Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலும் வாக்னர் குழு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் வாக்னர் குழு?

Published By: VISHNU

02 JUL, 2023 | 06:02 PM
image
 
(ஹரிகரன்)

கடந்த வாரத்தில், வாக்னர் குழு தலைவரான ஜெவ்ஜெனி பிரிகோசின் தான் உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தார்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், தீர்க்கமான பங்கை வகித்து வந்தது, வாக்னர் குழு. இது ஒரு தனியார் இராணுவ அமைப்பு. உலகின் பல நாடுகளில் கூலிப்படைகளாகச் செயற்படும் ஒரு இராணுவம்.

k3-LRIGHT_02.jpg

உக்ரேன் இராணுவத்துக்கு எதிராக போரிட்டு வந்த வாக்னர் குழு, திடீரென கடந்த வாரம் ரஷ்ய எல்லைக்குள் திரும்பி, நகரம் ஒன்றையும், ரஷ்யாவின் தென்பகுதி பாதுகாப்பு தலைமையகத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தம்முடன் பேச்சு நடத்த முன்வராது போனால், மொஸ்கோ நோக்கி படைகளுடன் செல்லவுள்ளதாக எச்சரித்த பிரிகோசின், அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

மொஸ்கோ நோக்கி வாக்னர் குழுவினர்  முன்னேறிக் கொண்டிருந்த நிலையில், ரஷ்யா முழுவதும் உள்நாட்டுப் போர் ஏற்படும் ஆபத்து தோன்றியது.

பெலாரஸ் ஜனாதிபதி தலையிட்டு, இரண்டு தரப்புகளுடனும் சமரசம் செய்து, உடன்பாட்டை ஏற்படுத்தியதால் அந்தப் படையெடுப்பு 24 மணி நேரத்துக்குள் கைவிடப்பட்டு பதற்றம் தணிந்தது.

வாக்னர் குழு தலைவர் பிரிகோசின் பெலாரஸுக்கு பாதுகாப்பாகச் சென்றிருக்கிறார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அதிகாரத்தை அசைத்துப் பார்த்து விட்டார் பிரிகோசின்.

இந்தளவுக்கும், புட்டின் உருவாக்கிய இராணுவம் தான் வாக்னர் குழு. தனது நம்பிக்கைக்குரிய- நெருங்கிய நண்பரான பிரிகோசின் தலைமையில் அவர் இந்த கூலிப்படையை 2014இல் உருவாக்கியிருந்தார்.

பெரும்பாலும் ரஷ்ய படைகளில் இருந்து விலகியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த கூலிப்படை. இவர்களுக்கான வெடிபொருட்கள், ஆயுதங்களையும் ரஷ்யாவே வழங்கியது.

உக்ரேன் போரில் மூர்க்கமாகப் போரிட்ட வாக்னர் குழுவுக்கு பக்மூத் நகரைக் கைப்பற்றும் சண்டை நீண்டகாலத்துக்கு நீடித்தது ஒரு பெரும் பின்னடைவு.

ரஷ்யா போதிய ஆயுதங்களை தமக்கு வழங்காமல் போனது தான், அந்தப் போரில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக வாக்னர் குழு குற்றம்சாட்டியது.

ரஷ்ய போர் விமானங்கள் தங்களை குறிவைத்து தாக்கியதாகவும் வாக்னர் குழு குற்றம்சாட்டுகிறது.

தோளுக்கு மிஞ்சிய தோழனை தொட்டுப் பார்க்க முற்பட்டார் புட்டின். அதனால் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசின் ஆத்திரமடைந்து, உக்ரேன் எல்லையில் இருந்து தனது படைகளை விலக உத்தரவிட்டார்.

புட்டின், வாக்னர் குழு என்ற கூலிப்படையை உருவாக்கி விட்டதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.

வாக்னர் குழுவின் மூலம், உலகம் எங்கும் ரஷ்யாவின் அதிகாரத்தை நிலை நிறுத்துவது தான் புட்டினின் திட்டம்.

ஆசியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகின் பல பாகங்களிலும் வாக்னர் குழு செயற்படுகிறது என்று அமெரிக்காவின் கொள்கை ஆய்வு அமைப்பான, மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையம் கூறுகிறது.

