Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் - உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 AUG, 2023 | 07:46 AM
image
 

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது, எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனது பாதுகாப்பு நலன்களில் தாக்கம் செலுத்தும் எந்த விடயத்தையும் உன்னிப்பாக அவதானித்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றது என்பதை  வலியுறுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/162177

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வந்த சீன போர்க்கப்பல் தொடர்பில் இந்தியா அவதானம்

news-04-4.jpg

சீன மக்கள் குடியரசின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளமை தொடர்பில் இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

சீன இராணுவத்திற்கு சொந்தமான HAI YANG 24 HAO எனும் போர்க்கப்பல் நேற்று முன்தினம் (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் இன்று நாடு திரும்பவுள்ள நிலையில், கப்பலின் வருகை குறித்து இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதிக்கும் எந்தவொரு வளர்ச்சியையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வௌிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அரிந்தம் பாக்சி, நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும்  இலங்கைக்கு சீன கப்பலொன்று வருகை தந்துள்ளமை குறித்து ஊடகங்கள் வழியாக தாம் அறிந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதமும் சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/268082

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அரிந்தம் பாக்சி, நாட்டின் பாதுகாப்பு நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும்  இலங்கைக்கு சீன கப்பலொன்று வருகை தந்துள்ளமை குறித்து ஊடகங்கள் வழியாக தாம் அறிந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

பிறகு... மீண்டும் மீண்டும் அணில்களை ஏறவிடுவோம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

கொழும்பு வந்த சீன போர்க்கப்பல் தொடர்பில் இந்தியா அவதானம்

ஓமோம் உந்த அவதானமெல்லாம் வடக்கு கிழக்கிலை நடக்கிற கூத்துக்களை பார்க்க நல்லாவே தெரியுது.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது? கடந்த முறை சீனாவின் கண்காணிப்பு கப்பல் வந்த போது இதுதான் கடைசி என்றும் இனிமேல் ராணுவ கப்பல் வராது என்றும் இலங்கை இந்தியா கூறியது ஞாபகம் இருக்கிறது. அப்படி என்றால் இது எப்படி வந்தது? இலங்கை எப்போதும் இந்தியாவை ஒரு மடடத்திட்க்குள் வைத்திருக்கவே விரும்புகின்றது. இதன் மூலம் மேலு பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முயட்சிக்கிறது. என்னதான் இலங்கைமுயட்சித்தாலும் சீனாவை இலங்கை ஒருபோது தூரப்படுத்தாது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

கடந்த ஒகஸ்ட் மாதமும் சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் இப்படியான வாசகங்களை தேனீர் கடைகளில் பார்தத ஞாபகம் வருகிறது

IMG-4345.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு துறைமுகத்துக்கு சீன யுத்தக் கப்பலின் வருகை - இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

Published By: RAJEEBAN

11 AUG, 2023 | 01:52 PM
image
 

இந்தியா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சீனாவின் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

சீன இராணுவத்தின் ஹய் யங் 24ஹாவோ என்ற போர்க்கப்பல் நேற்று கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

129 மீற்றர் நீளமான கப்பலில் 138 பேர் உள்ளனர் கப்பலின் தளபதி ஜின் ஜின் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கவேண்டும் என சீன அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர் எனினும் இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக இலங்கைஅனுமதி வழங்க மறுத்தது.

இந்து சமுத்திரத்தின் முக்கியமான அமைவிடத்தில் உள்ள இலங்கை தொடர்பான மூலோபாய நலன்களுக்கான புவிசார் அரசியல் போட்டியில் இந்தியாவும் சீனாவும் ஈடுபட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கு  சீன கப்பல் வருவது குறித்த விடயத்தை  இலங்கை இந்தியாவிடம் தெரிவித்தது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல்கள் இலங்கை  துறைமுகத்திற்கு வருவதை இந்தியா குறிப்பாக எதிர்க்கின்றது, ஏனைய வகையிலான கப்பல்கள் துறைமுகத்திற்கு வருவது இந்தியாவிற்கு பிரச்சினையில்லை என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்தியா கடும் ஆட்சேபனையை எதிர்ப்பை வெளியிட்டது எனினும் இந்தியாவின் ஆட்சேபனையை மீறி  இலங்கை சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது - சீனா யுவான் வாங் ஐந்து கப்பலை ஆராய்ச்சி கப்பல் என குறிப்பிட்டிருந்தது.

