Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

வாக்னர் கூலிப்படையினர் பேலரஷ்யாவுக்கு போகின்றார்களாம். அவர்கள் மீது ரஷ்யா எந்த நடவடிக்கையும் எடுக்காதாம். 

எந்தப் பாதையால் போவார்கள்?🤨

ஓம்…இது இத்தோடு முடிந்த காரியமாக எனக்கு தெரியவில்லை. 

புட்டின் மீதான விம்பம் பற்றிய சில இலட்சுமண ரேகைகளை பிரிகோசின் தாண்டி விட்டார்.

இதில் இருந்து புட்டினும், பிரிகோசினும் மீள்வது கடினம்.

உடனடியாக இல்லை, ஆனால் இருவரினதும் அழிவின் ஆரம்பம் என இதை நான் கருதுகிறேன்.

  • Replies 231
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் அரசுக்கெதிரான சதிகள் ஏனோ வெற்றி பெறுவதில்லை, மிக திறமையாகத்திட்டமிட்டாலும் அது ஒரு சாதாரண ஒரு சின்ன விடயத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் அதற்கு உதாரணமாக கிடலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சதி நடவடிக்கையினை அடிப்படையாக கொண்டு 2009 இல் வெளியாகியிருந்த டொம் குரூஸ் நடித்த வல்கரே என்ற நடவடிக்கையின் தோல்வியினை குறிப்பிடலாம்(அந்த திரைப்படத்தின் ரெய்லரை இணைத்திருந்தேன் அது நீக்கப்பட்டு விட்டது) ஆனால் வாக்னரின் சதி நடவடிக்கை எந்த வித சரியான திட்டமிடலும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது சந்தேகத்தினை உருவாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதை உங்கள் அன்பு உறவு ஜஸ்ரின் ஏற்றுக்கொள்வாரா? :rolling_on_the_floor_laughing:

@Justin :cool:

நீங்கள் “என்னுடன் இனிமேல் கருத்தாட வேண்டாம்” என திண்ணையில் வைத்து சொன்ன கோரிக்கையை நானும் ஏற்று கொண்டு - விலகி நடப்பதால் - பதில் சொல்வதா? இல்லையா என்ற தயக்கத்தில் உள்ளேன்.

ஆனாலும் பதில் இதோ:

ஆனால் ஜஸ்ரின் அண்ணா புலி, எதிர்பாளரும் அல்ல, அவர்களின் நியாத்தனம் பற்றி நம்மை விட அவருக்கு போதிய அறிவு உண்டு. புலிகள் மீதான அவரின் விமர்சனக்கள் நடைமுறை செயல்கள் பற்றியதே ஒழிய - ஒட்டு மொத்த இயக்கம், தலைமை, போராட்டத்தின் நியாயாதிக்கம் பற்றியதல்ல.

——-

@Justin @விளங்க நினைப்பவன் வரவேற்புக்கு நன்றி 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

கோசானை மீண்டும் யாழில் காண்பது சந்தோசம், பல விடயங்களை தவறவிட்டேனோ என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

இதில் இருந்து புட்டினும், பிரிகோசினும் மீள்வது கடினம்.

உடனடியாக இல்லை, ஆனால் இருவரினதும் அழிவின் ஆரம்பம் என இதை நான் கருதுகிறேன்.

கரு நாகத்திற்கு பாலூட்டி வளர்த்த கதைதான் புட்டினுக்கும் வரும். இங்கே   அமெரிக்காவின் கை படவில்லை என்றால் சந்தேகம் வரும். :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

பெரும்பாலும் அரசுக்கெதிரான சதிகள் ஏனோ வெற்றி பெறுவதில்லை, மிக திறமையாகத்திட்டமிட்டாலும் அது ஒரு சாதாரண ஒரு சின்ன விடயத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிடும் அதற்கு உதாரணமாக கிடலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சதி நடவடிக்கையினை அடிப்படையாக கொண்டு 2009 இல் வெளியாகியிருந்த டொம் குரூஸ் நடித்த வல்கரே என்ற நடவடிக்கையின் தோல்வியினை குறிப்பிடலாம்(அந்த திரைப்படத்தின் ரெய்லரை இணைத்திருந்தேன் அது நீக்கப்பட்டு விட்டது) ஆனால் வாக்னரின் சதி நடவடிக்கை எந்த வித சரியான திட்டமிடலும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது சந்தேகத்தினை உருவாக்குகிறது.