சிரியாவிலும், மாலியிலும் மாத்திரமன்றி பல நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுவதாகவும், ரஷ்யாவில் இதுபோலப் பல தனியார் இராணுவக் குழுக்கள் உருவாகியிருப்பதாகவும், அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகில் சுமார் 30 நாடுகளில் இந்த அமைப்பு செயற்படுகிறது என்று மூலோபாய மற்றும் அனைத்துலக கற்கைகள் நிலையத்தின் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ஐரோப்பாவில் உக்ரேன், ஆபிரிக்காவில் மாலி, சூடான், தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, மத்திய கிழக்கில் சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளில் வாக்னர் குழுவினர் கூலிப்படைகளாக இயங்குகின்றனர் என்று கூறப்படுகிறது.

மாலியில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேறுமாறு அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. வாக்னர் குழுவின் ஆதரவு தங்களுக்கு இருக்கின்ற துணிச்சலில் தான் மாலி அரசாங்கம் அந்த அறிவிப்பை விடுத்திருந்தது.

இந்தநிலையில் ஆசியாவிலும் வாக்னர் குழு தீவிரமாக செயற்படுகிறது என்று பல்வேறு ஆய்வாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

அதில் உக்ரேனின் மோல்பர் (Molfar) என்ற ஆலோசனை நிறுவனம், இலங்கையில் ரஷ்யாவின் தனியார் இராணுவக் குழுக்கள்- அதாவது கூலிப்படைகள் இயங்குகின்றன என்று கூறியிருக்கிறது.

வெளிநாடுகளில் ரஷ்யாவின் 37 தனியார் இராணுவக் குழுக்கள் செயற்படுவது, கண்டறியப்பட்டுள்ளதாக மோல்பர் ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் ரஷ்ய தனியார் இராணுவ செயற்பாட்டாளர்களுக்கும், வாக்னர் குழுவுக்கும் தொடர்புகள் கண்டறியப்பட்டுளளதாகவும் அந்த ஆலோசனைக் குழு குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கைப் போரில் பல நாடுகளின் கூலிப்படைகள் ஈடுபட்டிருக்கின்றன. இஸ்ரேலின் மொசாட், பிரித்தானியாவின் கீனி மீனி அல்லது எஸ்.ஏ.எஸ், போன்ற அமைப்புகளைச் சேர்ந்த கூலிப்படையினர் 1980களில் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கின்றனர்.

சில போர் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது, கீனி மினியின் பயிற்சி மற்றும் திட்டமிடலின் கீழ், முன்னெடுக்கப்பட்ட சில தாக்குதல்களில், கீனி மீனியை சேர்ந்தவர்கள் விமானிகளாகவும் பங்கெடுத்திருந்தனர்.

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் கூலிப்படைகளாகச் செயற்பட்டிருந்தனர். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் ரஷ்யா, உக்ரேன், கசகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போக்குவரத்து  மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர்களும் விமானங்களும் அதிகளவில் வாங்கிக் குவிக்கப்பட்டன.

அப்போது, இலங்கை விமானப்படையில் போதிய விமானிகள் இருக்கவில்லை. உடனடியாக புதிய விமானிகளுக்கு பயிற்சிகளையும் வழங்க முடியவில்லை.

போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், புதிய ஹெலிகள், விமானங்களில் விமானிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அவ்வாறான நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரேனில் இருந்து கூலிப்படையினராக விமானிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். 

அவர்களே அப்போது மிக்-27 போர் விமானங்களையும், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர்களையும், மாத்திரமன்றி, அன்டனோவ் -32 போக்குவரத்து விமானங்களையும், எம்.ஐ 17 போக்குவரத்து ஹெலிகொப்டர்களையும் கூட இயக்கியிருந்தனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் உக்ரேன் நாட்டு விமானிகள் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

மிக் -27 போர் விமானம் ஒன்று, 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குரான பகுதியில் விபத்துக்குள்ளானதில், உக்ரேனைச் சேர்ந்த கப்டன் எல். வெலாலி என்ற விமானி உயிரிழந்தார்.

அதற்கு முன்னர், எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் மற்றும் எம்.ஐ 17 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், ரஷ்ய விமானிகள் உயிரிழந்தனர்.

இலங்கையில் ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானிகள் கூலிப்படையினராக செயற்பட்டிருந்தனர்.

