Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை : 6 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
08 AUG, 2023 | 09:27 AM
image
 
யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார். 

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். 

அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், 06 பேரை கைதுசெய்தனர்.

குறித்த 6 பேரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைக மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/161841

  • Replies 102
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ தெரியவில்லை இப்ப வர வர குமர்ப் பெட்டைகளுக்கு வயசு போன ஆட்களைத் தான் பிடிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பகிடி said:

என்னவோ தெரியவில்லை இப்ப வர வர குமர்ப் பெட்டைகளுக்கு வயசு போன ஆட்களைத் தான் பிடிக்கிறது 

சத்தமா சொல்லாதீங்க லைன் கட்ட போறாங்கள் இங்க களத்தில

உசிரு முக்கியம் குமாரு  வர வர செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது அங்கால இன்னொரு கேசும் 54 மனைவியின் தங்கையுடனும் ஓட்டமாம் அது வேற கேஸ் யாழிலதான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

என்னவோ தெரியவில்லை இப்ப வர வர குமர்ப் பெட்டைகளுக்கு வயசு போன ஆட்களைத் தான் பிடிக்கிறது 

உது  பொய் பகிடி......நீங்கள் பகிடிக்கு சொல்லுறீங்கள்.....சே.......நானெல்லாம் சீனியர்......ஓட வேண்டாம் , நடந்து போறதுக்குக் கூட ஒரு மண்ணும் கிடைக்குதில்லை......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டே தாக்கப்பட்டுள்ளார்.

19 வயசு பெண்ணும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

கொடுமை

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சத்தமா சொல்லாதீங்க லைன் கட்ட போறாங்கள் இங்க களத்தில

உசிரு முக்கியம் குமாரு  வர வர செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது அங்கால இன்னொரு கேசும் 54 மனைவியின் தங்கையுடனும் ஓட்டமாம் அது வேற கேஸ் யாழிலதான் 

Salt and pepper லுக்க்கு இருக்கிற மரியாதை கட்டுமஸ்தா இருக்கிற வாலிபனுக்கு கிடையாது 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகிடி said:

என்னவோ தெரியவில்லை இப்ப வர வர குமர்ப் பெட்டைகளுக்கு வயசு போன ஆட்களைத் தான் பிடிக்கிறது 

அப்படி என்றால் குமர் பெட்டைகள் விரும்பும் அந்த வயசு போன ஆட்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ய வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

Salt and pepper லுக்க்கு இருக்கிற மரியாதை கட்டுமஸ்தா இருக்கிற வாலிபனுக்கு கிடையாது 

அடிச்சு கொலையே பண்ணி இருக்கானுகள் என்பதை மனதில் வைக்கவும் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் கொலை சம்பவம் : மேலும் இருவர் கைது !

crime.jpg

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் ஆண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த 55 வயதுடைய நபரும் 19 வயதுடைய யுவதி ஒருவரும் தொடர்பிலிருந்த நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த இருவரும் மீண்டும் சுன்னாகம் பகுதியிக்கு திரும்பிய நிலையில் யுவதியின் உறவினர்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் குறித்த ஆண் உயிரிழந்ததுடன் குறித்த யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த யுவதி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய வழக்கின் சான்று பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் யுவதியின் தந்தையும் சகோதரரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/267481

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

உது  பொய் பகிடி......நீங்கள் பகிடிக்கு சொல்லுறீங்கள்.....சே.......நானெல்லாம் சீனியர்......ஓட வேண்டாம் , நடந்து போறதுக்குக் கூட ஒரு மண்ணும் கிடைக்குதில்லை......!  😴

என்ன அண்ணை பாரிஸ் மாநகரிலா ??   உங்கள் பிரதமரை பாருங்கள்  ....மனிதன் இப்பவும் 20 வயது பையன் மாதிரி    வீட்டுக்காரிக்கு  பயப்படமால்.   ..தெரியாமல்   இரகசியமாக முயற்சி செய்யவும்   மண் இல்லை வைரம் கிடைக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அப்படி என்றால் குமர் பெட்டைகள் விரும்பும் அந்த வயசு போன ஆட்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ய வேண்டுமா?