திட்டமிடாமல்தானா, 18 மனத்தியாலத்தில், 8 விமான/கெலிகளை சுட்டு விழுத்தி, 15 விமானிகள், வீரர்களை கொன்று, ரஸ்யாவின் கேந்திர முக்கியமான நகரை பிடித்து, அதில் உள்ள மிக முக்கிய தளத்தை கைப்பற்றி, மாஸ்கோவின் வாசல் வரை வந்தார்கள்?

பிரிகோசின் ஏன் பின்வாங்கினார் என்றது ஆய்வுக்குரிய ஆனால் விமான எதிர்ப்பு ஆயுதம் முதல் பலத்த தயார்படுத்தலுடந்தான் முன்னேறினார்கள்.

நீங்கள் சொன்ன கிடலர் கொலை முயற்சி - அவரின் வெல்ல முடியாதவர் என்ற விம்பத்தில் வீழ்ந்த முதல் கீறல். அதை விட மோசமாக இங்கே புட்டின் மூக்கு உடைபட்டுள்ளது.

4 minutes ago, vasee said:

கோசானை மீண்டும் யாழில் காண்பது சந்தோசம், பல விடயங்களை தவறவிட்டேனோ என தோன்றுகிறது.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் , அவரின் நலனுகதான், இறுதியில் தலைவருக்கு, சாட்சாத் விடுதலை விரும்பி, சனநாயக பாதுகாப்பாளன் போன்றவற்றை முடி சூடும்  அமெரிக்கா கொடுத்த, இப்போதும் எடுக்க மறுக்கும் கொடுத்தா பெயர் என்ன? 

புட்டின்  கிருமி என்றால் - வெளியில் தெரிந்தது. 
அமெரிக்கா, மேற்கு - விடக்  கொரன  - உள்ளிருந்து அரிக்கும் கிருமிகள் 

அவைகள் தமிழருக்கு செய்ததும் , இப்பொது செய்வதும் அது தான்.  

இப்போதுள்ள சங்கிலியன்  சிலை - செகரரா சேகரத்துக்குத் தான் என்பது உங்களில் எத்தனை  பெயருக்கு தெரியும்? 

போர்த்துக்கேயர் கட்டு கதையாக சொன்னதை -  செகராசா சேகரம், தன மகனை மதம் மாறியதால் சிரச்  சேதம் செய்தவர் என்ற கட்டுக் கதையை மறு சிந்திப்பு  இன்றி ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இராச்சியமும், சைவமும் உடல், பொருள், மூச்சு  என்று இருந்தவர் செகராச சேகரம்.    

அதே செகராச சேகரம் வீழ்ந்தது வன்னியில்,  உள்வீட்டு காட்டிக் கொடுப்பால், போர்த்துகேயரிடம்.

அனல், போர்த்துக்கேயருக்கு வணிகம் செய்ய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி கொடுக்க, வாணி காட்டுக்குள் கோட்டை போன்ற அமைப்பை கட்டினார்கள் சேகர சேகரத்தை சூழ்ச்சியால் பிடிப்பதற்கு.    

அப்போது, மேற்றகில் இருந்த ஒன்று செய்ததும் - உள்ளிருந்து  அரிக்கும் கிருமி 

500 வருடங்களாக தொடர்கிறது.    

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

கரு நாகத்திற்கு பாலூட்டி வளர்த்த கதைதான் புட்டினுக்கும் வரும். இங்கே   அமெரிக்காவின் கை படவில்லை என்றால் சந்தேகம் வரும். :beaming_face_with_smiling_eyes:

பண்ணையார் கைபடாமலா?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் “என்னுடன் இனிமேல் கருத்தாட வேண்டாம்” என திண்ணையில் வைத்து சொன்ன கோரிக்கையை நானும் ஏற்று கொண்டு - விலகி நடப்பதால் - பதில் சொல்வதா? இல்லையா என்ற தயக்கத்தில் உள்ளேன்.

