Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/8/2023 at 12:20, suvy said:

நிறையபேர் இந்தப் பதிவை பார்க்கிறார்கள் தனி, ஓரிருவர் கருத்து எழுதினாலும் கூட.........ஒரு பயத்தைத் தந்து கொண்டு கதை நகருகின்றது.......தொடர்ந்து எழுதுங்கள்.......!  👍

நன்றி சுவி அண்ணா உங்க ஆதரவுக்கும்

17 hours ago, Justin said:

மீண்டும் அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். நானும் வாசிக்கிறேன், தொடருங்கள்!

நன்றி அண்ண உங்கள் ஆதரவுக்கும் 

16 hours ago, நிலாமதி said:

இரண்டாம் முறை அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். கதை அடுத்து என்ன என்ற உணர்வில் விறு விறுப்பாக  போகிறது. ஒருவருடைய பட்ட்றிவு போல இருக்கிறது . தொடருங்கள் வேகமாக .... . 

நன்றி சிறிய மகள் நலம் என்ன சிவராத்திரியாக இரவு கழிகிறது 

நடந்த சம்பவம் கதையாக வருகிறது நன்றி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழை மெதுவாக கடலில் குறையவே வெளிச்சம் தெரிந்த பகுதியை உற்றுப்பார்க்கிறேன் அங்கே மணல் திடலும் காடும் போல் காட்சி அழித்தாலும் முற்றாக கண்ணுக்கு தெரியவில்லை மழை ஓய்ந்ததும் படகில் இருந்தவர்கள் அனைவரும் கண்டு கொள்கிறார்கள் அது ஒரு தீவு போலவே காணப்பட்டது. அந்த இடத்துக்கு செல்லுங்கள் அங்கே இறங்கிவிடலாம். படகை ஓட்டியவர்களோ நாம் செல்ல வேண்டிய இடம் அது இல்லை அமைதியாக இருங்கள் என சொல்ல.

படகில் இருந்தவர்கள் உடன்படவில்லை சோறும் இல்லை தண்ணியும் இல்லை இனியும் பயணம் செய்ய முடியாது படகை அந்த இடத்துக்கு செலுத்துங்கள் என சொல்லி சண்டை இட்டார்கள் கடைசியில் அந்த இடத்தை நோக்கி படகை செலுத்த படகு கரையை சென்றடையடைமுடியாதவாறு பாறைகள் தண்ணீருக்கு மேலே தெரிந்தது படகில் முன்னே பாறைகள் மோதாதவாறு ஒருவர்  நின்ற பார்த்த வண்ணம்  படகை மெதுவாக செலுத்தி கொஞ்ச தூரம் செல்லவே.

அந்த தீவில் இருந்து ஆயுதங்களுடன் ஒரு படை கரையை வந்தடைகிறது எங்களது படகு சத்தத்திற்கும் கரையை கண்டு குக்கிரலிட்ட சத்தத்திற்கும் . படகை கொண்டு வரவேண்டாம் சென்று விடுங்கள் சென்று விடுங்கள் சைகைகளை காண்பிக்கிறார்கள். ..............படகில் இருந்தவர்கள் அனைவரும் பயந்து நடுங்கினார்கள் கடல் கொள்ளையர்களாக இருக்குமோ!  என ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்துள்ளதால்  நான் உணர்ந்துகொண்டேன் அது ஏதோ நாட்டுக்குரிய தீவு எனவும் அங்கே முகாம் அமைத்திருக்கிறார்கள் எனவும் தெரிந்தது. அவர்களோ சைகை மூலம் மீண்டும் மீண்டும் இங்கே வரவேண்டாம் என  சைகை காட்டிக்கொண்டார்கள்.