ஊரில் இருத்தல் நாங்களும் இதை தான்  செய்வோம்.  இல்லையா??  சட்டம் பற்றிய அறிவு இல்லை...மற்றும் சட்டம் குற்றவாளிகளை  தண்டிப்பதுமில்லை ..  மேலும் பெண்கள்  50. அல்லது 60 வயது வந்தும்   திருமணம் செய்யாமல் இருக்க சமூகம் அனுமதிக்கும்     ஆனால் குமாரி  கிழவனை  திருமணம் செய்ய விடமாட்டார்கள்   ..கலாசாரம்  என்பார்கள்    என்ன கலாசாரமே தெரியவில்லை.....சீ  சுத்த மோசமான சமூகம்   

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2023 at 07:16, ஏராளன் said:

அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். 

அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

யாழ்பாணத்தில் இந்திய பாணியிலான கொடுரமானவர்கள் இருக்கின்றனர் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஊரில் இருத்தல் நாங்களும் இதை தான்  செய்வோம்.  இல்லையா??  சட்டம் பற்றிய அறிவு இல்லை...மற்றும் சட்டம் குற்றவாளிகளை  தண்டிப்பதுமில்லை ..  மேலும் பெண்கள்  50. அல்லது 60 வயது வந்தும்   திருமணம் செய்யாமல் இருக்க சமூகம் அனுமதிக்கும்     ஆனால் குமாரி  கிழவனை  திருமணம் செய்ய விடமாட்டார்கள்   ..கலாசாரம்  என்பார்கள்    என்ன கலாசாரமே தெரியவில்லை.....சீ  சுத்த மோசமான சமூகம்   

நிச்சயமாக இல்லை. சட்டம் குற்றவாளிகளை தண்டிப்பது இல்லை என்பது தவறானது.  

பலருக்கு உள்ளே சென்ற அனுபவம் இல்லை. இதனால் பொலிஸ் சிக்கலில் மாட்டுவதால் வரும் மன உளைச்சல்கள், ஆபத்துக்கள் தெரிவது இல்லை. குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளே நின்று தவிக்கும் நபர்கள் படும்பாட்டை அங்கு பார்த்தேன்.

உங்களுக்கு இலங்கை பொலிஸ் அனுபவம் இல்லை என நினைக்கின்றேன். ஒரு சிலர் செல்வாக்கை (பதவி/அரசியல்) பாவித்து தப்பலாம். ஆனால், இப்படியான கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பொலிஸ் கோழிகளை அமுக்கி பிடிப்பது போல் பிடிப்பார்கள்.

எனது நண்பர் ஒருவர் இலங்கையில் குற்றவியல் மருத்துவ நிபுணர். கொலை, பாலியல் வன்புணர்வு உட்பட பொலிஸ் கேஸ்களுக்கு மருத்துவ/குற்றவியல் அறிக்கை வழங்குவது பணி. பல தகவல்கள் அறிந்தேன்.

இலங்கை நீங்கள் நினைப்பது போல் இல்லை. இப்படியான கொலை கேஸ்களில் தப்புவது கடினம். கைது செய்யப்பட்டவர்கள் வயது விபரம் செய்தியில் இல்லை தகப்பன், சகோதரம் தவிர.  இறந்தவர், அவர் உறவான பாதிக்கப்பட்ட பெண், அவர் தகப்பன், சகோதரம், மிகுதி ஆறுபேர் என பத்து பேரின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நிச்சயமாக இல்லை. சட்டம் குற்றவாளிகளை தண்டிப்பது இல்லை என்பது தவறானது.  

