Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த வீடியோ வாக்னர் படை ரோஸ்டோவ் நகரை விட்டு விலகிய போது மக்கள் கொடுத்த வரவேற்ப்பாம்.

சூப்பராய் இருகிள்ள தலை இங்கு வராமல்   இந்த யுத்தம் முடியாது  ??????????????????????????????????????

  • Replies 231
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புதின் உடன் சமாதானமா? 'கிளர்ச்சி' செய்ய முயன்ற வாக்னர் தலைவர் பின்வாங்கியது ஏன்?

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்ய ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' அந்நாட்டிற்கு எதிராகவே திரும்பியது, யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக அமைந்தது. ஆனால், தற்போது வாக்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். அதிபர் புதினுடன், சமாதான பேச்சுவார்த்தைக்கு அவர் உடன்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக கூறப்பட்ட இந்த கூலிப்படையினர், ரஷ்யாவின் தென் பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாயின.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் தலைவர் பிரிகோஷின் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின், அந்த முடிவைக் கைவிட்டு, தனது படைகளை பின்வாங்குமாறு உத்தரவிட்டார்.

யுக்ரேனில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரில் ரஷ்யாவுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற அதன் ஆதரவு கூலிப்படையான 'வாக்னர்' திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. ஜூன்23 அன்று இரவு, அந்த கூலிப்படையினர் யுக்ரேன் எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் நுழைந்து, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டர்.

கருங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல தரப்பில் இருந்தும் தகவல்கள் கசிந்தன. வோரோனேஸ் நகரை உள்ளடக்கிய பரந்து விரிந்த வோரோனேஸ் ஓப்ளாஸ்ட் பிராந்தியத்தின் வழியே அப்படையினர் மாஸ்கோ நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டது.

இந்த நகரம் மாஸ்கோவில் இருந்து 482 கி.மீ. தெற்கே இருக்கிறது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னைச் சந்திக்காவிட்டால் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் செல்லப் போவதாக வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் மிரட்டல் விடுத்திருந்தார்.

புதினுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ய முயற்சி - பின்வாங்கியது ஏன்?

இந்த நிலையில் ரஷ்யா முழுவதும் பதற்றம் நிலவிய சூழலில், வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரூஸுக்கு செல்வதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சனிக்கிழமையன்று, வாக்னர் குழு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அவர்களது நடவடிக்கையை ‘கிளர்ச்சி’ எனப் பிரகடனப்படுத்தி, அவர்கள் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறினர்.

ஆனால், இரவு நேரத்தில் தனது அணிவகுப்பை நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையினருடன் தங்கள் தளத்திற்குத் திரும்பினார்.

ரோஸ்ஸியா 24 செய்திச் சேனலின் படி, பெலாரூஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, எவ்ஜெனி ப்ரிகோஜின் உடன் பேசினார். அதற்குப் பிறகு ப்ரிகோஜின் தனது தளத்திற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ப்ரிகோஜின் தனது படையினரின் அணிவகுப்பை நிறுத்தவும் ரஷ்யாவில் நிலைமை மோசமடைவதைத் தடுக்கவும் ஒப்புக்கொண்டார்.

லுகாஷென்கோவின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ரோஸ்ஸியா 24 செய்தி சேனல், மாஸ்கோவை நோக்கிய அணிவகுப்பைப் பாதி வழியில் நிறுத்துமாறும் லுகாஷென்கோ கூறியதை ப்ரிகோஜின் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டது.

தங்களுக்கான பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களுடன் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கு வாக்னர் கூலிப்படையின் வீரர்களால் முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தி சேனலின்படி, புதினும் இந்தத் தீர்வுக்கு ஒப்புக்கொண்டார்.

மாஸ்கோவை நோக்கிய அணிவகுப்புக்கு முன்பு, ப்ரிகோஜின் தனது நோக்கம், “ஆட்சிக்கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று கூறியிருந்தார்.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

'வாக்னர்' தலைவர் ப்ரிகோஜின்

வாக்னர் படையை வாஞ்சையோடு வழியனுப்பும் ரஷ்ய மக்கள்

வாக்னர் கூலிப்படையின் வீரர்கள், ரோஸ்டோவ் நகரிலிருந்து திரும்பும்போது உள்ளூர் மக்கள் அவர்களைக் கட்டியணைத்து பிரியாவிடை கொடுப்பதை, புகைப்படங்களில் காண முடிந்தது.

சமூக ஊடக தளமான ட்விட்டரில் பரவி வரும் ஒரு வீடியோவில், வாக்னர் வீரர் ஒருவர் வானத்தை நோக்கிச் சுடுகிறார். வாக்னர் குழுவின் வீரர்கள் ரோஸ்டோவில் இருந்து வெளியேறும்போது அந்த வீரர் வானத்தை நோக்கிச் சுடுவது அந்த வீடியோவில் தெரிகிறது.

அவர்கள் திரும்பிச் செல்லும்போது தெருக்களில் வரிசையாக நின்றிருந்த பொதுமக்கள், அந்த வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்துவதைக் கேட்க முடிகிறது. கடந்த சில மணிநேரங்களில் தெற்கு நகரமான ரோஸ்டோவில் இருக்கும் பொதுமக்கள் வாக்னர் படையினருக்கு ஆதரவளிக்கும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள ராணுவ தலைமையகத்திலிருந்து வாக்னர் படை வெளியேறும்போது, பொதுமக்கள் “வாக்னர்! வாக்னர்!” என்று கோஷமிட்டு அவர்களுக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் வாக்னர் வெளியேறும்போது, நகர மக்கள் பலரும் சாலைகளில் திரண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் யுக்ரேனில் வாக்னர் வீரர்கள் போரிட்டதற்காக தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா அல்லது கைவிடப்பட்ட கிளர்ச்சிக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா என்பது தெளிவாக இன்னும் உறுதியாகவில்லை.

ரஷ்யா-யுக்ரேன்-வாக்னர்-புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்னர் vs ரஷ்ய ராணுவம் பலம் என்ன?

யுக்ரேனில் ரஷ்ய ராணுவத்துடன் தோளோடு தோள் நின்று போரிட்ட கூலிப்படையே வாக்னர் குரூப் ஆகும்.