நாங்களும் விடுவதாக இல்லை கைகளை கூப்பிய வண்ணம் பல மணி நேரம் இருந்தோம். அவர்கள் எந்த சமிக்கையும் காட்டவில்லை வேற வழி என்ன செய்வது என யோசித்து படகில் இருந்த டீசல் கான்களை எடுத்து ஊற்றி நெருப்பு வைத்துக்கொள்ளப்போகிறோம் என நாங்கள் சைகை காட்ட அதன் பின்னரே அவர்கள் சிறிய படகை ஒன்றை அனுப்பினார்கள் மூவருடன். வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேச இங்கே ஆங்கிலத்தில்  அவர்களுடன் சரளமாக உரையாட யாரும்  இல்லை ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொண்டு இருந்தோம் பிளீஸ் கெல் மீ ,பிளீஸ் கெல் மீ .

ஆனால் உள்ளே இருந்த பெண்ணுக்கு ஓரளவு ஆங்கிலம் புரியும் என்ற படியால் அவருடன் மெதுவாகவே உரையாடினாள் அவரோ நீங்கள் இங்கே வரவேண்டாம் போதிய உணவும் தண்ணீர் டீசல் எல்லாம் தருகிறோம் ஒரு வரைபடமும் தருகிறோம் வேற நாட்டுக்கு சென்று விடுங்கள் என்றார்.
அவர் சொன்னதும் அவள் அதை மொழி மாற்றம் செய்து சொல்ல ஆளாளுக்கு மறுப்புத்தான் தெரிவித்தார்கள் படகில் இருந்தவர்கள். அவருக்கு நாங்கள் சொன்னது புரிந்தது. அதாவது வேற நாட்டுக்கு செல்ல மாட்டோம் என்பது.

 கொஞ்ச நேரத்தின் பின் தொடர்புகளை எடுத்துக்கேட்கிறார் அந்த இராணுவ வீரர் அவர் கேட்டு பல மணி நேரம் சுமார் 5 மணித்தியாலங்கள் கழித்தே பதில் வருகிறது அதுவரைக்கும் படகில் எல்லோரையும் அமர்ந்து விடுமாறும் அறிவுறுத்தல் கொடுத்து ஆட்களை எண்ணி கணக்கெடுக்க சென்னார்கள். அவருக்கு பதில் வருகிறது தொலைத்தொடர்பில்

கரையில் இருந்து படகுகள் வருகிறது அந்த படகில் ஆட்களை மாற்றி மாற்றி  ஏற்றுகிறார்கள் நாங்கள் கொண்டு சென்ற படகு பழுதடைந்த படகாக மாற்றப்படுகிறது. 
கரையை எங்கள் கால்கள் தொடும் போதே ஊசலாடிய உயிர்கள் எல்லாம் எல்லோர்  உடல்கள் மீது  மீள்  சேர்கிறது அதுவரைக்கும் அது எந்த நாடு எந்த தீவு என ஒருவருக்கும் தெரியவில்லை.

அதற்கிடையில் ஊரில் படகில் சென்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக செய்தி பரவி இருக்கிறது.

தொடரும்...... @suvy

  ஒரு பகுதி மீதமுள்ளது 🚢🚢🚢 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் எங்களை படகில் இருந்து இறக்கி நிலப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் போது சந்தோசமாக இருந்தது ஆளாளுக்கு நாம் வந்து சேர்ந்துவிட்டோம். என பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க ஒருவன் வந்து கேட்டான் எந்த இடம் எந்த நாடு (அவுஸ்ரேலியாவா) என கேளுங்கள்? என ஆனால் எந்த பதில் இல்லாமல் உள்ளே செல்ல செல்ல அங்கேயும் சிறிய சிறிய கொட்டில்கள் அமைந்திருந்தன எங்களை கண்டதும் அங்கிருந்து பலர் வெளியே வந்தார்கள். அவர்களின் உடை நடை பாவனை அனைத்தையும் பார்க்க அவர்களும் இலங்கைத்தமிழர்கள் போலவே தோன்றியது பெயர்களை பதிந்த பின்னர் எங்களைப்பற்றி விசாரித்தார்கள் அவர்கள் .

