Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொம்பிளை இருந்தால் சொல்லுங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4220.jpg

அவர் என்னைக் கடந்து போகும் போது, அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. நன்றாகத் தெரிந்த முகம் ஆனால் சட்டென்று அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை மூளை அறிவிக்க மறுத்து விட்டது. ஒருவேளை  மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்று அது கோவித்துக் கொண்டதா? தெரியவில்லை.

தெரிந்த ஒருவரின் மாமியாரின் அடக்க நிகழ்வு. அங்கிருந்தவர்களில் பலரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள்தானே பார் எல்லாம் பரந்து வாழ்கிறோம். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும். ஆனால் குறிப்பாக அவரை மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. என்னைக் கடந்து  போகும் போது அவர் என்னைப் பார்த்த பார்வையில் அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்ததுஅவரிடம் போய், “நீங்கள் யார்?” என்று கேட்பது நாகரீகமாக இருக்காது. அப்படிக் கேட்பது ஒருவேளை அவரைக் காயப்படுத்தவும் கூடும். சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டதில் நம்ம ஊர் தமிழ்க்கடை முதலாளி தெரிந்தார். ஊரில் மட்டும் அல்ல வெளி இடங்களிலும் அவருக்குப் பலரைத் தெரியும். மெல்ல அவரிடம் நகர்ந்து, “எப்பிடி வியாபாரம் எல்லாம் போகுது?” என்று கதையை ஆரம்பித்தேன். நான் அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டிருக்கவே கூடாது என்பது உடனேயே விளங்கியது.

“நன்றியில்லாத சனம் அண்ணை. நான் கடைக்கு வாடகை கட்டி, வேலையாளுக்கு சம்பளம் குடுத்துபாங்கிலை லோன் எடுத்து சாமான்களை வேண்டிப் போடுறன். ஆரோ ஒருத்தன் புதுசா வந்தவன், கொலண்டிலை இருந்து வானிலை மீன் கொண்டு வந்து மலிவா விக்கிறான் எண்டு சனங்கள் அவனிட்டை வாங்குதுகள். அதுவும் அவன் எப்ப மீன் கொண்டு வாறான். எந்த இடத்திலை வான் நிக்கும் எண்டு வட்ஸ் அப்பிலிலை மெஸேச்சும் அனுப்பினம்

எவ்வளவோ கேள்விகள் இருக்க ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். ஒருவா று அவர் புலம்பல் நின்ற பிறகு, “அதிலை கோடு போட்ட சேர்ட் போட்டுக் கொண்டு நிக்கிறது யார்? என்று முதலாளியிடம் கேட்டேன்.

“அவரை உங்களுக்குத் தெரியோணுமே. ஹால் நகரத்துக்குப் பொறுப்பா இருந்தவர்மேற்கொண்டு எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை.

நவம் எனக்கு நன்கு தெரிந்தவர்தான். நாங்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு  நல்ல ஒத்தாசைகள் தந்தவர். இரண்டு தசாப்தங்கள் அவருக்கும் எனக்கும் தொடர்புகள் இல்லாமல் போயிற்று. இருபது வருடங்களில் அவர் இளமையைக் கடந்து வந்துவிட்டார். அவரை அடையாளம் காண முடியாததற்கு எனது வயது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் என்ன? இப்பொழுது தெரிந்து விட்டதுதானே

முதுகில் தட்டிவிட்டு, “நவம், எப்பிடி இருக்கிறீங்கள்?” நவம் என்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்திச் சொன்னேன்.

“நான் நினைச்சன் மறந்து போட்டீங்களெண்டு

பழைய கதைகள் பேசிக் கொண்டோம். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். சொல்லிவிட்டு, பதிலுக்கு அவர் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன்.

மகனும், மகளும் நல்ல வேலையில் இருப்பதாகச் சொன்னார். “நல்ல இடத்திலை பாக்கிறன். உங்களுக்குத் தெரிஞ்சாக்கள் இருந்தால் சொல்லுங்கோ

“மாப்பிள்ளை தேடுறீங்களோ?”

“இல்லைஇல்லை. மகனுக்குப் பொம்பிளை தேடுறன். அவனுக்கு 28 வயசாச்சு…”

“இப்ப எல்லாம் எங்கடை பெடியள் தாங்களே தேடிக் கொள்ளுவாங்களே..!

“அதுதான் மகளும் பேசுறாள். பொத்திப் பொத்தி வளத்தீங்கள் இப்ப தேடுங்கோ எண்டிறாள்

“அப்ப உங்கடை மகளுக்குப் பாக்கேல்லையோ?”

