Jump to content

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல்

கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் தொடர்பில் உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை கூறியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை ஆரம்பித்தது.

 

அமெரிக்கா  உதவி

இந்தப் போரில் உக்ரைன் இராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன.

கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல் | Ukraine Destroys Russian Warship

 

இந்நிலையில் ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கருங்கடலில் தாக்கி அழிக்கப்பட்ட ரஷ்ய போர்க்கப்பல் | Ukraine Destroys Russian Warship

 

இதுதொடர்பாக, உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ''பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர்'' என தெரிவித்துள்ளது.

https://tamilwin.com/article/ukraine-destroys-russian-warship-1707929053

Link to comment
Share on other sites

  • Replies 549
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஏவுகணைத் தளத்தினைக் கொண்டிருந்த ரஷ்ய கப்பல் ஒன்றை உக்ரெய்ன் மூழ்கடித்திருந்தது. இத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆளில்லா படகுகளில் இரண்டு கப்பலின் உந்து சுழல் கருவிகளைத் தாக்கி கப்பலை நகர முடியாமல் செய்ய ஏனையவை கப்பலின் நடுப் பகுதியைத் தாக்கி அங்கிருந்த ஏவுகணக்களை வெடிக்க வைத்தன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய போர்க் கப்பலை அழித்த உக்ரைன் ராணுவம்!

christopherFeb 15, 2024 07:25AM
Screenshot-2024-02-15-072502.jpg

ரஷ்ய ஆக்கிரமிப்பு ரிசார்ட் நகரமான அலுப்காவின் கரையோரத்தில் கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பலை அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. ரஷ்யாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று (பிப்ரவரி 14) உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷ்ய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் இந்தக் கப்பலை சீசர் குனிகோவ் என்று அடையாளம் கண்டுள்ளனர், அதில் சுமார் 87 பணியாளர்கள் இருக்க முடியும். ரஷ்ய ஆக்கிரமிப்பு ரிசார்ட் நகரமான அலுப்காவின் கரையோரத்தில் கருங்கடலில் இந்த கப்பல் இருந்ததாக
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகமும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
 

https://minnambalam.com/india-news/ukrainian-military-destroys-russian-warship-in-black-sea/

Link to comment
Share on other sites

அமெரிக்க இராணுவ உதவிகள் கிடைக்காத நிலையில் உக்ரெய்ன் இராணுவம் எதிர்த்தாக்குதல் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றது. 

ரஸ்ய படைகள் Avdiïvka நகரினை மூன்று பக்கத்தாலும் சுற்றி வளைத்துள்ளன. இங்குள்ள உக்ரெய்ன் இராணுவத்தினரை வெளியேற்றும் முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ukraine.jpg

மேலுள்ள படத்தில் Avdiivka பகுதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனில் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா - போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா?

ரஷ்யா - யுக்ரைன் போர்

பட மூலாதாரம்,ALESSANDRO GUERRA/EPA-EFE/REX/SHUTTERSTOCK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகீயவ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்ய - யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை.

“மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி.

இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் அவர் பின்பற்றினார்.

இந்த போரில் ரஷ்யாவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் யுக்ரேனிய வீரர்கள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு யுக்ரேனின் எதிர் தாக்குதல் தோல்விக்கு பிறகு, இந்த போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி இது.

அவ்திவ்கா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் யுக்ரைன் அதை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.

எனவே, இந்த நீண்ட மோதலில் அவ்திவ்காவின் வீழ்ச்சி எதை உணர்த்துகிறது?

ரஷ்யா - யுக்ரைன் போர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு பெரியது.

மாபெரும் சக்தி கொண்ட நாட்டுடன் நீளும் போராட்டம்

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான போர் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் உள்ள வலிமையின் வேற்றுமை வெளிப்படையாகவே தெரிய தொடங்கியுள்ளது.

ரஷ்யாவின் மக்கள் தொகை 144 மில்லியன் ஆகும். இது யுக்ரேனிய மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகம்.

இந்த போரில் ரஷ்யா ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ள போதிலும், புதிய வீரர்களை களத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தனது பலத்தை காட்டியுள்ளது.

யுக்ரேனிய ராணுவம் இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், அது ரஷ்ய இழப்பை விட குறைவே ஆகும்.

யுக்ரேனின் முன்பகுதியில் அமைந்துள்ள நகரங்களில் நடந்தது போலவே, முழுமையாக அழிக்கப்பட்ட இந்த நகரத்தை கைப்பற்றியுள்ளது ரஷ்யா.

இங்கு நிறுத்தப்பட்டிருந்த யுக்ரேனின் 3வது தாக்குதல் படைப்பிரிவு, தாங்கள் அனைத்து திசைகளில் இருந்தும் எதிர்ப்படையினரால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா தனது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட படைகளை அங்கு நிறுத்தியிருப்பதாகவும், யுக்ரேனிய ராணுவ இலக்குகள் மீது நாளொன்றுக்கு 60 குண்டுகள் வரை வீசியதாகவும் நம்பப்படுகிறது.

கடந்த முறை யுக்ரேனிய நகரமான பாக்முத் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது, ஜெனரல் சிர்ஸ்கி விமர்சிக்கப்பட்டார். காரணம் அங்கு நீண்டகாலம் பதவியில் இருந்தவர் அவரே. மேலும், தேவையில்லாத இழப்புகளை ஏற்படுத்தி குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற அவர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்த அனுபவம் அவரது அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது போல தெரிகிறது.

 
ரஷ்யா - யுக்ரைன் போர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

கடந்த ஆண்டு யுக்ரேனிய நகரமான பக்முட்டை ரஷ்யா கைப்பற்றியது

போர் ரஷ்யா பக்கம் சாய்கிறதா?

தற்போதைய ரஷ்யாவின் முன்னேற்றம் ஒன்றும் ஒரே இரவில் நடக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, அவ்திவ்காவின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது ரஷ்யா.

இந்த தொழில் நகரத்தின் வலுவான தளங்கள் மற்றும் பாதுகாப்பின் மூலம் யுக்ரேனிய வீரர்கள் அங்கிருந்தவாறே ரஷ்யா மீது குறிப்பிட்ட தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி வந்தனர். இதனால் இந்த நகரமே ரஷ்ய வீரர்களின் சடலமயமாக மாறிப்போனது. ரஷ்யாவின் கவச வாகனத்தையும் அவர்கள் அழித்துவிட்டனர்.

ஆனால், ரஷ்யாவின் முதல் தாக்குதலுக்கு பிறகு கடந்த பத்தாண்டுகளாக பலப்படுத்தப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு தளத்திற்குள் தற்போது ரஷ்யா முன்னேறி வந்துவிட்டது.

ஆனால் ரஷ்யா மிக சமீபத்தில் உருவாக்கிய எந்த தளத்திற்குள்ளும் ஊடுருவ முடியாமல் இருப்பது யுக்ரேனுக்கு ஒரு பின்னடைவே.