ப்ரிகோஜின் தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டவாறு, அந்த குழுவில் சுமார் 25 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை கணிப்பின்படி, கடந்த ஜனவரியில் வாக்னர் குழுவில் அதிகபட்சமாக 50 ஆயிரம் வீரர்கள் வரை இருந்தனர். ஆனால், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் யுக்ரேன் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

வாக்னர் குழுவின் பலம் 25,000 வீரர்கள் எனும் போது, ரஷ்ய ராணுவத்திற்கோ 8 லட்சம் வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், போரில் 2.2 லட்சம் வீர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வாக்னர் படையைச் சேர்ந்த வீரரை சிறுவன் கட்டியணைக்கும் காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வாக்னர் படையைச் சேர்ந்த வீரரை சிறுவன் கட்டியணைக்கும் காட்சி

மாஸ்கோவில் நிலவிய பதற்றம்

முன்னதாக வாக்னர் படைகள் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக கூறப்பட்டதால், ரஷ்யாவில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.இதனால் மாஸ்கோ நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேபோல், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலும் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அங்குள்ள 'வாக்னர்' தலைமையகத்தில் நேற்று காலை ரஷ்ய அதிகாரிகள் சோதனையிட்டதாக கூறப்படுகிறது. அங்கே, ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

மாஸ்கோ வீதிகளில் ஆயுதங்களுடன் உலா வரும் ராணுவ வீரர்கள்

ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதம் தரித்த வீரர்கள்

யுக்ரேன் போரில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக திகழ்ந்த, ரோஸ்டோவ் - ஆன் - டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வீரர்கள் காவல் காக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின.

அவர்கள் ராணுவ தலைமையகத்தை பாதுகாக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களா அல்லது வாக்னர் கூலிப்படையினரா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

அந்த வீடியோக்களில் காட்டப்படும் கட்டடம் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் பதிவு செய்யப்பட்டவை என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடிந்தது.

அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அந்த நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே நீடிக்கிறது.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ரோஸ்டாவ்-அன்-டான் நகரில் ஆயுதம் தரித்த வீரர்கள்

'25,000 பேர் சாகத் தயார்' - ப்ரிகோஜின்

இதற்கு முன்னதாக வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்புவதால் வாக்னர் குழுவில் உள்ள அனைவருமே சாகவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

"நாங்கள் அனைவரும் சாகத் தயாராக இருக்கிறோம். நாங்கள் 25,000 மற்றும் கூடுதலாக 25,000" என்று அவர் அந்த ஆடியோ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கு மற்றும் வலேரி கெரசிமோவை சந்திக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், தலைநகர் மாஸ்கோ நோக்கி சுமார் 1,600 கி.மீ. தூர அணிவகுப்புக்கு தனது படைகள் தயாராக இருப்பதாகவும் அவர் அப்போது மிரட்டல் விடுத்திருந்தார்.

ப்ரிகோஜின் பேச்சு அடங்கிய 2 வீடியோக்களும் ரோஸ்டவ்-ஆன்-டான் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தலைமையகத்திற்குள் பதிவு செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

அதனை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த பிபிசி முயற்சி செய்து வருகிறது.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,REUTERS

மாஸ்கோவை விட்டு தனி விமானத்தில் வெளியேறினாரா புதின்?

முன்னதாக ரஷ்யாவில் ராணுவத்துடன் மோதத் துணிந்த வாக்னர் கூலிப்படையினர் மாஸ்கோ நோக்கி அணிவகுப்பதாக செய்தி வெளியானதால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்குமோ என்று உச்சக்கட்ட பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு விமானத்தில் தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வந்தனர்.

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கான சிறப்பு விமானமான Il-96-300PU விமானம் மாஸ்கோவில் இருந்து, அங்குள்ள நேரப்படி நேற்று பிற்பகல் 2.16 மணியளவில் புறப்பட்டு வடமேற்குத் திசையில் சென்றுவிட்டதாக விமானங்களின் பாதையை பின்தொடரும் FlightRadar சேவை தரவுகளை சுட்டிக்காட்டி சிலர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.

மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள த்வெர் நகருக்கு அருகே, புதின் பயணித்த சிறப்பு விமானம் அந்த கண்காணிப்பு கட்டமைப்பில் இருந்து மறைந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், அந்த சிறப்பு விமானத்தில் புதின் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும், புதின் தலைநகர் மாஸ்கோவில் நிரந்தரமாக வசிப்பதில்லை, மாஸ்கோவுக்கு வடமேற்கே அமைந்துள்ள வால்டாய் ஏரியில் உள்ள தனது பரந்து விரிந்த இல்லத்தில்தான் அதிக நேரத்தை செலவிடுவார்.

புதினுக்கு எதிராக புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்னரை எச்சரித்த புதின்

ரஷ்யாவின் ராணுவத் தலைமைக்கு எதிராக வாக்னர் குழு போர்க்கொடி தூக்கிய பிறகு ரஷ்ய அதிபர் புதின் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், அனைத்து படைகளும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடந்த நிகழ்வுகள் 'ஒரு துரோகம்' என்றும், ரஷ்ய மக்களை முதுகில் குத்தும் செயல் என்றும்” புதின் வாக்னரை சாடியிருந்தார்.

"இது முதுகில் குத்தும் செயல். இந்த மாதிரியான அச்சுறுத்தல்களில் இருந்து தேசத்தைக் காப்பதற்கான எங்களது நடவடிக்கை தீவிரமானதாக இருக்கும். துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தை கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்” என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார் புதின்.

புதினுக்கு மிகவும் நெருக்கமான, அவருக்கு விசுவாசமான சகாவாக வலம் வந்த ப்ரிகோஜின், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சமையல் ஒப்பந்தங்களை பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்பியது ஏன்?

யுக்ரேன் போர்க் களத்தில் ரஷ்ய ராணுவத்தின் பின்னடைவுக்கும், அதிக உயிரிழப்புகளுக்கும் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்குவே காரணம் என்று ப்ரிகோஜின் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார்.

"இந்த போர் தேவைப்பட்டது. அதன் மூலம் இரண்டாவது நாயகனாக அவர்உருவெடுக்க முடிந்தது. யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்த போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்த போர் தேவைப்பட்டது." என்கிறார் ப்ரிகோஜின். இது யுக்ரேன் மீதான தாக்குதலைத் தொடங்க ரஷ்யா முன்வைத்த காரணங்களுக்கு முரண்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வார தொடக்கத்தில் யுக்ரேனில் உள்ள வாக்னர் கூலிப்படையின் தளம் ஒன்றை ரஷ்ய ராணுவம் தாக்கியதாக ப்ரிகோஜின் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c3gj9gr906lo

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

திட்டமிடாமல்தானா, 18 மனத்தியாலத்தில், 8 விமான/கெலிகளை சுட்டு விழுத்தி, 15 விமானிகள், வீரர்களை கொன்று, ரஸ்யாவின் கேந்திர முக்கியமான நகரை பிடித்து, அதில் உள்ள மிக முக்கிய தளத்தை கைப்பற்றி, மாஸ்கோவின் வாசல் வரை வந்தார்கள்?