எனினும் குறிப்பிட்ட கப்பல் ரொக்கட்கள் ஏவுகணைகள் போன்றவை செலுத்தப்படுவதை கண்காணிப்பதற்கான இலத்திரனியல் பொறிமுறைகளை கொண்டிருந்தது என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தனது துறைமுகங்களில்  சீன கப்பல்களை அனுமதிக்க கூடாது என அமெரிக்காவும்  இந்தியாவும் தொடர் அழுத்தங்களை கொடுத்துவருகின்றன.

இலங்கை வல்லரசு போட்டியில் சிக்காமல்  நடுநிலை ஆசிய வெளிவிவகார கொள்கையை பின்பற்றுகின்றது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாய்வான் மோதல் இந்துசமுத்திரத்தில் இடம்பெறக்கூடாது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

daily mirror

https://www.virakesari.lk/article/162105

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஆட்சியில் இருப்பதால் மேட்குலக நாடுகளும் இந்தியாவும் ஓரளவுக்கு வளைந்து கொடுப்பார். ராஜபக்ஸ்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவுக்கு ஆப்பு இருக்குது. சீன ஆதரவு , சீன முதலீட்டு ஆதரவாளர்கள் எல்லோரும் ராஜபக்சேக்களின் கூடடணியில்தான் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அவதானிச்சு......என்ன செய்கிறதா உத்தேசம்? இவர்களுக்கு கடுப்பேத்தவும், அதைக்காட்டி உதவிகளை பெறவும், இந்தியா கொடுக்கும் அழுத்தங்களை குறைக்கவும் வேண்டுமென்றே இலங்கை சீனக்கப்பலை வரவழைத்திருக்கும். ஒவ்வொரு தடவையும் சீனக்கப்பல் வருகுது, போகுது. இவர்கள் உன்னிப்பாக தூக்கமில்லாமல் அவர்களின் வழியை விழி வைத்து அவதானிச்சுக்கொண்டு இருக்க வேண்டியான்.

15 hours ago, ஏராளன் said:

சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல்கள் இலங்கை  துறைமுகத்திற்கு வருவதை இந்தியா குறிப்பாக எதிர்க்கின்றது, ஏனைய வகையிலான கப்பல்கள் துறைமுகத்திற்கு வருவது இந்தியாவிற்கு பிரச்சினையில்லை

 

15 hours ago, ஏராளன் said:

கடந்த வருடம் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்தியா கடும் ஆட்சேபனையை எதிர்ப்பை வெளியிட்டது எனினும் இந்தியாவின் ஆட்சேபனையை மீறி  இலங்கை சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது - சீனா யுவான் வாங் ஐந்து கப்பலை ஆராய்ச்சி கப்பல் என குறிப்பிட்டிருந்தது.

எனினும் குறிப்பிட்ட கப்பல் ரொக்கட்கள் ஏவுகணைகள் போன்றவை செலுத்தப்படுவதை கண்காணிப்பதற்கான இலத்திரனியல் பொறிமுறைகளை கொண்டிருந்தது என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு. இந்தியா அவர்களை வாய் பாக்க வேண்டிய கட்டாய நிலையில். உடனடியாக தமிழ்கட்சிகளை கூட்டி இலங்கைக்கு பயம் காட்டலாம் வேண்டுமென்றால், இலங்கை அதற்கு பயப்படுமா என்பதே கேள்வி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு 25ம்திகதி வருகின்றது சீன ஆராய்ச்சி கப்பல் - கடற்படை தகவல்

Published By: RAJEEBAN

17 AUG, 2023 | 10:11 AM
image
 

இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களில் தரித்து நிற்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் சியான் 6 ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது.

ஒக்டோபர் 25ம் திகதி சீன கப்பல் இலங்கையை வந்தடையும் என்பதை இலங்கை கடற்படை நேற்று உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்ட கப்பல் 17 நாட்களுக்கு இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

இலங்கையின் நாரா அமைப்புடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்த கப்பல் இலங்கை வருகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதே வேளை ருகுணு பல்கலைக் கழகத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்கு வருகின்றது என நாரா தெரிவித்துள்ளது.

தனது ஆராய்ச்சிகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக் கொள்வதற்காக அந்த கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தவுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/162541

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஷி யான் - 6 கப்பலுக்கு அனுமதி : பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

19 AUG, 2023 | 04:58 PM
image
 

(ஆர்.ராம்)

சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட சில இராஜதந்திர தரப்புக்கள் தமது கரிசனைகளை வெளியிட்டிருந்தன. 

இந்நிலையில், குறித்த கப்பலுக்கான அனுமதி தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுவதாக கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தன. 

இந்த நிலையில், குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அக்கப்பலுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அனுமதியின் பிரகாரம், ‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவுள்ளதோடு 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. 

