Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து – புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து – புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது நீதிமன்றம்

Published By: Rajeeban

09 Jun, 2023 | 06:14 AM
image

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் இரகசிய ஆவணங்களை கையாண்டவிதம் குறித்து  அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தான் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக டிரம்ப் தெரிவிக்கும் குரல்தபதிவொன்று தங்களிற்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவியிலிருந்து விலகி ஆறு மாதங்களின் பின்னர் 2021 ஜூலை மாதம் டிரம்பின் நியுயேர்சி கோல்ப்கிளப்பில் இடம்பெற்ற சந்திப்பில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

சிஎன்என் இது குறித்த விபரங்களை முதலில் அம்பலப்படுத்தியிருந்தது பின்னர் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் மூலம் பிபிசியும் அதனை உறுதி செய்திருந்தது.இதனடிப்படையிலேயே நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.டிரம்பிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இது இடம்பெறும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.இது அமெரிக்காவிற்கு கருப்புதினம் மிகவேகமாக பாரதூரமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நாடாக நாங்கள் காணப்படுகின்றோம் மீண்டும் அதனை வலிமையானதாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
 

https://www.virakesari.lk/article/157307

 

  • கருத்துக்கள உறவுகள்

தானைத் தளபதி  டிரம்புக்கு... நீதிமன்றமாவது  Hair ஆவது.
எல்லாத்தையும் வென்று, அடுத்த ஜனாதிபதியாக வருவது  டிரம்புதான்.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

தானைத் தளபதி  டிரம்புக்கு... நீதிமன்றமாவது  Hair ஆவது.
எல்லாத்தையும் வென்று, அடுத்த ஜனாதிபதியாக வருவது  டிரம்புதான்.  🤣

இன்னொரு தடவை ட்ரம்ப் ஜெனாதிபதியாக வந்துவிடக்கூடாது என்பதில் வலு கவனமாக இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் பதவி விலகிச் செல்லும்போது அணுவாயுத இரகசியங்கள் குறித்த ஆவணங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார் – நீதிமன்ற குற்றச்சாட்டில் தகவல்

Published By: RAJEEBAN

10 JUN, 2023 | 10:14 AM
image
 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர் பதவி விலகிச்செல்லும் போது அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசியங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

டிரம்ப் பதவிவிலகிச் சென்ற வேளை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ஆவணங்களை எடுத்துச்சென்றார் என அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

 டிரம்ப் புளோரிடாவில்  உள்ள இல்லத்தில் இந்த ஆவணங்களை மறைத்துவைத்தார் விசாரணையாளர்களிற்கு பொய்சொன்னார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை அவர் குழப்ப முயன்றார் தடுத்தார் என்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை வெளியிட்டுள்ள டிரம்ப் தான் தவறு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

டிரம்பிற்கு எதிரான 40 பக்க குற்றச்சாட்டுகளில் அவர் தன்னுடன் எடுத்துச்சென்ற ஆவணங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் அமெரிக்காவின் அணுவாயுத திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களையும்,அமெரிக்காவினதும் வெளிநாடுகளினதும் பாதுகாப்பு திறன் குறித்த ஆவணங்களையும்  அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனங்கள் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்த ஆவணங்களையும் வெளிநாடொன்று தாக்குதலை மேற்கொண்டால் எடுக்கப்படக்கூடிய பதில் தாக்குதல் குறித்த ஆவணங்களையும் டிரம்ப் தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/157385

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டு குளியலறையில் வைக்கப்பட்டிருந்த அணு ஆயுத இரகசிய ஆவணங்கள்- பரபரப்பு தகவல்

அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அரசின் இரகசிய ஆவணங்களை டிரம்ப் வைத்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

26.jpg

இதற்கிடையே இரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் டிரம்ப் மீது 7 கிரிமினல் குற்றச்சாட்டுகள் அமெரிக்காவின் மியாமி கோர்ட்டில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள்,
இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக இரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த 100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரச ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக வருகிற 13ஆம் திகதி மியாமி கோர்ட்டில் டிரம்ப் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பிரிவில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 100 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

https://thinakkural.lk/article/257768

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அணுஆயுத ரகசியங்களை பதுக்கினாரா? டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு

டிரம்புக்கு எதிரான வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜூட் ஷீரின் & ரெபேக்கா சீல்ஸ்
  • பதவி,பிபிசி செய்திகள், வாஷிங்டன் டிசி
  • 10 ஜூன் 2023, 13:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவின் அணுசக்தி ரகசியங்கள் மற்றும் ராணுவத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

37 குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அவர் மீதான குற்றப்பத்திரிகையில் அவர் தனது புளோரிடா எஸ்டேட்டில் உள்ள அறைகளில் அந்த கோப்புகளை மறைத்து வைத்திருந்ததாகவும், புலனாய்வு அதிகாரிகளிடம் அந்த கோப்புகள் குறித்து பொய் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்துவதை தடுக்க முயன்றதாகவும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2024ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் டிரம்ப், தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

ஆனால், டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை கூட விதிக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வால்ட் நௌடா மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளரான இவர் கோப்புகளை புலனாய்வு அமைப்பிடம் இருந்து மறைக்க அவற்றை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 49 பக்க குற்றப்பத்திரிக்கையின் மூலம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருக்கு எதிராக அந்நாட்டு அரசு முதன்முதலாக குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. டொனால்ட் டிரம்ப் மறைத்து வைத்திருந்த இரகசிய ஆவணங்களில் பின்வருபவை பற்றிய தகவல்கள் இருந்தன என அந்த குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

* அமெரிக்காவின் அணுசக்தி திட்டங்கள்

• அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆயுத திறன் பற்றிய தகவல்கள்

• இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான நிலை குறித்த விவரங்கள்

• ஒரு வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியமான திட்டங்கள்

 

டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறியபோது, அவர் சுமார் 300 ரகசிய கோப்புகளை பாம் பீச்சில் உள்ள அவரது விடுதியான Mar-a-Lago-க்கு எடுத்துச் சென்றார் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விடுதிக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்துசெல்கின்றனர்.

காணாமல் போன ஆவணங்கள் பற்றிய FBI விசாரணையை டிரம்ப் தடுக்க முயன்றதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதற்காக அந்த ஆவணங்களை அழித்துவிடுமாறு டிரம்பின் வழக்கறிஞரிடம் அவர் கூறியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

"இங்கே எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?" என டிரம்ப் தனது வழக்கறிஞரிடம் கேட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டிரம்ப் முதல்முறையாக புளோரிடாவின் மயாமி நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்கிழமை - அவரது 77வது பிறந்த நாளன்று மாலை ஆஜராகிறார்.

டிரம்புக்கு எதிரான வழக்கு

பட மூலாதாரம்,DOJ

 
படக்குறிப்பு,

டிரம்புக்குச் சொந்தமான விடுதி ஒன்றின் நடன அரங்கு மேடையில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ரகசிய கோப்புகள்

Mar-a-Lagoவில் இந்த ஆவணங்களை வைத்திருக்கவோ, அல்லது அவற்றைப் பற்றி விவாதிக்கவோ சட்டப்படி இடமில்லை என்றும், இது போன்ற செயல்களுக்கு ஏற்ற "அதிகாரப்பூர்வமான இடம்" அதுவல்ல என்றும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில கோப்புகள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடந்த பால்ரூமின் மேடையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த குளியலறை, அலுவலகம் மற்றும் டிரம்பின் படுக்கை அறை என பிற இடங்களுக்கு அந்த கோப்புகள் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் டிரம்ப் 2021ம் ஆண்டில் இரண்டு முறை, ஒரு எழுத்தாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட பாதுகாப்பு அனுமதி இல்லாத நபர்களுக்கு இந்த ரகசிய ஆவணங்களைக் காட்டினார்.

நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப்பில்- அதுவும் பாதுகாப்பு அங்கீகாரம் இலலாத இடம்- பாதுகாப்புத் துறையால் தனக்காகத் தயார் செய்யப்பட்டதாக ஒரு தாக்குதல் திட்டம் குறித்து அவர் மற்றவர்களிடம் காட்சிப்படுத்தி விவரித்ததாக கூறப்படுகிறது.

"அதிபர் என்ற முறையில் அவற்றை ரகசிய ஆவணங்கள் அல்ல என நான் வகைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இப்போது என்னால் முடியாது என்று உங்களுக்குத் தெரியும்," என்று டிரம்ப் கூறியதாக ஒரு ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், 2021 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பெட்மின்ஸ்டர் கிளப்பில் டிரம்ப் அந்த ரகசிய ஆவணங்களை மீண்டும் பாதுகாப்பு அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் காட்டினார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் "பாதுகாப்பு அனுமதி பெறாத தனது அரசியல் நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதி ஒருவருக்கு அரசின் ரகசியமான வரைபடத்தை காட்டினார்". இந்த வரைபடம் "ஒரு இராணுவ நடவடிக்கை தொடர்பானது" என்பது மட்டுமல்ல, டிரம்ப் அந்த நபரிடம் "அதை வேறு யாரிடமும் காட்டக்கூடாது" என்றும் அவர்கள் அந்த வரைபடத்துக்கு அருகே "அதிகமாக நெருங்கக்கூட அனுமதிக்ககூடாது" என்றும் கூறினார்.

விசாரணையை மேற்பார்வையிடும் சிறப்பு ஆலோசகர் ஜேக் ஸ்மித், வெள்ளிக்கிழமையன்று பேசிய போது, தேசிய பாதுகாப்புத் தகவல்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முக்கியமானவை என்றும் அவை நிச்சயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

"அமெரிக்காவில் ஒரு வலுவான சட்ட அமைப்பு இருக்கிறது. அது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்தும்," என்று அவர் வாஷிங்டனில் சுருக்கமாகப் பேசிய போது தெரிவித்தார்.

டிரம்புக்கு எதிரான வழக்கு

பட மூலாதாரம்,DOJ

 
படக்குறிப்பு,

டிரம்பின் குளியல் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசின் ரகசிய கோப்புகள்

ஒரு சமூக ஊடகப் பதிவில், டிரம்ப், ஜேக் ஸ்மித்தை "குழப்பம் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்" என்று சாடினார்.

"அவர் ஒரு டிரம்ப் வெறுப்பாளர் - சிறிதும் மனமுதிர்ச்சியில்லாத ஒரு 'சைக்கோ', 'நீதித் துறையுடன்' சம்பந்தப்பட்ட எந்தச் செயலிலும் அவர் ஈடுபடக்கூடாது," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக தளத்தில் எழுதியுள்ளார்.

இதற்கிடையே, தற்போதைய அதிபர் ஜோ பைடனின் அலுவலகம், அவரது கேரேஜ் மற்றும் அவரது டெலவெயர் இல்லத்திலும் ரகசிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

அந்த கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அதிகாரிகளின் விசாரணையைத் தடுக்கும் வகையில் டிரம்ப் செயல்படுவதைப் போல் அல்லாமல், உடனடியாக அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக வெள்ளை மாளிகை முன்பு அறிவித்திருந்தது.

இரகசிய ஆவணங்களைக் கையாள்வது குறித்த பைடன் மீதான அமெரிக்க அரசின் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் ஹர் தலைமையில் தற்போது நடந்து வருகிறது.

டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்களை அமெரிக்க நீதித்துறை பகிரங்கப்படுத்துவதற்கு சற்று முன்பு, டிரம்பின் இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென எந்த விளக்கமும் கொடுக்காமல், வழக்கிலிருந்து விலகியதாக அறிவித்தனர். வழக்கிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் இது என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

டிரம்ப் மீதான இரண்டாவது குற்றவியல் வழக்கு இது. அவர் ஆபாச நடிகைக்கு பெரும் தொகையை வழங்கியது தொடர்பான வழக்கில் அடுத்த ஆண்டு நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cz781krl73go

  • கருத்துக்கள உறவுகள்

லூசன்...☹️

மக்களுக்கு தலைமை  தாங்க  எந்த  தகுதியும் இல்லாத நா.................