நாங்களும் அவர்களை பற்றி விசாரிக்க அடுக்கடுக்காக குண்டுகளை போட்டார்கள் அந்த தீவைப்பற்றி.
அதுவரைக்கும் எங்களுக்கு எந்த மருத்துவ வசதிகளும் அவர்கள் செய்யவில்லை பெயர்களையும் நாடையும் பதிந்து விட்டு மூன்று பேருக்கு ஒரு கொட்டகை வீதம் தந்தார்கள் உணவு மட்டும் மூன்று வேளையும் கிடைக்கும் அதுவும் அரை அவியலாக இருக்கும் . இப்படி நாட்கள் செல்ல செல்ல எங்களுக்கு முன்னர் வந்தவர்களுக்கும் எங்களுக்கும் பழக்கமாக அவர்களுடன் உரையாட அவர்கள் வந்து 3,4 வருடங்கள் ஆவதாகவும் அது ஒரு அமெரிக்க , பிரித்தானியா நாட்டுக்கு செந்தமான தீவு எனவும் அங்கே இராணுவத்தினர் பயிற்ச்சி பெறும் தீவு எனவும் சொன்னார்கள் .

அப்போதுதான் மொத்தமாக நாங்களும் ஏமாந்தது தெரியவந்தது அவர்கள் பெரிய மனவிரக்தியில் இருந்தார்கள் நாட்டுக்கு பணம் அனுப்பவும் முடியல்ல அங்கு என்ன நிலையில் இருக்குதோ தெரியல , குழ்ந்தைகள் நிலை என்னவாக இருக்குமோ என்ற நினைப்பில் மன விரக்தியில் இருந்தார்கள் . சில நாட்களில் ஒரு பெண் மொழிபெயர்ப்பாளர் வருவார் லண்டனில் இருந்து அவ மொழிபெயர்ப்புச்செய்து யார் யார் நாட்டுக்குக்கு போக போறிங்கள் என கேட்பா எனவும் சொன்னார்கள் மீண்டும் நாடா? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் யாரும் நாட்டுக்கு செல்ல யாருக்கும் மனதில்லை நானோ குமார் அண்ணனின் கொட்டிலுக்கு போய் என்ன அண்ண இப்படி செய்திட்டியள் என கேட்க ராஜா அவுஸ்ரேலியா போனா உடனே நாட்டுக்கு அனுப்புறான். அதான் இஞ்சால பக்கம் போகலாம் என முடிவெடுத்தம் என சொன்னார்.

எனக்கும் பிள்ளை குட்டிகள் இருக்கு என்று சொன்னார் நல்லபடியாக இங்கவாவது வந்து சேர்ந்தோமே கவலையை விடு என சொன்னார் வந்தவர்கள் கோபமாக இருக்கிறார்கள் என சொல்ல என்ன செய்ய இப்ப ஊருக்கு போவமா என கேட்கிரார் அவர். இப்படி மூன்று மாதங்கள் சென்றன சாப்பாடு படுக்கை வேற ஒன்றுமே இல்லை அடுத்தநாள் அந்த மொழி பெயர்ப்பாளர் பெண்மணி வரவோ (அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்) நானும் குமார் அண்ணனும் இன்னும் 8 பேரும் ஊருக்குச் செல்ல போகிறோம் சொன்னவுடன் எங்களுக்கான பயணம் தயாராக்கப்பட்டது . இலங்கை அரசாங்கத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது . ஒரு தொகைப்பணமும் கொடுப்பதாக சொன்னார்கள். எங்களை ஏற்றி ஒரு நிலப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பு படையினருடன் விமானநிலையம் கொண்டு சென்று சில பாதுகாப்பு பத்திரங்களை தந்து விமானத்தில் ஏற்றி இலங்கைக்கான பயணத்தை தொடர அனுமதியளிக்க இலங்கைகான எங்களது விமான பயணம் தொடர்ந்தது.