"ரஷ்யாவால் தந்திரத்தின் மூலம் மட்டுமே இலக்குகளை அடைய முடியும், ஆனால் உத்தியைக் கொண்டு அடைய முடியாது" என்கிறார் யுக்ரேனிய இராணுவத்தின் 3வது தாக்குதல் படைப்பிரிவின் துணைத் தளபதி மேஜர் ரோடியன் குத்ரியாஷோவ்,

போன் வழியாக பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது வீரர்கள் ஏழுக்கு-ஒன்று என்ற கணக்கில் குறைவாக இருக்கின்றனர். இது ஏதோ நாங்கள் இரண்டு எதிரிகளுடன் சண்டையிடுவது போல் இருக்கிறது” என்று கூறுகிறார்.

அவர்கள் போக்ரோவ்ஸ்க் மற்றும் கோஸ்ட்யான்ட்னிவ்கா உள்ளிட்ட நகரங்களுக்குள் ரஷ்யர்களால் நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது.

ரஷ்யா அவ்திவ்காவை கைப்பற்றியது, கிழக்கில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டொனெட்ஸ்க் நகரத்தின் மீதான அவர்களின் அழுத்தத்தை குறைக்கும். இந்த நகரத்தை 2014 இல் ரஷ்யா கைப்பற்றியிருந்தது.

 
ரஷ்யா - யுக்ரைன் போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மேற்கத்திய உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது.

ரஷ்ய-யுக்ரேன் போரின் தற்போதைய நிலை என்ன?

யுக்ரைன் பின்வாங்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல.

குறிப்பாக 2022 கோடைகாலத்தில் நவீன ஆயுதங்களோடு கூடிய பெரிய எண்ணிக்கையிலான ரஷ்ய படை, லிசிசான்ஸ்க் மற்றும் செவெரோடோனெட்ஸ்க் பகுதிகளை சுற்றிவளைத்தது. அந்த சமயத்தில் யுக்ரேனால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இருப்பினும் மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் தனது ராணுவத்தின் மூலம் விரைவிலேயே நிலைமையை மாற்றியது. அதே ஆண்டில் கெர்சன் மற்றும் கார்கிவ் பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து விடுவித்தது யுக்ரேனிய ராணுவம்.

ஆனால், தற்போது இந்த போர் வேறு நிலையை அடைந்துள்ளது.

இந்த போர்க்களத்தின் மீது உலக அரசியல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் வழஙகும் உதவியில் ஏற்பட்டுள்ள பின்னடைவே, தற்போது அவ்திவ்கா பின்வாங்கலுக்கு நேரடி காரணம் என்று கருதப்படுகிறது.

யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதில் அமெரிக்கா முதன்மையானதாக இருக்கிறது. அதற்கு காரணம் அதனால் மட்டுமே, வேகமாக அதிக அளவிலான ஆயுதங்களை வழங்க முடியும். யுக்ரேனுக்கு வழங்குவதற்கான 95 பில்லியன் அமெரிக்க டாலர் உதவிகளை அமெரிக்கா இன்னமும் வழங்கவில்லை. மற்ற நட்பு நாடுகளும் இந்த இடைவெளியை நிரப்ப போராடி வருகின்றன.

எனவே யுக்ரேன் தனது ஆயுதங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களது தன்னம்பிக்கையும் குறைந்து விட்டது.

ஆனால் யுக்ரேன் எதிர்பார்த்தபடி, அவ்திவ்கா மட்டுமே பின்வாங்கும் இடமாக இருக்காது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒட்டுமொத்த யுக்ரேனும் தேவைப்படுகிறது. அதை அவர் பெறுவதற்கும் வாய்ப்புள்ளது.

இந்த வாய்ப்பு மேற்கத்திய ஒற்றுமையின் மூலம் தகர்ந்தும் போகலாம் அல்லது அசாதாரண திறமையை கொண்டுள்ள போதிலும் யுக்ரேன் இந்த போரில் வெற்றி பெறாது என்ற சந்தேகத்தையும் வலுப்படுத்தலாம் என்பதே தற்போதைய ரஷ்ய-யுக்ரேன் போரின் நிலை.

https://www.bbc.com/tamil/articles/crgrpddmlk7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் பலி

Published By: RAJEEBAN   22 FEB, 2024 | 10:51 AM

image

உக்ரைனின் ஏவுகணை தாக்குதல் காரணமாக 60க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி தளமொன்றில்  முக்கிய அதிகாரியின் வருகைக்கான படையினர் தயார் நிலையிலிருந்தவேளை உக்ரைன் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக பிபிசி தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

russian_killed1.jpg

பெருமளவு ரஸ்ய படையினர் உயிரிழந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள ரஸ்ய அதிகாரியொருவர் எனினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சைபீரியாவை தளமாக கொண்ட படையணியின் படையினர் ட்ருடொவ்ஸ்கே கிராமத்திற்கு அருகில் உள்ள பயிற்சி தளத்தில் தளபதியொருவரின் வருகைக்காக காத்திருந்தவேளை உக்ரைனின் ஏவுகணைகள் அவர்களை தாக்கியுள்ளன.

russian_killed2.jpg

தங்களை தங்களின் தளபதிகள் திறந்தவெளியொன்றில் நிற்கவைத்திருந்தனர் அவ்வேளை ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது என ரஸ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தளத்தில் உயிரிழந்த நிலையில் பல ரஸ்ய வீரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன,

https://www.virakesari.lk/article/177018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும் - உக்ரைன் ஜனாதிபதி

Published By: RAJEEBAN    25 FEB, 2024 | 11:32 AM

image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அனைத்தையும் இழக்கவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்து இரண்டுவருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக உக்ரைன் தலைநகருக்கு சென்ற மேற்குலக தலைவர்களை வரவேற்று உரையாற்றும்போதே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ukraine_missile.jpg

இத்தாலி கனடா பெல்ஜியம் தலைவர்கள் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரும் உக்ரைன் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் தலைநகருக்கு அருகில் உள்ள ஹொஸ்டமொல் விமானநிலையத்தி;ற்கு மேற்குலக தலைவர்கள் சென்றுள்ளனர்.

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கத்துடன் ரஸ்யாவின் பரசூட் பிரிவினர் கைப்பற்றிய இந்த விமானநிலையத்தை பின்னர் உக்ரைன் படைப்பிரிவினர் கைப்பற்றினர்.