பிரச்சனை இல்லை கோசான். நெடுகலும் சிடு மூஞ்சியாக இருக்கக்கூடாது என்பதாலேயே உங்கள் கருத்திற்கு பதில் கருத்து எழுதினேன். உங்களுக்கு விருப்பமில்லையெனில் இத்துடன் நிறுத்துகின்றேன்.

சந்ததி சந்ததியாக வன்மங்களை காவிக்கொண்டு திரியும் குணம் என்னிடமில்லை.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோஜினும் புட்டினும் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதிகள். இருவரும் பிரிந்துபோனது ஒரு நல்ல சம்பவம். இருவரும் ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்கள். தற்போதைய சூழ்நிலையில் புட்டினுக்கு பிரிகோஜினை போட்டுத்தள்ளுவது பெரிய விடயமல்ல. ஆனால் முடியாது, ஏனென்றால் ரஸ்ய மக்கள் மத்தியிலும் படைகள் மத்தியிலும் பிரிகோஜின் குறித்த கதாநாயக விம்பம் புட்டினைவிட சற்றுக் கூடுதலாக உள்ளது.  உக்ரேன் போர்முனை குறிப்பாக பக்மூட் களமுனை இதை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.  

ஏதோ இருபெரும் மனிதகுலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் பிரிந்துவிட்டனர். இது முடிவல்ல தொடக்கம் தான்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

சில வேளை இது எமக்கு எல்லாம் பிடிபடாத பெரிய உளவு ஆப்பரேசனாக இருக்கலாம்🤣.

இதைத்தான் மேலே நான் மேற்கத்திய நாடுகள் சும்மா இருக்கிறார்கள் என்று புட்டின் நினைத்தால் என்று எழுதியிருந்தேன்.

7 hours ago, விசுகு said:

எப்படி  இருந்த புட்டின்???

நாட்டையும் கெடுத்து தானும் அழிந்து...?

இவரது  சேட்டைகள் ரசிய  மக்களிடம்  பலிக்கலாம்

மேற்கு  நாடுகள்  தூங்குகின்றன  என்று நினைத்து அவர்களது  தேசத்திலேயே  கால் பதித்த  தவறை இனி உணர்ந்தும்??

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு பட்டம் கொடுத்து, பாடல் இயற்றி துதிபாடிய வாழ்ப்பாடி நான் இல்லை என்பதும், குறைகளையும், நிறைகளையும் பேசியே வந்துள்ளேன் என்பதையும் 10 வருட யாழ்கள பதிவுகள் சொல்லும்.

ஆனால் புட்டினுடன் அவரை ஒரே தட்டில் வைப்பது போன்ற அயோக்கியத்தனத்தை நான் செய்ததில்லை.

எல்லாரும் ஐரோப்பிய காலனியத்தால் பாதிக்கப்பட்டோரே. மேலதிகமாக நாம் அண்மைய நிகழ்வுகளாலும் மேற்கினால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் அதை மட்டும் வைத்து ஒரு மேற்கு வெறுப்பு அரசியலை நாம் கையில் எடுக்கதேவையில்லை. 

ஜப்பானுக்கு அமெரிக்கா செய்யாத அழிவா? ஜேர்மனியும் பிரிட்டனும் பரஸ்பரம் செய்யாத அழிவா?

நாம் இதயத்தால் சிந்திக்காமல், மூளையால் சிந்தித்தால் - தலைவரை பிட்டினோடு ஒப்பிடும் அபத்தம்கள் ஏற்படாது.

9 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை இல்லை கோசான். நெடுகலும் சிடு மூஞ்சியாக இருக்கக்கூடாது என்பதாலேயே உங்கள் கருத்திற்கு பதில் கருத்து எழுதினேன். உங்களுக்கு விருப்பமில்லையெனில் இத்துடன் நிறுத்துகின்றேன்.