பல மணிநேரப்பறப்பின் பின் இலங்கையை வந்து இறங்க  நாங்கள் அனைவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் (10பேரும்) கைது செய்யப்பட்டு நீதிமன்றம்  கூட்டிச்செல்லப்பட்டு விசாரணைக்காக சிறையில் அடைக்கப்படுகிறோம். அந்த செய்தி நாட்டும் நாட்டு மக்களுக்கும் தெரியவரவே எங்கள் எல்லோர் வீட்டுக்கும் தெரிய வந்திருக்கிறது. நாங்கள் படகேறிய செய்தி விசாரணைகள் ஆரம்பமாகிறது எங்கிருந்து யார்? எவ்வளவு பணம்? எங்கிருந்து சென்றீர்கள் மொத்தம் எத்தனை பேர்? என விசாரணை தொடர்கிறது புலனாய்வு பிரிவினரால் நாட்டில் ஏற்பட்ட பொருளாத பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறினோம் என எல்லோரும் ஒருமித்த பதிலை சொல்ல வீட்டில் எங்கள் உறவினர்கள் வழக்கறிஞர்களுடன் வழக்காடி சரீர பிணையிலும் மீண்டும் நாட்டை விட்டு செல்லமுடியாது விசாரணை முடியும் வரையும் என எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறோம். 

வீட்டை அடைந்ததும் அந்த கிராம சேவகர், பொலிஸ்நிலையத்திற்கும் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது கண்காணிப்புக்குள் நாங்கள்.

நான் வீட்டை அடைந்ததும் குடும்பத்தினருக்கும் எனக்குமான மனக்கசப்புக்கள் வருகிறது சொல்லாமல் போனதற்கும் ஏதாவது நடுக்கடலில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற அக்கறையில் அன்றிலிருந்து நான் வெளியில் பெரிதாக நடமாடுவதில்லை ஆனால் நீதிமன்றம் விசாரணை என அடிக்கடி நீர்கொழும்பு போவதும் வருவதுமாக இருக்கும் இப்படி 2 வருடங்கள் கடந்து விட்டது இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என மனது நினைத்தாலும் என்னுடன் வந்த குமார் அண்ண மீன்பிடிக்கு சென்றவர் கடலில் மீண்டும் காணாமல் போகிறார் மீண்டும் நான் விசாரணைக்காக அழைக்கப்படுகிறேன் பொலிசாரால் இரண்டு நாட்களின் பின்னரே  குமார் செல்லும் படகு முதலாளி படகு கடல் கொந்தளிப்பால் தொடர்பில்லாமல் போனது அவர்கள் தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு வருகிறார்கள் என சொன்வுடனே என்னை விடுவிக்கிறார்கள்.
வீடு வந்ததும் அம்மாவோ தலையை தடவி நீ வராமலே இருந்திருக்கலாம் எனசொல்லி விட்டு வழக்கு முடிய பாஸ்போட்டை எடு என சொல்லி விட்டு உள்ளே செல்கிறார்.  

நன்றி......

வாசித்து படகில் பயணித்தவர்களுக்கும் நன்றி  

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுடன் நாங்களும் படகில் பயணித்தோம் ...........நல்லதொரு அனுபவப் பகிர்வு.......!  👍

நன்றி தனி.......!  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் எழுத்து நன்றாக இருந்தது. உயிராபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுவோரது நிலையை உணரவைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

map-2004-military-airbase-island-location-2004.jpg?s=1500x700&q=85

பகிர்வுக்கு நன்றி!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பாவாகியமைக்கு வாழ்த்துக்கள்.

நடந்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள். உங்கள் பாணியிலும், கதையின் போக்க்கிலும் அப்படியே ஒரே மூச்சில் வாசித்தேன்.

இதற்கு பதில் சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை.

இந்த காலத்தில் யாழுக்கு வந்து இந்த தீவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டு நான் விளக்கமாக எழுதினேன்? அது தீவில் இருக்கும் போதா?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Justin said:

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

map-2004-military-airbase-island-location-2004.jpg?s=1500x700&q=85

பகிர்வுக்கு நன்றி!

இதை துரதிஸ்டத்தில் அதிஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து சமுத்திரத்த்தில்  உள்ள இந்த தீவு கூட்டம், மொரீசுயஸ் இவற்றில் தரை தட்டுவது மிக அரிதாக நடக்க கூடிய செயல்.

இவற்றை விலத்தி எந்த நிலமும் கப்பல் போக்குவரத்தும் அற்ற southern ocean உள் போயிருந்தால் கதை எழுத ஆள் வந்திராது.