பிரிகோசின் ஏன் பின்வாங்கினார் என்றது ஆய்வுக்குரிய ஆனால் விமான எதிர்ப்பு ஆயுதம் முதல் பலத்த தயார்படுத்தலுடந்தான் முன்னேறினார்கள்.

நீங்கள் சொன்ன கிடலர் கொலை முயற்சி - அவரின் வெல்ல முடியாதவர் என்ற விம்பத்தில் வீழ்ந்த முதல் கீறல். அதை விட மோசமாக இங்கே புட்டின் மூக்கு உடைபட்டுள்ளது.

நன்றி.

வாக்னர் குழுவின் இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

அந்த நோக்கத்தினை அடைவதற்கான முயற்சி என்ன?

தற்போது ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை அவர்கள் எதிர்பார்த்த ஒன்றா?

மேலும் நான் காணொளி இணைத்தது அந்த சதிப்புரட்சி ஆரம்பித்த போது, அந்த காணொளி நீக்கப்பட்டுவிட்டது அதற்கு பின்னரே நிகழ்வுகள் தீவிரமாகி பின்னர் நீர்த்து போயிருந்தது அதனால் இப்படித்தான் நடக்கும் என தெரியாது ஆனால் எனது மனதில் தோன்றிதை பதிவிட்டேன், நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலவோ அல்லது நாம் விரும்புவது போலவோ முடியும் என எதிர்பார்க்க இயலாது எனும் சாதாரண புரிதல் உண்டு, அதுதானே நடைமுறையும் கூட.

பொதுவாக தேவையில்லா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டால் இறுதியில் ஏமாற்றம் அதனால் விரக்தி என்பன ஏற்படும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் அதனால் பதிவுகளை நகைசுவையுடன் பார்த்தாலும் முடிந்தளவில் அதனை பிரதிபலிப்பதில்லை ஏனெனில் எனது கருத்துகளுடன் பலருக்கு முரண்பாடு உண்டு அனால் தனிப்பட்ட முறையில் என்னுடன் அல்ல எனும் புரிதல் உண்டு, அதே போலத்தான் மற்றவர்களின் கருத்துகளுடன் முரண்பாடு இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் மதிப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

மிக பிந்திய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

1. பெலரூஸ் அதிபர் முயற்சியில் புட்டின்-பிரிகோசின் இடையே மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் ஏற்பாடு.

2. மாஸ்கோ நகர்வை கைவிட்டு உக்ரேன் திரும்புவதாக பிரிகோசின் அறிவிப்பு

3. ஆனால் இப்படி ஏதும் நடக்கவில்லை பிரிகோசின் மறுத்துள்ளதாயும் சொல்ல படுகிறது.

4. முன்னரங்கில் உக்ரேன் தாக்குதலை தீவிரபடுத்தியுள்ளதாம். டினிப்ரோ நதியை தாண்டி, 3 தாங்கிகள் முதற்கட்டமாக தெற்கு கெசோனில் இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இவை 

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்.

சப்பென்று உப்பு சப்பு இல்லாமல் மந்த கதியில் ஏனோ தானோ என்று  இருந்த யாழ் களம் உங்கள் மீள் வருகையால் உற்சாகம் அடைந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

மேலும் நான் காணொளி இணைத்தது அந்த சதிப்புரட்சி ஆரம்பித்த போது, அந்த காணொளி நீக்கப்பட்டுவிட்டது அதற்கு பின்னரே நிகழ்வுகள் தீவிரமாகி பின்னர் நீர்த்து போயிருந்தது அதனால் இப்படித்தான் நடக்கும் என தெரியாது ஆனால் எனது மனதில் தோன்றிதை பதிவிட்டேன், நிகழ்வுகள் நாம் எதிர்பார்ப்பது போலவோ அல்லது நாம் விரும்புவது போலவோ முடியும் என எதிர்பார்க்க இயலாது எனும் சாதாரண புரிதல் உண்டு, அதுதானே நடைமுறையும் கூட.

பொதுவாக தேவையில்லா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டால் இறுதியில் ஏமாற்றம் அதனால் விரக்தி என்பன ஏற்படும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் அதனால் பதிவுகளை நகைசுவையுடன் பார்த்தாலும் முடிந்தளவில் அதனை பிரதிபலிப்பதில்லை ஏனெனில் எனது கருத்துகளுடன் பலருக்கு முரண்பாடு உண்டு அனால் தனிப்பட்ட முறையில் என்னுடன் அல்ல எனும் புரிதல் உண்டு, அதே போலத்தான் மற்றவர்களின் கருத்துகளுடன் முரண்பாடு இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் அனைவரையும் மதிப்பதுண்டு.

இது எனது இன்றைய நேற்றைய எதிர்பார்ப்பல்ல. புட்டினின் அழிவு அல்லது அகற்றம், உள்ளே இருந்துதான் நடக்கும் என நான் ஒரு வருடம் முதலே யாழில் எழுதியுள்ளேன். ஒரு அணு ஆயுத நாட்டின் தலைமை அப்படி மாறுவதுதான் சாத்தியம்.

அதே போல் கிர்கின், பிரிகோஜின், மெட்வெடேவ், பாட்டிருசேவ், போன்றவர்களின் பெயரை கூறி இவர்கள் பிட்டினுக்கு ஆப்படிப்பார்கள் எனவும் கூறினேன், அப்போ பலர் கோசான் மேற்கின் கதையாடலை காவுகிறார் என உதாசீனம் செய்தார்கள்.

ஆனால் நேற்று ? பிரிகோஜின் கலகம் செய்ய, கிர்கின் ஆதரித்தார், மெட்வெடெவ் குடும்பத்தோடு மாஸ்கோவை விட்டு வெளியேறினார், பாட்டிருசேவ் முதல் நாளே கசகஸ்தான் சென்று தங்கினார்.

இவை இவர்கள் எல்லாருமே புட்டினை தருணத்தில் கைவிடுவார்கள் என்பதை உணர்த்தியது.

இவர்கள் மட்டும் அல்ல, மாஸ்கோவை நோக்கிய நகர்வில் மூன்று ஒப்லாஸ்ட் எனப்படும் மாவட்டங்களை வாக்னர் கைப்பற்றியது. அதில் ஒன்றில் இருந்த பிராந்திய இராணுவ தலைமையகத்தையும். 

இவை எதை காட்டுகிறது? புட்டினுக்காக போராட எந்த தரைப்படையும் தயாரில்ல்லை. விமானப்படை மட்டுமே போரிட்டது.