“அவளுக்கு  ஒரு Boy friend இருக்கிறான்…” 

“பெட்டியை மூடப் போறம் பூக்கள் போட விரும்பினாக்கள் வந்து போடுங்கோ.” ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்.

“பூ போட்டுட்டு வாறன்சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

இக்காலத்தில்பல பெற்றோரின் ஆதங்கம் இது தான். படிப்பித்துவிட்டு தங்களுக்கேற்ற  பெண்ணை /ஆணை கொண்டுவா என்றால் எங்கேபோவது. 
அப்படிகொண்டுவந்தாலும்  அவர்களுக்குப்பிடிக்க வேண்டுமே. படிப்பு , அழகு 
பதவி பணம் என்று பார்த்துக் கொண்டிருந்தால் .கனவுலகில் தான் வாழவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

புலம் பெயர் சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சினையை...  
மிக அருமையான எழுத்து நடையுடன் எழுதி உள்ளீர்கள். 👍

கட்டுரையை ஆரம்பித்த விதம், முடித்த விதம்,
சொல்ல வந்த விடயத்தை நடுவில் சொருகிய விதம்... அனைத்தும் அருமையோ அருமை. ✌️
நன்றி கவி அருணாசலம். 👌

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது ஒரு பெரிய பிரச்சினை......சிலநேரம் சிலரை தெரிந்தவர்களாக இருக்கும் ஆனால் பெயர் எல்லாம் மறந்து விடுவேன்.......அவர்களோ என்னிடம் கேட்கும் முதல் கேள்வி என்னைத் தெரியுமோ......யார் என்று சொல்லுங்கோ பார்ப்பம் என்பதுதான்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைக்கும் எனக்கும் ஒத்துப் போகிறது.

நன்றாக பழகியவர்களின்  பெயரைக் கூட மறந்துவிடுவேன்.

நன்றாக சிரித்து பேசிவிட்டு வருவேன்.ஆனாலும் பெயர் வரவே வராது.

வீட்டை போக மனிசி யார் எவரெண்டில்லை கண்ட உடனை மறித்து வைத்து அளக்கிறது.பெயரும் தெரியாது ஊரும் தெரியாது அவ்வளவு மறதி என்று நடக்கும்.

1 hour ago, suvy said:

எனக்கும் இது ஒரு பெரிய பிரச்சினை......சிலநேரம் சிலரை தெரிந்தவர்களாக இருக்கும் ஆனால் பெயர் எல்லாம் மறந்து விடுவேன்.......அவர்களோ என்னிடம் கேட்கும் முதல் கேள்வி என்னைத் தெரியுமோ......யார் என்று சொல்லுங்கோ பார்ப்பம் என்பதுதான்......!  😂

எல்லாமே வயதுக் கோளாறு.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2023 at 21:15, ஈழப்பிரியன் said:

எல்லாமே வயதுக் கோளாறு.

ஒவ்வொரு வயசிலும் ஒரு கோளாறு வந்துக்கிட்டே தானே இருக்குது. புசிசா என்ன வரப்போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2023 at 15:28, நிலாமதி said:

“அதுதான் மகளும் பேசுறாள். பொத்திப் பொத்தி வளத்தீங்கள் இப்ப தேடுங்கோ எண்டிறாள்

இக்காலத்தில்பல பெற்றோரின் ஆதங்கம் இது தான். படிப்பித்துவிட்டு தங்களுக்கேற்ற  பெண்ணை /ஆணை கொண்டுவா என்றால் எங்கேபோவது. 
அப்படிகொண்டுவந்தாலும்  அவர்களுக்குப்பிடிக்க வேண்டுமே. படிப்பு , அழகு 
பதவி பணம் என்று பார்த்துக் கொண்டிருந்தால் .கனவுலகில் தான் வாழவேண்டும். 

உண்மை   இவ்வாறு நிறைய பேர் இருக்கிறார்கள்...மாப்பிள்ளை இருந்த சொல்லு  பெண் இருந்தால் சொல்லு என்பார்கள்    ஆனால்   சொல்லும் போது ...அநேகமாக வேண்டாம் எனக் கூறுவார்கள்....இதனால்   நாங்கள்  உறவினர்கள் நண்பர்கள் உடன பகைக்க வேண்டி வருகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இங்கு ஊரில் சனங்களுடன் அறிமுகம் சராசரிக்கும் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை நினைத்து பெருமையுடன் இருந்த எனக்கு அதுவே நாளடைவில்  அன்புத்தொல்லையாகும் என்று கனவிலும் நினைத்ததில்லை.