இரண்டு வருடங்களின் பின்னர் இங்கு எதிரிகளின் துப்பாக்கி சூட்டினை சந்தி;த்தோம் தற்போது இரண்டு வருடங்களின் பின்னர்  நண்பர்களை சந்திக்கின்றோம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எந்த மனிதனும் போர் முடிவிற்கு வரவேண்டும் என விரும்புவான் ஆனால் நாங்கள் எவரும் எங்கள் உக்ரைன் முடிவி;ற்கு வருவதை அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177239

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீதான தாக்குதலின் நோக்கத்தை அடைவதற்கு உக்ரேனின் தலைநகர் கீயவ் வை ரஸ்யா கைப்பற்ற வேண்டும்  - ரஸ்ய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதித் தலைவர் மெட்வெடெவ். 

Medvedev admits getting to Kiev for reaching targets of special military operation

The politician presented two arguments for the necessity to get to Kiev, saying that, first, this is a Russian city and, second, the international threat to Russia’s existence comes from there
 
Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev Yekaterina Shtukina/POOL/TASS
Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev
© Yekaterina Shtukina/POOL/TASS

MOSCOW, February 22. /TASS/. Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev believes that it might be required to get to Kiev for reaching the targets of the special military operation. He also warned in response to a question from TASS during a media session with Russian reporters about the geographic borders of the special military operation that the conflict might not be limited to the current stage.

"Where to stop? I don’t know. I think that considering what I have said [about the necessity to create a safety cordon] we will have to work much and hard. Will it be Kiev? Yes, it should probably be Kiev as well. If not now then some time later, probably during some other stage of this conflict’s development," Medvedev said.

The politician presented two arguments for the necessity to get to Kiev, saying that, first, this is a Russian city and, second, the international threat to Russia’s existence comes from there. "Though Kiev is a Russian city in its roots, it is managed by an international team of Russia’s opponents headed by the United States of America. All that formally perform functions there are figure-heads with neither conscience, nor fear for the future of their country, nor possibilities. All decisions are taken across the pond and in the NATO headquarters. This is absolutely obvious. This is why yes, it may be Kiev as well," he stressed.

Asked whether Ukraine should remain an independent state following the special military operation in general, Medvedev noted that "if as a result of all that is going on something remains of Ukraine such a state probably has chances to remain, though not very high." "In any case this is not a question of today, of course, but it will be on the agenda some time later," he said. "I don’t know what will remain in this territorial entity, I cannot call it a country now, maybe the Lemberg region, with a center in the city of Lemberg if the Polish or some other regions undertake for it. But this is a complicated process, not only military, but also political. And not only military forces, not only the military, but people inhabiting those lands as well should play or say their word in this process," he concluded.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

உக்ரேன் மீதான தாக்குதலின் நோக்கத்தை அடைவதற்கு உக்ரேனின் தலைநகர் கீயவ் வை ரஸ்யா கைப்பற்ற வேண்டும்  - ரஸ்ய பாதுகாப்பு கவுன்சிலின் பிரதித் தலைவர் மெட்வெடெவ். 

Medvedev admits getting to Kiev for reaching targets of special military operation

The politician presented two arguments for the necessity to get to Kiev, saying that, first, this is a Russian city and, second, the international threat to Russia’s existence comes from there
 
Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev Yekaterina Shtukina/POOL/TASS
Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev
© Yekaterina Shtukina/POOL/TASS

MOSCOW, February 22. /TASS/. Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev believes that it might be required to get to Kiev for reaching the targets of the special military operation. He also warned in response to a question from TASS during a media session with Russian reporters about the geographic borders of the special military operation that the conflict might not be limited to the current stage.

"Where to stop? I don’t know. I think that considering what I have said [about the necessity to create a safety cordon] we will have to work much and hard. Will it be Kiev? Yes, it should probably be Kiev as well. If not now then some time later, probably during some other stage of this conflict’s development," Medvedev said.

The politician presented two arguments for the necessity to get to Kiev, saying that, first, this is a Russian city and, second, the international threat to Russia’s existence comes from there. "Though Kiev is a Russian city in its roots, it is managed by an international team of Russia’s opponents headed by the United States of America. All that formally perform functions there are figure-heads with neither conscience, nor fear for the future of their country, nor possibilities. All decisions are taken across the pond and in the NATO headquarters. This is absolutely obvious. This is why yes, it may be Kiev as well," he stressed.

Asked whether Ukraine should remain an independent state following the special military operation in general, Medvedev noted that "if as a result of all that is going on something remains of Ukraine such a state probably has chances to remain, though not very high." "In any case this is not a question of today, of course, but it will be on the agenda some time later," he said. "I don’t know what will remain in this territorial entity, I cannot call it a country now, maybe the Lemberg region, with a center in the city of Lemberg if the Polish or some other regions undertake for it. But this is a complicated process, not only military, but also political. And not only military forces, not only the military, but people inhabiting those lands as well should play or say their word in this process," he concluded.

 

மெட்வெடேவின் கூற்று, ரஷ்யா தற்போது பரப்பும் வரலாற்று மறுப்பு, திரிப்பு ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு  எனக் கருதுகிறேன். ரஷ்யாவின் பிறப்பிடம், தொட்டில் உக்ரைன் என்பது சரி. ஆனால், லெம்பேர்க் பிரதேசம் என்பது உக்ரைனின் கிழக்குப் பிரதேசங்கள் போலந்து, அவுஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆட்சிகளிடையே பந்தாடப் பட்ட போது இருந்த பெயர்.

அந்த 1900 இல் இருந்து 1991 வரையான பகுதியில் நிகழ்ந்தவை எல்லாம் "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" என்பது போல புரின் அணிக்கு மறந்து விட்டது😎.

1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது, இறுதி வரை மூன்று சோவியத் குடியரசுகள் ஒரு கூட்டமைப்பில் சேர்ந்து தொடர்வது பற்றி இறுதி வரைப் பேச்சு வார்த்தை நடத்தின: பெலாரஸ், உக்ரைன், கசாக்ஸ்தான், இவை தான் அந்த மூன்றும். இறுதியில், ஓரிரு நாட்களில் உக்ரைன் குடியரசின் மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளே பிரிந்து போக விரும்பி வாக்களித்த போது உக்ரைன் பிரிந்து போனது, ரஷ்யாவின் யெல்ட்சின் அதனை ஆதரித்தார். உக்ரைன் பிரிந்ததும், கசாக்ஸ்தான், பெலாரஸ் எனபனவும் பிரிந்து போக முடிவெடுத்தன.

இதன் பின்னர், சோவியத்தின் கடன்களை யார் கட்டுவது, இந்த நாடுகளின் எல்லைகள், சோவியத் அணுவாயுதங்களை என்ன செய்வது ஆகிய விடயங்களில் பேச்சு வாரத்தைகளும், ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. ரஷ்ய சமஷ்டியின் யெல்ட்சின் இதிலெல்லாம் பங்காளியாக இருந்திருக்கிறார் (கொர்பச்சேவின் பதவி நிலை, சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் கலைக்கப் பட்டவுடன் சக்தியிழந்தைமையால் யெல்ட்சின் தான் ரஷ்யாவின் அதிகாரமிக்க தலைவராக இருந்தார்).