பேப்பரில் எத்தனை மில்லியன் சிப்பாய்களும் இருக்கலாம் அதில் பலர் உக்ரேனில், ரஸ்யாவில் இருக்கும் எவரும் புட்டினுக்காக ஒரு பிஸ்டோலை கூட தூக்கவில்லை. ரோஸ்காடியா எனப்படும் ஆயுத போலிஸ் மட்டுமே களத்துக்கு வந்தது.

போராட போவதாக சொல்லிய காடிரோவின் செச்சின் அணி, கடைசிவரை போராடும் இடத்துக்கு போகவே இல்லை. போவது போல் போக்கு காட்டியதோடு சரி.

முழுப்பலமும் உக்ரேனில் என்பதால் மொஸ்கோவில் குப்பை லாரிகளை வீதிக்கு குறுக்கே நிறுத்தி வாக்னரை எதிர் கொள்ளும் அவல நிலையில் இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை புட்டினை விட மோசமான கிருமி பிரிகோஜின். ஆகவே புட்டினை அவர் பிரிதியீடு செய்வதை நான் விரும்பவில்லை. 

ஆனால் பின் வாங்கினாலும் - இந்த சதி புரட்சி பிட்டினின் இயலாமை, கையாலாகதனத்தை முழு ரஸ்யாவுக்கும் காட்டி விட்டது.

புட்டின் பிம்பத்தின் பாதியை செலன்ஸ்கியும், மீதியை பிரிகோசினும் உடைத்துள்ளார்கள்.

ரஸ்யாவில் ஜனநாயக மாற்றத்தை விரும்பும், ஐரோப்பாவில் வீம்பு யுத்தத்தை தவிர்க்க விரும்பும், உக்ரேனிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பேணப்பட வேண்டும் என நினைக்கும் என்போன்றோருக்கு இது நல்ல செய்திதான்.

Death by a thousand cuts, ஆயிரம் சின்ன வெட்டுக்களால் நேரும் சாவு. புட்டினின் அரசியல் இப்படித்தான் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

வாக்னர் குழுவின் இந்த தாக்குதலின் நோக்கம் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?

அந்த நோக்கத்தினை அடைவதற்கான முயற்சி என்ன?

தற்போது ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கை அவர்கள் எதிர்பார்த்த ஒன்றா?

இவை பற்றி ஊகமாகவே இப்போதைக்கு சொல்ல முடியும்.

பிரிகோஜினுக்கு கிரம்ளின் உள்ளே இருந்து போதிய சமிக்ஞை காட்டப்பட்டிருக்கிறது. 

மஸ்கோ உள்ளே போவது நோக்கம் அல்ல. மஸ்கோ வாசல் வரை வா- நாம் புட்டினை அழுத்தி - மாற்றத்தை ஏற்படுத்துவோம் என புட்டினுக்கு நெருக்கமான, ஷிகோ, கரிஸ்மோவ் அல்லாத வேறு ஒருவர் அல்லது சிலர் வாக்கு கொடுத்திருக்க கூடும்.

ஏதோ காரணத்தால் இது பிசகிவிட (புட்டின் சென் பீட்டர்ஸ் பேர்க் போய் பங்கரில் பதுங்கி கொண்டார்) - பிரிகோசின் கலகத்தை கைவிட நேர்ந்துள்ளது.

இப்போதைக்கு இதுவே நடைமுறை சச்த்தியமான விளக்கமாக நான் கருதுவது.

வரும் நாட்களில் பிட்டின் களை எடுப்பார். அதுவும் நல்லதுதான் - ரஸ்யாவுக்குள் மேலும், மேலும் பலமான பிட்டின் எதிரிகளை அது உருவாக்கும்.

பிகு

பொருளாதார தடை வேலை செய்யவில்லை என நீங்கள் அடிக்கடி எழுதுவீர்கள். ரஸ்ய பணக்கார வர்க்கத்தின் வயிற்றில் அடித்து அவர்களை பிட்டினை அகற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுவதே இந்த தடைகளின் பிரதான நோக்கம். காலம் எடுத்தாலும் - இது வேலை செய்யும்.

வணக்கம் @பெருமாள். கோப்பி மேசின் ஒண்டு வாங்கி வைத்துள்ளேன். கொஸ்டா, ஸ்டார் பக்ஸை விட திறம் கோப்பி வெறும் 30 பென்ஸ்தான்.

அதுசரி திண்ணையை பூட்டி போட்டினம் போல? உங்கள் கைங்காரியமோ🤣.

நன்றி @island

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

இப்போதைக்கு இதுவே நடைமுறை சச்த்தியமான விளக்கமாக நான் கருதுவது.

இன்னும் ஒரு காரணமும் சாத்கியமே. அதாவது இந்த கலகம் புட்டின் உக்ரேனை கெளரவமாக கைவிட தனக்குத்தானே ஏற்படுத்தி கொண்ட off ramp. 

உள்ளூர் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து, ஆகவே ரஸ்யா உக்ரேன் விசேட நடவடிக்கையை சுருக்கி கொள்கிறது, 2022 பெப்ரவரி எல்லைக்கு போகத்தயார், மின்ஸ்க் 3, துருக்கி மத்தியஸ்தம், பொருளாதார, எரிபொருள் தடை நீக்கம் - இப்படி ஒரு off ramping மூலம் அதிகம் மூக்குடையமால் உக்ரேனில் இருந்து விலகி, ரஸ்யாவுக்குள் தன்னை மேலும் உறுதியாக நிலை நிறுத்த இதை புட்டின் + பிரிகோஜின் இணைந்து செய்திருக்கலாம்.

இந்த 4D chess தியரிப்படி சரி வரும், ஆனால் இது உண்மை என்றால் - புட்டின் கலகத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக பாவனை செய்து தன் இமேஜை மேலும் கூட்டி இருப்பார்.

இப்படியாக, லூசன் லுசென்கோவிடம் மத்தியஸ்தம் செய்யும் நிலைக்கு இறங்கி இருக்க மாட்டார்.

இன்னொரு சாரார் - வாக்னர் படையை பெலரூஸ் அனுப்பி - அங்கே இருந்து உக்ரேனை தாக்குவதற்காக இந்த கலக நாடகம் என்கிறார்கள் - ஆனால் அதை லூக்காவும், புட்டினும் ஒரு போன் கோலில் செய்யலாம் - கலகம் எல்லாம் ஏற்பாடு செய்துதான், வாக்னரை பெலரூஸ் அனுப்ப வேண்டும் என்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

எதுவாக இருந்தாலும் இனி புட்டின் அல்ல ரசிய தலைவர்

போர் உக்ரைனால் இல்லை 

அப்படியே போர் தொடர்ந்தாலும் உக்ரைன் போரில் இனி புட்டின் வெல்லவே முடியாது 

புட்டின் இறப்பு இல்லாத ஒருவரா? இல்லையே. 