எனக்கு தெரிய பல குற்றவாளிகள்  சுதந்திரமாக திரிகிறார்கள்  ..இந்த மனிதன் அடித்து கொல்லப்பட்டதுக்கு முக்கிய காரணம்  சட்டம் எங்களை தண்டிக்கும். என்ற பயமின்மையாகும்.  இலங்கையில் குற்றச்செயல்கள். அதிகரித்து செல்வதற்கு  முக்கிய காரணம். குற்றவாளிகள்   இன மத  வர்க்க. ஏழை பணக்காரர்  என்ற வித்தியாசம் அற்ற முறையில்  தண்டனை வழங்கப்படுவதில்லை   நீங்கள் சொன்னது 60 % சரியாகலம்.   100க்கு 100  இல்லை   அப்படி 100 % குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டல்.   இலங்கையில் பிரச்சனையில்லையே    

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

சமூக பொறுப்பில் எல்லோருக்கும் பங்கு உண்டு. மக்கள் அமைப்பே நிருவாகம் அல்லவா? 

இங்கு குறிப்பிட்ட அவல செய்தி வீரகேசரி தளத்தில் எப்படி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது பாருங்கள். 

“யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை“

93 வது அகவையில் வீரகேசரி, நூற்றாண்டை நோக்கிய பயணம் என விளம்பரம் செய்கின்றார்கள். 93 வருடங்கள் முதிர்ச்சி வீரகேசரி குறிப்பிட்ட செய்தியை பிரசுரம் செய்துள்ள விதத்தில் தெரிகின்றதா? 

ஒரு முன்னணி மூத்த செய்தி இதழே சமூக பொறுப்பை தட்டி கழிக்கின்றது.

கவர்ச்சி, விளம்பரம், பணம்: இதை குறிக்கோளாக கொண்டு இயங்கும் சமூகம் உருப்படுமா?

ஊடகங்களே சமூகத்தின் சாபக்கேடு ஆகும் போது?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வெளிநாட்டில் இருந்து எழுதுகிறீர்கள். இங்கே உள்ள கலாச்சாரத்தின் படி இது குற்றமாகக் கருதப்படாது.சட்டப்படி இருவரும் விரும்பினால் லிவ்ங் ரூ கெதர்  என்று வாழலாம் கலியாணமும் செய்யலாம் பிடிக்காட்டி பிரிந்தும் போகலாம். அங்கேயும் சட்டப்படி  அது சரி. ஆனால் எங்கள் கலாச்சாரத்தின்படி தவறு.அனால் அதுக்காக கொலை வெறித்தாக்குதல் நடத்தி இப்பொழுது கொலைக்குற்றத்தில் உள்ளே போகப்போகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இனிமேல்தால் வாழ்க்கையில் பெரும் சிக்கல். அந்தப் பெண் வயதானவரோடு ஓடுவதற்கு என்ன காரணமோ நாம் அறியோம். அந்த மனிதருக்கு மச்சம் இருந்துதோ?கண்டம் இருந்துதோ என்பது இப்பொழுதுதான் தெரிகிறது.
***

Edited by நியானி
பண்பற்ற சொல்லாடல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகம் இப்படியே தொடர்ந்து 50 ஆண்டுகள் பின்னோக்கிய வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தால் உலகம் போகிற போக்கில் அது சரி வராது. ஒரு காலத்தில் காளையை அடக்குறவன் தான் மாப்பிள்ளை, பின்னர் படித்தவன் அழகானவன், தன் சொந்த சாதிக்குரியவன் .இன்று காசு உள்ளவன் வெளிநாட்டு குடி குடியுரிமை உள்ளவன். இதுதான் இன்று பெண்கள் தங்கள் மாப்பிள்ளையை தெரிவு செய்வதற்கு முக்கிய காரணிகள். ஆக இனியும் மொட்டையான ஆம்பளை, தொப்பையான ஆம்பிளை வடிவான குமரப்பெட்டயை கல்யாணம் கட்டினால் அதை ஏற்கும் மனோநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் பலர் அந்த நிலைமைக்கு வந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 10:02, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்தில் இந்திய பாணியிலான கொடுரமானவர்கள் இருக்கின்றனர் ☹️