சந்ததி சந்ததியாக வன்மங்களை காவிக்கொண்டு திரியும் குணம் என்னிடமில்லை.:beaming_face_with_smiling_eyes:

வேண்டாம் என்றவரும் நீங்களே, இப்போ கருத்து கேட்டவரும் நீங்களே.

நான் எப்போதும் உங்கள் மீது வன்மம் வைத்ததே இல்லை எனும் போது, அதை காவவும் முடியாதுதானே?

ஆனால் மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதில் என்றும் வழுவாமல் நிற்பதே வழமை.

இப்போ நாம் உரையாடுவது போல் - தொடர்ந்தும் உரையாடுவோம். நன்றி 🙏🏾.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, வாலி said:

பிரிகோஜினும் புட்டினும் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதிகள். இருவரும் பிரிந்துபோனது ஒரு நல்ல சம்பவம். இருவரும் ஒழித்துக்கட்டப்படவேண்டியவர்கள். தற்போதைய சூழ்நிலையில் புட்டினுக்கு பிரிகோஜினை போட்டுத்தள்ளுவது பெரிய விடயமல்ல. ஆனால் முடியாது, ஏனென்றால் ரஸ்ய மக்கள் மத்தியிலும் படைகள் மத்தியிலும் பிரிகோஜின் குறித்த கதாநாயக விம்பம் புட்டினைவிட சற்றுக் கூடுதலாக உள்ளது.  உக்ரேன் போர்முனை குறிப்பாக பக்மூட் களமுனை இதை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.  

ஏதோ இருபெரும் மனிதகுலத்துக்கெதிரான பயங்கரவாதிகள் பிரிந்துவிட்டனர். இது முடிவல்ல தொடக்கம் தான்.

இதே மாதிரித்தான் இனவாத சிங்களமும் ஒருகால கட்டத்தில் குதுகாலித்துக்கொண்டு திரிந்தது.

என்னவொன்று பெயர்கள் வேறு சம்பவம் ஒரே மாதிரியானது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

இதைத்தான் மேலே நான் மேற்கத்திய நாடுகள் சும்மா இருக்கிறார்கள் என்று புட்டின் நினைத்தால் என்று எழுதியிருந்தேன்.

சிலர் சொல்கிறார்கள். புட்டினும், பிரிகோசினும் சொல்லி வைத்து ஆடிய நாடகம் இது என்று.

அதாவது கலகம் வந்தால் யார் புட்டின் எதிர் நிலை எடுப்பார்கள் என்பதை அறிய புட்டின் செய்த உளவியல் நடவைக்கையாம்.

ஆனால் ஒரு சர்வாதிகாரிக்கு, தன் மேல் மக்கள் வைத்துள்ள பயம் முக்கியம்.

They don’t have to love us, they just need to fear us. 
இதுதான் சர்வாதிகாரிகளிம் தாரக மந்திரம்.

பிரிகோசின் செயல்கள், புட்டினின் எதிர்வினைகள் -  புட்டின் மீதான ரஸ்ய மக்களின் பிரமிப்பு, பயம் அதனூடு வந்த மரியாதையை பலமாக தாக்கி இருக்கும்.

ரஸ்ய ஆதரவு டெலிகிராம் குழுக்களில் இது வெளிபடையாக தெரிகிறது.

இது நடக்கும் என்பதை புட்டின் அறிந்தே இருப்பார். 

ஆகவே இதை ஒரு புட்டின்+பிரிகோசின் சேர்ந்து செய்யும் உளவியல் யுத்தமாக என்னால் கருத முடியவில்லை.

புட்டின்/ரஸ்யா ஆதரவாளர்கள் தம் கதாநாயகர்கள் தமக்குள் அடிபடுவதை கண்டு - மனம் பொறுக்காமல் - தம்மைதாமே தேற்றி கொள்ள சொல்லும் கதை என்றே நினைக்கிறேன்.