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காய்க்கின்ற மரங்களுக்கே கல்லெறி விழும் என்பது போல் நன்மை செய்கின்றவர்களுக்கே கெட்ட பெயர்களையும்  கெடுதல்களையும் செய்வார்கள்.


கலிகாலம் என்பது சரியாகத்தான் இருக்கின்றது.

12 minutes ago, குமாரசாமி said:

காய்க்கின்ற மரங்களுக்கே கல்லெறி விழும் என்பது போல் நன்மை செய்கின்றவர்களுக்கே கெட்ட பெயர்களையும்  கெடுதல்களையும் செய்வார்கள்.


கலிகாலம் என்பது சரியாகத்தான் இருக்கின்றது.

எதை நல்லது செய்தது என்கின்றீர்கள்? இராணுவ மற்றும் அணு ஆயுத ரகசியங்களை தன்னோடு எடுத்துச் சென்று, அதை திருப்பி கொடுக்க மறுத்து, குளியலறையில் வைத்து இருந்தமையா?

இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு Espionage இல் வருகின்றது. அரச, இராணுவ ரகசியங்களை திருடி தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக அமைந்த குற்றம் இது. 

பதவியில் இருந்து விலகும் போது தன்னுடனே ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துச் சென்று பல நூற்றுக்கணக்கான விருந்தினர் வரும ballroom மிலும் குளியலறையிலும் வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்தது மட்டுமன்றி அதனை சிலருக்கு காட்டியும் உள்ளார்.

மிகுதி வாழ்நாளை சிறையில்தான் கழிக்க போகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, நிழலி said:

எதை நல்லது செய்தது என்கின்றீர்கள்? இராணுவ மற்றும் அணு ஆயுத ரகசியங்களை தன்னோடு எடுத்துச் சென்று, அதை திருப்பி கொடுக்க மறுத்து, குளியலறையில் வைத்து இருந்தமையா?

இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு Espionage இல் வருகின்றது. அரச, இராணுவ ரகசியங்களை திருடி தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக அமைந்த குற்றம் இது. 

பதவியில் இருந்து விலகும் போது தன்னுடனே ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துச் சென்று பல நூற்றுக்கணக்கான விருந்தினர் வரும ballroom மிலும் குளியலறையிலும் வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்தது மட்டுமன்றி அதனை சிலருக்கு காட்டியும் உள்ளார்.

மிகுதி வாழ்நாளை சிறையில்தான் கழிக்க போகின்றார்.

இவையெல்லாம் குற்றச்சாட்டுகளும் செய்திகளுமே தவிர இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதை வைத்து நீங்களோ நானோ வாதாட முடியாது. உலக சமாதான அரசியலுக்கு அமெரிக்க கொள்கை எதிரானது. அதை டொனால்ட் ரம்ப் முறியடித்தார். அது மீண்டும் வரக்கூடாது என கங்கணம் கட்டியுள்ளார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண அலுவலகத்திலேயே இவ்வாறு file களைக் கொண்டுபோக முடியாது. அப்படிக் கொண்டு போனாலும் Auditing ல் கண்டுபிடித்துவிடுவார்கள். 

இங்கே, அமெரிக்கா போன்ற உலகின் வல்லரசு நாட்டின் ஒரு அரச தலைவர், இப்படிப் படத்தில் உள்ளதுபோன்று, பெட்டி, பெட்டியாக Top Secret Files ஐ தனது வீட்டிற்குத் தூக்கிக்கொண்டுபோக முடியுமா? 

நம்பும்படியாக இல்லையே....🤨

51 minutes ago, நிழலி said:

எதை நல்லது செய்தது என்கின்றீர்கள்? இராணுவ மற்றும் அணு ஆயுத ரகசியங்களை தன்னோடு எடுத்துச் சென்று, அதை திருப்பி கொடுக்க மறுத்து, குளியலறையில் வைத்து இருந்தமையா?