கொலை செய்யப்பட்டவர் பெண்ணின் தந்தையின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனவிடத்தில் காதல் மலர்ந்திருக்கிறது. கொலைசெய்யப்பட்டவருக்கு முன்னமேயே குடும்பம் இருக்கு பேரப்பிள்ளைகளும் இருப்பதாகக் கேள்வி இருவரும் வீட்டை விட்டு போனபின்பு பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு வருப்படியும் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம் என உத்தரவாதமும் கொடுக்கப்பட்டதை நம்பி அவர்கள் பெண்ணின் வீட்டை நோக்கி ஆட்டோவில் வந்திருக்கிறார்கள் சுண்ணாகத்திலேயே ஆட்டோவை மறித்து இருவரையும் கைப்பற்றி கொலையுண்டவரைப் பிறிதாக வேறுபடுத்தி வேறி இடத்துக்குக் கொண்டு போய் அவரது மர்ம உறுப்பில் அடித்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள் அதன்பின்பு பெண்ணின் உறவுமுறையான பெண் ஒருவர் அவரது மர்ம உறுப்பில் கொதிக்கும் சுடுதண்ணியை ஊத்தியிருக்கிறார், அப்போது கொலையுண்டவர் என்னை கொல்லுங்கோ ஆனால் இப்படிச் சித்திரவதை செய்யவேண்டாம் என அலறிய சத்தம் அந்தப் பிரதேசம் எங்கும் கேட்டிருக்கு இது நடக்கும்போது அதை வேடிக்கை பார்க்க எராளமானவர்கள் கூடிவிட்டனர் ஒருசிலர் கைத்தொலைபேசியில் வீடியோவும் எடுத்திருக்கிறார்கள் ஆனால் எவரும் தடுக்க முயலவில்லை.

அடுத்த பக்கத்தில் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் இழுத்துக்கொண்டுபோ அவரது மர்ம ஸ்தானத்திலும் மிகக் கொடுமையான சித்திரவை செய்திருக்கிறார்கள் இதின் முதன்மையாக அவரது தாயாரே இருந்திருக்கிறார். தவிர அவரது மார்பகங்கள் சிதைகின்ற அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கு அதைப்பார்த்த அயலவர்கள்தான் பொலீசுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

பெண்ணின் வாக்குமூலத்தின்படி "நான் அவருடன் விரும்பியே வீட்டைவிட்டு வெளியேறினேன் எனக்கு பத்தொன்பது வயதாகி விட்டது எனது வாழ்க்கைய தீர்மானிக்கும் உரிமை எனக்கு இருக்குது எனச் சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

விபரமான தகவல்களுக்கு நன்றி அண்ணா.
யாழ்பாணத்தில் இந்தியாவை மிஞ்சிவிட்ட மோசமான  கொடுரமானவர்கள் ஆண் பெண்கள் இருக்கின்றனர் என்பதை விளங்கி கொண்டேன்☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Elugnajiru said:

கொலை செய்யப்பட்டவர் தனியாக பிரிந்து வாழ்ந்தார், முன்னைய மனைவிக்கு மற்றைய உறவு பற்றி தெரியும், அத்துடன் கொலை செய்யப்பட்டவரிடம் காசை உருவிவிட்டே இப்படியான நிலைக்குள் தள்ளிவிட்டார்கள் என கேள்விப்பட்டேன். உண்மை, பொய் தெரியாது. 

நீங்கள் விபரித்துள்ள விபரங்களும் உண்மை, பொய் தெரியாது. 

பொலிஸ் விசாரணைகளில் அவர்களுக்கு சகல தகவல்களும் கிடைக்கும். ஆனால், அந்த விபரங்கள் வெளியில் வருமோ தெரியாது. 