நல்ல பெடியள் இருந்தால் சொல்லுங்கோ என்பவர் ஒருபுறம், நல்ல பொம்பிளைபிள்ளை எங்கேயும் இருக்கினமோ என்று கேட்கும் பெற்றோர் மறுபுறம், உங்கடை  இடத்திலையிருந்து பேச்சு வந்திருக்கு ஊரிலை ஒருக்கா விசாரித்து சொல்றியளோ என்று நேரிலும் தொலைபேசியிலும் தொலைதூர நண்பர்களின் வேண்டுகோள் இன்னொருபுறம். 

இதற்குமேல் கோவில் திருவிழா, கொண்டாட்டங்களும் விதிவிலக்கல்ல. முன்பின் அறிமுகமில்லாதவர்களைக்கூட பெற்றோர்கள் அணுகி வந்து கேட்கும்படியாக இந்த விடயம் எமது புலம்பெயர் சமூகத்தில் உருவாகிவிட்டதுபோல் தெரிகிறது. அதைப் பிழை என்றுசொல்வதற்கில்லை. பெற்றோரின் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என்றுதான் நான் இதை புரிந்துகொள்கிறேன்.

ஆனால் ஒன்றுமட்டும் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. பிள்ளைகள் 20-25 வயதிற்குள்  தாங்களாகவே துணையை தேடிக்கொண்டால் ஒருவரிடம் ஒருவர் அதிகம் எதிர்பார்பில்லாமலே சோடி சேர்ந்துவிடுகிறார்கள். தாமதித்தால், உதாரணமாக 25 வயதிற்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் அனுபவமும் பட்டறிவும் அதிகரிக்க அப்படி வேண்டும், இப்படி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்பது மட்டுமில்லாமல் மனதில் பல எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்வதால் எந்த ஜோடியும் அவர்களுக்கு சரியாக அமைவது கடினமாகிவிடும்.

பிள்ளைகள் இந்த வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டுவிட்டால் அவர்களின் வயதும் ஏறிக்கொண்டே போகப் போக  அதுவே இறுதில் (30க்கு மேல்) புதிய பிரச்சனை ஒன்றை உருவாக்குவதுடன் அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவுகளும் சுருங்கி குறைந்துவிடும். அதற்குமேல் தாமாக முயற்சிப்பதை கைவிட்டு,  விரக்தியில் விழிம்பில்  வந்து நிற்கும் அவர்கள் பெற்றோரிடம் உதவிகேட்டு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாக உள்ளது  நாம் ஒன்றை சொல்ல அல்லது கேட் க அது நம்ம மேலயே ஒரு சுமையாய் வந்து விழும் 

உதாரணமாக கடன் கேட் க போனால்  நம்மள இருக்க வச்சி அவர் பட்ட கடன் எல்லாவற்றையும் சொல்லுவார் பாருங்க அந்த நிலைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2023 at 16:57, Kandiah57 said:

உண்மை   இவ்வாறு நிறைய பேர் இருக்கிறார்கள்...மாப்பிள்ளை இருந்த சொல்லு  பெண் இருந்தால் சொல்லு என்பார்கள்    ஆனால்   சொல்லும் போது ...அநேகமாக வேண்டாம் எனக் கூறுவார்கள்....இதனால்   நாங்கள்  உறவினர்கள் நண்பர்கள் உடன பகைக்க வேண்டி வருகிறது 

 அவர்களின் "எதிர்பார்ப்பு "வேறு வகையாக இருக்கிறது போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 19:30, நிலாமதி said:

 அவர்களின் "எதிர்பார்ப்பு "வேறு வகையாக இருக்கிறது போலும்.

என்ன பெரிய எதிர்பார்ப்புகள்?. வாழப்போவது பிள்ளைகள்    ஒத்து போவர்களுடன்.  தான் வாழ முடியும்   ..பிள்ளைகள் விரும்பி கூட்டி வந்தால்  இனி என்ன செய்வது என்று திருமணம் செய்து வைப்பார்கள்...பிள்ளைகள் பெற்றோர் பேசி செய்யடட்டும் என இருந்தால்   திருமணம் பேசுவது என குழப்பி கொண்டேயிருப்பார்கள.   கைபட். லெவல்   எல்லாம் திருமண பேச்சில் காட்டக்கூடாது   

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

நானும் நீங்களும் ஒத்துபோகலாம் இந்த விடயத்தில் ஆனால் எல்லோரும் ஒத்து போவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிலாமதி said:

நானும் நீங்களும் ஒத்துபோகலாம் இந்த விடயத்தில் ஆனால் எல்லோரும் ஒத்து போவார்களா ?

ஓம் சரி   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.