புடடின் என்பது காலத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தலைவர் அவ்வளவே.

உண்மையில் ஒரு staged coup என்றுதான் நான் நினைக்கிறேன். 

பெலாருஸ்ஸிற்குச் செல்லும்  வக்னர் படையினர் அங்கிருந்து என்ன செய்யப்போகின்றனர்? 

இந்த வருட முடிவிற்குள் உக்ரேன் எனும் ஒரு நாடு மிச்சம் மீதி இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

இந்த வருட முடிவிற்குள் உக்ரேன் எனும் ஒரு நாடு மிச்சம் மீதி இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. 

அதற்கு ரசியா இருக்கணுமே?

வருக வருக என பல நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பது தான் நடக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

அதற்கு ரசியா இருக்கணுமே?

வருக வருக என பல நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பது தான் நடக்கும். 

large.IMG_2501.jpeg.7767117e63c5d960cd72cbeaf91f8907.jpeg

மாஸ்கோவில் 2ம் உலக யுத்த நினைவு நாளில் ஒத்தை டாங்கி அணி வகுப்பு நடத்தியபோதே சொன்னேன் யாரும் கேட்கவில்லை.

நேற்று மாஸ்கோவில் குப்பை லாரியில் சண்டைக்கு போன காட்சியை கண் குளிர கண்டபின் - மேலே உள்ள மீம்தான் உண்மை என வடிவாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அதற்கு ரசியா இருக்கணுமே?

வருக வருக என பல நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பது தான் நடக்கும். 

வரலாறு என்பது கற்பனைகளாலும், பலமற்ர, செயலற்ர, வாய்ச்சொல் வீரர்களது விருப்பு வெறுப்பாலும் எழுதப்படுவதில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இன்னும் ஒரு காரணமும் சாத்கியமே. அதாவது இந்த கலகம் புட்டின் உக்ரேனை கெளரவமாக கைவிட தனக்குத்தானே ஏற்படுத்தி கொண்ட off ramp. 

உள்ளூர் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து, ஆகவே ரஸ்யா உக்ரேன் விசேட நடவடிக்கையை சுருக்கி கொள்கிறது, 2022 பெப்ரவரி எல்லைக்கு போகத்தயார், மின்ஸ்க் 3, துருக்கி மத்தியஸ்தம், பொருளாதார, எரிபொருள் தடை நீக்கம் - இப்படி ஒரு off ramping மூலம் அதிகம் மூக்குடையமால் உக்ரேனில் இருந்து விலகி, ரஸ்யாவுக்குள் தன்னை மேலும் உறுதியாக நிலை நிறுத்த இதை புட்டின் + பிரிகோஜின் இணைந்து செய்திருக்கலாம்.

இந்த 4D chess தியரிப்படி சரி வரும், ஆனால் இது உண்மை என்றால் - புட்டின் கலகத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக பாவனை செய்து தன் இமேஜை மேலும் கூட்டி இருப்பார்.

இப்படியாக, லூசன் லுசென்கோவிடம் மத்தியஸ்தம் செய்யும் நிலைக்கு இறங்கி இருக்க மாட்டார்.

இன்னொரு சாரார் - வாக்னர் படையை பெலரூஸ் அனுப்பி - அங்கே இருந்து உக்ரேனை தாக்குவதற்காக இந்த கலக நாடகம் என்கிறார்கள் - ஆனால் அதை லூக்காவும், புட்டினும் ஒரு போன் கோலில் செய்யலாம் - கலகம் எல்லாம் ஏற்பாடு செய்துதான், வாக்னரை பெலரூஸ் அனுப்ப வேண்டும் என்பதில்லை.

கௌரவமாக வெளியேறும் சில off ramp சந்தர்ப்பங்கள் ரஷ்யாவுக்கு வழங்கப் பட்டன என்று நினைக்கிறேன். அண்மையில், தானியப் பற்றாக்குறையால் பாதிக்கப் படும் ஆபிரிக்காவின் பிரதிநிதிகள் புட்டின் முன்னிலையிலேயே போரை நிறுத்தும் படி கோரிக்கை வைத்தனர். அது கூட முதலே ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு நிகழ்வோ என்று யோசிக்க வைத்தது. "ஆபிரிக்காவில் பஞ்சம் ஏற்படாமலிருக்க உக்ரைன் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொள்கிறோம்"😎 என்று புட்டின் அறிவித்திருந்தால் பெரும்பாலானோர் கொடுப்புக்குள் சிரித்த படி மௌனமாக ஏற்றுக் கொண்டிருப்பர்!

ஆனால், இவை எதுவும் புட்டினுக்கு ஏற்புடைய off ramp வழிகளாக இல்லை.

"புட்டினின் ரஷ்யாவுக்கு புரியும் ஒரே மொழி இராணுவ மொழி" என்று உக்ரைன் நேரடியாகவும், மேற்கு நாடுகள் மறைமுகமாகவும் சொல்லி வந்திருக்கிறார்கள். இந்தக் கூற்றை உண்மையென வாக்னர் படை 24 மணிநேரங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது! பல பேர் இதைக் குறித்து வைத்துக் கொண்டிருப்பர் இப்போது, எப்போது பயன்படுத்துவர் என்பது தான் ஒரே கேள்வி!😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

வரலாறு என்பது கற்பனைகளாலும், பலமற்ர, செயலற்ர, வாய்ச்சொல் வீரர்களது விருப்பு வெறுப்பாலும் எழுதப்படுவதில்லையே. 

புட்டின் பக்கத்து சிறிய நாட்டின் தலைவரின் காலில் விழுவார் என்பது கற்பனை பலமற்ர செயலற்ர வாய்ச்சொல் வீரர்களாலேயே எழுதப்படாதது வரலாறியதும் வரலாறு தானே??🤣

15 hours ago, goshan_che said:

திட்டமிடாமல்தானா, 18 மனத்தியாலத்தில், 8 விமான/கெலிகளை சுட்டு விழுத்தி, 15 விமானிகள், வீரர்களை கொன்று, ரஸ்யாவின் கேந்திர முக்கியமான நகரை பிடித்து, அதில் உள்ள மிக முக்கிய தளத்தை கைப்பற்றி, மாஸ்கோவின் வாசல் வரை வந்தார்கள்?