ஆனால் இப்போது, ரஷ்ய கூலிப்படையினர் ஏன் இலங்கையில் இயங்குகின்றனர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இலங்கையில் ரஷ்யாவின் கூலிப்படையினர் வெளிப்படையாக செயற்படவில்லை. அரசாங்கமோ அல்லது வேறு அதிகாரபூர்வ தரப்புகளோ இதனை ஒப்புக்கொள்ளவுமில்லை.

ஆனால், உக்ரேனிய ஆலோசனை நிறுவனம், இதனைக் கூறியிருக்கிறது.  ரஷ்யாவும் இலங்கையும் நட்பு நாடுகள். இப்போது இலங்கையின் சுற்றுலாத் துறையை காப்பாற்றிக் கொள்ளும் முக்கியமான நாடாக, ரஷ்யா விளங்குகிறது.

இங்கு ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இப்போது உலாவுகின்றனர். அவர்கள் எல்லோரும்  சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்கள் என்று கூற முடியாது.

சுற்றுலாப் பயணிகள் மத்தியில்  கூலிப்படையினரும் இருந்தால், அவர்கள் ஏன் தற்போதைய நிலையில் இலங்கைக்கு வர வேண்டும்? என்ற கேள்வி உள்ளது.

புட்டின் ஆட்சி அமெரிக்காவைப் பலவீனப்படுத்தும் தேசியவாத கொள்கையை கொண்டது. 

தற்போது இலங்கையில் அமெரிக்காவின் கை ஓங்கி வருகின்ற நிலையில் ரஷ்யா தனது கூலிப்படையினரை இலங்கையில் களமிறங்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன.

அவர்களின் இலக்கு இலங்கையாக இல்லாது போனாலும், அமெரிக்கா அல்லது மேற்குலகம்  இலக்காக இருக்காது என்று கூற முடியாது.

இலங்கையிலும் வாக்னர் குழு? | Virakesari.lk

உக்ரேன் மட்டுமல்லாமல் ரஸ்யாவும் எம்மை அழித்துள்ளதா ?

நாங்கள் கட்டிவைத்த கோபுரம் இப்படி இடிந்து விழுந்து விட்டதே. 🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

மிக் -27 போர் விமானம் ஒன்று, 2001ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குரான பகுதியில் விபத்துக்குள்ளானதில், உக்ரேனைச் சேர்ந்த கப்டன் எல். வெலாலி என்ற விமானி உயிரிழந்தார்.

இதனை மறுத்து ஆதாரமில்லாத கருத்து என சொன்னோரும் உள்ளனர்.(வேறொரு திரியில்)
அப்போ உக்ரேனுக்காக எழுதப்பட்ட கவிதை என்னாகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

இதனை மறுத்து ஆதாரமில்லாத கருத்து என சொன்னோரும் உள்ளனர்.(வேறொரு திரியில்)
அப்போ உக்ரேனுக்காக எழுதப்பட்ட கவிதை என்னாகிறது?

எழுதின கவிதையை… கறையான் புத்துக்குள்ளை போட வேண்டியதுதான். 😂🤣

19 minutes ago, தமிழ் சிறி said:

எழுதின கவிதையை… கறையான் புத்துக்குள்ளை போட வேண்டியதுதான். 😂🤣

அவசியமில்லை.

இந்தத் திரியில் விபரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. சிலர் வழக்கம்போல்  மீம்ஸ் இணைப்புகள், வசைபாடல்கள், தொடர்பற்ற கேளிவிகள், யூரியூப் போன்றவற்றையே பதிலாகக் கொடுத்துள்ளனர். உலக அரசியல் அறிந்தவர்கள் இரு தரப்பும் எழுதிய கருத்துக்களைப் பொறுமை இருந்தால் வாசித்துப் பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி  

யாழ் கலத்திலிருந்த யாரோ எழுதின கட்டுரையாயிருக்கும் போல.  யாரும் இலங்கைக்குப் போனீங்களோ 

🤣☹️😏🤣☹️😏🤣

2 hours ago, nunavilan said:

இதனை மறுத்து ஆதாரமில்லாத கருத்து என சொன்னோரும் உள்ளனர்.(வேறொரு திரியில்)
அப்போ உக்ரேனுக்காக எழுதப்பட்ட கவிதை என்னாகிறது?