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

விபரமான தகவல்களுக்கு நன்றி அண்ணா.
யாழ்பாணத்தில் இந்தியாவை மிஞ்சிவிட்ட மோசமான  கொடுரமானவர்கள் ஆண் பெண்கள் இருக்கின்றனர் என்பதை விளங்கி கொண்டேன்☹️

குடி, போதை, பொய், ஏமாற்று, வாள்வெட்டு, கொலை நிறைந்த சமூகம் நம்முடையது.

ஆனால் என்னஅவர் மேலே கூறியவை உண்மை என்றால் சித்திரவதையில் இராணுவத்தை மிஞ்சி விட்டார்கள் போலும்.  

யாரோ வீடியோ எடுத்தார்களாம். அதை சனல்4 இற்கு அனுப்பி வைத்தால் நமது மரியாதை பெருகும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 16:32, புலவர் said:

 எங்கள் கலாச்சாரத்தின்படி தவறு.

உங்கள் கலாச்சாரம் எது? கொஞ்சம் விபரியுங்கள் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்கள் கலாச்சாரம் எது? கொஞ்சம் விபரியுங்கள் பார்க்கலாம். 

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் அங்கிள்மார் ஊருக்குப் போக வாங்கிய ரிக்கற்ரை எல்லாம் கான்சல் பண்ணிப்போட்டு வீட்டோட ஒதுங்கிட்டினம் என இப்போ புதிதாகக் கதை உலாவுது-

அடிக்கிற வெயிலில கொதிநீரை அந்த இடத்தில ஊத்துறத நினைச்சால் வீட்டில பொண்டாட்டியோட டாச்சர் பறுவாயில்லை எனச்சொல்லினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Elugnajiru said:

கொலை செய்யப்பட்டவர் பெண்ணின் தந்தையின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோனவிடத்தில் காதல் மலர்ந்திருக்கிறது.

சில்லையூர் செல்வராசன் என்று ஒரு நாடக நடிகர் இருந்தார். அவருக்கு குடும்பம் இருந்தது. அவரது நண்பருடன் அவரது வீட்டில் தனது நாடக வசனங்களை சொல்லி, அவரது கருத்துக்களை கேட்டு மெருகேற்றுவார்.

நாளடைவில், நண்பர் மகள் கமலா, ஆர்வத்துடன் இதில் பங்கு எடுக்க, கடைசியில் அவர்களுக்குள் காதல் மலர்ந்த்து. தள்ளிக் கொண்டு போய் கலியாணத்தில் முடிந்து, ஒரு மகனையும் பெற்றுக் கொண்டனர். நாடகத்துறையில் இணைந்து பெரும் சேவை செய்தனர்.

ஆக, இந்த விடயங்களில் பொருளாதார பலம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு இருக்காது போலவே தெரிகிறது. எழுதுமட்டுவாழ் என்ற ஊரின் பெயரே இப்படி ஒரு கதையினை சொல்லி நிக்கிறது.

இந்த 54 வயது ஆண், பெரும் பொருள் படைத்தவராக இருந்திருக்க மாட்டார்.

இணையத்தில் வந்த ஒரு ஜோக். ஒரு டிவி நிகழ்வில், ஒரு பிரபலத்திடம் ஜோக் சொல்லுமாறு கேட்க அவர் சொன்னது. அந்த ஜோக், நிதர்சனத்தினை சொல்கிறது.

ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு இரண்டு மாதமாக பீரியட் வரவில்லை என்று தாயார் பதறி, டெஸ்ட் செய்கிறார்கள். கர்ப்பம் என்று தெரிய வர, தாயும், தந்தையும் பெண்ணை, யார், எப்படி என்று கேள்வியால் துளைக்கிறார்கள். பதில் சொல்லாமல் பெண் ஒரு போன் செய்கிறார்.

20  நிமிடத்தில், பெர்ராரி கார் ஒன்று வந்து நிக்கிறது. இறங்கி வருகிறார், வயதான, டிப் டாப் உடை அணிந்த ஒரு நபர். 

தன்னை அறிமுகப்படுத்தி, நான் தான் குழந்தைக்கு பொறுப்பு. பிறக்கப்போவது பெண் குழந்தையானால், $10மில்லியன் உடனே வங்கியில் போடுவேன். ஒரு வீடும் எழுதி விடுவேன்.