அமெரிக்க வரலாற்றில், எந்த ஒரு யுத்தத்தையும் ஆரம்பிக்காத அரச தலைவர் தான் மட்டுமே என்று Donald Trump கூறுகிறார். 

அது உண்மைதானே? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

ஒரு சாதாரண அலுவலகத்திலேயே இவ்வாறு file களைக் கொண்டுபோக முடியாது. அப்படிக் கொண்டு போனாலும் Auditing ல் கண்டுபிடித்துவிடுவார்கள். 

இங்கே, அமெரிக்கா போன்ற உலகின் வல்லரசு நாட்டின் ஒரு அரச தலைவர், இப்படிப் படத்தில் உள்ளதுபோன்று, பெட்டி, பெட்டியாக Top Secret Files ஐ தனது வீட்டிற்குத் தூக்கிக்கொண்டுபோக முடியுமா? 

நம்பும்படியாக இல்லையே....🤨

ஏதோ குப்பன் சுப்பன் வீட்டிலை களவு போனமாதிரி கதை போகுது.....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஏதோ குப்பன் சுப்பன் வீட்டிலை களவு போனமாதிரி கதை போகுது.....

NSA WHISTLEBLOWER SNOWDEN இதனை "Slective prosecution" என்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். 

உலகத்தவர் அனைவருக்கும் இந்த விசாரணையின் உண்மையான நோக்கம் தெரியும், புரியும், எங்கள் புலம்பெயர்ஸ் சைத்  தவிர.  

🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

எதை நல்லது செய்தது என்கின்றீர்கள்? இராணுவ மற்றும் அணு ஆயுத ரகசியங்களை தன்னோடு எடுத்துச் சென்று, அதை திருப்பி கொடுக்க மறுத்து, குளியலறையில் வைத்து இருந்தமையா?

இவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு Espionage இல் வருகின்றது. அரச, இராணுவ ரகசியங்களை திருடி தனக்கு சாதகமாக பயன்படுத்தியதாக அமைந்த குற்றம் இது. 

பதவியில் இருந்து விலகும் போது தன்னுடனே ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை எடுத்துச் சென்று பல நூற்றுக்கணக்கான விருந்தினர் வரும ballroom மிலும் குளியலறையிலும் வைத்துக் கொண்டு கொடுக்க மறுத்தது மட்டுமன்றி அதனை சிலருக்கு காட்டியும் உள்ளார்.

மிகுதி வாழ்நாளை சிறையில்தான் கழிக்க போகின்றார்.

அப்போ பைடன் கோர்வேற் கார் ரங்குக்குள் வைத்த தஸ்தாவேஜுகள் பற்றி ஒரு பேச்சும் இல்லை. அவர் ஜனாதிபதியாக  இருப்பதால் எல்லாவற்றையும் அமுக்கி விட்டார்கள் என எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இரகசிய ஆவண வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் தெரிவிப்பு : இன்று பிறந்த தினம்

Published By: SETHU

14 JUN, 2023 | 10:46 AM
image
 

அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை தனது வீட்டில் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் நிரபராதி என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 300 இரகசிய ஆவணங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள ட்ரம்பபுக்குச் சொந்தமான மார் ஏ லாகோ இல்லத்துக்கு அவர்  எடுத்துச் சென்றார் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நடத்தப்படும் மார் ஏ லாகோ இல்லத்தில் நடன அறை, படுக்கையறை, குளியலறைகளிலும் மேற்படி இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாக,  49 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வழக்கு தொடர்பில் மேற்படி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) ட்ரம்ப் ஆஜரானார். 

இவ்வழக்கில் ட்ரம்ப் நிரபராதி என  அவரின் சட்டத்தரணி டொட் பிளான்ச், நீதிபதியிடம் கூறினார்.  

அமெரிக்க வரலாற்றில், பதவியிலுள்ள அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மத்திய அரசின் கிரிமினல் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் ட்ரம்புக்கு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயணக்கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இவ்வழக்கு விசாரணை ஆரம்பமாகுவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட தென் புளோரிடா நீதிபதி அய்லீன் கெனோன் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளார்.

