொள்ளலாம்.

ஈழப்பிரியன் எனக்கும் ஆசைதான், 😜
ஆனால் பார்வையாளர்கள் அதிகம் நின்றால்… எனக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் ????????

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பெண் ????????

போட்டி விதி 3: பெண்… நீங்கள் கூட்டி வர வேண்டும். 😂
(அதுக்கு கம்பெனி பொறுப்பு எடுக்க மாட்டாது.) 🤣

ஓசியில்…. பலகாரம் சுட நிற்கிறார்கள். 😜😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பெண் ????????

எப்படி வசதி?

குழுவில சேர்த்துக்கவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

வர வர மனிதனின் புத்தி வக்கிரமாகிக்கிட்டே போகுது.

இதிலும்.. போதை ஊசி பாவிச்சு விளையாடுவினமோ..???!

மேற்கு ஐரோப்பா.. மிக மோசமான சிந்தனையில் போய்க்கிட்டு இருக்குது. 

வட அமெரிக்காவில் மட்டும் என்ன வாழுதாம்? 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் எனக்கும் ஆசைதான், 😜
ஆனால் பார்வையாளர்கள் அதிகம் நின்றால்… எனக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. 😂

இருட்டுதான் சிறியருக்கு பிடித்தமோ ? 

🤫

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இருட்டுதான் சிறியருக்கு பிடித்தமோ ? 

🤫

கதவு பூட்டா விட்டாலே ஒன்றும் வேலை செய்யாது இங்கே?🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஓசியில்…. பலகாரம் சுட நிற்கிறார்கள். 😜😎

என்ரை வாழ்கையிலை காசு குடுத்ததே இல்லை. :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

போட்டி விதி 1: “வயாகரா” குளிசை பாவிக்கக் கூடாதாம். 😂
போட்டி விதி 2: விளையாடும் கட்டிலை சுற்றி… நிறைய பார்வையாளர்கள், ரசிகர்கள் கரகோசம் போட்ட படி நிற்பார்கள். 🤣

அண்மையில்   யாழ் கள கிரிக்கெட் போட்டியில்   முதலாவது இடம் பெற்றவர்   இந்த போட்டியில் பங்கேற்பர் ஆயின்....இதிலும் முதலாவது வருவார் என நினைக்கிறேன்....உங்கள் கருத்துகள் என்ன    🤣😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி வசதி?

குழுவில சேர்த்துக்கவா?

இல்லை......

இணைப்பில் வேறொருவர் இணைந்துள்ளார்....
உங்கள் கரிசனைக்கு நன்றி..

Anbe Vaa (1966)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

போட்டி விதி 3: பெண்… நீங்கள் கூட்டி வர வேண்டும். 😂
(அதுக்கு கம்பெனி பொறுப்பு எடுக்க மாட்டாது.) 🤣

ஓசியில்…. பலகாரம் சுட நிற்கிறார்கள். 😜😎

பரிசு எவ்வளவு மில்லியன் யூரோ   ???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியதில் இந்தியாவின் ஊடகங்களிலேதான் இந்தச் செய்தி மிகப் பெரும்பாலும் வெளிவந்திருக்கிறது. செய்தியின் தலையங்கத்திலும் தில்லுமுல்லு இருப்பதாகத் தெரிகிறது.

ஆதலால் இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையில் அல்லது செய்தியின் சாராம்சத்தில் பிறழ்வு இருப்பதற்கான சாத்தியப்பாடு அதிகம். 

உசிரோப்பியன்கள் யாராவது உதவலாமே 😁

1 hour ago, விசுகு said:

கதவு பூட்டா விட்டாலே ஒன்றும் வேலை செய்யாது இங்கே?🤪

பூங்கதவே தாழ் திறவாய் பாடல் உங்களுக்காக....

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியதில் இந்தியாவின் ஊடகங்களிலேதான் இந்தச் செய்தி மிகப் பெரும்பாலும் வெளிவந்திருக்கிறது. செய்தியின் தலையங்கத்திலும் தில்லுமுல்லு இருப்பதாகத் தெரிகிறது.

ஆதலால் இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையில் அல்லது செய்தியின் சாராம்சத்தில் பிறழ்வு இருப்பதற்கான சாத்தியப்பாடு அதிகம். 

உசிரோப்பியன்கள் யாராவது உதவலாமே 😁

பூங்கதவே தாழ் திறவாய் பாடல் உங்களுக்காக....

🤣

நான் நம்புகிறேன்   சுவிடன் என்றபடியால்.   ...பண பழக்கத்தை முதல் கொண்டு வந்த  நாடு....பண பழக்கத்தை முதலில் இல்லாமல் செய்யப்போகும். நாடும் சுவிடன். தான்   2050  ஆணடிலிருந்து   கரன்சிகள் அங்கே இருக்காது   .. மேலும் உலகில் ஆண் விபசாரம் உள்ள ஒரேவொரு நாடு   ...இதையும் செய்யலாம்    ரிக்கற். விலை கூட. இருக்கும் வாய்ப்புகள் அதிகம் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 22:53, Kapithan said:

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியதில் இந்தியாவின் ஊடகங்களிலேதான் இந்தச் செய்தி மிகப் பெரும்பாலும் வெளிவந்திருக்கிறது. செய்தியின் தலையங்கத்திலும் தில்லுமுல்லு இருப்பதாகத் தெரிகிறது.