இதையெல்லாம் வரலாற்று ஆவணங்களில் வாசித்தறிய பொறுமையில்லாத மக்களை, புரின் அணி நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

மெட்வெடேவின் கூற்று, ரஷ்யா தற்போது பரப்பும் வரலாற்று மறுப்பு, திரிப்பு ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு  எனக் கருதுகிறேன். ரஷ்யாவின் பிறப்பிடம், தொட்டில் உக்ரைன் என்பது சரி. ஆனால், லெம்பேர்க் பிரதேசம் என்பது உக்ரைனின் கிழக்குப் பிரதேசங்கள் போலந்து, அவுஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் ஆட்சிகளிடையே பந்தாடப் பட்ட போது இருந்த பெயர்.

அந்த 1900 இல் இருந்து 1991 வரையான பகுதியில் நிகழ்ந்தவை எல்லாம் "நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" என்பது போல புரின் அணிக்கு மறந்து விட்டது😎.

1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது, இறுதி வரை மூன்று சோவியத் குடியரசுகள் ஒரு கூட்டமைப்பில் சேர்ந்து தொடர்வது பற்றி இறுதி வரைப் பேச்சு வார்த்தை நடத்தின: பெலாரஸ், உக்ரைன், கசாக்ஸ்தான், இவை தான் அந்த மூன்றும். இறுதியில், ஓரிரு நாட்களில் உக்ரைன் குடியரசின் மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளே பிரிந்து போக விரும்பி வாக்களித்த போது உக்ரைன் பிரிந்து போனது, ரஷ்யாவின் யெல்ட்சின் அதனை ஆதரித்தார். உக்ரைன் பிரிந்ததும், கசாக்ஸ்தான், பெலாரஸ் எனபனவும் பிரிந்து போக முடிவெடுத்தன.

இதன் பின்னர், சோவியத்தின் கடன்களை யார் கட்டுவது, இந்த நாடுகளின் எல்லைகள், சோவியத் அணுவாயுதங்களை என்ன செய்வது ஆகிய விடயங்களில் பேச்சு வாரத்தைகளும், ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. ரஷ்ய சமஷ்டியின் யெல்ட்சின் இதிலெல்லாம் பங்காளியாக இருந்திருக்கிறார் (கொர்பச்சேவின் பதவி நிலை, சோவியத் ஒன்றியத்தின் சுப்ரீம் சோவியத் கலைக்கப் பட்டவுடன் சக்தியிழந்தைமையால் யெல்ட்சின் தான் ரஷ்யாவின் அதிகாரமிக்க தலைவராக இருந்தார்).

இதையெல்லாம் வரலாற்று ஆவணங்களில் வாசித்தறிய பொறுமையில்லாத மக்களை, புரின் அணி நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

உக்ரேனின்-ரஸ்ய யுத்தத்தின் தீவிரத்தன்மையை வெளிக்காட்டும் ஒரு செய்தி. அதனால் அந்தச் செய்தியை  இங்கே இணைத்துள்ளேன். 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனுடன் போரிட ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் ஏமாற்றி சேர்ப்பு - முகவராக செயல்படும் 'பழனிசாமி' யார்?

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 25 பிப்ரவரி 2024, 06:52 GMT

சில இந்திய இளைஞர்கள் ரஷ்யா சென்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விடலாம் என நினைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அவர்கள் முகவர்களின் வார்த்தைகளை நம்பியதால், தற்போது யுக்ரேனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பவதாகக் கூறுகிறார்கள்.

உதவியாளர் பணிக்கு அழைத்து வந்து, ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்ததாகவும் அவர்கள் புகார் கூறுகிறார்கள்.

தெலங்கானா உள்ளிட்ட கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர்.

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்

இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்களை ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு முகவர்கள் உள்ளனர்.

பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த நான்கு பேரையும் ஒருங்கிணைத்துள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார்.

ரஷ்யாவில் ஹெல்பர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களைஅவர் ஈர்க்கிறார்.

அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களை வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

35 பேரை அனுப்ப திட்டமிட்ட முகவர்கள்

35 பேரையும் ரஷ்யாவுக்கு அனுப்ப முகவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அவர்களில் மூன்று பேர் நவம்பர் 9, 2023 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினர். சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா, பின் மாஸ்கோவுக்கு 12 ஆம் தேதி சென்றுள்ளனர்.

நவம்பர் 16 அன்று, பைசல் கானின் அணி ஏழு பேரை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது.

அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ம் தேதி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

துபாயில் உள்ள முகவரான பைசல் கான், பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலைகள் பற்றி யாரிடமும் எங்கும் கூறவில்லை என இளைஞர்களின் குடும்பத்தினர் பிபிசியிடம் கூறினர்.

“நான் ராணுவ உதவியாளர் என்றேன். எனது முந்தைய வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். உதவியாளர் பணி குறித்து ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறேன். இதுவரை, பல்வேறு இடங்களில், இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளேன்,'' என அவர் அந்த வீடியோவில் பேசுகிறார்.

ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி பெற்றுள்ளது.

அவர்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அப்சன், தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியான், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பன் ஹுசைன், காஷ்மீரைச் சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தைச் சேர்ந்த ஹேமல், சையத் இலியாஸ் ஹுசைன், சமீர் அகமது மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த அப்துல் நயீம் ஆகியோர் அடங்குவர்.

 
உ.பி.யில் இருந்து ரஷ்யா சென்ற ஒருவர்
படக்குறிப்பு,

உ.பி.யில் இருந்து ரஷ்யா சென்ற ஒருவர்

விஷயம் எப்படி வெளியே வந்தது?

குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இல்லாதது குறித்து ரஷ்யாவில் இளைஞர்களிடம் இருந்து வெளியான காணொளிகள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரண்டு வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், கர்நாடகாவின் குல்பர்காவைச் சேர்ந்த சையத் இலியாஸ் உசேன், முகமது சமீர் அகமது மற்றும் சுஃபியான் ஆகியோர் பேசுவதைக் காணலாம்.

"நாங்கள் பாதுகாப்பு உதவியாளர்களாக கொண்டு வரப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டாேம். ரஷ்ய எல்லைக்கு கொண்டு வரப்பட்டு, காட்டில் போர்க்களத்தில் இங்கே வைக்கப்பட்டுள்ளோம். பாபா விலாக்ஸின் முகவரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்," என அந்த வீடியோவில் இளைஞர் கூறியுள்ளார்.

மற்றொரு வீடியோவில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஹுசைன் பேசுவதைக் காணலாம். கையில் காயம் இருப்பதைக் அவர் காட்டுகிறார்.

அதில், போர்க்களத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த வீடியோவில் கெஞ்சுகின்றனர்.

 
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்

'ரஷ்ய மொழியில் ஒப்பந்தங்களில் கையொப்பம் பெற்றனர்'

ரஷ்யா சென்றதும் அங்குள்ள அதிகாரிகள் பயிற்சிக்கு முன் இளைஞர்களை ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைத்துள்ளனர்.