நீதிமன்றத்துக்கு வெளியே ட்ரம்பின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அதேவேளை, ட்ரம்ப்பின் வாகனத் தொடரணி புறப்பட்டபோது, ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறைச்சாலை சீருடையுடன் காணப்பட்டனர். அவர்கள் ட்ரம்பின் வாகனத் தொடரணியை நோக்கிச்  செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப், மியாமியிலுள்ள கியூப உணவுவிடுதியொன்றக்கு சென்றார். 

அங்கும் அவரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்ததுடன், அவருடன் படம்பிடித்துக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தனர். 

இன்று புதன்கிழமை (14) 77 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் டொனால்ட் ட்ரம்புக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/157665

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இரகசிய ஆவண வழக்கில் தான் நிரபராதி என ட்ரம்ப் தெரிவிப்பு : இன்று பிறந்த தினம்

Published By: SETHU

14 JUN, 2023 | 10:46 AM
image
 

அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை தனது வீட்டில் வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் நிரபராதி என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர், அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் உட்பட சுமார் 300 இரகசிய ஆவணங்களை புளோரிடா மாநிலத்திலுள்ள ட்ரம்பபுக்குச் சொந்தமான மார் ஏ லாகோ இல்லத்துக்கு அவர்  எடுத்துச் சென்றார் என கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் நடத்தப்படும் மார் ஏ லாகோ இல்லத்தில் நடன அறை, படுக்கையறை, குளியலறைகளிலும் மேற்படி இரகசிய ஆவணங்கள் காணப்பட்டதாக,  49 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இவ்வழக்கு தொடர்பில் மேற்படி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) ட்ரம்ப் ஆஜரானார். 

இவ்வழக்கில் ட்ரம்ப் நிரபராதி என  அவரின் சட்டத்தரணி டொட் பிளான்ச், நீதிபதியிடம் கூறினார்.  

அமெரிக்க வரலாற்றில், பதவியிலுள்ள அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மத்திய அரசின் கிரிமினல் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் ட்ரம்புக்கு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயணக்கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.

இவ்வழக்கு விசாரணை ஆரம்பமாகுவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரம்பினால் நியமிக்கப்பட்ட தென் புளோரிடா நீதிபதி அய்லீன் கெனோன் இவ்வழக்கை விசாரிக்கவுள்ளார்.

நீதிமன்றத்துக்கு வெளியே ட்ரம்பின் ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். அதேவேளை, ட்ரம்ப்பின் வாகனத் தொடரணி புறப்பட்டபோது, ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறைச்சாலை சீருடையுடன் காணப்பட்டனர். அவர்கள் ட்ரம்பின் வாகனத் தொடரணியை நோக்கிச்  செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய ட்ரம்ப், மியாமியிலுள்ள கியூப உணவுவிடுதியொன்றக்கு சென்றார். 

அங்கும் அவரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்ததுடன், அவருடன் படம்பிடித்துக்கொள்வதற்கு பலர் வரிசையில் காத்திருந்தனர். 

இன்று புதன்கிழமை (14) 77 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் டொனால்ட் ட்ரம்புக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/157665

நீதிபதி அய்லீன் கனான் டிரம்பால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்றபடியால் அவரது தீர்ப்பு எப்போதுமே டிரம்பிற்கு சாதகமாகவே இருக்கும். அவர் special master ஐ நியமிக்கும்படி தீர்பபுவழங்கிய போது உயர்நீதி மன்றம் அந்த தீரப்பை தள்ளிபடி செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்: குளியலறையில் ரகசிய ஆவணங்களை வைத்த வழக்கில் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளதா?

அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நீதிமன்ற அறையிலிருந்து காய்லா எப்ஸ்டீன், மயாமியிலிருந்து மேடெலைன் ஹால்பர்ட், வாஷிங்டன், டிசியிலிருந்து ஹோலி ஹோண்டரிச்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அரசின் அதிமுக்கியமான ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு அரசு அவர் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், ஃப்ளோரிடா மாநிலத்தின் மயாமி நகர நீதிமன்றத்தில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கு விசாரணையின் போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் முன்னாள் அல்லது இந்நாள் அதிபர் மீது அரசு சார்பில் குற்றவியல் வழக்கு தொடுப்பது இதுவே முதல் முறை.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நீதிமன்ற விசாரணைக்கு வந்த டிரம்ப், அடர்த்தியான நிறத்தில் உடையணிந்து, சிவப்பு வண்ணத்தில் டை கட்டி, கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டெர் நகரில் உள்ள தமது கோல்ஃப் கிளப்புக்கு ஆதரவாளர்களை அழைத்திருந்த நிலையில் டிரம்ப் அங்கு புறப்பட்டுச் சென்றார்.

 

2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டிரம்ப், அமெரிக்க கொடிகளின் பின்னணியில் தோன்றி, அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களிடம் பேசிய போது, அரசு ரகசியங்களை வைத்திருக்க தமக்கு எல்லா உரிமைகளும் இருந்தன என்றும், இருந்தாலும் அனைத்து பெட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

 

சட்டத்தை முழுமையாகப் பின்பற்றியதாகத் தெரிவித்த அவர், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் மற்றும் ஹிலாரி கிளின்டன் மீது எந்த வித ஆதாரங்களையும் காட்டாமல் பல குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்தார்.

"நமது நாட்டிற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நாளில் இது போன்ற உற்சாகமான வரவேற்பு" அளித்தற்கு மயாமி நகர மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அங்கிருந்து புறப்படும் முன் அவரது சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

சட்டவிரோதமாக அரசு ரகசியங்களை எடுத்துச் சென்றுவிட்டு, அவற்றை அரசு மீண்டும் திரும்பப் பெறமுடியாத அளவுக்கு அழித்துவிட முயன்றதாக டிரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மயாமி நகரில் உள்ள ஒரு கட்டடத்தின் 13வது மாடியில் செயல்படும் இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அவர் இருண்ட முகத்துடன் அமர்ந்திருந்தார். விசாரணை தொடங்கிய போது, அவர் குற்றமற்றவர் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

"எங்கள் கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் நேரடியாகவும் உறுதியாகவும் மறுக்கிறோம்," என நீதிபதியிடம் வழக்கறிஞர் டாம் பிலான்ச்சி தெரிவித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப்புடன் இணைத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள, அவரது முன்னாள் உதவியாளரான வால்ட் நௌட்டா மீது 6 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரும் டிரம்புடன் இந்த விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.

அதற்கு எதிரில் இருந்த அறையில் அமெரிக்க அரசின் சிறப்பு வழக்கறிஞரான ஜேக் ஸ்மித் மற்றும் அவருடைய குழுவினர் அனைவரும் அமர்ந்திருந்தனர். இந்த சிறப்பு வழக்கறிஞர் தான் கடந்த வாரம் டிரம்ப்புக்கு எதிரான வழக்கு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.

76 வயதான டிரம்ப் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் நிலை எதுவும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவினர் நீதிபதி ஜொனாதன் குட்மேனிடம் தெரிவித்ததை அடுத்து, டிரம்ப்புக்கு பயணத் தடை எதையும் நீதிமன்றம் விதிக்கவில்லை.

ஆனால், டிரம்பின் முன்னாள் உதவியாளர் நௌட்டாவிடம் இந்த வழக்கு குறித்து நேரடியாக ஆலோசனை நடத்த டிரம்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திலிருந்து டிரம்பின் பாதுகாப்பு வாகனங்கள் புறப்பட்ட போது அங்கு கூடியிருந்த தமது ஆதரவாளர்களை நோக்கி அவர் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். இதற்கிடையே, டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், சிறைக் கைதியைப் போல் ஆடையணிந்த நபர் ஒருவர் பாதுகாப்பு வாகனங்களின் முன்னால் ஓட முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அகற்றினர். பெரும்பாலும் அமைதியாக இருந்த நாளில் இந்த ஒரு சம்பவம் மட்டுமே டிரம்ப்புக்கு எதிராக நடந்த மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது.