உக்ரெயினில் நின்ற பிறிகோசின் படையணிகள் ரஸ்யாழுக்குள் நுளைந்து ரொஸ்டோவ் நகர்வரை வந்து பாரிய இராணுவ முகாமைக் கைப்பற்றும் வரை புதினுக்கு எதுவும் தெரியவில்லையா ? ரஸ்ய இராணுவம் பெரியளவில் எதிர்ப்புக் காட்டவில்லை. இராணுவத்தின் உள்ளே உயர்நிலையில் பிரிகோசினுக்கு ஆதரவு இல்லாமல் இத்தனையும் செய்திருக்க முடியாது. பிறிகோசின் பக்மூத்தில் சண்டையிட்டவாறே பல தடவைகள் ரஸ்ய இராணுவத்தால் நின்றுபிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். அவர்களுக்கும் இது தேவையில்லாத போர் என்று கருதியிருக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்பே இவ்வாறு நிகழப் போவதாக அமெரிக்க உளவுத்துறை அறிந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் புதினும் களாமுனையில் அருகில் இருந்த அவரது இராணுவமும் அறியவில்லை. எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

புட்டின் பக்கத்து சிறிய நாட்டின் தலைவரின் காலில் விழுவார் என்பது கற்பனை பலமற்ர செயலற்ர வாய்ச்சொல் வீரர்களாலேயே எழுதப்படாதது வரலாறியதும் வரலாறு தானே??🤣

புடின் எனும் பெயரை உக்ரேனியர்கள் வெறுப்பதற்கு நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.

ஆனால் பல புலம்பெயர்ஸ் வெறுப்பதற்கு என்ன  காரணம்? 

சனனாயக விரோதி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் பிளீஸ்..இரு கைகள் போதாது பொத்திக்கொண்டு சிரிப்பதற்கு 🤣

48 minutes ago, இணையவன் said:

உக்ரெயினில் நின்ற பிறிகோசின் படையணிகள் ரஸ்யாழுக்குள் நுளைந்து ரொஸ்டோவ் நகர்வரை வந்து பாரிய இராணுவ முகாமைக் கைப்பற்றும் வரை புதினுக்கு எதுவும் தெரியவில்லையா ? ரஸ்ய இராணுவம் பெரியளவில் எதிர்ப்புக் காட்டவில்லை. இராணுவத்தின் உள்ளே உயர்நிலையில் பிரிகோசினுக்கு ஆதரவு இல்லாமல் இத்தனையும் செய்திருக்க முடியாது. பிறிகோசின் பக்மூத்தில் சண்டையிட்டவாறே பல தடவைகள் ரஸ்ய இராணுவத்தால் நின்றுபிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். அவர்களுக்கும் இது தேவையில்லாத போர் என்று கருதியிருக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்பே இவ்வாறு நிகழப் போவதாக அமெரிக்க உளவுத்துறை அறிந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் புதினும் களாமுனையில் அருகில் இருந்த அவரது இராணுவமும் அறியவில்லை. எப்படி ?

புலம்பெயர்ஸ் இராணுவ ஆய்வாளர்கள் இதற்கு ஆயிரம் பதில்கள் வைத்திருப்பார்களே ...😉

17 hours ago, குமாரசாமி said:

ரஷ்யாவில் தேவையான அளவிற்கு தங்க வயல்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல ரஷ்யா தங்க ஏற்றுமதியும் செய்கின்றது.

ஆனால்....

தங்க வளங்களே இல்லாத ஜேர்மனி,பிரான்ஸ்,பெரிய பிரித்தானியா போன்ற நாடுகள் எப்படி அளவிற்கு அதிகமான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கின்றன?

காசு கொடுத்து வாங்கியிருந்தால் அந்த நாடுகளும் செல்வச்செழிப்பில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு எரிபொருளை உற்பத்தி செய்யும் அரபு நாடுகளைப்போல்........

Was vom Gold bleibt – DW – 05.08.2011

Afrika: Das schmutzige Geschäft mit dem Gold

அறிவில் சூரியனைப் போன்றவர்கள் இதற்கு பிரகாசமான பதில்களை வழங்குவார்கள் இருந்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கௌரவமாக வெளியேறும் சில off ramp சந்தர்ப்பங்கள் ரஷ்யாவுக்கு வழங்கப் பட்டன என்று நினைக்கிறேன். அண்மையில், தானியப் பற்றாக்குறையால் பாதிக்கப் படும் ஆபிரிக்காவின் பிரதிநிதிகள் புட்டின் முன்னிலையிலேயே போரை நிறுத்தும் படி கோரிக்கை வைத்தனர். அது கூட முதலே ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு நிகழ்வோ என்று யோசிக்க வைத்தது. "ஆபிரிக்காவில் பஞ்சம் ஏற்படாமலிருக்க உக்ரைன் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொள்கிறோம்"😎 என்று புட்டின் அறிவித்திருந்தால் பெரும்பாலானோர் கொடுப்புக்குள் சிரித்த படி மௌனமாக ஏற்றுக் கொண்டிருப்பர்!

ஆனால், இவை எதுவும் புட்டினுக்கு ஏற்புடைய off ramp வழிகளாக இல்லை.

"புட்டினின் ரஷ்யாவுக்கு புரியும் ஒரே மொழி இராணுவ மொழி" என்று உக்ரைன் நேரடியாகவும், மேற்கு நாடுகள் மறைமுகமாகவும் சொல்லி வந்திருக்கிறார்கள். இந்தக் கூற்றை உண்மையென வாக்னர் படை 24 மணிநேரங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறது! பல பேர் இதைக் குறித்து வைத்துக் கொண்டிருப்பர் இப்போது, எப்போது பயன்படுத்துவர் என்பது தான் ஒரே கேள்வி!😂

உண்மைதான் off ramp ற்காக வழங்கப்பட்ட வழிகள் அனைத்தையும் புட்டின் உதாசீனம் செய்தார். ஆனால் அமெரிக்காவில் டிரம்புக்கு ஏற்படுத்தபட்டுள்ள சிக்கல்கள், 2024 க்கு பின்னும் நிலமை தனக்கு சாதகமாக வராது, இன்னும் 5 ஆண்டு இப்படியே இழு படும் என நினைப்பதால் - ஒரு முடிவுக்கு கொண்டு வர எண்ணி, தனக்கு தானே ஒரு off ramp ஐ உருவாக்க புட்டின் முயற்சிக்கலாம்.

இப்படித்தான் நடந்தது என சொல்லவில்லை. 