குறித்த ஆய்வுப் பணிகளில் தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனம் (நாரா) இணைந்து பணியாற்றவுள்ளதோடு, ருகுணு பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக ஆராய்ச்சிக்கான கடல் நீர் மாதிரிகளை பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் திகதி சீன கடற்படைக்குச் சொந்தமான HAI YANG 24 HAO என்ற 129 மீற்றர் நீளம் கொண்ட கப்பல், 138 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்து மூன்று நாட்கள் தங்கியிருந்து சென்றிருந்தது.

ஏற்கனவே, சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் - 5 அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசித்துச் சென்றமை தொடர்பில், இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் தனது கவலைகளையும் கரிசனைகளையும் வெளியிட்டிருந்தது. 

அச்சமயத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயதான் அக்கப்பலுக்கான அனுமதியை அளித்தார் என்றும் எதிர்காலத்தில் அவ்விதமான நிகழ்வுகள் மீண்டும் நிகழாது என்றும் அதற்காக உரிய கொள்கை உருவாக்கப்படும் என்றும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/162719

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் தனது கவலைகளையும் கரிசனைகளையும் வெளியிட்டிருந்தது. 

இதைவிட என்ன செய்ய முடியும் இந்தியாவால்? வேண்டுமென்றால்; முடிந்தளவு இலங்கைக்கும் சீனாவுக்கும்இடையில் சிண்டு முடிய முயற்சிக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கப்பல் விவகாரம் - தர்மசங்கடமான நிலையில் வெளிவிவகார அமைச்சு

Published By: RAJEEBAN

21 AUG, 2023 | 12:14 PM
image
 

சீனாவிலிருந்து இலங்கைக்கு ஒக்டோபர்மாதம் ஆராய்ச்சிக்காக வரவுள்ள சியான் 6 ஆராய்ச்சிக்கப்பலிற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தர்மசங்கடமான நிலையில் உள்ளது.

சீனாவின் புவிசார் அரசியல் போட்டி நாடான இந்தியா இலங்கை கடலில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்டுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது.

சீன கப்பல் நாராவுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன அதிகாரிகள் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர், ஆனால் வெளிவிவகார அமைச்சு இது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.

இரண்டு நாடுகளிற்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.

கூட்டு ஆராய்ச்சியை முன்னெடுப்பது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நாரா சீன கப்பலை இந்தியாவிற்குள் அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்திவருகின்றது.

நாங்கள் தனியாக கடல் ஆராய்ச்சியில் ஈடுபடமுடியாது ஏனைய நாடுகளுடன் இணைந்தே கடல் ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டும் என நாராவின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா கடும் கரிசனையை வெளியிட்டுள்ள போதிலும் சீனா கப்பலை அனுப்புவதில் பிடிவாதமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/162830

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2023 at 08:17, satan said:

இதைவிட என்ன செய்ய முடியும் இந்தியாவால்? வேண்டுமென்றால்; முடிந்தளவு இலங்கைக்கும் சீனாவுக்கும்இடையில் சிண்டு முடிய முயற்சிக்கலாம். 

மிக இலகுவானது.தெற்கு மாடத்தின் ஒற்றைப்போக்கிலிருந்து வெளியேறி பங்காளதேஷிற்கு எடுத்ததுபோன்று ஒரு காத்திரமான முடிவை எடுத்துத் தனக்குப் பாதுகாப்பாகத் தமிழீழத்தை அங்கீகரிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் தாத்தா, அப்படி ஓரமா இருந்து வெத்திலை, பாக்கு இடிச்சு சாப்பிடுக்கொண்டே, நம்ம வெளாட்ட, உன்னிப்பா பாரு... என்று சிங்களவனும், சீனனும் சொல்லுறது கேக்குதா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக ஒருவருடத்திற்கு முன்னர், சீன ராணுவக் கப்பல் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு கரையோர ரோந்து விமானம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. தற்போது, இன்னொரு சீன ராணுவக் கப்பல் வருவதற்கு சரியா ஒரு நாளைக்கு முன்னர், தான் முன்னர் வழங்கியிருந்த ரோந்துவிமானத்தைப் பிரதீயீடு செய்வதற்காக இன்னொரு புதிய விமானத்தை இந்தியா வழங்கியிருக்கிறது. 