அந்த மட்டில் தனியை மீள கண்டது சந்தோசம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

. பெரும்  கண்டத்தில் ( தத்து )  இருந்து மீண்டது போல  ஒரு உணர்வு ...தத்தளித்தவனுக்கு படகு கிடைத்துபோல ....ஒரே மூச்சில் வாசித்தேன்.இந்தமட்டிலாவது மீண்டது நீங்கள்செய்த புண்ணியம். 

அது சரி  நீங்கள் இருப்பது ஆசியாக் கண்டம்  ..அவுஸ்திரேலியாவுக்கு  கண்டம்  விட்டுக் கண்டம் போகிறோமே  அதுவும் படகில் என்ற  பொது அறிவு கூட ..இல்லையா ?  முகவர் என்ன கடவுளா ? நாளும் பத்திரிகையில் படிக்கிறோம்
இதுபற்றி ....  பகிர்வுக்கு நன்றி நல்லதோர் அனுபவ பாடம். 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, suvy said:

உங்களுடன் நாங்களும் படகில் பயணித்தோம் ...........நல்லதொரு அனுபவப் பகிர்வு.......!  👍

நன்றி தனி.......!  

நன்றி அண்ணை உங்கள் ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் 

18 hours ago, ஏராளன் said:

உங்கள் எழுத்து நன்றாக இருந்தது. உயிராபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுவோரது நிலையை உணரவைத்தது.

நன்றி ஏராளன் உங்கள் கருத்துக்கும்  வாசித்தமைக்கும் 

14 hours ago, Kavallur Kanmani said:

உண்மையில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின் தனியின் சுய ஆக்கம் அதிலும் அனுபவப் பதிவு படகுப்பயணம் அருமையாக தந்துள்ளீர்கள். முடிவு தெரியும் வரை இப்படியான எத்தனைபேர் தம் உயிரையே இழந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்க வேதனையாக உள்ளது. கடவுள் துணையால் தப்பி விட்டீர்கள். எழுத்தோட்டமும் மிக நன்றாக உள்ளது. உங்கள் குழந்தைகளுக்கும் எம் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி அக்கா யாழ் களம் இயங்காமல் போக கூடாது என்பதற்க்காக நடந்த சம்பவம் ஒன்றை கதையாக எழுதினேன்  நான் வேலை செய்யும் பாடசாலையில் இருந்தே எழுதுகிறேன்  மீண்டும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Justin said:

அவுஸ்திரேலியா என்று சொல்லி விட்டு, தென் மேற்கு நோக்கிப் போய் டீகோ கார்சியா தீவில் இறக்கி விட்டிருக்கின்றனர்  குமார் அண்ணையும் ஓட்டிகளும். நல்ல வேளையாக பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து அதே திசையில் போயிருந்தால் மொறீசியஸ் தீவில் தான் மாட்டுப் பட்டிருக்க வேண்டியிருந்திருக்கும்.

பகிர்வுக்கு நன்றி!

இந்த தீவு பற்றியும் அங்கே நடந்த சம்பவங்கள் அது பற்றி  செய்தி அண்மையில்  BBCவெளியிட்டது நீங்கள் அறிந்திருப்பீர்கள் யாழிலும் இணைக்கப்பட்டது என நினைக்கிறன் ஆனால் போனவர்களுக்கு அது என்ன தீவு என தெரியவில்லை 

நன்றி அண்ணை  உங்கள் கருத்துக்கும் நேரத்திற்கும் 

13 hours ago, goshan_che said:

அப்பாவாகியமைக்கு வாழ்த்துக்கள்.

நடந்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள். உங்கள் பாணியிலும், கதையின் போக்க்கிலும் அப்படியே ஒரே மூச்சில் வாசித்தேன்.

இதற்கு பதில் சொல்ல விரும்பாவிட்டால் பரவாயில்லை.

இந்த காலத்தில் யாழுக்கு வந்து இந்த தீவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டு நான் விளக்கமாக எழுதினேன்? அது தீவில் இருக்கும் போதா?