இப்படியும் நடந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

உக்ரெயினில் நின்ற பிறிகோசின் படையணிகள் ரஸ்யாழுக்குள் நுளைந்து ரொஸ்டோவ் நகர்வரை வந்து பாரிய இராணுவ முகாமைக் கைப்பற்றும் வரை புதினுக்கு எதுவும் தெரியவில்லையா ? ரஸ்ய இராணுவம் பெரியளவில் எதிர்ப்புக் காட்டவில்லை. இராணுவத்தின் உள்ளே உயர்நிலையில் பிரிகோசினுக்கு ஆதரவு இல்லாமல் இத்தனையும் செய்திருக்க முடியாது. பிறிகோசின் பக்மூத்தில் சண்டையிட்டவாறே பல தடவைகள் ரஸ்ய இராணுவத்தால் நின்றுபிடிக்க முடியாது என்று கூறியிருந்தார். அவர்களுக்கும் இது தேவையில்லாத போர் என்று கருதியிருக்கலாம்.

ஒரு வாரத்துக்கு முன்பே இவ்வாறு நிகழப் போவதாக அமெரிக்க உளவுத்துறை அறிந்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் புதினும் களாமுனையில் அருகில் இருந்த அவரது இராணுவமும் அறியவில்லை. எப்படி ?

1. நிச்சயமாக பிரிகோசின் பலத்த தயார் படுத்தலோடுதான் புறப்பட்டார். ஆகவே தயார் படுத்தல் குறை பாட்டால், அவசரப்பட்டு புரட்சியை தொடங்கி விட்டு, அவர் நடவைக்கையை இடை நிறுத்தினார் என்பது சரியாகாது. 

2. அமெரிக்காவுக்கு ஜூன் நடுப்பகுதி முதல் தெரிந்தது, இவ்வளவு நடக்கும் மட்டும் புட்டினுக்கு தெரியவில்லையா? என்பது சரியான கேள்வியே. அப்படி பார்க்கப்போனால் இது புட்டினும், பிரிகோசினும் சேர்ந்து ஆடிய நாடகம் என கருத இடமுண்டு.

3. ஆனால் இதனால் இருவருக்கும் என்ன நன்மை?

4. இதை உக்ரேனுக்கு எதிரான psy ops என நினைப்பது கத்து குட்டித்தனம். இதில் உக்ரேன் எந்த விதத்திலும் அக்கறை காட்டவில்லை. மாஸ்கோவில் நடப்பதை அதுவும் 18 மணத்தியாலத்யில் முடிந்ததை வைத்து ஒரு உளவியல் அனுகூலத்தையும் உக்ரேன் மீது ரஸ்யா பெற முடியாது.

5. பெலரூசுக்கு வாக்னரை அனுப்ப போட்ட நாடகம் என்பது மேலே 4 இல் சொன்னதை விட மோசமான கத்துகுட்டி சிந்தனை. பெலரூஸ் ஏலவே ரஸ்ய அணு ஆயுதத்தை வாங்கி வைத்துள்ளது. ஒரு போன் கோல் போதும், புட்டின் + லூக்கா விரும்பினால் வாக்னரை அங்கே அனுப்ப. அதேபோல், லூக்கா விரும்பாமல் வாக்னரை அங்கே அனுப்புவதால் மட்டும், அங்கே இருந்து கியவ் நோக்கி நகர முடியாது. எதற்கும் லூக்காவின் சம்மதம் அவசியம். அதை பெற வாக்னரை இப்படி மூக்கை சுத்தி, மொஸ்கோ வழியாக பெலரூஸ் அனுப்ப வேண்டியதில்லை. அப்படி வாக்னர் பெலரூசில் இருந்து முன்னேறினாலும், உக்ரேன் முன்னர் ரஸ்யாவை வெளுத்தது போல வெளுக்கும்.

6.  இந்த கலகம் ஏன் தொடங்கியது. ஏன் இப்படி முடிந்தது என்பதில் நம் யாருக்கும் தெளிவில்லை. ஆனால் கத்துகுட்டி சிந்தனையால் வரும் காரணங்களை கொஞ்சம் ஊண்டி யோசித்தால் - புறம் தள்ளி விடலாம்.

7. இன்றும் கிர்கின் ஒரு பொது மேடையில் புட்டின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிரிகோசின் ரொஸ்ட்வோவ்வை விட்டு பலத்த மக்கள் ஆதரவுடன் வெளியேறியபின் ஒரு சத்தமும் இல்லை.

8. எப்படி பார்த்தாலும் - இந்த கலகம் நடந்தது என்பதே - புட்டினுக்கு பெரிய சரிவுதான். பிரிகோசினை பக்மூட்டில் வைத்தே புட்டின் முடித்திருபார் என்பதே அவர் இமேஜ். இத்தனை தூரம் வரவிட்டு, 8 வானூர்திகளை இழந்து, மொஸ்கோ வீதிகளை மறித்து குப்பை லாரிகளை நிறுத்தி, வீதியில் பள்ளம் கிண்டி. காலையில் முதுகில் குத்திய துரோகி என படபடப்புடன் உரை நிகழ்த்தி, மாலையில் அதே ஆளை மன்னித்து, சுண்டங்காய் பெலரூசின் உதவியில் சமாதானம் செய்து…இந்த கலகம் புட்டினுக்கு நிகழ்த்தி இருப்பது public humiliation, பொது வெளியில் மானபங்கப்படுத்த படுவது.

இப்படியான ஒரு மானபங்கத்கை தனக்கு தானே ஏற்படுத்தி கொள்ளும் மாங்காய் மடையனா புட்டின்?

9. In a complex situation, the most plausible answer is the simplest answer. ஒரு குழப்பமான நிலையில், உண்மையான காரணம் - உள்ளதில் எளிமையான காரணமாகவே இருக்கும் என்பார்கள்.

நீண்டகால நண்பர்களான புட்டின்-பிரிகோசின் உறவு இயங்கியல் (relationship dynamics) இந்த கலகத்தின் காரணமாக அமையலாம்.  

பிகு

அமெரிக்காவிடம் 6.2 பில்லியனை வாங்கி கொண்டு வாக்னரும் புட்டினும் இந்த நாடகத்தை நடதினார்கள் என இன்னுமொரு டிக்டோக் சிந்தனை ஓடுகிறது. யாழிலும் அதை காவி வரலாம்.

வேலை முடிய முதல் பிரிகோசினுக்கு காசை கொடுக்க சி ஐ ஏ முட்டாளுமில்லை, 6.2 பில்லியனுக்கு ஆசைப்பட்டு தன் முகத்தில் தானே சேற்றை வாரி அடிக்கும் அளவுக்கு புட்டின் முட்டாளும் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு விடயம்

கார்டியன் சொல்வதின் படி - பைடனுக்கு 24 மணி நேரம் முன்பே தகவல் சொல்லப்பட்டு விட்டது மட்டும் அல்ல, இதே அளவு எச்சரிக்கை புட்டினுக்கும் கிடைத்தது.