அந்த பத்திரம் ரஷ்ய மொழியில் இருந்ததாகவும், ஏஜென்டுகளை நம்பி அனைவரும் கையெழுத்திட்டதாகவும் நம்பப்பள்ளியைச் சேர்ந்த முகமது இம்ரான் தெரிவித்தார்.

பிபிசி அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது மூத்த சகோதரர் முகமது இம்ரானை சந்தித்தோம். அவர்கள் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசிக்கிறார்கள்.

அஃப்பானுக்கு மனைவியும், இரண்டு வயது மகனும், 8 மாத குழந்தையும் உள்ளனர். அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

யூடியூப்பில் பைசல் கான் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.

அஃப்ஸர் சகோதரர் முகமது இம்ரான் கூறுகையில், தனது சகோதரர் காணாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிறது, எனக் கூறி தன் கவலையை வெளிப்படுத்தினார்.

"கடைசியாக டிசம்பர் 31ஆம் தேதி எங்களிடம் பேசினார். அதன் பிறகு அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை," என்றார்.

"அங்கு பயிற்சியளிக்கப்படுவதாக அவர் எங்களிடம் சொன்னார், அது உதவியாளர் பயிற்சி போன்றது அல்ல. முகவர்களிடம் பேசினால், அது பயிற்சியின் ஒரு பகுதி, அழுத்தம் கொடுக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் திரும்பி வருவார்கள் எனச் சொல்கிறார்கள்," என்றார் முகமது இம்ரான்.

தொடர்ந்து பேசிய இம்ரான், "உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எனது அண்ணனின் காலில் இரண்டு தோட்டாக்கள் தாக்கியதாகக் கூறினார். அவரை உடனடியாக அழைத்து வர வேண்டும்” என இம்ரான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி 18 முதல் எந்த தகவலும் இல்லை

தெலுங்கானாவில் உள்ள நாராயணப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சையத் சுபியான், ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடர்பில் இல்லை என்று அவரது தாயார் நசீம் பானு பிபிசியிடம் தெரிவித்தார்.

"இங்கே என்னிடம் போன் இல்லை. எப்போது கூப்பிடுவேன் என தெரியாது. நான் நலமாக இருக்கிறேன் என்றார் என் மகன். அதன்பின்னர் போன் திரும்ப வரவில்லை. எங்களுக்கு யாரும் இல்லை. மோதி அரசு தான் எங்கள் மகனை மீட்க வேண்டும்," என்று அவர் புலம்பினார்.

இவர்களது குடும்பம் நாராயணப்பேட்டையில் வசித்து வருகிறது.

இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் இவர்கள் வாழ்கிறார்கள்.

24 வயதான சுஃபியான் இரண்டு ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி சுபியான் மேலும் 5 பேருடன் ரஷ்யா சென்றார். துபாயில் சந்தித்த இந்திய நண்பர்களுடன் ரஷ்யா செல்ல முடிவு செய்தார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை.

“வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கிறோம். போர்க்களத்தில் இருக்கும்போது தொலைபேசியில் பேசினால், சிக்னல்களின் அடிப்படையில் யுக்ரேன் படைகளால் அடையாளம் காண முடியும். தொலைபேசி சிக்னல்களை கண்டறிந்து ட்ரோன் தாக்குகிறது. போர்க்களத்தில் போன்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இல்லை" என்று பைசல் கான் பிபிசியிடம் கூறினார்.

 
பைசல் கான்

10 இந்தியர்கள் எங்கே?

ரஷ்யா சென்ற 16 பேரில் 6 பேரின் இருப்பிடம் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும், மேலும் பத்து பேரின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை என்றும் பைசல் தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோவை அனுப்பிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹுசைன் என்னைத் தொடர்பு கொண்டார் அவர். "நாங்கள் அவரை வழிநடத்தி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றோம். அவர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார். காணாமல் போனவர்களுக்காக தூதரகம் மற்றும் ரஷ்ய ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்" என்று பைசல் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரஷ்யா சென்ற தெலுங்கானா இளைஞர்களில் மேலும் சிலரின் இருப்பிடம் தெரியாததால் குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

“ஆறு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் என்னைத் தொடர்பு கொண்டு என்னை மாஸ்கோவிற்குப் பத்திரமாக அழைத்து வந்தான். இருவரும் முன்கள வீரர்களாகப் போரில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. உதவியாளர்கள் என்று சொன்னதால்தான் இளைஞர்களை அனுப்பினேன். ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அவர்களை ராணுவ வீரர்களாக மாற்றிவிட்டனர்,” என்றார்.

 
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்

வாக்னர் குழுவில் சேர்க்கப்பட்டனரா..?

ரஷ்யாவில் தனியார் ராணுவம் என்று அழைக்கப்படும் வாக்னர் குழுமத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எங்கும் இல்லை.

அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவம் என்று அழைக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாக்னர் குழு ராணுவத்தில் பணியாற்றியதாக வதந்தி பரவுகிறது.

இதே விஷயத்தைப் பற்றி பைசல் கானிடம் பிபிசி கேட்டது.

அதற்கு அவர்,"முதலில் வாக்னர் குரூப் என்று சொன்னார்கள். பிறகு ரஷ்ய ராணுவத்தில் வேலைக்கு சேர்த்ததாக சொன்னார்கள். இருவரும் வெவ்வேறு குழுக்களா என்று கேட்டபோது, அனைத்தும் ரஷ்ய ராணுவம் என்று சொன்னார்கள்," என்றார்.

இதே பிரச்னையில் ரஷ்யாவில் முகவராக இருக்கும் மொயினிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளியில் இருக்கும் அப்சானின் சகோதரர் முகமது இம்ரானிடம் பிபிசி பேசியது.

“ஒப்பந்த ஆவணங்கள் ரஷ்ய மொழியில் உள்ளன. பின்னர், எனது தம்பி பத்திரப்பதிவு விவரங்களை அனுப்பியபோது, அதை மொழிபெயர்த்து படித்தேன். "வாக்னர் குழு அதில் இல்லை, ஆனால் ரஷ்ய ராணுவம் உள்ளது," என்று அவர் கூறினார்.

முகவராக செயல்படும் 'பழனிசாமி' யார்?

பிபிசியின் விசாரணையில், இந்த முழு விவகாரத்தின் பின்னணியிலும் ஐந்து முகவர்கள் இருப்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்.

ரஷ்யாவில் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் வேலை என்ற பெயரில் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மொயின், தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனிசாமி ரமேஷ்குமார் ஆகியோர் ரஷ்யாவில் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுடன் தொடர்பில் உள்ள பைசல் கான் துபாயில் தங்கியுள்ளார். பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

விளம்பரம் கொடுத்து இளைஞர்களை சிக்க வைக்கிறார்கள்.