இல்லை அண்ண நான் போகல ஊரில ஒரு குறூப் போய் திரும்பி வந்தது அவர்களை வைத்து எழுதியது தான் அந்த கதை  ஆனால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களில் சிலர் படகில் இறக்க தூக்கி எறிந்துவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறதாம் அதை நான் எழுதவில்லை .

ம் அந்த தீவு பற்றி அவர்கள் ஊருக்கு வந்த போதே நான் கேட்டு இருந்தன் அட்கன் பிறகு தீவில் பிரச்சினை எழுதுள்ளது BBC செய்தி க்காரர்கள் சென்று இருக்கிறார்கள் அது தெரிந்து இருக்கும்  என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, goshan_che said:

இதை துரதிஸ்டத்தில் அதிஸ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து சமுத்திரத்த்தில்  உள்ள இந்த தீவு கூட்டம், மொரீசுயஸ் இவற்றில் தரை தட்டுவது மிக அரிதாக நடக்க கூடிய செயல்.

இவற்றை விலத்தி எந்த நிலமும் கப்பல் போக்குவரத்தும் அற்ற southern ocean உள் போயிருந்தால் கதை எழுத ஆள் வந்திராது.

அந்த மட்டில் தனியை மீள கண்டது சந்தோசம்.

நான் போகவில்லை அண்ண 

மீண்டும் மத்திய கிழக்கு செல்லவே நினைத்து இருக்கிறன். மீண்டும் விலைவாசி கூடிய நிலையில் நாடு என்னுடன் இருந்தவர்கள் மீண்டும் சென்று விட்டார்கள் வயலில் நட்டம் நீர் இல்லை பசளை இல்லை கூலிகள் அதிகள் ( குத்தகை, வெட்டும் மெசின்,உழவு ) 

உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் கம்பனிகள் இருந்தால் சொல்லுங்கள் 

12 hours ago, நிலாமதி said:

. பெரும்  கண்டத்தில் ( தத்து )  இருந்து மீண்டது போல  ஒரு உணர்வு ...தத்தளித்தவனுக்கு படகு கிடைத்துபோல ....ஒரே மூச்சில் வாசித்தேன்.இந்தமட்டிலாவது மீண்டது நீங்கள்செய்த புண்ணியம். 

அது சரி  நீங்கள் இருப்பது ஆசியாக் கண்டம்  ..அவுஸ்திரேலியாவுக்கு  கண்டம்  விட்டுக் கண்டம் போகிறோமே  அதுவும் படகில் என்ற  பொது அறிவு கூட ..இல்லையா ?  முகவர் என்ன கடவுளா ? நாளும் பத்திரிகையில் படிக்கிறோம்
இதுபற்றி ....  பகிர்வுக்கு நன்றி நல்லதோர் அனுபவ பாடம். 

ம் நீங்கள் சொல்வது உன்மைதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2009 பிறகு படகில் சென்று பப்புவா நியு கினியா தீவில் இருப்பவர்கள் இன்னுமிருக்கிறார்கள் , அவுஸ்ரேலியா சென்று உள்வாங்கப்பட்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் முட்டாள்த்தனமான முடிவுகளை துணிந்து எடுக்கிறார்கள் . சிலர் உயிர் பயத்தால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் 
நன்றி அக்கா கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இல்லை அண்ண நான் போகல ஊரில ஒரு குறூப் போய் திரும்பி வந்தது அவர்களை வைத்து எழுதியது தான் அந்த கதை  ஆனால் அவர்களுக்கு முன்னர் சென்றவர்களில் சிலர் படகில் இறக்க தூக்கி எறிந்துவிட்டு சென்ற சம்பவங்களும் நடந்து இருக்கிறதாம் அதை நான் எழுதவில்லை .

ம் அந்த தீவு பற்றி அவர்கள் ஊருக்கு வந்த போதே நான் கேட்டு இருந்தன் அட்கன் பிறகு தீவில் பிரச்சினை எழுதுள்ளது BBC செய்தி க்காரர்கள் சென்று இருக்கிறார்கள் அது தெரிந்து இருக்கும்  என நினைக்கிறன் 

ஓ…நான்தான் குழம்பி விட்டேன்.  விளக்கத்துக்கு நன்றி.