கருணா பிரிவின் ஆரம்பத்தில் நான் கூட இப்படி என்னை தேற்றி உள்ளேன். யாழிலும் சிலர் அப்படி எழுதி இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா. அமெரிக்கா. பொதுவாக மேற்கு - தமிழருக்கு நடித்து கொண்டு - உள்ளே இருந்து அரிக்கும் செய்யும் வேலையின் ஒரு பகுதி.

https://discovery.ucl.ac.uk/id/eprint/1557938/1/Sri-Lanka-at-the-Crossroads-of-History.pdf

பேராசியர் கொன்னிங்ஹாம், இப்பொது ஐநா வில்  இல் அகழ்வாய்வு, வரலாறு  தலைமை பீடத்தில் இருப்பவர்.

அவரின் முனைப்பு - இலங்கைத் தீவில் உள்ள எல்லாமே சிங்களளவரின், ஆரியரோடு சம்பந்தபட்ஷத்து என்ப தை நிறுவ பகிர பிரயத்தனம் செய்கிறார் - சிங்கள;வர சொல்வதின் சாராம்சம். 

இதற்கு பிரித்தானிய அரசு பின்புலத்தில் இல்லை என்பதை, கேணயர்கள் கூட நம்பமாட்டார்கள். 
  
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இதே மாதிரித்தான் இனவாத சிங்களமும் ஒருகால கட்டத்தில் குதுகாலித்துக்கொண்டு திரிந்தது.

என்னவொன்று பெயர்கள் வேறு சம்பவம் ஒரே மாதிரியானது.

தன் இனத்தின் விடுதலைக்காக தன் உடல் உயிர் ஆவி பொருள் முழுவதையும் தந்து போராடிய களங்கமில்லா ஓர் உத்தமனையும் பதவி வெறிபிடித்து இன்னொரு நாட்டினை ஆக்கிரமித்து நிற்கும் பொருளாசை பெண்ணாசை போன்ற சகல சிற்றின்பங்களையும் அனுபவிக்கும் கயவனையும் எவ்வாறு ஒரே நோக்கில் உங்களால் பார்க்கமுடிகின்றது என்றெண்ணி வியந்துபோகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேராசிரியர் எழுதுவதை வைத்து… எந்த ஆதாரத்தையும் தராமல்… அவருக்கு பின்னால் பிரித்தானிய அரசு இருக்கிறது என நம்ப சொல்லுபர்கள்தான் கேணையர்களாக இருக்க முடியும்.

பிரித்தானியா என்ன சிங்களத்கின் அடிமையா. பிரித்தானியாவிற்கு தன் நலன் முக்கியம். அவர்கள் தம் நலனுக்கு முக்கியம் என்றால், சிங்களவனை, அல்லது தமிழனை, அல்லது முஸ்லிம்கள் ஏன் வேடரை கூட முன்னிலை படுத்துவார்கள்.

அதே போல் பேராசிரியர்கள் இலங்கை அரசு கொடுக்கும் குட்டிக்கும், புட்டிக்கும் கட்டுரை எழுதகூடியவர்கள் உளர்.

பிரபு ஒருவர், முன்னாள் வெளிநாட்டு மந்திரி லியம் பொக்ஸ், இன்னும் சில பிரித்தானிய பா ஊ க்களுக்கு இலங்கை இப்படி சேவை செய்து தம் நலனை முந்தள்ளியது யாவரும் அறிந்ததே.

இதன் பெயர்தான் ராஜதந்திரம்.

பிரித்தானியாவும், இலங்கையும் தத்தம் சுய நலன் சார்ந்து இயங்குகிறன. 

இதை போல எமது நலன் சார்ந்து நாம் இயங்கி, எமது நலனையும், மேற்கின் சுய நலனையும் ஒருமிக்க வைப்பதே எமக்கான சாவி. 2008 மாவீரர் உரையை நான் அப்படியே விளங்கி கொள்கிறேன்.