இந்தியாவின் இராஜதந்திரம் ஒன்றுதான். சீனாவைக் காட்டிலும் இலங்கைக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் சீனாவை எட்டத்தில் வைத்திருப்பது. ஆனால் என்ன, இலங்கைக்கோ சீனாவைத்தான் பிடித்திருக்கு. ஆனாலும், இந்தியாவின் நன்கொடைகளையும் அது மறுப்பதில்லை. 

https://www.sakshipost.com/news/sri-lanka-thanks-india-helping-protect-airspace-sea-219747

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இந்தியாவின் இராஜதந்திரம் ஒன்றுதான். சீனாவைக் காட்டிலும் இலங்கைக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் சீனாவை எட்டத்தில் வைத்திருப்பது.

சீனா அமெரிக்க நலன்களோடு ஒத்தோடத்துணியுமாயின், ஆனால் அது நடைபெற வாய்ப்பில்லை. ஒருவேளை பொருண்மியச் சரிவுகள் இருநாடுகளிலும் சமாந்தரமாகி இருவரும் இன்னொன்றை ஏப்பம்விட நினைத்தால்  இந்தியா காணமற்போன நாடாகும்.

3 hours ago, ஏராளன் said:

இந்தியா கடும் கரிசனையை வெளியிட்டுள்ள போதிலும் சீனா கப்பலை அனுப்புவதில் பிடிவாதமாக உள்ளது

இறைமையை(சக உரித்தாளரான தமிழரோடு) விட்டுக்கொடுக்காத சிறிலங்காவால் ஏன் சீனாவிற்குத் தடைபோட முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இந்தியன் தாத்தா, அப்படி ஓரமா இருந்து வெத்திலை, பாக்கு இடிச்சு சாப்பிடுக்கொண்டே, நம்ம வெளாட்ட, உன்னிப்பா பாரு... என்று சிங்களவனும், சீனனும் சொல்லுறது கேக்குதா?

கப்பல் என்ன கலரு..எத்தினை சன்னல் இருக்கின்னு எண்ணிட்டிருப்பாரு..

  • கருத்துக்கள உறவுகள்+
On 13/8/2023 at 01:15, Kavi arunasalam said:

சிறுவயதில் இப்படியான வாசகங்களை தேனீர் கடைகளில் பார்தத ஞாபகம் வருகிறது

IMG-4345.jpg

எனக்கிது விளங்கேலை, என்னென்டு சொல்லுவீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவை உப்படியே உன்னிப்பா கவனிக்க வேண்டியான். ஒவ்வொரு சீனக் கப்பலா வந்து வேலையை முடிச்சிட்டு போகும். ஒரு நாள் மொத்தமா ஆப்படிக்கும் போது சிங்களவன் கடனுக்கு கூட கிட்ட வரமாட்டான். அப்ப தான் ஹிந்தியாக்காரனுக்கு அவனின் தப்புத் தாளம் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nochchi said:

தனக்குப் பாதுகாப்பாகத் தமிழீழத்தை அங்கீகரிப்பது.

தனக்கு பாதுகாப்பானவர்களை ஆபத்து என முன்னின்று சிங்களத்தை முடுக்கி அழித்தது இந்தியா. அது தனது முட்டாள்த்தனத்திலிருந்து விடுபடாது தான் தனித்த விடப்படும்வரை. இப்போ, அது நினைத்தாலும் முடியாத காரியம். அதன் கையை மீறி எல்லாம் போய் விட்டது. 

8 hours ago, nochchi said:

இறைமையை(சக உரித்தாளரான தமிழரோடு) விட்டுக்கொடுக்காத சிறிலங்காவால் ஏன் சீனாவிற்குத் தடைபோட முடியவில்லை. 

 முட்டாள்தனத்தாலும் வீண் பிடிவாதத்தாலும் சொல்வார் புத்திக்கேட்டு தன் குடிமக்களை விற்று சுயலாபம் காண பொறிக்குள் தலையை விட்டவர்கள், வேண்டுமாயின் நாட்டை இழப்பதை தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு, சீனாவுக்கு அல்லது சீனாவை எதிர்க்கும் வேறொரு நாட்டிற்கு. எல்லாம் அவரவர்  திட்டத்தை மீறிபோய்க்கொண்டிருக்கிறது. தமிழரோடு உரிமையை பகிர்ந்து வாழ்வதே அவர்களுக்கு இப்போ உள்ள ஒரே வழி அல்லது இது சிங்கள பௌத்த நாடு என்று அறைகூவி தமிழரை போருக்கு அழைப்பதை நிறுத்தி அடிமைகளாக வாழ பயிற்சி எடுப்பது நல்லது.