மும்பையில் உள்ள சுபியான் மற்றும் பூஜா என்ற ஏஜென்டுகளால் இந்திய இளைஞர்கள் சிக்குகின்றனர்.

சம்பவத்திற்குப் பிறகு மும்பையில் உள்ள முகவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. பிபிசி பைசல் கானிடம் பேசியது. ரஷ்யாவில் மொயினிடமும் பிபிசியும் பேசியது. அவர் பிறகு பேசுகிறேன் என்று கூறி துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.

 

ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 3 லட்சம் வசூல்

ரஷ்யா சென்றால் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும் என இளைஞர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால், அங்கு சென்ற பிறகு பயிற்சி என்ற பெயரில் முதல் மூன்று மாதங்களுக்கு ரூ.40-50 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். பைசல் கான் சம்பளம் பின்னர் அதிகரிக்கும் என்று சொல்லி வந்ததாக அந்த இளைஞர்கள் கூறினர்.

இளைஞர்களிடமிருந்து ரூ. 3 லட்சத்தை பைசல் கான் வசூலித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் தாங்கள் சேமித்த அல்லது கடன் வாங்கிய பணத்தில் அவருக்கு பணம் கொடுத்தனர்.

“எனது தம்பி துபாயில் இருந்தபோது முதல் வருடம் நன்றாக பணம் அனுப்புவார். ஏதாவது ஒரு மாதம் அனுப்பவில்லை என்றால் அடுத்த மாதம் அனுப்புவார். இரண்டாம் வருடத்தில் அனுப்புவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். சம்பாதித்த தொகையை மறைத்து ஏஜெண்டுகளிடம் கொடுத்தார். ரஷ்யா சென்றால் அதிகம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், இப்போது நிலையும் மாறிவிட்டது" என்று தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டையைச் சேர்ந்த சுபியானின் மூத்த சகோதரர் சயீத் சல்மான் பிபிசியிடம் கூறினார்.

“ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ.3 லட்சம் வாங்கியுள்ளது உண்மைதான். அது செயல்பாட்டின் ஒரு பகுதி. நான் ரூ. 50,000 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை ரஷ்யாவில் உள்ள ஏஜென்டுகளுக்குக் கொடுத்து வந்தேன்” என்கிறார் ஏஜென்ட் பைசல் கான்.

ரஷ்யா போகும் வரை ரகசியம் காத்த முகவர்கள்

ரஷ்யா செல்லும் வரை அவர்கள் அங்கு செல்வது தெரியாது என்று சல்மான் கூறினார்..

“சுபியான் ரஷ்யா சென்றபோதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கிறேன் என்று முதலில் கூறி வந்தார். முகவர்கள் ரஷ்யா செல்வது பற்றி சொல்லவில்லை.

ஏனெனில் ரஷ்யா செல்ல ரூ. 20-25 லட்சம் செலவாகும். ஆனால், 3 லட்சத்தை மட்டும் எடுத்து ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் எல்லோரும் எங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என வீட்டில் சொல்ல ஏஜெண்டுகள் விடவில்லை,'' என்றார் சல்மான்.

ஓவைசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசாதுதீன் ஒவைசி என்ன சொல்கிறார்?

கடந்த பிப்ரவரி 21ம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் சிலர் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியை சந்தித்தனர்.

ரஷ்யாவில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்து வரக் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தூதரக அதிகாரிகளிடம் பேசி இளைஞர்களை அழைத்து வருமாறு கூறினார்.

“இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ. 3 லட்சத்தை வசூலித்து ரஷ்யாவுக்கு கொண்டு சென்றனர். தற்போது இவர்களின் இருப்பிடம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். நரேந்திர மோதியும் ஜெய்சங்கரும் ஒன்றிணைந்து அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அசாதுதீன் ஓவைசி கூறினார்.

மும்பையில் உள்ள இரு முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

ரஷ்யாவின் போர்க்களத்தில் இந்திய இளைஞர்கள் சிக்கிய விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை பிரதிநிதி ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிலளித்தார்.

அவர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர ரஷ்ய அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.

"இந்தியர்கள் கவனமாக இருக்குமாறும், இதுபோன்ற மோசடிகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.

மறுபுறம், பிபிசி மின்னஞ்சல் மூலம் ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும் தொடர்பு கொண்டது. அவர்களிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை

காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இம்ரான் ஐதராபாத்தில் உள்ள நம்பல்லி காவல் நிலையத்தில் தனது சகோதரர் வராதது குறித்து புகார் அளித்தார்.

முகவர் பைசல் கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

நம்பள்ளி போலீசார், பைசல் கான் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/ckrd53023plo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும் - சிறிதளவு மனிதநேயத்திற்காக நான் கெஞ்சுகின்றேன -பாப்பரசர் உருக்கமான வேண்டுகோள்

Published By: RAJEEBAN    26 FEB, 2024 | 12:38 PM

image

உக்ரைன் நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிரந்தரமான நியாயமான அமைதியை ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர தீர்வை காணவேண்டும் என பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நேற்றுடன் இரண்டு வருடங்களாகின்ற நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மிகவும் நீண்டதாக மாறிக்கொண்டிருக்கும் யுத்தத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் - காயமடைந்துள்ளனர், அழிவும் துயரமும் கண்ணீரும் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பரிசுத்த பாப்பரசர் இந்த யுத்தம் அந்த பிராந்தியத்தில் மாத்திரம் பேரழிவை ஏற்படுத்தவில்லை, சர்வதேச அளவில் வெறுப்புணர்வையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான மற்றும் நீடித்த அமைதியை தேடும் இராஜதந்திர சூழ்நிலையை உருவாக்குவதற்காக சிறிதளவு மனிதநேயத்திற்காக நான் கெஞ்சுகின்றேன் மன்றாடுகின்றேன் என பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

கொங்கோவில் அதிகரிக்கும் மோதல்கள் குறித்தும் அவர் கவலைவெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/177320

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1984 இல் உதவிய உக்ரைனுக்கு கைமாறு செய்யும் வெல்ஷ் தொழிலாளர்கள்

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷ்யாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

Capture-2-12.jpg

1984 இல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜேர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

அப்போது சோவியத் யூனியன் என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷ்யாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

Capture-4-6.jpg

சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், “சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984 இல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்” என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

https://thinakkural.lk/article/293199

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு

அதிகரிக்கும் பதற்றம்: மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவிப்பு

மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரோன் தாக்குதலில்மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. கருங்கடல் பகுதியில் ரஷியாவின் ரோந்து கப்பல் நிறுத்தப்பட்டு உக்ரைனுக்கு அச்சுறுத்தலாகவிருந்து வந்தது.