ஆகவே பிரிகோசின் நடவடிக்கை பற்றி புட்டின் 24 மணிக்கு முன்பே அறிந்து வைத்துள்ளார். 

ஆனாலும் தடுக்க முடியவில்லை.

1. வேண்டும் என்று தடுக்காமல் விட்டாரா?

2. அல்லது தடுக்கும் அளவுக்கு படைகள் எதுவும் இல்லையா?

பிகு

பிரிகோசனை விட புட்டின் அமெரிக்காவை பொறுத்தவரை எவ்வளவோ மேல். பிரிகோசின் போன்ற ஒருவர் கையில் ரஸ்ய அணு ஆயுதம் போவதை அமெரிக்கா, சீனா யாரும் விரும்பபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அல்லது தடுக்கும் அளவுக்கு படைகள் எதுவும் இல்லையா?

நிறைய குப்பை லொறிகள் இருந்தனவே!🦾🦾🦾 சுண்டைக்காய் பிரிகோஸினை நிப்பாட்ட குப்பை லொறிகளே போதும் எனறு ஜீனியஸ் புட்டின் யோசித்திருப்பார்!🤪

  • கருத்துக்கள உறவுகள்

Voronezh-45 என்ற அணு ஆயுத நிலையம், ஒட்டு மொத்தமாக பிரிகோஜின் படைகளிடம் சரணடைந்ததாயும், அதன் பின் பல மணி நேரம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாயும் இப்போ தகவல் வருகிறது.

நிலமை விபரீதமாவதை கண்டு - அமெரிக்கா நேரடியாக புட்டின், பிரிகோஜனுடன் தொடர்பை ஏற்படுத்தி - ஒரு அவசர உடன்படிக்கை ஏற்பட்டிருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

நிறைய குப்பை லொறிகள் இருந்தனவே!🦾🦾🦾 சுண்டைக்காய் பிரிகோஸினை நிப்பாட்ட குப்பை லொறிகளே போதும் எனறு ஜீனியஸ் புட்டின் யோசித்திருப்பார்!🤪

குப்பை லொறிகளும் ஓட்டுநர் இன்றித்தானே நிற்பாட்டப்பட்டன.

அப்படி என்றால் கேவிரலைக்கூட அவர்களை நோக்கி நீட்ட ஆள் இல்லை என்று தானே அர்த்தம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

புடின் எனும் பெயரை உக்ரேனியர்கள் வெறுப்பதற்கு நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்.

ஆனால் பல புலம்பெயர்ஸ் வெறுப்பதற்கு என்ன  காரணம்? 

சனனாயக விரோதி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் பிளீஸ்..இரு கைகள் போதாது பொத்திக்கொண்டு சிரிப்பதற்கு 🤣

புலம்பெயர்ஸ் இராணுவ ஆய்வாளர்கள் இதற்கு ஆயிரம் பதில்கள் வைத்திருப்பார்களே ...😉

அறிவில் சூரியனைப் போன்றவர்கள் இதற்கு பிரகாசமான பதில்களை வழங்குவார்கள் இருந்து பாருங்கள். 

புலம்பெயர்ஸ் என்று நீங்கள் சொல்வது அவமானப்படுத்தல்

அதற்கு எல்லாம் என் பதில் உங்களுக்கு பலமுறை சுட்டாச்சு. வெட்டப்படும் சொற்களை பாதிப்பதில்லை என்பது ஒரு முறை சுட்டால் சுட்டுவிடும் என் போன்ற மனிதர்களின் பண்பாடு.

எங்களுக்கு 10 வருடங்களுக்கு மேல் ஒரு நாட்டை ஆளுதல்

எமக்கு ஆதரவு தந்த நாடுகளுக்கு ஆபத்தானவராக இருத்தல்

அணுகுண்டை பாவிப்பேன் என்று உலகத்தை அச்சுறுத்தல் என்று பல இருக்கு.

ஆனால் நீங்கள் வாழும் நாட்டில் இருந்தபடியே புட்டினுக்கு பல்லக்கு தூக்க எந்த காரணமும் மனச் சாட்சியை அறுத்தெறியாமல் சொல்ல முடியாது அல்லவா 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

Voronezh-45 என்ற அணு ஆயுத நிலையம், ஒட்டு மொத்தமாக பிரிகோஜின் படைகளிடம் சரணடைந்ததாயும், அதன் பின் பல மணி நேரம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாயும் இப்போ தகவல் வருகிறது.

நிலமை விபரீதமாவதை கண்டு - அமெரிக்கா நேரடியாக புட்டின், பிரிகோஜனுடன் தொடர்பை ஏற்படுத்தி - ஒரு அவசர உடன்படிக்கை ஏற்பட்டிருக்கலாம்?

வாங்க தலைவரே.. எவ்வளவு நாளாச்சு பாத்து.. எப்படி சுகம்..? 

பிரிகோசினுடன் பெலாருஸ் அதிபர் மூலமான பேச்சுவார்த்தையில் பெரும் தொகைப் பணப் பரிமாற்ற ஒப்பந்ததுடந்தான் மொஸ்கோ பயணத்தை அவர் கைவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். பிரிகோசின் பணத்தாசை கொண்டவர். 

கிளறக் கிளற குப்பைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஷோய்கூவும் தனியாக ஒரு கூலிப்படையை வைத்துள்ளாராம். ஒரு வேளை இவர் புதினைக் கவிழ்க்க நினைத்தாலும் அவரால் முடியும்.

அணுகுண்டுகளை யார் கையாள்வது என்ற குழப்பம் உள்ளதால் ரஸ்ய இராணுவம் உடைவதைச் சர்வதேசம் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, இணையவன் said:

பிரிகோசினுடன் பெலாருஸ் அதிபர் மூலமான பேச்சுவார்த்தையில் பெரும் தொகைப் பணப் பரிமாற்ற ஒப்பந்ததுடந்தான் மொஸ்கோ பயணத்தை அவர் கைவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். பிரிகோசின் பணத்தாசை கொண்டவர். 

கிளறக் கிளற குப்பைகள் வந்துகொண்டே இருக்கிறது. ஷோய்கூவும் தனியாக ஒரு கூலிப்படையை வைத்துள்ளாராம். ஒரு வேளை இவர் புதினைக் கவிழ்க்க நினைத்தாலும் அவரால் முடியும்.

அணுகுண்டுகளை யார் கையாள்வது என்ற குழப்பம் உள்ளதால் ரஸ்ய இராணுவம் உடைவதைச் சர்வதேசம் விரும்பவில்லை.

அப்ப புட்டின் இனி அழுத்தமாட்டாரா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.