அதை விடுத்து, போத்துகீசன், ஒல்லாந்தன் என பழங்கதைகள் பேசி கொண்டு, சும்மா இருக்கும் நாடுகளில் அந்த நாடுகள் மீதே வெறுப்பரசியல் செய்தால், நாளை எமது புலம் பெயர் தமிழ் சந்ததியே தமிழர் நல அரசியலை ஒதுக்கும் நிலை ஏற்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாலி said:

தன் இனத்தின் விடுதலைக்காக தன் உடல் உயிர் ஆவி பொருள் முழுவதையும் தந்து போராடிய களங்கமில்லா ஓர் உத்தமனையும் பதவி வெறிபிடித்து இன்னொரு நாட்டினை ஆக்கிரமித்து நிற்கும் பொருளாசை பெண்ணாசை போன்ற சகல சிற்றின்பங்களையும் அனுபவிக்கும் கயவனையும் எவ்வாறு ஒரே நோக்கில் உங்களால் பார்க்கமுடிகின்றது என்றெண்ணி வியந்துபோகின்றேன்!

நான் இந்த திரியில்  பேசுவது நம்பிக்கை துரோகம் பற்றியது மட்டுமே.உக்ரேன்  மீதான போர் தொடுப்பு சரி பிழைகளுக்கப்பால் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

நாளை எமது புலம் பெயர் தமிழ் சந்ததியே தமிழர் நல அரசியலை ஒதுக்கும் நிலை ஏற்படும்.

இதுதான் யாழ்களத்யில் குத்தி முறியும் ஓரிருவரின் மறைமுக இலக்கு என்பதும் தெரியும்.

வெளிப்படையாக சொன்னால் - துரோகி பட்டம் தருகிறார் என்பார்கள். நமக்கேன் சோலி.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நான் இந்த திரியில்  பேசுவது நம்பிக்கை துரோகம் பற்றியது மட்டுமே.உக்ரேன்  மீதான போர் தொடுப்பு சரி பிழைகளுக்கப்பால் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்...

எனது பார்வையை சொல்கிறேன்.

நம்பிக்கை என்பது நல்ல விடயத்தில் இணைவோருக்கானது.

இருவர் சேர்ந்து ஒரு பெண்ணை வல்லுறவு செய்யும் போது அங்கே நம்பிக்கைக்கு இடம் இல்லை. அதன் பின் - ஒருவர் மற்றையவரை போட்டு கொடுப்பது நம்பிக்கை துரோகம் அல்ல.

அதே போலத்தான் புட்டினும் பிரிகோசினும். புட்டினின் ரஸ்யாவை கொள்ளை அடிக்கும் ஒலி கார்க் கூட்டத்தின் தலைவன்.  

ஒரு hotdog விற்பனையாளனாக இருந்து, பின்னர் புட்டின் சமையல்காரனாகி, பின்னர் புட்டின் வெளிநாடுகளில் கொள்ளை அடிக்கும் தொழிலுக்கு உருவாக்கிய வாக்னர் எனும் கூலிப்படைக்கு தலைவனாகியவன் பிரிகோசின்.

இது இரெண்டு கொள்ளையகள் இடையான பிணக்கு. இதில் நம்பிக்கை என்றுமே இருவரிடமும் பரஸ்பரம் இருந்ததில்லை. ஆகவே துரோகமும் இல்லை. 

அரசியல் கொலை கொள்ளை எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. அதை ஏன் ரஷ்யாவில் மட்டும் நடக்கின்றது என்ற பிரமையை ஊடகங்களும் நீங்களும் உருவாக்குகின்றீர்கள்??

பைடனின் உக்ரேன் ஊழல்பற்றி யாருமே வாய் திறப்பதில்லை.
ஒரு பக்க நியாயத்திற்கு நான் என்றுமே எங்குமே எதிரானவன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நான் இந்த திரியில்  பேசுவது நம்பிக்கை துரோகம் பற்றியது மட்டுமே.உக்ரேன்  மீதான போர் தொடுப்பு சரி பிழைகளுக்கப்பால் என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்...

துரோகம் பற்றி சொல்லப்போனால், 

கருணாம்மான் பற்றிய நிகழ்வு வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததற்கு நிகரானது. எவரும் அன்போடு பிள்ளையைப் போல வளர்த்த கடா மார்பில் பாயும் என்று எதிர்பார்ப்பதில்லை. இது துரோகம்.