இந்நிலையில், அதிபர் புதினின் புதிய ரோந்து கப்பலை உக்ரைன் தாக்கி அழித்து உள்ளது. இதுபற்றி உக்ரைன் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் மற்றொரு கப்பல், நீர்மூழ்கி கப்பலாக மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், உக்ரைனின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷியாவின் ரோந்து கப்பலை தாக்கியது. இதில், ரூ.538 கோடி மதிப்பிலான செர்கெய் கொடோவ் என்ற அந்த கப்பலை, உக்ரைன் கடல்படையின் ஆளில்லா விமானங்களான மகுரா வி5 தாக்கியன. இதில், கப்பலின் விளிம்பு பகுதி, வலது மற்றும் இடது புறங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இனிமையான நாளின் தொடக்கம். வீரர்களே, சிறந்த பணியை செய்திருக்கிறீர்கள் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கருங்கடலில் தங்களது ‘வெற்றிகரமான’ டிரோன் தாக்குதல் மூலம் மற்றொரு ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://thinakkural.lk/article/294567

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமது அஸ்ஃபான்: இந்திய இளைஞர் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி யுக்ரேன் போரில் பலி - முழு பின்னணி

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது அஸ்ஃபானின் மனைவி, தன் குழந்தை மற்றும் கணவரின் படத்துடன்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் வேலை தேடிக் கொண்டிருந்தார், இந்தத் தேடல் அவரை ரஷ்ய ராணுவத்திற்கு அழைத்துச் சென்றது. அவருக்கு வேலையும் கிடைத்தது, ஆனால் அந்த வேலையே அவரது வாழ்க்கையின் முடிவாக அமைந்துவிட்டது.

அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் முகமது அஸ்ஃபானின் மரணத்தை உறுதி செய்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை சமூக ஊடகங்களில், "இந்திய குடிமகன் முகமது அஸ்ஃபானின் துயர மரணம் பற்றி அறிந்தோம். அவரது குடும்பத்தினருடனும் ரஷ்ய நிர்வாகத்துடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்," எனக் கூறியது.

முன்னதாக, இஸ்ரேலில் ஹெஸ்புலா தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இதே தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

 

ரஷ்ய ராணுவத்தில் குறைந்தது 20 இந்திய குடிமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரஷ்யாவில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கைக்குப் பிறகு, ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பிப்ரவரி 29 அன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது, "சுமார் 20 இந்தியர்கள், நாடு திரும்ப உதவி கோரி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்துள்ளனர்," என்று கூறியுள்ளது.

 

அஸ்ஃபான் பற்றிக் கிடைத்த தகவல்கள் என்ன?

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது அஸ்ஃபானின் சகோதரர் முகமது இம்ரான்

ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது அஸ்ஃபான். இவருக்கு அஸ்மா ஷிரீன் என்ற மனைவியும் ஒரு சிறு குழந்தையும் உள்ளனர். அஸ்ஃபானுக்கு வயது 30.

என்டிடிவி சேனல் அஸ்ஃபானின் குடும்பத்தினரிடம் பேசியுள்ளது. அஸ்ஃபான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக என்டிடிவி செய்தி கூறுகிறது.

முகமது அஸ்ஃபானின் சகோதரர் முகமது இம்ரான் பைனான்சியல் டைம்ஸிடம், பாபா விலாக்ஸ் என்ற யூடியூபரின் வீடியோக்களை பார்த்து தனது சகோதரர் இதில் சிக்கியதாகக் கூறினார்.

மாஸ்கோவில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிய வாய்ப்புகள் இருப்பதாகவும், வேலையில் சேர்ந்தால் ஓராண்டில் ரஷ்ய குடியுரிமை கிடைக்கும் என்றும் பாபா விலாக்ஸ் யூடியூபர் கூறியதாக இம்ரான் கூறுகிறார்.

"கடந்த ஆண்டு செப்டம்பரில், ரஷ்யாவில் டெலிவரி பாய் வேலைகள் குறித்த வீடியோ ஒன்று பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. மற்றொரு வீடியோவில், ரஷ்ய ராணுவத்தில் உதவியாளர்களுக்கான வேலைகள் பற்றித் தெரிவிக்கப்பட்டது.

பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் சுற்றித் திரியும் இந்த யூடியூபர், தனது வீடியோக்களில் ரஷ்யாவின் வானிலையைப் புகழ்ந்து பேசி, ரஷ்ய ராணுவத்தில் ரூபாய் 1 லட்சம் மாத சம்பளத்தில் வேலைகள் இருப்பதாகக் கூறுகிறார். மூன்று மாத பயிற்சியும், தங்குமிடம் மற்றும் உணவும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறுகிறார்." முகமது இம்ரானின் கூற்றுப்படி, இதுபோன்ற வீடியோக்களால்தான் அஸ்ஃபான் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.

 

ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்கள்

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முகமது அஸ்ஃபான்

தனது சகோதரனைக் கண்டுபிடிக்க இந்த வாரம் ரஷ்யா செல்ல நினைத்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் முகமது இம்ரான் கூறியுள்ளார்.

"முகமது அஸ்ஃபான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யா சென்றடைந்தார். ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தம் அவருக்குக் கையெழுத்திட வழங்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதத்தில் யுக்ரேன் எல்லைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அஸ்ஃபானுடன் பணிபுரிபவர்கள் ஜனவரி மாதம் தொலைபேசியில் அழைத்து அவருக்கு காலில் குண்டடி பட்டதாகத் தெரிவித்தனர்," என்று இம்ரான் கூறுகிறார்.

அஸ்ஃபானை தவிர, ரஷ்யாவுக்குச் சென்ற பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த சில இளைஞர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு தங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். தவறாக வழிநடத்தப்பட்டு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

புகைப்பட ஏஜென்சியான கெட்டியின் கூற்றுப்படி, கடந்த மாதம் அஸ்ஃபானின் குடும்பத்தினர் அவரது புகைப்படத்துடன் உதவி கோரினர். அஸ்ஃபானை சீக்கிரமாக ரஷ்யாவில் இருந்து மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.

 

ரஷ்ய வேலைக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அஸ்ஃபானை தவிர, ரஷ்யாவுக்கு சென்ற பஞ்சாப், ஹரியாணாவை சேர்ந்த சில இளைஞர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டு தங்கள் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர்.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, துபாயில் அலுவலகம் வைத்திருக்கும் ஒரு முகவர் வேலைக்கு ஈடாக ஒவ்வொரு இளைஞரிடம் இருந்தும் மூன்று லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக முகமது இம்ரான் கூறியுள்ளார்.

ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியிலும் முகமது இம்ரானின் அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள பாபா விலாக்ஸ் யூடியூப் சேனலை பார்த்தோம். இந்த சேனலுக்கு சுமார் மூன்று லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ரஷ்ய வேலை தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ 26 செப்டம்பர் 2023 அன்று பதிவேற்றப்பட்டது.