இதை போல ஒரு பழைய வழக்கு இங்கிலாந்தில் நடந்துள்ளதது. கடலில் ஒரு சிறு படகில் தத்தளித்த மூவரில், இருவர் மூன்றாமவரை கொன்று சாப்பிட்டு, உயிர்தப்பினார்கள். ஆனால் கரைதிரும்பியதும் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் போகவில்லை அண்ண 

மீண்டும் மத்திய கிழக்கு செல்லவே நினைத்து இருக்கிறன். மீண்டும் விலைவாசி கூடிய நிலையில் நாடு என்னுடன் இருந்தவர்கள் மீண்டும் சென்று விட்டார்கள் வயலில் நட்டம் நீர் இல்லை பசளை இல்லை கூலிகள் அதிகள் ( குத்தகை, வெட்டும் மெசின்,உழவு ) 

உங்களுக்கு தெரிந்த ஏதாவது நிறுவனங்கள் கம்பனிகள் இருந்தால் சொல்லுங்கள் 

கட்டாயம் சொல்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை வாசிக்கும்போது  மிகவும் வேதனையாக இருந்தது. இப்படியும் ரிஸ்க் எடுப்பார்களா? 
இவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கியல்ல பயணித்துள்ளார்கள் ரியூனியன் தீவுகளை நோக்கி 
சென்றுள்ளார்கள். இதுவே மொறிசியஸுக்கு அருகில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனிக் காட்டு ராஜா ...இந்தக் கதை உங்கள் அனுபவமென   தவறாக   கணித்து விடடோம் மன்னிக்கவும். இது ஏனையோருக்கு பயன்படும்   என்ற நல் நோக்கத்து டன் பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் ராஜா

எப்படி இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தீர்கள்.

இந்த தலைப்பை தெரிவு செய்ததற்கே முதலில் மிகுந்த பாராட்டுக்கள்.

வலி மிகுந்த பயங்கரமான பயணம்.

கப்பல்கள் தாழுது பயணிகள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் கப்பல் பயணங்களை துணிந்து செல்கிறார்கள்.

வீட்டாரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்கிறார்கள்.

இது ஏதோ வந்தா மலை போனா மயிர்
என்ற மாதிரி இல்லையே.

இது போனா உயிர் அல்லவா?

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, colomban said:

கதையை வாசிக்கும்போது  மிகவும் வேதனையாக இருந்தது. இப்படியும் ரிஸ்க் எடுப்பார்களா? 
இவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கியல்ல பயணித்துள்ளார்கள் ரியூனியன் தீவுகளை நோக்கி 
சென்றுள்ளார்கள். இதுவே மொறிசியஸுக்கு அருகில் உள்ளது. 

ம் சில நேரம் உயிர் பயத்தில் எடுக்கும் முடிவுகள் தானே இப்ப சில குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு மீண்டும் செல்கிறது கடலால் 

நன்றி கொழும்பான் கருத்து பகிர்வுக்கு 

12 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ராஜா

எப்படி இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தீர்கள்.

இந்த தலைப்பை தெரிவு செய்ததற்கே முதலில் மிகுந்த பாராட்டுக்கள்.

வலி மிகுந்த பயங்கரமான பயணம்.

கப்பல்கள் தாழுது பயணிகள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் கப்பல் பயணங்களை துணிந்து செல்கிறார்கள்.

வீட்டாரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பெரும்தொகை பணத்தை செலவு செய்கிறார்கள்.

இது ஏதோ வந்தா மலை போனா மயிர்
என்ற மாதிரி இல்லையே.

இது போனா உயிர் அல்லவா?

நன்றி.

நன்றி அண்ணா கருத்துக்கு சிலர் காணமல் போனவர்களும் உண்டு இதுவரைக்கும் தொடர்பு இல்லை அநேகமாக இறந்து போயிருப்பார்கள் பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த தீவுக்கு போனவர்கள் கூட இறந்ததாகவே செய்தி பரவியது 1 மாதங்கள் கழிந்த பின்பே தெரியும் அவர்கள் உயிருடன் இருப்பது 
 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.