Dustbin க்குள்ள எறிய வேண்டியதுதானே 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வீரகேசரி  

யாழ் கலத்திலிருந்த யாரோ எழுதின கட்டுரையாயிருக்கும் போல.  யாரும் இலங்கைக்குப் போனீங்களோ 

🤣☹️😏🤣☹️😏🤣

Dustbin க்குள்ள எறிய வேண்டியதுதானே 

🤣

யாழ்  கலத்திலிருந்த.  எவரும் எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். 🤣  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kandiah57 said:

யாழ்  கலத்திலிருந்த.  எவரும் எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன். 🤣  

யாழ் களத்தில் சிறிய எழுத்து பிழைகளை வைத்து நக்கலடித்த காலம் இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது.  நீங்கள் இன்னும் அந்த வட்டத்திற்குள்ளேயே நிற்பது வேடிக்கையானது.  ஏனெனில் கணனி தமிழ் எழுத்துக்கள் பல வழி முறைகளில் எழுதப்படுகின்றது. தற்போது சிறு எழுத்து தவறுகள்,பிழைகளை திருத்தி வாசிக்கும் பக்குவம்/பழக்கம் யாழ்கள உறவுகளிடையே உள்ளது.:cool:

ஒழுங்காக தமிழ் எழூத தெரியாதவர்களை யாழ்களத்திலிருந்து தடை செய்த காலமும் உண்டு கந்தையர்.😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்.  ......?

1...எழுத்து பிழை விடலாம்    அது பெரிய பிரச்சனை இல்லை   தமிழ் மொழி அழியா மாட்டாது 

2...பிழை விட்டது கணணி  எழுதியவர் இல்லை   

3..சுட்டி காட்டக்கூடாது   

நான் இங்கு எந்தப்பிழையும் செய்யவில்லை    விட்ட பிழை திருத்தி நடப்பது மனித இயல்பு   ....பிழையை  சரியானது என வாதிடுவது  ........நல்ல செயல்லில்லை   நன்றி வணக்கம்… 🙏.   மன்னியுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Kandiah57 said:

தற்போது யாழ்களத்தில்  எழுதுபவர்கள் அனைவரும்  நன்றாக எழுத்துப்பிழை இல்லாமல் எழுதக்கூடியவர்கள் என்பதை ஏற்க  மறுக்கின்றீர்கள்..
கைத்தொலைபேசி மூலம் எழுதுபவர்களுக்கு  பல எழுத்துரு மாற்ற பிரச்சனைகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியாக ஊறுதபிடுத்தபட்டது இலங்கை ரஷ்ய உறவு. இலங்கைக்கு ஊறுதியுடன் கை கொடுத்து வருவது எல்லோரும் அறிந்ததே அப்படியிருக்க ரஷ்யா மீதுள்ள பாசத்தால் ரஷ்யாவை ஆதரித்து கொண்டு , உக்ரேன் தமிழர்கள் மீது குண்டு போட்டது அதனால் தான் ரஷ்யாவை ஆதரிக்கின்றோம் என்று கொமடி விட்டனர்.
ரஷ்யாவலோ அதன் நட்பு நாடான இலங்கையில் இருந்து கொண்டு உண்மையை எழுத துணிச்சல் வேண்டும. வீரகேசரி துணிச்சலாக எழுதியுள்ளது. சுதந்திர மேற்குலகநாடுகளில் வாழ்து கொண்டு யாழ்களத்தில் எழுதுவது மாதிரி அல்ல இது.

[எம்.ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் மற்றும் எம்.ஐ 17 ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும், ரஷ்ய விமானிகள் உயிரிழந்தனர்.

இலங்கையில் ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானிகள் கூலிப்படையினராக செயற்பட்டிருந்தனர்.]

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

தற்போது யாழ்களத்தில்  எழுதுபவர்கள் அனைவரும்  நன்றாக எழுத்துப்பிழை இல்லாமல் எழுதக்கூடியவர்கள் என்பதை ஏற்க  மறுக்கின்றீர்கள்..
கைத்தொலைபேசி மூலம் எழுதுபவர்களுக்கு  பல எழுத்துரு மாற்ற பிரச்சனைகள் உண்டு.

நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பது எனக்கு தெளிவாக நன்கு தெரியும்      கலத்தில். என்று எழுதியது   20 ஆண்டுகளுக்கு முன்பு    ....இப்போது இல்லை       ஒ.கே.    ஏன். ? தேவையற்ற பிரச்சனை     

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஒன்று எழுதினால்…

பல மாதங்கள் கழிந்து….. 

வருடங்கள் கழிந்து ….

காலங்கள் கழிந்து….

எப்போதெல்லாம் உக்ரேன் உச்சரிக்க படுகிறதோ…

அப்போதெல்லாம் புட்டின்-காதலர்களுக்கு

கழிய வைக்கும் படி அந்த கவிதை இருக்க வேண்டும் 🤣.

அதுதான் காலத்தை விஞ்சிய படைப்பு.

# தூக்கி விடுறா காலற💪🏿💪🏿💪🏿

# எரியுதடி மாலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பது எனக்கு தெளிவாக நன்கு தெரியும்      கலத்தில். என்று எழுதியது   20 ஆண்டுகளுக்கு முன்பு    ....இப்போது இல்லை       ஒ.கே.    ஏன். ? தேவையற்ற பிரச்சனை     

கந்தையர்! வெற்றி உங்களுக்கே  👍🏼....:cool: 

கேம் ஓவர் 🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் 

1. உக்ரேன் கூலிகளுக்காக, அரசு மாறிய பின் இருக்கும் உக்ரேன் தேசிய விடுதலை போரை வெறுக்க எதிர்க்க தேவையில்லை.

2. அதே போல் வாக்னர் கூலிகளுக்காக ரஸ்ய மக்களை வெறுக்கவும் தேவையில்லை. நாளைக்கு ரஸ்ய தேசிய இனம் அடக்கு முறைக்கு உள்ளானால் - அதை ஆதரிக்கவும் வேண்டும்.

3. வாக்னருக்கா ரஸ்ய தேசிய இனத்தை வெறுப்பதும், உக்ரேனிய கூலி விமானிகளுக்காக உக்ரேனிய தேசிய இனத்தை வெறுப்பதும், புளொட்டுக்காக தமிழ் தேசிய இனத்தை வெறுக்கிறோம் என மாலைதீவுகார் ஒருவர் சொன்னால் எப்படி இருக்குமோ - அப்படி பட்ட ஒரு மடைத்தனம்.

#நான்சென்ஸ்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அதை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, goshan_che said:

புளொட்டுக்காக தமிழ் தேசிய இனத்தை வெறுக்கிறோம் என மாலைதீவுகார் ஒருவர் சொன்னால் எப்படி இருக்குமோ - அப்படி பட்ட ஒரு மடைத்தனம்.

Vadivelu Vadivelu Memes GIF - Vadivelu Vadivelu Memes Vadivelu Sambrani -  Discover & Share GIFs

சனம் மறந்தாலும் இவனுகள் அப்பப்ப அந்த சம்பவத்தை புகை அடிச்சு மூட்டிக்கிட்டேஏஏஏஏ  இருக்கானுகள்....:rolling_on_the_floor_laughing:

நான்சென்ஸ்  :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Vadivelu Vadivelu Memes GIF - Vadivelu Vadivelu Memes Vadivelu Sambrani -  Discover & Share GIFs

சனம் மறந்தாலும் இவனுகள் அப்பப்ப அந்த சம்பவத்தை புகை அடிச்சு மூட்டிக்கிட்டேஏஏஏஏ  இருக்கானுகள்....:rolling_on_the_floor_laughing:

நான்சென்ஸ்  :face_with_tears_of_joy:

காற்றடிக்குது….

புயலடிக்குது…..

காரைநகரை ஈபி அடிக்குது🤣..

டெலோ அடிக்குது…

டைகர் அடிக்குது….

சோத்துப் பாசலை புளொட் அடிக்குது😂

இந்த அவமானத்தில் இருந்து மீள, ஒரு அதிரடியை மேற்கொள்ள வேண்டும் என கங்கணம் கட்டி,

இலங்கை, இந்தியாவுக்கு அப்பால் இரேஜேந்திரனுக்கு பின் படை கட்டிச் சென்ற ஒரு தமிழர் படையை இப்படியா நக்கல் அடிப்பது😀.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.