பிரிகோஜின் பற்றிய நிகழ்வு நச்சுப் பாம்புக்கு பாலூற்றியதற்கு நிகரானது. அது நச்சுப்பாம்பு ஒருநாள் எவரையோ தீண்டும் என்று தெரியும். அதன் இயல்பே தீண்டுவதுதான். இது கருத்து முரண்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அரசியல் கொலை கொள்ளை எல்லா நாடுகளிலும் இருக்கின்றது. அதை ஏன் ரஷ்யாவில் மட்டும் நடக்கின்றது என்ற பிரமையை ஊடகங்களும் நீங்களும் உருவாக்குகின்றீர்கள்??

பைடனின் உக்ரேன் ஊழல்பற்றி யாருமே வாய் திறப்பதில்லை.
ஒரு பக்க நியாயத்திற்கு நான் என்றுமே எங்குமே எதிரானவன்.

ரஸ்யா பற்றிய திரியில் அது சம்பந்த பட்டோர் பற்றி கதைக்கும் அதேவேளை, பொரிஸ் உட்பட ஏனையோரையும் அந்த அந்த திரிகளில் கழுவி, கழுவி ஊத்தித்தான் உள்ளோம்.

ஆனால் புட்டின் தலைமையில் ரஸ்யாவின் வளங்களை ஒலிகார்க் கூட்டம் அடிக்கும் கொள்ளை போல், நிறுவன மயப்பட்ட ஊழல் இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பதும் உண்மையே.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சம்பந்தமில்லாத விடயம் என்றாலும் கூட, நான் அவதானித்தவகையில் ஒன்றைச் சொல்லவேண்டும்.

ஜஸ்டின் தலைவருக்கோ போராட்டத்திற்கோ எதிரானவர் அல்லர். அவரின் கருத்துக்களை 2009 வரை வாசித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அவர் ஒரு தேசியவாதி.

ஆனால், 2009 இறுதி யுத்தத்தில் புலிகளின் ஒரு பிரிவினர் செயற்பட்ட விதம் , குறிப்பாக தப்பிச் செல்ல எத்தனித்த பொதுமக்கள் மீது அவர்களால் நடத்தப்பட விடயங்கள் அவரைப் பாதித்திருக்கின்றன. அதனால் அவர் தனது தீவிர ஆதரவு நிலையினை தவிர்த்திருக்கிறார். என்னால் ஜஸ்டின் பற்றி உணர முடிந்தது அவ்வளவுதான். 

இரண்டாவது விடயம்.

பிரிகோஷின் பெலாரசுக்குத் தப்பிச் சென்றாலும் அவர் நிச்சயம் புட்டினினால் பழிவாங்கப்படுவார். அதேபோல ரஸ்ஸிய ராணுவத்திற்குள் உள்வாங்கப்படவிருக்கும் வாக்னர் படையினர் சிறிதுசிறிதாகக் களையெடுக்கப்படுவார்கள். ஒருமுறை தன்னை எதிர்த்தவர்களை தன்னுடன் கூட வைத்திருக்க புட்டின் அப்படியொன்றும் மதிகேடர் அல்ல. தனது எதிராளிகள் என்று சந்தேகிப்போரையே போட்டுத் தள்ளும் புட்டின், தன்னை எதிர்த்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களை விட்டுவைப்பாரா என்ன?

மூன்றாவது விடயம்,

தேசியத் தலைவர் குறித்த வாலியின் கருத்து வியக்கவைக்கிறது. அவர் ஒரு நடுநிலைவாதியென்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ வாக்னர் படை ரோஸ்டோவ் நகரை விட்டு விலகிய போது மக்கள் கொடுத்த வரவேற்ப்பாம்.

இந்த வீடியோ, மீள வந்த ரஸ்ய பொலிசாருக்கு அதே நகர மக்கள் காட்டிய எதிர்ப்பாம்.

புட்டினின் விம்பம் ரஸ்யாவுக்குள் பலத்த அடி வாங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.