ஆதலால் இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையில் அல்லது செய்தியின் சாராம்சத்தில் பிறழ்வு இருப்பதற்கான சாத்தியப்பாடு அதிகம். 

உசிரோப்பியன்கள் யாராவது உதவலாமே

இந்தியாவின் NDTV, India Today போன்ற ஊடகங்களும் இந்த வினோதமான செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால் இது உண்மையில்லையாம் என சுவீடன் சொல்லியுள்ளது.

செக்ஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வீடன் விளக்கம்!

JegadeeshJun 05, 2023 19:10PM
ஷேர் செய்ய : 
wmB4Dhb8-image.jpg

செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் நாட்டில் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விநோதமான செய்திகள் சமூகத்தில் வேகமாக பரவுவதுடன் அது தொடர்பான விவாதங்களும் உடனே கிளம்பிவிடும்.

அப்படித்தான், ஸ்வீடனில் செக்ஸ் என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ‘செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி’ நடத்தப்படுவதாகவும் செய்தி கடந்த இரண்டு நாட்களாக பரவவிவந்தது.

ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அந்த நாட்டின் அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த நாட்டின் விளையாட்டுத்துறை ,’ஸ்வீடன் நாட்டில் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை.’ என்று கூறியுள்ளது.

மேலும், டிராகன் பிராக்டிக் என்பவர் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். செக்ஸை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார்.

செக்ஸ் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் கடந்த ஏப்ரல் மாதமே நிராகரிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://minnambalam.com/india-news/sex-championship-sweden-explained/

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

இந்தியாவின் NDTV, India Today போன்ற ஊடகங்களும் இந்த வினோதமான செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால் இது உண்மையில்லையாம் என சுவீடன் சொல்லியுள்ளது.

படு பாவியள்.. animiertes-banane-smilies-bild-0007.gif ஆசையை தூண்டி விட்டு,animiertes-banane-smilies-bild-0090.gif மோசம் செய்து விட்டார்கள். animiertes-banane-smilies-bild-0016.gif
நாங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள 
இரவு, பகலாக animiertes-banane-smilies-bild-0046.gif
 "ட்ரெயினிங்" animiertes-banane-smilies-bild-0003.gif   எடுத்து... உடம்பை முறுக்கேற்றி  வைத்திருந்தோம்.  animiertes-banane-smilies-bild-0080.gif எல்லாம்... வீணாய் போய் விட்டது. 😥 animiertes-banane-smilies-bild-0044.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

இந்தியாவின் NDTV, India Today போன்ற ஊடகங்களும் இந்த வினோதமான செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால் இது உண்மையில்லையாம் என சுவீடன் சொல்லியுள்ளது.

சுவிடன். இந்த செய்தி நிறுவனங்களுக்கு எதிராக நட்ட ஈடு கோரி வழங்கு போட  முடியாத??.  தெளிவுபடுத்தியமைக்கு  மிக்க நன்றி    

15 minutes ago, தமிழ் சிறி said:

படு பாவியள்.. animiertes-banane-smilies-bild-0007.gif ஆசையை தூண்டி விட்டு,animiertes-banane-smilies-bild-0090.gif மோசம் செய்து விட்டார்கள். animiertes-banane-smilies-bild-0016.gif
நாங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள 
இரவு, பகலாக animiertes-banane-smilies-bild-0046.gif
 "ட்ரெயினிங்" animiertes-banane-smilies-bild-0003.gif   எடுத்து... உடம்பை முறுக்கேற்றி  வைத்திருந்தோம்.  animiertes-banane-smilies-bild-0080.gif எல்லாம்... வீணாய் போய் விட்டது. 😥 animiertes-banane-smilies-bild-0044.gif

இந்த போட்டியில் உங்களுடன்   பங்குபற்ற. இருந்தவரின்.  படத்தை போட்டால்தான்  நம்புவோம்    

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இந்த போட்டியில் உங்களுடன்   பங்குபற்ற. இருந்தவரின்.  படத்தை போட்டால்தான்  நம்புவோம்    

Premium Photo | Back side of young girl sitting by the sea background

இவர்தான்... அவர்.  
1 நிமிடம், இவரின் படத்தை கண் வெட்டாமல் 
உற்றுப் பார்த்தால் அவரின் முகம் தெரியும். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

Premium Photo | Back side of young girl sitting by the sea background

இவர்தான்... அவர்.  
1 நிமிடம், இவரின் படத்தை கண் வெட்டாமல் 
உற்றுப் பார்த்தால் அவரின் முகம் தெரியும். 😂 🤣

பார்த்தேன்   1 நிமிடம் இல்லை சு.   மா.    ர்  30 நிமிடங்கள்    ஆனால் முகம் தெரியவில்லை.......வயிறு தெரிகிறது    நிறை மாத கர்ப்பமாக இருக்கிறார்.....மட்டுமல்ல சோர்வாகவும்  காணப்படுகிறார்...எனவே இவர் போட்டிக்கு   சரியான நபரில்லை...வெற்றி வாய்ப்புகள் அறவே இருக்காது   🤣 தப்பிவிடடீர்கள்.    வேறு போடடியளார். பார்க்க முடிந்ததால் பார்ககவும். 🤣😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.