இந்த சேனல்களில் வேறு பல நாடுகளைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டு, அங்குள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முகமது அஸ்ஃபானின் மரணச் செய்திக்குப் பிறகு இந்த சேனலில் எந்த அப்டேட்டும் இல்லை. சேனலில் கடைசியாக ஜனவரி மாதம் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் ரஷ்யாவை அடைந்த பிறகு முகவரைத் தொடர்புகொண்டு, தனக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படுவதாகப் புகாரளித்துள்ளார். இது வேலையின் ஒரு பகுதி என்று முகவர் அஸ்ஃபானிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர்கள் ரஷ்யா-யுக்ரேன் போர் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என முகமது இம்ரான் கூறுகிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின்படி, அஸ்ஃபான் உயிருடன் இருப்பதாக முகவர்கள் கூறுவதாகவும், ஆனால் அஸ்ஃபான் இறந்துவிட்டதாக தூதரகம் கூறுவதாகவும் முகமது இம்ரான் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

ஒவைசி

ஒவைசி தரப்பினர் வைத்த வேண்டுகோள்

முகமது அஸ்ஃபானின் மறைவுக்கு அசாதுதீன் ஒவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்துள்ளது.

"இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு ஒவைசி ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் இந்திய இளைஞர்கள் எப்படி வலுக்கட்டாயமாக போருக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் கூறினார். முகமது அஸ்ஃபானின் உடலை இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்," என ஏஐஎம்ஐஎம் கட்சி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.

சில இந்தியர்களின் குடும்பங்கள் தன்னைச் சந்தித்ததாகவும், தங்கள் அன்புக்குரியவர்கள் ரஷ்யா- யுக்ரேன் போருக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டதைப் பற்றி அவர்கள் தன்னிடம் கூறியதாகவும், பிப்ரவரி 21 அன்று ஒவைசி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அப்போது ரஷ்ய அரசுடன் பேசி இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வருமாறு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒவைசி வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவில் இருந்து இரண்டு பிரிவுகளாக ரஷ்யாவிற்கு இளைஞர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஒவைசி கூறியிருந்தார்.

 

இரண்டு ஆண்டுகளாக தொடரும் ரஷ்யா- யுக்ரேன் போர்

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்
படக்குறிப்பு,

ரஷ்யா- யுக்ரேன் போரில் ரஷ்ய வீரர்களுடன், இந்திய இளைஞர்ளும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

ரஷ்யா, யுக்ரேன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் வீரர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக பல செய்திகள் கூறின. சமீபத்தில் ரஷ்யா- யுக்ரேன் போரில் ரஷ்ய வீரர்களுடன், இந்திய இளைஞர்ளும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

ரஷ்யாவில் சிக்கியுள்ள நபர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவில் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலைகள் வழங்கப்படும் என்று முகவர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இந்த நெட்வொர்க்கில் உள்ள இரண்டு முகவர்கள் ரஷ்யாவிலும், இருவர் இந்தியாவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நான்கு முகவர்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் ஃபைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்துள்ளார். இந்த ஃபைசல் கான் 'பாபா விலாக்ஸ்' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இந்த முகவர்கள் மொத்தம் 35 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். முதலில் மூன்று பேர் சென்னையில் இருந்து ஷார்ஜாவிற்கு 9 நவம்பர் 2023 அன்று அனுப்பப்பட்டனர்.

ஷார்ஜாவில் இருந்து அவர்கள் நவம்பர் 12 அன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். நவம்பர் 16 அன்று, ஃபைசல் கானின் குழு ஆறு இந்தியர்களையும் பின்னர் ஏழு இந்தியர்களையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. அவர்கள் ராணுவ வீரர்களாக அல்லாமல் உதவியாளர்களாகப் பணியாற்ற வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது.

அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அவர்கள் 24 டிசம்பர் 2023 அன்று ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 

'பாபா விலாக்ஸ்' சேனலின் விளக்கம் என்ன?

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள்

பட மூலாதாரம்,YT/BABA VLOGS

படக்குறிப்பு,

'பாபா விலாக்ஸ்' ஃபைசல் கான்

ஃபைசல் கான் பிபிசியிடம் பேசினார். "இது பொது வேலைகள் அல்ல, ராணுவத்தில் உதவியாளர் பதவிக்கான வேலைகள் என இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

"இது ராணுவ உதவியாளர் பணி என்று வேலை தேடுபவர்களிடம் நான் கூறியிருந்தேன். எனது யூடியூப் சேனலில் முன்பு வெளியிட்ட வீடியோவை நீங்கள் பார்க்கலாம். இது ராணுவ உதவியாளர் பணி என்று ரஷ்ய அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தோம். நான் இந்தத் துறையில் ஏழு ஆண்டுகளாக இருக்கிறேன். இதுவரை நான் சுமார் இரண்டாயிரம் பேருக்கு வெவ்வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்," என்கிறார் பைசல் கான்.

வேலைக்காக ரஷ்யா சென்ற சிலரின் பெயர்களை பிபிசி கண்டுபிடித்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான், தெலங்கானாவில் உள்ள நாராயண்பேட்டையைச் சேர்ந்த சுஃபியான், உத்தர பிரதேசத்தை சேர்ந்த அர்பன் அகமது, காஷ்மீரை சேர்ந்த ஜாகூர் அகமது, குஜராத்தை சேர்ந்த ஹமீல் மற்றும் கர்நாடகாவின் குல்பர்காவை சேர்ந்த சையத் ஹுசைன், சமீர் அகமது மற்றும் அப்துல் நயீம் ஆகியோர் ரஷ்யா சென்றுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/c72ex2y47p8o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு 10 ஆயிரம் ட்ரோன்களை வழங்கும் இங்கிலாந்து

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.

இந் நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

1-6-300x200.jpg

ஏற்கனவே ட்ரோன்களுக்காக 200 மில்லியன் பவுண் ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண் மேலதிகமாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

10 ஆயிரம் ட்ரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் ட்ரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் படைகள் கருங்கடலில் ரஷ்யாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் ட்ரோன் மூலம் ரஷ்யாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/294960

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி இது தான் யுத்தம். இருந்த இடத்தில் இருந்தபடி....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15 பேருடன் பறந்த ரஷ்ய இராணுவ விமானம் தீப்பற்றி வீழ்ந்தது

Published By: SETHU    12 MAR, 2024 | 04:40 PM

image

ரஷ்ய இராணுவ சரக்கு விமானமொன்று இன்று தீப்பற்றி வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தில் 15 பேர் இருந்தனர் என  ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஐ.எல்.-76 ரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஐவானோவா பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/178544

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்

10-2.jpg

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத போரைத்தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார்.

அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின், அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராவே உள்ளோம். என்றார்

இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://thinakkural.lk/article/295606

Link to comment
Share on other sites

Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, இணையவன் said:

தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.

புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும்
மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்னா சாந்தி அடையட்டும்..
    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.