ஆண் ஆயின், எனது சொத்தின் பாதியையே எழுதி வைக்கிறேன். எனக்கு பிறகு, என் வியாபாரமும் அவனுக்கே.

மேலும், கருச்சிதைவு நடந்தால்.....

அவர் முடிக்க முன்னர், வேகமாக எழுந்த, தாயும், தந்தையும், அதனால் என்ன, 'மீண்டும் try பண்ண வேண்டியது தானே' என்றார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Nathamuni said:

சில்லையூர் செல்வராசன் என்று ஒரு நாடக நடிகர் இருந்தார். அவருக்கு குடும்பம் இருந்தது. அவரது நண்பருடன் தனது நாடக வசனங்களை சொல்லி, அவரது கருத்துக்களை கேட்டு மெருகேற்றுவார்.

நாளடைவில், அவரது மகள் கமலா, ஆர்வத்துடன் இதில் பங்கு எடுக்க, கடைசியில் அவர்களுக்குள் காதல் மலர்ந்த்து. தள்ளிக் கொண்டு பொய் கலியாணத்தில் முடிந்து, ஒரு மகனையும் பெற்றுக் கொண்டனர். நாடகத்துறையில் இணைந்து பெரும் சேவை செய்தனர்.

ஆக, இந்த விடயங்களில் பொருளாதார பலம் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு இருக்காது போலவே தெரிகிறது. எழுதுமட்டுவாழ் என்ற ஊரின் பெயரே இப்படி ஒரு கதையினை சொல்லி நிக்கிறது.

இந்த 54 வயது ஆண், பெரும் பொருள் படைத்தவராக இருந்திருக்க மாட்டார்.

இணையத்தில் வந்த ஒரு ஜோக். ஒரு டிவி நிகழ்வில், ஒரு பிரபலத்திடம் ஜோக் சொல்லுமாறு கேட்க அவர் சொன்னது. அந்த ஜோக், நிதர்சனத்தினை சொல்கிறது.

ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு இரண்டு மாதமாக பீரியட் வரவில்லை என்று தாயார் பதறி, டெஸ்ட் செய்கிறார்கள். கர்ப்பம் என்று தெரிய வர, தாயும், தந்தையும் பெண்ணை, யார், எப்படி என்று கேள்வியால் துளைக்கிறார்கள். பதில் சொல்லாமல் பெண் ஒரு போன் செய்கிறார்.

20  நிமிடத்தில், பெர்ராரி கார் ஒன்று வந்து நிக்கிறது. இறங்கி வருகிறார், வயதான, டிப் டாப் உடை அணிந்த ஒரு நபர். 

தன்னை அறிமுகப்படுத்தி, நான் தான் குழந்தைக்கு பொறுப்பு. பிறக்கப்போவது பெண் குழந்தையானால், $10மில்லியன் உடனே வங்கியில் போடுவேன். ஒரு வீடும் எழுதி விடுவேன்.

ஆண் ஆயின், எனது சொத்தின் பாதியையே எழுதி வைக்கிறேன். எனக்கு பிறகு, என் வியாபாரமும் அவனுக்கே.

மேலும், கருச்சிதைவு நடந்தால்.....

அவர் முடிக்க முன்னர், வேகமாக எழுந்த, தாயும், தந்தையும், அதனால் என்ன, 'மீண்டும் try பண்ண வேண்டியது தானே' என்றார்கள்.

உண்மைதான்.
இந்த உலகில் பணபலமும்,அரசியல் பலமும் பக்க பலமுமே சகலதையும் தீர்மானிக்கின்றது.நீதி நேர்மை நியாயங்கள் எல்லாம் கால் தூசுக்கு கூட கடைபிடிக்கப்படுவதில்லை.

சாதி வேற்றுமை கூட பணபலம் இருந்தால் மரத்துப்போய் விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.