10 hours ago, ரஞ்சித் said:

சரியாக ஒருவருடத்திற்கு முன்னர், சீன ராணுவக் கப்பல் வருவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் இந்தியா இலங்கைக்கு கரையோர ரோந்து விமானம் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கியிருந்தது. தற்போது, இன்னொரு சீன ராணுவக் கப்பல் வருவதற்கு சரியா ஒரு நாளைக்கு முன்னர், தான் முன்னர் வழங்கியிருந்த ரோந்துவிமானத்தைப் பிரதீயீடு செய்வதற்காக இன்னொரு புதிய விமானத்தை இந்தியா வழங்கியிருக்கிறது. 

சீனாவை வரவழைத்து, இந்தியாவிடம் இருந்து வேண்டுமானதை பெற்றுக்கொள்வதே இலங்கையின் திட்டம் போலுள்ளதே. இந்தியாவின் முட்டாள்தனத்தை இலங்கை சரியாக கணித்து வைத்து காரியாமாற்றுகிறது. எல்லோரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி ஏமாளிகளாகி உலகப்போரில் கொண்டுபோய் நிறுத்தப்போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 இலங்கையில் நிறுத்த அனுமதி கோருகிறது

ஷி யான் 6 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக்கோரிக்கையை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷி யான் 6 கப்பலை நிறுத்த பெய்ஜிங் அனுமதி கோரியதாக அறிக்கை கூறுகிறது, ஆனால் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை மற்றும் கோரிக்கை செயற்படுத்தப்பட்டு வருகிறது.

சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான CGTN, ஷி யான் 6 ஐ 60 பேர் கொண்ட “அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல்” என அழைக்கிறது, இது கடல்சார்வியல், கடல் புவியியல் மற்றும் கடல் சூழலியல் சோதனைகளை மேற்கொள்கிறது.

கடந்த ஆண்டு, விண்கலக் கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற யுவான் வாங் 5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பலானது ஹம்பாந்தோட்டையில் இலங்கை துறைமுக அழைப்பு குறித்து இந்தியா கவலைகளை எழுப்பியது.

ship-300x200.jpg

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் மற்றும் இலங்கையில் அதன் செல்வாக்கு இரண்டையும் அதன் செல்வாக்கு எல்லைக்குள் உறுதியாகக் கருதுவதை இந்தியா சந்தேகிக்கின்றது.

இலங்கையானது மூலோபாய ரீதியாக முக்கிய கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் சீனா எந்த ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டதன் மூலம் இந்தியாவின் கவலைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் முயற்சித்தது.

அம்பாந்தோட்டை துறைமுகம் 2017 ஆம் ஆண்டு முதல் 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 99 வருட குத்தகைக்கு சீனர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு “பாதுகாப்புக் கவலைகளை” மேற்கோள் காட்டுவது “சில நாடுகளுக்கு முற்றிலும் நியாயமற்றது” என சீனா கடந்த ஆண்டு கூறியது.

இலங்கையின் இருதரப்புக் கடனில் 52 சதவீதத்தை சீனா வைத்திருக்கிறது, மேலும் பெய்ஜிங்கின் ஆதரவு அதன் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முக்கியமானது.

https://thinakkural.lk/article/269858

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம்களில் தென்னாபிரிக்கவில் நடந்த  பிரேசில் இந்தியா சீனா ரஷ்சியா தென்னாப்பிரிக்கா இந்த நாடுகள் சேர்ந்து BRICS என்று பெயர் வைத்து மேற்குலகுக்கு எதிரான அமைப்பு  அல்ல என்று சொல்லிக்கொண்டு மேற்குலகுக்கு எதிராகவே அழுது வடிந்து உள்ளார்கள் அதில் ஆசிய சுருக்கமாக தைவானில் அமெரிக்கர்களின் மூக்கு அறுப்பு உட்பட தென்னாசிய அரசியல் வரை குரைத்து தள்ளியுள்ளார்கள் உலகம் அடுத்த ஆட்டத்துக்கு சென்று பலவருடங்கள் ஆகிவிட்டது நாம் இன்னமும் 2௦௦9 விட்டு வெளியில் வரவில்லை போல் உள்ளது . இந்த BRICS போல் பல தொடங்கினவை அவை தொடங்கப்பட்ட முனைகள் உடைந்த பேனா முனையாகி பெயருக்கு இருகின்றன . அந்த முனை உடையும் முன் சைனா தங்களின் ராணுவ  தேச நலன்களை உலகில் பரவி விட்டு இடும் அதே போல் இந்தியாவும் நடந்து கொண்டது வரலாறு .பாப்போம் BRICS என்ன செய்கின்றது  என்று .

https://www.reuters.com/world/brics-leaders-meet-south-africa-bloc-weighs-expansion-2023-08-22/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.