க்யூபா உணவு முறைகளுடன், மயாமி நகரில் உள்ள 'லிட்டில் ஹவானாவில்' செயல்படும் உணவகத்தில் கூடியிருந்த ஏராளமான டிரம்ப் ஆதரவாளர்கள், வரிசையில் நின்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இன்று டிரம்பின் 77வது பிறந்த நாள் என்பதால், அவர் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஏராளமானோர் இணைந்து 'ஹாப்பி பர்த்டே டூ யூ' பாடலைப் பாடினர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

டொனால்ட் டிரம்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பா, நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, டிரம்ப் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்தார்.

"நாங்கள் இந்நாட்டின் வரலாற்றை மாற்றிவருகிறோம். ஆனால் எங்களுடைய அரசியல் எதிரிகள், க்யூபா, வெனிசூலா நாடுகளைப் போல் எதேச்சதிகாரம் மிக்கவர்களாகச் செயல்பட்டு எங்கள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்," என்றார் அவர்.

"முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்பதே உண்மை," என அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு டிரம்ப் வரும் போது புகைப்படம் எதுவும் எடுக்கப்படாது என்றும், அவரது விரல் ரேகைகள் பெறப்படும் என்றும் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு டிஎன்ஏ சோதனை நடத்தப்படும் என்றும் முன்னதாக நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

ஃப்ளோரிடாவில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிவரும் அய்லீன் கேனான் என்பவர் இந்த வழக்கை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நீதிபதி டிரம்பால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்பின் ஃளோரிடா எஸ்டேட்டான மார்-அ-லாகோ (Mar-a-Lago ) உல்லாச தங்குமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை எஃப்.பி.ஐ. (FBI) அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அமெரிக்கா மற்றும் பிறநாடுகளின் ஆயுத பலம் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை குறித்த ரகசிய தகவல்கள் அந்த ஆவணங்களில் இருந்தன. இதே போல் அமெரிக்கா மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது போன்ற ரகசிய திட்டங்கள் குறித்த தகவல்களும் அந்த ஆவணங்களில் இருந்தன.

டிரம்புக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமான சொகுசு வீட்டின் நடன அறை மேடைகள் மற்றும் குளியலறையில் இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எஃப்.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் அவரது உதவியாளரைப் பயன்படுத்தி ஒரு சதிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அவருக்கு குடியரசுக் கட்சி வாக்காளர்களிடத்தில் எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவில்லை.

அமெரிக்காவில் பிபிசிக்கு உதவும் சிபிஸ் செய்தி நிறுவனம் வாக்காளர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப்பிடம் இருந்த ரகசிய ஆவணங்கள் நாட்டுக்கு ஆபத்து ஏற்படுத்தலாம் என்பதை விட டிரம்புக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாகவே 76 சதவிகித வாக்காளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் முக்கியத் துறையாக இருக்கும் நீதித்துறை, வெள்ளை மாளிகையின் ஆதிக்கத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாமல், தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக இந்த விசாரணையை நடத்த வேண்டும் என சட்டம் சொல்கிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீதும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. அவரும் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை சட்டவிரோதமாகக் கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த வாரம், "இந்த விஷயத்தில் நீதித்துறை எப்படிச் செயல்பட வேண்டும் என நான் ஒரு போதும் ஆலோசனை அளிக்கப்போவதில்லை," என அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது முறை விசாரணைக்கு வந்த வழக்கு

டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டால் அவர் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கில் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதைக் கடந்து, அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தொடர்ந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக டிரம்ப் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளார். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, ஒரு ஆபாச நடிகைக்கு பெரும் தொகையைக் கொடுக்க, தமது தொழில் குறித்த ஆவணங்களில் பொய் தகவல்களைத் தெரிவித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் நகரில் டிரம்ப் மீது மற்றொரு வழக்கில் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cnd9z01l1e3o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.